-
தென்னகப்படவுலகின்மூடிசூடா மன்னவரின் மேலும் ஒரு சாதனை மைல்கல்.. 1965 முதல் 1977 வரை (13 ஆண்டுகளில்) சென்னை நகர வசூலில் 1.உ.சு.வாலிபன் 2).இதயக்கனி 3) மீனவ நண்பன் 4) ரிக்க்ஷாக்காரன் 5) இன்று போல் என்றும் வாழ்க 6) பல்லாண்டு வாழ்க 7) நீதிக்குத் தலை வணங்கு 8) அடிமைப்பெண் 9) எங்க வீட்டுப்பிள்ளை 10).மாட்டுக்கார வேலன் 11) நினைத்ததை முடிப்பவன் 12).உழைக்கும் கரங்கள் 13) நல்ல நேரம் ஆகிய 13 திரைப்படங்கள் முதல் வெளியீட்டில் மட்டும் 12 லட்சத்தை கடந்து 25 லட்சம் வரை வசூலை பெற்ற காவியங்கள் தலைவர் ஒருவருக்கு மட்டுமே அதிகம். அதே போல் தனி அரங்கு மூலம் அதிக வசூலை பெற்ற அரங்குகளும் தலைவர் ஒருவருக்கு மட்டுமே அதிகம். 1965 முதல் 12 லட்சத்திற்கு அதிகம் பெற்ற நடிகர் சிவாஜி கணேசனின் படங்கள் திருவிளையாடல் வ.மாளிகை த. பதக்கம் தீபம் அ.ஒரு. கோயில் 5 படங்கள் மட்டும் தான். நன்றி!.உரிமைக்குரல் ராஜு........ Thanks wa.,
-
கறுப்பு வெள்ளை படங்களில் அதிக நாட்கள் ஒடிய காவியங்களில் கடைசி வரை வெற்றி பெற்ற திரைப்படங்கள் மக்கள் திலகமே ! 1966 சந்திரோதயம் - கெயீட்டி 89,.மேகலா 92,.பாரத் 70.சீனிவாசா 70.மொத்த நாள்- 321 நாள்.அடுத்தது.. பெற்றால் தான் பிள்ளையா ஸ்டார் 100 மகாராணி 100.நூர்ஜகான் 84 உமா 80. மொத்த நாள் -.364 அதன் பின் 1967 ல் காவல் காரன் -. குளோப் 100 அகஸ்தியா 100 மேகலா 100.நூர்ஜகான் 72.மொத்த நாள் 372. தலைவரின் மூன்று கறுப்பு வெள்ளை படங்கள் ஒடிய சாதனையை இறுதி வரை எவராலும் வெல்ல முடியவில்லை. உரிமைக்குரல் ராஜு. மேலும் பல வெற்றி சாதனைகள் தொடரும்..........👍 👌👌👌. ... Thanks wa.,
-
அடித்து தூள் கிளப்புங்கள்... என்றும்... எப்பொழுதும் வாழ்வாங்கு வாழ்க... "நல்லவன் வாழ்வான்" ...சாதனை, சரித்திரம், சகாப்தம்... என்கிற சொற்களுக்கு இலக்கியம், இலக்கணம் படைத்த ஒரே தனிப்பிறவி எம்.ஜி.ஆர்.,👍 👌 👍 👌👍👌...
-
நல்ல வேளை... அக்காலத்தில் புரட்சி நடிகர் அவர்களுக்கு சொந்தமாகவோ, அல்லது குத்தகையாகவோ திரையரங்குகள் எந்த இடத்திலும் இல்லை... இல்லையென்றால் மக்கள் திலகம் சாதனை அழியா கல்வெட்டுகளாக நிலவும் பேரற்புத நிகழ்வுகளை சந்தேகத்தோடு பார்க்க நேர்ந்திருக்கும்... அப்பப்பா...... பொன்மனச்செம்மல் தான் எவ்வளவு தீர்க்க தரிசனம்...
-
திரையுலகில் ஒரு கலைபேரரசு மக்கள் திலகமே!..தொடர் சாதனையில்... சென்னை நகரில் 1968.ல் தலைவரின் 3 வண்ணப்படங்கள் 13 திரையரங்கில் திரையிடப்பட்டு மாபெரும் வசூல் சாதனைகள். அது மட்டுமல்ல தலைவரின் ரகசியப்போலிஸ் 115.திரைப்டமும், ஒளிவிளக்கு திரைப்படமும் 5அரங்கில் வெளிவந்தது. வடசென்னை பகுதியில் ஒளி விளக்கு திரைப்படம் 2 அரங்கில் பிராட்வே (2.கிலோ மீட்டரில் உள்ள மிகப்பெரிய அரங்கான.) அகஸ்தியாவில்.திரையிடப்பட்டது. ஒரே நாளில் 3.காட்சியில் 31.நாட்கள் ஆறு காட்சி நடைப்பெற்று . சென்னை கிரவுன் அரங்கில் வெளியாகி 179.நாள் ஒடிய திருவிளையாட.ல் வசூலை வென்றது தலைவரின் ஒளிவிளக்கு படம் பிராட்வே 92 நாள் 2,52,971.55 வசூல் அகஸ்தியா 31 நாள் 1,21,611.25. வசூல் இரண்டு அரங்கு சேர்த்து வசூல் : ரூ.3,74,582.80.. அதே பகுதியில் 179.நாள் ஒட்டப்பட்ட படமான. திருவிளையாடல் வசூல் :.3,49,603.93. அடுத்து சரஸ்வதி சபதம் 126 நாள்.வசூல் :.3,14,252.30. அடுத்து 100 நாள் ஒட்டப்பட்டு 2 லட்சம் கூட வசூல் ஆகாத படமான கலாட்டா கல்யாணம் வசூல்:.1,98,924.30.. 1968 ல் தில்லானா படம் கிரவுனில் 111.நாள் வசூல் ;. 2,88,793.11. வடசென்னையில் 1968.ல் குடியிருந்ந கோயில் கிருஷ்ணாவில் 104.ஒடிய வசூல்:. 4,04,298.60. வடசென்னை பகுதியில் 100 நாளில் 4 லட்சத்தை கடந்த முதல் படம் குடியிருந்த கோயில். சென்னையில் ரகசியபோலிஸ் 115. குடியிருந்த கோயில் ஒளி விளக்கு 3.படங்கள் பெற்ற வசூல் ரூ. 28 லட்சமாகும். மூன்று அரங்கில் 100.நாள் குடியிருந்த கோயில் நான்கு அரங்கில் 10.வாரங்கள் கடந்த படம் ஒளி விளக்கு 4 அரங்கில் 50.நாளை கடந்த படம் ரகசிய போலிஸ்115 . இப்படியும் சாதனையை படைத்துள்ளார் நம் வாத்தியார். உரிமைக்குரல் ராஜு. தொடரும் இன்னும் ஆயிரம் பதிவுகள்.................. Thanks wa.,
-
தலைவரின் கலையுலக சாதனைகளை தமிழ்ப்பட உலகில் எவரும் வென்ற தில்லை. அவை யாவும் இயற்கை நாயகனுக்கு இயற்கையாகவே அமைந்தது. (1947 - 1977) வரை 30 ஆண்டுகள் தலைவர் பெற்ற சாதனைகளை பலர் 40,.50.ஆணடுகள் நடித்தும், நடிப்பை தன் வாழ்க்கையாக அமைத்தும் தொடர் வெற்றிகளை, சாதனைகளை இருந்த கடைசி நாள் வரை பெறவில்லை என்பது தான் உண்மை ! தலைவர் திரையிலும் வாழ்க்கையிலும் தன் உயர்ந்த லட்சியத்திலும் கடைசி வரை தன் கொள்கையை மாற்றியதே கிடையாது. மக்களுக்காகவே வாழ்ந்து, மக்களின் நலனுக்காகவே இயக்கம் கண்டு, மக்களுக்காகவே நல் ஆட்சி தந்து, மக்களின் பணத்தில் தன்னை வளர்த்து கொள்ளாது, எளிமையுடன் பிறந்து, வாழ்ந்து ,புகழ் பெற்று, மறுபிறவி, முப்பிறவி எடுத்து ...... எல்லாம் இருந்தும் ஒரு சாதாரண மனிதராக வாழ்ந்து நிலைத்த புகழ் பெற்ற உண்மை மாமனிதர் ஆவார். இந்த பூமியில் நம் தமிழ் நாட்டு மக்களுக்காகவே அவதாரம் எடுத்து நல்லவர்களின் உள்ளத்தில் மட்டும் வாழ்ந்து வரலாறு படைத்து கொண்டிருக்கும் மனிதநேய பிறவி தான் பொன்மனச்செம்மல் ஆவார். அந்த மூற்றெழுத்து மன்னரின் வழியில் நாம் நேர்மையுடன் எளியவர்களுக்கு நம்மால் இயன்ற உதவி செய்து புரட்சித் தலைவரின் புகழைப்பாடுவோம். என்றும் வள்ளலின் வழியில்... உரிமைக்குரல் ராஜு....... Thanks wa.,
