-
1988ல் அதிமுகவின் இரட்டை இலை சின்னம் முடக்கப்பட்டதால் ஜா அணி - ஜெ அணி 1989 சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்டு தோல்வி அடைந்தது . தேர்தலுக்கு பின்னர் இரு அணிகளும் இணைந்த பின்னர் அதிமுகவின் வெற்றி சின்னம் - இரட்டை இலை மீண்டும் ஜெயலலிதா தலைமையில் கிடைத்தது . இந்திய அரசியல் வரலாற்றில் உடைந்த ஒரு கட்சிக்கு மீண்டும் கட்சியின் சின்னம் மற்றும் அங்கீகாரம் கிடைத்தது என்றால் அது புரட்சித்தலைவர் எம்ஜிஆர்
நிறுவிய அதிமுக இயக்கம் என்பது சாதனை .
அதிமுகவின் கதை முடிந்துவிட்டது என்று எள்ளி நகையாடிவர்கள் துவண்டு போகும் விதத்தில் மதுரை கிழக்கு மற்றும் மருங்காபுரி இடைதேர்தல்களில் அதிமுக வேட்பாளர்கள் பெரும் வித்தியாசத்தில் வெற்றி வாகை சூடினார்கள் .
மறைந்து 27 ஆண்டுகள் மேல் ஆனாலும் புரட்சித்தலைவரின் புகழ் - சக்தி - செல்வாக்குமக்கள் மன்றத்தில் இன்றளவும் குறையவில்லை என்பதற்கு 2014 பாராளுமன்ற தேர்தலில் அதிமுக 37/39 வெற்றி ஓர் சாட்சி .
-
So many best wishes to Any Time Emperor MakkalThilagam MGR., Centenery Functions hits a great success...
-
மக்கள் திலகம், புரட்சித் தலைவர், பொன்மனச்செம்மல் எம்.ஜி.ஆர் அவர்களின் நூற்றாண்டு தொடக்க விழா சிறக்க மனமார்ந்த வாழ்த்துக்கள். இதற்கான ஏற்பாடுகளைச் செய்த அத்தனை நல்உள்ளங்களுக்கும் பாராட்டுக்கள் , நன்றிகள். காலில் அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளதன் காரணமாக என்னால் இந்த சிறப்பு மிகுந்த விழாவில் கலந்து கொள்ள இயலவில்லை
-
மக்கள் திலகத்தின் மேடைப் பேச்சு அடங்கிய மிக மிக அபூர்வமான வீடியோவைப் பதிவிட்ட அன்பு நண்பர் வினோத் அவர்களுக்கு நன்றிகள். தமிழ் இந்து நாளிதழில் மக்கள் திலகத்தின் மாண்பை அருமையாகப் பதிவிட்டு வரும் நண்பர் ஸ்ரீதர்சுவாமிநாதன் அவர்களுக்கும் நன்றிகள். கடந்த வியாழன் அன்று பொதிகை தொலைக்காட்சியில் என்.எஸ்.கே அவர்கள் பற்றிய ஒரு சிறப்பு நிகழ்ச்சி ஒளிபரப்பட்டது. அதில் மக்கள் திலகம் அவர்கள் கலைவாணருடனும் அவர்களுடைய வாரிசுகளுடனும் கொண்டிருந்த நெருக்கத்தை நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டார்கள் திரு.கோலப்பன் அவர்களது துணைவியார். அதன் வீடியோ பதிவு கிடைத்தால் நமது திரியில் பதிவிட அன்புடன் வேண்டுகிறேன்.
-
ஞாபக மேகங்கள் …….
இருபது வயதில் என்னைத் தூங்கவிடாமல் செய்தது காதல் ;
எட்டு வயதில் என்னைத் தூங்கவிடாமல் செய்தவர் நீங்கள்.
கதைகளிலும் கனவுகளிலும் நான் கற்பனை செய்து வைத்திருந்த ராஜகுமாரன் நீங்கள் தான் என்று நினைத்தேன்.
உங்களின் இரட்டை நாடியின் பள்ளத் தாக்கில் குடியிருந்தேன்.
உங்கள் முகத்தின் மீது மீசைவைத்த நிலா என்று ஆசை வைத்தேன்.
