-
எந்த உலக நடிகரும் நினைத்து பார்க்க முடியாத ராஷச மாலை அலங்காரம்.திலகத்தால் புத்துணர்ச்சி பெற்ற திரையங்கங்கள்.கட்சி ஆட்சி என்று எந்த அதிகாரம் இல்லாமல் தன் நடிப்பால் கோடிக்கணக்கான ரசிகர்களின் இதயத்தில் வீற்றிருக்கும் ஒரே நடிகர் நம் திலகம்.
http://oi66.tinypic.com/depmps.jpg
நன்றி Vasudevan .S
-
-
-
-
Thanks to Mr Vee Yaar. சின்ன ஜமீன் சமஸ்தானம் தமிழகம் முழுதுமே தன் ராஜ்ஜியத்தை அமோகமாக விரிவு படுத்து ஆட்சி செய்து கொண்டிருக்கிறது. நேற்றைய மாலைக் காட்சியில் ஆல்பர்ட் திரையரங்கம் அரங்கு நிறைவு கண்டு பலர் டிக்கெட் இல்லாமல் திரும்பியதாக செய்தி. இன்னும் சற்று முன்னதாகவே அரங்கு நிறைவு கண்டிருந்தால் வந்தவர்களை திருப்பி அனுப்பாமல் பேபி ஆல்பர்ட்டிலும் திரையிட்டு அவர்களுக்கு காட்சியை ஏற்பாடு செய்திருக்கலாம் என ஆல்பர்ட் நிர்வாகமே விரும்பியதாக செய்தி. நேற்று ம...ாலைக்காட்சியில் ஆல்பர்ட் திரையரங்கில் ரசிகர்களால் அன்புடனும் ஆர்வத்துடனும் பொழியப்பட்ட ஐந்து ரூபாய் நாணயங்களின் மதிப்பு ரூபாய் 60,000.00 என தகவல் வந்துள்ளது. மேலும் நேற்று பெங்களூரு ரசிகர்களால் நடிகர் திலகத்தின் கட்அவுட்டிற்கு சாத்தப்பட்ட மாலைகளுக்கான அனைத்து செலவினங்களின் மதிப்பு சுமார் ரூ 2.00 லட்சம் எனவும் கணக்கிடப்பட்டுள்ளது. ஆட்சியில்லை. அதிகாரமில்லை. பின்புலமில்லை. எதிர்பார்ப்புகளில்லை. முழுக்க முழுக்க அன்பின் அடையாளமாய் பாசத்தின் அடையாளமாய் ஒரு மனிதனுக்கு இவையெல்லாம் நிகழ்கிறது என்றால் அது இந்த உலகத்தில் ஒரே ஒருவருக்குத் தான் நடக்க முடியும். நிஜத்தமிழன் சிவாஜி கணேசனால் மட்டுமே இவற்றை நடத்த முடியும். அவருக்கு மட்டுமே நடக்க முடியும். 2ம் நூற்றாண்டில் 2019ல் மீண்டும் தன் ஆளுமையை நிலைநிறுத்த நடிகர் திலகம் தேர்ந்தெடுத்த நல்முத்து நாகராஜா அவர்கள் மிகப்பெரும் பாக்கியமும் புண்ணியமும் செய்துள்ளார். அவருக்கு இறையருளும் நடிகர் திலகத்தின் ஆசியும் பரிபூரணமாக உள்ளன. இது போல் மேலும் மேலும் பல முயற்சிகளில் அவர் ஈடுபடவேண்டும். ஒவ்வொன்றிலும் இது போன்ற சாதனைகளை நிகழ்த்தி வெற்றி பெறவேண்டும் என நாம் வேண்டுவோம். பாராட்டுக்கள் நாகராஜா சார். தங்களுக்கு ஒவ்வொரு சிவாஜி ரசிகனும் உளமார கடமைப்பட்டுள்ளோம். வாழ்த்துக்கள். நன்றி
https://scontent.fyyz1-1.fna.fbcdn.n...33&oe=5DBE6FCA
நன்றி Vsudevan .S
-
கலக்கிய சிவாஜி காமராஜ் கல்வி அறக்கட்டளை நிர்வாகிகள்....
