-
1973, எம்ஜிஆர் திமுகவில் இருந்து நீக்கப்பட்டிருந்த நேரம்... அதிமுகவைத் தொடங்கியிருந்தார். ஆனால் மக்கள் செல்வாக்கு அது எப்போதும் போல நிறைந்திருந்தது. காரணம் சரித்திர, புராண மாயையில் சிக்கியிருந்த தமிழ் சினிமாவில் சமூகக் கருத்துகளை தன் பாணியில் சொல்லி ஒட்டுமொத்த தமிழ்நாட்டு மக்களின் மனங்களில் இடம் பிடித்திருந்தார் எம்ஜிஆர்.
#அப்போது மதுரை வந்த பிரதமர் இந்திரா காந்தியை சந்தித்து மாநில அரசு மீது புகார் கொடுக்க முடிவு செய்தார். சென்னையில் இருந்து பாண்டியன் எக்ஸ்பிரஸ் ரயில் மூலம் மதுரைக்குக் கிளம்பினார் தலைவர். இரவு நேரம் என்றாலும் கூட வழியெங்கும் மக்கள் காத்திருந்தனர். ஒரு கட்டத்தில் மக்கள் ரயிலையே நிறுத்தி விட்டார்கள்.
#அதுவும் திருச்சியை நெருங்கும் போது ரயில் நகரவே வழியில்லை. எம்ஜிஆர் பற்றித்தான் நமக்கு தெரியுமே... எந்த தொண்டரையும் புறக்கணிக்காமல் அனைவர் வரவேற்பையும் ஏற்றுக்கொள்ள ரயில் மிக மிக மெதுவாக நகர ஆரம்பித்தது. ஒரு கட்டத்தில் ரயிலுடன் மக்கள் ஓட்டமும் நடையுமாக பக்கவாட்டிலும் ரயிலுக்கு முன்னாலும் செல்ல ஆரம்பித்து விட்டனர்.
#மதுரை வந்த இந்திரா காந்தியோ ஏற்கெனவே, திட்டமிட்டபடி எம்.ஜி.ஆரைச் சந்தித்துவிட்டு டெல்லிக்குப் புறப்பட வேண்டும். தாமதமாகிக்கொண்டே இருந்தது. ரயில் இந்த வேகத்தில் சென்றால் குறிப்பிட்ட நேரத்தில் இந்திரா காந்தியை சந்திக்க முடியாது என்பதாலும், தன்னால் ரயிலில் வரும் பயணிகளும் பாதிக்கப்படுகிறார்களே என்பதாலும் எம்.ஜி.ஆர். ஒரு முடிவுக்கு வந்தார். கொடைரோடு ரயில் நிலையத்தில் இறங்கி அங்கிருந்து காரில் மதுரை சென்று இந்திரா காந்தியை சரியான நேரத்தில் சந்திக்க திட்டமிட்டார்.
#கொடைரோடு ஸ்டேஷனில் இறங்கி காரில் செல்ல ஏற்பாடுகள் நடக்கும்போது, விஷயம் அறிந்து ரயில் இன்ஜின் டிரைவர் பதறிப் போய்விட்டார். டிரைவரும் ஸ்டேஷன் மாஸ்டரும் நேரே எம்.ஜி.ஆர். இருக்கும் ரயில் பெட்டிக்கு வந்தனர். ''கொடைரோடில் இருந்து மதுரை வரை வழி நெடுக மக்கள் உங்களுக்காகக் காத்திருக்கின்றனர். நீங்கள் ரயிலில் இல்லையென்றால் நிலைமை விபரீதமாகிவிடும். நீங்கள் ரயிலிலேயே வருவதுதான் ரயிலுக்கு பாதுகாப்பு. எனவே, தயவு செய்து ரயிலிலேயே பயணத்தை தொடருங்கள்," என்று கேட்டுக் கொண்டனர்.
#அதோடு எம்ஜிஆர் உடன் பயணித்தவர்களும் "உங்களோடு பயணிப்பதில் எங்களுக்கு மகிழ்ச்சிதான்... எத்தனை நாட்களானாலும் பரவாயில்லை," என்று சொல்ல, எம்ஜிஆர் உருகிப்போனார்.
நிலைமையை புரிந்து கொண்ட எம்.ஜி.ஆர். ரயிலிலேயே பயணத்தைத் தொடர முடிவு செய்தார்.
#தன் நண்பர்களை இந்திரா காந்தியைச் சந்திக்க அனுப்பி வரமுடியாத நிலைமையையும் அவரிடம் விளக்கச் சொன்னார். வழியெங்கும் மக்களின் ஆரவார வரவேற்பால் காலை 7 மணிக்கு மதுரைக்கு வரவேண்டிய ரயில், மாலை 5 மணிக்கு வந்தது.
இதுதான் உண்மையான மக்கள் செல்வாக்கு என்பது...!.... Thanks.........
-
அதைவிட மிக மிக அதிசயம் எம். ஜீ.ஆர். அவர்கள் மறைந்த ஆண்டு ம். *1987* அந்த ஆண்டின் கூட்டு எண்ணும்1987=25= *7* ஆகும். தொடக்கம் எதுவோ முடிவும் அதுவே இவையே எண்களின் ரகசியம் அதிசயம் மனிதர்களை கொண்டுவரும் எண் 7. ஏழு கேது ஞானகாரகன் சூரியனின் நட்பு பிரகாசம் கொண்டது. அதுபோலவே பிரகாசமாக பிறந்து ஒரு இடம் வளர்ந்தது ஒரு இடம் வாழ்ந்தது ஒரு இடம் கலை பயின்றது ஒரு இடம் கலை வாழ்க்கையில்பல வாழ்ந்தது பல பல இடங்களே இவையே அதிசயங்கள்........ Thanks...
-
*எம்ஜிஆர்*
*சினிமா சக்சஸ் வரலாறுனா இப்படி இருக்கணும்..*
*ஒரு சினிமா வெற்றிபெறும். நூறு நாட்கள் ஓடும். அவ்வளவு ஏன், வெள்ளிவிழா கூட கொண்டாடும்.. ஆனால் 1965ல் எம்ஜிஆரின் எங்கள் வீட்டுப்பிள்ளை ஏற்படுத்திய ஆனந்த அதிர்ச்சிகள் அளவிட முடியாதவை.*
படத்தின் பிரமாண்ட வெற்றியால் மகிழ்ந்து போன படத்தின் தயாரிப்பாளர் நாகிரெட்டி எம்ஜிஆருக்கு அளித்து, அவர் திருப்பி அனுப்பிய உபரி ஒரு லட்ச ரூபாயை கொண்டு அப்போதைய சென்னை புறநகர் பகுதிகளில் சில ஏக்கர் வாங்கி இருக்கலாம்.. இன்று அந்த நிலம்எத்தனை நூறு கோடிகள் போயிருக்கும்?
எங்க வீட்டுப் பிள்ளையின் பிரமாண்ட வெற்றி பெற்ற 1965 ஆம் ஆண்டு அப்போது The Hindu பத்திரிகை ஒரு கட்டுரை வெளியிட்டது. இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு அந்த கட்டுரையை மறுபிரசுரம் செய்தது அதே பத்திரிகை..
அந்தக் கட்டுரையை மூத்த பத்திரிகையாளர் கதிர்வேல் Kathir vel சார் தமிழாக்கம் செய்து முகநூலில் பதிவிட்டு இருந்தார்.. இதோ அந்த பதிவு..
------------------------------------------------------
எங்க வீட்டு பிள்ளை படம் இந்திய திரைப்பட வரலாற்றில் ஒரு மைல் கல்.
வசூலில் இதுவரை கண்டிராத சாதனை படைத்த அந்த படம் இப்போது வெள்ளி விழா கொண்டாடுகிறது. ப்டத்தின் தயாரிப்பாளர்கள், நடிகர் நடிகைகள், தொழில்நுட்ப கலைஞர்கள் பாராட்டு மழையில் நனைகிறார்கள். படத்தை வினியோகித்தவர்களும் திரையிட்டவர்களும் லாபத்தில் திளைக்கிறார்கள்.
சமீப காலங்களில் ஒரு படம் வெள்ளி விழா காண்பதே அரிதாகி விட்டது. கல்யாண பரிசு, பாவ மன்னிப்பு, பாச மலர், காதலிக்க நேரமில்லை ஆகிய படங்கள் மட்டுமே வெள்ளி விழா கண்இருக்கின்றன. ஆனால் அந்த பெருமையும் எங்க வீட்டு பிள்ளையின் சாதனைக்கு நிகராகாது.
எப்படி என்றால், அந்த படங்கள் எல்லாம் ஏதேனும் ஒரு தியேட்டரில் மட்டுமே 25 வாரங்கள் ஓடி வெள்ளி விழா கொண்டாடின. எங்க வீட்டு பிள்ளையோ மெட்ராசில் மட்டுமே கேசினோ, பிராட்வே, மேகலா ஆகிய 3 தியேட்டர்களில் வெள்ளி விழா தாண்டி சக்கைபோடு போடுகிறது. இது தவிர மதுரை, கோயமுத்தூர், திருச்சி, தஞ்சாவூர் என வேறு ஊர்களிலும் இந்த சாதனையை புரிந்திருக்கிறது.
படத்தின் உருவாக்கத்தில் பங்கேற்ற ஒவ்வொருவரும் இந்த மகத்தான சாதனையை நினைத்து பெருமை கொள்ளலாம். ஒட்டுமொத்த தென் இந்திய திரை உலகமே அவர்களுக்கு தலை வணங்குகிறது.
ஆச்சரியம் என்ன என்றால், வினியோகஸ்தர்கள், தியேட்டர் அதிபர்கள் ஆகியோரை காட்டிலும் எங்க வீட்டு பிள்ளை மூலமாக அதிகம் சம்பாதித்து இருப்பது நமது அரசாங்கம்தான். த்ன் இந்தியா முழுவதிலும் இருந்து இந்த ஒரு படத்தின் மூலமாக மட்டும் அரசாங்கத்துக்கு கிடைத்திருக்கும் கேளிக்கை வரி எவ்வளவு தெரியுமா? 50 லட்சம்!
எங்க வீட்டு பிள்ளை படத்தின் பிரமிக்க வைக்கும் இந்த வருமானமும் லாபமும் திரைப்பட தயாரிப்பிலும் வினியோகத்திலும் ஈடுபட்டுள்ள அனைவருக்கும் புதிய நம்பிக்கையையும் ஊக்கத்தையும் அளித்து அவர்கள் இன்னும் இன்னும் அதிகமாக முதலீடு செய்ய தூண்டுதலாக அமைந்துள்ளது.
மதராஸ் பட்டணத்தில் வசிக்கின்ற மொத்த ஜனங்களான 20 லட்சம் பேரில் 12 லட்சம் பேர் எங்க வீட்டு பிள்ளை படத்தை பார்த்து ரசித்திருக்கிறார்கள் என்றால் நிச்சயமாக அது சாதாரண சாதனை கிடையாது.
ஒரு திரைப்படம் இந்த அளவுக்கு மகத்தான வெற்றி பெற்றதற்கு என்ன காரணம்?
காரணங்களை கண்டுபிடிக்க சிரமப்பட தேவையில்லை. ஒரு தடவை பார்த்தவர்களை திரும்பத் திரும்ப தியேட்டருக்கு வரவழைக்கும் விதமாக படத்தின் கதை அனைத்து தரப்பு மக்களுக்கும் பிடித்திருந்தது என்பது முதல் காரணம். மிகச் சிறந்த பொழுதுபோக்கு அம்சங்கள் தவிர, படத்தின் மூலம் மக்கள் மனதில் பதிய வைக்கப்படும் நீதியும் இன்னொரு காரணம். தனிமனித ஒழுக்கத்தை உயர்த்திப் பிடிக்கும் கதையம்சம் அனைவரையும் கவர்ந்திருக்கிறது.
நடுங்கும் கோழையாகவும் அட்டகாசமான ஜாலி பேர்வழியாகவும் இரண்டு வேடங்களில் வெளுத்துக் கட்டியிருக்கும் எம்ஜிஆரின் பிரமாதமான நடிப்பு வேறு எதை விடவும் முக்கியமான காரணம்.
இரண்டு முற்றிலும் வேறுபட்ட பாத்திரங்களுக்கு உயிர் கொடுக்கும் வகையில் அற்புதமாக நடித்திருந்தாலும், கோழையான நல்லவனாக எம்ஜிஆர் தோன்றும் ஒவ்வொரு காட்சியிலும் அபார நடிப்பாலும் வசன உச்சரிப்பாலும் அததனை பேரின் உள்ளங்களையும் கொள்ளையடிக்கிறார்.
தேர்ந்த விமர்சகர்கள், சினிமா விற்பன்னர்கள், சராசரி ரசிகர்கள் எல்லோரும் சொக்கிப் போகிறார்கள் அவர் இரு வேடங்களிலும் வெளிப்படுத்தும் முக பாவங்களையும் உடல் அசைவுகளையும் பார்த்து. அபாரமான நடிப்புத் திறன் கொண்ட எம்ஜிஆர் இந்தப் படத்தின் மூலமாக பல தடங்களைத் தாண்டியிருக்கிறார் என்று அவர்கள் ஏகோபித்து சிலாகிக்கிறார்கள்.
எங்க வீட்டு பிள்ளை எம்ஜிஆரின் தனிப்பட்ட வெற்றி என்றும் தாராளமாக சொல்லலாம். இதுவரை அவரே சொந்தமாக தயாரித்து இயக்கி வெளியிட்ட நாடோடி மன்னன் படம்தான் தமிழில் மிகப்பெரிய வசூலைக் குவித்த படமாக இருந்து வந்தது. எங்க வீட்டு பிள்ளை படத்தின் மூலமாக தனது சாதனையை அவரே முறியடித்திருக்கிறார்.
இந்த படம் இதுவரை வெளியான எந்தப் படங்களையும்விட பல வகையிலும் மேம்பட்டது. கண்ணைப் பறிக்கும் வண்ணப் படம் என்பது பிரதானமான அம்சம். காட்சி அமைப்பில் ஆகட்டும், தொழில் நுட்ப நேர்த்தியில் ஆகட்டும் இது புதிய மதிப்பீடுகளை கோரும் படம். மொத்த படப்பிடிப்பும் 45 நாட்களில் முடிந்தது புதிய சாதனை. பூஜை போட்ட இரண்டரை மாதத்தில் படம் திரைக்கு வந்து விட்டது என்பதே பிரமிக்க வைக்கும் நிகழ்வாகும். இந்தியாவில் வேறு எந்தப் படமும் இந்த சாதனையை புரிந்ததில்லை.
