Quote:
எனக்கு ஒன்று புரிவதேயில்லை.புரியவும் இல்லை.
நமக்குள் வரும் கருத்து மோதல்களை விடுங்கள்.தெளிவான ரசிகர்களை கொண்டதால் விளையும் முரண்,அது சார்ந்த கர்வங்கள்,மான பிரச்சினைகள்.இது குடும்பத்துள் அண்ணன் தம்பி பிரச்சினை.இது ஒரு ஆரோக்கியமான சுவாரஸ்யம் நிறைந்த செல்ல மோதல்கள்.
ஆனால் இங்கு நம் திரிக்கு மட்டும் சந்தேகமான நபர்கள் வந்து அதை செய்,இதை செய்யாதே என்று குழப்பம் விளைவிப்பது.பல நகைப்புக்கிடமான விஷயங்கள்,மூட தனங்கள் நிறைந்த இடங்களில் யாரும் சென்று எதையும் சொல்லாத போது நமக்கு மட்டும் என் இந்த கட்டுப்பாடுகள்,சட்ட திட்டங்கள்?பதிவர்களை அவமான படுத்தி திட்டமிட்டு விரட்டுவது போன்ற திரிசம வேலைகள்?
என்னை,ராகவேந்தரை,வாசுவை,முரளியை ,கார்த்திக்கை விடுங்கள்.நாங்கள் போட்டு கொள்ளாத சண்டைகள் இல்லை,விவாதங்கள் உண்டு.ஆனாலும் தெளிவாக சில விஷயங்கள் உண்டு.
1)நாங்கள் அனைவருமே பங்களிப்பாளர்கள்.
2)திரிக்கு சுவை கூட்டி,மெருகேற்றி,பார்வையாளர்களை ஈர்த்து,நடிகர்திலகத்தை பற்றி மேலும் புரிந்து கொள்ள உதவும் குழு.
3)எங்கள் நோக்கம் ஒன்றே ஒன்று.-நடிகர்திலகம் மட்டுமே பிரதானம்.
4)எங்கள் அனைவரிடமே,சொல்ல விஷயங்கள் இன்னும் உண்டு.மெருகேற்றி ,சுவையாக,creative ஆக செய்யும் திறம் உண்டு.
இதில் எங்கே வந்தது ஆக்ரமிப்பு? எங்களுக்கு மட்டும் என் ஆயிரம் கட்டளைகள்,நிர்பந்தங்கள்?
அதுவும் ,பங்களிப்பாளர் அல்லாத மற்றவர்களிடம் இருந்து?
வாசு மற்றும் என் போன்றவர்கள் நொந்து வெளியேறுவதால் திரிக்கு நன்மை உண்டா?வேறு யாரேனும் எங்கள் இடத்தை எடுத்து கொண்டு பணியாற்றினால் மகிழ்ச்சியே.ஆனாலும் அதுவும் நேர்வதாக தெரியவில்லை.
சரி.கொஞ்சம் சுவை கூட்டலாம் என்று பார்த்தால் ஒரு முக்கிய நண்பர் வந்து நாங்கள் ரசிக்கும் மனநிலையில் இல்லை என்கிறார். சிவாஜியை பற்றி சொல்வதற்கும் ,சுவைப்பதற்கும் என்னைய்யா மனநிலை?கோவிலுக்கு செல்லும் மனநிலைதானே?சுகம்,துக்கம் இரண்டிலும் ஆசுவாசம் தர கூடியதுதானே?
மன வருத்தத்துடனே பதிவு செய்கிறேன்.
வாசு,ராகவேந்தர்,கார்த்திக்,முரளி,சாரதி போன்றவர்கள் உடனே வருவது,நாம் கட்டி காத்த கோயில் பாழடையாமல்,திருப்பணி செய்வதற்கு ஒப்பானது.வாருங்கள்.என் அன்பு வேண்டுகோள்