திருவண்ணாமலையில் கடந்த 08/03/19 அன்று நடைபெற்ற மக்கள் தலைவர் எம்.ஜி.ஆர். 102 வது பிறந்த நாள் நிகழ்ச்சியில் மலேசிய இசை குழு திரு.மேகநாதன் தலைமையில் இன்னிசை நிகழ்ச்சி நடைபெற்றபோது
http://i65.tinypic.com/30hswol.jpg
Printable View
திருவண்ணாமலையில் கடந்த 08/03/19 அன்று நடைபெற்ற மக்கள் தலைவர் எம்.ஜி.ஆர். 102 வது பிறந்த நாள் நிகழ்ச்சியில் மலேசிய இசை குழு திரு.மேகநாதன் தலைமையில் இன்னிசை நிகழ்ச்சி நடைபெற்றபோது
http://i65.tinypic.com/30hswol.jpg
மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். திரைக்கதை அமைப்பில் சில
மாற்றங்கள் செய்யப்படாததால் தயாரிப்பாளருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகள் காரணமாக நடிக்காமல் கைவிட்ட படம்
http://i64.tinypic.com/25iagl5.jpg
தமிழ் இந்து -22/3/2019
http://i67.tinypic.com/4voaas.jpg
http://i63.tinypic.com/2qird4o.jpg
பெங்களூரில் கடந்த 10/03/19 அன்று நடைபெற்ற மக்கள் தலைவர் எம்.ஜி.ஆர். 102 வது பிறந்த நாள் விழாவில் மலேசிய இசை குழுவினர் திரு.மேகநாதன் அவர்கள் தலைமையில் இன்னிசை நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது .
அப்போது கீழ்கண்ட பாடல்கள் இசைக்கப்பட்டன :
1. புத்தன் இயேசு காந்தி பிறந்தது - சந்திரோதயம்
2. நான் மாந்தோப்பில் -எங்க வீட்டு பிள்ளை
3. எங்கே போய்விடும் காலம் - தாழம்பூ
4. வெற்றி மீது வெற்றி வந்து - தேடி வந்த மாப்பிள்ளை
5. உலகமெங்கும் ஒரே மொழி - நாடோடி
6. நான் ஆணையிட்டால் - எங்க வீட்டு பிள்ளை
7.நானொரு குழந்தை - படகோட்டி
8. நினைத்தேன் வந்தாய் - காவல்காரன்
9. அவள் ஒரு நவரச நாடகம் -உலகம் சுற்றும் வாலிபன்
10. நீயேதான் எனக்கு மணவாட்டி -குடியிருந்த கோயில்
11. நினைத்ததை நடத்தியே முடிப்பவன் -நம்நாடு
12. நாளை நமதே - நாளை நமதே
13. லில்லி மலருக்கு கொண்டாட்டம் -உலகம் சுற்றும் வாலிபன்
14. போய்வா நதி அலையே - பல்லாண்டு வாழ்க
15. கண்ணை நம்பாதே -நினைத்ததை முடிப்பவன்
16. என்னருகே நீ இருந்தால் - திருடாதே
17.கண்போன போக்கிலே - பணம் படைத்தவன்
18. எங்கிருந்தோ ஆசைகள் - சந்திரோதயம்
19. ஆடலுடன் பாடலைக் கேட்டு -குடியிருந்த கோயில்
20. பாடும்போதுநான் தென்றல் காற்று- நேற்று இன்று நாளை
21.கடவுள் ஏன் கல்லானான் -என் அண்ணன்
22. உன்னை அறிந்தால் -வேட்டைக்காரன்
23. தரைமேல் பிறக்க வைத்தான் -படகோட்டி
24.கனிய கனிய மழலை பேசும் -மன்னாதி மன்னன்
25. தங்க தோணியிலே - உலகம் சுற்றும் வாலிபன்
26.வேட்டையாடு விளையாடு - அரச கட்டளை
27. அதோ அந்த பறவை போல - ஆயிரத்தில் ஒருவன்
" எம்.ஜி.ஆரின் எச்சில் நாக்கில் என் பாடல்கள்
ஏறுமுன் – என் முகத்தில் காலம் உமிழ்ந்த
எச்சில்கள் கொஞ்சமா நஞ்சமா?
ஏச்சுகளையும் எள்ளல் பேச்சுகளையும் எதிர் கொள்ள முடியாமல் – எப்பொழுதோ நான் திருச்சிக்குத் திரும்பியிருப்பேன் – கோடம்பாக்கம் நமக்குக் கொஞ்சமும் ஒத்து வராதென்று! வழிமறித்து நின்று என்னை ஆற்றுப்படுத்தியது எம்.ஜி.ஆரின் வரலாறுதான்; அதனால்தான் – அவரை நான் அப்படியே விழுங்கி என் உயிர் நாடியில் உட்கார்த்தி வைத்திருக்கிறேன்!
நடிகர் எம்.கே.ராதா அவர்களின் தந்தையார் திரு.கந்தசாமி முதலியார். அவர் திரு.எஸ்.எஸ்.வாசன் எழுதிய ‘சதிலீலாவதி’ கதையை வாங்கிப் படமெடுத்தார்.
‘சதிலீலாவதி’யில் எம்.ஜி.ஆர். ஒரு சப்–இன்ஸ்பெக்டராக வருகிறார்.
பின் –
‘பிரகலாதா’வில் ஒரு சிறிய வேடம்.
பின்
‘சாலிவாகனன்’ படத்தில் வில்லனாக வருகிறார்.
இந்தப் படத்தில் திரு.ரஞ்சன் கதாநாயகன். ரஞ்சனுக்கும் எம்.ஜி.ஆருக்கும் ஒரு அற்புதமான கத்திச் சண்டை அந்தப் படத்தில் உண்டு.