இது எப்படி சாத்தியமானது என்று தயாரிப்பாளர் நாகிரெட்டி, சக்கரபாணியை கேட்டால் ஒரே நபரை கைகாட்டுகிறார்கள்.
“பணத்தை முதலீடு செய்தவர்கள் நாங்கள்தான் என்றாலும், இது முழுக்க முழுக்க எம்ஜிஆர் படம். அவரே கதாநாயகன், அவரே தயாரிப்பாளர், அவரே இயக்குனர் என்று சொல்லும் அளவுக்கு எல்லா பொறுப்புகளையும் தோளில் சுமந்தார். அவருடைய திராமைக்கும் வேகத்துக்கும் ஈடுகொடுக்க எல்லோரும் திணறிப் போனோம். ப்டத்தின் ஒவ்வொரு ஃபிரேமையும் பார்த்துப் பார்த்து செதுக்கினார். ஒவ்வொரு நாளும் 16 முதல் 18 மணி நேரம் எம்ஜிஆர் இந்தப் படத்துக்காக உழைத்ததை பார்த்து அசந்து விட்டோம்” என்று சொன்னார்கள் இரு ஜாம்பவான்களும்.
எம்ஜிஆருக்கு நடிக்க வராது என்பதுதான் இதுவரை பொதுவான ஒரு கருத்தாக சொல்லப்பட்டது. ஜாலியாக வந்து ஆடிப்பாடி சிரித்து சண்டை போட்டு மகிழ வைக்கும் கதாபாத்திரங்களில் மட்டுமே அவரால் ஜொலிக்க முடியும் என பலரும் நினைத்தார்கள்.
அவ்வளவு எதற்கு. நிறைய படித்த, பல மொழி படங்களை பார்த்து ரசிக்கும் திரைப்பட ரசிகர்கள் ‘நான் எம்ஜிஆர் படத்துக்கெல்லாம் போவதில்லை’ என்று கொஞ்சம் கர்வத்துடனே சொல்லுவார்கள். அவர்களுக்கெல்லாம் எங்க வீட்டு பிள்ளை மூலம் சரியான பதிலடி கொடுத்திருக்கிறார் எம்ஜிஆர். எம்ஜிஆருக்கு நடிக்க தெரியுமா என்ற கேள்வியை இனி அவர்கள் கனவிலும் கேட்க மாட்டார்கள்.
எம்ஜிஆர் மிகச் சிறந்த நடிகர் மட்டுமல்ல. பன்முக திறமை, தொழில் ஈடுபாடு, கடின உழைப்பு, கடைநிலை தொழிலாளிகளையும் சமமாக பாவித்து பாராட்டும் நட்புணர்வு எல்லாமே அவரது வெற்றிக்கு உதவியிருப்பதை இப்போது எல்லோரும் புரிந்து கொள்வார்கள்.
இந்த நல்ல குணங்கள் எம்ஜிஆரிடம் வெளிப்படுவது திரையில் மட்டுமல்ல. நிஜ வாழ்க்கையிலும்தான். அதனால்தான் அவருக்கு இத்தனை பிரமாண்டமான ரசிகர் பட்டாளம் வாய்த்திருக்கிறது.
நன்றி Kathir Vel
-
M.G.R. தமிழகத்தின் முதல்வர் என்றாலும்கூட, சில விஷயங்களில் அரசுத்துறை அல்லது சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்காமல் தனிப்பட்ட முறையில் தானே தலையிட்டு பிரச்சினைகளைத் தீர்த்து வைப்பார். அதிலும் கூட அவரது மனிதாபிமானமே மேலோங்கியிருக்கும்!
மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் திருப்பாவை, திருவெம்பாவை சொல்லிக் கொடுக்கவும் ஆன்மிகப் பிரசங்கம் செய்யவும் ஒரு பெண்மணி நியமிக்கப்பட்டிருந்தார். அவரது மறை வுக்குப் பிறகு அந்தப் பணி அவரது மகளுக்கு வழங்கப்பட்டது. அறநிலை யத்துறை மூலம் அவருக்கு மாதச் சம்பளமும் உண்டு. அந்தப் பெண்மணி அவரது தாயாரைப் போல இல்லாமல், சரியாக பணிக்கு வருவதில்லை என்றும் பயிற்சியில் சேருவோருக்கு முறையாக சொல்லிக் கொடுப்பதில்லை என்றும் புகார்கள், முதல்வராக இருந்த எம்.ஜி.ஆரின் கவனத்துக்கு வந்தன.
மதுரைக்கு எம்.ஜி.ஆர். சுற்றுப் பயணம் சென்றிருந்த நேரத்தில் ஒருநாள், நிகழ்ச்சிகளை முடித்துக் கொண்டு இரவு 9 மணிக்கு மேல் உதவியாளர்களிடம் ‘‘மீனாட்சி அம்மன் கோயிலுக்குப் போக வேண்டும். அங்கு ஒரு வேலை இருக்கிறது. இப்போது கூட்டம் குறைவாக இருக்கும். பக்தர் களுக்கு இடைஞ்சல் இருக்காது’’ என்று சொன்னார். போலீஸ் அதிகாரிகளையும் வரவேண்டாம் என்று கூறிவிட்டார். கோயில் அதிகாரிகளுக்கு மட்டும் முன்கூட்டியே தகவல் தெரிவித்ததுடன், தனது வருகை யாருக்கும் தெரிய வேண்டாம் என்றும் எம்.ஜி.ஆர். சொல்லிவிட்டார்!
கோயிலுக்குச் சென்ற எம்.ஜி.ஆரை நிர்வாக அதிகாரிகள் வரவேற்றனர். தனக்கு எந்தவித விசேஷ மரியாதையும் வேண்டாம் என்று மறுத்துவிட்டார். தரிசனம் முடித்து பிரசாதம் கொண்டு வந்த அர்ச்சகருக்கு பணம் கொடுத்துவிட்டு, கோயிலை சுற்றிப் பார்த்தார். நிர்வாகம் குறித்து அதிகாரிகளுடன் ஆலோசித்தார். கோயில் யானையைத் தட்டிக் கொடுத்து அதன் பராமரிப்பு, அளிக்கப்படும் உணவு வகைகள் குறித்து எம்.ஜி.ஆர். கேட்டறிந்தார்.
கோயில் அலுவலகத்துக்குச் சென்று அர்ச்சகரிடம் திருப்பாவை, திருவெம்பாவை சொல்லிக் கொடுக்கும் பெண்மணியை தன்னை வந்து பார்க்கச் சொல்லும்படி எம்.ஜி.ஆர். கூறினார். கோயிலுக்கு சொந்தமான இடத்தில் அருகிலேயே அந்தப் பெண்மணிக்கு வீடு ஒதுக்கப்பட்டிருந்தது. அவ ருக்கும் முன்கூட்டியே தகவல் தெரிவிக்கப்பட்டிருந்தது. புகார்கள் குறித்து விசாரிக்கத்தான் முதல்வர் எம்.ஜி.ஆர். அழைக்கிறார் என்று அந்தப் பெண்மணிக்குத் தெரிந்துவிட்டது.
பயத்தில் கோயில் அலுவலகத்துக்கு அழுதுகொண்டே வந்தார் அந்தப் பெண்மணி. அவரை எம்.ஜி.ஆர். உட்காரச் சொன்னார். ஆனால், அந்தப் பெண் தொடர்ந்து விக்கி விக்கி அழுதபடியே நின்றார். மீண்டும் எம்.ஜி.ஆர். வலியுறுத்தி சொன்னதும் உட்கார்ந்துவிட்டார். அவரிடம் எம்.ஜி.ஆர். கனிவுடன், ‘‘அழாதேம்மா, தப்பு உங்கள் பேரில் தானே. உங்கள் தாயார் இந்தப் பணியை எவ்வளவு சிறப்பாக செய்தார்? நீங்களும் அதேபோல பணியாற்றுவீர்கள் என்று நம்பித்தானே உங்களுக்கு அந்தப் பொறுப்பை கொடுத்திருக்கிறார்கள்? தெய்வீகமான விஷயங்களை நாலு பேருக்கு சொல்லிக் கொடுக்கும் பணியில் இருக்கும் நீங்கள், அதை பொறுப்போடும் அர்ப்பணிப்போடும் செய்ய வேண்டாமா?’’ என்றார்.
அந்தப் பெண் அழுதவாறே, ‘‘இனி மேல் ஒழுங்காகப் பணியாற்றுகிறேன் ஐயா. பணியில் கவனமாக இருப்பேன். என்னை நீங்கள் நம்பலாம்’’ என்றார். ‘‘உங்களை நம்புகிறேன். கவனமாக பணி யாற்றுங்கள். நான் அழைத்ததும் வந் ததற்கு நன்றி. நீங்கள் போகலாம்’’ என் றார். அதன் பின்னர், அந்தப் பெண்மணி ஈடுபாட்டோடு பணி செய்தார்.
எம்.ஜி.ஆர். நினைத்திருந்தால் அந்தப் பெண்ணை வேலையை விட்டே நீக்கி யிருக்கலாம். அல்லது அறநிலையத் துறை அதிகாரிகள் மூலம் நட வடிக்கை எடுக்கச் சொல்லியிருக்கலாம். மதுரை வந்தபோது, தானே நேரில் கோயிலுக்குச் சென்று அந்தப் பெண்மணியை அழைத்து அறிவுரை வழங்கினார் என்றால், அதற்கு அந்தப் பெண்மணியின் குடும்பச் சூழலை அறிந்து வைத்திருந்த எம்.ஜி.ஆரின் மனிதாபிமானம்தான் காரணம்!.......... Thanks.........
-
புரட்சித்தலைவரின் கனவு நனவாகிறது
எம்.ஜி.ஆர் - ஜெயலலிதா நடிக்கும் ‘வந்தியத்தேவன் : பொன்னியின் செல்வன் பாகம் 1’ அனிமேஷன் திரைப்படத்தின் பாடல் வெளியீடு.
கல்கியின் பொன்னியின் செல்வன் கதையைத் திரைப்படமாக எடுக்கவேண்டும் என்பது எம்.ஜி.ஆரின் நீண்டநாள் கனவாக இருந்தது. போஸ்டர்வரை வந்து அந்தப் படம் கைவிடப்பட்டது. எம்.ஜி.ஆரின் பிறந்தநாள் அன்று அவரது கனவை நனவாக்கும் விதையை சனீஷ்வர் அனிமேஷன்ஸ் நிறுவனம் விதைத்துள்ளது. ‘வந்தியத்தேவன் : பொன்னியின் செல்வன் பாகம் 1’ என்ற பெயரில் அனிமேஷன் திரைப்படமாக கல்கியின் புகழ்பெற்ற நாவலை தயாரித்துள்ளது. நான்கு ஆண்டுகளாக நடைபெற்ற பணி நிறைவடைந்துள்ள நிலையில் இத்திரைப்படத்தின் பாடல் ஒன்றை இக்குழு வெளியிட்டுள்ளது. ‘பெரியார் குத்து’ பாடல் மூலம் அனைவரின் கவனத்தைக் கவர்ந்த ரமேஷ் தமிழ்மணி இப்பாடலுக்கு இசையமைத்துள்ளார். பாகுபலி எந்திரன் போன்ற வெற்றிப்படங்களில் வசனம் பாடல்கள் எழுதிய மதன் கார்க்கி இந்தப் படத்திற்கு வசனம் மற்றும் பாடல்களை எழுதியுள்ளார். தவச்செல்வனின் இயக்கத்தில் பெரிய பொருட்செலவில் உருவாகியுள்ள இந்தப் படத்தை இந்த ஆண்டு பல்வேறு இந்திய மொழிகளில் வெளியிடத் திட்டமிட்டுள்ளனர். எம்.ஜி.ஆரின் தத்துவப் பாடல்கள் காலத்தை வென்றவை என்பதை நாம் அறிவோம். இத்திரைப்படத்தில், சந்தோஷ் ஜெயகரனின் குரலில், வந்தியத்தேவனின் அறிமுகப் பாடல் ‘உலகம் என் உலகம் நான் உத்தரவிட்டால் விடியும்’ என்று தொடங்கி ‘ஒவ்வொரு நொடியும் வைரம் என்றால் காலம் புதையல்தானே; ஒவ்வொரு உள்ளமும் அரியணை என்றால் நிரந்தர அரசன் நானே!’ என்று நிறைவடைகிறது. புரட்சித்தலைவருக்காக எழுதப்பட்ட வரிகள். அனைவரின் மனதிலும் நீங்கா இடம்பிடித்த புரட்சித்தலைவரின் பிறந்தநாள் அன்று இந்தப் பாடலை வெளியிட்டு அவருக்கு மரியாதை செய்து இந்தப் பாடலும் புரட்சித்தலைவரின் தத்துவப் பாடல்களைப் போல் அனைவர் மனதிலும் இடம்பிடிக்கும் என்று நம்புகிறது ‘வந்தியத்தேவன்’ படக்குழு........... Thanks.........
-
-
#புரட்சித்தலைவர்னா #யாரு???
சுதந்திரப் போராட்டத் தியாகி கம்யூனிஸ்ட் ஜீவானந்தம் என்னும் "ஜீவா" அவர்கள் மிகவும் வறுமையில் வாடுவதாக அறிந்து, எந்தவித முன்னறிவிப்புமின்றி, ஒரு மழைநாளில் முதல்வர் எம்ஜிஆர், ஜீவாவைக் காண அவரது குடிசைக்குள் நுழைந்தார்.
தாமரை ஏட்டிற்கு தலையங்கம் எழுதிக்கொண்டிருந்த ஜீவா, எம்ஜிஆரை பார்த்ததும் இன்ப அதிர்ச்சியுற்று, வரவேற்று ஒரு பாயில் அமரவைத்தார்.
குடிசையின் கோலத்தைக் கண்டு எம்ஜிஆர் மனமுருகிவிட்டார்...
"இன்னும் எத்தனை நாட்கள் இப்படி துயரப்படப்போகிறீர்கள்? ஒரு சிறிய வீடாவது கட்டித் தருகிறேனே..."
என்றார் எம்ஜிஆர்...
"இங்குள்ள புத்தகங்களைப் பாதுகாக்கவேண்டும். அதற்கு ஒரு வீடு வேண்டும். ஆனால் எல்லோருக்கும் வீடு வரும்போது நாமும் கட்டுவோம்..." என்றார் ஜீவா. ஆனால் எம்ஜிஆர் விடுவதாக இல்லை..
அதற்கு ஜீவா..."எங்கள் கட்சியைக் கலந்து கொண்டு சொல்கிறேன்" என்று கூறிவிட்டார்.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியும் ஜீவாவின் கோரிக்கையைப் பரிசீலித்து...
