http://i1098.photobucket.com/albums/...di00000008.jpg
http://i1098.photobucket.com/albums/...di00000009.jpg
http://i1098.photobucket.com/albums/...di00000010.jpg
http://i1098.photobucket.com/albums/...di00000011.jpg
'வணங்காமுடி' தமிழ்த்திரைக்காவியம் தெலுங்கில் 'தல வஞ்சின வீருடு' என்ற பெயரில் மொழிமாற்றம் செய்யப்பட்டு வெற்றியடைந்தது. அந்தப் படத்தின் அபூர்வ ஸ்டில் இதோ.
http://i1087.photobucket.com/albums/...574109ff50.jpg
Very rare Still. Thanks Mr Vasu Sir also for
the superb stills of Vangamudi.
'வணங்காமுடி' நடிகர் திலகத்தின் படங்களில் இன்னொரு மைல் கல் ஆகும். அதுவரை வந்த நடிகர் திலகத்தின் படங்களில் நடிகர் திலகத்திற்கு சொல்லும்படியான சிறப்பான சண்டைக்காட்சிகள் அமையவில்லை. அந்த குறை ரசிகர்கள் மனதில் ஒரு ஓரமாய் புகைந்த படியே இருந்தது. இந்தக் குறையை 'வணங்காமுடி' தீர்த்து வைத்தான். அட்டகாசமான ஆஜானுபாகுவான உடல்வாகுவுடன் படத்தின் இறுதியில் கிளைமாக்ஸ் காட்சியில் வில்லன் நம்பியாருடன் வாளெடுத்து நடிகர் திலகம் மணவறையில் மோதும் போது ரசிகர்கள் ஆனந்தக் கூச்சலிட்டனர். நடிகர் திலகம் அவருடைய படங்களில் வாள் பயிற்சியில் போதுமான திறமையை காட்டவில்லை என்று எக்காளமிட்டவர்களுக்கு வாய்ப்பூட்டைப் போட்டுப் பூட்டினார் நடிகர் திலகம். விறுவிறுப்பான அதம் பறக்கும் அந்த சண்டைக்காட்சி ரசிகர்களிடையே மிகப் பேராதரவைப் பெற்றது. வாள்வீச்சில் சிறந்த நிபுணத்துவம் பெற்ற திரு. நம்பியார் அவர்களுடன் ஒரு இடம் கூட டூப் போடாமல் நடிகர் திலகம் வாள் சண்டை செய்வதை பார்க்கையில் மிகப் பிரமிப்பாக இருக்கிறது. நடிகர் திலகத்தின் பின்னாட்களில் வெளிவந்த பல படங்களில் வாள் சண்டைகள் சிறப்பாக அமைய பிள்ளையார் சுழி போட்டது 'வணங்காமுடி' என்றால் அது மிகையல்ல.
திரு ஒய்.ஜி.மகேந்திரன் அவர்கள் கூட அடிக்கடி பேட்டிகளில் இந்தக் குறிப்பிட்ட சண்டைக்காட்சியில் நடிகர் திலகம் அசத்தியிருப்பதை மறக்காமல் குறிப்பிடுவார் என்பது இன்னோர் செய்தி.
http://i1087.photobucket.com/albums/..._000579138.jpg
டியர் ராகவேந்திரன் சார்
வணங்காமுடி தகவல்கள் நெஞ்சையள்ளுகின்றன. வணங்காமுடி சிறப்புச் செய்திகள் ஓர் அரிய தகவல் களஞ்சியம். வணங்காமுடியின் பாடல் சுட்டிகளுக்கு தங்களுக்கு பிரத்தியோக நன்றி! அதிலும் எனக்கு மிக மிகப் பிடித்த "மோகனப்புன்னகை செய்திடும் நிலவே!" அருமை.
Dear Vasudevan Sir,
Informations & stills about Vanangaamudi are good. Thanks
அற்புதம்! அற்புதம்!
"வணங்கா முடி" காட்சி பதிவென்ன, அறிய விஷயங்கள் என்ன, சிறப்பு செய்திகள் என்ன,
சொல்ல வார்த்தைகள் இல்லை!
Great Raghavendra Sir!
