திருச்சி- ராமகிருஷ்ணா dts., திரையரங்கில் புரட்சிதலைவர் வழங்கும்மகத்தான வெற்றி வசூல் காவியம்" உழைக்கும் கரங்கள்",25-01-2020 முதல் வெற்றி உலா......... Thanks.........
Printable View
திருச்சி- ராமகிருஷ்ணா dts., திரையரங்கில் புரட்சிதலைவர் வழங்கும்மகத்தான வெற்றி வசூல் காவியம்" உழைக்கும் கரங்கள்",25-01-2020 முதல் வெற்றி உலா......... Thanks.........
https://youtu.be/sPui3jpSejo......... Thanks.........
"திண்டுக்கல் மாநகரில் சரித்திர நாயகன் பாரதரத்னா டாக்டர் புரட்சி தலைவர் அவர்களின் பார் போற்றும் விழா"
மனித நேய மாணிக்கம் மக்கள் திலகம் எம்.ஜி.ஆர் பக்தர்கள் குழு,
பக்தர்கள் அறக்கட்டளை சார்பில் தொடர்ந்து விழா நடத்தி தற்சமயம் 15ஆம் ஆண்டில் அடியெடுத்து வைத்து மாபெரும் சாதனை படைத்து வருகிறார் சகோதரர் " திண்டுக்கல் மலரவன்
மிகவும் எளியவர் திண்டுக்கல் மலரவன்!!
நமது புரட்சி தலைவரின் விழா நடத்தி சாதனை படைப்பதில் மிகுந்த வல்லமை படைத்தவர் திண்டுக்கல் மலரவன்!!
திண்டுக்கல், திருச்சி பக்தர்கள் சார்பில் நடைபெறும் மாபெரும் வரலாற்று விழா!!
பணத்தால் அதுவும் நமது தலைவர் அவர்களால் வசதி படைத்த ஜாம்பவான்கள் மத்தியில் திண்டுக்கல் மலரவன் தனது ஏழ்மை நிலையிலும் விடாமுயற்சியோடு விழா நடத்தி தலைவரின் மணிமகுடத்தில் ஒரு வைரக்கல்லாக ஜொலித்து வாழ்ந்து வரலாறு படைப்பவர்!!
நமது தங்கத்தலைவர் முதன்முதலில் திண்டுக்கல் பாராளுமன்றத் தேர்தலில் 1973ஆம் ஆண்டு திரு மாயத்தேவர் அவர்களை நிறுத்தி ....
துரோகிகளே!!
திண்டு எங்களுக்கு ....
கல் உங்களுக்கு ....
என்று போர்ப்பரணி பாடியதுடன் களத்தில் வெற்றிமுரசு கொட்டியவர்!!
நமது தலைவரை நிலைநிறுத்திய திண்டுக்கல் மாநகரில் நடைபெற இருக்கும் மனித நேய விழாவில் கலந்து கொள்ள தபால் வழியே அழைப்பிதழ் கொடுத்து அழைத்திருக்கிறார் திண்டுக்கல் மலரவன்!!
அழைப்பிதழ் கிடைத்தவர்கள், முகநூல் உறவுகள், உண்மை பக்தர்கள் அனைவரையும் திண்டுக்கல் மாநரமே குலுங்கும் வகையில் மனித நேய மாணிக்கம் எம்ஜிஆர் பக்தர்கள் குழு சார்பில் இந்தப் பதிவினை அழைப்பாக ஏற்றுக்கொண்டு விழாவில் கலந்து கொள்ள வருமாறு அன்போடு அழைக்கின்றோம்!!
நமது தலைவரின் உண்மை பக்தர்கள் அனைவரும் ஓரணியில் திரண்டு திண்டுக்கல் மலரவன் சார்பில் நடைபெறும் விழாவினை மாண்புறச் செய்வோம்!!
வரலாற்று நாயகனின் புதியதோர் வரலாற்று நிகழ்வினை மீண்டும் திண்டுக்கல் மாநகரில் பதிவிடுவோம்!!
அழைக்கிறார் திண்டுக்கல் மலரவன்.....
அணி திரள்வோம்....
வரலாறு படைப்போம்....
வாருங்கள் தோழர்களே!!
நாள் : 9-02-2020 ஞாயிற்றுக்கிழமை
நேரம் :
காலை 10.30 To இரவு 9 மணி வரை
இடம் :
மகாலிங்க நாடார்
தெய்வானையம்மாள் திருமண
மண்டபம்.
நத்தம் ரோடு, ( இரயில் நிலையம்)
அருகில்
நாகல் நகர், திண்டுக்கல் - 3
வெளியூரில் இருந்து வரும் அன்பர்கள் முதல்நாள் இரவில் வந்தால் திருமண மண்டபத்தில் தங்கிக்கொள்ளலாம்.
குறிப்பு:
விழாவில் கலந்து கொள்ளும் பக்தர்கள் அனைவருக்கும் மதிய உணவு,
மாலை தேநீர் வழங்கப்படும்.
நமது புரட்சி தலைவர் அவர்களின் உண்மை பக்தர்கள் அனைவரையும் தமிழகத்தின் பக்தர்கள் மற்றும் அண்டை மாநில பக்தர்கள் அனைவரையும்
வருக! வருக! வருக!!
என விழாக்குழுவினர் சார்பில் அனைவரையும் அன்போடு வரவேற்கிறோம்.......... Thanks.. ......
குலேபகாவலி !
__________________
ஆஸ்கார் எனும் அரைவேக்காடுத்தனத்தை கையாள்பவர் இதை உற்று நோக்குங்கள் .
அடுக்கடுக்கான கேள்விகளில் அறிவுத் திறனை அடக்கி ஆளும் மக்கள் திலகம் .
அவரின் பதில்களால் ராணி அவர்கள் மக்கள் திலகத்தின் திறம்பட பதில்களை படிப்படியாக உள் வாங்கும் பாங்கு அதை கண்களால் நம்மையும் உணரவைக்கும் தன்மை !
இறுதியில் ராணி அவர்கள் மெய்மறந்து மக்கள் திலகத்தை நோக்க நிதானமாக நின்று ராணியை , ராஜபார்வை பார்க்கும் நம் மக்கள் திலகம் .
தலை சிறந்த நடிப்பு என்பது யதார்தத்தின் வெளிப்பாடு இதை லாவகமாக கையாள்வார் மக்கள் திலகம் .
இதை முழவதுமாக உற்றுப் பாருங்கள் .
யதார்த்தத்தின் இலக்கணம் இந்த கேள்வி பதில் காட்சி தான் .
........... Thanks.........
தினமலர் -27/01/20
--------------------------------
*கல்கி எழுதிய பொன்னியின் செல்வன் நாவலை ,பிரபல நடிகர்களை வைத்து மணிரத்னம் இயக்குகிறார் . இந்நிலையில் , தவச்செல்வன் இயக்கத்தில் இந்நாவல்*அனிமேஷனில் உருவாகிறது .**
எம்.ஜி.ஆர். ஜெயலலிதா உருவங்களில் தயாராகும் இப்படம் குறித்து தவச்செல்வனிடம் கேட்டபோது , மணிரத்தனத்துக்கு போட்டியாக இப்படத்தை*உருவாக்கவில்லை . இரண்டு படங்களும் வேறு என்றார் .
தினத்தந்தி -26/01/20
---------------------------------
எம்.ஜி.ஆர். கனவு நனவாகிறது .
-------------------------------------------------
கல்கியின் பொன்னியின் செல்வன் கதையை திரைப்படமாக எடுக்க வேண்டும் என்பது எம்.ஜி.ஆரின் நீண்ட நாள் கனவாக இருந்தது .* "போஸ்டர்" வரை வந்து அந்த படம் கைவிடப்பட்டது .எம்.ஜி.ஆரின் பிறந்த நாள் அன்று அந்த கனவை நனவாக்கும் முயற்சியாக வந்தியத்தேவன் பொன்னியின் செல்வன்* பாகம் -1 என்கிற பெயரில்*அனிமேஷன் திரைப்படம் தயாராகிறது . மதன் கார்க்கி இந்த படத்துக்காக பாடல்கள் மற்றும் வசனங்களை எழுதி இருக்கிறார்
மலேசியாவில் மக்கள் தலைவர் எம்.ஜி.ஆர். கலை விழா*
-----------------------------------------------------------------------------------------
இதயக்கனி சமூக நல மன்றம் படைக்கும் மற்றும் இதயக்கனி இசை குடும்பம் படைக்கும் புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். கலை விழா மற்றும் மக்கள் தலைவர் எம்.ஜி.ஆர். 103 வது பிறந்த நாள் விழா* கடந்த 18/01/2020 சனியன்று இரவு 7 மணிக்கு மேல் டேவன்* ராயா மாசாய் , ஜோகூர் மாநிலம் , மலேசியாவில் மிக சிறப்பாக*இன்னிசை நிகழ்ச்சியில் மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். பாடல்கள் ஒலித்தன .பல பாடல்களுக்கு நடன கலைஞர்கள் நடனமாடி ரசிகர்களை மகிழ்வித்தனர் .
