மாலை மலர் -28/01/2017
http://i67.tinypic.com/2v15b94.jpg
Printable View
மாலை மலர் -28/01/2017
http://i67.tinypic.com/2v15b94.jpg
சீர்காழியில் இன்பக்கனவு நாடகம்
1953 – ஆம் ஆண்டு அரங்கேறிய “இடிந்த கோயில்” நாடகம் “இன்பக்கனவாக” பெயர் மாறி கிட்டத்தட்ட ஐந்து வருடங்கள் சக்கை போடு போட்டு அனைத்து ஊர்களிலும் அரங்கம் நிரம்பி வழிகிறது. நாடகத்திற்கான வரவேற்பு சற்றும் குறைந்தபாடில்லை. சென்ற இடங்களில் எல்லாம் ரசிகர்களின் கூட்டம் அலை மோதுகிறது.
1958 – ஆம் ஆண்டு சீர்காழியில் “இன்பக்கனவு” நாடகம் அரங்கேற தடபுடலாக ஏற்பாடுகள் நடக்கிறது. இதற்கிடையில் எம்.ஜி.ஆர். ஏகப்பட்ட திரைப்படங்களில் கதாநாயகனாக நடித்து மனங்கவர்ந்த நடிகராக ரசிகர்களின் இதயத்தில் இடம் பெற்றிருந்தார்.
முன்னணி அந்தஸ்த்தை எட்டியிருந்தபோதிலும் படபிடிப்பு இல்லாத நேரங்களில் தனது நாடகக் குழுவுடன் புறப்பட்டு அவ்வப்போது மேடைகளில் தன் நடிப்பு முத்திரையை பதித்து வந்தார். மாபெரும் வெற்றிப்படமான ‘நாடோடி மன்னன்‘ வெளிவந்து வசூலைக் குவித்துக் கொண்டிருந்த நேரமது.
சீர்காழியில் பிடாரி வடக்கு வீதி பின்புறம் அமைந்திருந்த “சாமி மேடை”யில் ‘இன்பக்கனவு’ நாடகம் நடத்துவதற்கான ஏற்பாடுகள் ஆகியிருந்தது. இந்த மேடையில்தான் எம்.ஜி.ஆருக்கு விபத்து ஏற்படுகிறது. எம்.ஜி.ஆருக்கு விபத்து ஏற்பட்ட அந்த நிகழ்வினை நினைவு கூறுகிறார் சீர்காழி கோவிந்தராஜனின் புதல்வர் சீர்காழி சிவ சிதம்பரம் :
“அந்தக் காலத்தில் சீர்காழியில் ஐந்து திரையரங்குகள் இருந்தன. இப்போதுபோல சேர், பெஞ்ச் எல்லாம் கிடையாது. மூங்கிலால் செய்யப்பட்ட ஈஸி சேர்கள் கொண்ட திரையரங்குகள் அவை. திரையரங்குகள் இருந்தபோதும் நாடகங்களும் கச்சேரிகளும் வளர்ந்துதான் வந்தன. எம்.ஜி.ஆர். நடித்த ‘இன்பக் கனவு” நாடகம் இங்குதான் அரங்கேறியது.”
என்று பழைய நினைவுகளை நம் கண்முன் கொண்டு வந்து நிறுத்துகிறார். “இன்பக்கனவு” நாடகம் அமர்க்களமாகத் தொடங்குகிறது. இந்த நாடகத்தில் ரத்னமாலாவுக்கு பதிலாக கதாநாயகியாக அபிநயித்தவர் ஜி.சகுந்தலா.
