Welcome Mr Ragulram after a long gap. Do continue to enthrall us
with your writeup on NT's unknown movies.
Regards
Printable View
Welcome Mr Ragulram after a long gap. Do continue to enthrall us
with your writeup on NT's unknown movies.
Regards
எனக்கு மிக பிடித்த ,என்றுமே என்னை அதிசயிக்க வைக்கும் நடிகர்திலகத்தின் படங்களில் ஒன்று அன்னையின் ஆணை. நடிகர்திலகத்தின் தீவிர ரசிகரும் ,மறைந்த எழுத்தாளரும் ஆன சுஜாதா ,ஒரு திருமணத்தில் நடிகர்திலகத்தை பார்த்த போது தனக்கு பிடித்த படமாக இதை குறிப்பிட்டதை நினைவு கூர்ந்துள்ளார். ஒரு unique &surprise package .நடிகர்திலகம் தன் நடிப்பின் பாணியை சற்றே மேற்கு நோக்கி மாற்ற ஆரம்பித்த படம்.
கச்சிதமான திரைக்கதை ,கூர்மையான இயக்கம் (C .H .நாராயண மூர்த்தி),முரசொலி மாறனின் அளவான, sophistication மிகுந்த (அன்றைய trend லி ருந்து விலகாத)வசனங்கள் என்று அருமையான கூட்டு முயற்சி.
எனக்கு தெரிந்து ஒரு சண்டை காட்சி கூட வைக்காமல் குரூரமான வில்லனை மேலும் குரூரமாக பழி வாங்குதல்,தியாகம் என்ற கூட்டுக்குள் அடையாமல் பழி வாங்கவே மகனை பாடு பட்டு வளர்க்கும் அன்னை, மனசாட்சியை அழுத்தி அன்னையின் ஆணையை சிரமேற்கொண்டு சிறிது கொடூரம் காட்டும் நாயகன் என்று தமிழ் பட cliche க்களை உடைத்தது. இது அந்த பதிபக்தி காலங்களில் பெரிய சாதனை.உள்ளத்தை தொடும் காட்சிகள் உண்டு.ஆனால் அனாவசிய sentiment கிடையாது.
சாம்ராட் அசோகன் நாடகம் எல்லோரும் அறிந்தது. ஆனால் அது ஒன்று மட்டுமே படத்தில் இயக்குனரின் compromise .மற்ற படி எடுத்து கொண்ட subject இல் rocket வேக laser பயணம்.comedy உறுத்தல் கிடையாது. ஒரு Holly wood படத்துக்கு நிகராக தயாரானது.தமிழ் பட ரசிகர்களின் ரசனை அடி மட்டத்தில் இருந்த காலத்தில் ஒரு அந்த நாள்,ஒரு அன்னையின் ஆணை, ஒரு புதிய பறவை, ஒரு தில்லானா மோகனாம்பாள் கொடுக்கும் துணிவு நடிகர்திலகத்தை தவிர யாருக்கும் வராது. படித்த தமிழர்களில் இவ்வளவு கணிப்பொறி மூடர்கள் நிறைந்திருக்கும் இக்காலத்தில்,படிக்காத தமிழ் நாட்டில் 1958 இல் நடிகர்திலகத்தின் guts பற்றி என்ன சொல்ல?
ஆரம்ப கால சிவாஜி-சாவித்திரி ஜோடி (வணங்காமுடி,அன்னையின் ஆணை,காத்தவராயன்) எனக்கு மிக பிடிக்கும்.(1961 க்கு பிறகுதான் தங்கையாகி விட்டாரே!!!)கனவின் மாயா லோகத்திலே எனக்கு மிக பிடித்த duet .மேதை நடனத்தில் ஒரு cue தவறி விட்டு ,அதை re -take வாங்காமல் நடனத்தின் பகுதி போலவே மாற்றி சமாளிப்பார்.பத்து மாதம் சுமந்திருந்து பாடல் படமாக்க பட்ட விதம் ,நடிகர்திலகத்தின் ஆழமான சோகம்!!!அப்பப்பா!!!