நிகழ்ச்சி தொகுப்பாளர் : இதயக்கனி சுகுமாறன்*
தினமலர்*
-------------------
அ .தி.மு.க.வை .மிஞ்சி எம்.ஜி.ஆரை புகழ்கிறார் பா.ஜ .க .மாநில செயலர் .
--------------------------------------------------------------------------------------------------------------------
எம்.ஜி.ஆர். பிறந்த நாள் விழா, மதுரையில் நடந்தது .* இதில் பங்கேற்க்க பா .ஜ .க. மாநில செயலர் ஸ்ரீநிவாசன் , எம்.ஜி.ஆர். நடிகர் என்ற முறையிலும், அரசியல் கட்சி தலைவர் என்ற முறையிலும் எந்த இடத்திலும், எந்த கடவுளையும் நிந்தனை செய்து மக்களை காயப்படுத்தியது இல்லை.* திராவிட இயக்கங்களை பிரிவினைவாத சிந்தனையில் இருந்து மீட்டு எடுத்தவர் .
எம்.ஜி.ஆர். ஒருபோதும் தேசத்தையோ , தேசிய ஒருமைபாட்டையோ, கேலி பேசியது இல்லை .* மத்திய அரசுடனும், பக்கத்துக்கு மாநிலங்களுடனும் , அரசியல் நல்லுறவு வைத்துக் கொள்ள வேண்டும் என்பதற்கு சிறந்த எடுத்துக் காட்டாக திகழ்ந்தார் .* தேசியத்தையும், தெய்வீகத்தையும் போற்றுவோர் யாராக இருந்தாலும் அவர்கள் காலடி மண்ணை திருநீராக நினைப்பவன் பா . ஜ க. தொண்டன் என்றார் .
இதைக் கேட்ட தொண்டர்கள் , எம்.ஜி.ஆர். புகழ் பாடுவதில் , அ. தி.மு.க. காரர்களை மிஞ்சிவிடுகிறாரே இவர் என ஆச்சரியப்பட்டனர் .
தூத்துக்குடியில் வேங்கையன் வெற்றி விஜயம் மற்றும் கொண்டாட்டம்*
-----------------------------------------------------------------------------------------------------------------
தூத்துக்குடி சத்யா அரங்கில் கடந்த 24/01/20 வெள்ளி முதல் புரட்சி நடிகர் எம்.ஜி.ஆரின் மகத்தான வெற்றி படைப்பான டிஜிட்டல் "அடிமைப்பெண் " தினசரி 3 காட்சிகள் நடைபெறுகிறது .
ஞாயிறு மாலை காட்சி (26/01/20) அரங்கு நிறைந்தது . மேலும் 150 நபர்கள்* நின்றபடியும் , தரையில் அமர்ந்தவாறும் படம் பார்த்தனர் . மொத்த பார்வையாளர்களில் சுமார் 100பேர் பெண்கள் .* மொத்த பார்வையாளர்கள் 550.
பார்வையாளர்கள் அனைவருக்கும் அரங்க நிர்வாகம் சார்பில், கோழி பிரியாணி, முட்டை பிரியாணி இலவசமாக வழங்கப்பட்டது .ரசிகர்கள் பட்டாசு வெடித்து அரங்க வாயிலில் கொண்டாட்டம். அரங்கத்தில் வேங்கையன் தோன்றும் பல காட்சிகளில் அலப்பரை அரங்கம் அதிரும் வகையில் இருந்தது .**
தகவல்கள் உதவி : நெல்லை நண்பர் திரு.வி.ராஜா .
தி.மு.கவிற்கு தீனிபோடுகின்ற எந்த கேள்விக்கும் பதில் சொல்லமாட்டேன் முன்னாள் மேயர் சைதை துரைசாமி பேட்டி
பொன்மனச்செம்மல் டாக்டர் எம்.ஜி.ஆர் மன்றம் சார்பில் எம்.ஜி.ஆர் பிறந்தநாள் விழா சென்னை தி நகரில் நடைபெற்றது
இதில் சிறப்புஅழைப்பாளராக முன்னாள் சென்னை மேயர் சைதை துரைசாமி கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார்
பின்னர் செய்தியாளர்களிடம் பேசுகையில்....
எம்.ஜி.ஆர் அவர்களின் புகழை காப்பாற்றுவது நாட்டுமக்களுக்கு அவர்செய்த சேவைகளை இளையதலைமுறைக்கு கொண்டு செல்வதைத்தான் எங்களது கடமையாக செய்துவருகிறோம்!
சென்ட்ரல் ரயில் நிலையத்திற்க்கும்,கோயம்பேடு பேருந்து நிலையத்திற்கும் எம்.ஜி.ஆர் பெயர் வைப்பதற்கு மத்திய, மாநில அரசுகள் எடுத்த முயற்சிகள் மறக்கமுடியாதது.
Whatsapp msg
எந்தவிதமான வேலைகளையோ அல்லது வியாபாரங்களையோ யாரும் செய்யலாம் . கேலி, கிண்டல் எதுவும் இருக்கக்கூடாது . இதற்க்கு எம்ஜிஆர் சொல்லும் அருமையான விளக்கம் .....
" ஒரு வியாபாரியின் திறமையைத்தான் கவனிக்கணுமே தவிர
அவன் விக்கிற பொருளைப்பற்றி கவலைப்படவே கூடாது "
மதுரை கண்ணன்!........... Thanks...
#இறைவனின் #சித்தம்
திருப்பதி அருகில் கைலாசநாதர் கோனை என்னும் ஒரு சிறு நீர்வீழ்ச்சி.
அங்கு ஒரு படப்பிடிப்பு நடந்து கொண்டிருந்தது. மக்கள்திலகத்துடன் எல்லோரும் உணவுக்காக உட்கார்ந்திருந்தனர்...
சற்றுத் தள்ளி, அழுக்கு உடை, தாடி மீசை கலைந்த கேசத்துடன் கூடிய கோவணம் கட்டிய ஆண்டி ஒருவர் மக்கள்திலகத்தை முறைத்துப் பார்த்துக்கொண்டே இருந்தார்...
நான் ரொம்ப நேரமா கவனித்துக்கொண்டேயிருக்கேன். அந்த மனிதர் என்னையே பாத்துட்டு இருக்காரு...ஏதாவது தேவையா இருக்கும்னு நெனைக்கறேன்...என்ன வேணும்னு கேளுங்க அவருக்கு? அப்படின்னாரு மக்கள்திலகம்... (பாருங்களேன்...எப்பவுமே கொடுக்கணுங்கற எண்ணம் தான் வாத்தியாருக்கு)
போய்க்கேட்டபோது, 'எனக்கு ஒன்றும் வேண்டாம்' என்று சொல்லி...மூர்த்தியின் (டைரக்டர் சேதுமாதவனின் தம்பி) பாக்கெட்டில் கைவிட்டு பால்பாயிண்ட் பேனாவை எடுத்தார்...
பிறகு கீழே கிடந்த ஒரு பிரவுன் பேப்பர் துண்டை எடுத்து விறுவிறுவென ஏதோ எழுதி, 'அந்த மனிதனிடம் கொடு' என்று எம்ஜிஆரைச் சுட்டிக் காண்பிக்கிறார் அந்த ஆண்டி...
மூர்த்தியும் கொடுக்க, அதைப் படித்து லேசான வியப்புடன் புன்முறுவல் பூக்கிறார்...
துண்டுப்பேப்பரில் எழுதியிருந்த அந்த வாசகம்...
"#நீதான் #நாளை #இந்நாட்டுக்கு #முதல்வர்...இது இறைவனின் சித்தம்...உன் முடிவு மிகச் சிறப்பு..."
இச்சம்பவத்திற்குப் பிறகு எவ்வளவு தேடியும் அந்த ஆண்டியைக் காணவில்லை...
மதுரை கண்ணன்!......... Thanks.........