நீங்கள் புன்னகை சிந்தும் போது நான் வழிந்தேன். வாள் வீச்சில் வசமிழந்தேன். உங்கள் பாடல்களில் நானும் ஒரு வார்த்தையுமாய் ; நானும் ஒரு வாத்தியமாய் ஆனேன்.
ஒரு தாளம் கட்டுமானத்தில் சிரிக்கும் உங்கள் சங்கீதச் சிரிப்பில் வார்த்தைகளில் பிசிறடிக்காத உங்கள் வசன உச்சரிப்பில் நான் கரைந்து போனேன்.
பெரியகுளம் ரஹீம் டாக்கீஸில் “நாடோடி மன்னன்”பார்த்துவிட்டு வீட்டுக்கு வந்து, தூக்கத்தைத் தொலைத்துவிட்டு, சுவரில் நசுக்கப்பட்ட மூட்டைப் பூச்சிகளின் ரத்தக் கோடுகளை அந்தப் படத்தில் வரும் கயிற்றுப் பாலமாய்க் கற்பனை செய்து கொண்டு விடிய விடிய விழித்திருக்கிறேன்.
“மன்னனல்ல மார்த்தாண்டன”என்று உங்களைப் போல் மூக்கில் சைகை செய்யப் போய் சுட்டுவிரல் நகம்பட்டு சில்லி மூக்கு உடைந்திருக்கிறேன்.
பிரமிக்க மட்டுமே தெரிந்த அந்தப் பிஞ்சு வயதில் எனக்குள் கனவுகளைப் பெருகவிட்டதிலும் கற்பனைகளைத் திருகிவிட்டதிலும் உங்கள் ராஜாராணிக் கதைகளுக்குப் பெரும்பங்கு உண்டு என்பதை நான் ரகசியமாய் வைக்க விரும்பவில்லை.
நூறு சரித்திரப் புத்தகங்கள் ஏற்படுத்த முடிந்த கிளர்ச்சியை உங்கள் ஒரே ஒரு படம் எனக்குள் ஏற்படுத்தியிருக்கிறது. அந்த பாதிப்பு எனக்கு மட்டும் இல்லை. குடை பிடித்துக் கொண்டவர்களையும் எங்கோ ஓர் ஓரத்தில் நனைந்துவிடுகிற அடைமழை மாதிரி உங்களை விமர்சித்தவர்களைக் கூட ஏதேனும் ஒரு பொழுதில் நாசூக்காக நனைத்தே இருக்கிறீர்கள்.
என்ன காரணம் என்று எண்ணிப் பார்க்கிறேன். நீங்கள் மந்திரத்தால் மாங்காயோ தந்திரத்தால் தேங்காயோ தருவித்தவரில்லை. வரலாற்று ரீதியாகவும் உளவியல் ரீதியாகவும் அகழ்ந்து பார்த்தால் மட்டுமே உங்கள் வெற்றியின் வேர்களை விளங்கிக் கொள்ள முடியும்.
இந்த மண்ணில் எங்கள் மனிதர்கள் சில நூற்றாண்டுகளாக எதை இழந்துவிட்டு நின்றார்களோ அதையே நீங்கள் தோண்டி எடுத்துத் துடைத்துக் கொடுத்தீர்கள் ; விறுவிறுப்பாய் விலைபோயிற்று.
உடலும் உயிரும் மாதிரி காதலும் வீரமும் கலந்தே விளைந்த களம் இந்தத் தமிழ் நிலம்.
காதலை ஒரு கண்ணாகவும் வீரத்தை ஒரு கண்ணாகவும் போற்றிய தமிழன், பொருளாதாரத்தை நெற்றிக் கண்ணாய் நினைக்காமல் போனான் என்பதே அவன் முறிந்து போனதற்கு மூல காரணம்.
பொருதாரச் சிந்தனைக்கே வராத தமிழன், காதலையும் வீரத்தையும் மட்டும் கோவணத்தில் முடிந்து வைத்த தங்கக் காசுகளைப் போல ரகசியமாய்க் காப்பாற்றியே வந்திருக்கிறான்.