அதில் – எம்.ஜி.ஆர். Risk எடுத்துக் கத்தியைச் சுழற்றியதில், பெரும் புகழ் அவருக்கு வரக்கூடும் என்ற காழ்ப்பின் காரணமாக –
அந்தக் காட்சியின் நீளம், அதுவும் எம்.ஜி.ஆர். பங்கு பெறும் Shot - கள் குறைக்கப்படுகிறது!
பிறகு –
தியாகராஜ பாகவதர் அவர்கள் நடித்த ‘அசோக்குமார்’ படத்திலும்; ‘ராஜமுக்தி’ படத்திலும் சிறிய வேடங்களில் வருகிறார். இந்த வேடங்களை அவர் பெறக் காரணமாக இருந்தவர் டைரக்டர் திரு.ராஜாசந்திரசேகர் அவர்கள். இவர், திரு. டி.ஆர்.ரகுநாத் அவர்களின் தமையனார்.
ஜூபிடர் ‘அபிமன்யு’வில் – அர்ஜுனனாக வருகிறார்!
ஜூபிடர் ‘ஸ்ரீமுருக’னில் – சிவதாண்டவம் ஆடுகிறார்!
ஜூபிடர் ‘ராஜகுமாரி’யில் தான் கதாநாயகனாகிறார். இந்தப் படத்தில்தான் திரு.ஏ.எஸ்.ஏ.சாமியின் உதவி வசன கர்த்தாவாகக் கலைஞர் அவர்கள் பணியாற்றுகிறார்கள்! பிறகு
‘மருதநாட்டு இளவரசி’;
‘மந்திரிகுமாரி’;
‘மலைக்கள்ளன்’ – இப்படித் தொடர்ந்து பெரும் பெயர் பெறுகிறார்!
‘மலைக்கள்ள’னில் எம்.ஜி.ஆர். புகழின் உச்சிக்குப் போகிறார்.
‘நாடோடி மன்னன்’ மூலம் – இனி, உயர உயரமில்லாத உயரத்தில் போய் உட்காருகிறார்!
வாலியின் எனக்குள் எம்.ஜி.ஆர் தொடரிலிருந்து............ Thanks wa.,
MGR & Sowcarjanaki
செளகார் அம்மா mgr உடன் நடித்த அனுபவங்களை சொல்கிறார்.
Phool Aur Pattthar ஹிந்தி படம் Mgr அவர்களை வைத்து 100வது படமாக
ஒளிவிளக்கு திரு. வாசன் ஏற்பாடு செய்துகொண்டிருந்தார்.
எனக்கு மீராகுமாரி நடித்த ரோல் மிகவும்
பிடித்தது.MGR வீட்டிற்கு போன் செய்தேன்.
ஜானகி அம்மா போன் எடுத்தார்கள்.
அம்மா நான் செளகார் பேசறேன் அண்ணிடம் பேசனும் என்றவுடன் MGR லைனில் வந்தார்.
அண்ணா உங்கள் ஒளிவிளக்கு படத்தில்
எனக்கு மீராபாய் நடித்த ரோல் நடிக்க ஆர்வமாக உள்ளது என சொன்னேன்.
அப்படியாமா என ஆச்சிரியமாக கேட்டுவிட்டு
நாளைக்கு சொல்லரேனம்மா என போனை
வைத்துவிட்டார்.
ஆனால் அடுத்த 1** நேரத்தில் ஜெமினி
தாயரிப்பு நிறுவனத்தில் இருந்து விசாரித்தார்கள்.
ஓ MGR அண்ணன் ஜெமினி வாசனிடம்
சொல்லி ஏற்பாடு செய்துவிட்டார் என புரிந்து
கொண்டேன்.
நான் கேட்டவுடன் உடனடியாக அவர் ஏற்பாடு செய்தது எனக்கு மிக சந்தோசம்.
மிக சிறப்பான படமாக மாபெரும்
வெற்றிபடமானது " ஒளிவிளக்கு"
பின்னாளில்
அவர் உடல் நிலை சரியில்லாத போது
"" இறைவா உன் மாளிகையில்"
நான் பாடுவதாக அமைந்த பாடல் தமிழகம் எங்கும் அவர் உடல் நலம் வேண்டி பிராத்தனை பாடலாகி அவர் நலமுடன் வந்ததில் எனக்கு ஓர் ஆத்ம திருப்தி!
*****
"உள்ளமதில் உள்ளவரை
அள்ளிதந்த நல்லவரை
விண்ணுலகம் வா என்றால்
மண்ணுலகம் என்னாகும் "...... Thanks wa.,
எம்.ஜி.ஆர்., ஒரு தேர்ந்த புகைப்படக் கலைஞர். எந்த நாட்டுக்குச் சென்றாலும் அவர் விரும்பிவாங்கும் பொருட்களின் பட்டியலில் கேமரா தவறாமல் இடம்பெறும். வீட்டில் பலவகை கேமராக்களைச் சேர்த்து வைத்திருந்தார். இறுதிநாட்களில் அவற்றை தமக்குப் பிடித்தமானவர்களுக்குப் பரிசாக தந்து மகிழ்ந்தார்.
