http://i57.tinypic.com/xaurfn.jpg
Printable View
http://i60.tinypic.com/20gz5tw.jpg
படப்பிடிப்பை தொடங்கிவைக்கும் தலைவர். பக்கத்தில் நடிகர் பாண்டியராஜன்
ஏன் தலைவர் மீது எனக்கு இவ்வளவு பற்று ? தலைவர் முதல்வர் ஆனபோது ! நான் அரக்கோணம் ரயில்நிலையத்தில் துப்புரவுப் பணியாளராக வேலை செயிதுகொன்ன்டு இருந்தேன் 1980 என்று நினைக்கிறேன் ! தலைவர் கொள்ளூர் மூகம்பிகையை தரிசனம் செய்துவிட்டு அதிகாலையில் ஆறுமணிக்கு ரெயிலில் சென்னைக்கு திரும்பிக்கொண்டு இருந்தார் ! வண்டி அரக்கோணம் ரெயில் நிலையத்தில் நின்றது தகவல் அறிந்த தொண்டர்கள் தலைவரை பார்க்க கூடிவிட்டார்கள் சிறு கூட்டம்தான் ! உதவியாளர் தலைவருக்கு தகவல் சொல்கிறார் ! என்தலைவன் சிரித்த முகத்துடன் வெளியில் வருகிறார் கூட்டத்தை பார்த்து கும்பிடுகிறார் !!!!!
பெருக்கிக்கொண்டு இருந்தநான் இரு துடைப்பங்களையும் என் முதுகின்மேல் வைத்துகொண்டு கூட்டத்தில் முண்டியடித்துக் கொண்டு தலைவரிடம் கையை நீட்டினேன் எட்டவில்லை ! என் துடைப்பங்களையும் கோலத்தையும் பார்த்த தலைவர் மற்ற கைகளை எல்லாம் தட்டிவிட்டு என் கையை பிடித்து இழுத்து எனக்கு கையை தருகிறார் மற்றவர்கள் எல்லாம் என்னை ஒரு ஹீரோ மாதிரி பார்க்கிறார்கள் ! தலைவர் என்னை மட்டுமே பார்த்து சிரித்துகொண்டே கையை ஆட்டுகிறார் ! வண்டி புறப்பட்டுவிட்டது ! அவருக்கு கொடுத்த கையை முகர்ந்தேன் ! சந்தன வாசம் அந்த நாள் முழுக்க போகவில்லை
அன்று முதல் தலைவரின் தொண்டன் ஆகிவிட்டேன் நண்பர்களே
courtesy net
4.6.2015
http://i61.tinypic.com/1e15l5.jpg
பின்னால் அமர்ந்திருப்பவர் திரு விஜயன்
மக்கள் திலகத்தின் மரு மகனும் , மன்னாதி மன்னன் பத்திரிகை ஆசிரியருமான திரு விஜயன் அவர்களின் 7 வது ஆண்டு நினைவு நாள் .
1980 பாராளுமன்ற தேர்தலில் அதிமுக இரண்டு இடங்களில் வெற்றி பெற்றதை முன்னிட்டு அன்றையகாங்- திமுக கூட்டணி தலைவர்கள் ''முடிந்தது எம்ஜிஆர் அத்தியாயம் '' என்று எல்லையில்லாஆனந்தத்தில் எள்ளி நகையாடினார்கள் துள்ளி வருகுது வேல் என்று விளம்பரம் தந்தார்கள் .
மக்கள் திலகம் எம்ஜிஆர் எதை பற்றியும் கவலை படாமல் மக்களை நேரில் சந்தித்து வாக்கை கேட்டார் . 1980 சட்ட சபை தேர்தல் நடந்த நேரத்தில் வெற்றி நமதே என்று போஸ்டர்ஸ் தயார் செய்து விட்டார்கள் . தேர்தல் முடிவும் வந்து விட்டது .''வெற்றி தேவதை ''வழக்கம் போல் மக்கள் திலகம் எம்ஜிஆருக்கு கிடைத்தது .மக்கள் திலகம் இரண்டாவது முறை மீண்டும் முதல்வரானார் . கனவில் மிதந்தவரை ''இன்று போல் என்றும் வாழ்க'' வாழ்த்தினார்கள்
கண்புரை அறுவை சிகிச்சை செய்து, சிறிது ஓய்வுக்குப் பின் புரட்சித் தலைவரின் அரிய புகைப்படங்களோடு பதிவுகளைத் துவங்கியிருக்கும் பேராசிரியர் திரு.செல்வகுமார் அவர்களுக்கு வாழ்த்துக்கள். நன்றிகள். இந்த படங்களை பார்த்த பிறகு எங்களுக்கு கண் பளிச்சென்று தெரிவது போன்ற உணர்வு. நன்றி சார்.
