https://s33.postimg.cc/f93c0essv/710...f39b0c2fd6.jpg
நன்றி - நண்பர் திரு சாமுவேல் அவர்கள்
Printable View
https://s33.postimg.cc/f93c0essv/710...f39b0c2fd6.jpg
நன்றி - நண்பர் திரு சாமுவேல் அவர்கள்
மக்கள் மனங்களில் எப்போதும் குடியிருக்கும் கோயில் மக்கள் திலகம் நூற்றாண்டு விழா "நாணயங்கள் வெளியிடும் வைபவம் நாள் ... விபரங்கள் அறிய மிக்க ஆவல்...
*மக்கள்திலகம்,* விழுப்புரம் வழியாக காரில் சென்று கொண்டிருக்கும் போது, ஒரு பெட்ரோல் பங்க் அருகில் காரை நிறுத்தச் சொன்னார். தன் உதவியாளரை அழைத்து, "இடதுபுறமாக, 20 கடை தாண்டி ஒரு பாட்டி வடை சுட்டுக்கொண்டிருப்பார். அவரிடம் வடை வாங்கிக்கொண்டு நில். உனக்கு நேராக காரை நிறுத்துகிறோம். காரில் ஏறும்போது அந்தப் பாட்டியின் கையில் பணம் கொடுக்காமல் அந்த வடை வைத்திருக்கும் ட்ரேயில் போட்டுவிட்டு வந்துவிடு" என்று கூறினார்.
அந்த உதவியாளரும் அப்படியே செய்தார். காரும் புறப்பட்டுவிட்டது.. தனக்கு திடீரென இருநூறு ரூபாய் கிடைத்ததும் வடை சுடும் பாட்டி திகைத்தார்.
அதைக்கண்ட நம் வள்ளல் புன்முறுமல் பூத்தார்.
உதவியாளர், எம்ஜிஆரிடம், "ஏன் அந்தப்பாட்டிக்கு 200 ரூபாய் கொடுத்தீர்கள்?" என வியப்புடன் கேட்க,
அதற்கு எம்ஜிஆர், "அந்த 200 ரூபாய் வடைக்கு இல்லை.. *அந்த பாட்டியோட தன்னம்பிக்கைக்கு, தளராத முயற்சிக்கு.. இந்த வயதில் சுயமாக உழைச்சுப் பிழைக்கின்ற, அந்த வயதான தாயை கௌரவிக்க ஆசைப்பட்டேன்"* என்றார்...
இப்படியே ஒவ்வொரு முறை விழுப்புரத்தைத் தாண்டும் பொழுதும் வடை வாங்குவதும், 200 ரூபாய் போடுவதும் ஒரு வழக்கமாகவே இருந்து வந்தது...
இந்த மாயாஜால வித்தையால் குழம்பிய பாட்டி, 'யார் மூலம் பணம் வருகிறது?' என்பதை கண்டறிய எண்ணினார்...
ஒருநாள், இதே போல உதவியாளர் பாட்டியிடம் வடை வாங்க போனபோது, பாட்டி அந்த இருப்பிடத்தில் இல்லாததைப் பார்த்து திடுக்கிட்டு சுற்றுமுற்றும் பார்த்தார்.
அங்கே, எம்ஜிஆரை காரில் பார்த்து அடையாளம் கண்டுகொண்ட அந்த மூதாட்டி கண்ணீர் மல்க பேசினார்...
*என் #மவராசா..! நீ தான் இத்தனை வருசமா நான் சுட்ட வடையை விரும்பி சாப்பிடறியா..? தங்கபஸ்பம் சாப்பிடுற ராசாவா.. இந்த ரோட்டோரம் விக்கிற வடையை வாங்கித் தின்னே..! தினம் ஆயிரம் குடும்பங்களுக்கு படியளக்கிற மகராசா, நான் சுட்ட வடையை நீ தின்னதுக்கு, நான் கோடிப்புண்ணியம் பண்ணியிருக்கணும். ஆனா நீ லாட்டரி சீட்டுல பணம் விழுற மாதிரி ஒவ்வொரு முறையும் இருநூறு ரூபாய் கொடுத்து என்னைப் பாவியாக்கிட்ட..* என்றார் கண்ணீர் மல்க.