பிச்சைக்காரி கதாபாத்திரத்தில் வரும் ஜி.சகுந்தலாவை குண்டுமணியும், புத்தூர் நடராஜனும் – சினிமா பாணியில் – பலாத்காரம் செய்வதுபோல் ஒரு காட்சி, அழுக்கான ஆடை அணிந்து மண்டபத்தின் ஒதுக்குப்புரத்தில் படுத்திருக்கும் எம்.ஜி.ஆரின் காதுகளுக்கு ஜி.சகுந்தலாவின் அபயக்குரல் கேட்கிறது. அட்டகாசமாக பாய்ந்து வரும் எம்.ஜி.ஆர், குண்டர்களை அடித்து வீழ்த்தி சண்டையிட வேண்டும். இது தான் காட்சியமைப்பு.
கதைப்படி எம்.ஜி.ஆரின் முதல் “என்ட்ரி”யும் இப்போதுதான். எம்.ஜி.ஆர். அதிரடியாக காட்சியினுள் நுழைந்ததுமே வழக்கம்போல் கரகோஷம் விண்ணை முட்டுகிறது. ரசிகர்களின் ஆரவாரமும், கைத்தட்டல்களும் சுமார் ஐந்து நிமிடங்கள்வரை நீடிக்கிறது. எம்.ஜி.ஆர். முதலாவதாக புத்தூர் நடராஜனை குனிந்து தனது இரு தோள்களிலும் அப்படியே தூக்கி கீழே விழச் செய்கிறார்.
G1
அடுத்து குண்டுமணி எம்.ஜி.ஆரை அடிப்பதற்கு பாய்ந்து வருவார். தனது வலதுபுற தோளில் அவரை அலக்காகத் தூக்கி விழச் செய்யுமாறு ஒத்திகை பார்க்கப்பட்டது. ஒத்திகையின்போது சரியாக விழுந்தார் குண்டுமணி. ஆனால் சம்பவத்தன்று அவர் உடல் முழுவதும் வியர்வையால் நனைந்திருந்தார்.
பெயருக்கு ஏற்றார்போல் மிகப் பருமனான நபர் இந்த குண்டுமணி. 250 பவுண்டு எடையுடன் கூடிய ஆஜானுபாகுவான தோற்றம். எம்.ஜி.ஆரின் எடையோ வெறும் 70 கிலோதான். உடற்பயிற்சி செய்து உடம்பை கட்டுமஸ்தாக வைத்திருந்த எம்.ஜி.ஆருக்கு அது ஒன்றும் சிரமமான காரியம் கிடையாது. எத்தனையோ முறை சர்வசாதரணமாக தூக்கி அரங்கில் கைத்தட்டல் பெற்றிருக்கிறார்.
அன்று அவருடைய போதாத நேரம். எம்.ஜி.ஆரின் கால் இடறி, நிலைதடுமாறி அவரது கைகளிலிருந்து வழுக்கி விழுந்த குண்டுமணி நேராக அவருடைய கால் மீதே விழுந்து விடுகிறார். எம்.ஜி.ஆரால் எழக்கூட முடியவில்லை. “களுக்” என்ற சப்தத்துடன் எம்.ஜி.ஆருக்கு கால் முறிவு ஏற்பட்டு வலியால் துடிதுடித்துப் போகிறார்.
அடுத்து சண்டைக்காட்சியில் வரவிருந்த எம். ஜி.ஆரின் மெய்க்காப்பாளர் கே.பி.ராமகிருஷ்ணன், தர்மலிங்கம், முத்து உட்பட அத்தனை பேரும் அதிர்ச்சியில் உறைந்து போய் நிற்கின்றனர். பதறிப்போன குண்டுமணி செய்வதறியாது திகைத்து நிற்கிறார். குண்டுமணி இன்னும் சுதாரிப்புக்கு வரவில்லை.
நாடகம் பார்த்துக் கொண்டிருந்தவர்களுக்கும் ஒன்றும் புரியவில்லை. உடனே எம்.ஜி.ஆர். சீன் முத்துவிடம் சைகை காண்பித்து திரைச்சீலையை கீழே இறக்கும்படி உத்தரவிடுகிறார். பார்வையாளர்கள் அதிர்ச்சியிலிருந்து மீளவில்லை. “என்னாச்சு? ஏதாச்சு?” என்று ஒருவரை ஒருவர் கேட்டுக் கொள்கின்றனர். எம்.ஜி.ஆருக்கு கால் முறிந்துவிட்டது என்ற செய்தி தீப்பொறியாய் பரவியவுடன் ரசிகர்களுடைய ஓலமும் ஒப்பாரிச் சத்தமும் நாலாபுரமும் ஒலிக்கிறது. அரங்கமே களேபரம் ஆகி பீதி நிலவுகிறது.