வரும் வாரம் ராஜ் டிவியில் மக்கள் திலகத்தின் திரைப்பட கொண்டாட்டம் திங்கள் முதல் வெள்ளி வரை மதியம் 1.30 மணிக்கு
27-01-2020 திங்கள் - தேடி வந்த மாப்பிள்ளை
28 - 01-2020 செவ்வாய் - நாடோடி
29-01-2020 புதன் - மதுரை வீரன்
30-01-2020 வியாழன் -பணக்கார குடும்பம்
31-01-2020 வெள்ளி - காலத்தை வென்றவன்
ஆகிய திரைப்படங்களை நமது Uக்தர்கள் கண்டு மகிழவும் - தகவல் மதுரை ராமகிருஷ்ணன்... Thanks.........
என்றும் கலையுலக "அட்சய பாத்திரம்" புரட்சி நடிகர் எப்பொழுதுமே " நினைத்ததை முடிப்பவன்" டிஜிட்டல் காப்பி திருச்சி ஸ்ரீரங்கம்- ரெங்கராஜா dts., தினசரி 4 காட்சிகள் காட்சி தருகிறார்... Thanks.........
திரையுலக "கற்பக விருட்சம்" பொன்மனச்செம்மல் அளிக்கும் தித்திக்கும் பொன்னோவிய காவியமாம் "எங்க வீட்டு பிள்ளை" டிஜிட்டல் பிரிண்ட் திருச்சி - அருணா dts தினசரி 3 காட்சிகள் வருகை தருகின்றார்கள்......... Thanks.........
மறைந்த தமிழக முதலமைச்சர் எம்.ஜி.ஆர்
நூற்றாண்டு பிறந்த நாளை முன்னிட்டு
உருவம் பொறித்த சிறப்பு நாணயம் மத்திய அரசு வெளியிடு
மறைந்த தமிழக முதலமைச்சர் பாரத ரத்னா எம்.ஜி.ஆர் 100வது பிறந்த நாளை மத்திய அரசு அவரது உருவம் பொறித்த நாணயம் வெளியிடுகிறது.
தூத்துக்குடி பாரத ரத்னா எம்.ஜி.ஆர் நூற்றாண்டு பிறந்த நாள் குழு கடந்த சில ஆண்டுகளாக அவரது உருவம் பொறித்த சிறப்பு நாணயம் வெளியிட மத்திய அரசுக்கு பல்வேறு கோரிக்கை மனுக்களை அனுப்பி வந்தது.
பாரத ரத்னா எம்.ஜி' ஆர் உருவம் பொறித்த சிறப்பு தபால் தலையை மத்திய அரசு கெளரவித்தது.
அது போல சென்னை சென்ட்ரல் நிலையத்திற்கு பாரத ரத்னா எம்.ஜி.ஆர் பெயரை சூட்டமாநில எம்.ஜி.ஆர் பக்தர்கள் பாசறை மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றி சென்னை முன்னாள் மேயர் சைதை துரைசாமி தலைமையில் முதல்வர் எடப்பாடி ேக.பழனிச்சாமி அவர்களிடம் கோரிக்கை மனு கொடுத்தனர்.
தமிழக அரசின் கோரிக்கையை ஏற்று மத்திய அரசு சென்னை சென்ட்ரல் நிலையத்திற்கு பாரத ரத்னா எம்.ஜி.ஆர் பெயரை சூட்டியது.
பாரத ரத்னா எம்.ஜி.ஆர் உருவம் பொறித்த நாணயம் மட்டும் மத்திய அரசு வெளியிடவில்லை. தொடர்ந்து எம் .ஜி.ஆர் மன்றங்கள் மத்திய அரசை வற்புறுத்தி வந்ததால் பாரத ரத்னா எம்.ஜி.ஆர் உருவம் நாணயம் வெளியிட மத்திய அரசு நடவடிக்கை எடுத்தது.
மத்திய அரசு வெளியிடும் பாரத ரத்னா எம்.ஜி.ஆர் சிறப்பு நாணயம் விலை ரூபாய் 3055 ஆகும். இந்த நாணயத்தில் பல்வேறு உலோகங்கள் சேர்க்கப்பட்டுள்ளன.
பாரத ரத்னா எம்.ஜி.ஆர் சிறப்பு நாணயம் பெற கடைசி நாள் 29.2.2020 ஆகும். தேவைக்கு ஏற்ப தான் நாணயம் வெளியீடு டப்படுகிறது.இந்த நாணயம் பெற இந்திய அரசு மின்ட் மும்பை முகவரிக்கு அனுப்பலாம் அல்லது Security printing and minting corporation of India Ltd
spmcil.com என்ற இமெயில் முகவரிக்கு தொடர்பு கொண்டு பணம் அனுப்பலாம்.
தூத்துக்குடியில் பாரத ரத்னா எம் ஜி ஆர் நூற்றாண்டு பிறந்த நாள் குழு அமைப்பாளர் எஸ்.மோகன் தலைமையில் 25 பேர் சிறப்பு நாணயம் பெற பணம் செலுத்தியுள்ளார்கள்.......... Thanks.........
குடியரசு தினத்தன்று (26/01/20///0 காலை 10 மணியளவில்* சென்னை எம்.எம்.பிரிவியூ அரங்கில் மக்கள் தலைவர் /புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். இரு வேடங்களில் அசத்தலாக நடித்த "நாடோடி மன்னன் " பக்தர்கள் /ரசிகர்களுக்காக சிறப்பு காட்சி நடைபெற்றது . திரைப்படம் ஆரம்பித்த சில நிமிடங்களில் அரங்கம் நிறைந்தது . இடைவேளையில் ஸ்னாக்ஸ்* தேனீர் , மற்றும் , படம் முடிந்ததும் வந்திருந்த பக்தர்களுக்கு உணவளிக்கப்பட்டது .இடைவேளையில் திரு.க.செல்வகுமார்,வேதாரண்யம் (நாகை மாவட்டம் ) என்பவர் காலத்தை வென்றவன் , காவியமானவன் என்கிற கவிதைநயம் படைத்த நூலை வெளியிடும்* சம்பவம் நடைபெற்றது .* நிகழ்ச்சி ஏற்பாடு : மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். திரைப்பட திறனாய்வு சங்கம் மற்றும் மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். மாத இதழ் .
கடந்த ஞாயிறு (26/01/20) அன்று சென்னை தி.நகர் , பி.டி.தியாகராயர் அரங்கில் பொன்மன செம்மல் எம்.ஜி.ஆர். நற்பணி சங்கம் சார்பில் பிற்பகல் 3 மணிக்கு மேல்** மக்கள் தலைவர் எம்.ஜி.ஆர். அவர்களின் மனிதநேய 103 வது பிறந்த நாள் விழா வெகு சிறப்பாக அனுசரிக்கப்பட்டது .
புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். உருவப்படம் மேடையில் மலர்களால் அலங்கரிக்கப்பட்டு பூஜை செய்யப்பட்டது .* பிரபல பத்திரிகை ஆசிரியர் திரு.துரை கருணா , சினிமா உடை அலங்கார நிபுணர் திரு.எம்.ஏ.முத்து , நடிகை.ரஜினி நிவேதா ,மற்றும் உள்ளூர், வெளியூர் பக்தர்கள் பூஜையில் கலந்து கொண்டனர் .பின்னர் அரங்க வாயிலில் உள்ள மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். பேனர்கள், கட் அவுட் களுக்கு சிறப்பு பூஜைகளும், தீப ஆராதனைகளும்,பாலாபிஷேகமும்* நடைபெற்றன
திரு.துரை கருணா அனைவரையும் வரவேற்று , புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர்.அவர்களுக்கு* புகழ்மாலை சூட்டினார் .* பின்னர் .* *மாலை 4 மணிக்கு*ராஜ் டிவி புகழ் திரு.ராஜா அவர்களின் இசை கானத்தில்* கீழ்கண்ட பாடல்கள்*இசைக்கப்பட்டன .