-
இதயதெய்வம் எம்.ஜி.ஆர் அவர்களுடன் கலைத்துறையிலும் அரசியலிலும் பொது வாழ்விலும் சுமார் 40.ஆண்டு காலமாக தலைவரின் உடையலங்கார நிபுணர். தலைவரின் தனி உதவியாளர் தலைவருக்காகவே தன்னை இன்று வரை அற்பணித்தவர். தலைவரை பற்றி யாவையும் அறிந்தவர். தலைவர் ஒவ்வொரு நாளும் எப்படி வாழ்ந்தார். உதவினார். மனிதநேயராக திகழ்ந்தார் என்பது அண்ணன் திரு. முத்து அவர்களுக்கு மட்டுமே தெரியும். யார் யாரே தலைவரை பற்றி பொய் வேடமிட்டு உலா வரு கின்றனர். ஆனால் இத்தனை காலம் முத்து அண்ணனை சந்திக்காது இப்பொமுது தொடர்ந்து ஒரு வருட காலமாக அண்ணனிடம் பயணித்ததை நான் பிறந்த பிறவி பலனை (.தலைவரிடம் நெருங்வில்லை பேசவில்லை என்பதை அண்ணன் முத்து அவர்களின் நல் நட்பால்) இன்று பெற்று விட்டேன்.தலைவ ருக்காக உழைத்த இவருடன் நான் பேசிகிறேன் பழகுகிறேன். தலைவரின் குழந்தை உள்ளம் ,பிறருக்காக. தலைவர் செய்த உதவிகள். தொண்டனை, ரசிகனை மதித்த விதம் யாவும் அண்ணனிடம் கேட்கும் பொழுதெல்லாம் கண்ணீர் தான். செஞ்சை உருக்கிய நிகழ்வுகள் தான். நான் ஒரு தலைவரின் பக்தன் என்பதை அண்ணனிடம் அடிக்கடி பேசி மேலும் தலைவரை பற்றி அறிந்து வருகிறேன். தலைவர் உள்ளங்களே! யாருக்கும் கிடைக்காத தலைவரின் பால் அன்புகொண்ட அண்ணன் முத்து அவர்களிடம் மட்டும் பேசுங்கள்! கேளுங்கள்!. ஒராயிரம் நிகழ்வுகள் அவர் உள்ளத்திலே கொட்டி கிடக்கின்றன. அண்ணனுக்கு 85 வயதாகிறது இன்றும் தலைவரின் வழியில் அவர் உணவு கட்டுப்பாடு நோய் இன்றி எங்கும் தலைவரின் புகழ் பாடுகின்றார். நடக்கின்றார். ஆரோக்கியமாக வாழட்டும் பல்லாண்டு. வரலாற்று தலைவருடன் பயணித்த நல்லவரை போற்றுவோம்! ஒன்று மட்டும் கடைசியாக சொல்கிறேன் தலைவரின் பெயரில் உலகத்தில் நீங்கள் விழா எடுத்தாலும் தலைவரை பற்றீ ஒன்றும் தெரியாத அறியாதா வியபார நோக்கத்துடன் ஏமாற்றி தன் சரிர சகட்டு மேனியை வளர்த்துகொண்டு உலா வரும் டூபாங்கூரை தலையில் வைத்து ஆடும் உள்ளங்களுக்கு அன்பு வேண்டுகோள். தலைவருடன் உண்மையாக வாழ்நாள் முழுவதும் பயணித்த அண்ணன் முத்து அவர்களை நிகழ்ச்சிக்கு அழைத்தால் உங்களுக்கு கோடி புண்ணியம் கிடைக்கும். தலைவருக்கு நீங்கள் காட்டும் அன்பு உண்மையாகும். இதைவிட ஒரு மகிழ்ச்சி உங்கள் நிகழ்வில் கிடையாது.. தலைவரின் பொன்மொழியில் ... சத்தியம் சில சமயம் தூங்கும் ஆனால் அது சாகாவரம் பெற்றது நிலைத்து நின்று ஜெயிக்கும் !போலிகளின் கூடாரம் கவிழும்!.உலக அரங்கில் நீங்கள் தலைலவர் புகழ்பாடு கின்றேர்கள் என்றால் தலைவரின் உண்மை வழியில் நடந்து ..... விழா நடத்துங்கள்... நன்றி!. உரிமைக்குரல் ராஜு ........ Thanks Raju Sir... wa.,
-
தலைவரின் திரைப்பட சாதனையில்..... நெல்லை மாநகரம் நகரில் ஒரே ஆண்டில் 1974 ல் மூன்று படங்கள் வெளிவந்து சாதனை. 1) உரிமைக்குரல் 180 நாட்கள் ( லட்சுமி) 2) நேற்று இன்று நாளை பார்வதி அரங்கில் 119 நாள் 3) சிரித்து வாழ வேண்டும் சிவசக்தி அரங்கில் 62 நாட்கள். நகரில் 1978 வரை அதிக வசூலை பெற்ற ஒரே திரைப்படம் உரிமைக்குரல். நகரில் தலைவர் திரைப்படங்களே தொடர் சாதனை புரிந்துள்ளது... 100 நாளுக்கு மேல் ஒடாத படங்கள் மத்தியில் உரிமைக்குரல் 180.நாள் எங்கவீட்டுப் பிள்ளை 149 நாள். மாட்டுக்கார வேலன் 142 நாள். மதுரை வீரன் 132 நாள் நாடோடி மன்னன் 127.நாள் அடிமைப்பெண் 120 நாள். உலகம் சுற்றும் வாலிபன் 119 நாள் நேற்று இன்று நாளை 119 நாள் மேலும் பல படங்கள் சாதனையாகும்.. தொடர்வோம். உரிமைக்குரல் ராஜு..... Courtesy: wa.,
-
தலைவரின் திரைப்பட சாதனையில் சேலம் மாநகர் பற்றி தகவல்கள் சில..... நகரில் 1963 முதல் 1968 ( ஆறு ஆண்டுகள் ) வரை தலைவரின் 8 திரைப்படங்கள் 100 நாட்கள் ஒடியுள்ளது...... 1) நீதிக்குப்பின் பாசம் 2) பரிசு 3) வேட்டைக் காரன் 4) எங்க வீட்டுப் பிள்ளை 5) ஆயிரத்தில் ஒருவன் 6) அன்பே வா 7) காவல்காரன் 8) ரகசியபோலிஸ்115 ஆனால் நடிகர் சிவாஜி கணேசனை வைத்தும் ஜெமினி கணேசன் சாவித்திரி பத்மினி நடித்த பக்தி படமான. திருவிளையாடல் சரஸ்வதி சபதம் 2 படங்கள் மட்டுமே 100 நாள். நகரில் 100 காட்சி அரங்கு நிறைந்த முதல் படம் காவல் காரன் இரண்டாவது ... ரகசியபோலிஸ்115 தொடரும் மேலும்.... உரிமைக்குரல் ராஜு......... Thanks wa.,
-
திரையுலக வசூல் சக்கரவர்த்தி......... புரட்சி நடிகர் அபாரமான, வளமான, அட்டகாச வசூல் விபரங்களை உண்மையான ஆதார தகவல்களை அற்புதமான முறையில் பதிவிட்டு வரும் ஒலிக்கிறது உரிமைக்குரல் ஆசிரியர் திரு. Bs. ராஜு அவர்களுக்கு நம் உறுப்பினர்கள் சார்பில் நல்வாழ்த்துகளையும், நன்றியையும் தெரிவித்து கொள்கிறோம்...