இடைக்காலத்தில் தமிழன் அடிமைச் சகதியில் சிக்கவைக்கப்பட்டான்.
அடிக்கடி எஜமானர்கள் மாறினார்கள் என்பதைத் தவிர அவன் வாழ்க்கையில் மாற்றமே இல்லை.
அவனது வீரம் காயடிக்கப்பட்டது ; காதல் கருவறுக்கப்பட்டது.
இழந்து போன ஆனால் இழக்க விரும்பாத அந்தப் பண்புகளை வெள்ளித் திரையில் நீங்கள் வெளிச்சம் போட்ட போது இந்த நாட்டு மக்களின் தேவைகள் கனவுகளில் தீர்த்துவைக்கப்பட்டன.
வீராங்கன், உதயசூரியன், கரிகாலன், மணிவண்ணன், மாமல்லன்
என்றெல்லாம் நீங்கள் பெயர்சூட்டிக் கொண்டபோது தமிழன் தன் இறந்தகால பிம்பங்களைத் தரிசித்தான்.
நீங்கள் கட்டிப்பிடித்து கானம் படித்துக் காதலித்தபோது தமிழன் புதைந்து போன காதல் பண்பைப் புதுப்படித்துக் கொண்டான்.
நன்றி - கவிஞர் வைரமுத்து
என்ன ஒரு தீர்க்கதரிசனமான ஆய்வு வரிகள் .ஆயிரம் ஆய்வு கட்டுரைகள் எழுதுவதை விட நூறு வரி கவிதைகளே மக்கள் திலகத்தின் பெருமைகளை பறை சாற்றும் .
-
சமூகத்திற்குண்டான நல்ல கருத்துக்களை தன் படத்தில் இடம்பெற வைப்பது எம்.ஜி.ஆரின் பாணி. இப்படி, சினிமாவின் மூலம் எவ்வளவு கருத்துக்களையும் நல்ல விஷயங்களையும் மக்களிடத்தில் கொண்டு போய் சேர்க்க முடியுமோ. அத்தனையயும் தமது திரைப்படங்களின் வழி கொண்டு சேர்த்த பெருமை இவருக்கு உண்டு. அதே வேளையில் தமது திரைப்படங்களின் இடம் பெறும் பாடல்களும் குழந்தைகள், பெண்கள், உழைப்பாளிகள், பாட்டளிகள், இளைஞர்கள், பெரியோர்கள் என்று எல்லா தரப்பினருக்கும் நன்மையையும், தன்முனைப்பான விஷயங்களை எடுத்துணர்த்தும் வகையிலேயே எழுத செய்திருப்பார். தமது பாடல்களின் மூலம் தன்னம்பிக்கையை ஊட்டுவதுடன் பொதுவுடமைக் கொள்கையை எளிமையாக எடுத்துச் சொல்லி இருக்கிறார். மூட நம்பிக்கையைச் சாடியிருக்கிறார். இலக்கியத்தை எல்லா மக்களின் மனதிலும் பதியவைக்க முடியாது. சினிமா மூலம் தான் இதை எல்லா மக்களுக்கும் எடுத்துச் சொல்லமுடியும். இதற்கு, சினிமாவைவிடச் சிறந்த சாதனம் கிடையாது என்று நம்புகிறவர் எம்.ஜி.ஆர்..
வேட்டைக்காரன் - உன்னை அறிந்தால் நீ உன்னை அறிந்தால் உலகத்தில் போராடலாம்
நாளை நமதே - நாளை நமதே இந்த நாளும் நமதே, தாய்வழி தங்கங்கள் எல்லாம் நேர்வழி
சென்றால் நாளை நமதே
அன்னையிடம் நீ அன்பை வாங்கலாம், தந்தையிடம் நீ அறிவை வாங்கலாம் இரண்டும் இருந்தால் பேரை வாங்கலாம், பேரை வாங்கலாம்.
உலகம் சுற்றும் வாலிபன் - சிரித்து வாழ வேண்டும் பிறர் சிரிக்க வாழ்ந்திடாதே, உழைத்து வாழ வேண்டும் பிறர் உழைக்க வாழ்ந்திடாதே.