குலுங்கிய மதுரை மிட்லண்ட் சினிமாஸ் திரையரங்கம்....
ஞாயிறு மாலை 6.00 மணிக் காட்சிக்கு 4.30 மணியிலிருந்தே குடும்பம் குடும்பமாக குவிந்த மக்கள்.
... உசிலம்பட்டி, தேனி, திருமங்கலம், விராட்டிபத்து, நாகமலைபுதுக்கோட்டை, பரவை போன்ற பகுதியிலிருந்து குவிந்த ரசிகர்கள்...
ரசிகர்களின் ஆரவாரத்தால் வியப்படைந்த
அப்பகுதி மக்கள் மற்றும் மாற்று முகாம் ரசிகர்கள்...
திரையரங்கு உரிமையாளர்
திரு.கே.வி.ஆர். கஜேந்திரன் அவர்களுக்கு சிவாஜி காமராஜ் கல்வி அறக்கட்டளை சார்பில் நினைவுப்பரிசு வழங்கப்பட்டது.
திருமதி கஜேந்திரன் அவர்களுக்கும் மரியாதை செலுத்தப்பட்டது.
ரசிகர்களின் உற்சாகத்தையும்,
நடிகர்திலகத்தின் படத்திற்கு கிடைத்த வரவேற்பையும் பார்த்து....
2 மாதத்திற்கு ஒரு நடிகர்திலகம் படம் திரையிடுகிறேன் என்ற உறுதிமொழி தந்த உரிமையாளர் அன்பு அண்ணன் திரு.கஜேந்திரன் அவர்களுக்கு உலகெங்கும் வாழும் கோடிக்கணக்கான சிவாஜி ரசிகர்கள் சார்பில் நன்றியை தெரிவிததுக் கொள்கிறோம்.
படத்தில் சிவாஜி காமராஜ் கலவி அறக்கட்டளை நிர்வாகிகள், நா.ரமேஷ்பாபு, கா.சுந்தரராஜன், மு.சோமசுந்தரம், நா.கிச்சு, சிவா மூவீஸ் வி.சி.சேகர், கோச்சடை ராஜா, பிரபு வெங்கடேஷ், சந்திரமோகன் ஆகியோர் உள்ளனர்.
http://oi67.tinypic.com/20zv9sy.jpg
நன்றி Sunder rajan
-
வசந்த மாளிகை கொண்டாட்டம்!!
http://oi68.tinypic.com/j8lcbc.jpg
நன்றி Sekar .P
-
-
-
அதிர்ந்தது ஆல்பட் திரையரங்கம், இதுவரை சென்னைகாணாத, கட்அவுட் பூமாலை அலங்காரம், மகிழ்ந்தது அனைத்து அய்யன் சிவாஜி கணேசன் அவர்களின் ரசிகர்களின் உள்ளங்கள் பெங்களூரில் மட்டும் இல்லை, சென்னை மாநகரில் உள்ள திரையரங்கில் திரையிட்டாலும் அரங்கம் அதிர்ந்தது என்று சொல்ல கூடிய அளவுக்கு, எங்கள் தெய்வம் சிவாஜி அவர்களின் புகழ் என்றும் மங்காமலும் மறையாமலும் நிலைக்க அயராது பாடுபட்டு கொண்டிருப்பவர்களின் பட்டியலில் அண்ணன் பெங்களூர் சிவாஜி ரவி, அவர்களின் பங்கும் உழைப்பும் நிறையவே இருக்கும். அதற்காக... அவரை எவ்வளவு பாராட்டினாலும் தகும், எங்களின் சார்பிலும், உலகத்தில் உள்ள எல்லா அய்யன் சிவாஜி கணேசன் அவர்களின் பக்தர்களின் சார்பிலும் கோடான கோடி நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம், அய்யன் சிவாஜி கணேசன் அவர்களின் புகழுக்காக அண்ணன் சிவாஜி ரவியுடன் சேர்ந்து பாடுபடும் திரு. மகி அண்ணன், திரு. நாராயணன் அண்ணன் அவர்களுக்கும் அய்யன் சிவாஜி கணேசன் அவர்களின் சினிமா ஆகட்டும், இல்லை எந்த ஒரு விழா ஆகட்டும் தன் சொந்த குடும்ப விழா போன்று எடுத்து நடத்தும் அண்ணன் பெங்களூர் சிவாஜி ரவி அவர்களையும் அவருடன் சேர்ந்து பணியாற்றி வருபவர்களுக்கும், எங்களின் சார்பில் மீண்டும் ஒரு முறை நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம். இப்படிக்கு தர்மசீலன் பிரபு ரசிகர் மன்றம் பெங்களூர்.