அதற்கு எம்ஜிஆர், *நான் உங்களுக்கு கொடுத்ததை, உங்க மகன் கொடுத்ததா நினைச்சுக்குங்க. சீக்கிரமா நான் அரசாங்கத்திடம் சொல்லி இதே பணத்தை மாசாமாசம் உங்களுக்கு பென்சனா தரச் சொல்றேன்* " என்று விடைபெற்றார்...
தனது வாக்குறுதிக்கேற்ப, தான் முதலமைச்சரான பிறகு *முதியோர் பென்சன் திட்டத்தை* அமலாக்கி அதன் மூலம் மாத உதவித்தொகை, நாள்தோறும் மதிய உணவு, ஆண்டிற்கு இருமுறை இலவச உடை, ஆகியவற்றை நடைமுறைப்படுத்தி வரலாறு படைத்தார்
அந்தப் பாட்டியும் தனது இறுதிக்காலம் வரை இத்திட்டத்தினால் பயன் பெற்றார் என்பது குறிப்பிடத்தகுந்தது...
இப்படி மக்களின் குறைகளைப் பார்த்துப் பார்த்து திட்டங்களை செயல்படுத்தி பொற்கால ஆட்சி தந்தவர் தான் *பொன்மனச்செம்மல்..*... Thanks Friends...
"விதவைகள் தன் கணவரின் வேலையை வாரிசு முறைப்படி பெற்றுக்கொண்டு பின்பு மறு திருமணம் செய்கின்றனர்.
இது முதல் கணவருக்குச் செய்யும் துரோகம் இல்லையா?
மறுமணம் செய்துகொண்டால், முதல் கணவரால் கிடைத்த வேலையை விட்டுவிட வேண்டும் என்று ஆணையிடுங்கள் தலைவரே"
-என்று கட்சிப் பிரமுகர் ஒருவர் தமிழக முதல்வர் #எம்ஜியார் அவர்களிடம் வேண்டுகோள் வைக்க..
அதற்கு முஊல்வர் எம்.ஜி.ஆர்..
"அந்த விதவைப்பெண்ணின் சம்பளத்துக்காகத்தான் பலர் மறு மணம் செய்கின்றனர்.
அவளுக்கு வேலை போய்விட்டால் அவனும் அவளை விட்டு போய்விடுவான்.
வேலைதான் விதவைக்கு பலம். அதை நாம் கெடுக்கக் கூடாது”
-என்று பதில் கூற கேள்வி கேட்டவரோ வாயடைத்து நின்றார்..... Thanks Friends...
"ஸ்ரீ விநாயகர் சதுர்த்தி" முதல் திரையுலக வசூல் சக்ரவர்த்தி, நவரச வேந்தன் மக்கள் திலகம் தயாரித்து, நடித்து, இயக்கிய மாபெரும் பிரம்மாண்ட படைப்பு... வெளிநாடுகளில் படமாக்கப்பட்டு இதுவரை எங்கும் இப்படி பட்ட உருவாக்கம் வந்ததில்லை... என கூறப்படும் "உலகம் சுற்றும் வாலிபன்" டிஜிட்டல் ட்ரைலர் வெளியாகிறது என்று இனிய, இனிப்பான தகவல் நம் நண்பர்கள் வழியாக ...👍 👌
தினமணி -27/8/18
http://i63.tinypic.com/dzyxaa.jpg
Mgr ரசிகர் மன்றத்தை
திறந்து வைத்த பாரத பிரதமர்
************************
எம்.ஜி.ஆர் ரசிகர் மன்றம்
தானாகவே ஆரம்பிக்கப்பட்டது எம்.ஜி.ஆர் திரைப்படம் வெளியாகும் நாள்களில்
கட் அவுட் வைப்பது,
கூட்டமாகத் திரளும் ரசிகர்களை ஒழுங்குப்படுத்துவது,
இனிப்பு வழங்குவது
பேனர் வைப்பதுஎன ஒருகுழு அமைத்து பல்வேறு பணிகளை செய்து வந்தார்கள்
ஒவ்வொரு ஊரிலுள்ளவர்களும் ஒவ்வொரு படத்தின் பெயரில் எம்ஜிஆர் மன்றத்தை ஆரம்பித்து செயல் படுத்தி வந்தார்கள் எம்ஜிஆர் படம் வெளிவரும் சமயம் வேறு நடிகர்கள் படம் வெளியானால்
அடிதடி சண்டைக்கு பஞ்சம் இருக்காது
ஒரு சமயம் எம்.ஜி.ஆருக்கும்
அவரின் ரசிகர்களுக்கும் இடையே மனஸ்தாபம் உண்டாயிற்று. `தன்மீதான அதிகமான அன்பால் ரசிகர்கள் சிலர் உணர்ச்சிவசப்பட்டு வேறு நடிகர்கள் போஸ்டர் கிழிப்பது சண்டை செய்வது போன்ற வேலைகளை செய்தார்கள்
இதை கேள்விப்பட்ட எம்.ஜி.ஆர்., அவர்களைக் கூப்பிட்டுக் கண்டித்தார். அப்போது அவர்கள் தங்களின்
உள்ளூர் பிரச்னைகளை எடுத்துக்கூறியும்
எங்கள் [எம்ஜிஆர் போஸ்டர்] போஸ்டர்களை கிழித்ததால் தான் செய்தோம் நாங்கள் செய்ததுதான் நியாயமானது என்று உணர்த்த முயன்றார்கள்
எம்.ஜி.ஆருக்கு சட்டென
கோபம் வந்துவிட்டது.