இதில் Y .G .M முதல் அனைவராலும் பேச பட்ட அற்புத காட்சியொன்று.(ஒரு ஆங்கில பட inspiration ).தன தந்தையை கணேஷ் தான் (படத்திலும்) ஏதோ செய்து விட்டார் என சந்தேகிக்கும் பிரேமா கோப பட்டு கீறி பனியனை கிழித்து விட, நிதானமாய் wash basin சென்று ரத்த காயங்களை towel ஆல் துடைத்து ,திரும்பி வந்து அந்த towel ஆலேயே சாவித்திரியை அடித்து தன் ஆத்திரத்தை நடிகர்திலகம் வெளிக்காட்டும் விதம்.
பார்த்து முப்பது வருடம் ஆயிற்று. ஆனாலும் பசுமையாக உள்ளத்தில் என்றென்றும்.
அன்னையின் ஆணை பார்க்காதவர்கள் சிவாஜி ரசிகர்கள் என்றே சொல்லி கொள்ள கூடாது. முக்கியமாக சினிமா வித்தகர்களால் சிலாகிக்க பட்ட பகுதி-9 இல் 8 ஆவது நிமிடம் முதல் இறுதி வரை ,பகுதி-10 இன் முதலிரண்டு நிமிடங்கள். இதற்கே 10 ஆஸ்கார் வழங்கலாம்.
பகுதி-9
https://www.youtube.com/watch?v=genQWqEnXsI
பகுதி-10
https://www.youtube.com/watch?v=0AHw2rmB8N4
அன்னையின் ஆணை -சிவாஜி கோடீஸ்வரன், மணமகன் தேவை படங்களில் கோடி காட்டி இருந்தாலும் ,தன்னுடைய நடிப்பின் பாணியை முற்றிலும் வேறு திசையில் மேற்கு நோக்கி திருப்பிய ஆரம்ப படம் அன்னையின் ஆணை.
அதே போல சிவாஜி-சாவித்திரி இணை ஆரம்ப படங்களான (இறுதி 50 களின்) அமர தீபம்,வணங்காமுடி,அன்னையின் ஆணை ,காத்தவராயன் படங்களில் அவ்வளவு அழகாக வந்திருக்கும். என்ன ஒரு கெமிஸ்ட்ரி இந்த திலகங்களிடையே. அவ்வளவு அழகு ஜோடி.
பாச மலர் வந்து புரட்டி போட்டு விட்டது.
இந்த பாடல் கதாநாயகனின் கனவு. fantasy கலந்த செட்,உடைகள் எனினும் மிக மிக அழகுணர்ச்சியுடன் வடிவமைக்க பட்டிருக்கும். ஆண் -பெண் உடையமைப்பில் ஒத்திசைவு அபாரம். திராவிட மன்மதன் இளமையுடன் ஆணழகின் இலக்கணமாக ,துறு துறு வென்று மனதை அள்ளி விடுவார்.
நடன ஒத்திசைவு (rhythm ),அமைப்பு (choreography ),நளினம் (Grace ),ஸ்டைல் (style )வெளியீடு (execution ) எல்லாவற்றிலும் அப்படி ஒரு முழுமை. நடிகர்திலகம் முற்றிலும் புது பாணி கையாண்ட ஆரம்ப படம்.
கனியே உன்னாசை போலே, மலர்ந்தாடும் இன்ப சோலை மனம் மகிழும் பொன்னான வேளை ,அழகாய் நின்றாடும் மானே ,ஓஹோஹோ அமுதே எந்தன் வாழ்வுதனிலே வரிகளில் தலைவரை கண் கொட்டாமல் கவனியுங்கள்.இந்த இடத்தில் ஒரு ஸ்டெப் எடுப்பது போல நிறுத்தி பிறகு வருவதை பாருங்கள். ஸ்டைல்
ஆனாலும் சரி ,cue மிஸ் பண்ணி சமாளித்தாலும் (படசுருள்
வீணாகாமல்)இரண்டுமே ஒரு சாதனை நாயகனை பிரித்து காட்டும் அதிசயம்.
https://www.youtube.com/watch?v=Mtslsb4wJkY
வாசுவின் ஸ்பெஷல் ஆன காத்தவராயனில் சிவாஜி-சாவித்திரி அழகு இணையின் நிறைவேறுமோ எண்ணம்.ஜி.ராமநாதன் இசையில் டி.எம்.எஸ்-ஜிக்கி இணையில் .