அன்புடன் : கலைவேந்தன்
சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்
நண்பர் திரு.முரளி ஸ்ரீனிவாஸ் அவர்களுக்கு,
நானும் அரசியல் பற்றிய கட்டுரைகளில் தகவல் பிழைகள் இருந்தாலும் சுட்டிக்காட்ட விரும்புவதில்லை. நண்பர் திரு.குமார் அவர்களுக்கு நீங்கள் அளித்துள்ள விளக்கத்தில் புரட்சித் தலைவர் பற்றி குறிப்பிட்டுள்ளீர்கள் என்பதால் சொல்ல விரும்புகிறேன். அதில் தகவல் பிழை என்று சொல்லவில்லை. ஆனால், தவறான அர்த்தம் வரும் அபாயம் உள்ளது.
//தஞ்சை தொகுதியை தேர்வு செய்ததும், முதலில் ஆதரவு தருவதாக சொன்ன எம்ஜிஆர் அவர்கள் பிறகு சட்டம் ஒழுங்கு பிரச்சனையை காரணம் காட்டி இந்திராகாந்தி அவர்கள் வேட்பாளராவதற்கு தருவதாக சொன்ன ஆதரவை விலக்கி கொள்ள பிறகு சிங்காரவடிவேலு போட்டியிட்டது பற்றியெல்லாம் இங்கே நிறைய பேசியிருக்கிறோம். //
என்று கூறியுள்ளீர்கள். இந்திரா காந்தி அம்மையாருக்கு முதலில் ஆதரவு தருவதாக சொன்ன புரட்சித் தலைவர் பின்னர் ஆதரவு தர மறுத்தது (தஞ்சையில் மட்டும்) உண்மை. தஞ்சையில் இந்திரா காந்தி போட்டியிட்டால் அவரை எதிர்த்து கருணாநிதி போட்டியிடுவார் என்று செய்திகள் வெளியாகின. அப்படி போட்டியிட்டால், சட்டம் ஒழுங்கு பிரச்சினை ஏற்படும் என்பதால் இந்திராகாந்திக்கு (தஞ்சையில் மட்டும்) ஆதரவு தர முடியாது என்று புரட்சித் தலைவர் கூறினார்.
அதற்கு 2 ஆண்டுகளுக்கு முன் மதுரைக்கு இந்திரா காந்தி அம்மையார் வந்தபோது நடந்த கொலைவெறித் தாக்குதலும் பலர் படுகாயமடைந்ததும் திரு.நெடுமாறன் அவர்கள் இந்திராவை காப்பாற்றியதும், காங்கிரஸ் பிரமுகர் அப்துல் காதர் என்பவருக்கு கண்பார்வை போனதும் யாவரும் அறிந்ததே. அதுபோன்ற பயங்கரம் மீண்டும் நடந்துவிடக் கூடாது என்பதால்தான், தஞ்சையில் (மட்டும்)இந்திராவுக்கு புரட்சித் தலைவர் ஆதரவு தர மறுத்தார். நிலைமைகளை புரிந்து கொண்டு இந்திராவும் போட்டியிடவில்லை.
அதே நேரம், சிக்மகளூர் தொகுதியில் போட்டியிட்ட இந்திரா காந்திக்கு புரட்சித் தலைவர் ஆதரவு தந்ததோடு திரு.முசிறிப்புத்தன் தலைமையிலான குழுவை தேர்தல் பணிகளுக்காக அனுப்பி வைத்தார். அவர்களது தேர்தல் பணிகளுக்காக பின்னர், அவர்களை இந்திரா காந்தி பாராட்டினார் என்பதும் உண்மை.
‘சட்டம் ஒழுங்கை காரணம் காட்டி தஞ்சையில் இந்திராகாந்தி அம்மையாருக்கு ஆதரவை புரட்சித் தலைவர் விலக்கிக் கொண்டார்’ என்று மட்டுமே சொன்னால், அவர் வார்த்தை மாறிவிட்டார் என்பதுபோல தவறான அர்த்தம் வருகிறது. அப்படியே புரிந்து கொள்ளப்படும் அபாயமும் உள்ளது. என்பதற்காகவே இதை சுட்டிக்காட்ட வேண்டி வந்தது.
நீங்களும் சரியான முறையில் புரிந்து கொள்வீர்கள் என்று நம்புகிறேன்.
அன்புடன் : கலைவேந்தன்
சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்
புரட்சித்தலைவரின் நண்பராக ஒரு காலத்தில் இருந்த தி.மு.க தலைவர் அவர்களுக்கு இன்று பிறந்தநாள்.
http://i160.photobucket.com/albums/t...pslqizlerq.jpg
http://i160.photobucket.com/albums/t...psnop35yip.jpg
http://i160.photobucket.com/albums/t...psk0mvqbaz.jpg
Thanks to Ravi, FB.