1. மூன்றெழுத்தில் என் மூச்சிருக்கும்* -தெய்வத்தாய்*
2. நீங்க நல்லா இருக்கோணும் - இதயக்கனி*
3.மானல்லவோ கண்கள் தந்தது - நீதிக்கு பின் பாசம்*
4.தூங்காதே தம்பி தூங்காதே - நாடோடி மன்னன்*
5.பாட்டு வரும்* - நான் ஆணையிட்டால்*
6.தங்க பதக்கத்தின் மேலே -எங்கள் தங்கம்*
7.நல்ல வேளை நான் பிழைத்து கொண்டேன் -நான் ஆணையிட்டால்*
8.கட்டோடு குழலாட - பெரிய இடத்து பெண்*
9.மெல்ல போ மெல்ல போ - காவல்காரன்*
10என்ன உறவோ, என்ன பிரிவோ - கலங்கரை விளக்கம்*
11.துள்ளுவதோ இளமை - குடியிருந்த கோயில்*
12.இன்பமே உந்தன் பேர் பெண்மையோ - இதயக்கனி*
13.என்னை விட்டால் யாருமில்லை -நாளை நமதே*
14.தரைமேல் பிறக்க வைத்தான் - படகோட்டி*
15..கண் போன போக்கிலே - பணம் படைத்தவன்*
16.பாடும்போது நான் தென்றல் காற்று -நேற்று இன்று நாளை*
17.உலகம் அழகு கலைகளின் சுரங்கம் -உலகம் சுற்றும் வாலிபன்*
18.அன்பே வா - அன்பே வா ...
.19.ஆடலுடன் பாடலை கேட்டு -குடியிருந்த கோயில்*
20.இறைவா உன் மாளிகையில் - ஒளி விளக்கு*
21.கட்டி தங்கம் வெட்டியெடுத்து - தாயை காத்த தனயன்*
22.தரைமேல் பிறக்க வைத்தான் -படகோட்டி (2 வது முறை )
23.புதிய வானம், புதிய பூமி* - அன்பே வா
24.உன்னை அறிந்தால் -வேட்டைக்காரன்*
இடையில் மாலை 6 மணியளவில் அனைவருக்கும் சிற்றுண்டி, தேனீர்* *வழங்கப்பட்டது .**
சென்னை மாநகர முன்னாள் மேயர் திரு.சைதை துரைசாமி,அவர்கள் மேடையில் மக்கள் தலைவர் எம்.ஜி.ஆருக்கு புகழாரம் சூட்டி பேசினார் .தலைவரின் திரைப்பட சமுதாய, சமூக நல கருத்துக்கள், பாடல்கள், வசனங்கள்*வருங்கால சந்ததியினர், இளைய தலைமுறையினர் கவனத்திற்கு கொண்டு செல்லும் வகையிலும், அவர்கள் மனதில் பதியும் வகையிலும் நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்தல் சால சிறந்தது . அந்த வகையில் அனைத்து எம்.ஜி.ஆர். மன்ற*அமைப்புகள் தகுந்தபடி உழைத்து , நிகழ்ச்சி வெற்றிபெற பாடுபட வேண்டும்*என்று வேண்டுகோள் விடுத்தார் .
மேலும் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திற்கு மக்கள் தலைவர் எம்.ஜி.ஆர். பெயரை வைத்ததற்கு மத்திய அரசுக்கும், பிரதமர் நரேந்திர மோடிக்கும், கோயம்பேடு புறநகர் பேருந்து நிலையத்திற்கு புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். பெயரை வைத்த மாநில அரசுக்கும், முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கும் உலக எம்.ஜி.ஆர். பேரவை தலைவர் என்கிற வகையில் நன்றி தெரிவித்தார் .**
நிகழ்ச்சியில் பல்வேறு எம்.ஜி.ஆர். மன்ற அமைப்புகளை சார்ந்த பக்தர்கள், குறிப்பாக வெளியூரில் இருந்து திரு.எம்.கே.ராஜா (ஈரோடு ), திரு.மலரவன் (திண்டுக்கல் ), திரு.வாடியன் பாலன் , (விருதுநகர் ), திரு.செல்வகுமார் (வேதாரண்யம் ),திரு.மனோகர் (மதுரை )திரு.ரோசய்யா (அரக்கோணம் ),திரு.எஸ்.எஸ்.மணி (நெல்லை ) திரு.குணசேகரன் (பெங்களூரு ) மற்றும் பலர் கலந்து கொண்டனர்* அவர்களுக்கு பொன்னாடை அணிவித்து மரியாதை செய்யப்பட்டது .. அனைத்து எம்.ஜி.ஆர். மன்ற அமைப்புகளின் முக்கிய பக்தர்களுக்கும் , முக்கிய விருந்தினர்கள் திரு.சைதை துரைசாமி, திரு.துரை கருணா , திரு.எம்.ஏ. முத்து, நடிகை ரஜினி நிவேதா ஆகியோருக்கும்** பொன்மன செம்மல் எம்.ஜி.ஆர். நற்பணி சங்கம் சார்பில்* பொன்னாடை அணிவித்து கௌரவிக்கப்பட்டனர் திரு.பிரதீப் பாலு,(திரு.எம்.ஜி.சக்கரபாணி பேரன் )* .*திரு.முருகு பத்மநாபன் (தலைவர் , பிரான்ஸ் எம்.ஜி.ஆர். பேரவை ), திரு.எம்.ஏ..பழனி, (பெங்களூரு ) ஆகியோரும் நிகழ்ச்சியை சிறப்பித்த முக்கிய விருந்தினர்கள்*
அனைத்து எம்.ஜி.ஆர்.மன்ற அமைப்புகளும் பதிலுக்கு பொன்மன செம்மல் எம்.ஜி.ஆர். நற்பணி சங்க நிர்வாகிகளுக்கு பொன்னாடைகள் அணிவித்து மரியாதை செய்தனர் .
இறுதியில், நன்றி உரையில், திரு.துரை கருணா , புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். பெயர் சூட்டுவதற்கு உண்டான அனைத்து முயற்சிகள், ஏற்பாடுகள் செய்ய காரணமாக திகழ்ந்த உலக எம்.ஜி.ஆர். பேரவை தலைவர் திரு.சைதை துரைசாமி அவர்களுக்கு நன்றி தெரிவித்தார் . நிகழ்ச்சி ஏற்பாடு செய்த பொன்மன செம்மல் எம்.ஜி.ஆர். நற்பணி சங்கத்திற்கும் நன்றி தெரிவித்தார் . இரவு 9மணியளவில் நிகழ்ச்சி நிறைவு பெற்றது .
*
நாளை வெள்ளி (31/01/20) முதல் சென்னை சரவணாவில் மக்கள் தலைவர் எம்.ஜி.ஆர்., வழங்கும் "நம் நாடு " தினசரி 4 காட்சிகள் நடைபெறுகிறது .
திருச்சி மாநகரில் மக்கள் தலைவர் எம்.ஜி.ஆர். வாரம்*
---------------------------------------------------------------------------------------
பேலஸ்சில்* 21/01/20 முதல்* ரிக்ஷாக் காரன் - தினசரி 4 காட்சிகள் -4 நாட்கள்* * *நடைபெற்றது .
ராமகிருஷ்ணாவில்* 25/01/20 முதல்* உழைக்கும் கரங்கள் - தினசரி 4 காட்சிகள்* 4 நாட்கள் திரையிடப்பட்டது .
ஸ்ரீரங்கம்* ரெங்கராஜாவில்* 28/01/20* முதல் நினைத்ததை முடிப்பவன் -** தினசரி 4 காட்சிகள்* நடைபெறுகிறது .
அருணாவில் -29/01/20 முதல் எங்க வீட்டு பிள்ளை -தினசரி 3 காட்சிகள்*** *நடைபெறுகிறது . * **
புதிய படங்களுக்கு போதிய வசூல்/வரவேற்பு* இல்லாததாலும் , கூட்டம் குறைந்ததாலும் இடைப்பட்ட நாட்களுக்கு மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். திரைப்படங்கள் திரையிடப்பட்டு அமோக வசூல் கண்டதாக விநியோகஸ்தர்கள் தகவல் அளித்ததாக திருச்சி நண்பர் திரு. கிருஷ்ணன் தெரிவித்துள்ளார் ..
கல்கண்டு வார இதழ் -05/02/20
-----------------------------------------------
பேசியது போன்றே நடந்தவர்*
------------------------------------------------
1982ம் ஆண்டு பள்ளி மாணவர்களுக்குஇலவச சத்துணவு திட்டத்தை எம்.ஜி.ஆர். அறிமுகப்படுத்தினார் .* இந்த சத்துணவு திட்டத்தை அன்னை தெரசா மிகவும் பாராட்டினார் .* இது தொடர்பாக சென்னை வள்ளுவர் கோட்டத்தில் நடந்த விழாவில் அன்னை தெரசா கலந்து கொண்டு எம்.ஜி.ஆருக்கு பாராட்டு தெரிவித்தார் .