கிளி ,நிலவொளியில் நடிகர்திலகமாகும் அந்த எனதாசை வனிதாமணி
கணத்தை தவற விடாமல், அந்த சைடு போஸில் ஜொலிப்பை ,கண் கொட்டாமல் பாருங்கள். இந்த ஸ்டில் மிகவும் பிரபலம்.சுவை கண்டால் மீறி இங்கே ஓடுவார் வரிகளிலும் அவ்வளவு அழகு. பாருங்க,பாருங்க,பார்த்து கிட்டே இருங்க.
https://www.youtube.com/watch?v=uAPRrWJDHMs
எனதருமை பாடகர் பீ.பீ.ஸ்ரீநிவாஸ் ,நடிகர்திலகத்திற்கு பாடிய ஒரே டூயட்.குறிஞ்சி மலர் போல ,நினைவில் தங்கும். நான் சொல்லும் ரகசியம் படத்தில்.வீரபாண்டிய கட்டபொம்மனுக்கு அடுத்து வந்ததாலோ என்னவோ,ஜி.ராமநாதனின் இன்பம் பொங்கும் சாயலில் வந்த பாடல் கண்டேனே உன்னை கண்ணாலே.
இந்த படத்தில் ஹீரோ ரிக்ஷாகாரன் கனவு காணுவதாய் வருவதால் fantacy & realism சரிபாதியாய் கலந்த உடைகள்,அரங்க அமைப்பு.
பீ.பீ.ஸ்ரீநிவாஸ் தன்னுடைய வழக்கமான பிட்ச் இல் இருந்து சிவாஜிக்காக ஒரு படி மேலேற ,சிவாஜி ஏ.எம்.ராஜா,எஸ்.பீ.பீ.,ஜேசுதாஸ் இவர்களுக்கு ,இவர்கள் குரலுக்காக மாற்றி அட்ஜஸ்ட் செய்து ,body language ,வாயசைப்பு,முகபாவம் எல்லாவற்றிலும் தத்ரூபமாய் குரலின் பிரதிபலிப்பை கொண்டு வருவார். அஞ்சலி இந்த காட்சியில் அழகு ,சிவாஜியுடன் மிக இசைவாக இருக்கும்.(சிவாஜி ,நடிகைகளுக்கும் அவர்கள் இயல்பு படி விட்டு,தான் வித்யாசபடுத்தி இணைவார்,இசைவார்)
அந்த பாக்கெட் இல் கை விட்டு ,அடக்கி வாசிக்கும் வாயசைப்பு.ஹா ஹா என்று தொப்பி கழட்டும் ஸ்டைல்,நிலவென்று நீயே உனதல்லி நானே என்ற வரிகளில் ஆ ஆ ஆ என்று ஆமோதிக்கும் ஸ்டைல்,எனதாசை மானே என்று துள்ளி அருகில் விழும் துரு துரு ஸ்டைல் ,என் பிரியமான டூயட்.
பீ.பீ.எஸ் இதை பற்றி பத்து நிமிடம் சிலாகித்தார்.
https://www.youtube.com/watch?v=WEHpektZFc0
கனவின் மாயா லோகத்திலே....நடிகர் திலகம் அவ்வளவு அழகு ! அழகு என்றால் ஆண்மை கலந்த அழகு ! Manly smartness !
அவருடைய original hairstyle தமிழகம் இதுவரையில் வேறு ஒருவரிடம் கண்டதில்லை என்பதே எனது கருத்து..!
கரு கரு என்ற சுத்தமான தேங்காய் எண்ணிக்கொண்டு வாரப்பட்ட சுருண்ட அடர்த்தியான கேசம்....! கூர்மையான பிரகாசம் அதைவிட கூர்மையாக பாய்ச்சும் கண்கள்...! மொத்த உடலையும் சிறிது தேர் போல குலுக்கி நடக்கும் style நடை !