-
தலைவரின் புகழ்பாட. ( 26.03.1968 - 26.03.2019).இன்று தலைவரின் ஆசியை இந்நாளில் வேண்டுகிறேன் !. உரீமைக்குரல் ராஜு...... Happy Birthday Wishes to Raju BS.,
-
எம்.ஜி.ஆர் ஃபிரேம்!!
--------------------------------------
இந்தப் பதிவை மிகவும் உன்னிப்பாகப் படிக்கும்படியும், விஷயத்தைத் தம் சந்ததிகளிடம் விளக்கும்படியும் கேட்டுக் கொள்கிறேன்!!
எங்க வீட்டுப் பிள்ளை!!
வாகு-நீ -- என்று எம்.ஜி.ஆரை வைத்து-வாகினியில் எடுக்கப்பட முதல் வண்ணப்படம்!
எங்க வீட்டுப் பிள்ளை எங்க வீட்டுப்பிளை என-
அத்தனை வீட்டுப் பிள்ளைகளும் குறைந்தது பத்து முறையாவது இந்தப் படத்தைப் பார்த்திருப்பார்கள்!!
|படத்தில்,,இளங்கோ எம்.ஜி.ஆர்,,ஹோட்டலில் மிகக் கொஞ்சமாக ?? சாப்பிட்டுவிட்டு பில் கட்டாமல் வெளியே வந்து விட--
ராமு எம்.ஜி.ஆர் மாட்டிக் கொள்ளும் காமெடிக் காட்சி!!
காமெடிக் காட்சி என்றாலும் கூட--
ஹோட்டலுக்கு வெளியே வந்து,,தம்மைத் தாமே கடிந்து கொள்வார் இளங்கோ எம்.ஜி.ஆர்!!
ஏமாத்திவிட்டு வந்துட்டோமே! இந்த தாயத்தை விற்றாவது பில்லை செட்டில் பண்ணிடணும்!!
அன்று எங்கவீட்டுப் பிள்ளையின் படப்பிடிப்பு!!
தாம்புக் கயிறை பாம்பு என்று தம் அன்னையிடம் பயமுறுத்தி,,இளங்கோ எம்.ஜி.ஆர் வீட்டை விட்டு எஸ்கேப் ஆகும் காட்சி!!
காட்சிப் படி--பாம்பு--பாம்பு--என்று போலியாக அலற வேண்டிய எம்.ஜி.ஆர்---
திடீர் என்று செய்து விட்ட காரியம்??
அந்த அறையில் இருந்த புத்தர் சிலை அருகில் சென்று --புத்தரிடம்--
என்னை மன்னிச்சுடுங்க! என்று மன்னிப்புக் கோரியது??
இயக்குனர் சாணக்கியா முதல்--குழுவில் ஒருவருக்கும் ஒன்றும் புரியவில்லை??
ஷாட் எடுக்கப்பட்டு விட்டதும் நிதானமாக எம்.ஜி.ஆர்,,காரணத்தை விளக்குகிறார்!
இது காமெடியான ஸீன் தான்!! இருந்தாலும்--ஆபத்துக்குப் பாவமில்லை என்ற பாணியில்-படம் பார்ப்பவர்களும்--முக்கியமாக--என் ரசிகர்களும் இப்படிப்பட்ட தவறான அணுகு முறையைக் கடைப் பிடித்துவிடக் கூடாதுன்னு தான் நான்,,அந்த அறையில் இருந்த புத்தரிடம் மன்னிப்பு கேட்டேன்!!
முடிந்த வரையில் நாம்--
முன் உதாரணமாக நல்லதுக்கு இல்லா விடினும்
பின் உதாரணமாகக் கெடுதலுக்கு அமையக் கூடாது அல்லவா??
பெண்களின் அரை குறை ஆடையிலிருந்து--ஆண் ஹீரோக்களின் வக்கிரம் கலந்த சண்டைக் காட்சி வரை அனைத்து தீமைகளுக்கும் சினிமாவே பெரும் காரணமாய் அமைந்து விடும் இன்றையக் காலக்கட்டத்தில்-அதே திரையுலகில்---லாஜிக்கே தேவைப்படாத ஒரு காமெடி ஸீனில் கூட எம்.ஜி.ஆர் அணுகிய கோணம்???
சுருங்கச் சொன்னால்--
அன்றைய எம்.ஜி.ஆர் படங்கள்??
அனைவருக்குமான சமச்சீர் கல்வி!!
ஆமாம் தானே அரியவர்களே???!!! Thanks wa.,
-
இன்று (26/03/2019) பிறந்த நாள் விழா காணும் உரிமைக்குரல் ஆசிரியர் திரு.பி.எஸ்.ராஜு அவர்கள் இன்று போல் என்றும் நலமுடன், வளமுடன் , தொடர்ந்து புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். புகழ் பரப்பும் பணியை தொடர பல்லாண்டு வாழ்க என எனது சார்பிலும், ஆயிரத்தில் ஒருவன் இறைவன் எம்.ஜி.ஆர். பக்தர்கள் குழு சார்பிலும் அன்பான நல்வாழ்த்துக்கள் .
http://i65.tinypic.com/fc4geg.jpg
-
கடந்த வெள்ளி முதல் (22/3/19) கோவை ராயலில் மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். நடித்த "பெரிய இடத்து பெண் " தினசரி 4 காட்சிகளில் வெற்றி நடை போடுகிறது .
http://i67.tinypic.com/fmut15.jpg
-
-
-
-
-
-
-
http://i65.tinypic.com/esp1mr.jpg
http://i63.tinypic.com/2cohfsg.jpg
வெளியான தேதி -10/05/1963. கோவை ராயலில் -100நாட்கள்
கோவை டிலைட்டில் 20 நாட்கள் ஓடியது .
-
-
கடந்த ஞாயிறு (24/03/2019) அன்று க்ளஸ்டர் திரைப்பட கல்லூரி, (ஹோப்ஸ் கல்லூரி மற்றும் மணீஷ் தியேட்டர் அருகில்,) சிங்காநல்லூர், கோவை மாநகரில் மக்கள் தலைவர் எம்.ஜி.ஆர். அவர்களின் 102 வது பிறந்தநாள் விழா வெகு சிறப்பாக அனுசரிக்கப்பட்டது .தேர்தல் விதிமுறைகள் காரணமாக சுவரொட்டிகள், பேனர்கள், பதாகைகள் எங்கும் சாலைகளில் தென்படவில்லை .கல்லூரி வளாக வாயிலில் பலூன் அலங்காரம் .
புரட்சி தலைவர் உருவம் பொருந்திய வரவேற்பு பேனர்கள், பெருமளவில் கல்லூரி வளாகத்தில் அமைக்கப்பட்டிருந்தன .சிறப்பு விருந்தினர் திரு.சைதை துரைசாமி (முன்னாள் சென்னை மாநகர மேயர் ) அவர்களை வரவேற்கும் வகையில் பேனர் வைத்திருந்தனர் .
விழா நடைபெறும் அரங்கத்தின் ஒரு பகுதியில் மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். நடித்த படங்கள், மற்றும் அரசியல் குறித்த புகைப்படங்கள்
ஆகியன புகைப்பட கண்காட்சியாக எம்.ஜி.ஆர். பக்தர்களை கவரும் வண்ணம் அமைக்கப்பட்டிருந்தன .
கோவை மாநகர எம்.ஜி.ஆர். பக்தர்கள் விழா வெற்றிகரமாக நடைபெறும் வகையில் , உள்ளூர் மற்றும் சென்னை, மதுரை, திருச்சி, திண்டுக்கல், தூத்துக்குடி, திருநெல்வேலி, சேலம், திருப்பூர், ஈரோடு , செங்கல்பட்டு, பெங்களூரு , அரியலூர் ,புதுக்கோட்டை ஆகிய நகரங்களில் இருந்து பெருந்திரளாகவந்திருந்த பக்தர்கள்
அனைவரையும் வரவேற்று நன்கு உபசரித்தனர் .