பெண்களுக்காக தனி பல்கலை கழகத்தை அமைக்க எம்.ஜி.ஆர். முடிவு செய்தார் .அதன்படி , 1984ம் ஆண்டு கொடைக்கானலில் பெண்களுக்கான தனி பல்கலை கழகம் உருவானது .அந்த விழாவில் அன்னை தெரசா கலந்து கொண்டார் .அப்போது காஷ்மீர் முதல்வராக இருந்த பரூக் அப்துல்லா உட்பட பலரும் கலந்து கொண்டனர் .* தனது தொண்டால் பெண் இனத்துக்கு பெருமை தேடி தந்த அன்னை தெரசாவின் பெயர் பெண்கள் பல்கலை கழகத்துக்கு சூட்டப்படுவதாக விழா மேடையில் பலத்த கரகோஷத்துக்கு இடையே எம்.ஜி.ஆர். அறிவித்தார் .* அன்னை தெரசா அதை கேட்டு நெகிழ்ந்து போனார் . மேடையில் இருந்த பரூக் அப்துல்லா எழுந்து மகிழ்ச்சியில் எம்.ஜி . ஆரை* தழுவிக் கொண்டார் .
இந்து மதத்தை சார்ந்த எம்.ஜி.ஆர்* கிறிஸ்துவ மதத்தை சார்ந்த அன்னை தெரசா வின் பெயரை பெண்கள் பல்கலை கழகத்துக்கு சூட்டுகிறார் .முஸ்லீம் மதத்தை சார்ந்த பரூக் அப்துல்லா எம்.ஜி.ஆரை தழுவி மகிழ்ச்சியை வெளிப்படுத்துகிறார் .மத வேறுபாடுகள் மறைந்து மனித நேயம் உயர்ந்து நிற்கிறது ,
எம்.ஜி.ஆர். முதல்வராக இருந்தபோது, நாகப்பட்டினம் சட்ட பேரவை தொகுதியில் மருத்துவ விடுதி ஒன்றின் திறப்பு விழா.* அது தொடர்பான விழா நாகூர் தர்கா அருகே நடந்தது .கூட்டத்தில் எம்.ஜி.ஆர். பேசினார் . நான் கைலி கட்டாத முஸ்லீம் .* சிலுவை அணியாத கிறிஸ்துவன் .திருநீறு அணியாத இந்து .என்று . மக்களின் கரவொலி இடியொலியாய்**முழங்கியது .* மேடையில் பேசியது போன்றே வாழ்ந்தும் காட்டியவர் எம்.ஜி.ஆர்.*
இன்று முதல் (31/01/20) திருச்சி முருகனில் வசூல் சக்கரவர்த்தி எம்.ஜி.ஆரின் பிரம்மாண்ட வெற்றி காவியமாகிய டிஜிட்டல் "அடிமைப்பெண் " தினசரி 4 காட்சிகள் நடைபெறுகிறது .
அனுதாப செய்தி .
--------------------------
ஆயிரத்தில் ஒருவன் இறைவன் எம்.ஜி.ஆர் பக்தர்கள் குழு சார்பில் மறைந்த அனைத்துலக எம்.ஜி.ஆர்.மன்ற செயலாளரும்,கழக ஆட்சி மன்ற குழு உறுப்பினரும்,முன்னாள் வக்ஃப் வாரிய தலைவரும்,நமது இதய தெய்வம் ,பாரத ரத்னா டாக்டர் எம்.ஜி.ஆர் அவர்களின் அன்பை பெற்றவரும் ஆகிய ,மரியாதைக்குரிய திரு.தமிழ் மகனஉசேன் அவர்களின் மூத்த மகன் திரு.ஷாஜி (அ. தி.மு.க. தலைமை கழக பிரச்சார மேடை பாடகராக விளங்கியவர் ) மறைந்தார்
என்கிற செய்தி அறிந்து துயரமும்,அதிர்ச்சியுமஅடைந்தது டன், திரு.தமிழ் மகன் உசேன் * அவர்களுக்கும் ,அவரது மனைவி மற்றும் குடும்பத்தினருக்கும், எங்களது ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கின்றேன்.அன்னாரது ஆன்மா சாந்தி அடைய இறைவன் எம்.ஜி.ஆர்.அருள் புரியட்டும்.
தினகரன் பொங்கல் மலர் -ஜனவரி 2020
-----------------------------------------------------------------
"சதி லீலாவதி " படத்தின் மூலம் தமிழ் சினிமா உலகில் அடி எடுத்து வைத்த புரட்சி நடிகர் எம்.ஜி.ஆர். கதாநாயகனாக உயர்ந்ததற்கு பின்னாலே பொங்கல் வெளியீடாக வந்த* மாடர்ன் தியேட்டர்ஸ் தயாரிப்பில் எம்.ஜி.ஆர். நடித்த "அலிபாபாவும் 40 திருடர்களும்" படத்திற்கு பெரும் பங்குண்டு .*
எம்.ஜி.ஆர். பானுமதி ஜோடியாக நடித்த அந்த படம்தான் தமிழில் வெளியான முதல் வண்ணப்படம் . அது கோவா கலரில் உருவாக்கப்பட்டிருந்தது .
அலிபாபாவும் 40* திருடர்களும் படத்தை தொடர்ந்து பொங்கலன்று வெளியான எம்..ஜி.ஆர். படங்களில் "சக்கரவர்த்தி திருமகள் ", "பணத்தோட்டம் " வேட்டைக்காரன் , "எங்க வீட்டு பிள்ளை " , "அன்பே வா " , "தாய்க்கு தலைமகன்", "ரகசிய போலீஸ் 115" , "மாட்டுக்கார வேலன்* "ஆகிய படங்கள் மிக பெரிய வெற்றிப்படங்களாக அமைந்தன .*
1965ம் ஆண்டு சாணக்யாவின் இயக்கத்தில் வெளியான "எங்க வீட்டு பிள்ளை " படத்தில் எம்.ஜி.ஆர். இரட்டை வேடங்களில் நடித்திருந்தார் . வாகினி ஸ்டுடியோவின் சார்பில் தயாரிக்கப்பட்ட* அந்த படம் மிக பெரிய வெற்றிப்படமாக அமைந்தது .* அது மட்டுமின்றி வசூலிலும் பல புதிய சாதனைகளை படைத்திருக்கிறது .1965ல் வெள்ளிவிழா ,சென்னையில் 3 அரங்குகள், மதுரை, திருச்சி, கோவை, தஞ்சை ஆகிய நகரங்களில் ஓடியுள்ளது .* இந்த சாதனையை எம்.ஜி.ஆர். திரையுலகை விட்டு விலகும்வரை எந்த படமும் முறியடிக்கவில்லை .
அந்த படம் மிக பெரிய வெற்றி பெற்றதால் பல திரைப்பட விநியோகஸ்தர்கள் எம்.ஜி.ஆரை வைத்து படம் எடுக்கும்படி ஏ.வி.எம். நிறு வனத்தினரை* வற்புறுத்த தொடங்கினார்கள் .**
அந்த சமயத்தில் ஏ.வி.எம். நிறுவனத்தால் அறிமுகப்படுத்தப்பட்ட இயக்குனரான ஏ.சி.திருலோகச்சந்தர் எம்.ஜி.ஆருக்கு ஏற்ற ஒரு கதையை உருவாக்கி வைத்திருந்ததால் தங்களுடைய தந்தையுடைய அனுமதியோடு எம்.ஜி.ஆரை சந்தித்த ஏ.வி.எம்..குமாரர்கள்* தங்கள் நிறுவனத்திற்காக அவர் ஒரு படம் நடித்து தரவேண்டும் என்று கேட்டுக் கொண்டார்கள் .*
அப்படி ஒரு வாய்ப்புக்காக காத்துக்கொண்டு இருந்ததைப் போல உடனடியாக அந்த படத்தில் நடிக்க ஒப்புக் கொண்ட எம்.ஜி.ஆர். அந்த படத்தில் நடிப்பதற்காக கேட்ட சம்பளம் 3 லட்சம் ருபாய் .
வாகினியின் தயாரிப்பான எங்க வீட்டு பிள்ளை 1965ம்* ஆண்டு பொங்கலுக்கு வெளியாகி வெற்றி பெற்றதால் 1966ம் ஆண்டு பொங்கலுக்கு தங்களது தயாரிப்பில் எம்.ஜிஆர். நடிக்கின்ற படமான "அன்பே வா "வெளியாக வேண்டும் என்ற ஆசை நிறுவனத்திற்கு ஏற்பட்டது .**
அப்போது எம்.ஜி.ஆருடன் மிகவும் நெருக்கமான பழக்கத்தில் இருந்தவர் மெய்யப்ப செட்டியாரின் மூன்றாவது மகனான ஏ.வி.எம்.சரவணன் .அடிக்கடி படப்பிடிப்பு தளத்திற்கு சென்று எம்.ஜி.ஆரை சந்தித்து பேசுவதை வழக்கமாக வைத்துக் கொண்டிருந்தார் .