"ஜீவாவிற்காக நாம் எதுவும் செய்யமுடிவதில்லை. அதனால் எம்ஜிஆர் செய்வதைத் தடுக்கவேண்டாம்" என்று அனுமதியளித்தது. புரட்சித்தலைவரா? அப்படின்னா யார் என கூறித் திரியும் எதிரிகளுக்கு பதிலாக இது ஒன்று போதாதா?
தமிழகத்தில் எம்ஜிஆருக்குப் பிறகு எத்தனையோ ஆட்சி மாற்றங்கள் ஏற்பட்டு, பல சிம்மாசனங்கள் சிதறுண்டு விட்டன. ஆனால்,ஜீவாவிற்காக புரட்சித்தலைவர் கட்டித்தந்த வீடு இன்னமும் தாம்பரத்தில் உயர்ந்து நிற்கிறது...
ஜீவாவின் மனதில் ஒரு விஷயம் நிழலாடிக்கொண்டேயிருந்தது. தனது நண்பர் செல்வராஜிடம் அடிக்கடி உருகிக் கூறுவார்...
"இதோ, நானும் நகம் முளைத்த நாள் முதலாய், உள்ளங்கால் தேய்ந்தது தான் மிச்சம். ஜெயில் இல்லையேல் ரயில் என்றாகிவிட்டது என் வாழ்க்கை. எனக்கென்று ஒரு வீடு கட்டித்தரவேண்டும் என்று எவராவது நினைத்தார்களா ???"
"அந்த எண்ணம் எம்ஜிஆருக்குத் தானே ஏற்பட்டது..."
-
#புரட்சித்தலைவர்னா #யாரு???
சுதந்திரப் போராட்டத் தியாகி கம்யூனிஸ்ட் ஜீவானந்தம் என்னும் "ஜீவா" அவர்கள் மிகவும் வறுமையில் வாடுவதாக அறிந்து, எந்தவித முன்னறிவிப்புமின்றி, ஒரு மழைநாளில் முதல்வர் எம்ஜிஆர், ஜீவாவைக் காண அவரது குடிசைக்குள் நுழைந்தார்.
தாமரை ஏட்டிற்கு தலையங்கம் எழுதிக்கொண்டிருந்த ஜீவா, எம்ஜிஆரை பார்த்ததும் இன்ப அதிர்ச்சியுற்று, வரவேற்று ஒரு பாயில் அமரவைத்தார்.
குடிசையின் கோலத்தைக் கண்டு எம்ஜிஆர் மனமுருகிவிட்டார்...
"இன்னும் எத்தனை நாட்கள் இப்படி துயரப்படப்போகிறீர்கள்? ஒரு சிறிய வீடாவது கட்டித் தருகிறேனே..."
என்றார் எம்ஜிஆர்...
"இங்குள்ள புத்தகங்களைப் பாதுகாக்கவேண்டும். அதற்கு ஒரு வீடு வேண்டும். ஆனால் எல்லோருக்கும் வீடு வரும்போது நாமும் கட்டுவோம்..." என்றார் ஜீவா. ஆனால் எம்ஜிஆர் விடுவதாக இல்லை..
அதற்கு ஜீவா..."எங்கள் கட்சியைக் கலந்து கொண்டு சொல்கிறேன்" என்று கூறிவிட்டார்.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியும் ஜீவாவின் கோரிக்கையைப் பரிசீலித்து...
"ஜீவாவிற்காக நாம் எதுவும் செய்யமுடிவதில்லை. அதனால் எம்ஜிஆர் செய்வதைத் தடுக்கவேண்டாம்" என்று அனுமதியளித்தது. புரட்சித்தலைவரா? அப்படின்னா யார் என கூறித் திரியும் எதிரிகளுக்கு பதிலாக இது ஒன்று போதாதா?
தமிழகத்தில் எம்ஜிஆருக்குப் பிறகு எத்தனையோ ஆட்சி மாற்றங்கள் ஏற்பட்டு, பல சிம்மாசனங்கள் சிதறுண்டு விட்டன. ஆனால்,ஜீவாவிற்காக புரட்சித்தலைவர் கட்டித்தந்த வீடு இன்னமும் தாம்பரத்தில் உயர்ந்து நிற்கிறது...
ஜீவாவின் மனதில் ஒரு விஷயம் நிழலாடிக்கொண்டேயிருந்தது. தனது நண்பர் செல்வராஜிடம் அடிக்கடி உருகிக் கூறுவார்...
"இதோ, நானும் நகம் முளைத்த நாள் முதலாய், உள்ளங்கால் தேய்ந்தது தான் மிச்சம். ஜெயில் இல்லையேல் ரயில் என்றாகிவிட்டது என் வாழ்க்கை. எனக்கென்று ஒரு வீடு கட்டித்தரவேண்டும் என்று எவராவது நினைத்தார்களா ???"
"அந்த எண்ணம் எம்ஜிஆருக்குத் தானே ஏற்பட்டது..."......... Thanks.........
-
மக்கள் திலகம், புரட்சிதலைவரின் திரைப்படங்களை , திரைக்காவியங்களை...டிஜிட்டல் முறையில் புதுப்பொலிவுடன் மெருகேற்றி திரையிட்டால். துக்கடா புதிய படங்கள் எல்லாம் முறியடித்து நம் தலைவர் புரட்சிதலைவர் ஒருவரே என்றும்" வசூல் சக்கரவர்த்தி". சரித்திர நாயகன், சகாப்தம் படைத்த ஏக சக்கரவர்த்தி......... Thanks.........
-
இங்கே தான் எம்.ஜி.ஆர்!!
------------------------------------
வரலாறு!
இது சாதனையாளர் எல்லோரையுமே உள் வாங்குகிறது!
சிலரை அழுத்தமாக அமர வைக்கிறது!
சிலரை முகமன் கூறி வரவேற்று--பின் மூலையில் உட்கார்த்தி வைக்கிறது!
சிலருக்கு மட்டுமே சிறப்பு அந்தஸ்தை அவர்களின் சாதனைகளின் அடிப்படையில் கொடுத்து மூச்சுக்கு முப்பது தடவை அவர்கள் பெயரை முழங்குகிறது!
சரி! பதிவுக்குள் செல்வோம்!
இந்தியாவில் இன்று பசியின்றி உண்டு ருசியோடு கல்வியை மாணவ சமுதாயம் கற்கிறது என்றால் அதற்கு முழு முதற் காரணம் எம்.ஜி.ஆர்!!
அவர் முதலமைச்சராக இருக்கும்போது அவரால் தான் சத்துணவு திட்டம் கொண்டுவரப் பட்டது!
மேற்கூறிய செய்தியை சொல்லி மகிழ்ந்திருப்பவர் ராகுல் காந்தி!!
அகில இந்திய காங்கிரஸ் தலைவர்!!
சமீபத்து எம்.ஜி.ஆர் பிறந்த நாளில் இந்த அறிக்கையை நாட்டு மக்களுக்கு தந்திருக்கிறார் ராகுல்!!
இது அரசியல் விளம்பரத்துக்கான அவரது உரை என்று நாம் எடுத்துக் கொள்ள முடியாது! அதே சமயம் அவரது தந்தை ராஜிவ் காந்தியின் எம்.ஜி.ஆர் பற்றையும் நாம் அறிவோம்!!
ஏற்கனவே திரு நரேந்திர மோடி எம்.ஜி.ஆரின் சிறப்புக்களை மக்களிடம் பகிர்ந்து மகிழ்ந்ததும்--எம்.ஜி.ஆருக்கு என்றே சில சாதனைகளை செயல்படுத்தி இருப்பதையும் நாம் அறிவோம்!
இந்த நிலையில் ---
ராகுல் காந்தியின் சமீபத்திய இந்த உரை நமக்கு சில தீர்மானமான தெளிவுகளை கொடுக்கிறது!!
1]--தனித் தமிழ் நாடு என்ற தி.மு.கவின் அன்றைய அர்த்தமற்ற கோரிக்கையை அன்று நிராகரித்த காலம்-
எம்.ஜி.ஆர் என்ற விஸ்வரூபத்தின் வாயிலாகவே-
தமிழ் நாட்டுக்குள் இந்தியா!!--என்ற கீர்த்தியை அளித்திருக்கிறது!
2]--இந்தியாவின் இரண்டு பெரிய தேசியக் கட்சிகள்-
காங்கிரஸ்--பி.ஜே.பி--இரண்டின் தலைவர்களுமே எம்.ஜி.ஆரை உள் வாங்கி உரைத்திருப்பவை இதுவரை எந்த தலைவருக்கும் கிட்டாத பேறு என்பதுடன் எட்டாத பேறு என்பதும் இங்கே கவனத்தில் கொள்ளத் தக்கதே!!
3]--பள்ளிக் குழந்தைகள் பசியாற வேண்டும் என்று துடித்த விருது நகர் தந்த விருது,,காமராஜர் நினைத்தாலும்--அன்றைய நிதிப் பற்றாக்குறை அவரது லட்சியத்தை நீதிப் பற்றாக்குறை ஆக்கி,,திட்டத்தை பாதியில் நிறுத்த நேர்ந்ததை மறந்து இன்றையக் காங்கிரஸ்காரர்கள்,,சத்துணவு திட்டத்தை எம்.ஜி.ஆரின் சாதனையாக பேசப் படுவதை ஏற்காத நிலையில்--
காங்கிரஸின் அகில இந்தியத் தலைவர் ராகுலே இன்று குறிப்பிட்டிருப்பது??
காலத்தில் தோன்றி கைகளை வீசிக்
காக்கவும் தயங்காது என்ற ஆனந்தஜோதியின் அமிர்த வரிகள்!!
இப்படி இன்னும் பல்வேறு ஆச்சரிய உண்மைகளை அணு அணுவாக நமக்கு தெரிய வைக்கும் வகையில் திரு ராகுல் காந்தியின் அறிக்கை அமைந்திருக்கிறது என்ற வகையில் நாம் அவரை பாராட்டி வாழ்த்துகிறோம்!!
சரித்திரம்--
சிலரை முழங்கும்
சிலரை முழுங்கும்!!
வெகு சிலரின் சாதனைகளை மட்டுமே
அணு தினமும் வழங்கும்!!
அந்த வகையில்--
எங்கே எம்.ஜி.ஆர். ? என்ற கேள்விக்கு--
மீண்டும் பதிவின் தலைப்பு!! இடம் பெறுவதில் உடன்பாடு தானே உங்களுக்கு???......... Thanks...
-
*MGR* வியக்க வைக்கும் நினைவாற்றல் கொண்டவர். அவரது நினைவாற்றலையும், செல்வாக்கையும், பிறர் நலனில் கொண்டிருந்த அக்கறையையும் பார்த்து வியந்தவர்களில் நடிகரும் பத்திரிகையாளருமான ‘சோ’ ராமசாமியும் ஒருவர்.
எம்.ஜி.ஆரை கடுமையாக சோ எதிர்த்த காலங்களும் உண்டு. மிகத் தீவிரமாக ஆதரித்த சமயங்களும் உண்டு. 1980ம் ஆண்டு எம்.ஜி.ஆர். ஆட்சி கலைக்கப்பட்ட பின் நடந்த தேர்த லில், எம்.ஜி.ஆர். மீண்டும் ஆட்சிக்கு வர வேண்டும் என்பதில் சோ தீவிரமாக இருந்தார். இப்போதும் கூட ‘சோ ஒரு அதிமுக ஆதரவாளர்’ என்று சில விமர்சனங்கள் இருந்தாலும், அந்தந்த சூழ் நிலைக்கு ஏற்ப, தன் மனதுக்கு நியாயம் என்று பட்டதை பட்டவர்த்தனமாக சொல்பவர் அவர். மக்கள் நலனுக்காக இலவச திட்டங்களை எம்.ஜி.ஆர். கொண்டு வந்தபோது கிண்டல் செய்தா லும் சில ஆண்டுகளுக்கு முன், ‘‘நமது நாடு இருக்கும் சூழலில் இலவச திட்டங்கள் தேவை என்பதை உணர்கிறேன்’’ என்று சோ கூறினார்.
‘அடிமைப் பெண்’, ‘ஒளிவிளக்கு’, ‘என் அண்ணன்’ உட்பட எம்.ஜி.ஆருடன் பல படங்களில் சோ நடித்துள்ளார். நாடகம் நடத்துவதற்காக ஒருமுறை வெளியூருக்கு சோ சென்றார். வழியில் ஒரு மூதாட்டி சோவைப் பார்த்து, ‘‘தம்பி, உன்னை எம்.ஜி.ஆர். படங்களில் பார்த் திருக்கிறேன். எம்.ஜி.ஆர். கிட்ட நான் விசாரிச்சேன் என்று சொல்லு’’ என்று கூறிச் சென்றுவிட்டார். அவர் தனது பெயர் என்ன? முகவரி என்ன? என்று எதையும் சொல்லவில்லை. எம்.ஜி.ஆருக்கு இருந்த ஈர்ப்பு சக்தியைப் பார்த்து வியந்துபோனார் சோ.
எம்.ஜி.ஆரை வைத்து படம் எடுத்த சில தயாரிப்பாளர்கள் அவரது ‘கால்ஷீட்’ தாமதமாக கிடைக்கிறது என்றும் தொல்லைப்படுவதாகவும் சோவிடம் குறைபட்டுள்ளனர். ஆனால், ‘‘அப்படி என்னிடம் குறைபட்டவர்களே பின்னர் அடுத்த படத்தை எம்.ஜி.ஆரை வைத்தே தயாரித்தனர்’ என்று கூறும் சோ, அதற்கு சொல்லும் காரணம், ‘‘ எம்.ஜி.ஆரை வைத்து படம் எடுப்பது கஷ்டமானது. ஆனால், வேறு எந்த நடிகரையும் வைத்து படம் எடுப்பதை விட எம்.ஜி.ஆரை வைத்து படம் எடுப்பது லாபகரமானது.’’
‘விளம்பரத்துக்காகத்தான் எம்.ஜி.ஆர். பிறருக்கு உதவி செய்கிறார்’ என்ற விமர்சனங்களை சோ கடுமையாக மறுத்திருக்கிறார். ‘‘விளம்பர நோக்கம் இல்லாமல் எம்.ஜி.ஆர். பிறருக்கு உதவு வதை பார்த்திருக்கிறேன். திரைப்படத் துறையில் அவருக்கு எதிராக
இயங்கியவர்களுக்கு கூட அவர் உதவியிருக் கிறார்’’ என்று கூறும் சோ, ஒருமுறை கேட்ட கேள்வி பொருள் பொதிந்தது. சோவின் கேள்வி இது...‘‘அப்படியே விளம்பரத்துக்கு என்று வைத்துக் கொண்டாலும் எத்தனை பேருக்கு விளம்பரத்துக்காகவாவது பிறருக்கு உதவும் மனம் இருக்கிறது?’’