எம்.ஜி.ஆரை புகைப்படம் எடுப்பது அவ்வளவு எளிதல்ல. புகைப்படக்காரர் தன்னை எந்தக் கோணத்தில் எடுக்கிறார். ரிசல்ட் எப்படி வரும் என்பதை முன்கூட்டியே கணிப்பதில் வல்லவர். அவருக்கு தெரியாமல் யாரும் அவரை புகைப்படம் எடுத்துவிட முடியாது...... Thanks wa.,
கோவை ராயலில் இன்று முதல் (22/3/2019) திரையுலக வசூல் சக்கரவர்த்தி புரட்சி நடிகர் வழங்கிய
",பெரிய இடத்து பெண்"
தினசரி 4 காட்சிகள் நடைபெறுகிறது... Thanks wa.,
பங்குனி உத்திரம் முன்னிட்டு 21/3/2019 முதல் நாகர்கோவில் தங்கம் முக்கூடல் சண்முகாவில் (நெல்லை மாவட்டம் )
"எங்க வீட்டு பிள்ளை " தினசரி 4 காட்சிகள் நடைபெறுகிறது..... Thanks wa.,
🤝🏽🤔👍🏼🎺🍬சென்னை மாநகரின் முன்னாள் மேயரும், மனிதநேய அறக்கட்டளையின் தலைவரும்,மக்கள்திலகத்தின் மகத்துவத்தை பார்போற்றுபவருமான மாண்புமிகு "சைதை துரைசாமி" ஐயா அவர்கள், கோவை மாவட்ட 'வானவில் எம்ஜிஆர் 102 விழா'வில் பங்கேற்பதோடு, "மக்கள்திலகம்-புகைப்பட கண்காட்சி"யினை திறந்து வைப்பார்களென மகிழ்வுடன் கூறி...அனைவரையும் வருக,வருகவென வரவேற்கிறோம்!👏👏... Thanks wa.,
வணக்கம்,
கடந்த வாரம் ஒளிபரப்பாக வேண்டிய பேசும் தலைமை நிகழ்ச்சி தவிர்க்கமுடியாத காரணத்தால் ஒளிபரப்ப முடியவில்லை.. எனவே இந்த வாரம் ஒளிபரப்பாகிறது.
மனிதநேய அறக்கட்டளை நிறுவனர்
திரு. சைதை ச துரைசாமி
அவர்களின் சிறப்பு நேர்காணல்
நியூஸ்7 தமிழ் தொலைக்காட்சியில் பேசும் தலைமை நிகழ்ச்சியில்
வரும் ஞாயிறு
(24/03/2019) காலை 11 மணிக்கு ஒளிபரப்பாகும்
அதன் மறு ஒளிபரப்பு அன்று இரவு 10 மணிக்கு
ஒளிபரப்பாகும்
நன்றி.
www.ns7.tv என்ற இணையதளத்தில் நேரலையிலும் ஒளிபரப்பாகும்......... Thanks wa.,
இந்திய திரையுலகில் என்றும் சக்கரவர்த்தி மக்கள் திலகமே! தலைவரின் பட வரிசையில் "ஆ" நெடில் வரிசையில்.... சூப்பர் ஹுட் திரைப்படங்கள். வண்ணத்தில் வெளியான ஆயிரத்தில் ஒருவன் 1965 ல் வெளிவந்து முதல்வெளியீட்டில் மகத்தான வெற்றி கண்டது. அடுத்தடுத்து பல வெளியீடுகளில் வசூல் பல நாடு நகர கிரமப் புறங்களிலும் சாதனை படைத்தது. அது மட்டுமின்றி மறு வெளியீட்டில் புதிய நவீன முறையில் (.டிஜிட்டலில்) 2014.ல் உலகம் முழுதும் திரையீட்டு சென்னையில் ஆல்பட் திரையரங்கில் 190 நாளும் சத்யம் காம்பளக்ஸில் 161 நாட்களும் ஒடியது. மற்றொன்று என்ன வென்றால் ஆயிரத்தில் ஒருவன் திரைப்படம் வெளியான நாள் முதல் இன்று (.2019.) வரை திரையரங்கில் ஓடி வருகிறது என்பதும் சாதனையே! . இப்படத்தின் வெளியீடுகள் கணக்கில் அடங்காதது. மற்ற நடிகர்களை வைத்து படம் தயாரித்து பொருள் இழந்தவர்களுக்கு கருணை உள்ளமாக அவர்கள் கரை சேர கை கொடுத்து ஆயிரம் நடிகர் திரையில் வந்து மின்னி மறைந்தாலும் நம் ஆயிரத்தில் ஓருவராக அன்று முதல் இன்று வரை தொடர்ந்து வாழ் வழிப்பவர் திரை வானில் மக்கள் திலகமே!. ஆ - வரிசையில் ஆசைமுகம் திரைப்படம் 1965 ல் வெளிவந்து 50 நாளில் பெற்ற வசூல் மகத்தானது. இன்றும் தலைவரின் இயற்கை முகம் வெள்ளித்திரையில் விநியோகஸ்தர்களின் ஆசைமுகமாக அன்பு முகமாக வெற்றி முகமாக வலம் வருவது நாம் யாவரும் என்றும் அறிந்ததே! பாடல்களும் சூப்பர் ஹீட் காலத்தால் அழியாத ஆயிரத்தில் ஒருவன், ஆசைமுகம் இரண்டு காவிங்களும் 1965 ல் வெளிவந்து கலரிலும், கறுப்பு வெள்ளையிலும் சாதனையாகும். சென்னையில் மிட்லண்ட் கிருஷ்ணா மேகலா 105 நாள். மறு வெளியீடு 2014 ஆல்பட் 190 நாள், சத்யம் (.ஸ்டுடியோ அரங்கு) 161 நாள் ஒடியது. ஆசைசேமுகம் சென்னையில் 4 அரங்கில் வெளிவந்தது.