திரைக்குப்பின்னால், உணர்ச்சிவசப்பட்டு குண்டுமணியும் எம்.ஜி.ஆரின் காலில் விழுந்து அழத் தொடங்கி விடுகிறார். “என்னால்தானே உங்களுக்கு இப்படி ஏற்பட்டது” என்று புலம்புகிறார். எம்.ஜி.ஆரோ அலட்சியமாக குண்டுமணியின் தோளில் தட்டிக் கொடுத்து “என்ன இது, சின்ன குழந்தைபோல் அழுகிறாய்?. எனக்கு ஒன்றுமேஆகவில்லை” என்று சமாதானம் கூறுகிறார்.
அரங்கத்தில் கூடியிருந்தவர்கள் குண்டுமணியை வசைபாடி தீர்க்கின்றனர். நாடகம் பார்க்க வந்த கூட்டத்தில் ராணுவத்தில் பணிபுரிந்த டாக்டர் ஒருவர் இருக்கிறார் என்ற செய்தி கிடைக்க எம்.ஜி.ஆருக்கு முதலுதவி சிகிச்சை புரிய அவசர அவசரமாக அவர் மேடைக்கு அழைக்கப்படுகிறார். தற்காலிகமாக அவரது காலில் கட்டு போடப்பட்டு ஆம்புலன்ஸ் மூலம் அவசர சிகிச்சைக்காக உடனே சென்னைக்கு எடுத்துச் செல்வதற்கு ஏற்பாடுகள் நடைபெறுகின்றன. .
“எதிர்பாராதவிதமாக எம்.ஜி.ஆரின் காலில் சிறிய காயம் ஏற்பட்டு விட்டது. யாரும் தவறாக நினைத்துக் கொள்ள வேண்டாம். தயவு செய்து கலைந்து செல்லுமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்” என்று ஒலிபெருக்கியில் வேண்டுகோள் விடப்பட்டது. எனினும் ரசிகர்களின் கூக்குரல்கள் அடங்கியபாடில்லை,. அவர்கள் கலைந்துச் செல்வதற்கான எந்தவித அறிகுறியும் தென்படவில்லை.
இப்பொழுதுதான் யாருமே எதிர்பாராத காரியம் ஒன்றைச் செய்கிறார் எம்.ஜி.ஆர். திரைச்சீலையை உயர்த்துமாறு சீன்முத்துவுக்கு கட்டளை இடுகிறார். நாலைந்து பேர்கள் அவரை சாய்வாகப் பிடித்துக் கொள்கிறார்கள். கால் எலும்பு முறிந்து வலியால் துடித்க்கின்ற போதும் உட்கார்ந்தவாறே மைக்கைப் பிடித்துக் கொண்டு உரையாற்ற ஆரம்பித்து விடுகிறார்.
எதிர்பாராதவிதமாக ஏற்பட்ட இந்த தடங்கலுக்கு வருத்தம் தெரிவித்துவிட்டு, “எனக்கு ஒன்றும் ஆகவில்லை, காலில் சிறிய காயம் அவ்வளவுதான். கவலைப்படவேண்டாம், மீண்டும் இதே சீர்காழி மண்ணில் திரும்ப வந்து நாடகம் நடத்துவேன்” என்று உறுதி கூறிவிட்டு மக்களைத் தேற்றுகிறார். கிட்டத்தட்ட பத்து நிமிடங்கள் அவர் பேசிய பிறகுதான் ரசிகர்கள் ஓரளவு சமாதானம் அடைகின்றனர்.