எம்.ஜி.ஆரின் கருணை உள்ளத்துக்கு உதாரணமாக சோ ஒரு சம்பவத்தை குறிப்பிடுவார். சட்டாம்பிள்ளை
வெங்கட்ராமன் என்பவர் பழம்பெரும் நடிகர். பல படங்களில் நடித்துள்ளார். அவரது தாயார் மறைந்தபோது கையில் பணம் இல்லாத நிலையில், எம்.ஜி.ஆரின் வீட்டுக்குச் சென்றுள்ளார். அவரை அடையாளம் கண்டு விசாரித்த எம்.ஜி.ஆரிடம் நிலைமையை கூறினார். வெளியே புறப்பட்டுக் கொண்டிருந்த எம்.ஜி.ஆர்., அந்த அவசரத்திலும் வீட்டில் உள்ளவர்களை அழைத்து, ‘‘வெங்கட்ராமனுக்கு ஒரு வேனையும், தேவைப்படும் பணத்தையும் கொடுத்திடுங்க’’ என்று சொல்லிவிட்டு புறப்பட்டார்.
பின்னர், சட்டாம்பிள்ளை வெங்கட் ராமன் சோவை சந்தித்தபோது, ‘‘வீட்டிலே உலையை வெச்சுட்டு இன்னிக்கு சோறு பொங்கும் என்ற நம்பிக்கையோட ஒருவரின் வீட்டுக்கு போகலாம் என்றால் அது எம்.ஜி.ஆரின் வீடுதான்’’ என்று கூறியிருக்கிறார்.
இந்த சம்பவத்தைக் குறிப்பிட்டு, ‘‘எத்தனை பேருக்கு இதுபோன்ற சான்றிதழ் கிடைக்கும்? எனக்குத் தெரிந்து பலருக்கு எம்.ஜி.ஆர். உதவி செய்திருக்கிறார். அதெல்லாம் வெளியே தெரிய வந்ததில்லை’’ என்று சோ மனம் திறந்து பாராட்டியுள்ளார்.
‘அடிமைப் பெண்’ படத்துக்காக ஜெய்ப்பூரில் சோ நடித்துக் கொண்டிருந்த போது, அவருக்கு கடுமையான வயிற்று வலி. தனது டாக்டரை விட்டு சோவுக்கு சிகிச்சை அளிக்கச் செய்து ‘‘உடல் நிலை சரியாகும் வரையில் நீங்கள் நடிக்க வேண்டாம்’’என்று எம்.ஜி.ஆர். பரிவுடன் கூறி அவரை கவனித்துக் கொண்டார்.
சோவின் நெருங்கிய நண்பர் நீலு. நாடகங்களிலும் பல படங்களிலும் நடித்துள்ளார். கொல்கத்தாவில் வேலை பார்த்து வந்த அவர், ஒருமுறை சென்னை வந்தபோது சோவை
சந்தித்தார். ஒரு ஆண்டு கழித்து அன்றுதான் அவர் சென்னை வந்திருந்தார். நீலு சென்றபோது, எம்.ஜி.ஆருடன் சோ படப்பிடிப்பில் இருந்தார். எம்.ஜி.ஆரிடம் நீலுவை அறிமுகம் செய்த சோ, ‘‘இவர் என்னுடைய நண்பர்’’ என்று கூறினார்.
‘‘இவரை எனக்கு தெரியுமே. உங்க நாடகத்தில் பார்த்திருக்கறேன்’’ என்று எம்.ஜி.ஆர் கூறியதும் சோவுக்கும் நீலுவுக்கும் குழப்பம்.
இரண்டு நாட்கள் முன்புதான் எம்.ஜி.ஆர். தலைமையில் சோவின் நாடகம் நடந்தது. ‘அதில் எப்படி நீலுவை எம்.ஜி.ஆர். பார்த்திருக்க முடியும்? இன்றுதானே அவர் சென்னை வந்தார்’ என்பதுதான் அவர்கள் குழப்பத்துக்கு காரணம். தங்கள் குழப்பத்தை எம்.ஜி.ஆரிடமே சோ தெரிவித்தார்.
‘‘இரண்டு நாட்கள் முன்பு நடந்த நாடகத்தில் இவரைப் பார்த்தேன் என்று சொன்னேனா? போன வருஷம் நான் பார்த்த உங்கள் நாடகத்தில் வக்கீல் வேஷம் போட்டவர்தானே இவர்?’’ என்று எம்.ஜி.ஆர். கேட்டதும், சோவும் நீலுவும் மயங்கி விழாத குறை. அவ்வளவு
அபாரமான நினைவாற்றல் எம்.ஜி.ஆருக்கு.
‘அடிமைப் பெண்’ படத்தில் ஒரு சுவை யான காட்சி. படத்தில் எம்.ஜி.ஆரின் பெயர் வேங்கையன். வில்லன்
மனோகரின் அரச பரிவாரங்களுடன் ஒருவராக வரும் சோவை எம்.ஜி.ஆரின் வீரர்கள் பிடித்துவைத்து அவரை துன்புறுத்த முயற்சிப்பார்கள். அவர்களிடம் இருந்து தப்பிப்பதற்காக சோ, ‘‘வேங்கையனிடம் சொல்லிவிடுவேன்’’ என்று மிரட்டுவார். உடனே, சோவை அவர்கள் விட்டுவிட்டு மன்னிப்பு கேட்பார்கள். அப்போது, சோ சொல்லும் வசனத்தை எம்.ஜி.ஆர். ரசிகர்கள் மறக்கவே மாட்டார்கள். சோ கூறுவார்...
‘‘தலைவன் பெயரை சொன்னவுடன் என்ன ஒரு பயம், பக்தி. தலைவன் என்றால் இவரல்லவோ தலைவன்’’.
த*க*வ*ல் உத*வி: இதயக்கனி எஸ். விஜயன் அவ*ர்க*ள்............ Thanks.........
-
நாளை 21-01-2020 முதல் கலையுலக ஏக வசூல் சக்கரவர்த்தி புரட்சி நடிகர் " பாரத்" உயரிய விருது பெற்று தந்த படிப்பினை காவியம் "ரிக்க்ஷாக்காரன்" திருச்சி - பேலஸ் dts., திரையரங்கில் தினசரி 4 காட்சிகள் காட்சி தரவிருக்கிறார்.........
-
நாகர்கோயில்- தங்கம் 21.01.2020 முதல் தினசரி.4. காட்சிகளாக வெற்றிப்பவனி... தென்காசி புளியங்குடி ;கண்ணா திரையரங்கில் வெற்றிமுரசு கொட்டுகின்றது கலைக்கடலின் "எங்கவீட்டுப்பிள்ளை " தினசரி.2.காட்சிகளாக நன்றி மதுரை எஸ். குமார் எம்ஜிஆர். மன்றம் திருச்சி பேலஸ் ரிக்சாக்காரன் தகவல் நண்பர் திருச்சி. கிருஷ்ணன் அவர்கள் நாகர்கோயில் தகவல் திரு நெல்லை.. ராஜா.அவர்கள் நன்றி
......... Thanks.........
-
நம் நாடு -சென்னை அகஸ்தியாவில் வசூல் சாதனை*
------------------------------------------------------------------------------------
கடந்த 15/01/20 முதல் சென்னை அகஸ்தியாவில் வெளியாகி வெற்றிநடை போடும்*புரட்சி தலைவர் எம்.ஜி.ஆரின் "நம் நாடு " முதல் 5 நாட்களில் ரூ.1,25,000/- வசூலித்து அபார சாதனை புரிந்துள்ளது .என்று பட வினியோகஸ்தர்* தகவல் அளித்துள்ளார் .
இந்த வாரம் மூலக்கடை ஐயப்பாவில் மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். இரு வேடங்களில் அசத்திய "குடியிருந்த கோயில் " தினசரி 3 காட்சிகள் நடைபெறுகிறது .
சென்னை பாலாஜியில் புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். இரு வேடங்களில் கலக்கிய "நாளை நமதே " தினசரி 4 காட்சிகள் நடைபெறுகிறது .
17/01/20 மாலை 6 மணி முதல் சென்னை நங்கநல்லூர் ஸ்ரீ சாய்ராம் ஹாலில் யு.கே.முரளியின் எங்கள் தங்கம் எம்.ஜி.ஆர். ஹிட்ஸ் பாடல்கள் இன்னிசை நிகழ்ச்சி நடைபெற்றது .
18/01/20 மாலை 6 மணி முதல் சென்னை நங்கநல்லூர் ஸ்ரீ சாய்ராம் ஹாலில்* தியாகுவின் லோகேஷ் ரிதம்ஸ் இன்னிசை நிகழ்ச்சியில் காலத்தை வென்ற எம்.ஜி.ஆர். பாடல்கள் இசைக்கப்பட்டன .
19/01/20 அன்று சென்னை ராஜா அண்ணாமலை மன்றத்தில் மாலை 6 மணிக்கு மேல் அன்பு ஸ்ருதி அவர்களின் இன்னிசை நிகழ்ச்சியில் மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். பாடல்கள் இசை விருந்து நடைபெற்றது .
19/01/20* மாலை 6 மணிக்கு மேல் சென்னை தி.நகர், பி.டி.தியாகராயர் அரங்கில்*புதிய நீதி கட்சி தலைவர் திரு.ஏ .சி.சண்முகம் தலைமையில் ,பிரபல பின்னணி பாடகி எல்.ஆர்.ஈஸ்வரி பங்கேற்கும், திரு.சௌந்தர்ராமனின் பல்லவி ராகமழையில் புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். பாடல்கள் இசைக்கப்பட்டன .
மேற்கண்ட நிகழ்ச்சிகள், மக்கள் திலகம் எம்.ஜி.ஆர்.அவர்களின் போட்டி படங்களுக்கு இடையில் சென்னை அகஸ்தியாவில் வசூல் மன்னன் எம்.ஜி.ஆர். அவர்களின் "நம் நாடு " வசூல் சாதனை புரிந்துள்ளது என்பது வியக்கத்தக்கது .
மக்கள் திலகம் எம்.ஜி.ஆருக்கு போட்டி வேறு எந்த நடிகரின் படமுமல்ல.அவரது படங்களே /நிகழ்ச்சிகளே போட்டி என்பது குறிப்பிடத்தக்கது
அடுத்த வாரம் முதல் விருகம்பாக்கம் தேவி கருமாரி , காஞ்சி அருணா, மற்றும் செங்குன்றம் அரங்குகளில் வெளியீடு .
கடந்த சில மாதங்களுக்கு முன்பு சென்னை அகஸ்தியாவில் வெளியான மக்கள் தலைவர் எம்.ஜி.ஆரின் "நாடோடி மன்னன்* ஒரு வார வசூலாக*" ரூ.1,90,000/- வசூலித்து சாதனை புரிந்தது என்பது குறிப்பிடத்தக்கது*
-
விரைவில்
திருப்பூர்
அனுப்பர்பாளையம்
மணீஸ்
திரையரங்கில்
எங்க வீட்டுப்பிள்ளை
-
பெங்களூர்- அருணா DTS தியேட்டரில். 21- 01- 2020
முதல்
''உலகம் சுற்றும் வாலிபன் " காவியத்தின்
டிரைலர்
திரையிடபடுகிறது............ Thanks.........
-
-
உலக மஹா, மெகா சாதனையின் உச்சம் என்றால்... ஒரு நடிகர் மறைந்து 32 வருடங்கள் கடந்தும்... திரையுலகை விட்டு விலகி 42 ஆண்டுகள் தாண்டியும்... அவர் நடித்த பழைய, பற்பல முறைகள் மறு வெளியீடுகள் கண்டு சிறப்பை பெற்றும்... இன்றைய 2020 தை பொங்கல் திருநாளில்...15 இடங்கள் அளவில் புத்தம் புதிய படங்களுக்கு போட்டியாக திரையிடப்பட்டுள்ள அதிசயத்தை, பேரற்புத நிகழ்வினை கலையுலக ஏக வசூல் சக்கரவர்த்தி புரட்சி நடிகர் எம்.ஜி.ஆர்., தவிர இந்த உலகத்தில் வேறு யார் நடத்தி காட்ட இயலும்?!...இதுதான் சாதனை...சரித்திரம்... சகாப்தம்...
-
தலைவரின் நெருங்கிய நண்பர் நடிகர் அசோகன் அவர்களின் சொந்த ஊர் திருச்சி....இயற்பெயர் அந்தோணி. கல்லூரி நாடங்கங்களில் பிரபலம் ஆனார் .
மணப்பந்தல் படத்தில் பெயர் மாற்றம் அசோகன் என்று ஆனார்...இயக்குனர் ஏ.சி.திருலோகசந்தர் அவர்களை நம் தலைவருக்கு அறிமுகம் செய்து பின் அன்பேவா படம் உருவானது.
தலைவர் வீட்டு சாப்பாட்டை மிகவும் விரும்புபவர் அசோகன் அவர்கள்... மற்ற படங்களில் நடித்து கொண்டு இருந்தாலும் உணவு அருந்த தலைவர் செட் தேடி வருவது வழக்கம்.
தலைவருடன் அதிக படங்களில் நடித்த பெருமை இவருக்கு மட்டுமே சொந்தம்.
புகழ் சேர கோவையில் ஒரு பெரிய குடும்பம் சேர்ந்த சரஸ்வதி என்பவருடன் காதல் மலர பெண் வீட்டார் எதிர்ப்பில் பின் தங்க.
ஒரு நாள் திரைப்படங்களில் வருவது போல சரஸ்வதி அவர்கள் அசோகன் அவர்களை தேடி ஓடி வர...தலைவருக்கு விஷயம் அசோகன் அவர்கள் சொல்ல.
சரஸ்வதி மனதில் உள்ளதை உள்வாங்கி சரி.. இனி என் பொறுப்பு என்று சொல்லி....
செல்வந்தர் சரஸ்வதி குடும்பம் திருமண நிகழ்வுகளை தடுப்பது அறிந்து கோடம்பாக்கம் பாத்திமா சர்ச்சில் வாத்தியார், இயக்குனர் ஏ.சி. திருலோகச்சந்தர், மற்றும் ஏ. வி.எம்.சகோதர்கள் முன்னிலையில் இவர்கள் திருமணம் இனிதே நடந்து முடிந்தது.