பாரகன் பிராட்வே நூர்ஜகான் சரஸ்வதி அரங்கில் 50.நாளை கடந்து ஒடியது. மேலும் வெற்றிகள் தொடரும்.... நன்றி! உரிமைக்குரல் ராஜு............ Thanks wa.,Sharings
வெள்ளித்திரையின் நாயகன் மக்கள்திலகம் அவர்களே என்றும் வசூல் பேரரசு ! கடந்த
1988.ஆண்டு முதல் 2017 வரை 30
ஆண்டுகள் வரை மக்கள் திலகத்தின் திரைப்படங்கள் ஏற்படுத்திய வெற்றிகளில் சென்னையில் மட்டும் சில முக்கிய தகவல்கள். 1.படகோட்டி - 1988 தேவிபாரடைஸ் 2 வாரம் 2. பாரகன் - 1988. நாடோடி மன்னன் 2 வாரம் 3.மோட்சம் 1988 அடிமைப்பெண் 2 வாரம் 4. நடராஜ் - 1988. நாடோடி மன்னன் 2 வாரம். 5 நாகேஷ் - 1988 ஒளி விளக்கு 3 வாரம். 6.நடராஜ் -1988 ஒளிவிளக்கு 3 வாரம் 7.பிளாசா -1988 ஒளிவிளக்கு 2 வாரம். 8.ஜெயராஜ் - 1988. ஒளிவிளக்கு 2.வாரம் 9. ஈகா -.1988. இதயக்கனி 2 வாரம் . 10. அனுஈகா -1988. ரிக்க்ஷாகாரன் .2.வாரம் 11. மினி மோட்சம் 1988. மாட்டுக்கார வேலன் . 2 வாரமும் , குடியிருந்த கோயில் 2 வாரமும் . 12. பிராட்வே - 1988 உலகம் சுற்றும் வாலிபன் 2வாரம். தொடரும்..... உரிமைக்குரல் ராஜு............. Thanks wa.,
தலைவர் எம்.ஜி.ஆரின் தனிப்பெரும் சாதனைகள் ! சென்னையில் முதன் முதலில் 4 அரங்கில் 100 நாளை கண்ட காவியம். புரட்சியாரின் படைப்பு மதுரைவீரன் ஆகும்! (பிரபாத் சித்ரா சரஸ்வதி காமதேனு) தனிப்பெரும் நாயகனே கறுப்பு வெள்ளை திரைப்படங்கள் வந்த இறுதி வரை இதுவே ரிக்கார்ட் ஆகும். ஒடிய மொத்த நாட்கள் 462. இத்திரைப் படத்திற்கு பின் கறுப்பு வெள்ளை படங்கள் பல முன்னனி நடிகர்கள் நடிகையுடன் வந்தாலும் தலைவரின் மதுரை வீரன் போல் பின் நாளில் தொடர் வெற்றியை திரையில் எப்படமும் கண்டதில்லை ! 1962.ல் நடிகர் சிவாஜிகணேசன் எஸ்.எஸ்.ஆர் இருவரும் நடித்த ஆலயமணி திரைப்படமும் 1964.ல் சாவித்திரியை வைத்து கதை அமைக்கப்பட்டு நடிகர் சிவாஜி கணேசன் நடித்த நவராத்திரி சென்னையில் 4 அரங்கில் 100 நாள். ஆனால் மதுரைவீரன் மதுரையில் வெள்ளி வீழாவும் ஒடியது. 31திரையரங்கில் 100 நாளை கடந்தது. அடுத்து கை கொடுத்த தெய்வம் படமும் சாவித்திரியை வைத்து கதை அமைக்கப்பட்ட படமாகும். இதில் நடிகர் சிவாஜி கணேசன் நடிகர் எஸ். எஸ். ஆர். என பலர் நடித்தனர். ஆனால் நடிகர் சிவாஜி கணேசன் தனியாக நடித்து சென்னையில் 4 அரங்கில் 100 நாள் ஒடிய கறுப்பு வெள்ளை படங்கள் கிடையாது. கறுப்பு வெள்ளை படங்களில் தலைவரின் சமுக படங்களும் சரித்திர படங்களும் ஒடியது போல் வேறு நடிகர்களுக்கு நிரந்தரமாக இன்று வரை தொடர் வெற்றி கிடையாது. 1956 ல் மதுரைவீரன் தாய்க்குப்பின் தாரம் 1957 ல் சக்கரவர்த்தி திருமகள்,புதுமைப் பித்தன் 1958 ல் சென்னையில் நாடோடி மன்னன் 3 அரங்கில் வெளிவந்து ஒடிய நாட்கள் போல் அது வரை சினிமாவில் எந்த நடிகர் படமும் கிடையாது. கிருஷ்ணா 147 நாள் பாரகன் 133 நாள் உமா 126 நாள் சன் தியோட்டர் 70 நாள் மொத்தம் - 476 நாட்களாகும். மதுரை வீரன்,நாடோடி மன்னன் சென்னையில் முதல் வெளியீட்டில் பெற்ற சாதனையை 1965 வரை எந்த தனி நடிகராலும் முறியடிக்கப்படவில்லை என்பது உண்மையான தகவலாகும். 1961.ல் தலைவரின் திருடாதே தாய் சொல்லைத் தட்டாதே 1962 தாயைக் காத்த தனயன் 1963.ல் பெரிய இடத்துப் பெண் 1964 வேட்டைக்காரன் பணக்கார குடும்பம் தெய்வத்தாய் 1966 முகராசி,பெற்றால் தான் பிள்ளையா 1967 காவல்காரன் வரை 100 நாட்கள் ஒடியது. கறுப்பு வெள்ளையில் 3 அரங்கில் 7 படமும் 2 அரங்கில் 2 படங்களும் ஒரு அரங்கில் ஒரு படமும் ஓடியது. 1961முதல் 1967வரை மொத்தம் 10 படங்கள் மக்கள் திலகம் தனிபெரும் கதா நாயகனாக பவனி வந்து ஓடியவை களாகும். அதன் பின் 1968ல் 5 படமும் 1970,71,72 தலா ஒரு படம் மட்டுமே வெளிவந்தது.6 வருடத்தில் 8 படங்கள் வந்தது. ஆனால் மற்ற நடிகர்களின் கறுப்பு வெள்ளை படங்கள் 1961 முதல் 1974 வரை 80 படங்களுக்கு மேல் வெளிவந்தது. இதில் பல முன்னனி நடிகர்களுடன் பல படங்கள் வெளிவந்தது, குறிப்பாக பாவமன்னிப்பு பாசமலர் கை கொடுத்த தெய்வம் ஆலயமணி பச்சை விளக்கு என...