திருடாதே - திருடாதே பாப்பா திருடாதே வறுமை நிலைக்கு பயந்து விடாதே திறமை இருக்கு மறந்து விடாதே..!
மன்னாதி மன்னன் : அச்சம் என்பது மடமயடா.. அஞ்சாமை திராவிடர் உடமையடா! ஆறிலும் சாவு நூறிலும் சாவு தாயாகம் காப்பது கடமையடா..
படகோட்டி : கொடுத்ததெல்லாம் கொடுத்தான் அவர் யாருக்காக கொடுத்தார், ஒருத்தரக்கா கொடுத்தார் இல்லை ஊருக்காக கொடுத்தார்.
இப்படி எத்தனை எத்தனை பாடல்கள்.. எல்லாமே சமுதாய பற்றோடு மக்களுக்காக கொடுக்கப்பட்ட பாடல்கள். அன்று எழுதப்பட்ட இந்த கருத்தாழமிக்க பாடல்கள் இன்றைய நவீன காலத்திலும் நம் இதயங்களில் இளையோடுகிறது. சமுதாய பாடல்களைத் தவிர்த்து எம்.ஜி.ஆரின் காதல் பாடல்களை பற்றி சொன்னால் அது தித்திக்கும் தேன் போல் இருக்கும். அத்தனையும் முத்தான காதல் பாடல்கள். இந்த வெற்றிக்கெல்லாம் மிக முக்கியானவர்கள் இசையமைப்பாளர்கள் விஸ்வநாதன் ராமமூர்த்தி, கவிஞர் கண்ணதாசன், வாலி, பாடகர்கள் டி.எம்.எஸ். செளந்தராஜன், பி.சுசீலா கூட்டணி. இந்த கூட்டணிக்காகவே எம்.ஜி.ஆர். படங்களின் பாடல்களை பார்க்க திரையரங்கம் சென்ற கூட்டம் உண்டு.
எம்.ஜி.ஆர். நடித்த 50 படங்களுக்குப் பாடல்கள் எழுதியவர் கண்ணதாசன். கவிஞர் வாலி, பாபநாசம் சிவன், கலைஞர் கருணாநிதி, உடுமலை நாராயணகவி, பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம், சுரதா, அ.மருதகாசி, ஆலஙகுடி சோமு ஆகியோர் எம்.ஜி.ஆரின் பாடல்களின்மூலம் மக்களைக் கவர்ந்தவர்களாவர்.
courtesy - net
-
தமிழ் சினிமாவின் முதல் pro (படம் மக்கள் திலகத்தின் நாடோடி மன்னன்) பிலிம் நியூஸ் ஆனந்தன் இன்று சென்னையில் காலமானார். அன்னாரின் குடும்பத்தாருக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துகொள்கிறோம்.
-
-
-
-
-
-
-
-
-
மக்கள் தலைவர் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா கடந்த ஞாயிறு அன்று (20/03/2016) காலை 10 முதல் இரவு 10 மணி வரை இடைவிடாது , சென்னை காமராஜர் அரங்கில் வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டது. புகைப்படங்களின் தொகுப்பு , நமது
நண்பர்களின் பார்வைக்கு.
http://i63.tinypic.com/osfol4.jpg
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
மக்கள் திலகம் எம்ஜிஆரின் ''திருடாதே '' இன்று 55 ஆண்டுகள் நிறைவு தினம் .
23.3.1961 அன்று வெளிவந்து திரை உலகில் சமூக புரட்சியினை உண்டாக்கிய மாபெரும் வெற்றி காவியம் . சென்னை பிளாசா - பாரத் - மகாலட்சுமி அரங்குகளில் 100 நாட்களுக்கு மேல் ஓடிய வெற்றி காவியம் .
-
-
இந்த உலகில் இரண்டே இரண்டு சக்திகள்தான் மிகுந்த பலம் வாய்ந்தவையாக இருக்கின்றன. அவை கத்தியும், புத்தியும் தான். ஆனால் போகப்போக கத்தியின் சக்தி எப்போதும் அறிவின் பலத்திற்கு முன்னால் தோற்றுப்போய் விடுகிறது.”