இதுபோன்ற இக்கட்டான நேரத்திலும் எம்.ஜி.ஆர் காட்டிய பெருந்தன்மையைக் கண்டு கூடியிருந்த ரசிகர்கள் மெய்ச்சிலிர்ந்து போகின்றனர். வேன் அரங்கத்திலிருந்து வெளியாகிறது. இருமருங்கிலும் மக்கள் கூடி நின்று தங்கள் மனங்கவர் நாயகனை கண்ணீர் மல்க வழியனுப்பி வைக்கின்றனர்.
எம்.ஜி.ஆரை பத்திரமாக அழைத்துக் கொண்டு சென்னைக்கு புறப்படுவதற்கு முன்னரே அவரது குடும்ப டாக்டர் பி.ஆர்.சுப்பிரமணியத்திற்கு தகவல் தெரிவிக்கப்படுகிறது. இவர்கள் சென்னை வந்துச் சேர்ந்ததும் எலும்புமுறிவு துறையில் நிபுணத்துவம் பெற்ற பிரபல டாக்டர் நடராஜனும் அங்கு தயாராகக் காத்திருக்கிறார்.
தொலைக்காட்சி ஊடகங்கள் மற்றும் தகவல் தொடர்பு இல்லாத அந்தக் காலத்திலும் கூட எம்.ஜி.ஆர். சென்னைக்கு தன் வீடு சென்று சேருவதற்கு முன்பாகவே விபத்துச் செய்தி தீப்பொறியாகப் பரவ, அவரது இல்லத்தின் முன்பு பெரும் கூட்டம் கூடிவிடுகிறது.
சென்னை திரும்பிய எம்.ஜி. ஆர்., தனது வீட்டின் வாசலில் கூடியிருந்த மக்கள் கூட்டத்தை பார்த்து திகைத்துப் போகிறார். “எனக்கு ஒன்றும் நேராது. கவலைப்படாதீர்கள்” என்று ஆறுதல் கூறிவிட்டு, மருத்துவமனைக்குச் செல்கிறார். சென்னை பூந்தமல்லி நெடுஞ்சாலையில் உள்ள “ராமாராவ் நர்சிங் ஹோமில்” எம்.ஜி.ஆர் அனுமதிக்கப்பட்டு, அவருக்கு உடனடியாக ஊடுகதிர் சிகிச்சை மேற்கொள்ளப்படுகிறது. கால் எலும்பு அடியோடு முறிந்துவிடவில்லை விரிசல்தான் ஏற்பட்டிருக்கிறது என்ற செய்தி எல்லோருக்கு சற்று மனஆறுதல் தருகிறது. தகுந்த சிகிச்சை மற்றும் “பிஸியோதெரபி” சிகிச்சை மூலம் சரி செய்து விடலாம் என்றும் டாக்டர்கள் நம்பிக்கை ஊட்டுகின்றனர்.
சில நாட்கள் அசையாமல் படுக்கையில் இருக்க வேண்டியது அவசியம் என்ற மருத்தவர்களின் அறிவுரையின் பேரில் மருத்துவமனையில் எம்.ஜி.ஆர். அனுமதிக்கப்படுகிறார். எம்.ஜி.ஆரின் அண்ணன் சக்ரபாணி காலில் கட்டு போடப்பட்டிருந்த எம்.ஜி.ஆரைப் பார்த்து கதறிக்கதறி அழுகிறார். அவரை எம்.ஜி.ஆரே சமாதானப்படுத்துகிறார். “எனக்கு ஆறுதல் சொல்ல வேண்டிய நீங்களே இப்படி அழுகிறீர்களே!” என்று அவரை தேற்றுகிறார்.
இந்த அளவிற்கு பலமான எலும்பு முறிவு வேறு யாருக்காவது ஏற்பட்டிருந்தால் இந்நேரம் கதறித் துடித்து இருப்பார்கள். ஆனால், எம்.ஜி.ஆர் தனது வேதனை மற்றவர்களுக்கு சங்கடத்தை ஏற்படுத்தக்கூடாதென்று மிகச் சாதாரணமாக நடந்து கொண்டார்.