அடுத்தது தன் சொந்த அரங்கில் ஒடியது. ஒரு அரங்கில் மட்டும் 100 நாள் என ஓட்டப்பட்டது. வசூல் இல்லாது 100 நாள் விழா கொண்டாடியது... இப்படி பல தகவல்கள். உயர்ந்த மனிதன், இருமலர்கள் வெலிங்டன்னிலும். பிளாசாவில் ஞானஒளி குலமா குணமா படங்களும் பைலட் அரங்கில் தவப்புதல்வன் படமும் காஸினேவில் அன்னை இல்லம் படமும் சாந்தியில் மட்டும் சாந்தி படமும் சாந்தி கிரவுனில் கலாட்டா கல்யாணம் படமும் மற்றும் சாந்தி கிரவுன் புவனேஸ்வரி அரங்குகளில் 1965 முதல் 1972 வரை ( எட்டு ஆண்டுகளில்)100 நாள் படங்கள் மூன்று தியேட்டரில்... 1969 ல் தெய்வமகன் 1970 ல் வியட்நாம் வீடு 1971ல் பாபு 1972 ல் ப.பட்டணம்மா உட்பட மூன்று அரங்கில் அதுவும் இவர்களின் சொந்த மற்றும் குத்தகை அரங்குகளாகும். 8 ஆண்டில் 4.படம் தான் மூன்று அரங்கில் 100 நாள் காண்பித்தார்கள். ஆனால் மக்கள் திலகம் 1964 ல் மட்டும் 3 படங்கள் மூன்று அரங்கில் தனி பெரும் நாயகனாக வலம் வந்து படைத்தார். வெவ்வேறு அரங்கில் சாதனை. சித்ரா பிளாசா பிராட்வே மேகலா கிரவுன் புவனேஸ்வரி என ஆறு அரங்கில் வெற்றி. 1967 ல் - காவல்காரன் 4 அரங்கில் வெளி வந்து 3 அரங்கில் (குளோப் அகஸ்தியா மேகலா )100 நாள் 1966 ல் - பெற்றால் தான் பிள்ளையா 4 அரங்கில் வெளிவந்து இரண்டு அரங்கில் (ஸ்டார் மகாராணி)100 நாள் ஒடியது. குறைந்த எண்ணிகையில் 75 கறுப்பு வெள்ளை படங்களில் நடித்து 25 படங்கள் 100.நாளும் 25 படங்கள் 85 நாட்களும் 15 படங்கள் 10.வாரமும் 5 படங்கள் 50 நாளை கடந்தும் ஒடியுள்ளது. 75 கறுப்பு வெள்ளை படங்களில் (கடந்த 30.ஆண்டுகளில்) சுமார் 70. படங்கள் பல வெளியீடுகளில் வெளி லந்து சாதனை படைத்துள்ளது.இன்றும் (2018) சுமார் 30 படங்கள் சென்னையில் மட்டும் திரையிட படுகிறது.இதுப்போன்ற கறுப்பு வெள்ளை படவரலாறு எந்த நடிகருக்கும் கிடையாது.தனிபெரும் நாயகன் என்றும் மக்கள் திலகமே திரையுலகை ஆள்கின்றார் என்பதற்கு சில வரலாறு இது மட்டுமே! இனியும் தொடருவோம்... நன்றி! உரிமைக்குரல் ராஜு........... Thanks wa.,
நிலையான சாதனை யில் என்றும் திரையுலக மன்னன் மக்கள் திலகமே! 1.1956. -. மதுரை வீரன் 33 அரங்கு 100 நாள் .2. 1958 நாடோடி மன்னன் 16 அரங்கில் 100.நாள்.3.1965 எங்கவீட்டுப் பிள்ளை 17 அரங்கில் 100.நாள் 4 1968 குடியிருந்த கோயில் 10 அரங்கில் 100 நாள்.5.1969 அடிமைப்பெண் 15 அரங்கில் 100.நாள். 6.1970 மாட்டுக்கார வேலன் 12 அரங்கில் 100 நாள் 7. 1971 ரிக்க்ஷாக்காரன் 12 அரங்கில் 100 நாள்.8. 1973 உலகம் சுற்றும் வாலிபன் 20 அரங்கில் 100 நாள். 9.1974 உரிமைக்குரல் 12 அரங்கில் 100 நாள். 10. 1975 இதயக்கனி 10 அரங்கில் 100 நாள்.தமிழகத்தில் மட்டும் 10, 15,20,30.அரங்குகளை 1956 முதல் 1975 வரை பெற்ற காவியங்களில் மக்கள் திலகமே முன்னனி. நடிகர் சிவாஜி கணேசன் படங்களில் 1952 முதல் 1977 வரை 193 படங்களில் நடித்து அதிக பட்சமாக அதிக அரங்கில் ( 10 அரங்குக்கு மேல் 100 நாள் படங்கள் 4 மட்டுமே) பாவமன்னிப்பு (11) திருவிளையாடல் (13) வசந்த மாளிகை (12) தங்கப்பதக்கம் (11) மொத்தமே 4.படங்கள் 13 அரங்குக்கு மேல் 100 நாள் கிடையாது. தலைவரின் மதுரை வீரன் , நாடோடி மன்னன் இரண்டு படங்கள் மட்டும் 100 நாள் ஒடிய அரங்கு 49 . அதே சிவாஜி கணேசன் நடித்த 4 படங்கள் சேர்த்து 100 நாள் அரங்கு 47 ஆகும் ! தலைவரின் மீதி 8 படங்கள் 108 அரங்கு 100 நாள். 10.படங்கள் 157.தியோட்டரில் 100.நாள் ஒடி தமிழ் சினிமா சரித்திரத்தில் சாதனையாகும்.மேலும் வெற்றிகள் தொடரும். நன்றி.உரிமைக்குரல் ராஜு............... Thanks wa.,
உழைக்கும் கைகளே உருவாக்கும் கைகளே!உலகைப் புது முறையில் உண்டாக்கும் கைகளே!