காலை 8 மணியளவில் வந்திருந்த பக்தர்கள் அனைவருக்கும் சிற்றுண்டி வழங்கப்பட்டது . காலை 10 மணியளவில் சிறப்பு விருந்தினர் திரு.சைதை துரைசாமி அவர்களுக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது அப்போது மேடையில் நாட்டுப்புற இசையில் மேள தாளத்துடன் வாத்தியங்கள் முழங்கின .
காலை 10.30 மணியளவில் புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். புகைப்படம்
திறந்து வைக்கப்பட்டது .நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினர்களாக
திரு.எம்.ஏ.முத்து (உடைஅலங்கார நிபுணர் ), பத்திரிகை ஆசிரியர் திரு.துரை கருணா, திரு.தசரதன் (நவரத்தினம் -துணை இயக்குனர் ),
திரு.ரத்னவேலு (ஆர்.எச் .ஆர். ஓட்டல் அதிபர் ), ஜூபிடர் பிக்ச்சர்ஸ் வாரிசுகள், திரு.முருகு பத்மநாபன் (பிரான்ஸ் எம்.ஜி.ஆர். பேரவை தலைவர் ), கோவை ராயல் தியேட்டர் அதிபர்,,பேராசிரியர் திருமதி ராஜேஸ்வரி, மதுரை,உரிமைக்குரல் ஆசிரியர் திரு.பி.எஸ். ராஜு ,திரு.சந்திரகுமார் ,வர்ணனையாளர் ,திரு.ஷாகுல் ஹமீது (ஸ்டண்ட் நடிகர் ),திரு.வாசுதேவன், சூலூர் ஆகியோர் கலந்து கொண்டனர் . கோவை மாவட்ட எம்.ஜி.ஆர். பக்தர்கள் குழு பொறுப்பாளர்கள் திரு.காளியப்பன், திரு.கனக சுப்ரமணியம், திரு.கணபதி தாஸ், திரு.சேகர், திரு.கமலக்கண்ணன் ஆகியோர் ஒருங்கிணைந்து விழா
ஏற்பாடுகளை மற்றும் சில கோவை பக்தர்களுடன் சேர்ந்து செய்திருந்தனர் .
காலை 11 மணியளவில் வந்திருந்த சிறப்பு விருந்தினர்கள் அனைவருக்கும் பொன்னாடைகள் அணிவிக்கப்பட்டு நினைவு பரிசுகள் வழங்கப்பட்டன . பெங்களூரில் இருந்து சிறுவர்கள் சுமார்
20 பேர் மக்கள் தலைவர் எம்.ஜி.ஆர். வேடமிட்டு மேடையில் காட்சி அளித்தனர் . அவர்களுக்கு திரு.சைதை துரைசாமி பதக்கங்கள் அணிவித்து கௌரவித்தார் . பின்பு திரு.சைதை துரைசாமி சுமார்
ஒரு மணி நேரம் புரட்சி தலைவர் எம்.ஜி. ஆருக்கு புகழ் மாலை சூட்டும் வகையில் பல செய்திகள், நிகழ்வுகளை குறிப்பிட்டு பேசி
அனைவரின் கைதட்டலை பெற்று அசத்தினார் .
அவரை தொடர்ந்து மற்ற சிறப்பு விருந்தினர்கள் பேசினார்கள். திரு.
ஷாகுல் ஹமீது ,(ஸ்டண்ட் நடிகர் ) உழைக்கும் கரங்கள் திரைப்படத்தில் மான் கொம்பு சண்டை காட்சியில் தலைவருக்கு பதிலாக சில காட்சிகளில் டூப்பாக நடித்ததை நினைவுபடுத்தினார் .
பிற்பகல் 1 மணிக்கு உணவு இடைவேளை . கோவை மாவட்ட எம்.ஜி.ஆர். பக்தர்கள் அறுசுவை உணவு ஏற்பாடு செய்திருந்தனர் .
சுமார்500 பேர் விழாவில் கலந்து கொண்டதாக பக்தர்கள் தகவல்
அளித்தனர் . பிற்பகல் 2.30 மணியளவில் எடிசன் ஆர்கெஸ்டராவின்
இன்னிசை மழையில் கீழ்கண்ட பாடல்கள் இசைக்கப்பட்டன .
1.ஒன்றே குலம் என்று பாடுவோம் - பல்லாண்டு வாழ்க .
2. மூன்றெழுத்தில் என் மூச்சிருக்கும் - தெய்வத்தாய்
3. ஆடலுடன் பாடலைக் கேட்டு - குடியிருந்த கோயில்
4. ஒருவர் மீது ஒருவர் சாய்ந்து - நினைத்ததை முடிப்பவன்
5.புத்தன் இயேசு காந்தி - சந்திரோதயம்
6..குமரிப்பெண்ணின் உள்ளத்திலே -எங்க வீட்டு பிள்ளை
7.தாயில்லாமல் நானில்லை - அடிமைப்பெண்
8..தங்கப்பதக்கத்தின் மேலே - எங்கள் தங்கம்
9. உன்னை அறிந்தால் - வேட்டைக்காரன்
10.பச்சைக்கிளி முத்துச்சரம் -உலகம் சுற்றும்வாலிபன்
11. உலகம் பிறந்தது எனக்காக - பாசம்
12..சக்கரைக்கட்டி -பெற்றால்தான் பிள்ளையா - நடன பாடல்
13. ஏய் நாடோடி - அன்பே வா - நடன பாடல்
14. நான் உங்கள் வீட்டு பிள்ளை -கோவை தியாகராஜன் -நடனம்
15. .நாங்க புதுசா - ஒளி விளக்கு - சிறுவன் -சிறுமி நடனம்
16. என்னை தெரியுமா - கு.கோயில் -கோவை தியாகராஜன் -நடனம்
17. பச்சைக்கிளி முத்துச்சரம் -உ.சு.வாலிபன் - நடன பாடல்
18. ஆடலுடன் பாடலை - கு.கோயில் - நடன பாடல்
19. நான் உங்கள் வீட்டு பிள்ளை -நாமக்கல் எம்.ஜி.ஆர். - நடனம்
20.கொடுத்ததெல்லாம் கொடுத்தான் - படகோட்டி
21. மூன்றெழுத்தில் என் மூச்சிருக்கும் - தெய்வத்தாய்
22. அன்று வந்ததும் இதே நிலா - பெ. இ. பெண் -நடன பாடல்
23 அச்சமென்பது மடமையடா - மன்னாதி மன்னன்
24. பொன்னந்தி மாலை பொழுது - இதய வீணை .
25.எங்கே போய்விடும் காலம் -தாழம்பூ -நாமக்கல் எம்.ஜி.ஆர்.நடனம்
மாலை 5.30 மணியளவில் யோகா பயிற்சி சிறுவர்-சிறுமி
மாலை 6 மணி முதல் இரவு 7.30 மணிவரையில் மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். திரைப்படங்களில் நடித்த கம்பு சண்டை, சிலம்ப சண்டை, ஜூடோ, வாள் சண்டை, மான்கொம்பு சண்டை காட்சிகளை நினைவுபடுத்தும் வகையில் மாணவ மாணவியர் சுறுசுறுப்பாகவும்,
விறுவிறுப்பான சண்டை காட்சிகளில் தங்களது திறமையை வெளிப்படுத்தினர் .இடையில் வர்ணனையாளர் திரு.சந்திரகுமார்
திரைப்பட பழைய பாடல்களுக்கு , ரீ மிக்சிங், புதிய வடிவம், புதிய கலைஞர்கள் நடிப்பது , பாவனை காட்டி நடிப்பது இப்போது கைவந்த கலை . ஆனால் அந்த காலத்தில் புரட்சி நடிகர் எம்.ஜி.ஆர். அவர்கள்
நடித்த மர்மயோகி, சர்வாதிகாரி, மருத நாட்டு இளவரசி, மலைக்கள்ளன், மதுரை வீரன், நாடோடி மன்னன், தாயை காத்த தனயன், பெரிய இடத்து பெண் , முகராசி, நீரும் நெருப்பும், மாட்டுக்கார வேலன் ,ஆயிரத்தில் ஒருவன், நினைத்ததை முடிப்பவன், உழைக்கும் கரங்கள் மீனவ நண்பன், மதுரையை மீட்ட சுந்தர பாண்டியன்
ஆகிய திரைப்படங்களின் காட்சிகளை நினைவுபடுத்தி புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். நடித்த இந்த பட காட்சிகள் எந்த காலத்திலும்
வேறு எந்த நடிகரோ , கலைஞரோ, நடிக்க முயல்வது இயலாத காரியம் .என்று குறிப்பிட்டு அனைவரின் கரகோஷத்திற்கிடையே
தனது உரையை முடித்தார் .