இவர் அன்றோ ஆண்மகன் !
Thanks gopal sir for reminding about this song !!
Today, 01:21 PM #2793
mr_karthik
தமிழ்த்திரையுலகின் பொற்காலம் (1960 - 1969)
தமிழ்த்திரைப்படங்கள் மகத்தான் சாதனைகள் புரிந்த இந்த காலகட்டத்தில் நடிகர்திலகத்தின் சாதனை பொக்கிஷங்கள்.
-------------------------------------------------------------
வெள்ளிவிழா காவியங்கள்
1) பாவ மன்னிப்பு
2) பாசமலர்
3) திருவிளையாடல்
20 வாரங்களைக் கடந்த படங்கள்
1) படிக்காத மேதை
2) பாலும் பழமும்
3) சரஸ்வதி சபதம்
4) தில்லானா மோகனாம்பாள்
5) சிவந்த மண்
100 நாட்களுக்கு மேல் ஓடியவை...
மருத நாட்டு வீரன்
பார்த்தால் பசிதீரும்
ஆலயமணி
இருவர் உள்ளம்
அன்னை இல்லம்
கர்ணன்
பச்சை விளக்கு
கைகொடுத்த தெய்வம்
புதிய பறவை
நவராத்திரி
சாந்தி
மோட்டார் சுந்தரம் பிள்ளை
கந்தன் கருணை
இருமலர்கள்
ஊட்டிவரை உறவு
கலாட்டா கல்யாணம்
உயர்ந்த மனிதன்
தெய்வமகன்
(திருவருசெல்வர், என்தம்பி, திருடன் ஆகிய படங்கள் 100 நாட்கள் ஓடியதாக சொல்லப்பட்ட போதும் தெளிவான ஆதாரங்கள் இல்லாததால் சேர்க்கப்படவில்லை).
சென்னையில் நான்கு அரங்குகளில் 100 நாட்களுக்கு மேல் ஓடிய படங்கள்...
ஆலயமணி
கைகொடுத்த தெய்வம்
நவராத்திரி
சிவந்த மண்
------------------------------------------------------------
விருதுகளும் பரிசுகளும்
1966-ல் மத்திய அரசின் 'பத்மஸ்ரீ' விருது
1961 மத்திய அரசின் சிறந்த பிராந்திய மொழிப்படம் பாவமன்னிப்பு
1961 மத்திய அரசின் சிறப்பு சான்றிதழ் கப்பலோட்டிய தமிழன்
1968 மத்திய அரசின் சிறந்த பிராந்திய மொழிப்படம் தில்லானா மோகனாம்பாள்
1968 மாநில அரசின் சிறந்த படம் உயர்ந்த மனிதன்
1968 மாநில அரசின் இரண்டாவது சிறந்த படம் தில்லானா
1969 மாநில அரசின் சிறந்த நடிகர் விருது தெய்வமகன்
1963 சிறந்த ஒருமைப்பாட்டுப் படம் ரத்தத்திலகம் (துப்பாக்கி பரிசு)
இவைபோக சினிமா ரசிகர்சங்க விருதுகள், பிலிம்பேர் விருதுகள்.
ஐரோப்பிய நாடுகளில் படமாக்கப்பட்ட முதல் தமிழ்ப்படம் சிவந்த மண்.
இந்த காலகட்டத்தில் (60-69) வெளியான 'லேண்ட்மார்க்' படங்கள்
75-வது படம் பார்த்தால் பசிதீரும்
100-வது படம் நவராத்திரி
125-வது படம் உயர்ந்த மனிதன்
(அனைத்தும் வெற்றி)
1962-ல் இந்திய கலாசார தூதுவராக அமெரிக்க பயணம். நயாகரா நகரின் கௌரவ மேயராக தங்கச்சாவி பரிசு என்பதோடு அன்றைய மேயர் என்ற முறையில் இரண்டு தீர்மானங்களில் நடிகர்திலகத்தின் கையெழுத்து.