ஆற்றுநீரை தேக்கி வைத்து அணைகள் கட்டும் கைகளே!ஆண்கள் பெண்கள் மானம்காக்க ஆடைதந்த கைகளே!சேற்றில் ஓடி நாற்றுநட்டு களை எடுக்கும் கைகளே!செக்கர் வானம்போல என்றும் சிவந்து நிற்கும் கைகள் எங்கள் கைகளே!
பலன் மிகுந்த யந்திரங்கள் படைத்துவிட்ட கைகளே!பாதை போட்டு உலகை ஒன்றாய் இணைத்து வைத்த கைகளே!பாரிலுள்ள பெருமை யாவும் படைத்ததெங்கள் கைகளே!பச்சைரத்தம் வேர்வையாகப் படிந்துநிற்கும் கைகள் எங்கள் கைகள
்)உலகம் எங்கும் தொழில் வளர்க்கும் மக்கள் ஒன்றாய் கூடுவோம்!ஒன்று எங்கள் ஜாதியென்று ஓங்கிநின்று பாடுவோம்!சமயம் வந்தால் கருவி ஏந்தி போர்முனைக்கே ஓடுவோம்தர்மநீதி மக்களாட்சி வாழ்கவென்றே ஆடுவோம்! - நாம்வாழ்கவென்றே ஆடுவோம்!
காலைவணக்கம்அனைவருக்கும்♥♥♥............. Thanks wa.,
தலைவரின் கலையுலக சரித்திரத்தில் மேலும் ஒரு மணிமகுட சாதனை! வண்ணப்பட வரலாற்றில் எவரும் சாதிக்காத வெற்றியில்... வெள்ளி விழா திரையரங்கில் மக்கள் திலகத்தின் காவியங்கள்! 1.சென்னையில் 25.வாரங்கள். எங்கவீட்டுப் பிள்ளை மாட்டுக்கார வேலன் உலகம் சுற்றும் வாலிபன் மூன்று படங்கள் ஒடிய அரங்குகள் காஸினோ பிராட்வே (2).மேகலா தேவிபாரடைஸ், அகஸ்தியா மறு வெளியீட்டில் 2014.ல் ஆயிரத்தில் ஒருவன் (.ஆல்பட்) .மொத்தம் ஆறு தியோட்டர்கள்!. நடிகர் சிவாஜி கணேசன் .. படங்கள் சாந்தி (4)கிரவுன்(3) புவனேஸ்வரி (2)மற்றும் சித்ரா(பாசமலர்) மொத்தம் 4.தியோட்டர்.2) மதுரை - மதுரைவீரன் எங்க வீட்டுப் பிள்ளை அடிமைப்பெண் மாட்டுக்கார வேலன் உலகம் சுற்றும் வாலிபன் உரிமைக்குரல் 6 படங்கள் ! சென்ட்ரல்(2) சிந்தாமணி(2) மினாட்சி சினிப்பிரியா 4 அரங்கு. சி.கணேசன் படங்கள் வீ.க.பெம்மன் பா.வினை ப.பட்டணம்மா வ.மாளிகை 4.படம் சென்ட்ரல் (2) நியூ சினிமா(2) அரங்கு. 3).திருச்சி எங்கவீட்டுப்பிள்ளை 236 (ஜுபிடர்) உலகம் சுற்றும் வாலிபன் 203 (பேலஸ்).2 அரங்கு. சி.கணேசன் படம் ஒன்று த.பதக்கம் ( பிரபாத்).4) கோவை எங்கவீட்டுப் பிள்ளை 190 (ராயல்) 5) நெல்லை உரிமைக்குரல் 180 நாள் (.லட்சுமி) 6) தஞ்சாவூர் எங்கவீட்டுப் பிள்ளை 176.(யாகப்பா) தலைவருக்கு 6 ஊர் 15 திரையரங்கு வெள்ளி விழா. நடிகர் சி. கணேசன் 3 ஊர் 7 தியோட்டர் 25 வாரம். மேலும் சாதனையில் தொடரும்.. ..........உரிமைக்குரல் ராஜு................ Thanks wa.,
தலைநகர் சென்னையில் கடந்த ஆண்டுகளில் தலைவர் படசாதனையில்.. 1) 2014 தேவி பாரடைஸ் ஆயிரத்தில் ஒருவன் 14 நாள். 2017 அடிமைப்பெண் 14 நாள் 2).பைலட் 1987 உ.சு.வாலிபன் 14 நாள் 2008.உ.சு.வாலிபன் 14 நாள்.3).அலங்கார் 1995 உ.சு.வாலிபன் 13 நாள். 4).பிருந்தா 1987.உ.சு.வாலிபன் 14.நாள் .அடிமைப்பெண் 2007 ல் 12 நாள். 5).கமலா1973, 1978,1982., 1990. உ. சு.வாலிபன் 2.வாரம். 6) பாரத் 1990.உ.சு.வாலிபன் 14.நாள். 7).நாகேஷ் உ.சு. வாலிபன் 1985 12 நாள் ஒளிவிளக்கு 14 நாள் 8) மெலோடி அடிமைப்பெண் 13 நாள் 9) அபிராமி 1991.மாட்டுக்கார வேலன் 28 நாள் (பகல் காட்சியும் அன்னை அபிராமி ( 3 காட்சி) 14 நாள் ஒடிய படம்.2007அபிராமி அடிமைப்பெண் 12 நாள் 10) ஆல்பட் 1990 உ.சு. வாலிபன் 16 நாள். 2006 நாடோடி மன்னன் 21 நாள். 2018 நாடோடி மன்னன் 35 நாள். எங்க வீட்டுப்பிள்ளை13.நாள்.2014 ஆயிரத்தில் ஒருவன் 190.நாள். தொடரும்....சாதனைகள் மகத்தான இணையில்லாத சரித்திர சாதனைகளின் அணிவகுப்பு....உரிமைக்குரல் ராஜு.......... Thanks wa.,