இரவு 8 மணியளவில் விழா இனிதே நிறைவுற்றது .
-
நேற்று கோயமுத்தூரில் நடந்த "வானவில் " புரட்சி தலைவரின் பிறந்தநாள் விழாவில் இதுவரை கண்டிராத சிறப்பு,
தமிழ் கலாச்சார முறைப்படி கோவையில் புகழ்பெற்ற "பறைமேளம் " இசையுடன் துவங்கி,
" சிலம்பாட்ட " கலையுடன் நிறைவுபெற்றது,
விழாவில் சிறப்புரையாற்றிய சென்னை முன்னாள் மேயர், மனிதநேய அறக்கட்டளை நிறுவனர், உலக எம்ஜிஆர் பேரவை தலைவர், அண்ணன் திரு. சைதை துரைசாமி அவர்களின் பேச்சு அனைத்து தலைவரின் பக்தர்களுக்கும் உற்சாகத்தை கொடுத்தது,
விழாக்குழுவை சிறப்பாக நடத்திய புரட்சி தலைவருக்கு கார் ஓட்டுனராக பணிபுரிந்த அண்ணன் காளியப்பன் அவர்களுக்கும், "விசாரணை " பட இயக்குனர் சந்திரகுமார், மற்றும் நண்பர்கள் வாசுதேவன், சேகர், மற்றும் பெயர் தெரியாத குழுவை சார்ந்தவர்களுக்கும் நன்றி..! நன்றி..!!.......... Thanks wa.,
-
ஒரே கேள்வி!!
-------------------------
இந்தப் பதிவின் நாயகரே மு.க.ஸ்டாலின் தான்?
ராகுல் காந்தி,,தம் தேர்தல் பிரச்சாரத்தில் --
கர் நாடகத்தில் பேசியிருக்கும் ஒரு விஷயம்?
விஷயம் அல்ல--விஷமம்!
விஷமம் கூட அல்ல!--விஷம்??
நீங்கள் பி.ஜே.பிக்கு ஓட்டு போட்டால்,,பி.ஜே.பியும் எடியூரப்பாவும் சேர்ந்து ஒட்டு மொத்தக் காவிரி நீரை தமிழகத்துக்கு தாரை வார்த்து விடுவார்கள்??
எவ்வளவுக் கேவலமான--
பிரிவினையைத் தூண்டுகின்ற--
பொது நலம் சிறிதும் இல்லாத--
ஈவு இரக்கம் அற்ற பேச்சு??
பிரிவினையைத் தூண்டி,,வன்முறையை வளர்க்கச் செய்யும் இந்த ஒரு பேச்சுக்காகவே சட்டப்படி ராகுல் மீது வழக்கு தொடர முடியும்!!
நம் ஸ்டாலினிடம் நாம் கேட்கும் கேள்வி--
ஐயா புண்ணியவானே!!
தமிழுக்கும்,,தமிழகத்துக்கும்--நீங்களும் உங்கள் தந்தையும் பலமுறை உயிர் விட்டிருப்பதாகக் கூறியிருக்கிறீர்களே?
அதை வைத்து இதைக் கேட்கிறோம்!
காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியின் இந்தப் பேச்சுக்கு உங்கள் பதில் என்ன??
உங்கள் கூட்டணியில் நாளையப் பிரதமர் வேட்பாளர் என்று உங்களால் ஏற்றுக் கொள்ளப்பட்டிருக்கும் ராகுல் தான் இப்படிப் பேசியிருக்கிறார்!
கூட்டணிக் கட்சி என்ற முறையில்,,ராகுல் பேசியதை நீங்கள் ஏற்றுக் கொள்கிறீர்களா??
அப்படி ஏற்கும் பட்சத்தில் தமிழகத்துக்கு நாங்கள் துரோகம் இழைக்கப் போகிறோம் என்பதை பகிரங்கமாக ஒப்புக் கொள்கிறீர்கள் என்றே பொருள்!!
காவிரியை மீட்கக் களம் சென்றோம் என்று கதை விட்டவரின் அருமை மகனே??
நீங்கள் ஓட்டுப் பிச்சை கேட்கும் தமிழக மக்களுக்குத் தேவையான தண்ணீரை தரக் கூடாது என்று--உங்கள் கூட்டணியின்,,பிரதமர் வேட்பாளர் ராகுல் பேச்சுக்கு நீங்கள் சொல்லப்போகும் சமாதான மழுப்பல் தான் என்ன??
முக நூல்--ட்விட்டர் போன்றவற்றில் முழ்ங்கி வரும் நீங்கள்--இந்தக் கேள்விக்கு பதில் சொல்லக் கடமை பட்டிருக்கிறீர்கள்!!
தமிழக வாக்காள சொந்தங்களே---
உங்களுக்கு ஒரு வார்த்தை!!
தண்ணீர் கொடுக்காத உங்கள் நாட்ட்டில்--ஒரு குவளை நீர் கூடக் குடிக்க மாட்டேன்!!
சொன்னது எம்.ஜி.ஆர்! பெங்களூரில்--தமிழகத்துக்காக!!
நடுவர் மன்ற அரசாணை!!
வெளியிட்டது ஜெ!!---தமிழகத்துக்காக!!
தவித்த வாய்க்கு தண்ணீர் தராதே என்று--
அவித்த அனல் போல் பேசும் ராகுலோடு---கூட்டில் இருக்கிறார் ஸ்டாலின்!!!
முதல் போட்டு லாபம் தேடுவதில் இவர்கள்!
முடிவு உங்கள் கையில்!!!......சமுதாய, சமூக நலன் கருதி இந்த பதிவு... Thanks wa.,
-
திரைப்படத்துறையின் சக்தியாக வலம் வரும் பொன்மனச்செம்மலின் திரைப்பட சாதனையில். வேலூர் மாநகரில் தலைவரின் படங்களே அதிக அளவில் இரண்டு திரையரங்குகளில் வெளிவந்து சாதனை நிகழ்த்தியுள்ளது. நகரில் அதிக நாள் ஒடிய முதல் படம் மதுரைவீரன் -.ராஜா அரங்கில் 147 நாள் ஒடி சாதனை. 1958 ல் நாடோடி மன்னன் 127 நாள் ஒடியது.ஒவ்வொரு ஆண்டும் மக்கள் திலகத்தின் காவியங்களே முன்னனி பெற்று வந்துள்ளது.. நன்றி உரிமைக்குரல் ராஜு....... Thanks wa.,
-
புரட்சித்தலைவரின் மேல் உண்மையான அன்பு வைத்திருக்கும் அபிமானிகள் பக்தர்களுக்கு மட்டுமே இந்த பதிவு. தலைவர் மறைந்து தமிழகத்தில் நடைப்பெற்ற பொதுதேர்தல் ஆகட்டும் பாராளுமன்ற தேர்தல் ஆகட்டும் தமிழகத்தை பொறுத்த வரை திராவிட ஆட்சிகள் தான் ஆண்டு வருகிறது.தலைவர் ஆரம்பித்த அ.தி.மு.க தலைவருடன் முடிந்து விட்டது.அவரது கட்சியை வைத்து சின்னத்தை வைத்து கொடியை வைத்து பலர் எம்.ஜி.ஆர் அபிமானிகளை ஒவ்வொரு தேர்தல் சமயங்களிலும் ஏமாற்றி வந்து ஒட்டுகளை வாங்கி பதவி சுகம் பணசுகம் அதிகார சுகம் இதைவிட எம்.ஜி.ஆர். என்ற மூன்றெழுத்து மந்திரத்தின் பெயரை இருட்டடிப்பு செய்து நம்மவர்களை முட்டாள் ஆக்கிவிட்டார்கள். இவர்களால் தலைவரின் அபிமானிகளுக்கு இதுவரை ஒன்றுமே செய்யவில்லை. மேலும் ஜெயலலிதாவின் பாதையிலேயே தமிழ்நாட்டை இப்பொழுது இருக்கும் கட்சி ஆட்சி நபர்கள் கொண்டு செல்கின்றனர். தலைவரின் கடந்த கால ஆட்சியை எடுத்து சொல்ல கூட ஆள் இல்லை. கடந்த 29.ஆண்டுகளில்1991. 2001,2011,2016. தேர்தலில் அ.தி.மு.க வெற்றி பெற்றாலும்.. 1989 1996.2006 ஆகிய தேர்தலில் தி.மு.