-
டியர் esvee சார்,
ஏவிஎம் பொன்விழாவில் நடிகர் திலகம் : அனைத்து நிழற்படங்களும் கண்கொள்ளாக் காட்சிகள்..!
இடுகை செய்தமைக்கு இனிப்பான நன்றிகள்..!
அன்புடன்,
பம்மலார்.
-
-
டியர் வினோத் சார்,
இது வரையில் இந்த மய்யத்தில் எனக்கு நினைவு தெரிந்து நான் பார்த்திராத மிக மிக மிக அபூர்வமான பொக்கிஷமான ஸ்டில்லைத் தந்து அசத்தியுள்ளீர்கள்.. உண்மையிலேயே இந்த நால்வர் இணைந்து வெளிவந்திருக்கக் கூடிய மிக அபூர்வமான ஸ்டில் இது... தங்களுக்கு கோடான கோடி பாராட்டுக்களும் நன்றிகளும்...
அன்புடன்
-
டியர் ராகுல்ராம்,
'சந்திப்பு' பதிவிற்கான தங்கள் அன்புப் பாராட்டிற்கு என் மனமார்ந்த நன்றி!
-
டியர் ராதாகிருஷ்ணன் சார்,
தங்கள் அன்பான பாராட்டிற்கு என் மனம் குளிர்ந்த நன்றிகள்.
-
டியர் சந்திரசேகரன் சார்,
பதிவுகளுக்கான தங்கள் பாராட்டுதல்களுக்கு உளம் கனிந்த நன்றிகள். ஆங்கில சப் டைட்டிலோடு "உள்ளத்தில் நல்ல உள்ளம்" கண்டு மகிழச் செய்ததற்கு நன்றிகள். ஒய்.ஜி.எம் சாருக்கும் நன்றி!
-
டியர் ராகவேந்திரன் சார்,
தங்களின் அன்பு பாராட்டு மழையில் நனையச் செய்து விட்டீர்கள். அதற்காக என் மனப்பூர்வமான நன்றிகளை தங்களுக்கு சமர்ப்பிக்கிறேன். நல்ல பதிவுகள் எங்கெல்லாம் உண்டோ அங்கெல்லாம் தங்கள் அன்பும், ஆதரவும் நிச்சயம் உண்டு என்பதை சொல்லவும் வேண்டுமோ! தாங்கள் கூறியுள்ளது போல் என்ன தான் வார்த்தைகளும் வாக்கியங்களும் அமைத்து ஒரு விஷயத்தை விளக்கினாலும் ஒரு படம் அவ்வளவு விஷயங்களையும் எவ்வளவு அற்புதமாக எடுத்துரைத்து விடுகிறது! அன்றைய நாட்கள் திரும்ப வருமா என்று நீங்கள் ஏக்கத்துடன் கேட்டிருப்பது அந்தக் காலங்களில் நாம் எவ்வளவு சந்தோஷமாக சுற்றித் திரிந்தோம் என்பதை உள்ளடக்கியுள்ளது. சந்தோஷங்களை நமக்கு அள்ளிக்கொட்டிய அந்த அருமை நாயகனுக்குத்தான் அவ்வளவு பெருமைகளும் போய்ச் சேரும்.
-
டியர் வினோத் சார்,
'கம்பீரத் திலகம்' கலந்து கொண்ட ஏ.வி.எம் நிறுவன் விழாவின் ஸ்டில்கள் ஒவ்வொன்றும் கண் கொள்ளாக் காட்சிகள். நடிக தெய்வத்திற்குத்தான் அந்த தூய வெள்ளை கதாரடை எவ்வளவு பாந்தமாகப் பொருந்துகிறது அவர் வெள்ளை மனது போல! அற்புதமான ஸ்டில்களுக்கு ஆழ்ந்த நன்றிகள். அந்த விழாவின் வீடியோக் காட்சிகள் தங்களிடம் உள்ளனவா?
தெய்வப் பிறவியின் புகழ் பெற்ற ஸ்டில்லை பதிப்பித்தமைக்கு மிக்க நன்றி! நடிகர் திலகம் குடையை பின்னால் பிடித்துக் கொண்டு ssr ஐ
விடும் அந்த 'லுக்' குக்காகவே லட்சம் முறை இந்த ஸ்டில்லை கண்டு அனுபவித்து மகிழலாம். அதே போல இருதிலகங்களும் தத்தம் அன்பு மனைவியரோடு நிற்கும் புகைப்படம் இதுவரை காணாதது. அதற்கு என்னுடைய ஸ்பெஷல் நன்றிகள்.
-
அன்பு கார்த்திக் சார்,
நன்றிகள் பல. வாவ்!. எங்க மாமா பற்றிய விளக்கங்கள் டாப்பிலும் டாப். சும்மா டாக்ஸிக்காரனின் மீட்டர் போல ஸ்பீடோ ஸ்பீட். இரு தயாரிப்பாளர்களுக்கும் நடந்த பனிப்போரை பக்காவாக விளக்கி விட்டீர்கள். எத்தனை உள்குத்துக்கள் நடந்திருக்கின்றன? நீயா நானா போட்டிகள், விட்டேனா பார் என்ற சவால்கள், போட்டியில் சற்று பின்வாங்கியவர் மறுபடியும் மண்ணைக் கவ்விவிடுவார் என்ற தவறான கணிப்பு, தராசுத் தட்டு ஒருபக்கமாகவே சாயாது மறுபக்கமும் சாயும் என்று தெரிந்து புரிந்து கொள்ளாத அறியாமை, சூது வாது சூழ்ச்சிகள், இடையில் எனது உயிர்ப்படமான 'ஞானஒளி' பண்ணிய ரகளை, 'பட்டிக்காடா பட்டணமா'வின் பட்டி தொட்டி படு வெற்றி என அனைத்தையும் ஒரு சேரத் தொட்டு விட்டீர்கள். அற்புதமாக வெளிவராத பல உண்மைகளை வெளிச்சத்திற்கு கொண்டு வந்துள்ளீர்கள். இதற்குத்தான் எங்கள் கார்த்திக் சார் வேணுமென்பது.
சபாஷ் சார்! நிறைய விஷயங்களை தங்கள் உன்னதப் பதிவு மூலம் தெரிந்து கொண்டோம். இப்போது என்னையே நான் பாராட்டிக் கொள்கிறேன். எங்க மாமா பதிவை தற்செயலாக நான் போடப் போனதினால் தானே இப்படி ஒரு அற்புத விஷயங்களைக் கொண்ட கட்டுரையை தங்களிடமிருந்து இன்று பெற முடிந்தது? (இன்றில்லா விட்டாலும் என்றாவது ஒருநாள் பதியத்தான் போகிறீர்கள்) கவிழ்ந்து போன கனகசபை அன்புச் சகோதரர்களை வைத்து அருமையாக மீண்டும் நல்ல காசு பார்த்தார்.
-
ஹரீஷ் சார்,
ஹேப்பி...ஹேப்பி...ஹேப்பி.
நன்றி...நன்றி...நன்றி.
எப்போது நமது அடுத்த 'சந்திப்பு'?