http://oi65.tinypic.com/205a3nt.jpg
நன்றி Ramesh prabhu
-
மதுரை மிட்லாண்ட் சினிமாஸில் வசந்தமாளிகை திரைப்படத்திற்கு மாபெரும் விழா எடுத்த
சிவாஜி காமராஜ் கல்வி அறக்கட்டளை.
அகிலஇந்திய சிவாஜி மன்றத்தின் செயற்குழு உறுப்பினர் செல்லுார் வெங்கடேசன் அவர்கள், அகிலஇந்திய சிவாஜி மன்றத்தின் சிறப்பு அழைப்பாளர் கோச்சடை ராஜா அவர்கள்.
வசந்தமாளிகை திரைப்படத்திற்கு வருகை தந்து ரசிகர்களுக்கு இனிப்பு வழங்கி சிறப்பு செய்தனர்.
... மிட்லாண்ட் சினிமாஸில் இளைஞர்கள் மற்றும் இளம்பெண்களின் வருகை அதிகமாக இருந்தது குறிப்பிடத்தக்கது. பெரியவர்கள் முதல்சிறியவர்கள் வரை இறுதிவரை ஆர்வத்துடன் படத்தைப் பார்த்தனர்.
இறுதிவரை இருந்து எங்களை ஊக்கப்படுத்திய செல்லுார் வெங்கடேசன் அவர்களுக்கும்,
குறிப்பிட்ட நேரத்திற்கு முன்னதாக வந்தாலும்.. இருந்து ரசிகர்களுக்கு இனிப்பு வழங்கிவிட்டு சென்ற கோச்சடை ராஜா அவர்களுக்கும்
சிவாஜி காமராஜ் கல்வி அறக்கட்டளை சார்பில் நன்றியை தெரிவித்து கொள்கிறோம்.
எத்தனை தலைமுறை கடந்தாலும்
சினிமா என்றால் சிவாஜி தான் என்பதை எவராலும் மறுக்க முடியாது... மறைக்க முடியாது.
மிட்லாண்ட் சினிமாஸில் நடைபெற்று விழாவின், இன்னும் பல சுவராசியமான படங்கள் தொடரும்....
விழா ஏற்பாடு... நா.ரமேஷ்பாபு கா.சுந்தரராஜன் விராட்டிபத்து மு.சோமு நா.கிச்சு அண்ணாநகர் மு.பழனிசாமி
http://oi65.tinypic.com/33e6kcl.jpg
நன்றி Sunder rajan
-
இது எங்கள் சிவாஜியின்...
.வசந்த மாளிகை வரலாறு...
47 ஆண்டுகளின் வாசம் செய்ய வந்த
அழகாபுரி ஜமீன்தார் எங்கள் சிவாஜி...
அவர் மறைந்து 18 ஆண்டுகள் ஆயினும்...
அந்த எங்க ஊர் ராஜாவை மறக்காத
எங்கள் பாசமலர்களின் மலர்த் தோட்டம்...
சென்னை ஆல்பர்ட் தியேட்டரில் ரிலீசான,மறுநாளும்....அரங்கம் நிறைந்த காடசிகள்...