மாவீரன் நெப்போலியன் போனபார்ட்
வருடம் 1961. மார்ச் மாதம் 23ஆம் தேதி - மக்கள் திலகம் எம்.ஜி.ஆர் நடித்த "திருடாதே" படம் வெளிவந்தது. கவிஞர் கண்ணதாசனின் சகோதரர் திரு. ஏ.எல். சீனிவாசன் அவர்கள் தயாரித்த இந்தப் படத்தில் எம்.ஜி.ஆருக்கு இணை சரோஜாதேவி. இந்தப் படத்துக்கு கதை வசனம் கண்ணதாசன் எழுதினர். இசை அமைத்தார் எஸ்.எம். சுப்பையா நாயுடு.
"திருடாதே" படத்தின் மாபெரும் வெற்றி எனது திரை உலக வாழ்வுக்கு ஒரு திருப்புமுனையாக அமைந்தது" என்று தனது சுயசரிதையில் எம்.ஜி.ஆர். குறிப்பிட்டிருக்கிறார்.
ஒரு மக்கள் நாயகனாக, ஏழைகளின் பாதுகாவலனாக, கஷ்டப்படுபவர்களின் காவல் தெய்வமாக அவர் மக்கள் மத்தியில் உருவாவதற்கான வலுவான பார்முலா இந்தப் படத்தில் தான் உருவானது எனலாம். இதற்கு முன்பே என் தங்கை, மலைக்கள்ளன், தாய்க்கு பின் தாரம் ஆகிய படங்கள் வெளிவந்து இருந்தாலும் அவருக்கென்று ஒரு தனி பார்முலாவில் படங்கள் உருவாவதற்கு காரணமாக அமைந்த படம் "திருடாதே" படம்தான்.
இந்தப் படத்தில் பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரம் எழுதி டி.எம்.எஸ். பாடிய பாடல் "திருடாதே பாப்பா திருடாதே" பாடல். சின்னஞ்சிறுவர்கள் மனதில் அழுத்தமாக பதிவாகும் அற்புத வரிகளை பாடலாசிரியர் அமைக்க அதற்கு படம் வெளிவந்து ஐம்பது ஆண்டுகளைக் கடந்த பின்னாலும் நிலைத்திருக்கும் வண்ணம் அதி அற்புதமாக இசை அமைத்திருக்கிறார் எஸ்.எம். சுப்பையா நாயுடு.
பய உணர்ச்சி மழலை பருவத்தில் தானே ஆரம்பிக்கிறது. அப்போதே தன் திறமையின் மீது நம்பிக்கையை ஊட்டிவிட்டால்..? அவர்கள் வளரும்போது அந்த தன்னம்பிக்கையும் கூடவே வளர்ந்து விடுமே .. இதைத்தான் பாடலின் பல்லவியிலேயே கல்யாணசுந்தரம் ஊட்டிவிடுகிறார்
"திருடாதே பாப்பா திருடாதே - வறுமை நிலைக்கு பயந்துவிடாதே. திறமை இருக்கு மறந்துவிடாதே" -
சுப்பையா நாயுடுவின் இசையில் டி.எம்.எஸ். அவர்களின் குரலும் குழந்தைகளிடம் பரிவையும் கனிவையும் காட்டுகிறது. அற்புதமான ஆடம்பரமில்லாத ஆர்ப்பாட்டமில்லாத எளிமையான இசையும், பாவம் ததும்ப டி.எம். சௌந்தரராஜன் பாடியிருக்கும் விதமும் பாடலை நிலை நிறுத்தி இருக்கிறது.
பாடல் மேலும் வளர்கிறது :
"சிந்தித்து பார்த்து செய்கையை மாத்து. சிறுசாய் இருக்கையில் திருத்திக்கோ
தவறு சிறுசாய் இருக்கையில் திருத்திக்கோ.
தெரிஞ்சும் தெரியாம நடந்திருந்தா அது திரும்பவும் வராம பாத்துக்கோ - திருடாதே பாப்பா திருடாதே."
எத்தனை எளிமையான அதே சமயம் குழந்தைகளுக்கு சொல்லவேண்டுமே என்ற கவனத்தோடு புனையப்பட்ட வார்த்தைகள்.