தலைவரின் திரையுலக வெற்றியில் மேலும் ஒரு சாதனை! வண்ணப்பட வரிசையில்.... 150 நாள் ஒடிய காவியங்கள். 1) அலிபாபாவும் 40 திருடர்களும் - மதுரை 168 சேலம் 154 2).நாடோடி மன்னன் திருச்சி 161 3) எங்க வீட்டுப்பிள்ளை நெல்லை 149 4) அன்பே வா சென்னை (காஸினோ) 154 5)மாட்டுக்கார வேலன் திருச்சி 156.சேலம் 150.6) ரிக்க்ஷாக்காரன் மதுரை 161.7) உலகம் சுற்றும் வாலிபன் கோவை 152 8) உரிமைக்குரல் ஈரோடு 154 கோவை 150. இச் சாதனை தமிழ்ப்பட உலகில் மகத்தான வெற்றியாகும். நன்றி உரிமைக்குரல் ராஜு...... Thanks wa.,
மக்கள்திலகத்தின் 20 வாரங்களை கடந்த வண்ணப்பட சாதனையில் முதலிடம்.. 1).அலிபாபா -.திருச்சி 147.2) நாடோடிமன்னன் சென்னை கிருஷ்ணா 147 சேலம் 147 கோவை 140.3) அன்பே வா சென்னை கிருஷ்ணா 147.மதுரை 147 4).ஒளி விளக்கு மதுரை147. 5) மாட்டுக்காரவேலன் கோவை 144.நெல்லை 142.ஈரோடு140. 6).ரிக்க்ஷாக்காரன் சென்னை தேவிபாரடைஸ் 142.கிருஷ்னா 142 திருச்சி 142 7) இதயக்கனி மதுரை 146. மகத்தான வெற்றிகள். உரிமைக்குரல் ராஜு...... Thanks wa.,
வசூல் சக்கரவர்த்தி...மக்கள் திலகத்தின் சாதனையில் ............
..1976 ஆம் ஆண்டில் சென்னை நகரில் மூன்று புதிய அரங்கில் முதல் வெற்றிகள். 1) நீதிக்குத் தலை வணங்கு தேவி காம்ளக்ஸில் ( தேவிகலாவில் முதல் 100 நாள் சாதனை) 4 காட்சியில் 106 நாளில் 424 காட்சியில் 266 காட்சி தொடர்ந்து அரங்கு நிறைந்து வசூலில் புரட்சி. 2).சத்யம் காம்பளக்ஸில் 4 காட்சியில் உழைக்கும் கரங்கள் திரையிட்டு 75 நாட்களில் 300 காட்சி ஒடி அதிக வசூலை ஏற்படுத்திய புரட்சி. 3) அபிராமி காம்பளக்ஸில் திரையிடப்பட்ட ஊருக்கு உழைப்பவன் திரைப்படம் 50.நாளில் பெற்ற வசூல் மகத்தான புரட்சி. 1977 வரை இக்காவியங்களே வசூலில் முதன்மை சாதனையாகும். வேறு எந்த நடிகரும் எந்த படமும் 1976 ல் புதிய வெற்றியை படைக்கவில்லை. மூன்று திரைப்படமும் சென்னையில் முதல் வெளியீட்டில் பெற்ற வசூல் சுமார் 35 லட்சமாகும். இன்றைய டிக்கட் விலையில் இதன் மதிப்பு சுமார் 70 கோடியாகும். உரிமைக்குரல் ராஜு.... Thanks wa.,
1976 தேவிகலா , சாந்தம் , அபிராமி., என மூன்று அரங்குகள்......
மக்கள் திலகத்தின் பொன்னும், அதில் பதித்த வைரங்களாக என்றும் மின்னும் சகாப்தம், சாதனைகள் வரிசையில்... சென்னை அண்ணா சாலை பகுதியில் 4 காட்சி திரையிட்ட படங்கள் 1).நகரில் முதன் முதலில் 4.காட்சி திரையிட்ட படம் 1965 சபையர் தியோட்டர் கன்னித்தாய் 42 நாட்கள். 2).1976 நீதிக்குத் தலை வணங்கு தேவிகலா 4 காட்சியில் 106.நாட்கள். 3) உழைக்கும் கரங்கள் சாந்தம் அரங்கில் 4 காட்சியில் 75.நாட்கள் வேறு எந்த படமும் 1977 வரை சாதனையில்லை. சென்னையில் தலைவரே அன்று முதலிடம். உரிமைக்குரல் ராஜு....... Thanks. Wa.,.....