நன்றி...நண்பர் புகழேந்தி.வேலூர்..
http://oi63.tinypic.com/10hokzc.jpg
நன்றி Rajendran.R
-
திரும்பும் திசையெங்கும்
திருவிழாக் கொண்டாட்டம்...
தமிழகமெங்கும் 100 திரைகளில்!
#வசூல்மாளிகை!!
http://oi67.tinypic.com/33zd9fp.jpg
நன்றி வான்நிலா
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
ஊரெங்கும் வான் மழை...! அரங்கமெலாம் வசூல்மழை.....!!
http://oi66.tinypic.com/2drwems.jpg
நன்றி வான்நிலா.
-
-
-
காலத்தால் அழியாத காவிய சினிமா இந்த "வசந்த மாளிகை"
-
தமிழகமெங்கும் வசூல் மழை பொழிந்து கொண்டிருக்கும் வசந்தமாளிகை திரைப்படத்தை...
நல்ல முறையில் டிஜிட்டலில் மாற்றி,
இன்றைய பதுப்படங்களுக்கு இணையாக
ஒலி மற்றும் ஒளி அமைத்து,
... மகத்தான வெற்றிக்கு வித்திட்ட ராமு அவர்களுக்கு உலகெங்கும் வாழும் கோடிக்கணக்கான சிவாஜியின் அன்பு இதயங்கள் சார்பில் ந்ன்றியை காணிக்கையாக்குகிறோம்.
திரையரங்குகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரிப்பதற்கு இவரின் உழைப்பே காரணம்.
ராமு அவர்கள் பல படங்களை டிஜிட்டல் முறையில் மாற்றி இருந்தாலும், வசந்தமாளிகை தான் அவரின் உழைப்புக்கான முழு வெற்றியை தந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
ராமு அவர்கள் மேலும் நடிகர்திலகத்தின் பல படங்களை டிஜிட்டல் செய்து,
உலகங்கும் புகழ்பெற வாழ்த்துகிறோம்.
http://oi67.tinypic.com/30uwrkj.jpg
நன்றி Sunder Rajan
-
தமிழகம் மட்டுமல்ல....
இந்தியா மட்டுமல்ல...
உலகமே வியந்து பார்க்கும் ...
உன்னத கலைஞன்
நடிகர்திலகம் மட்டுமே....
உலகமக்கள் மட்டுமல்ல
உலக தலைவர்கள் கொண்டாடும்
ஒரே கலைஞர்
மக்கள்தலைவர் சிவாஜி அவர்கள் மட்டுமே...
ஆஸ்திரேலிய துாதர்
நமது நடிகர்திலகத்தின் வசந்தமாளிகை திரைப்படத்தை பெரியதிரையில் பார்த்து மகிழ்ந்துள்ளார்.
http://oi67.tinypic.com/11uuhbl.jpg
நன்றி Sunder Rajan
-
(ஆயிரக்கணக்கான பார்வைகளில் இது ஒரு சிறு பார்வை.)
வசந்தமாளிகை...
காலத்தால் அழிக்க முடியாத காவியப்படம்.
தமிழ்த்திரை உலகில் இதனை மிஞ்சியோ அல்லது இதற்கு இணையாகவோ இன்று வரை ஒரு படம் வரவுமில்லை...இனி என்றும் வரப்போவதும் இல்லை...
இந்தப்படத்தில் நடிகர்திலகம், இளைய ஜமீன்தார், சின்னதுரை, ஆனந்த் ஆகவும் அவரது இதயநாயகி 'லத்தா'வாக வாணிஸ்ரீயும் அற்புதமாக வாழ்ந்ததைப் பற்றியும், கவியரசரின் அதி அற்புதமான பாடல்களைப் பற்றியும், KVM இன் இனிமையான இசையமைப்பைப் பற்றியும், பாலமுருகனின் மனதைத் தொட்ட அருமையான வசனங்களைப் பற்றியும், ஒளிப்பதிவு மேதை A.வின்சென்ட் அவர்களின் அற்புதமான, கண்ணுக்கு இனிமையான, வண்ண ஒளிப்பதிவைப் பற்றியும், படத்தின் பிரம்மாண்டத்தைப் பற்றியும் இதுவரை ஏகப்பட்ட பேர், எண்ணற்ற பதிவுகளை, இத்தனை ஆண்டுகளில் எத்தனையோ விதமாகச் செய்திருக்கின்றனர்...