க. என்ற கட்சியை மிக பெரிய அளவில் அதிமுக வளர்த்து விட்டு 3 முறை ஆட்சியை பிடிப்பதற்கு சாதகமாக்கிவிட்டது. இனி வரும் தமிழக பொதுத் தேர்தலில் தலைவரின் உள்ளங்கள் தலைவரின் புகைப்படத்தை போட்டு 234 தொகுதிகளிலும் சுயேச்சை ஆக போட்டியிடவேண்டும். அப்பொழுது கூட இவர்கள் தலைவர் பெயரை உச்சரிக்க மாட்டார்கள். ஜெ.ஜெ. எனவும் மோடி டாடி என்றும் பேட்டி கொடுப்பார்கள். தலைவரின் பெயரை கட்சியிலும் ஆட்சியிலும் 100 சதவீகிதம் புகழ் பாடுவதாக இருந்தால் நாளைய தலைமுறைக்கு தலைவரின் பெயர் கால காலமாக நிலைக்கும்.இதை விடுத்து எல்லாவற்றிலும் ஜெ படம் இபிஎஸ் படம் ஒபிஎஸ் படம் கட்சி காரர்கள் படம் வேட்பாளர்கள் படம் எல்லாமே பெரிதாக போட்டு கட்சி நிறுவனர் படமில்லாது போஸ்டர் பேனர் தலைமை கழகத்தில் தலைவர் படமின்றி பேனர் இப்படி எல்லாவற்றிலும் தலைவரை மறைத்த கூட்டம் திருந்துமா... தலைவரின் பக்தர்கள் கண்னை முடி வாயை போத்தி காதை அடைத்து தான் இருக்கவேண்டுமா? சிந்தித்து பார்த்து செய்கை மாற்றி தலைவரின் புகழைப்பட உருப்படியான முடிவு எடுங்கள். நன்றி!. உரிமைக்குரல் ராஜு.......... Courtesy: fb.,
-
மக்கள் திலகம் எம்ஜிஆர் உயிருடன் இருந்தவரை எந்த கருத்தையும் செய்திகளையும் செல்லாதவர்கள் தற்போது ஊடகங்களிலும் பத்திரிகைகளிலும் மக்கள் திலகம் எம்ஜிஆரை பற்றி சொல்லும் பல தகவல்கள் உண்மைக்கு மாறாக இருப்பதை உணர முடிகிறது . தங்களை முன்னிலை படுத்தி பெருமை படுத்தி கொள்வதில் என்ன லாபம் ?
இன்றைய ஆளும் கட்சி பதவியில் இருப்பவர்கள் கட்சி பொறுப்பில் உள்ள நிர்வாகிகள் அனைவரும் மக்கள் திலகம் எம்ஜிஆரை மறந்து தேர்தல் களத்தில் இருக்கிறார்கள் . மக்கள் திலகத்தின் உண்மையான தொண்டர்கள் மட்டுமே என்றுமே அவர் நினைவாகவே வாழ்ந்து வருகிறார்கள் என்பது நிதர்சனமான உண்மை .
மக்கள் திலகத்தை மறந்தவர்களையும் , நடக்காத ஒன்றை நடந்ததாக கூறி எம்ஜிஆரின் புகழை சீர் குலைக்கும் நபர்களையும் காலம் நமக்கு அடையாளம் காட்டி விட்டது . இனி ஏமாற மாட்டோம் .
இனியாவது திருந்துங்கள் ......
போடும் பொய்த்திரையை கிழித்து விடும் காலம்
புரியும் அப்போது மெய்யான கோலம்
பிறவியில் எவனும் பிழைகளை சுமாந்தே
வாழ்க்கையை தொடாங்கவில்லை - பின்பு
அவனிடம் வளர்ந்த குறைகளை சொன்னால்
வார்த்தையில் அடங்கவில்லை..
எதுவும் இதில் அடக்கம் -
இது ஏன்னென்று எதிர்காலம் விடை கூறட்டும் !! .......... Thanks wa.,
.
-
மக்கள் திலகம் எம்ஜிஆர் அவர்கள் என்றுமே எளிமையாக வாழ்ந்தவர் . ஆடம்பரங்கள் மற்றும் , அளவிற்கு மீறிய தனி மனிதர்களின் விளம்பரத்தை விரும்பாதவர் . மக்கள் திலகம் கூட்டிய பொதுக்குழு என்றால் வெறும் பத்திரிகைகளில் செய்தி மட்டும் வரும்.பொதுக்குழுவில் காரசாரமான விவாதங்கள் , கட்சி தலைவர்கள் , மாவட்ட செயலாளர்கள் , பொதுக்குழு உறுப்பினர்கள் பலரின் பேச்சினை தொடர்ந்து சுமார் 10 மணி நேரம் தொடர்ந்து நடைபெறும். இறுதியில் மக்கள் திலகம் விரிவாக பதில் அளித்து நிறைவு செய்வார் .இதுதான் ஜனநாயகம் .நாம் வாழ் நாளில் கண் கூடாக பார்த்தது . மறக்க முடியாத தலைவரின் மாண்பினை தெரிந்து கொண்டோம்.
இன்றைய அரசியலில் தங்களை நிலை நிறுத்தி கொள்ள தனிப்பட்ட தலைவர்கள் முதல் தொண்டர்கள் வரை செய்து வரும் விளம்பர வெறி மிகவும் வருந்ததக்கது .முழு பக்க விளம்பரங்கள் , துதி பாடும் வெத்து வேட்டு வார்த்தை ஜாலங்கள் ,மக்கள் திலகத்தின் படத்தையே முற்றிலும் மறந்து விட்டது மிகவும் கொடுமை ...அதற்கு காலம் தக்க சமயத்தில் தகுந்த பதில் வழங்கும்......... Thanks wa.,
காலைவணக்கம்அனைவருக்கும்♥♥♥♥
-
உண்மையிலேயே களம் கண்ட வேங்கை, சிங்கம் , எங்கள் தங்கம்....தலைவரின் வெற்றி சாதனையில் ஈரோடு மாநகர். நகரில் 1968 குடியிருந்த கோயில் 100 நாள். 1969. அடிமைப்பெண் 100 நாள் 1970 மாட்டுக்கார வேலன் 140.நாள் 1971 ரிக்க்ஷாக்காரன் 138 நாள் தொடர்ந்து 4 வருடம் தலைவர் படம் சாதனையாகும். 1968 ஒளி விளக்கு 85 நாள் 1969 நநம்நாடு 96.நாள் 1070 என் அண்ணன் 83 நாள் 1971. குமரிக் கோட்டம் 78.நாள். 1968.ரகசியபோலிஸ் 77 நாள் 1970.எங்கள் தங்கம் 84 நாள் ,.தேடி வந்த மாப்பிள்ளை70 நாள் 1971.நீரும் நெருப்பும் 66 நாள். சாதனையில் மக்கள் திலகமே நகரில் என்றும் முன்னனி. உரிமைக்குரல் ராஜு.............. Thanks wa.,
-
மக்கள் திலகத்தின் சாதனையில் .... மதுரை மாநகரில் முதலிடம். சில வெற்றிகள். நகரில் சினிமா படவுலகம் தொடங்கி 1977 வரை இரண்டு அரங்கில் திரையீடு சாதனை படைத்த காவியம். தாய்க்குப்பின் தாரம். சந்திரா 98 நாட்கள் மீனாட்சி 63 நாட்கள் . மொத்தம் 161 நாட்கள் ஒடிய படம். அடுத்து காம்பளக்ஸில்
இரண்டு அரங்கில் திரையிட்டு ஒரு அரங்கில் 200 நாள் ஒடிய காவியம். உரிமைக்குரல். சினிப்பிரியா 200 நாள் மினிப்பிரியா 29 நாள் மொத்தம் 229 நாள். அடுத்து இரண்டு அரங்கில் வெளிவந்து 100 நாள் ஒடியதும் தலைவர் படங்களே!.1972 ல் நல்லநேரம் அலங்கார் 112 நாள் மூவிலேண்ட் 36 நாள். 1975 ல் பல்லாண்டு வாழ்க. அலங்கார் 110 நாள் . சினிப்பிரியா 28 நாள். நகரில் அதிகம் இரண்டு அரங்கில் திரையிட்ட படங்கள் தலைவரின் காவியங்களே! மேலும் மதுரை சாதனைகள் தொடரும். உரிமைக்குரல் ராஜு........... Thanks wa.,
..