அவர்களைப் பார்த்து
நான் சொல்வதை கேட்கவிட்டால் மன்றத்தைக் கலைத்துவிடுங்கள் என்றார் கோபமாக
கூட்டத்தில் இருந்த
கோபக்கார ரசிகர்கள் அதைச் சொல்ல நீங்கள் யார்?
நீங்கள் சொல்லியா நாங்கள் மன்றம் ஆரம்பித்தோம்
படம் நடிப்பதுதான் உங்கள் வேலை. ரசிகர் மன்றம் நடத்துவது
எங்கள் விருப்பம்.
எங்கள் பிரச்னைகளை
நாங்களே தீர்த்துக்கொள்கிறோம்' என்று செல்ல
எம்.ஜி.ஆர் அசந்துபோய்விட்டார்
நம்மீது இப்படி ஒரு வெறித்தனமான அன்பு வைத்திருக்கிறார்களே
இவர்களது பாசத்தையும் பற்றையும் நாம் குறைத்து மதிப்பிட்டுவிட்டோமே’ என நினைத்து
இவர்கள்தான் தமது சொத்து, சுகம், வாழ்வு! என்பதை உணர்ந்துகொண்டு அவர்களைச் சமாதானம் செய்து அனுப்பிவைத்தார்
அந்தமான் தீவில் வாழும் ரசிகர்கள் எஜிஆருக்குரசிகர் மன்றம்
தொடங்க வேண்டும் என திட்டமிட்டார்கள்அந்த சமயத்தில்
அங்கு சுற்றுப் பயணத்தில் இருந்தார் பாரதப் பிரதமர் லால்பகதூர் சாஸ்திரி உடனே எம்.ஜி.ஆர் ரசிகர்கள், பிரதமரைக் கொண்டே மன்றத்தைத் திறக்க முடிவுசெய்து,
அதில் வெற்றியும் பெற்றார்கள்
இந்திய வரலாற்றிலேயே,
ஏன் உலக வரலாற்றிலேயே
ஒரு பிரதமர் ஒரு நடிகரின்
ரசிகர் மன்றத்தைத் திறந்துவைத்த பெருமை புரட்சித் தலைவர்
mgr ஒருவருக்கு
மட்டும்தான் உள்ளது
தினத்தந்தி 4/9/18
http://i66.tinypic.com/20abgn5.jpg
தினமலர்
4/9/18
http://i64.tinypic.com/2hwo1kz.jpg
மாலைமுரசு 4/9/18
http://i63.tinypic.com/2ntcro6.jpg
தினகரன் 5/9/18
http://i68.tinypic.com/n30wao.jpg
கல்கண்டு வார இதழ்
http://i66.tinypic.com/3505ceg.jpg
http://i65.tinypic.com/29yozt2.jpg
நாளை முதல் (07/09/18) கோவை டிலைட்டில் மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். நடித்த
"ஒரு தாய் மக்கள் " தினசரி 2 காட்சிகள் திரைக்கு வருகிறது .
http://i68.tinypic.com/34y61qc.jpg
தகவல் உதவி : நெல்லை பக்தர் திரு.ராஜா .
