மாற்ற&
மகேஷ் என்பவர் நன்றாக (விளம்பர படங்களில்) இசை அமைக்கிறார், அவரை நம்மவருக்கு அணுகிப்பாருங்களேன் என ராஜாவே கமலிடம் யோசனை தெரிவித்ததாக ஒரு முறை கமல் பேட்டியொன்றில் சொன்னதாக ஞாபகம்.
ஒரு முறை ராஜாவிடம் "காலத்தால் அழிக்க முடியாத பாடல்களை கொண்ட படங்களில் நடித்த கமல், ரஜினி போன்றோர் தற்போது ஏன் உங்கள் இசையில் படம் செய்வதில்லை" எனக் கேட்டபோது, "இந்தக் கேள்வியை என்னிடம் கேட்பதற்கு பதில் அவர்களிடமே கேளுங்களேன்" என பதில் அளித்தார். இந்தப் பேட்டி ஆ.விகடனில் பல வருடங்களுக்கு முன்பு வாசித்ததாக ஞாபகம்.
மாற்றங்கள் வருவது இயல்பு. நல்ல பல பாடல்களை எம்.எஸ்.வி கொடுத்திருந்தும், ராஜாவை ஸ்ரீதர் தேர்ந்தெடுத்ததை விடவா ஒரு மாற்றம் இருக்கமுடியும்?