-
நாகர்கோவில் நகரில் நாடு போற்றும் நல்லவரின் சாதனைகள் சில... நகரில் இதயவீணை முதல் நினைத்ததை முடிப்பவன் வரை வெளியான 7 படங்கள் தொடர் சாதனைகள்....
1) இதயவீணை - 54. 2) உலகம் சுற்றும் வாலிபன் - 112 3) பட்டிக்காட்டு பொன்னையா - 62
4)நேற்று இன்று நாளை - 77 5) உரிமைக்குரல் -. 83. 6) சிரித்து வாழ வேண்டும் - 52. 7) நினைத்ததை முடிப்பவன் - 70 இப்படி தொடர்ந்து நகரில் 2 வருடத்திற்குள் 7 வண்ணப்படங்கள் ஒடிய வரலாறு எந்த நடிகருக்கும் கிடையாது. ........உரிமைக்குரல் ராஜு..... Thanks wa.,
-
நாகர்கோவில் நகரில் நாடு போற்றும் நல்லவரின் சாதனைகள் சில... நகரில் இதயவீணை முதல் நினைத்ததை முடிப்பவன் வரை வெளியான 7 படங்கள் தொடர் சாதனைகள்....
1) இதயவீணை - 54. 2) உலகம் சுற்றும் வாலிபன் - 112 3) பட்டிக்காட்டு பொன்னையா - 62
4) நேற்று இன்று நாளை - 77 5) உரிமைக்குரல் -. 83. 6) சிரித்து வாழ வேண்டும் - 52
. 7) நினைத்ததை முடிப்பவன் - 70 இப்படி தொடர்ந்து நகரில் 2 வருடத்திற்குள் 7 வண்ணப்படங்கள் ஒடிய வரலாறு எந்த நடிகருக்கும் கிடையாது. .............. உரிமைக்குரல் ராஜு........ Thanks wa.,
-
சென்னை நகர வெற்றி.. தேவிபாரடைஸ் திரையரங்கில் தலைவரின் இரண்டு காவியங்கள் ஒவ்வொரு ஆண்டிலும் வசூல், ஒடிய நாளில் மாபெரும் சாதனை.... 1975 ல் நி. முடிப்பவன் 105 காட்சி தொடர் அரங்கு நிறைந்து...84 நாளில் பெற்ற வசூல்.. 6,26,932.95 ஆகும். பல்லாண்டு வாழ்க... 104 நாளில் 7,93,428.80 ஆகும். அதன் பின்பு 1977 ல் தலைவரின் இன்று போல் என்றும் வாழ்க திரைப்படம் 101 நாள் வசூல் 8,23,794.90. அதே ஆண்டில் வெளி வந்த தலைவரின் மீனவ நண்பன் 117 காட்சிகள் தொடர் அரங்கு நிறைந்து 104 நாள் ஒடி பெற்ற வசூல். ரூ.8,26,742.50. ஆகும். இவ்வரங்கில் மற்ற நடிகர்களின் படங்கள் 100 நாள் கண்டும் 6 லட்சத்தை தாண்டவில்லை... சொர்க்கம் ( தே.பார) 100 நாள். 5,61,608.50. ராஜா 99.1/2 காட்சி (.முழுமையாக 100 ஒட்டப்படவில்லை அன்று இரவு காட்சி ரத்து... 6.லட்சம் வரவில்லை. அடுத்து நீதி என்ற படம் 99 நாள் வசூல் 5 லட்சத்திற்குள் தான். இது மட்டுமல்ல... அவர்களின் சாந்தி அரங்கில் 100 நாளை கடந்த , ஒட்டப்பட்ட படங்களை தலைவரின் நி. முடிப்பவன் 84 நாள் ஒடி வென்றது. கலாட்டா கல்யாணம் 100.நாள் 4,39,670.52. அடுத்து தெய்வ மகன் 100 நாள் 4,26,337.51..அடுத்து தி.மோகனா 100 நாள் 5,50,690.88 இப்படி பல படங்களை வென்றுள்ளது.. பட்டியல் தொடரும்... உரிமைக்குரல் ராஜு....... Thanks wa.,
-
இன்று மதியம் K T V யில் பொன்மனச்செம்மல் வழங்கும் பிரம்மாண்ட வசூல் படைப்பு... Blockbuster Mega Hit... "நினைத்ததை முடிப்பவன்" காவியம் ஒளிபரப்பட்டது....
-
மதிப்பிற்குரிய அண்ணன் சைதையார் அவர்களுக்கு ஒரு அன்பு வேண்டுகோள் . இன்று சென்னை தொலைக்காட்சி அருகில் உள்ள அண்ணா அரங்கில் ஐயா H.V.ஹண்டே அவர்கள் எழுதிய தலைவர் எம்.ஜி.ஆர். மறுபிறவி எடுத்த நிகழ்வு பற்றிய புத்தகம் வெளியிடப்பட்டது. தலைவரின் அற்புத மனிதநேயத்தை பற்றி திரு. பொன்னையன் அவர்கள். அமைச்சர் திரு. ஜெயக்குமார் அவர்கள் , திரு. ஜே.சி.டி பிரபாகரன் அவர்கள் என பலர் பேசினார்கள். விழாவில் அண்ணா அரங்கம் எப்படி உருவானது பற்றி பேசிய திரு. பொன்னையன் அவர்கள் அரசு பணத்தில் கட்ட. பொருளாதாரம் இல்லை என்றதும் தலைவர் தன் சொந்த பணம் (அன்று1983ல் ) ரூபாய் 25,000 ஆயிரத்தை முன் பணமாக கொடுத்தார் என்று பேசினார். தலைவரின் பெயர் போட்ட, அடிக்கல் நாட்டிய நினைவு தகடு அங்கு உள்ளது. ஆனால் வந்திருந்த பலருக்கும் ஒரு அதிர்ச்சி கண்ணில் பட்டது. அண்ணா அரங்கில் வாயிலில் பேரறிஞர் அண்ணா அவர்களின் திருவுருவப்படம் வைக்கப்பட்டது. வரவேற்கிறோம். அதன் அருகில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அவர்களின் படம் அண்ணா படம் அளவுக்கு உள்ளது. ஆனால் அந்த அரங்கம் உருவாக காரணமாக இருந்த நம் அன்புத் தலைவரின் திருவுருவப்படம் இல்லாது கண்டு கண்கலங்கினோம். இதை கூட பார்க்கவில்லை, கவனிக்கவில்லை நம் அரசாங்கம். 1968.ல் தலைவர் ஒரு சமயம் தி.மு.க. கூட்டத்தில் பேசும் போது சொன்னார். முன்பு எல்லாம் அண்ணா அவர்களின் படத்தை நகராட்சியில் முக்கிய இடங்களில் வைத்தால் உடனே அப்புறப் படுத்தினார்கள். அன்றைய (காங்கிரஸ்) .ஆட்சியில் .ஆனால் இன்று நம் அண்ணாவின் படம் எடுக்கப்பட்ட இடங்களில் எல்லாம் அண்ணாவின் திருவுருவபப்படம் காட்சியளிக்கிறது என்பதை நினைத்து பூரிப்படைகின்றேன் என்றார் புரட்சித்தலைவர்.அப்படி பேசி அண்ணா அவர்களுக்கு புகழ் பாடிய அருமைத் தலைவரின் படமில்லை. என்பதை நினைத்து வருந்துகின்றோம்.... ஆனால் இது போன்ற நிகழ்வுகளுக்கு அரசாங்கத்தில் யார் காரணம்.... அந்த அம்மையார் இருந்த போது தான் இப்படி ஒரு நிகழ்வு.. இப்பொழுது மனம் திறந்து மேடையில் தலைவரை பற்றி பேசிய அமைச்சர் உட்பட , அவர்கள் நினைத்தால் நாளையே அண்ணா அரங்கில் தலைவரின் திருவுருவ படம் வைக்கலாமே... இதுப் போல தலைவர் நினைவிடம், தலைமை கழகம், கோயம்பேடு பஸ் நிலையம் ஆகிய முக்கிய இடங்களில் ( தேர்தல் நடந்த பின்) வைக்கலாமே..... அன்புடன் அனைத்து தலைவரின் பக்தர்கள் சார்பில் தங்களிடம் இந்த அன்பு கோரிக்கை..... நன்றி. அண்ணா! உரிமைக்குரல் ராஜு............. Thanks wa.,...