ஒருகட்டத்தில் பெண்ணை பெற்றவர்கள் இதற்குமேல் ஒன்றும் இல்லை என்று இருக்க.
அந்த அசோகன் தம்பதிக்கு இரு பிள்ளைகள்... பெரியபிள்ளை அமல் ராஜ்... நன்கு இருந்து 2002 இல் மறைய.
அடுத்த மகன் வின்சென்ட் அசோகன் திரைத்துறையில் வளர்ந்து வருவது தெரியுமே.
நேற்று இன்று நாளை படம் அசோகன் அவர்கள் தயாரிப்பில் வர விருக்க படத்தின் பினான்சியர் டிமாண்டி அவர்கள் அரசியல் மாற்றம் கண்டு தீயசக்தி பேச்சை கேட்டு கொண்டு படத்தை தாமதம் ஆக்க.
நிலைமை அறிந்த வாத்தியார் அசோகனை அழைத்து ஒரே இரவில் படத்தில் நடித்தவர்களுக்கு கொடுக்க வேண்டிய பாக்கி தொகை முழுவதும் தன் கையால் கொடுக்க.
அன்று இரவே சார்ந்தவர்கள் தேடி அசோகன் பாக்கி பணத்தை செட்டில் பண்ணி படம் முடிந்து வெளியே வந்து வசூலை வாரி குவிக்க.
தலைவருக்கு கொடுக்க வேண்டிய பாக்கி சம்பளத்தை பெருந்தன்மையுடன் அவர் மறுக்க.
இதுவே உண்மை வரலாறு...இனி எவனும் அந்த நல்ல இருவர் நட்பை விமர்ச்சித்து பேசினால்...
வாழ்க எம்ஜியார் புகழ்.தொடரும்...நன்றி உங்களில் ஒருவன் நெல்லை மணி.......... Thanks.........
-
கோவை சண்முகாவில் வரும் வெள்ளி முதல் (24//01/20) மக்கள் தலைவர் எம்.ஜி.ஆரின் "தர்மம் தலை காக்கும் " தினசரி 4 காட்சிகளில் திரைக்கு வருகிறது .
தகவல் உதவி : நெல்லை நண்பர் திரு.வி.ராஜா .
-
கல்கண்டு வார இதழ் -29/01/20
------------------------------------------------
எங்கே போவது ?
எம்.ஜி.ஆருக்கு ஒரு தீராத ஏக்கம் இருந்தது .* தனது இல்லத்திற்கு எத்தனையோ தலைவர்களை அழைத்து விருந்து கொடுத்து மகிழ்ந்த அவருக்கு ஒரே ஒரு முறை காமராஜரை தனது இல்லத்திற்கு அழைத்து விருந்து கொடுக்க வேண்டும் என்பது தான் அந்த விருப்பம் .* ஆனால் எப்போது அழைத்தாலும் காமராஜர் சிரித்தபடி,*சொல்கிறேன், என்கிற ஒற்றை வார்த்தையால் தவிர்த்து விடுவார் .* ஒருமுறை சிவாஜி, எம்.ஜி.ஆர்.பங்கு பெற்ற ஒரு விழாவிற்கு காமராஜரை வழியனுப்பும் பொது மீண்டும் அழைப்பு விடுத்தார்* எம்.ஜி.ஆர். அப்போதும் அதே புன்னகை மாறாமல்*ராமச்சந்திரா நான் உன் இல்லம் வரக்கூடாது* என்றில்லை .* உன் வீட்டு விருந்து பற்றி நிறைய கேள்வி பட்டுள்ளேன் .அறுசுவை உணவும், மீன், இறைச்சியும் ,அசைவ உணவுகளும் நிறைந்திருக்கும் என்று கூறுவார்கள்.* நான் மக்கள் ஊழியக்காரன் .* ரெண்டு இட்லி, தயிர் சோறுதான் எனக்கு சரிப்படும் .* உன் வீட்டில் அறுசுவை உணவு சாப்பிட்டு விட்டா, திரும்பவும் அந்த ருசியை நாக்கு தேடும் .* அதுக்கு நான் எங்கே போவது ? என்று கூற ஆடிப்போனார் எம்.ஜி.ஆர்.* தன்னையும் அறியாமல் காமராஜரை கைகூப்பி வணங்கினார் எம்.ஜி.ஆர்.*
-
குமுதம் வார இதழ் -29/01/20
------------------------------------------
ஆர்.சி.சம்பத்* --மாயக்கலைஞன் எம்.ஜி.ஆர். நூலில் இருந்து*
தயாரிப்பாளர் ஜி.என்.வேலுமணி தொடங்கிய படம் "பரமபிதா",எம்.ஜி.ஆர். ஏசுநாதராக நடித்தார் .* "டிசூசா " என்பவர் சென்னை லயோலா கல்லூரி முதல்வர். கண்டிப்பு மிக்கவர் .* பிறகு இவர் போப்பாண்டவருக்கு கீழுள்ள*பன்னிரண்டு கார்டினல்\களில் ஒருவராக நியமிக்கப்பட்டார் .* அவர் ரோம் நகருக்கு புறப்பட போகும் நேரத்தில் இருதய டாக்டர் பி.எம்.ரெக்ஸ் , அவரை எம்.ஜி.ஆரிடம் அழைத்து வந்தார்.*
பேச்சு வாக்கில், பரமபிதா படத்தை பற்றி பேசும்போது , அதன் கதையை பற்றி டிசூசா கேட்டார் .* ஒருவன் பாதிரியார் ஆனபிறகு அவனது காதலி அவனை தேடி வருகிறாள்.* அவனை மனம் சஞ்சல படவைக்கிறாள் என்று போகும் கதை .
அதை கேட்ட டிசூசா* பாதிரியார் மனதில் சலனங்கள் கூடாது .* நாயகன் காதலில் ஈடுபட்டிருக்கிறான் , அவன் அப்படியான மன நிலைக்கு ஆளாக கூடாது .* அப்படிப்பட்டவன் பாதிரியாராக வரக்கூடாது , வர முடியாது, என்றார் .* அதைக் கேட்ட எம்.ஜி.ஆர். இரண்டாயிரம் அடி எடுத்திருந்த "பரமபிதா"படத்தைக் கைவிட்டார் .
-
டாக்டர் எம்.ஜி.ராமச்சந்திரன் நினைவு நாணயம்...
நான் முன்பதிவு செய்துவிட்டேன். நீங்கள்???
http://igmmumbai.spmcil.com/Interfac....aspx?sell=159
"எங்கள் தங்கத்தின்" நாணயம் தங்கத்திலும் வெளிவரவேண்டும். அதற்கு நமது கழக அரசு ஆவன செய்யவேண்டும்.
மேலும் டாக்டர் எம்.ஜி.ராமச்சந்திரன் நினைவு நாணயம் வருவதற்கு [ பொது மக்களுக்கு கிடைப்பதற்கு பெரும் முயற்சி எடுத்த உலக எம். ஜி.ஆர் பேரவை ஒருங்கிணைப்பாளர், சென்னை, அனைத்து தலைவர் அமைப்புகளுக்கும் நன்றி.
மேலும் இந்த நாணயங்களை பொது வெளியில் அதாவது மக்கள் மத்தியில் புழக்கத்தில் வருவதற்கும் திரு. முருகு பத்மநாபன், திரு. துரை கருணா .....போன்றோர் முயற்சி எடுத்து வருகிறார்கள்.............. Thanks mr.SB.,
-
மக்கள் திலகம் எம்.ஜி.ராமச்சந்திரன் நினைவு நாணயங்கள் வருகை... ரூபாய் 100, மற்றும் 5 வருகிறது......... நாமனைவரும் முந்துவோம் பதிவு செய்ய...
-
டாக்டர் எம்.ஜி. “புரட்சி தலைவர்” (புரட்சிகரத் தலைவர்) என்று அன்போடு அழைக்கப்பட்ட ராமச்சந்திரன், இலங்கையின் கண்டியில் எம்.கோபாலகிருஷ்ண மேனன் மற்றும் சத்தியபாமா ஆகியோருக்கு 17.01.1917 அன்று பிறந்தார். அவர் வி.என். ஜானகி. 1940 ஆம் ஆண்டில் திரைப்படங்களில் அறிமுகமான பிறகு, தமிழ் திரையுலகில் 35 ஆண்டுகளுக்கும் மேலாக அவர் மிகவும் வெற்றிகரமாக பணியாற்றினார். அவர் பெராரிக்னர் அண்ணாவுடன் 1952 ஆம் ஆண்டில் அறிமுகப்படுத்தப்பட்டார், அதன்பிறகு அவருடன் நெருக்கமாக தொடர்பு கொண்டிருந்தார். 1967 ஆம் ஆண்டில் பரங்கிமலை தொகுதியில் இருந்து சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார். டாக்டர் எம்.ஜி. ராமச்சந்திரன் 1972 ஆம் ஆண்டில் அண்ணா திராவிட முனேத்ரா காசகம் (ஏ.டி.எம்.கே) கட்சியைத் தொடங்கி 1977 ஆம் ஆண்டில் தமிழக முதல்வராக ஆனார். தேர்தலில் தோல்வியடையாத மூன்று முறை தொடர்ந்து முதலமைச்சராக இருந்தார். 24.12.1987 அன்று. டாக்டர் எம்.ஜி. ராமச்சந்திரன் தமிழக மாநிலத்தின் மிகச் சிறந்த, கவர்ந்திழுக்கும் மற்றும் பிரபலமான முதலமைச்சர்களில் ஒருவராக இருந்தார். நாடு முழுவதும் செயல்படுத்தப்பட்ட மாதிரி திட்டங்களாக மாறியுள்ள பல புதுமையான நலத்திட்டங்களை அறிமுகப்படுத்தியதற்காக அவர் தேசிய மற்றும் சர்வதேச அளவில் நினைவுகூரப்படுகிறார். தமிழ்நாட்டின் அனைத்து பள்ளிகளிலும் செயல்படுத்தப்பட்ட “புரட்சி தலைவர் டாக்டர் எம்.ஜி.ஆர் சத்தான உணவு திட்டம்” மாண்புமிகு உச்சநீதிமன்றத்தால் பாராட்டப்பட்டது, மேலும் இது நாடு முழுவதும் பிரதியெடுக்க உத்தரவிடப்பட்டது. டாக்டர் எம்.ஜி. கடந்த மூன்று தசாப்தங்களாக தமிழக அரசு கண்ட விரைவான சமூக-பொருளாதார வளர்ச்சிக்கு ராமச்சந்திரன் அடித்தளம் அமைத்தார். அவர் தமிழ் பல்கலைக்கழகம், அன்னை தெரசா மகளிர் பல்கலைக்கழகம் மற்றும் பாரதிதாசன் பல்கலைக்கழகம் உட்பட பல பல்கலைக்கழகங்களை நிறுவினார். ஐந்தாவது உலக தமிழ் மாநாட்டை நடத்தினார். இந்திய அரசு டாக்டர் எம்.ஜி. ராமச்சந்திரன் மிக உயர்ந்த சிவில் க honor ரவத்துடன், பாரத் ரத்னா தனது இணையற்ற பொது சேவைக்காக. டாக்டர் எம்.ஜி. ராமச்சந்திரன் ஒரு உத்வேகம் தரும் நபராகத் தொடர்கிறார், அவர் தனது பெருந்தன்மை, தாராளம், கட்டளைத் தலைமை மற்றும் மாநிலங்களின் நியாயமான உரிமைகளுக்காகப் போராடுவதற்கான உறுதியுடன் எப்போதும் நினைவுகூரப்படுகிறார். அவர் இறந்தபோது, செவித்திறன் மற்றும் பார்வை குறைபாடுள்ள குழந்தைகளின் நலனுக்காக அவர் தனது செல்வங்கள் அனைத்தையும் கொடுத்தார். டாக்டர் எம்.ஜி. ராமச்சந்திரனின் வாழ்க்கைக் கதை அர்ப்பணிப்பான சேவையின் மூலம் அதிகமான பொது நலனுக்காக பாடுபட மில்லியன் கணக்கானவர்களைத் தூண்டுகிறது.......... Thanks.........
-
மதுரை - ராம் DTS.,புரட்சித்தலைவரின் பிரமாண்ட இணையில்லா தயாரித்து அளித்த புரட்சி படைப்பு "அடிமைப்பெண் " 24.01.2020 வெள்ளிமுதல் தினசரி 3காட்சிகளாக வெற்றிப்பவனி வருகின்றார் வேங்கைமலையான் காத்த அடிமைப்பெண் நன்றி ...மதுரை எஸ். குமார் எம்ஜிஆர். மன்றம்......... Thanks.........
-
எம்ஜிஆர் காலத்தில் வந்த படங்கள், பாடல்கள் இன்றைக்கு உள்ளதா? இப்போது படமா எடுக்கிறார்கள், பாடல்களா எழுதுகிறார்கள் என முதல்வர் எடப்பாடி பழனிசாமி எம்ஜிஆர் படத்துடன் தற்கால படங்களை ஒப்பிட்டு கேள்வி எழுப்பினார்.
சேலத்தில் நடைபெற்ற எம்ஜிஆர் பிறந்த நாள் விழாவில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேசியதாவது:
இன்றையதினம் நம்மையெல்லாம் ஆளாக்கிய எம்.ஜி.ஆர் பிறந்த நாள் விழா. இன்றைக்கு ஒரு சாதாரண மனிதன்கூட உயர்ந்த நிலைக்கு உருவாக்குவதற்கு காரணமாக, அடித்தளமாக விளங்கிய ஒப்பற்றத் தலைவர் எம்.ஜி.ஆர் பிறந்த நாள் விழாவிளை நாம் கொண்டாடிக் கொண்டிருக்கின்றோம்.
கடந்த காலத்திலே மிட்டா, மிராசுதார், தொழிலதிபர்கள் தான் பதவிக்கு வர முடியும் என்ற நிலையை மாற்றி, அண்ணா கண்ட கனவை நனவாக்க வேண்டுமென்பதற்காக எம்.ஜி.ஆர் சாதாரண தொண்டன்கூட அமைச்சராக முடியும், நாடாளுமன்ற உறுப்பினராக முடியும், சட்டமன்ற உறுப்பினராக முடியும் என்ற ஒரு நிலையை உருவாக்கிச் சென்றார்.