ஆனந்த்
மிக்க நன்றி சந்திரசேகரன் சார்.
டியர் வாசு சார்,
வணங்காமுடி தெலுங்கு பதிப்பின் நிழற்படம் மிக மிக அபூர்வமானது. அதனை இங்கே பகிர்ந்து கொண்ட தங்களுக்கு உளமார்ந்த பாராட்டுக்களும் நன்றிகளும். இது போன்ற அபூர்வமான செய்திகளும் நிழற்படங்களும் இங்கே தருவதற்கு தாங்கள் மேற்கொள்ளும் முயற்சிகளுக்கு நாங்கள் அனைவருமே என்றைக்கும் நன்றிக்கடன் பட்டவர்களாவோம்.
தங்கள் உடல்நிலை தற்போது எப்படி உள்ளது. ஓய்வெடுத்துக் கொள்ளுங்கள். வேளா வேளைக்கு மருந்துகளைத் தவறாமல் சாப்பிட்டு உடல் நலனைப் பேணுங்கள்.
அன்புடன்
ராகவேந்திரன்
பம்மலாரின் பங்களிப்பின்றியா ...
இதோ பாகம் 9ல் ஆவணத் திலகம் அளித்துள்ள வணங்காமுடி விளம்பர நிழற்படங்களின் அணிவகுப்பு
Quote:
முதல் வெளியீட்டு விளம்பரம் : சுதேசமித்ரன் : 1.3.1957
http://i1110.photobucket.com/albums/...GEDC5679-1.jpg
முதல் வெளியீட்டு விளம்பரம் : முரசொலி : 5.4.1957
http://i1110.photobucket.com/albums/...GEDC5680-1.jpg
முதல் வெளியீட்டு விளம்பரம்
http://i1110.photobucket.com/albums/...GEDC5681-1.jpg
'இன்று முதல்' விளம்பரம் : The Hindu : 12.4.1957
[இந்த விளம்பரம் அன்று ஹிந்து நாளிதழில் முழுப்பக்க விளம்பரமாக வெளியாயிற்று]
http://i1110.photobucket.com/albums/...GEDC5678-1.jpg
முதல் வெளியீட்டு விளம்பரம் : சுதேசமித்ரன் : 10.5.1957
http://i1110.photobucket.com/albums/...GEDC5682-1.jpg
100வது நாள் விளம்பரம் : தினமணி : 20.7.1957
http://i1110.photobucket.com/albums/...GEDC5683-1.jpg
குறிப்பு:
1. "வணங்காமுடி" 100 நாட்கள் ஓடிய அரங்குகள்: சென்னை-கிரௌன் மற்றும் திருச்சி-பிரபாத்.
2. சிங்காரச் சென்னையில், 'சித்ரா'வில் 63 நாட்களும், 'கிரௌன்' அரங்கில் 100 நாட்களும். 'காமதேனு'வில் 63 நாட்களும், 'சயானி'யில் 70 நாட்களும் ஓடி மகாஹிட்.
3. மதுரை 'தங்கம்' திரையரங்கில் 78 நாட்களும், சேலம் மற்றும் கோவையில் 70 நாட்களும் மற்றும் கணிசமான ஊர்களின் அரங்குகளில் 63 நாட்களும் ஓடி பம்பர்ஹிட்.
4. தமிழ்த் திரையுலக வரலாற்றில், 1957-ம் ஆண்டின் இரண்டாவது அதிக வசூல் ஈட்டிய காவியம், "வணங்காமுடி". முதலாவது திரைப்படம் "மாயாபஜார்". இது "வணங்காமுடி" வெளியான 12.4.1957க்கு முன்தினம் அதாவது 11.4.1957 அன்று வெளியானது.
5. ஒரு திரைப்பட நடிகருக்கு இந்தியாவிலேயே முதன்முறையாக 80 அடி உயர கட்-அவுட் வைக்கப்பட்டது இக்காவியத்திற்குத்தான். வைக்கப்பட்ட இடம் : சென்னை 'சித்ரா' திரையரங்க நுழைவாயில். கட்-அவுட் கலாசாரத்துக்கு வித்திட்டவரும் கலையுலக 'வணங்காமுடி'தான்.