சுமார் 1 மாத காலம் எம்.ஜி.ஆர் மருத்தவமனையில் தீவிர சிகிச்சை பெற்ற பிறகு லாயிட்ஸ் சாலையில் உள்ள தனது வீட்டில் சுமார் 5 மாதம் ஓய்வெடுக்கிறார்.
சம்பவம் நடந்த மறுநாள் அனைத்து பத்திரிக்கைகளிலும் அதுதான் தலைப்புச் செய்தியாக இடம் பெற்றது. “வெறும் வாய்க்கு மெள்ள அவல் கிடத்ததைப்போல” எம்.ஜி.ராமச்சந்திரனின் கலைவாழ்வு சகாப்தம் இத்தோடு முடிந்து விட்டது என்ற ரீதியில் பத்திரிக்கைகள் முகாரி ராகம் பாடுகின்றன.
“நாடோடிமன்னன்” திரைப்படத்தின் மகத்தான வெற்றிக்குப் பிறகு கண் திருஷ்டியை[ப்போல இந்த சம்பவம் அமைந்து விட்டது என்று எல்லோரும் பேசிக் கொண்டார்கள் கால் எலும்பு முறிந்து விட்டதால், குணம் அடைந்தாலும் சண்டைக் காட்சிகளில் பழைய வேகத்துடன் எம்.ஜி.ஆர். நடிக்க முடியாது என்று தமிழ்நாடு முழுவதும் வதந்தி பரவுகிறது.
இதனை அறிந்த எம்.ஜி.ஆர்., அறிக்கை ஒன்றை வெளியிடுகிறார்:
“எனது உடல் நலம் குறித்து, அக்கறையோடு விசாரிக்கும் அனைவருக்கும் என் உளமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். எனக்கு வர இருந்த பேராபத்து, உதய சூரியனைக் கண்ட பனித்துளிபோல விலகி விட்டதற்கு முக்கியக் காரணம், உங்களைப்போன்ற ரசிகர்களின் அன்பும், ஆசியும்தான். என் உடல் நலம் தேறியபின், நான் இதுவரை இருந்ததைவிட பன்மடங்கு அதிக சக்தியுடனும், தெம்புடனும் மீண்டும் கலைக்கும், நாட்டுக்கும் பணியாற்றுவேன் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.”
இவ்வாறு அந்த அறிக்கையில் எம்.ஜி.ஆர். குறிப்பிட்டிருந்தார். அவர் கூறியது போலவே, விரைவாக குணம் அடைந்தார். விரிசல் ஏற்பட்ட எலும்பு சரியாகியது. முன்னைவிடவும் அதிக வலிமையோடு காட்சி தந்தார். நிருபர்கள் முன்னிலையில், அவர் பெரும் பளுவைத் தூக்கிக் காட்டினார். நடையில் எவ்வித தடுமாற்றமும் இல்லை. வேகமும் சற்று கூடியிருந்தது!
அது மட்டுமின்றி கால்கள் மேலும் வலுபெற தனது ராமாவரம் தோட்டத்தில் நீச்சல் குளம் ஒன்றை அமைத்து கால்களுக்கு பலம் சேர்த்தார். எம்.ஜி.ஆருக்கு ஏற்பட்ட இந்த பலத்த கால் முறிவு வேறு யாருக்காவது ஏற்பட்டிருந்தால் இவ்வளவு விரைவில் குணமடைந்திருப்பார்களா என்பது சந்தேகமே. அந்த அளவிற்கு தனது உடல் நலத்தில் அக்கறை காட்டினார்
தன்னைக் காண வரும் ஒரு சிலர் அவரது காயத்திற்கு அனுதாபம் ஏற்படும் வகையில் பேசினாலும், “இப்படியெல்லாம் பேசி என்னை நோயாளியாக்கி விடாதீர்கள் எனக்கு ஒன்றுமே இல்லை” என்று அன்பு வேண்டுகோள் விடுப்பார்.