அதனாலேதான் நான் உட்பட, மேடையிலே வீற்றிருக்கின்ற நாடாளுமன்ற உறுப்பினர், சட்டமன்ற உறுப்பினர், ஒன்றியச் சேர்மன், மாவட்ட ஊராட்சி உறுப்பினர் அத்தனைபேரும் எம்.ஜி.ஆர் என்ற மாமனிதர் இருந்த காரணத்தினாலே நமக்கு இந்த பதவி கிடைத்திருக்கின்றது. சாதாரண மனிதனையும் உயர்ந்த நிலைக்கு உருவாக்கி அந்த உயர்ந்த உள்ளம் கொண்ட ஒரே மனிதர் எம்.ஜி.ஆர்.
வாழ்ந்தவர் கோடி மறைந்தவர் கோடி மக்களின் மனதில் நிற்பவர் யார், மாபெரும் வீரரும், மானம் காப்போர் சரித்திரம் தனிலே நிற்கின்றார் என்று தான் பாடிய பாடலுக்கு தானே இலக்கணமானவர் எம்.ஜி.ஆர் . அற்புதமான பாடலைப் பாடி அவரே அதற்கு இலக்கணமாகத் திகழ்ந்தார். 1917-ஆம் ஆண்டு பிறந்து, இளம் வயதிலேயே கல்வியை தொடர முடியாமல் நாடகக் கம்பெனியில் தன்னை இணைத்துக் கொண்டு சிறு வயதில் கடுமையான பசியில் வாட்டப்பட்டு, கடினமான வாழ்க்கை வாழ்ந்த தலைவர் நம்முடைய எம்.ஜி.ஆர் .
ஆகவே தான் அவர் ஒவ்வொரு படத்திலும் தனக்கென ஒரு முத்திரையைப் பதித்தார். இன்றைக்கு எத்தனையோ திரைப்படங்கள் வருகின்றன, எந்தத் திரைப்படமாவது உயிரோட்டமுள்ள திரைப்படமாக இருக்கிறதா? இல்லை. ஆனால், அப்பொழுது அண்ணா எம்.ஜி.ஆரைப் பார்த்து, """"நீ முகம் காட்டினால் 30 இலட்சம் வாக்குகள் நிச்சயம்"" என்று சொன்னார்கள். அந்தளவிற்கு மக்கள் சக்தி படைத்த தலைவராக எம்.ஜி.ஆர் விளங்கினார்.
எம்.ஜி.ஆர் அவர்கள் 1972-ஆம் ஆண்டு திமுகவில் அவரை விலக்கியபொழுது அப்பொழுது அதிமுக என்ற கட்சியை ஆரம்பித்தார். அதற்குப் பிறகு அதனை அஇஅதிமுகவாக உருவாக்கினார். ஆகவே, அன்று முதல் இன்று வரை அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் வெற்றி நடை போட்டுக் கொண்டிருக்கிறது. அதுவும், அண்ணா பெயரிலே இந்த இயக்கத்திற்கு பெயர் சூட்டினார்.
அண்ணா உருவத்தை நம்முடைய கழகக் கொடியிலே பொறித்தவர் எம்.ஜி.ஆர் இன்றைக்கு அதிமுக என்று சொன்னால் அண்ணா நினைவில் வருகின்ற அளவிற்கு அண்ணா மிகப்பெரிய மரியாதை, புகழ் சேர்த்த பெருமை எம்.ஜி.ஆர் மட்டும் தான் உண்டு.
அதேபோல, எம்.ஜி.ஆர் அவர்கள் திரைப்படங்கள் ஊருக்கு உழைப்பவன், நீதிக்குத் தலைவணங்கு, தாய்ச்சொல்லைத் தட்டாதே, அன்னமிட்ட கை, உழைக்கும் கரங்கள், தர்மம் தலைகாக்கும் என அருமையான தலைப்புள்ள படங்கள். இன்றைக்கு வரக்கூடிய படங்கள் ஏதாவது நமக்கு ஞாபகம் இருக்கிறதா? என்னென்னவோ தலைப்புள்ள படங்கள் வருகிறது. ஆனால், அன்றைய காலகட்டத்தில் எம்.ஜி.ஆர் படத்தில் நடிக்கின்றபொழுது நாட்டு மக்களுக்கு தேசியப் பற்றை உருவாக்க வேண்டும், நாட்டை நல்வழிப்படுத்த வேண்டும், இளைஞர்களை நல்வழிப்படுத்த வேண்டும், ஆக்கபூர்வமான கருத்தை திரைப்படத்தின் மூலமாக விளக்குவார்.
பாடல்கள் மூலமாக விளக்குவார். அப்படிப்பட்ட உன்னதமான தலைவர் தான் எம்.ஜி.ஆர் அவர்கள். ""நல்ல பேரை வாங்க வேண்டும் பிள்ளைகளே, நம் நாடு என்னும் தோட்டத்திலே நாளை மலரும் முல்லைகளே"" ""நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி இந்த நாடே இருக்குது தம்பி"" ""சிரித்து வாழ வேண்டும், பிறர் சிரிக்க வாழ்ந்திடாதே, உழைத்து வாழ வேண்டும், பிறர் உழைப்பில் வாழ்ந்திடாதே"" ""நல்ல பேரை வாங்க வேண்டும் பிள்ளைகளே, நம் நாடு என்னும் தோட்டத்திலே நாளை மலரும் முல்லைகளே"" இப்படி பல கருத்துள்ள அற்புதமான பாடல்களை அவர் படங்களிலே பாடியுள்ள பாடல்கள் அவர் இந்த மண்ணிலே இருந்து மறைந்தாலும் அவர் பாடிய பாடல் இன்றைக்கும் உயிரோட்டம் உள்ள பாடல்களாக, அறிவுபூர்வமான பாடல்களாக, தேசப்பற்றுள்ள பாடல்களாக, இளம் சமுதாயத்தை வளர்க்கின்ற பாடல்களாக, அழிவில்லாத பாடல்களாக இருந்து கொண்டிருக்கும் அற்புதங்களை படைத்த தலைவர் எம்.ஜி.ஆர்.
""புத்தன், ஏசு, காந்தி பிறந்தது பூமியில் எதற்காக தோழா ஏழைகள் நமக்காக"" இந்தப் பாடல் மூலமாக. சமுதாய மறுமலர்ச்சிக்காக பாடுபட்ட மகான்களை நினைவு கூறுகிறார். மகான்கள் இந்த நாட்டுக்காக தன்னையே அர்ப்பணித்துக்கொண்ட அந்த மாமனிதர்களுடைய புகழைப் பரப்புவதற்காக, அவர்கள் வழியிலே நடக்க வேண்டும் என்பதற்காக அந்தப் பாடலை தன்னுடைய திரைப்படங்கள் வாயிலாக நாட்டுக்கு வழிகாட்டியவர் எம்.ஜி.ஆர் .
""எந்தக் குழந்தையும் நல்ல குழந்தை தான் மண்ணில் பிறக்கையிலே, பின் நல்லவராவதும் தீயவராவதும் அன்னை வளர்ப்பதிலே"" எப்படிப்பட்ட தத்துவப் பாடல். ஆகவே, நாம் எதிர்காலத்தில் எப்படியிருக்க வேண்டும், பெற்றோர்கள் எப்படி வாழவேண்டும், எப்படி பிள்ளைகளை வளர்க்க வேண்டும் என்பதற்காக அன்றைய காலகட்டத்திலே நமக்கு வழிகாட்டியாகத் திகழ்ந்தவர் எம்.ஜி.ஆர் இன்றைக்கும் தான் தலைவர் இருக்கிறார்கள். படத்தைப் பார்த்தாலே பையன் கெட்டுப் போய் விடுவான், பையனை அந்தப் பெற்றோர்கள் அவர்களை கண்காணிக்க வேண்டிய சூழ்நிலையில் இருக்கின்ற படமாக இப்பொழுது வருகிறது.
அந்தக் காலத்தில் இருக்கும் திரைப்படமும், இன்றைக்கு இருக்கின்ற திரைப்படமும் எப்படி இருக்கின்றது என்று நாம் ஒப்பிட்டுப் பார்க்க வேண்டும். ""நாளை உலகை ஆளவேண்டும் உழைக்கும் கரங்களே"" "" இருப்பதைக் கொண்டு சிறப்புடன் வாழும் இலக்கணம் படித்தவன் தொழிலாளி"" ""உழைக்கும் கைகளே உருவாக்கும் கைகளே உலகை புதுமுறையில் உண்டாக்கும் கைகளே"" என்ற பாடல் மூலம் தொழிலாளியின் பெருமையையும் அவர்கள் மேல் தான் வைத்திருக்கும் நம்பிக்கையையும் வெளிப்படுத்தியிருக்கிறார். அதேபோல ""ஒன்றே குலம் என்று பாடுவோம் ஒருவனே தேவன் என்று போற்றுவோம்"" என்ற பாடல் மூலம் தனது மதச்சார்பின்மையை வலியுறுத்தியிருக்கிறார்.
தன் வாழ்நாள் முழுவதும் தன் மக்களுக்காக வாழ்ந்து மறைந்த ஒப்பற்ற தலைவர் எம்.ஜி.ஆர் பாடிய ஒவ்வொரு பாடலும் தத்துவப் பாடல். இன்றைக்கு அவர் பிறந்தநாள் விழாவிலே இதையெல்லாம் கோடிட்டுக் காட்டுவது பொருத்தமாக இருக்கும் என்ற அடிப்படையில் இதை நான் இங்கு தெரிவிக்கின்றேன். அதேபோல ""நான் ஆணையிட்டால் அது நடந்து விட்டால் இங்கு ஏழைகள் வேதனைப்பட மாட்டார் உயிர் உள்ளவரை ஒரு துன்பமில்லை அவர் கண்ணீர் கடலிலே விழமாட்டார்"" என்றும் ""தெருவெங்கும் பள்ளிகள் கட்டுவோம், கல்வி தெரியாத பேர்களே இல்லாமல் செய்வோம் கருத்தான பல தொழில் பயில்வோம் ஊரில் கஞ்சியில்லை என்ற சொல்லினை போக்குவோம்"" இவ்வளவு அருமையான பாடல்கள் மூலமாக இன்றைக்கு ஒரு வழிகாட்டியாக, தேசப்பற்றுள்ளவராக, இந்த நாட்டின் மீது, தமிழக மக்கள் மீது அன்பு கொண்டவராக, நாடு எப்படி இருக்க வேண்டும், நாட்டு மக்கள் எப்படி வாழ வேண்டும் என்பதற்காக எடுத்துக்காட்டாக வாழ்ந்த ஒரே ஒரு மனிதர் எம்.ஜி.ஆர். "
"அன்பு மலர்களே நம்பி இருங்களே நாளை நமதே இந்த நாளும் நமதே தர்மம் நம்மிடம் இருக்கும் வரையிலே நாளை நமதே இந்த நாளும் நமதே"" இந்தத் தமிழகமும் நமதே. ஆகவே, எம்.ஜி.ஆர் தன் வாழ்நாள் முழுவதும் மக்களுக்காக உழைத்த மாபெரும் ஒப்பற்ற தலைவர் எம்.ஜி.ஆர் பிறந்தநாள் விழாவை எழுச்சியோடு, சிறப்போடு நாம் இன்றைக்கு கொண்டாடிக் கொண்டிருக்கிறோம்”.......... Thanks.........
-
-
திரு. சைதை துரைசாமி அவர்களுடன் சந்திப்பு..
=========================================
அண்ணன் திரு. சைதையார் அவர்களை சென்னையில் கடந்த செப்டெம்பர் , 2019 மாதம் அவர் அலுவலகத்தில் சந்தித்தேன்.
என்னுடன் அருமை நண்பர் திரு. செல்வக்குமார் , பேராசிரியர் அவர்களும் வந்திருந்தார்.
அண்ணன் சைதையார் அவர்களை மக்கள் திலகம் அரசாட்சி நடந்தபோது ஒரே ஒருமுறை சந்தித்தேன்.,
கடந்த 21.10.1987 அன்று அண்ணன் ஜேப்பியாருடன் ஒரே காரில் வந்து அமைச்சர் ஆர் எம் வீரப்பன் அவர்களின் தி நகர் வீட்டில் வந்து இறங்கினேன்.அன்று மாலை ஐந்து மணி இருக்கும். சிறு தூறல். அண்ணன் சைதையார் அப்போது அங்கு நின்றார். அண்ணன் ஜேப்பியார் இறங்கியதும் கைகொடுத்து தனியாக இருவரும் பேசினர். நான் அப்போது அண்ணன் சைதையார் அவர்களிடம் கை கொடுத்து "வணக்கம்" மட்டுமே சொன்னேன். கருப்பு நிறம் , கட்டையான உருவம், தலை நிறைய முடி, அரை கை வெள்ளை சட்டை, அதிமுக கரைபோட்ட வேஷ்டி.,இந்த உருவம்தான் அன்றைய அண்ணன் திரு. சைதையார் அவர்களுடன் முதல் சந்திப்பு..
( அன்று பார்த்த அண்ணன் சைதையார் அவர்களை
32 வருடம் கழித்துதான் சந்திக்கறேன்)
அண்ணன் திரு.சைதையார் அவர்களை 1972 ஆம் ஆண்டு முதலே நன்றாக தெரியும் செய்தி தாள்களின் மூலம். காரணம் மக்கள் திலகம் எம்ஜிஆர் அதிமுக ஆரம்பித்த புதிதில் அவர் எம்ஜிஆர் அவர்களை சந்தித்த புகைப்படங்கள் எல்லாம் அப்போது செய்தியாக வந்தது. அப்போது அண்ணன் அவர்களை "சைதாப்பேட்டை சா. துரைசாமி" என்றே பதிவுகள் படித்துள்ளேன். ஆகவே அந்த கால கட்டம் எனக்கு வயத வெறும் ஒன்பதுதான்.
1972 ஆம் ஆண்டு அக்டோபர் 10 அன்று திமுகவில் இருந்து நீக்கம் செய்த பின் அடுத்த மாதம் நவம்பர் மாதம் அப்போதைய கவர்னர் சுகாதியாவிடம் அப்போது எம்ஜிஆர் அவர்கள் , கருணாநிதிக்கு எதிராக ஊழல் புகார் கொடுக்க பேரணி ஒன்றை ஏற்ப்பாடு செய்தார்.
எம்ஜிஆர் அவர்களின் தலைமையில் அன்று பேரணியில் கலந்துகொண்ட தொண்டர்கள், பொதுமக்கள் தமிழகம் முழுவதும் இருந்து கலந்து கொண்டார்கள். சென்னையே அப்படியே ஸ்தம்பித்தது. காரணம் அன்று கலந்துகொண்டவர்களின் எண்ணிக்கை மட்டும் ஒரே நாள் சுமார் 10 லட்சம் பேர்கள்...