பொற்கால தமிழ் சினிமாவின் பொற்கால சிற்பி நடிகர்திலகம்...
தமிழ் சினிமாவின் பொற்காலம் என்று கருதபடுவதாவாக கூறப்படும் 1960 - 1969
************************************************** ************
பல தமிழ் படங்கள் - சாதனைகள் புரிந்த வரலாற்றில் நடிகர் திலகத்தின் படங்கள் பற்றிய தொகுப்பு
நடிகர் திலகம் நடித்த மொத்த படங்கள் 76. அதாவது வருடத்திற்கு சராசரி 8.40 திரைப்படங்கள்.
இதுவே உச்சத்தில் இருக்கும் ஒரு நடிகர், ஒரே மாதிரி கதைகள் அல்லாமல் ஒவ்வொரு திரைப்படமும் வித்தியாசமானதாக இருந்தமுறையில் செய்து காட்டிய ஒரு தனிப்பட்ட இமாலய சாதனை.
சாதாரண social subject அல்லாமல் சரித்திர, இதிகாச, வரலாற்று விஷயங்களை மக்கள் முன் ஒரே நடிகர் ஒரே வருடத்தில் கொண்டுவந்து கண் முன் நிறுத்தியது தமிழ் திரை உலக வரலாற்றில் நடிகர் திலகம் மட்டும் தான் !
அவற்றில் 100 நாட்கள் படங்கள்
1) இரும்புத்திரை
2) தெய்வபிறவி
3) படிக்காத மேதை
4) விடிவெள்ளி
5) பாவமன்னிப்பு
6) பாசமலர்
7) மருத நாட்டு வீரன்
8) பாலும் பழமும்
9) பார்த்தல் பசி தீரும்
10) படித்தால் மட்டும் போதுமா
11) ஆலயமணி
12) இருவர் உள்ளம்
13) அன்னை இல்லம்
14) கர்ணன்
15) பச்சை விளக்கு
16) கை கொடுத்த தெய்வம்
17) புதிய பறவை
18) நவராத்திரி
19) சாந்தி
20) திருவிளையாடல்
21) மோட்டார் சுந்தரம் பிள்ளை
22) சரஸ்வதி சபதம்
23) கந்தன் கருணை
24) இரு மலர்கள்
25) ஊட்டி வரை உறவு
26) கலாட்ட கல்யாணம்
27) தில்லான மோகனம்பாள்
28) உயர்ந்த மனிதன்
29) தெய்வ மகன்
30) திருடன்
31) சிவந்த மண்
SILVER JUBILEE அதாவது வெள்ளிவிழா ( 175 DAYS & MORE ) கொண்டாடிய படங்கள் -
1) இரும்புத்திரை
2) பாவமன்னிப்பு
3) பாசமலர்
4) திருவிளையாடல்
திராவிட கட்சிகள் ஹிந்தி எதிர்ப்பு கொள்கைகள் மற்றும் நாத்திக கொள்கைகளை கடுமையாக தமிழகத்தில் விதைத்து கொண்ட காலகட்டம் - குறிப்பாக ஒரு குறிப்பிட்ட சமூகத்தினர் மீதும் இறை வழிபாட்டை முடிந்தவரையில் கட்டுபடுத்தியிருந்த நேரம் - இது போதாதென்று INDO PAK போர் காலம் என்பதால் இரவு BLACK OUT முறை செயல்படுத்தப்பட்ட நேரம் !
இதனை எதிர் மறை சூழ்நிலையும் மீறி நடிப்பு கடவுளின் திருவிளையாடல் மதோன்னத வெற்றி பவனி !
தமிழ் திரை உலகில் அதுவரை வந்த அத்துணை படங்களின் வசூல்களை நொடிபொழுதில் முக்கிய நகரங்களில் எல்லாம் முறியடித்து எங்கும் இறை அருள் என்பது போல தமிழகம் முழுதும் உள்ள அனைவரையும் தனது பக்கம் இழுத்த " திருவிளையாடல்" காவியம் !