சூப்பர் ஹீரோ மாத இதழ் -செப்டம்பர் 2018
http://i67.tinypic.com/2efuyh4.jpg
விரைவில் வருகிறது
நெல்லை ரத்னாவில் மக்கள் தலைவர் எம்.ஜி.ஆரின் . "தர்மம் தலை காக்கும் "
http://i68.tinypic.com/15xv6fn.jpg
தகவல் உதவி : நெல்லை பக்தர் திரு.ராஜா .
புதிய தலைமுறை வார இதழ் 6/9/18
http://i65.tinypic.com/2zjgjz5.jpg
http://i67.tinypic.com/1okqpy.jpg
http://i65.tinypic.com/34e2v0i.jpg
தினசுடர் ,பெங்களூரு -1/9/18
http://i68.tinypic.com/2dl0v9f.jpg
பாக்யா வார இதழ் -7/9/18
http://i66.tinypic.com/124u39w.jpg
http://i66.tinypic.com/a1k6za.jpg
http://i65.tinypic.com/2cghf9e.jpg
புதிய தலைமுறை வார இதழ் -13/9/18
http://i64.tinypic.com/r9ju5y.jpg
http://i63.tinypic.com/kbuceu.jpg
http://i67.tinypic.com/zmxtsk.jpg
1983ம் ஆண்டு இனக்கலவரத்தை அடுத்து தமிழ்நாட்டில் போராளிகளுக்கு மாபெரும் அனுதாபமும் ஆதரவும் எழுந்தது. தமிழக மக்கள் தங்களால் இயன்ற ஆதரவையும் உதவியையும் வழங்கினார்கள்.
அப்போது சிவாஜி கணேசனிடம் சென்று நிதி உதவி செய்யுமாறு கேட்ட "டெலோ" இயக்க போராளிகளிடம் தனக்கே சாப்பாட்டுக்கு காசில்லாமல் கஸ்டப்படுவதாகவும் அதனால் ஒரு சதமும் தன்னால் தரமுடியாது என்று சொல்லி அனுப்பியவர் இந்த சிவாஜி கணேசன்.
டெலோ இயக்க போராளிகளுக்கு மட்டுமல்ல எந்த போராளிகள் இயக்கத்திற்குமே ஒரு உதவியும் செய்யாதவர் இந்த சிவாஜி கணேசன்.
ஈழத் தமிழர்களுக்கு மட்டுமல்ல தமிழக தமிழர்களுக்குகூட எந்த உதவியும் செய்யாத நடிகர்
சிவாஜி கணேசன். அவர் தமிழருக்கான தலைவர் அல்ல. அதனால்தான் அவர் ஒரு தி.மு.க இளைஞனிடம் தேர்தலில் தோல்வி கண்டார்.
கருணாநிதியும் இலங்கை தமிழருக்கு எந்த உதவியும் செய்யவில்லை. உதவி செய்யாதது மட்டும் இல்லை. அப்பாவி தமிழர்கள் கொல்லப்பட்டபோது மத்திய அரசில் பதவி இருந்ததால் பேசாமல் இருந்து நாடகம் ஆடி தமிழர்கள் கொல்லப்படுவதை கண்டுகொள்ளாமல் இருந்தார். தமிழினத்துக்கு துரோகம் செய்துவிட்டார்.
புரட்சித் தலைவர்தான் இலங்கை தமிழர் நலனில் அக்கறை கொண்டு இருந்தார். விடுதலை புலிகள் இயக்கத்தை ஆதரித்தார். அவர்களுக்கு பண உதவி செய்தார். அவர் இருந்தால் இந்நேரம் தமிழ் ஈழம் கிடைத்து இருக்கும்.
ஆனால் இந்த வரலாறு தெரியாமல் சிவாஜிகணேசன் தான் தமிழினத்தின் நடிகர் என்பது போலவும் கருணாநிதி தமிழின தலைவர் போலவும் சிலர் சொல்லி வருகிறார்கள். நன்றி உள்ள இலங்கை தமிழர்கள் புரட்சித் தலைவரை மறக்க மாட்டோம்.
http://i65.tinypic.com/ng3503.jpg
நன்றி - செல்வநாதன் விக்னேஸ்வரன்
மக்கள் திலகம் எம்ஜிஆர் முகநூல்
M.G.R.கலந்து கொள்ளும் நிகழ்ச்சிகள், அன்றாடப் பணிகளில் அவருக்கு உதவி புரியவும் பாதுகாப்புக்கும் உதவியாளர்களும் பாதுகாவலர்களும் உண்டு. எம்.ஜி.ஆர். எள் என்றால் எண்ணெயாய் நிற்கும் ஆற்றல் மிக்கவர்கள் அவர்கள். அப்படிப்பட்ட பணியாளர்களின் தேவைகளை, குடும்பத்துக்கான உதவிகளை முழுமையாக கவனித்து உதவி செய்வதற்கென்று ஒருவர் உண்டு. அவர் எம்.ஜி.ஆர்.!