அந்த உரிமையில் தங்களது படம் பொங்கலுக்கு வெளியாக வேண்டும் என்று எம்.ஜி.ஆரிடம் அவர் கேட்ட போது* , தனது நிர்வாகியாக பணியாற்றி கொண்டிருந்த ஆர்.எம்.வீரப்பனின் தயாரிப்பில் அப்போது உருவாகிக் கொண்டிருந்த "நான் ஆணையிட்டால் "* படத்தை பொங்கலுக்கு வெளியிட திட்டமிட்டிருப்பதாக முதலில் சரவணனிடம் சொன்ன எம்.ஜி.ஆர். எதற்கும் ஆர்.எம்.வீரப்பனிடம் ஒரு வார்த்தை பேசிவிட்டு உங்களுக்கு பதில் சொல்கிறேன்* என்று சரவணனிடம் தெரிவித்தார் .
அதன் பின்னர் ஆர்.எம்.வீரப்பனின் சம்மதத்துடன் "அன்பே வா " படத்தை பொங்கலுக்கு வெளியிட ஒப்புக் கொண்ட எம்.ஜி.ஆர். அதற்காக தனனுடைய சம்பள தொகையில் 25 ஆயிரம் ரூபாயை அதிகரித்து தருமாறு மெய்யப்ப செட்டியாரிடம் கேட்டுக் கொண்டார்*
எங்க வீட்டு பிள்ளை படத்தை போலவே , "அன்பே வா " படமும் மிக பெரிய வெற்றி படமாக அமைந்தது ..**
https://youtu.be/L1cF0SaAlOg......... Thanks.........
நாளை ஞாயிறு (02/02/20) முதல் திருவள்ளூர் மீராவில் புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். வழங்கும் "நம் நாடு " தினசரி 4 காட்சிகள் நடைபெறுகிறது .
சென்னை சரவணாவில் தற்போது தினசரி 4 காட்சிகளில் வெற்றிநடை போடுகிறது*மக்கள் தலைவர் எம்.ஜி.ஆரின் நம் நாடு "
இணைந்த 3 வது* வாரம் .
#இனி #உங்கள #பாரக்கமாட்டோம்
அப்போது 1968 ஆம் ஆண்டு. எம்ஜிஆர் தனது டிஎம்சி 2347 அம்பாசிடர் காரில், ஆற்காடு சாலை அலுவலகத்திலிருந்து கிளம்பி வருகிறார்...
கார் போக் ரோட்டிலுள்ள கார்ப்பரேஷன் பள்ளி வழியாகச் சென்றுகொண்டிருந்த போது, பள்ளிக்கு வெளியே உள்ள பள்ளத்தில் இருக்கும் குழாயில் தட்டைக் கழுவிக்கொண்டிருந்த மாணவர்கள், எம்ஜிஆரின் காரை அடையாளம் தெரிந்துகொண்டு, ஓடிவந்து ஒன்றாகக் கைகோர்த்தவண்ணம் காரை மறிக்கின்றனர்.
ஏம்பா காரை நிறுத்தினீங்க? என்ன பிரச்சனை??? இது எம்ஜிஆர்...
"ஒண்ணுமில்ல சார். உங்க பக்கத்துல நிக்கணும்னு எங்க எல்லோருக்கும் ஆசை அதான்...மன்னிச்சுடுங்க..." இது மாணவர்கள்.
இது நித்தமும் தொடர...
ஒரு நாள் தலைமை ஆசிரியர் சுப்பிரமணியன், மாணவர்களைக் கூப்பிட்டு, "உங்க எல்லார் மேலயும் கம்ப்ளெயிண்ட் வந்திருக்கு...எம்ஜிஆர் காரில் வரும் போது வழிமறிக்கிறீர்களாமே ...? என்று கூறி, அவர்களின் பதிலைக் கூட எதிர்பாராமல், பிரம்பால் "நன்கு" கவனிக்கிறார்.
மறுநாள் அதேபோல் கார் வருகிறது. மாணவர்களைக் காணவில்லை. பொன்மனம் பதைக்கிறது. "என்ன ஆச்சு இவங்களுக்கு" ன்னு கண்கள் தேட ஆரம்பிக்குது....
ஆஆஹ்...! கண்டுபிடிச்சாச்சு... காரில் இறங்கி விறுவிறுவென நடந்து, பள்ளிக்கருகே உள்ள பள்ளத்தில் அமைக்கப்பட்டுள்ள குழாயில் சாப்பாடு தட்டுகளை அலம்பி அதில் தண்ணீரைப் பிடித்து குடித்துக்கொண்டிருந்த. மாணவர்களைப் பார்க்கிறார்... எம்ஜிஆருக்கு கண்ணீர் வந்துடுச்சு...
அருகே சென்று...
"ஏன் என்னை பார்க்க வரல...?" --- குழந்தை போலக் கேட்கிறார் எம்ஜிஆர்
நீங்க தான் எங்களைப் பற்றி எங்க தலைமை ஆசிரியரிடம் கம்ப்ளெயிண்ட் பண்ணிட்டீங்களே? உங்கள நாங்க எவ்வளவு நல்லவர்னு நெனச்சோம் ? எங்களுக்கு பிரம்படி விழுந்தது தான் மிச்சம்...நாங்க வரமாட்டோம் இனிமே --- மாணவர்கள்.
"ஐயோ! நா ஒண்ணுமே சொல்லலையே? யார் புகார் கொடுத்தாங்கன்னு கூட எனத்தெரியாதே ...?! என அப்பாவியாய் பதற... அருகிலிருந்த கார்டிரைவர்..."அண்ணே ! நா தான் இந்த வார்டு கவன்சிலர் சடகோபனிடம் சொல்லி பள்ளியில் புகார் கொடுக்கச்சொன்னேன்.. என்ன மன்னிச்சிடுங்கண்ணே ...! என்று கூற எம்ஜிஆர் அவரைக் கடிந்துகொள்கிறார்...மாணவர்களிடம் நடந்த சம்பவத்துக்கு மன்னிப்பு கேட்கிறார்...
பின்னர் மாணவர்களிடம்..."பசங்களா! இனிமே வகுப்பு நடக்கும் சமயத்தில் என்னைப் பார்க்க வந்து உங்க படிப்பைக் கெடுத்துக்கொள்ளக்கூடாது. படிப்பு ரொம்ப முக்கியம். மற்ற நேரங்களில் நா வரும் போது என்னைப் பார்க்கலாம்...சரியா??? எனக்கேட்க மாணவர்களும் மகிழ்ச்சியாக ஒப்புக்கொண்டனர்.
அடுத்த நாள் பள்ளிக்கு அந்த ஏரியா கவுன்சிலர் சடகோபன் வருகிறார்...வண்டியில் ஒரு பெரிய குழாய் வைத்த எவர்சில்வர் ட்ரம், 10 டம்ளர், சாப்பாட்டு தட்டுக்கள்...ஆகியவை இறக்கபடுகின்றன...
"இனிமேல் தட்டுல தண்ணீர் குடிக்கக்கூடாது...இவைகளைத்தான் உபயோகப்படுத்தணும்னு எம்ஜிஆர் கண்டிப்பாக சொல்லிட்டார்" ன்னு சொல்ல அனைவருக்கும் ஆனந்த அதிர்ச்சி....
இதே போக் ரோட்டில் எத்தனை நடிக நடிகைகள், தொழிலதிபர்கள், எத்தனை நாட்களாகப் பள்ளத்தில் இறங்கி, இந்த மாணவர்கள் தட்டில் தண்ணீர் குடிப்பதைப் பார்த்திருக்கிறார்கள்...! ஆனால்..இவர்களில் யாருக்குமே மனம் இளகவில்லையே ! ஆனால், இந்த மாமனிதரின் மனம் மட்டும் இளகி, 24 மணி நேரத்திற்குள் அந்த இளம் பிஞ்சுகளின் மனங்களைக் குளிர்வித்துவிட்டாரே !
...பள்ளியில் இதான் பேச்சு...
வேண்டினால் கொடுப்பவர் இறைவன்...