அவை எதைப்பற்றியும் இங்கு சிறிதளவும் சுட்டிக் காட்டப் போவதில்லை.
இந்தப் பதிவின் பார்வையே வேறு... அது போகப் போகத் தெரியும். ஏன் இந்தப்படம் காதல் படங்களில் ஒரு காவியமாகப் போற்றப்படுகின்றது என்பது புரியும்.
அதற்கு முன்னர், கதையின் நாயகன் பற்றியும் கதை அமைப்புப் பற்றியும் சில வரிகள்...
ஆனந்த்... எங்கெங்கு தம் குடும்பத்தின் சொத்துக்கள் இருக்கின்றன என்பதே தெரியாத அளவுக்கு மிகவும் வசதி மிக்க ஒரு பணக்கார ஜமீன் பரம்பரையின் இளைய ஜமீன். இளைஞன். அழகன்.. கட்டழகன்..
குடும்பத்தின் கட்டுப்பாடு எதுவும் இன்றி, கேட்பார் யாருமின்றி, மனம் போன போக்கில் சந்தோச வாழ்க்கை வாழ்பவன்.
ஒரே ஒரு நாளைக்கு மட்டுமே பல கட்டுக்கள் பணம் செலவழித்துக் குடிக்கும் அளவு பணத்தை மதிக்காமல் செலவழிப்பவன். தன் பிறந்த நாள் விழாவின் மாலை நேரக் கொண்டாட்டத்துக்கு மட்டும் பல லட்சங்கள் செலவழித்து வெளி நாட்டு மது வகைகளாகப் பலருக்கும் கொட்டிக் கொடுப்பவன்.
அவன் கண்ணசைவுக்கும், அவனது காசுக்கும் காத்திருக்கும் காரிகைகள் ஏராளம்...சமுதாயத்தில் யாரைப்பற்றியும் கவலை இன்றிப் பல பெண்களுடன் ஒரே நேரத்தில் கும்மாளம் அடிப்பவன்.. குடித்து விட்டுத் தூக்கி எறியும் காலி மது பாட்டில்களும், அவனிடம் வரும் பெண்களும் அவனுக்கு ஒன்றுதான்.
இந்த நிலையில்தான் தற்செயல் நிகழ்வாக ஆனந்தின் காரியதரிசியாக அவன் வாழ்வில் வருகிறாள் லதா. ஏழ்மை நிலையிலும் தன்மானத்துடன் வாழும் குணம் கொண்ட குணவதியான அவள், தன் கட்டுப்பாடான, அதே வேளையில் பண்பான நடவடிக்கைகளின் மூலம், மெல்ல மெல்ல ஆனந்தின் கெட்ட நடவடிக்கைகளுக்கு முற்றுப் புள்ளி வைத்து அவனை நல்வழியில் திருப்புகிறாள்...அதன் மூலம் அவன் மனதிலும் இடம் பிடிக்கிறாள்..
இது வரை எல்லாமும் எல்லாரும் அறிந்ததே..
இனி சற்று வேறு பார்வை பார்ப்போம்.
எப்படிப்பட்ட காமாந்தகார இளைஞன் அவன்..!!
எவ்வளவு பெண்களுடன் தொடர்பு அவனுக்கு..!!
அப்படிப்பட்ட ஒருவனின் மனதில், சந்தர்ப்ப வசத்தால் வந்த ஒரு ஏழைப்பெண்ணை அவன் எப்படி எல்லாம் அடிமைப்படுத்தி இருக்க வேண்டும் ?
அதுதான் இல்லை..