சென்னை கீழ்ப்பாக்கத்தில் உள்ள மருத்துவக் கல்லூரியில் ஒரு முறை மாணவ, மாணவிகளின் கலாசார விழா. அதற்கு சிறப்பு விருந் தினராக எம்.ஜி.ஆரை அழைத்திருந்த னர். விழாவில் அவர் கலந்து கொண்டு பேசினார். உடற்கூறுகள் பற்றி, தான் அறிந்து வைத்திருந்தவை குறித்து அருமையாக உரையாற்றினார். ‘இத்தனை பணிகளுக்கும் நடுவே, இதை எல்லாம் படித்துத் தெரிந்து கொள்ள இவருக்கு எப்படி நேரம் கிடைக்கிறது?’ என்று பேச்சைக் கேட்டவர்கள் வியந்தனர்.
‘‘மருத்துவப் படிப்பை முடித்து மருத்துவராக தொழில் செய்பவர்கள் சேவை மனப்பான்மையோடு குறிப்பாக, ஏழைகளுக்கும் கிராமப்புற மக்களுக்கும் பணியாற்ற வேண்டும்’’ என்று எம்.ஜி.ஆர். வேண்டுகோள் விடுத்து விட்டு, தனக்கே உரிய அடக்கத்தோடு சொன்னார்… ‘‘மருத்துவம் படிக்காத என்னை சிறப்பு விருந்தினராக ஏன் அழைத்தார்கள்? என்று தெரியவில்லை. ஒரு காரணம் மட்டும் புரிகிறது. என் மீது நீங்கள் வைத்திருக்கும் அன்புதான் அது. அந்த அன்புள்ளத்தோடு எதிர் காலத்தில் நீங்கள் சமூகத்துக்கு பணி யாற்ற வேண்டும்’’ என்று பலத்த கர கோஷத்துக்கிடையே பேசி முடித்தார்.
எம்.ஜி.ஆருக்கு நன்றி தெரிவித்து ஒரு கூடை நிறைய ஆப்பிள் பழங்களை மாணவர்கள் அவருக்கு அளித்தனர். அதைப் பெற்றுக் கொண்டு படப்பிடிப் பில் கலந்து கொள்வதற்காக வாஹினி ஸ்டுடியோவுக்கு சென்றார். அங்கு, தன் காரில் இருந்த ஆப்பிள் கூடையை எடுத்து வரச் சொல்லி, படப்பிடிப்பு தளத்தில் இருந்த எல்லா பணியாளர்களுக்கும் பகிர்ந்து கொடுக்கச் செய்தார். மருத் துவக் கல்லூரி விழாவில் அன்பைப் பற்றி பேசிய எம்.ஜி.ஆருடைய அன்புள்ளத்தின் வெளிப்பாடு இது.
தென்ஆற்காடு மாவட்டத்தில் ஒரு நிகழ்ச்சி. அந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ள காரில் எம்.ஜி.ஆர். சென்றார். வழியில் பல இடங்களில் மக்களின் வரவேற்பை ஏற்றுக் கொண்டு, நிகழ்ச்சிக்கு தாமதமாகவே சென்றார். அவசரப் பணிகள் காரணமாக, குறித்த நேரத்துக்குள் அவர் சென்னை திரும்பி யாக வேண்டும். நிகழ்ச்சியை முடித் துக் கொண்டு காரில் ஏறிப் புறப்படும் முன் உதவியாளர்களைப் பார்த்து, ‘‘சாப்பிட்டீர்களா?’’ என்று கேட்டார். எல் லோரும் ஒரே குரலில் ‘‘சாப்பிட்டு விட்டோம்’’ என்றனர்.