அதே நாளில் மறுநாள் பேப்பரில்தான் எல்லோரையம் குறிப்பிட்டு சைதை பகுதி கழக செயல்வீரர் சா. துரைசாமியும் கலந்து கொண்டார் என்று செய்தி படித்தேன் எனது ஒன்பதாவது வயதில்;...
என் மாமா கிராமத்தில் பெட்டிக்கடை வைத்திருப்பார். அப்போது தினத்தந்தி பத்திரிக்கையில் படிப்பதுண்டு. பின்னாளில்..
ஒருமுறை மக்கள் திலகம் அவர்களை கருணாநிதி அவருக்கு "பைத்தியம்" என்றே விமர்சித்து , "எம்ஜிஆருக்கு எலுமிச்சம் பழம் கொடுத்து தலை தேய்த்து குளித்தால் பைத்தியம் தெளியும்" என கருணாநிதி நய்யாண்டி செய்திருந்தார்.
அண்ணன் திரு.சைதையார் கருணாநிதியை மேடையில் வைத்து அவருக்குதான் பைத்தியம் பிடித்துள்ளது என்ற சரியான அர்த்தத்தில் எலுமிச்சம் மாலையை மேடையில் போட்டு கருணாநிதியை மேடையிலே கலங்கடித்தவர்தான் அன்றைய அண்ணன் சைதை துரைசாமி அவர்கள்.
அன்றைய முதல்வர் கருணாநிதியால் அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர் . எம்ஜிஆரின் புகழுக்கு களங்கம் கற்பித்த கருணாநிதியை நேரடியாக மேடையில் போட்டு வாங்கிய பெருமை பெற்ற ஆண் மகனாக அன்று வலம் வந்தார் அண்ணன் திரு.சைதையார் அவர்கள்.
1983 ல் அமைச்சர் திரு. காளிமுத்து மற்றும் விருதாசலம் குஞ்சிதபாதம், எம்ஜிஆர் மன்ற தலைவர் அண்ணன் வேங்கட வேணு, நகர செயலாளர் திரு.கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் மூலம் அண்ணன் ஜேப்பியாரின் அறிமுகம் எனது கல்லூரி காலத்தில் கிடைத்தது.
அதன் பின் சென்னை அதிகம் வர நேர்ந்தது.
காலம் ஓடியது.... 1984 தேர்தல் களத்தில்
அண்ணன் திரு.சைதையார் அவர்களுக்கு மக்கள் திலகம் சீட் சைதை தொகுதியில் ஒதுக்கினார்.வெற்றியும் அடைந்தார்.
1984 ஆம் ஆண்டு நான் ரொம்ப வறுமையில் படித்துக்கொண்டிருந்தேன். அப்போது "குமுதம்" வார இதழில் அண்ணன் திரு.சைதையார் பற்றிய செய்தி படித்தேன். அதில் மாணவ - மாணவர்களுக்கு தனது அலுவலகத்தில் டைப்பிங் இலவசமாக செய்து தருகிறார் என படித்தேன். ஆனால் சந்தித்தது இல்லை. அந்த கால கட்டங்களில் அதிமுக தலைமை அலுவலகம் ராயப்பேட்டையில் மக்கள் திலகத்துடன் ஜெ.டிசி பிரபாகரன், லியாகத் அலிகான், வளர்மதி ,ஜேப்பியார், சைதை துரைசாமி என்று ஒரு கூட்டமே வரும்..
பலமுறை அப்போது அங்கு 1983 -84 கால கட்டங்களில் அப்போது அண்ணன் சைதையார் அவர்களை மக்கள் திலகம் பக்கத்திலேயே பார்த்துள்ளேன்.
1984 ஆம் ஆண்டு ஜனவரியில் எங்கள் விருத்தாசலம் கலைகல்லூரிக்கு அமைச்சர் திரு. எஸ்டி சோமசுந்தரம் அவர்களை பேச அழைத்து
பேச அழைத்து வந்தேன். அடுத்த சில மாதங்களில் செல்வி ஜெயலலிதா அவர்களை கட்சிக்கு முக்கியத்துவம் தருவதை எதிர்த்து சோமசுந்தரம் எதிர் கொடி பிடித்தார். மக்கள் திலகம் அவர்களுக்கு சோம சுந்தரத்தை கட்சியில் விட்டு நீக்க சென்னை சத்யா ஸ்டுடியோவில் பெரியவர் திரு வள்ளிமுத்து தலைமையில் பொதுக்குழு கூடியது.
அந்த நாள் நான் சென்னை சத்யா ஸ்டுடியோ வாசல்படியில் அன்று அண்ணன் திருப்போரூர் சட்டமன்ற உறுப்பினர் தமிழமணியுடன் பேசிக்கொண்டு நின்று இருந்தேன். அப்போது அண்ணன் சைதை துரைசாமி, ஜேப்பியார், திருப்பூர் மணிமாறன் மற்றும் பலர் ஸ்டுடியோ உள்ளே சென்றனர்.
திரு எஸ் டிஎஸ் அவர்களை நீக்கம் செய்து தீர்மானம் நிறைவேற்றம் செய்தபின் வெளியே நின்ற எஸ் டிஎஸ் ஆதவரவளர்கள் “எஸ் டி எஸ்” வாழ்க என ஒரு கூட்டம் கிளம்பியது. அப்போது...
திடீர் என ஒருகும்பல் அந்த கோஷம் போட்ட்டவர்களை ஒரு கூட்டம் அடித்து துவைத்தது . பலபேர் ரதத காயங்களுடன் ஆளை விட்டால் போதும் என்று ஓடியது .. அதை பார்த்து தூரத்தில் இருந்த நான் கைகொட்டி சிரித்தேன் .நல்ல காலம் நான் பேண்ட் போட்டு இருந்தேன் . இல்லையெனில் எஸ் டி எஸ் ஆதரவாளர் என்று என்னையும் துவைத்து இருப்பார்கள் .
1987 ல் புரட்சித்தலைவர் காலத்தில்– சென்னை சைதாப்பேட்டையில் தேரடி தெருவில் அமைச்சர் திருமிகு. பண்ருட்டி ராமச்சந்திரன் தலைமையில் நடந்த ஒரு கூட்டத்தில் நான் கலந்து கொண்டேன். அங்கு அண்ணன் திரு. சைதையார் அவர்களை அன்று கடைசீயாக மேடையில் பார்த்தேன்.
2016 ல் புரட்சித்தலைவி அம்மா அவர்கள் இறந்ததும் திருமதி. சசிகலா நடராஜன் அவர்களை பார்த்து ஆறுதல் கூற போயஸ் தோட்டம் சென்றார் அண்ணன் சைதையார்
அப்போது மந்திரிகள், நிர்வாகிகள் எல்லாம்.."நீங்கள்தான் இனி பொறுப்பு ஏற்க்கவேண்டும்" என்று கை கூப்பி கெஞ்சினர்.
அப்போது அண்ணன் சைதையார் மட்டும் முறையான விளக்கம் கொடுத்தார். அந்த விளக்கம்தான் என் மனதில் அப்படியே பதிந்து , புதைந்து கிடக்கிறது.
" புரட்சித்தலைவர் அவர்கள் கருணாநிதியின் அராஜக அரசியலை ஒழிக்கத்தான் அதிமுக இயக்கம் கண்டார்கள். அவர்கள் இருக்கும் வரை கருணாநிதி ஆட்சிக்கு வரமுடியவில்லை. அதே மாதிரி அம்மாவும் கடந்த காலத்தில் கருணாநிதியை ஆட்சியில் அமர முடியாமல் முடமாக்கினார். அப்படி இனிமேல் கருணாநிதி ஆட்சி வராமல் நாம் அனைவரும் ஒற்றுமையுடன் ஆட்சி ஆள வேண்டும்" என்று அழகாக எடுத்து சொன்னார்.(இந்த நேரத்தில் கருணாநிதி உயிருடன் இருந்தார். கண்டிப்பாக தானே மடக்க முடியாத ஒரு நபரின் பேட்டியை பார்த்து அவரும் ஆடியிருப்பார்)
(அந்த வீடியோ இன்றும் முகநூலில் அவ்வப்போது வரும்.. பார்த்து பார்த்து அண்ணனின் பேச்சை ரசிப்பேன்)
காரணம் என் மனதில் உள்ளதை அப்படியே சொன்ன உண்மை தொண்டர்தான் அண்ணன் சைதையார் .புரட்சித்தலைவரின் அடிமட்ட தொண்டன் என்பதை அழகாக நிரூபித்து சொன்ன அந்த தருணம் .. அந்த இடத்தில யாரும் அப்படி சொல்லவே இல்லை. இதுதான் அண்ணன் சைதையாரின் "ஹைலைட்" விளக்கம்.
அண்ணன் திரு. சைதையாரிடம் கண்ட ஒரே அதிசயம் என்ன தெரியுமா?ஆனானப்பட்ட கருணாநிதியாலேயே வளைக்க முடியாத இரும்பு மனிதன்தான் அண்ணன் சைதையார்.,
கண்ணதாசன் கருணாநிதியை பற்றி இப்படிதான் அளந்து சொன்னார். காரணம் கூடவே இருந்தவர் அல்லவே?
"கருணாநிதி பேச்சில் ஒருவரை வளைக்க வேண்டும் என்றால் அவரால் வளைக்க முடியும். முன்னாலே உட்கார்ந்திருப்பவர்களை அழ வைக்க வேண்டும் என்றால் அழ வைக்க முடியும். யாரைப் பக்கத்திலே இழுக்க வேண்டும் என்று விரும்புகிறாரோ, அவர்களை சாகசம் பண்ணியாவது வரவழைத்து விடுவார், உள்ளே இழுத்து விடுவார்”
---மேற்கண்டவாறு கண்ணதாசன் சொன்ன அப்படிப்பட்ட கருணாநிதியால் எல்லோரையும் வளைத்தவர் என பெயர் வாங்கியவர். அண்ணன் சைதையாரை மட்டும் இறக்கும் வரை வளைக்கமுடியாமல் கருணாநிதி காலாவதி ஆகிப்போனார். மக்கல்திலகத்தின் உண்மை தொண்டரை அசைக்க கூட முடியவில்லை – அதுவும் சென்னை நகரில் இருந்துகொண்டே..!
அண்ணன் சைதையாரிடம் போனிலும், நேரிலும் பேசியபோது இதைதான் கேட்டு ஆச்சரியம் அடைந்தேன்.
அண்ணனிடம் கடந்த செப்டம்பரில் சந்திந்த நாள் அன்று 1984 மே 10 ஆம் நாள் புரட்சித்தலைவர் என்னிடம் அளித்த அதிமுக உறுப்பினர் அட்டை, அவர் அளித்த கிளை செயலாளர் பதவியின் நோட்டீஸ், கல்லூரி காலத்தில் நான் மாணவர் அணியில் நான் கட்சிக்கு அளித்த ரசீது, 1975 ல் இதயக்கனி படப்பிடிப்பில் அண்ணன் விருத்தாசலம் குஞ்சிதபாதம் புரட்சித்தலவருடன் எடுத்துக்கொண்ட புகைப்படம் மற்றும் , 1984 ல் செல்வி. ஜெயலலிதா கொள்கை பரப்புசெயலாளர் அவர்களுக்கு நான் அனுப்பிய விண்ணப்பத்தின் அஞ்சல் ரசீது ...ஆகிய அனைத்தும் அண்ணன் சைதையாரிடம் காண்பித்தேன்.
இன்றுவரை எல்லாவற்றையும் பத்திரமாக வைத்துள்ளேன்.
கடந்த வருடம் அண்ணன் சைதையார் பேசிய youtube ஒன்று பார்த்தேன். அதில் திமுக தலைவர் ஸ்டாலினுக்கு நேரடி பதில் சொல்லி உள்ளார். அதற்கெல்லாம் மனதில் எந்த அப்பழுக்கும் இல்லாத மக்கள் திலகத்தின் தொண்டனால் மட்டுமே அது சாத்தியம் என்பதை அறிந்தேன். சந்தோசம்.
அந்த பதிவில் தான் நடத்தும் கல்லூரியில் மாணவர்களுக்கு இலவச கல்விதான் அளிப்பதாக கூறி உள்ளார்.
பல கல்லூரிகளில் வசூலிப்பதை போல அதில் பாதி வசூலித்தால் மாதம் தனக்கு 120 கோடி ரூபாய் சம்பாதிப்பேன். அதை எல்லாம் தூர வைத்துதான், பணத்தை சேர்க்காமல் மாணவர்களின் நலனுக்கு இலவசமாக படிப்பு வசதிகள் செய்து தருவதாக அண்ணன் கூறினார்.
இதை பார்த்துத்தான் சென்னை மேயர் தேர்தலில் அண்ணன் சுலபமாக ஜெயித்துள்ளார் என்று நினைத்துக்கொண்டேன். மக்கள் அவர் பக்கம் அப்படியே சாய்ந்து விட்டனர் என்றே கூறலாம். அண்ணனின் அருமையான பதிவுகள் எல்லாம் எனக்கு பிடிக்கும்.
இன்னும் நிறைய எழுதலாம். ஆனால் நேரமில்லை
என் வாழ்நாளில் இனி எந்த கட்சியிலும் சேரமாட்டேன். அரசியல்வாதிகளின் பின்னால் அலையமாட்டேன்.
எனக்கு உதவி என்று கேட்க சென்றால் ஒன்று மக்கள் திலகம் இருந்த ராமாவரம் தோட்டம் வீட்டில் சென்று கேட்பேன். இல்லை என்றால் அண்ணன் சைதையார் அவர்களிடம் கேட்பேன்.
அந்த உதவிகள் அவர்கள் எனக்கு செய்வதாக இருந்தாலும் நானே உழைத்து சாப்பிடும் உதவிதான் கேட்பேன். யாரையும் அண்டி பிழைக்கும் அவல நிலை உதவிக்கு அங்கு செல்லமாட்டேன்.
இந்த கட்டுரை அண்ணண் சைதையாரின் மனித நேயத்துக்கும் , நேர்மைக்கும் ஒரு எடுத்துக்காட்டாக அவரின் வாழ்ககை இன்று நகர்கிறது. மக்கள் திலகத்தின் உண்மை தொண்டனாக இன்று தமிழகத்தில் அவரை தவிர நேர்மையான மனிதர்களில் ஒருவராக இருப்பதால்
இன்று முதல் அவருக்கு "மக்கள் திலகத்தின் மறுபக்கம் " என்று பட்டம் அளித்து அவரை என்றும் வாழ்த்தும் ...
மக்கள் திலகத்தின் உண்மை அடிமட்ட தொண்டன்
அப்துல் சலாம் , குவைத் .