இரண்டே முக்கால் மணி நேரம் ஓடக்கூடிய படத்தில் ஒன்றே முக்கால் மணி நேரம் அவன் அவளைத் தொடக்கூட இல்லை..
ஆச்சரியமாக இருக்கிறது இல்லையா..?
மழையில் நனைந்து, குளிரில் நடுங்கியபடி, இரவு நேரத்தில், தனிமையில், உணர்ச்சி மேலிட இருவரும் ஒரே அறையில் இருக்கும்படியான சந்தர்ப்பம் நேர்ந்தபோது கூட... அவன் அவளைத் தொடவில்லை..
தன் இதயத்தில் உள்ள காதலியின் திரு உருவத்தை லத்தாவுக்குத் தெரியப் படுத்துவதற்காக அவளை, அவளுக்காகவே கட்டிய அந்த மாளிகைக்கு அழைத்துச் சென்று, அவள் உண்மை உணர்ந்து, ஓடி வந்து அந்தக் காதலை ஏற்றுக் கொண்ட போது கூட, ஆனந்த் அவளைத் தொடவில்லை என்பதுதான் மிகவும் அற்புதமான விசயம்.
உன்னிப்பாகப் பார்த்தால், முதலில் ஆனந்தைக் கட்டி இறுக அணைத்துக் கொண்டது கூட லத்தா தான். அப்போதும் கூட ஆனந்தின் கைகள் லத்தாவை அணைக்காமல் முதலில் விலகித்தான் இருக்கும்..பின்னர்தான் அவளை ஆனந்த் அணைத்துக் கொள்வான்..
எல்லை மீறிய கெட்ட நடிவடிக்கைகள் கொண்ட ஒருவன், தான் உண்மையாக நேசித்த ஒரு தேவதையைத் தொடக் கூடத் தயங்கியபோதே உத்தமமான காதல் அங்கு உயர்ந்து நிற்கிறது...
அவர்கள் இருவரின் அந்த அணைப்பு, கிட்டத்தட்ட இரண்டு நிமிட நேரம் நீடிக்கும்.
அதன் பின்னர் "மயக்கமென்ன.." பாடலின் போது மிகவும் கண்ணியமான தொடுதல்...பூங்காவிலும்... பின்னர், மதில் சுவர் மேலும்..பாடல் முழுவதும்.. அதுநாள் வரை தமிழ்த்திரை உலகம் கண்டிராத ஸ்லோ மோசன் காட்சியில் அவர்களின் அந்தப் பாடலும் காட்சியமைப்பும் காதலர்களின் அன்பின் உச்சம்.
தன் காதலை வெளிப்படுத்திய போதும், உடனே தொடர்ந்த மயக்கமென்ன பாடலின் போதும், ஆக மொத்தம் சுமார் ஆறு நிமிட நேரம் மட்டுமே இருவரும் காதலுடன் தொட்டுக் கொண்டது... அவ்வளவுதான் மாபெரும் காதல் படமான இப்படத்தில் காதலர் இருவரும் காதலுடன் தொட்டுக் கொண்டது....
இதைத் தவிர இருவரும் ஒருவரை ஒருவர் தொட்டுக் கொள்ளும் சந்தர்ப்பமே படத்தில் இல்லையா ?
ஏன் இல்லை ? நிறைய இருந்தன.
முதன் முதலில், விமானத்தில் குடிபோதையில் ஆனந்த் தடுமாறியபோது, விமானப் பணிப் பெண்ணான லதா அவரைக் கைத்தாங்கலாக அவனுடைய இருக்கைக்கு அழைத்துச் செல்கிறாள். அப்போது அவள் ஆனந்தைத் தொட்டது ஒரு பணிப்பெண்ணின் கடமையின் போது ஏற்பட்ட தொடுதல்.
பின்னர் ஒரு முறை லத்தா ஆனந்தைத் தொட்டது, ஆனந்த் குடிப்பதைத் தடுக்க மதுக்கோப்பையுடன் இருந்த அவன் கைகளைப் பற்றித் தடுத்த போது.