இதற்கு காரணம் எந்த சூழ்நிலையிலும், எப்படிப்பட்ட ஆபத்துக்கள் வந்தாலும், அதைப்பற்றி சிறிதும் கவலை கொள்ளாமல் மிகுந்த மனோதைரியத்துடன் எம்.ஜி.ஆர் இருந்ததே ஆகும். நோய்களின் விரைவான நலத்திற்கு மருத்துவ சிகிச்சை ஒருபுறம் இருப்பினும், அதைவிட முக்கியம் நமது மன உறுதியே என்பதை முழுமையாக நம்பினார் எம்.ஜி.ஆர்.
courtesy - net
THE HINDU -26/01/2017
http://i65.tinypic.com/1zf0bxj.jpg
இன்று (29/01/2017) இரவு 7 மணிக்கு சன் லைப் தொலைக்காட்சியில் மக்கள் தலைவர் எம்.ஜி.ஆர். பேரறிஞர் அண்ணாவின் "இதயக்கனி " திரைப்படம்
ஒளிபரப்பாகிறது .
http://i63.tinypic.com/2s77zvd.jpg
இன்று இரவு 7.30 மணிக்கு முரசு டிவியில் மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். நடித்த "நீதிக்கு தலை வணங்கு " திரைப்படம் ஒளிபரப்பாகிறது .
http://i63.tinypic.com/1r984k.jpg
தகவல் உதவி : மடிப்பாக்கம் திரு. சுந்தர்.
எஸ்.வி. அய்யா,
புரட்சித் தலைவரின் உலகம் சுற்றும் வாலிபன் திரைப்படம் 1973-வது ஆண்டில் வெளியானபோது, அதுவரை வெளியான திரைப்படங்களின் வசூல் சாதனையை முறியடித்தது. புரட்சித் தலைவர் திரையுலகில் இருக்கும் வரை அந்த சாதனை முறியடிக்கப்படவில்லை.அரசுக்கு ஆறு மாதங்களில் அரசுக்கு வரியாக 60 லட்சம் வரியாக செலுத்தியிருக்கிறது. அப்படி என்றால் வசூல் ஒன்றேகால் கோடி இருக்கும். அதற்கும் மேல் ஷிப்ட்டிங்கை சேர்க்கவில்லை. சென்னையில் மெக்கனாஸ் கோல்ட் படத்தின் வசூலையும் முறியடித்து ஒரே தியேட்டரில் அதிக நாள் ஓடியதில் அதிக வசூல் பெற்ற படம் (அதுவரை) என்றுதான் சொல்கிறோம்.
20 தியேட்டருக்கு மேல் (பெங்களூரையும் சேர்த்து) 100 நாள் ஓடியிருக்கிறது. சென்னையில் 2 தியேட்டர் எங்கள் மதுரையில் மீனாட்சி தியேட்டர், திருச்சியில் பேலஸ் தியேட்டர் மற்றும் இலங்கையில் ஒரு தியேட்டரில் வெள்ளி விழா கொண்டாடி இருக்கிறது. இதில் பொய் எதுவும் இல்லை. இன்னொன்று, 1973-ல் தியேட்டர் டிக்கெட் கட்டணம் இருந்ததை விட 1979-ல் டிக்கெட் கட்டணம் உயர்வாக இருந்தது.
உலகம் சுற்றும் வாலிபன் 3 கோடி வசூலித்தது என்று சொல்லியிருக்கிறீர்கள். அதுபற்றி மாற்றுத் திரியில் கேட்கிறார்கள். நீங்கள் மூத்த ரசிகர். விசயம் தெரியாமல் சொல்ல மாட்டீர்கள். உங்களுக்கு அதுபற்றி விபரம், ஆதாரம் இருந்தால் பதிவிடவும். நன்றி.