தவறுகளை திருத்திக்கொள்வதற்கும் அது திரும்பவும் வராமல் கவனமாக இருக்கவும் பாடலை அமைக்கும் போது பாடகரின் குரலும் பாடல் வரிகளை உணர்த்து பாடுகிறது. அந்த கருத்தை கவனமாகப் பதியவைக்கும் வகையில் இசை அமைப்பும் அமைந்து இருப்பது பாடலின் சிறப்பு.
"திட்டம் போட்டு திருடுற கூட்டம் திருடிக்கொண்டே இருக்குது.
அதை சட்டம் போட்டு தடுக்குற கூட்டம் தடுத்துக்கொண்டே இருக்குது. - என்கிற கவிஞர் திருட்டை ஒழிப்பதென்பது
" திருடனாய்ப் பார்த்து திருந்தாவிட்டால் திருட்டை ஒழிக்க முடியாது" - என்ற நிதர்சனமான உண்மையையும் பாடலில் உரைக்கிறார். எக்காலத்துக்கும் பொருந்தும் வரிகள்.
மனம் கண்டதையும் நினைக்காமல் இருக்க என்ன வழி?. பாடலின் கடைசி சரணத்தின் வரிகளில் டி.எம்.எஸ். அவர்களின் குரலை மெல்ல மெல்ல உச்சத்தில் ஏற்றி அழுத்தமாகப் பதிவு செய்கிறது பாடல்.
"உழைக்கிற நோக்கம் உறுதியாயிட்டா கெடுக்குற நோக்கம் வளராது - மனம் கீழும் மேலும் புரளாது."
அளவான இசைக்கருவிகளைப் பயன்படுத்தி ஒரு அற்புதமான பாடலைக் கொடுத்திருக்கிறார்
courtesy- c.s.kumar
-
தமிழகத்தை திரும்பி பார்க்க வைத்த திருடாதே திரைப்படம்..
ஆம். அன்றைய சூழலில் சமூகத்தில் நிலவி வந்த திருட்டு என்னும் அவலத்தை, திருத்தும் நோக்கோடு, அழகிய, ஆழமான திரைக்கதையில் மக்களுக்கு எடுத்துக்காட்டிய படம். சட்டங்கள் மூலமாகவோ, கடுமையான தண்டனைகள் வாயிலாகவோ திருட்டு என்னும் குற்றத்தை குறைக்க முடியாது.
திருடர்களின் மனமாற்றத்தின் மூலமே சமூகத்தில் இந்த குற்றத்தை குறைக்க முடியும் என்ற உயரிய சிந்தனையை தனக்கே உரித்தான இயல்பான நடிப்பால் வெளிபடுத்திய சிறந்த திரைப்படம்..இந்த திரைப்படம் அந்த கால கட்டத்தில் பெரிய சமூக மாற்றத்தை ஏற்படுத்தியதை யாராலும் மறுக்க முடியாது. அந்த சமூக மாற்றம் ஒரு திரைப்படத்தின் மூலம் சாத்தியம் என்ற அதிசயத்தால்தான் தமிழகம் இத்திரைப்படத்தை உற்று நோக்க ஏதுவானது.
பொது உடமைவாதியான எழுச்சிகவிஞர் பட்டுகோட்டையார் தன்னுடைய பொதுஉடைமை கொள்கை பாடல்களை யார் மூலம் பரப்பலாம் என்று நினைத்தபோது அதற்கு பொருத்தமானவர் உண்மையிலே பொது உடமை கொள்கை கொண்ட எம்ஜிஆர் என்பதை உணர்ந்தார். அதனால் தன்னுடைய பெரும்பாலான பாடல்களை தலைவரின் படங்களிலே இடம் பெற செய்தார்..
அதே போல் தலைவர் அவர்களும் பட்டுக்கோட்டையாரை மிகவும் மதித்து அவர் இருக்கும் வரை அவரது பாடல்களை தன்னுடைய படங்களில் இடம் பெற செய்தார். கவிஞரின் பாடல்களிலே மிகவும் சிறப்பு வாய்ந்த, நமது தெய்வத்திற்கு மிகவும் பிடித்த பாடலான "திருடாதே பாப்பா திருடாதே" என்னும் சமூக சீர்திருத்த பாடல் இடம்பெற்ற படம்தான் திருடாதே.