23 வாரங்கள் ஓடிய படம்
*******************
படிக்காத மேதை - 1960
21 வாரங்கள் ஓடிய படம்
*******************
சிவந்த மண் - 1969
ஒரே ஆண்டில் இரண்டு வெள்ளி விழா காவியம் கொடுத்த நடிகர் திலகம் - 1961 - பாவமன்னிப்பு & பாசமலர்
ஒரே ஆண்டில் மூன்று BLOCK BUSTER வெற்றிகள் கொடுத்தவரும் நடிகர் திலகம் - 1961 - 1) பாவமன்னிப்பு 2) பாசமலர் 3) பாலும் பழமும்
பொற்கால சாதனை துளிகள்
**********************
1960 - 1969- இந்த பொற்காலத்தில் பொக்கிஷமாக நடிகர் திலகத்தின் பல திரைப்படங்கள் தேசிய அளவில் பல நற்சான்றிதழ்களையும், சிறந்த திரைப்பட விருதுகளையும் அதிக அளவில் பெற்றது.
1961- பாசமலர் - அண்ணன் தங்கை பாசம் - இது போல ஒரு காவியம் தமிழகம் இதுவரை கண்டதில்லை.
இந்த பொற்காலத்தில் நடிகர் திலகம் உலக தமிழர்களின் முகவரியாக வலம் வந்து உலக திரை அரங்கில் மூன்று கண்டங்களில் அதாவது ஆசிய ஆப்ரிக்க , அமெரிக்க (ASIA AFRO & AMERICA )ஆகிய நாடுகளில் பெற்ற "உலக விருதுகள்" - தமிழ் திரை உலகின் "உலக நாயகன்" !
1) 1960 - உலக திரைப்பட அரங்கில் ஆசியா ஆப்ரிக்க கண்டங்களிலேயே சிறந்த நடிகர் என்ற விருதை நடிகர் திலகம் பெற்று தமிழ் திரை உலகை முதன் முதலாக உலக திரை உலகின் முன் கௌரவபடுத்தினார் !
2) 1962 - அமெரிக்க அதிபர் JOHN F KENNEDY அவர்களின் சிறப்பு அழைப்பிதழின் பேரில் நடிகர் திலகம் இந்திய அமெரிக்க கலாசார தூதுவராக அழைக்கப்பட்டார். இன்று வரை இந்த பெருமையை எந்த ஒரு இந்திய நடிகரும் பெற்றதில்லை.
3) நயாகரா நகரின் ஒரு நாள் மேயர் பதவியும் அதன் அடையாளமாக தங்க சாவியும் நடிகர் திலகத்திற்கு கொடுக்கப்பட்டது. இதை பெற்ற முதல் இந்திய நடிகர் நடிகர் திலகம் !
இந்த உலக பெருமை வேறு எந்த இந்திய நடிகருக்கும் இன்று வரை வழங்கப்படவில்லை !
இந்த பெருமையை பெற்ற மற்றொரு இந்தியர் நம் பாரத பிரதமர் பண்டித ஜவஹர்லால் நேரு அவர்கள் !
4) தமிழ் திரை உலக நடிகர் ஒருவரை, அவர் புகழ் கேட்டு அதன் எதிரொலியாக உலகபுகழ் பெற்ற HOLLYWOOD எனப்படும் ஆங்கில திரை உலகில் - உலகளவில் கோலோச்சிய மர்லான் பிராண்டோ மற்றும் இதர HOLLYWOOD SUPERSTARS நம் நடிகர் திலகத்தை சந்திக்க விரும்பி அங்கு நடிகர் திலகம் சென்றபோது சிறப்பு விருந்தளித்து கௌரவித்தனர் ! இந்த கெளரவம் வேறு எந்த நடிகருக்கும் HOLLYWOOD கொடுத்ததில்லை என்பது இன்றளவும் ஒரு பெருமை !