ஆனந்த் லத்தாவைத் தொட்டது, மது பாட்டிலால் அவள் மண்டையை உடைத்து, தலையில் கட்டுப்போட்டு, முன்பு தனக்காக உயிர் நீத்த அன்பு ஆயாவின் படத்தை அவளுக்குக் காட்ட அவள் கையை ஆவேசத்துடன் பிடித்து இழுத்துக் கொண்டு போன போது...அது ஆயாவின் மறைவு தன் வாழ்வில் எப்பேற்பட்ட மாற்றத்தை ஏற்படுத்தியது என்று காட்டுவதற்காக...
அதன்பிறகு...சிறு வயதில் ஆயாவுக்கு ஏற்பட்ட கொடுமையான நிகழ்வைச் சொல்லி முடித்து, இனித் தன் உயிர் இருக்கும் வரை மதுவைத் தொட மாட்டேன் என்று லத்தாவின் கையில் அடித்துச் சத்தியம் செய்த போது அவள் கையை ஆனந்த் தொட்டது...
அதோடு இடைவேளை...
பின்னர் தொட்டது, லத்தா பெரியதுரை விஜயகுமாரால் திருட்டுப்பட்டம் சூட்டப்பட்டபோது, தக்க சமயத்தில் அங்கு வந்து அந்த சங்கடத்தில் இருந்த லத்தாவைக் காப்பாற்றி, ஆறுதலாக அவளது தோளைத் தொட்டபடி அழைத்துப் போன போது...அது ஆறுதலான தொடுதல்.
இறுதியாக ஆனந்த் லத்தாவைத் தொட்டது மிகவும் உணர்ச்சி பூர்வமானது.. இன்னொருவரின் மனைவியாகப் போகும் லத்தாவை, திருமண மண்டபத்தின் பின்பகுதிக்குத் தங்கை அழைத்து வர, ஆசி வேண்டிக் காலில் நமஸ்கரித்த லத்தாவைக் கையால் தொடாமல், ஆனந்தின் கண்ணீர்த்துளிகள் அவள் மேல் விழுந்து ஆசிர்வதிப்பது... பின்னர் அவளது தலைக்கேசத்தின் மேல் மென்மையாகத் தொட்டு ஆசி கூறுவது...
எப்படிப்பட்ட நடத்தை கொண்டிருந்த ஒரு மனிதனிடம் எப்படிப்பட்ட ஒரு உயர்ந்த மாற்றத்தைக் காதல் என்னும் ஒரு சமாச்சாரம் ஏற்படுத்தி விட்டது ?
கிள்ளுக் கீரையாக அவன் எண்ணியிருந்த அதே பெண்மையை மிக உயர்ந்த மலைச்சிகரத்துக்கு ஏற்றி வைத்த பெருமையும் அதே ஆனந்தைத்தான் சாரும்.. தனக்கே உரியவளாக ஒருத்தி வரும்போது, அவளைத் தொடக்கூடத் தயங்கும் அளவு உயர்ந்தவனாக உத்தமனாக ஆனந்த் மாறியது ..காதலின் உன்னதத்தால்.
காதல் என்பது, வெறும் உடல் ரீதியானது அல்ல.. உள்ளங்கள் ஒன்றாகச் சங்கமிக்கும் உத்தமமான ஒரு தெய்வீக விசயம்.. காதலுக்காக.. அதன் புனிதத்துக்காகத் தன் உயிரையும் தரத் தயாரான ஒரு உண்மையான காதலனை உலகுக்குக் காட்டிய படம் இது...
இதனால்தான் மற்ற அனைத்துக் காதல் படங்களையும் விட இது உயர்ந்து தனித்து நிற்கிறது...
அதனால்தான் ஆனந்தும், லத்தாவும் நம் உள்ளங்களில் என்றும் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.
நன்றி.
நாகராஜன் வெள்ளியங்கிரி.
http://oi64.tinypic.com/105ct2p.jpg
நன்றி நாகராஜன் வெள்ளியங்கிரி.
-
-