-
வெள்ளி முதல் (24/01/2020) மதுரை ராம் அரங்கில் புரட்சி நடிகர் எம்.ஜி.ஆரின் மகத்தான வெற்றி படைப்பான டிஜிட்டல் "அடிமை பெண் " தினசரி 3 காட்சிகள்* பவனி வருகிறது .* மதுரையில் மீண்டும் வேங்கையன் வெற்றி விஜயம் .
தகவல் உதவி : மதுரை நண்பர் திரு.எஸ். குமார்.
-
வெள்ளி முதல் (24/01/20) தூத்துக்குடி சத்யாவில்* வசூல் சக்கரவர்த்தி எம்.ஜி.ஆரின் பிரம்மாண்ட வெற்றி படைப்பான டிஜிட்டல் "அடிமைப்பெண் " தினசரி 3காட்சிகள் நடைபெறுகிறது .
தகவல் உதவி : நெல்லை நண்பர் திரு.வி.ராஜா .
-
வெள்ளி முதல் (24/01/2020) நாகர்கோயில் வசந்தம் பேலஸ்சில்* புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். இரு வேடங்களில் அசத்திய "நினைத்ததை முடிப்பவன் " தினசரி 3 காட்சிகள் நடைபெறுகிறது .
தகவல் உதவி : நெல்லை நண்பர் திரு.வி. ராஜா .
-
-
மதுரை- ராம் DTS., தூத்துக்குடி -சத்யா dts.,திரையரங்கம் பொன்மனச்செம்மல் எம்.ஜி ஆர்., அவர்களின் "அடிமைப்பெண்" நாகர்கோயில் - வசந்தம்பேலஸ் DTS தேனி-வசந்தம் dtsதிரையரங்கில் மக்கள்திலகம் எம்.ஜி.ஆர்., அவர்களின் "நினைத்ததை முடிப்பவன் " வெற்றிப்பவனி வருகின்றார் நன்றி மதுரை எஸ் குமார் எம்ஜிஆர் மன்றம்... Thanks......
-
கடந்த ஞாயிறு (19/01/20) மாலை 6.30மணியளவில் சென்னை ராஜா அண்ணாமலை மன்றத்தில் நடைபெற்ற அன்பு ஸ்ருதி அவர்களின் இன்னிசை மழையில் மக்கள் திலகம் எம்.ஜி.ஆரின் கீழ்கண்ட பாடல்கள் ஒலித்தன
1.ஒரு தாய் மக்கள் நாமென்போம்* - ஆனந்த ஜோதி*
2.ஓடி ஓடி உழைக்கணும்* *- நல்ல நேரம்*
3.ஆனந்தம் இன்று ஆரம்பம்* - இதய வீணை*
4.புதியதோர் உலகம் செய்வோம் - பல்லாண்டு வாழ்க*
5.கண்கள் இரண்டும் விடிவிளக்காக = கண்ணன் என் காதலன்*
6.நாலு பக்கம் சுவரு - தேடி வந்த மாப்பிள்ளை*
7.சத்தியம் நீயே தரும தாயே - மாட்டுக்கார வேலன்*
8.பொன்னந்தி மாலை பொழுது* -- இதய வீணை*
9.மயங்கி விட்டேன் உன்னை கண்டு - அன்னமிட்டகை*
10.கண்ணழகு சிங்காரிக்கு - மீனவ நண்பன்*
11.நல்லது கண்ணே கனவு கனிந்தது - ராமன் தேடிய சீதை*
12.ஒரே முறைதான் உன்னோடு - தனிப்பிறவி*
13.மயக்கும் மாலை பொழுதே - குலேபகாவலி*
14.என்னை காதலித்தால் மட்டும் போதுமா -ஆசைமுகம்*
15.கண்ணன் எந்தன் காதலன் - ஒருதாய் மக்கள்*
16.பட்டத்து ராஜாவும் பட்டாள சிப்பாயும் -மீனவ நண்பன்*
17.பாடினாள் ஒரு பாட்டு - ஒருதாய் மக்கள்*
18.நீயா இல்லை நானா* - ஆசைமுகம்*
19.நீ தொட்டால் எங்கும் பொன்னாகுமே -நல்ல நேரம்*
20.தானே தானே தன்னான தானா -நினைத்ததை முடிப்பவன்*
21.பச்சைக்கிளி முத்துச்சரம் - உலகம் சுற்றும் வாலிபன்*
22.ஒரு தாய் வயிற்றில்* - உரிமைக்குரல்*
23.கொடுத்ததெல்லாம் கொடுத்தான் - படகோட்டி*
-
தமிழக அரசியல் வார இதழ்*
----------------------------------------------
: முகமது சலீம், ராசிபுரம்*
கேள்வி : பொன்னியின் செல்வன் கதையை அனிமேஷனில் எம்.ஜி.ஆரை கதாநாயகனாக வைத்து எடுக்கிறார்களாமே ?
பதில் : எம்.ஜி.ஆர். மறைந்து இத்தனை ஆண்டுகள் ஆகியும் அவர் ரசிகர்களின் நெஞ்சங்களில் வாழ்கிறார் என்பது மறுக்கமுடியாத உண்மை .* வந்தியத்தேவனின் நாயகியாக மறைந்த முதல்வர் ஜெ. உருவில் கதாபாத்திரம் என்பது கூடுதல் தகவல் .
-
இந்த வாரம்(24/01/20) வெளியான மக்கள் தலைவர் எம்.ஜி.ஆர். திரைப்பட பட்டியல்*
------------------------------------------------------------------------------------------------------------------------
*சென்னை - பாலாஜி - விவசாயி -தினசரி 2 காட்சிகள் (மேட்னி /இரவு )
மதுரை* -ராம்* - அடிமைப்பெண்* - தினசரி 3 காட்சிகள்*
கோவை - சண்முகா* - தர்மம் தலை காக்கும் -தினசரி* 4 காட்சிகள்*
திருச்சி -பேலஸ்* -ரிக் ஷாக் காரன் -(21/01/20) முதல் தினசரி 4 காட்சிகள்*
திருச்சி -ராமகிருஷ்ணா - உழைக்கும் கரங்கள் - (25/01/20)முதல்** தினசரி 4 காட்சிகள்*
தூத்துக்குடி - சத்யா* - அடிமைப்பெண் - தினசரி 3 காட்சிகள்*
தேனீ* -வசந்தம் -நினைத்ததை முடிப்பவன் - தினசரி 4 காட்சிகள்*
-
சென்னை அகஸ்தியாவில் கடந்த வாரம் வெளியான மக்கள் தலைவர் எம்.ஜி.ஆரின் " நம் நாடு* -தினசரி 3 காட்சிகளில் - 9 நாட்களில் ரூ.1,67,000/-*வசூல் செய்து சாதனை புரிந்துள்ளது .என்று விநியோகஸ்தர் தகவல் அளித்துள்ளார்
கடந்த வருடம் அக்டொபரில்* வெளியான புரட்சி தலைவர் எம்.ஜி.ஆரின் "நாடோடி மன்னன் "* தினசரி 2 காட்சிகளில்* ஒரு வார வசூலாக ரூ.1,90,000/-* ஈட்டி சாதனை*படைத்து* பழைய படங்களின் மறுவெளியீட்டில் முதலிடம் பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது . வேறு எந்த பழைய படமும் மறுவெளியீட்டில் இந்த வசூலை இதுவரை*பெற்றதில்லை .
-
தினகரன் -வெள்ளிமலர் -24/01/20
கன்னடத்து பைங்கிளி -பி.சரோஜாதேவி* * a to z.-.எஸ்.மந்திரமூர்த்தி, நாகர்கோயில்
----------------------------------------------------------------------------------------------------------
எம்.ஜி.ஆருடன் அதிக படங்களில் நடித்த ஹீரோயின் 25*+ படங்கள். எம்.ஜி.ஆருடன் இவர் நடித்த* அனைத்து படங்களிலுமே ஜோடியாக மட்டுமே நடித்தவர் .* 1966ல் மட்டுமே 6 படங்களில் ஜோடி சேர்ந்தார் .* எம்.ஜி.ஆர். நடித்து வெளிவராத பல படங்களிலும் இவர்தான் ஹீரோயின் .**
சத்யா மூவிஸ் கம்பெனியின் முதல் கதாநாயகி. கே. பாலச்சந்தரின் வசனத்தை சினிமாவில் உச்சரித்த முதல் ஹீரோயின் ,படம் : தெய்வத்தாய் .
தேவர் பிலிம்ஸ் பேனரில் அதிக படங்களில் நடித்த நாயகி .
தமிழில் தான் நடித்த முதல்படத்திலேயே , பாடல் காட்சியில் , கவிஞரால் கொஞ்சி பேசும் கிளியே* (படம் -நாடோடி மன்னன் ) என்று வர்ணிக்கப்பட்டு , கன்னடத்து பைங்கிளி என்று ரசிகர்களால் கொண்டாடப்பட்டார் .
இந்திய அரசால் பத்மஸ்ரீ , பத்மவிபூஷன் விருதுகள்* கொடுத்து கௌரவிக்கப்பட்டவர் .கலைச்செல்வம் , எம்.ஜி.ஆர். விருது , தினகரன் விருது, சினிமா எக்ஸ்பிரஸ் விருது , பிலிம்பேர் விருது என பல்வேறு அமைப்புகளின் சாதனை விருதுகளை வென்றவர் .
எம்.ஜி.ஆரை சின்னவர் என்றும் , எம்.ஜி.ஆரின் அண்ணண் எம்.ஜி.சக்கரபாணியை பெரியவர் என்றும் மரியாதையாக அழைப்பார் .* பின்னாளில் ஒட்டுமொத்த சினிமா உலகமும் சரோஜாதேவியையே இந்த விஷயத்தில் பின்பற்றியது .*
ஒரே சமயத்தில், எம்.ஜி.ஆர்.,சிவாஜி, ஜெமினி, ,என்று மும்மூர்திகளுடன்,*தெலுங்கில் என்.டி.ஆர்., ஏ.என்.ஆர்., கன்னடத்தில் ராஜ்குமார், உதயகுமார் ,இந்தியில் திலீப்குமார் ராஜேந்திர பிரசாத் என்று அந்தந்த மொழிகளின் டாப் ஸ்டார்களுடன் இணைந்து நடித்தார் .
தென்னிந்திய நடிகைகளில் இவ்வளவு பிரபலமான ஒரு நடிகை மலையாள படத்தில் நடித்ததில்லை என்பது ஆச்சர்யம் .
சரோஜாதேவிக்கு பாடல்கள் எழுதும்போது பறவைகளை வைத்து எழுதுவது கவிஞர்களின் வழக்கம் . பறவைகளே, பறவைகளே -தர்மம் தலை காக்கும்*குருவிக்கூட்டம் போல -குடும்பத்தலைவன் , சிட்டு குருவி -புதிய பறவை ,லவ் பேர்ட்ஸ்- அன்பே வா ,* பண்பாடும் பறவையே - அரச கட்டளை*போன்றவை உதாரணங்கள் .
வலது கண்ணில் இவருக்கு மச்சம் உண்டு. இன்றுவரை வலது கை சுண்டுவிரலை மடக்க இயலாது .
கீச்சு குரலாக இருந்தாலும், இவரது டயலாக் டெலிவரிக்கு தமிழகமே ஒரு காலத்தில் கிறங்கிக்* கிடந்தது .
எம்.ஜி.ஆரின் சிறந்த ஜோடி சரோஜாதேவிதான் என்று ஆணித்தரமாக அடித்து சொன்னவர் எம்.ஜி.ஆரின் நிஜ ஜோடியான வி.என்.ஜானகி அம்மாள் அவர்கள் .
அரசியலில் வெற்றி பெற்ற பிறகு , தன் சிறந்த சினிமா ஜோடிக்கு , மாநிலங்களவை எம்.பி. பதவியை தர முன்வந்தார் எம்.ஜி.ஆர்.*உங்கள் அன்பும் , ஆசியும் மட்டுமே எனக்கு* எப்போதும் போதும்* சின்னவரே*என்று அடக்கமாக மறுத்தவர் சரோஜாதேவி .
கர்நாடக திரைப்பட துறை கழக வளர்ச்சி தலைவர் பொறுப்பை ஏற்று சிறப்பாக வழி நடத்தினார் .
திருமணத்திற்கு பிறகு, இவர் நடித்த , பணமா பாசமா வெள்ளிவிழா கொண்டாடியது .
எம்.ஜி.ஆர்., கலைஞர், என்.டி.ஆர்., ஜெயலலிதா ஆகிய நான்கு முன்னாள் முதல்வர்களோடு இணைந்து* தொழில் ரீதியாக சினிமாவில் பணியாற்றியவர்*என்கிற பெருமை உண்டு .
நடிகர் ராஜ்குமார், சந்தன கடத்தல் வீரப்பனால் கடத்தப்பட்ட போது ,கர்நாடகா சார்பில் தூதராக தமிழகத்திற்கு வந்தவர் .
இன்றளவும் தமிழக சினிமா விழாக்கள், மற்ற விழாக்களில், கௌரவ அழைப்பாளர்கள் பட்டியலில் இவர் பெயர் நிச்சயம் இடம் பெறுகிறது .தமிழகத்தில்* நடந்த விழாக்களில் அதிகம் கலந்து கொண்ட பெங்களூர்காரர்*இவராகத்தான் இருக்கும் .
ஒரு காலத்தில், தென்னிந்திய ரசிகர்களின் கனவு கன்னியாக இருந்தவர் சிறுவயதில் கன்னியாஸ்திரி ஆகும் விருப்பம் இருந்ததாம். எம்.ஜி.ஆருடன்*ஜோடியாக பரமபிதா* படத்தில்**தனது கனவு வேடத்தை* ஏற்று, சில காட்சிகளில் நடித்தார்.ஆனால் படம் வெளிவரவேயில்லை .
சினிமாவில் உச்சத்தில் இருக்கும்போது , அதிகம் முறை விமான பயணம் மேற்கொண்ட இந்திய நடிகை இவரே . கோவையில் திரை அரங்கம் கட்டினார்*என்பது யாரும் அறியாத செய்தி .
எம்.ஜி.ஆருடன் நடித்த போது அதிக சம்பளம் வாங்கிய நடிகையாக திகழ்ந்தார் .
எம்.ஜி.ஆருடனான முதல் சந்திப்பு குறித்து அப்போது பேட்டி தந்தவர் , காலைக்கதிரவன் உதித்தது போல எம்.ஜி.ஆர் வந்தார் என்று வர்ணித்தார் .எம்.ஜி.ஆர். மறைவின்போது , உலகமே இருண்டுவிட்டது* போலுள்ளது என்று*தெரிவித்தார் .
-