திரு.முத்தையன் அவர்களுக்கு,
‘தலைவரின் ஆசியோடு மீண்டும் வந்து விட்டேன். தலைவர் காப்பாற்றுவார்’ என்கிறீர்கள். ‘என்னால் முடியவில்லை’ என்கிறீர்கள். என்ன ஆயிற்று உங்களுக்கு? உடல் நலனை பார்த்துக் கொள்ளவும்.
அன்புடன் : கலைவேந்தன்
சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்
நன்றி திரு.சைலேஷ் சார்,
அபூர்வமான பதிவு. திரு.கருணாநிதி அவர்கள் ஆற்றலாளர்தான். அறிவுக் கூர்மை மிக்கவர்தான். தலைவர் விஷயத்தில் மட்டும் அவர் தடம் மாறாமல் இருந்திருந்தால் தமிழகத்தின் நிலையே வேறு.
அன்புடன் : கலைவேந்தன்
சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்
Kalaivendhan Sir,
As regards what happened in 1980 Chepauk Guest House, AIADMK and DMK joining together, please watch the video [ audio Panruti S.Ramachandran]. I do not intend to hurt anyone,this is for info. only:
https://www.youtube.com/watch?v=EMMSGgR4Hgk
இனிய நண்பர் கலைவேந்தன்
திரு குமார் அவர்கள் தன்னுடைய பதிவில் 1980ல் நிலவிய அரசியல் சூழ்நிலையை கூறி இருந்தார் .தவறாக ஒன்றும் கூறவில்லை ..உங்கள் பதிலும் சரியாக இருந்தது .நேரம் கிடைக்கும் போதெல்லாம் எம்ஜிஆரையும் அவருடைய புகழையும் மறைமுகமாக தாக்கி பதிவிடுவதில் வல்லவர்கள் இருக்கத்தான் செய்வார்கள் .விட்டு விடுங்கள் .வராது , தெரியாது , புரியாது இது அவர்களின் தாரக மந்திரம் .
வெற்றி திருப்புகழ் வேந்தன்-பாட்டுடைத் தலைவன்-அற்புத நாயகன்-மக்கள் திலகம்- தெய்வம் எம்.ஜி.ஆர்.
http://i62.tinypic.com/bfm5nk.jpg
சத்ய தாயின் தவத்திரு அருள்வடிவே அன்பு திருஉருவே;
சதிலீலாவதி பெருமை சேர்த்த சாதனை வீரனே, அழகனே;
சரித்திரம் புகழ வந்த சக்ரவர்த்தி திருமகனே, முக்கால முதல்வனே
சரிநிகர் சமான சமநீதி ஏற்றுரைத்த மன்னாதி மன்னனே;
சத்துணவு திட்டம் தந்த சமத்துவ ஒளிவிளக்கே - நின்
சாம்ராஜ்யம் நிலைநாட்டிய நிருத்ய சக்ரவர்த்தியே.
சினிமா எக்ஸ்ப்ரஸ் செய்திகள் - ஜூன் 2015
http://i61.tinypic.com/afbjt5.jpg
http://i61.tinypic.com/raonet.jpg
http://i58.tinypic.com/f4r81h.jpg
http://i61.tinypic.com/2usd2s0.jpg
http://i59.tinypic.com/2woao8z.jpg
எஸ்வி சார்
வணக்கங்கள் !
மறைமுகமாக எதற்கு தாக்கவேண்டும் என்பது எனக்கு புரியவில்லை.
படித்த செய்தியில் தவறு இருப்பதாக தெரியவில்லை. அதற்காக இது வக்காலத்தும் இல்லை.
மனிதர்களை பொறுத்தவரையில் வராது, தெரியாது, புரியாது ரகம் உண்டு - அதில் தவறில்லை. முற்றும் துறந்தவர் உண்டு...அறிந்தவர் எவரும் இல்லை !
ஆனால் மனிதர்களில் சிலருக்கு வரும், தெரியும், புரியும், இருப்பினும் வந்தாலும், தெரிந்தாலும் புரிந்தாலும் இப்படிதான் ..என்பது தாரகமந்திரமாக இருகிறதே...அது தவறுதானே ! :-)
rks
http://i58.tinypic.com/2nta9s7.jpg
எனது தாயாரின் மறைவு செய்தி குறித்து, புகைப்படத்துடன் இரங்கல் செய்தி
பிரசுரம் செய்துள்ள இதயக்கனி ஆசிரியர் திரு. விஜயன் அவர்களுக்கு
நெஞ்சார்ந்த நன்றி.
இந்த செய்தியும், தகவலும் அறிந்த எனது சகோதர , சகோதரிகளும் , மற்றும்
குடும்பத்தினரும் , இதயக்கனி ஆசிரியர் திரு. விஜயனுக்கு நன்றி
தெரிவித்துள்ளார்கள்.
ஆர். லோகநாதன்.
இணை செயலாளர்,
அனைத்துலக எம்.ஜி.ஆர். பொதுநல சங்கம்.