இந்த பாடல் பட்டி தொட்டி எங்கும் ஒலித்து ஒரு பெரிய சமூக மாற்றத்தையே ஏற்படுத்தியது..இன்னும் சொல்ல போனால் இந்த பாடலின் வரி தமிழ் மக்களுக்கு தாரக மந்திரமாகவே விளங்கியது..இன்றும் விளங்கிகொண்டிருக்கிறது..இன்று கூட திருட்டு குற்றங்களைப் பற்றி யார் பேசினாலும் 'திருடனாய் பார்த்து திருந்தாவிட்டால் திருட்டை ஒழிக்க முடியாது' என்பதை ஒப்புக்கொண்டுள்ளனர்..
இன்றைக்கும் யாராலும் ஏற்றுகொள்ளப்பட்ட கருத்தை அன்றே சொன்னவர்தான் நம் தலைவர்..அதனால்தான் அவர் புரட்சித் தலைவர்..
இந்த படத்தில் திருமதி சரோஜா தேவி நடிக்கும்போது, ஒரு கட்டிலை சுற்றி ஓடி காட்சி எடுத்தபோது அவருடைய காலில் கண்ணாடி துண்டுகள் குத்தி ரத்தம் கொட்டியது..காட்சிக்கு நடுவே சொன்னால் யாராவது ஏதாவது சொல்ல போகிறார்கள் என்று திருமதி சரோஜா தேவி அவர்கள் தொடர்ந்து நடித்துக்கொண்டே இருந்தார்
..அவருடைய காலில் வந்த ரத்தத்தை யாரும் கவனிக்காதபோது. நமது தலைவர் பதறிப்போய் காட்சியை நிறுத்த சொல்லி திருமதி சரோஜா தேவி அவர்களின் அடிபட்ட காலை கைகளால் பிடித்து மடிமீது வைத்து காலில் குத்திய கண்ணாடி துண்டுகளை எடுத்து சிகிச்சை செய்தார்..திருமதி சரோஜாதேவி அவர்கள் பதறிப்போய் மதிப்பிற்குரிய ஒரு பெரிய நடிகர் ஒரு சிறிய நடிகையின் காலைத்தொட்டு சிகிச்சை செய்வதா என்று மறுத்த போதும்., அவரிடம் இனிமேல் இப்படி எல்லாம் செய்ய கூடாது..ஏதாவது விபத்து என்றால் சொல்லவேண்டும் என்று அறிவுரை கூறினார்..மேலும் அந்த காட்சியை ரத்து செய்து கால் குணமான பின் நடிக்க வைத்தார்..அதனால்தான் திருமதி சரோஜாதேவி அவர்கள் நமது தலைவரை 'எனது தெய்வம்' என்று அழைத்தார்.
சக நடிகரின் பாதுகாப்பில் அவர் எப்படி கவனம் செலுத்தினார் என்பதற்கும், அனைவரையும் அவர் சமமாக பாவிக்கும் தன்மைக்கும் இந்நிகழ்ச்சி ஓர் எடுத்துக்காட்டு..இதைப்போல் கோடிகணக்கான நிகழ்சிகள் தலைவரின் வாழ்க்கையில் உள்ளது.
மேலும். இந்த படத்தில் தலைவரின் இயல்பான நடிப்பு அனைவரையும் கவரும் விதத்தில் அமைந்தது..சமூக படங்களிலும் தலைவர்தான் நம்பர் ஒன் என்பதை அறிய வைத்த படம்..அதுவும் கிளைமாக்ஸ் சண்டையில் ஏற்படுத்திய புதுமை அனைவராலும் பாராட்டப்பட்டு..பல படங்களுக்கு முன்னோடியாக விளங்கியது..