-
மக்கள் திலகத்தின் சாதனையில் கடலூர் நகரின் வெற்றிகள் சில. நகரில் முதல் 100.நாள் ஒடிய திரைப்படம் மதுரை வீரன் - 1956 நியூசினிமாவில் 111நாட்கள் ஒடியது. இங்கு 1954 ல் மலைக்கள்ளன் 77 நாள். 1956 ல் அலிபாபாவும் 40.திருடர்களும் 76.நாள்1955.ல் குலேபகாவலி முத்தையா அரங்கில் 71 நாட்களும் 1956ல் தாய்க்குப்பின் தாரம் 63.நாளும்,.1957.ல் சக்கரவர்த்தி திருமகள் 60.நாளும்,.புதுமைப் பித்தன் 55 நாளும் ஒடியுள்ளது. மேலும் கடலுரில் அற்புத சாதனைகள் தொடரும்... உரிமைக்குரல் ராஜு....... Thanks wa.,
-
மக்கள் திலகம் ஒருலரின் திரைப்படம் மட்டும் தான் ABC என மூன்று சென்டர்களிலும் சாதனையை உருவாக்கியுள்ளது. அதற்கு சில சாதனைகள். 1).அருப்புக்கோட்டை மலைக்கள்ளன் 74 நாள். 2).திண்டிவனம் ஒளி விளக்கு 63 நாள்.3) தென்காசி எங்கவீட்டுப்பிள்ளை 72.நாள் 4) திருப்பத்தூர் ( வேலூர்) உ.சு. வாலிபன் 72 நாள். 5).தேனீ மாட்டடுக்கார வேலன் 70.நாள்(டூரிங் தியேட்டர் லட்சுமி) 6) ராஜபாளையம் என்அண்ணன் 50.நாள் 7) செங்கவ் பட்டு திருமலை அரங்கு மதுரைவீரன் 76 நாள். 8) நாகபட்டினம் நம்நாடு 52 நாள் 9).செங்கோட்டை பத்மனாபா. நாடோடி மன்னன் 55 நாள் 10).விருத்தாசலம் காவல் காரன் 50.நாள் 11) சாலைப்புதூர் ( கருர் அருகில்) உரிமைக்குரல் 50.நாள். 12) திருவள்ளுர் நேற்று இன்று நாளை 50 நாள் 13) வில்லிவாக்கம் நாதமுனி பெற்றால் தான் பிள்ளையா 55.நாள் 14) காட்டு மன்னார் கோவில் ஒளி விளக்கு 50.நாள்.15)சிவகாசி நாடோடி மன்னன் 60.நாள்.16) திருச்சி லால்குடி எங்க வீட்டுப்பிள்ளை 50 நாள்.17) கோவில்பட்டி நல்ல நேரம் 50.நாள். 18).மேட்டுப்பாளையம் ( ஊட்டி) உ.சு.வாலிபன் 57 நாள். 19) கோபி செட்டிபாளையம் மாட்டுக்கார வேலன் 50 நாள்.20) மதுராந்தகம் ஆயிரத்தில் ஒருவன் (.காயத்திரி அரங்கு) .50.நாள். 21) குன்னூர் அடிமைப்பெண் 50 நாள் 22) திருத்துறைப்பூண்டி நம்நாடு 50 நாள். 23) காரைக்கால் ரிக்க்ஷா க்காரன் 50 நாள்.24) மேட்டூர் அடிமைப்பெண் 50.நாள்.25) சங்கரன் கோவில் நாடோடி மன்னன் 50.நாள். தொடரும் சாதனைகள்... உரிமைக்குரல் ராஜு........ Thanks wa.,.
.,
-
சென்னை பரங்கிமலை ஜோதிஅரங்கில் வெற்றி நடைபோட்ட மக்கள் திலகத்தின் திரைப்படங்கள்... 1975 ல் பல்லாண்டு வாழ்க 76 நாட்களும்,.1976.ல் நீதிக்குத் தலை வணங்கு 71நாட்களும் ஒடி நிரந்தர சாதனையாக நிற்கிறது.
உரிமைக்குரல் ராஜு......... Thanks wa.,
-
இசையமைப்பாளர் இளைராஜா 1976 ல் அன்னக்கினி படம் மூலம் தமிழ் திரையுலகில் நுழைந்தார். அவர் பேசும் போது அவர் இசை அமைத்த அன்னக்கிளி படத்தின் பாடல் தான் எங்கும் ஒலித்ததாகவும் தலைவரின் பாடல்கள் மற்ற நடிகர்களின் பாடல்கள் பெரிய அளவில் மக்களிடம் பாப்புலர் ஆகவில்லை என்று இப்பொழுது பேசுகிறார்.. 1975 1976 களில் புரட்சி தலைவரின் "இதயக்கனி " "நாளை நமதே " "பல்லாண்டு வாழ்க", "நினைத்ததை முடிப்பவன்", " நீதிக்குத்தலை வணங்கு ",உழைக்கும் கரங்கள். ஊருக்கு உழைப்பவன் படபாடல்கள் ஒலிக்காத கல்யாண வீடு பொதுக்கூட்டங்கள் வீடுகளில் ,.ரேடியாவில் இலங்கை வானொலியில் இடம் பெறாத ஒளிப்பரப்பாத நாட்கள் நேரங்கள் இல்லை... இளையராஜாவுக்கு இப்பொழுது தான் ஞானயோதயம் வந்துள்ளது. தலைவரின் ஒரு படத்திற்காவது இசை அமைக்கவேண்டும் என ஏங்கி பேட்டிக் கொடுத்த காலங்களை மறந்து அன்னக்கிளி படபாடலை பற்றி பேசுகிறார். அந்த பாடல்கள் இன்று வரை கேட்கப்படுகிறதா?. அல்லது புரட்சித் தலைவரின் பாடல்களை நாம் மறந்து விட்டோமா. இளையராஜாவின் கர்வம் இன்னும் அடங்கவில்லை. தான் தான் தமிழ் நாட்டில் சிறந்த இசை ஞானி என்று தன்னையே புகழும் கேவலம் இவருக்கு கை வந்த கலையாகும்.. தலைவரின் பாடல்கள் அன்று எட்டு திசையிலும் ஒலித்துக் கொண்டிருந்த நேரம், அனல் பறக்கும் பாடலை கேட்டாலே அன்று அதிர்ந்தது எதிர் கட்சிகள் மாற்று நடிகரின் ரசிகர்கள். 1975 ல் ஒரே பாடலான தென்னகமாம் இன்பத்திருநாட்டில் .... அடுத்து1976ல் நான் பார்த்தா பைத்தியக் காரன் பாடல் ... இந்த பச்சைக்கிளிக்கொரு... பாடல் நாளை உலகை ஆளவேண்டும் பாடல்.. எதிரிகளை கதி கலக்கிய பாடல்கள் ஆகும்... இன்னும் பல பாடல்கள் உண்டு.இளையராஜா தன்னை மறந்து மமதையில் , போதயில் மதி மயக்கத்தில் ரீல் சுற்றுகின்றார். எம்.எஸ்.வீ. , டி.எம்.எஸ்.,.எஸ்.பி. பி, கே.ஜே.யேசுதாஸ் பாடிய பாடல்கள் நம் தரைவரால் புகழ் பெற்று இன்று வரை திகழ்கின்றது...இசையமைப்பாளர் இளைய ராஜா மேலும் தவறான செய்தியை பதிவிட்டால் கண்டன கணைகள் தான் தொடரும்... உரிமைக்குரல் ராஜு..... .. Thanks wa.,