சென்னை அண்ணா சாலையில் ஒரே நாளில் இரண்டு அரங்கில் வெளி வந்து சாதனை...1).1968 ரகசிய போலிஸ் 115. - பிளாசா 78 நாள் குளோப்15 நாள். ஒரே நாளில் 6 காட்சி ஒடிய நாட்கள் 15 தினங்கள். சிறப்பு காட்சியும் நடைப்பெற்றது. மொத்தம் 93 நாளில் நடைப்பெற்ற காட்சிகள் 279 ஆகும். 2).அடுத்து 1976.ல் நீதிக்குத் தலை வணங்கு தேவிகலா 4 காட்சி ஒடியன் 3 காட்சி நகரில் 36 நாள் 7 காட்சி நடைபெற்ற முதல் படமாகும். நகரில் ஒரே ஏரியாவில் இரண்டு அரங்கு திரையீட்டு ஒரு அரங்கில் 100.நாள் ஒடிய முதல் சாதனையை மக்கள் திலகம் பெற்றார். மொத்தம் ஒடிய நாள் தேவிகலா 106.நாள், ஒடியன் 36 நாள் சேர்த்து142 நாள் ஒடிய காட்சிகள் 532.ஆகும்.இது தான் சாதனை வரலாறு!. உரிமைக்குரல் ராஜு...... Thanks wa.,
தமிழ்பட உலகில் 115 படங்களில் தனி பெரும் கதாநாயகனாக வலம் வந்து அதிக எண்ணிகையை தொட்ட நடிகர்களின் படங்களை தண்ணி குடிக்க வைத்த மக்கள் திலகத்தின் திரைப்பட வரிசையில் சென்னையில் மட்டும் மாபெரும் வெற்றிகளை படைத்துள்ளார். நகரில் 1965 ல் ஒரே ஆண்டில் மூன்று வெள்ளி விழா அரங்குகளையும் மூன்று 100 நாள் ஒடிய அரங்குகளையும் தந்த திலகமே மக்கள் திலகமாவார். 1) எங்க வீட்டுப்பிள்ளை( காஸினோ பிராட்வே மேகலா) 2).ஆயிரத்தில் ஒருவன் (.மிட்லண்ட் கிருஷ்ணா மேகலா) அடுத்து ஒரு சாதனையில்... நகரில் குறிப்பாக அண்ணாசாலையில் 1965 ல் 211 நாட்கள் (3 காட்சியில்) ஒடிய திரைப்படம் எங்க வீட்டுப்பிள்ளை. நடைபெற்ற காட்சிகள் 633 அரங்கு காஸினோ அடுத்து இரண்டாவது... 1973.ல் உலகம் சுற்றும் வாலிபன் (3 காட்சியில்) 182 நாளில் மொத்தம் நடைபெற்ற காட்சிகள் 546 ஆகும். 1977 வரை ரிக்கார்ட் பிரேக் இரண்டு படங்கள் மட்டும் தான். அடுத்து நான்கு திரையரங்கில் வெளி வந்து முதன் முதலில் வெள்ளி விழா ஒடிய காவியம் மாட்டுக்கார வேலன் ஆகும். பிராட்வே 175 நாள் பிளாசா 112 நாள். கிருஷ்ணவேணி 107 நாள் சயானி 106 நாள். அடுத்து நகரில் தொடர்ந்து வெளியான நான்கு வண்ணப்பட சாதனையில் புரட்சி. அடிமைப்பெண் 4 அரங்கு 100 நாள், நம்நாடு 4 அரங்கில் வெளி வந்து மூன்று அரங்கில் 100.நாள் மாட்டுக்கார வேலன் 4 அரங்கில் 100 நாள் என் அண்ணன் 4 அரங்கில் வெளிவந்து ஒரு அரங்கில் 100.நாள். இதில் ஒரு அரங்கில் 175 நாள். ஒரு அரங்கில் 133.நாள் ஒன்பது அரங்கில் 100 நாள். ஒரு அரங்கில் 86 நாள் ஒரு அரங்கில் 77 நாள் ஒரு அரங்கில் 70.நாள் ஒரு அரங்கில் 56 நாள். 4.திரைப்படம் மட்டும் மொத்தம் 16 அரங்கில் சாதனை திலகம் MGR தொடர் சாதனைகள் நிகழ்த்தி உள்ளார் . உரிமைக்குரல் ராஜு.............. Thanks wa.,
பொன்மனச்செம்மலின் சென்னை நகர சாதனை தொடர்கிறது... 1964,1965,1966 தைத்திருநாளில் ( பொங்கல் பண்டிகை) வெளியான மூன்று முத்துக்களின் சாதனை 1).வேட்டைக்காரன் சித்ரா மேகலா பிராட்வே 100 நாட்கள். 2).எங்கவீட்டுப்பிள்ளை காஸினோ 211 பிராட்வே 176 மேகலா 176. நாட்கள். 3) அன்பே வா -.காஸினோ 154 கிருஷ்ணா 147 மேகலா.119.நாட்கள். தொடர் தைத் திருநாளில் வரலாறு படைத்த ஒரே வெற்றி திலகம் நம் மக்கள் திலகமே! இப்படி எல்லாம் சாதனையை தன்னகத்தே கொண்டவர் தான் என்றும் திரையுலகில் சக்கரவர்த்தி ஆவார்......... Thanks, Hats Off to Mr.B.S.Raju Sir...