1964 - நடிகர் திலகம் அவர்கள் குறுகிய காலத்தில் 100 படங்கள் நிறைவு செய்தார். 1952 அக்டோபர் முதல் 1964 டிசம்பர் வரை நடித்து வெளியான படங்களின் எண்ணிக்கை 100. -
1964 - ஒரு நடிகரின் 100வது திரைப்படம் மிகபெரிய வெற்றி பெற்றது அதுவே முதல் முறை - 100 வது படம் மிக வித்தியாசமாக கொண்டதும் அதுவே முதல் முறை - 9 வேடங்கள் நவரசம் பிரதிபலிக்கும் கதாபாத்திரங்கள் ! - வித்தியாச முயற்சி - மிகபெரிய வெற்றி !
1952 தீபாவளி, நடிகர் திலகம் நடிக்க வந்த ஆண்டு முதல் தமிழ் திரை உலக பொற்காலமாக கருதப்பட்ட 1960 -1969 முடிய நடித்து முடித்து வெளியான படங்கள் எண்ணிக்கை 134.
AVERAGE FILM PER YEAR FROM 1952 OCTOBER to 1969 December - 11.14
1960 - 1969 - பொற்கால தமிழ் சினிமா - 9 ஆண்டுகளில் 76 படங்கள் -
AVERAGE FILM PER YEAR FROM 1960 to 1969 December - 8.40
1960 - 1969 - 100 முதல் 163 நாட்கள் வரை ஓடிய படங்களின் எண்ணிக்கை - 31
1960 - 1969 - 175 நாட்களுக்கு மேல் ஓடிய படங்களின் எண்ணிக்கை - 4
இந்திய அரசாங்கத்தின் பரிசு, விருது பெற்ற படங்கள் - 8
சினிமா ரசிகர்சங்க விருதுகள், பிலிம்பேர் விருதுகள் - பல படங்கள்
நடிகர் திலகம் பெற்ற உலக விருதுகள் மற்றும் கெளரவம் : மொத்தம் - 3
1) BEST ACTOR - ASIA AFRO CONTINENT - 1960
2) ONE DAY MAYOR OF NIAGARA - USA - 1962
3) CULTURAL AMBASSADOR INVITED BY JOHN F KENNEDY - USA - 1962
தமிழ் திரை உலகின் பொற்காலத்தை உருவாகிய, உலக அரங்கில் தமிழனை தலை நிமிரச்செய்த பொற்கால கடவுள் " நடிகர் திலகம் சிவாஜி கணேசன் !!
Artical in today's tamil.The hindu
பி.ஆர். பந்துலு இயக்கத்தில் வெளியான ‘பலே பாண்டியா’ (1962) படத்தில் பாண்டியன்,மருது, சங்கர் என மூன்று மாறுபட்ட வேடங்களில் முதல்முறையாக சிவாஜி நடித்திருந்தார்.
இந்தப் படத்தில் விஸ்வநாதன் ராமமூர்த்தி இசையில் இடம்பெற்ற ‘நீயே உனக்கு என்றும் நிகரானவன்’ பாடலில் நீண்ட ஆலாபனையாக சுர வரிசையைப் பாடிக்கொண்டே ‘மாமா… மாப்ளே’ என்று பாடலின் முடிவில் நடக்கும் சங்கீதப் போட்டி, மிகவும் ரசிக்கப்பட்டது.
அப்போது கிண்டியில் அமைந்திருந்த ‘நியூட்டன்’ ஸ்டூடியோவில் பாடலைப் படமாக்கியிருக்கிறார்கள். இந்தப் பாடலில் எம்.ஆர். ராதாவுக்காக எம். ராஜு என்பவரைப் பாட வைத்திருக்கிறார்கள். இவர் விஸ்வநாதன் ராமமூர்த்தி குழுவில் இடம்பெற்றிருந்த கம்பெனிப் பாடகர்.