காரின் சக்கரங்கள் சென்னையை நோக்கி சுழலத் தொடங்கின. நகரத் தைக் கடந்து சாலையில் கார் வேகமாகச் செல்கிறது. திடீரென, ‘‘காரை ஓரமாக நிறுத்து’’ என்று எம்.ஜி.ஆரின் குரல் கடுமையாக ஒலிக் கிறது. ‘ஏன்?’ என்ற கேள்வி எல்லோர் மனதிலும் இருந்தாலும், எம்.ஜி.ஆர். சொன்னதைச் செய்தே பழக்கப் பட்ட உதவியாளர் கள் காரணம் கேட்க வில்லை. என்றாலும், அவரது குரலில் இருந்த கடுமை அவர்களுக்குள் கலவரத்தை ஏற்படுத்தியது. சாலையோரமாக கார் நின்றது.
உதவியாளர்களைப் பார்த்து உரிமை கலந்த கோபத்தோடு, ‘‘உங்கள் வாடிய முகங்களைப் பார்த்தாலே நீங்கள் எல்லோரும் சாப்பிடவில்லை என்று தெரிகிறது. நான் விரைவில் சென்னை திரும்ப வேண்டும் என்பதற் காக, என்னிடம் சாப்பிட்டதாக சொல்லி யிருக்கிறீர்கள். ஏன் பொய் சொல்கிறீர் கள்?’’ என்று இரைந்தார். குட்டு வெளிப்பட்டதில் அந்த உண்மையான பணியாளர்கள் ஊமைகளாய் நின்றனர்.
அவர்களது நிலைமையை எம்.ஜி.ஆர். புரிந்து கொண்டார். அவரது குரலில் இருந்த தந்தையின் கண்டிப்பு, இப்போது தாயின் கருணையாய் சுரந்தது. ‘‘இந்த நிகழ்ச்சியை நடத்தியவர் கள் என்னை வரவேற்று உபசரிக்கும் ஆர்வத்தில் உங்களை கவனித்திருக்க முடியாது. நான் புறப்படத் தாமத மாகிவிடும் என்பதற் காக சாப்பிட்டுவிட்ட தாக நீங்கள் பொய் சொன்னால் எனக் குத் தெரியாதா? நான் சந்தேகப் பட்டுதான் அங்கிருந்தவர் களிடம் இட்லி களை பொட்டலங் களாக கட்டச்சொல்லி வாங்கி வந்தேன். மர நிழலில் போய் சாப்பிட்டுவிட்டு வாருங்கள்’’ என்று சொல்லி, தான் கொண்டுவந்த பார்சலை எடுத்து உதவியாளர்களிடம் கொடுத்தார்.
நெகிழ்ந்துபோன உதவியாளர்கள், எம்.ஜி.ஆரிடம் இருந்து பார்சலை வாங்கிக் கொண்டு ஜமுக்காளத்தை விரித்து அமர்ந்து சாப்பிடத் தொடங் கினர். நெய் மணக்கும் காரமான மிளகாய்ப் பொடி தடவிய இட்லி அவர்களுக்கு அமிர்தமாய் இனித்தது. சீக்கிரம் புறப்பட வேண்டும் என்ற எண்ணத்தில் இட்லிகளை விழுங் கியவர்களில் ஒருவருக்கு விக்கல். எம்.ஜி.ஆரிடம் இருந்து பார்சலை வாங்கிவந்த அவசரத்தில் தண் ணீரை எடுத்துவர அவர்கள் மறந்து விட்டனர்.
அப்போது, தண்ணீர் வைத்திருந்த ஜாடியையும் டம்ளர்களையும் ஏந்தியபடி இரு கரங்கள் நீள்கின்றன. உதவியாளர்கள் நிமிர்ந்து பார்த்தால், எம்.ஜி.ஆரேதான்! எல்லோருக்கும் டம்ளர்களில் பொறுமையாக தண்ணீரை ஊற்றி வைக்கிறார். அவரை உப சரிக்க லட்சோப லட்சம் பேர் காத்திருக்கும்போது, அந்த மாமனிதர் தங்களுக்கு பசியாற உணவு தந்து, தாகம் தீர்க்க தண்ணீரும் கொடுத்து பணி செய்வதைக் கண்ட உதவியாளர்களின் கண்கள் பனித்தன.
எம்.ஜி.ஆர். தலைவர் மட்டுமல்ல; தொண்டருக்கும் தொண்டர்! Thanks Friends...