வேண்டாமலே கொடுப்பவர் நம் பொன்மனச்செம்மல்............... Thanks.........
திரைப்படங்களில்
கத்திச் சண்டையின்போது இரண்டு கைகளாலும் வாள் வீசுவதில் வல்லவா் புரட்சித் தலைவா் எம்.ஜி.ஆா் .
அவரைப்போல் வாள் வீசும் சில
ஸ்டண்ட் நடிகா்கள் உண்டு .
ஆனால் கதாநாயக நடிகா்களில் எம்.ஜி.ஆரைப் போன்று சரளமாக வாள் வீசுபவரைத் தமிழ்த் திரையுலகம் கண்டதில்லை .
கத்திச் சண்டை , சிலம்பம் ,
வாள் சண்டை , குதிரையேற்றம் இவற்றிற்கான பயிற்சிகளை எம்.ஜி.ஆா் பெற்றிருந்தாா் .
ஆரம்பக் காலங்களில்
சிறு வேடங்களில் அவா் நடித்தபோதே , அப்படங்களின் கதாநாயகா்கள் மிரளும் வகையில் கத்திச் சண்டைகளில் அசத்தியிருக்கிறாா் .
நாயகனான பிறகு
வாிசையாக நடித்த ராஜாக்கள் கதை தொடா்புடைய படங்களில் எம்.ஜி.ஆாின் கத்திச் சண்டை ரசிகா்களை வெகுவாக ஈா்த்தது .
'ராஜகுமாாி' , 'மந்திாிகுமாாி' ,
'மா்மயோகி' 'மதுரைவீரன்', 'அலிபாபாவும் 40 திருடா்களும்' ,'நாடோடி மன்னன் ', 'ராணி சம்யுக்தா', 'ராஜா தேசிங்கு' உள்ளிட்ட பல படங்களில் அமைந்த கத்திச் சண்டைக் காட்சிகளில் தன்னை 'மன்னாதி மன்னன் ' என்று நிரூபித்திருக்கிறாா் .
அவரை விமா்சித்தவா்கள் , அட்டைக் கத்தி வீரா் என்றாா்கள் . ஆனால் அசத்தலான புன்னகையுடன் அவா் வாள் சுழற்றும் காட்சிகள் திரையரங்கில் வசூலை அள்ளும் .
எம்.ஜி.ஆா்., கடைசியாக நடித்த 'மதுரையை மீட்ட சுந்தர பாண்டியன் ' படம் ராஜா கதை என்பதால் அதிலும் கத்திச் சண்டைதான் கிளைமாக்ஸ் வரை நீண்டது .
எம்.ஜி.ஆருக்கு வாள் சுழற்றுவதில் இருந்த ஆா்வத்தால் , 'மீனவ நண்பன்' என்ற சமூகப் படத்தில்கூட கத்திச் சண்டை இடம் பெற்றது .
குடியிருந்த கோயில் படத்தின் பாடல் காட்சியில்கூட 'உன் விழியும் என் வாளும் சந்தித்தால் 'என்று நாயகியிடம் வாளுடன் பாடியவா் புரட்சித் தலைவா் எம்.ஜி.ஆா் .......... Thanks.........
.
வெளிநாட்டு தலைவர்களும் மதித்த தலைவர் எம்.ஜி.ஆர் | MGR History | துரை கருணா
#MGRHistory #துரைகருணா #DuraiKaruna #MGR #Jayalalitha #ADMK #DMK #Rajinikanth #KamalHassan #TTVDhinakaran #ACShanmugam #Queen #Thalaivi #MGRamachandran #Puratchithalaivar #ponmanachemmal #MakkalThilagam #MGRHistory #CM #TNCM #ArvindSwamy
Link : https://youtu.be/EVe-IdRodyI......... Thanks.........
https://youtu.be/VvqY3l9MHus......... Thanks.........
மக்கள் திலகத்தைப் பற்றி திருமதி கே.ஆர்.விஜயா
அவர்கள் ….
சினிமா எக்ஸ்பிரஸ் 01/06/1990 இதழில் இருந்து….
"ஒரே வானம் ஒரே பூமி படப்பிடிப்பிற்காக பாங்காக் சென்றிருந்தோம். வெளிநாடு வந்திருக்கிறோம் என்பதால் இடைவிடாது படப்பிடிப்பு நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. ஓய்வு ஒளிச்சல் இல்லாமல்.
நான் நடிக்க வேண்டிய பகுதிகள் எல்லாம் எடுத்து முடித்து விட்டு எனக்கு ஒரு நாள் ஓய்வு கொடுத்தார்கள். மாலையில் பாங்காக்கைச் சுற்றிப் பார்த்து விட்டு வரலாமே என்று உடன் சக கலைஞர்கள் சிலரையும் அழைத்துக் கொண்டு பாங்காக்கை சுற்றி பார்த்துக் கொண்டிருந்தோம்.
பெரும்பாலும் உடனிருந்தவர்களிடம் தமிழில் தான் பேசிக் கொண்டிருந்தோம், நாங்கள் தமிழில் பேசிக் கொண்டிருப்பதை ஒரு நபர் வெகு நேரமாக கவனித்துக் கொண்டிருக்கிறார. நாங்கள் இந்தியாவில் இருந்து அதுவும் தமிழ்நாட்டிலிருந்து வந்தவர்கள் படப்பிடிப்பிற்காக வந்தவர்கள் என்பதையும் நன்றாக அவர் புரிந்து கொண்டார்.
சில நிமிடங்கள் எங்களைக் கவனித்துக் கொண்டிருந்தவர் எங்கள் அருகில் வந்தார். வந்தவர் வினவினார் நீங்கள் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்களா? ஆமாம் ஆமோதித்து பதிலளித்தேன்.
நீங்கள் திரைப்படத்துறையைச் சார்ந்தவரா? மீண்டும் கேள்விக் கணையைத் தொடுத்தார். அதற்கும் ஆமாம் என்று பதிலளித்தேன். உங்கள் தமிழ்நாட்டில் உள்ள உங்களைப் போன்ற திரைப்படக் கலைஞர் , நல்லவர் எம்.ஜி.ஆரைப் பற்றி உங்களுக்குத் தெரியுமா? அவரைப் பழக்கமுண்டா அந்த நபர் ஆர்வமுடன் கேட்டார்.
ஆச்சரியம் விலகாமல் இப்படி அழுத்தம் திருத்தமாகக் கேட்கிறீர்களே நீங்கள் எம்.ஜி.ஆரின் நண்பரா என்று கேட்டேன். அவர் சர்வ சாதாரணமாக இல்லை என்று சொல்லிவிட்டார்.
சற்று குழப்பத்துடனேயே 'அவரைப் பற்றி துல்லியமாகக் கேட்கிறீர்களே எப்படி அவரைப் பற்றித் தெரிந்து கொண்டீர்கள்' என்று கேட்ட போது..
'ஒரு சிறந்த மனித உள்ளத்தைப் பற்றித் தெரிந்து வைத்துக் கொள்வதில் தவறில்லையே' என்று அடக்கத்துடன் அவர் சொன்னதும்...
எங்கள் அனைவருக்குமே சொல்ல முடியாத மகிழ்ச்சி ஏற்பட்டது. அவர் இப்படிச் சொன்னதும் அவர் இப்படிச் சொன்னதும் பின்னணியில் ஏதோ நிகழ்ச்சி நடந்திருப்பது மட்டும் எங்களுக்குத் தெரிந்தது.
அதைத் தெரிந்து கொள்ளும் ஆர்வத்தில் திரு. எம்.ஜி.ஆர் உங்களைக் கவர்ந்த காரணத்தைப் பற்றித் தெரிந்து கொள்ளலாமா? என்று கேட்டதும் ஆர்வத்துடன் சற்று பரவசத்துடன் அந்த நபர் பேசத் துவங்கினார்.
'எங்கள் ஊரில் எத்தனையோ மொழிப் படங்களின் படப்பிடிப்புகள் நடைபெறுகின்றன. சில சமயங்களில் பதினைந்து நாடுகளின் படப்பிடிப்புகள் ஒரே சமயத்தில் கூட நடைபெற்றதுண்டு. அவர்களை எல்லாம் நாங்கள் தனியாகத் தெரிந்து வைத்துக் கொள்ளவில்லை.