அச்சு அசலாகத் தனது குரலில் பாடியதைப் போலவே ராஜு பாடியிருப்பதைக் கேட்டு அவரை செட்டுக்கே வரவழைத்து நடிகவேள் பாராட்டினார். பிறகு அவரிடமே அந்தப் பாடலில் இடம்பெற்ற சுர வரிசையையும் கற்றுக்கொண்டார். ஆனால் அவை அத்தனை சீக்கிரம் வாயில் நுழையவில்லை. அவர் பயிற்சி எடுத்துக் கொண்டிருந்ததை ரசிக்க செட்டில் இருந்தவர்கள் கூடியதால், “ஏன்டா இங்க என்ன யானை வித்த காட்டவா வந்திருக்கு?” என்று எல்லோரையும் துரத்தினாராம்.
ஓரளவு கற்றுக்கொண்டாலும் சுர வரிசைகளால் பெரிய குழப்பம் ஏற்பட, இயக்குநர் பந்துலுவிடம் “எனக்கு குளோஸ் அப் வைக்காமல் கேமராவை நிறுத்தாமல் ஓடவிடு, முக்கியமாக நாகராவில் பாடலை ஒலிக்கவிட்டு ‘ரிகர்சல்’ பார்க்க வேண்டாம் என்று உத்தரவு போட்டுவிட்டாராம் ராதா.
படப்பிடிப்பில் பாலாஜி கடம் வாசிப்பதுபோல நடிக்க, சிவாஜி தரையில் அமர்ந்து பாட, சோபாவில் அமர்ந்து எம்.ஆர். ராதா ரசித்துக் கொண்டிருப்பதுபோல இரண்டு கேமராகளை வைத்துப் படமாக்கியிருக்கிறார் இயக்குநர். பாதி பாடல் எடுத்து முடிக்கப்பட்டதும், இரண்டு நிமிடம் இடம்பெறும் சுர ஆலாபனைக்கான படப்பிடிப்பு தொடங்கியது.
பாடகர் ராஜு சொல்லிக்கொடுத்த சுரங்கள் எல்லாம் மறந்துபோனாலும் ரொம்பவே சூப்பராகச் சமாளித்திருக்கிறார் நடிகவேள். சுர ஆலாபனையைச் சரியான உதட்டசைவுடன் சொல்ல முடியாது என்று தெரிந்ததும், தனது அங்க சேஷ்டைகளால் சமாளிக்க ஆரம்பித்தார். முக்கியமாக அவர் அமர்ந்திருந்த சோபா அதிரும்படி உடலையும் கைகளையும் அசைக்க ஆரம்பித்தார். நடிகவேளின் உடல் மொழியைக் கண்டு செட்டில் இருந்த அத்தனை பேரும் சிரித்துக்கொண்டே இருக்க அப்போதே இந்தப் பாடல், படத்துக்குப் பெரிய சர்ப்பிரைஸ் என்பது தெரிந்துவிட்டது.
பாடலின் க்ளைமேக்ஸ் நெருங்கிய நேரத்தில் பெரிய கர்நாடக சங்கீதப் பாடகரைப் போல் இடது கையைத் தனது காதருகே வைத்துக் கொண்டு வலது கையை நீட்டி வாயை அசைத்து நடித்திருக்கிறார் நடிகவேள். இது கொஞ்சம் ஓவராக இருக்கிறதே என்று இயக்குநர் நினைத்தாலும் கடைசி ஷாட் என்பதால் ஓடிக்கொண்டிருக்கும் கேமராவை நிறுத்த இயக்குநர் விரும்பவில்லை.
படப்பிடிப்பு முடிந்ததும்.. “அண்ணே ஆலாபனை பாடுறதுக்கே காதுகிட்ட கையைக் கொண்டு போயிட்டீங்களே!? என்னாலயே சிரிப்பை அடக்க முடியல” என்றார் பந்துலு. அதற்கு எம்.ஆர்.ராதா... “அடப் போய்யா... நான் குதிச்ச குதியில விக் கழன்றுகிட்டு வந்திருச்சு... அது கீழ விழுந்துட்டா.. எல்லார் உழைப்பும் தீர்ந்துருமே… விக் கீழே விழாம பிடிச்சுக்கத்தான்.. அப்புடி காதுக்கிட்ட கை வெச்சேன். என்னோட மானமும் மிச்சம், உன்னோட பிலிம் ரோலும் மிச்சம்” என்றாராம்.