-
திரையுலகிலும், அரசியல் வாழ்விலும் முறியடிக்க முடியாத சாதனைகளுக்குச் சொந்தக்காரர். ரசிகர்கள் இதயத்தில், குடியிருந்த கோயில். ஏழைகள் நெஞ்சில், எங்கள் வீட்டு பிள்ளை தமிழகத்தின் நிரந்தர தலைவன், தமிழ் நெஞ்சங்களில் நிரந்தர முதல்வர்- அந்த மூன்றெழுத்தை அறிந்து கொள்ள, இந்த வார்த்தைகளே போதும் கனவில் வந்தாலும் விசில் பறக்கும், திரையில் வந்தால் வசூல் பறக்கும் ஆம், எம்.ஜி.ஆர்., என்ற அந்த மூன்றெழுத்துக்கு, தமிழகம் தந்த சிம்மாசனம், விலை மதிக்க முடியாதது இருந்தாலும் மறைந்தாலும் பேர் சொல்ல வேண்டும் இவர் போல யார் என்று ஊர் சொல்ல வேண்டும், என்ற, பாடல் வரிகளை, தனக்கே சாத்தியமாக்கியவர். ரசிகர்களை தள்ளி நிற்க வைத்தே பார்க்கும் இதே சினிமா உலகில், அவர்களை கட்டித்தழுவி கரம் குலுக்கியவர், எம்.ஜி.ஆர்., ஒட்டுமொத்த தமிழகத்தையும், தன் பின்னால் கொண்டு வர, இவர் பயன்படுத்திய ஆயுதம் எது? அந்த வசீகர புன்னகையும், பண்புடன் இரு கரம் கை கூப்பும் அழகும், இரு விரல்கள் காட்டும் கம்பிரமூம், மக்கள் வெள்ளத்தை பார்த்து கை அசைக்கும் அழகும்....... அப்பப்பா வாழ்க்கையில் விவரிக்க முடியாத தருணங்கள் அந்த தருணத்தில் ஆர்பரிக்கும் கூட்டம், எண்ணிக்கையில் அடங்காது.
தன் வாழ்நாள் முழுவதையும், கலை, அரசியல், ஆட்சி, என, மக்களுக்காய் அர்ப்பணித்த, உன்னத நிகரற்ற மனிதர் எம்.ஜி.ஆர் 27 ஆண்டுகள் ஆனபின்பும் மக்கள் திலகம் என்னும் அந்த மாமனிதரின் மகிமை கொஞ்சமும் குறையாமல் இன்னமும் அப்படியே இருக்கிறது. அவரின் அன்பில் கோடான கோடி மக்கள் இன்னும் கரைந்து கொண்டுதான் இருக்கிறார்கள். கொடையுள்ளம், வீரம், தன்னம்பிக்கை, தீர்க்க தரிசனம், உழைப்பு, புன்னகை, தாய் மேல் கொண்டுள்ள பாசம், தமிழ் மேல் கொண்டுள்ள காதல், தமிழ் மக்கள் மேல் கொண்டுள்ள அன்பு……… எல்லாம் அவரின் அணிகலன்களாக இருந்திருக்கின்றன. நின்றால்...... பொதுகூட்டம், நடந்தால்........ ஊர்வலம், பேசினால்....... மாநாடு என்று வாழ்ந்த....... இந்த அற்புத மனிதரின் புகழ் உலகமுள்ளவரை இருக்கும் என்பதில் சிறிதும் ஐயமில்லை
courtesy - thiru chandran - france- dinamalar comments portion
-
இன்று 22.3.2016 மக்கள் திலகம் எம்ஜிஆர் திரியின் நெறியாளரும் , இனிய நண்பருமான திரு திருப்பூர் ரவிச்சந்திரன் அவர்களின் இனிய பிறந்த நாள் . அவருக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறேன் .
-
-
-
தேர்தல் திருவிழா -1
1977
மக்கள் திலகத்தின் அதிமுக இயக்கம் சந்தித்த முதல் சட்டமன்ற பொது தேர்தல் .
நான்கு முனைப் போட்டியில் புரட்சித்தலைவர் தனி பெரும்பான்மையுடன் வெற்றி பெற்று ஆட்சியை பிடித்தார் .மக்கள் திலகத்தின் செல்வாக்கு மாநிலம் முழுவதும் இருந்தது .குறிப்பாக சென்னை நகரம் மற்றும் கன்யாகுமரி மாவட்டங்கள் தவிர்த்து மற்ற மாவட்டங்களில் அதிமுகவின் செல்வாக்கு பெரும்பான்மை பலத்தில் இருந்தது .