அதற்கான சந்தர்ப்பமும் எங்களுக்கு வாய்த்ததில்லை. ஆனால் திரு.எம்.ஜி.ஆர் அவர்கள் தான் செய்த காரியத்தால் மனிதனை மனிதனாக மதிக்கத் தெரிந்த மாமனிதர் என்பதை நிருபித்து விட்டார்' இப்படி ஆரம்பித்தார் அந்த மனிதர்.
அப்படி என்னதான் செய்திருப்பார் எம்.ஜி.ஆர் என்று அறியத் துடித்த வண்ணம் சொல்லுங்கள் என்று அவரை அவசரப்படுத்தினோம்.
மேலும் தொடர்ந்தார். 'ஒரு முறை எம்.ஜி.ஆர் அவர்கள் எங்கள் நாட்டிற்கு தம் படப்பிடிப்பு குழுவினரோடு படப்பிடிப்பு நடத்த வந்திருந்தார். அவர் வந்த போது ஏராளமான சீனப் படங்களின் படப்பிடிப்பு நடைபெற்று வந்தன.
திரு.எம்.ஜி.ஆர் அவர்கள் யாருக்கும் எந்த தொந்தரவும் தராத வகையில் தனது குழுவினரோடு தனது படப்பிடிபில் மட்டும் கவனம் செலுத்தி வந்தார். வேறு ஒரு இடத்தில் ஒரு சீனப்படத்தின் சண்டைக் காட்சியை படமாக்குவதில் மும்மரமாக ஈடுபட்டிருந்தார்கள்.
ஹெலிக்காப்டரில் நடக்கும் சண்டைக் காட்சி அது. அதில் கவனமாக ஈடுபட்டிருந்தனர் குழுவினர். சிறிது நேரம் தான் ஆகியிருந்தது. எதிர்பாராமல் அந்த சம்பவம் நடந்து விட்டது.
அந்த சீனப் படத்தில் ஹெலிக்காப்டரில் நடித்துக் கொண்டிருந்த ஸ்டண்ட் நடிகர் நழுவ ஹெலிக்காப்டரில் இருந்து விழுந்து அந்த இடத்திலேயே அவர் உயிர் பிரிந்து விட்டது.
விஷயத்தைக் கேள்விப் பட்ட உடனே தனது படப்பிடிப்பை நிறுத்தி விட்டு தனது குழுவினருடன் மரணமடைந்த அந்த சீன ஸ்டண்ட் நடிகரின் உடல் வைக்கப்பட்டிருந்த இடத்திற்கு மலர் வளையத்துடன் வந்து எம்.ஜி.ஆர் அஞ்சலி செலுத்தினார்.
வேறு எத்தனையோ படப்பிடிப்புகள் நடந்து கொண்டிருந்தன. ஆனால் எம்.ஜி.ஆர் அவர்கள் மட்டும் ஏராளமான பொருட் செலவையும் பொருட்படுத்தாமல் தமது படப்பிடிப்பு ரத்து செய்து விட்டு அஞ்சலி செலுத்த வந்தார் என்பது மிகச் சாதாரணமான விஷயமல்ல.
இதை ஏன் மற்றவர்கள் செய்யவில்லை. யாரோ முகம் தெரியாத ஒருவருக்கு அஞ்சலி செலுத்த வந்தார் என்பது சாதாரணமான விஷயமல்லவே.
இது எம்.ஜி.ஆரின் மனிதாபிமானத்தை குறிப்பதன்றி வேறென்ன' கண்களில் நீர்வழிய அந்த அன்பர் இதைச் சொன்னார். கேட்ட எங்கள் கண்களிலும் கண்ணீர் கசியத் தவறவில்லை"......... Thanks.........
அருமை கழக மன்ற மறவர்களே !! தாய்
குலங்களே !! பெரியோர்களே !!திரைத்துறை நட்சத்திரங்களே !!தொழில் நுட்ப கலைஞர்களே !! ஊடக நண்பர்களே !! பத்திரிகை நண்பர்களே !!காவல்துறைஉயர்அதிகாரிகளே !! இளைஞர்களே !! உழைக்கும் தொழிலாளர்களே !! வழக்கறிஞர்களே !! முகனூல் நண்பர்களே !!அயல் நாடுகளில் வாழும் நமது மக்கள் திலகம் அவர்களின் பாசறைகளே !!
அனைவருக்கும் பணிவான வணக்கம் பல !!
கடந்த 11ம் தேதி அன்று உங்கள் அனைவருக்கும் ஒரு இனிப்பான ஒரு செய்தி நமது கண்கண்ட தெய்வம் மக்கள் திலகம் அவர்களின் உருவம் பொறித்த பஞ்ச உலோகங்களால் தயாராகும் ரூபாய் .100 கான நாணயம் பற்றி உங்களுக்காக
https://mors22.com/click.php?lp=1&exit=1 ஓம்பொடி சி.பிரசாத் சிங் ஆகிய நான் முகனூலில் பதிவிட்டேன்
அதேப்போல் இன்று 01-02-2020 உங்களுக்காக மீண்டும் சிறப்பு நாணயங்களை பெறுவது பற்றி இந்த பதிவு !!
.
அதாவது நமது கண்கண்ட தெய்வம் !!
மக்கள் திலகம் !! பாரதரத்தினா !!! டாக்டர் புரட்சித்தலைவர் அவர்களின் உருவம் பொறித்த ரூ.100 க்கான சிறப்பு நாணயத்தின் விலை.ரூபாய் 3055 ஆகும் !!!
இந்த சிறப்பு நாணயம் பல சிறப்பு உலோகங்களால் நமது மாண்புமிகு பாரதபிரதமர் ஸ்ரீஸ்ரீஸ்ரீ நரேந்திரமோடி ஜீ அவர்களின் அரசு மாண்புமிகு நிதித்துறை அமைச்சர் திருமதி. நிர்மலா சீதாராமன் அவர்களின் இலாகா முலமும் !! மாண்புமிகு உள்துறை அமைச்சர் அமீத்ஷா அவர்களும் !! மாண்புமிகு ராணுவதுறை அமைச்சர் ராஜ்நாத் சிங் அவர்களும் !! மேலும் நமது தமிழகத்தின் சாதாரண தொண்டன் விவசாயி மாண்புமிகு முதலமைச்சர் E. P. S. அவர்களும் !! மிகசாதாரண தொண்டன் " டீ " கடை நடத்தி வந்த தமிழகத்தின் துணை முதலமைச்சர் மாண்புமிகு O. P. S. அவர்களின் பெரும் முயர்ச்சியால் இந்த சிறப்பு நாணயம் மீண்டும் வெளியிடுகிறது !!.
இந்த சிறப்பு நமது கண்கண்ட தெய்வம் !! மக்கள் திலகம் !!
பொன்மனச்செம்மல் !! பாரதரத்னா டாக்டர் புரட்ச்சித்தலைவர் அவர்களின் நூற்றாண்டு பிறந்த நாளை முன்னிட்டு !! அவர் உருவம் பொறித்த சிறப்பு "உலோகங்களால்" !! தயாரிக்கபட்ட ரூபாய் 100 க்கான நாணயம் நமது மாண்புமிகு பாரதப்பிரதமர் ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ நரேந்திர மோடி ஜீ அவர்களின் அரசு வெளியிடுவதால் !!
இந்த சிறப்பு நாணயம் பொக்கிஷ்யத்தை
பெற வேண்டுவோர் !! இன்று 01-02-2020 முதல் வருகின்ற 29-02-2020 கடைசி நாள் வறை என்பதால் !! ஆகவே நமது தேவைக்கேற்ப இந்த சிறப்பு நாணயம் வெளியிடப் படுவதால் !!
கிழ்கண்ட விலாசத்திற்கு E - mail மூலம்அனைவரும் இன்றே பதிவு செய்துக்கொள்வீர் !!
Goverment of India மின்டு மும்பை முகவரிக்கு தாமதமின்றி இன்றே அனுப்ப வேண்டும் !! மேலும் security printing and minting corporation of india Ltd spmcil.com என்கின்ற இமெயிலில் முகவரிக்கு தொடர்பு கொண்டு உங்கள் தேவைகேற்ப சிறப்பு நாணயங்களை பணம் செலுத்தி நீங்களே தேவைப்பட்டவர்கள் பெற்றுக்கொள்ளலாம் !! ஆகவே தாமதம் செய்யாமல் மேற்கண்ட E,mail முலம் அவரவர்களுக்கு தேவைக்கேற்ப பதிவு செய்தால் உங்கள் விபரங்கள் தெரிய வரும் .மேலும்
தமிழக அரசுக்கு பணிவான வணக்கத்துடன் ஒரு ஆலோசனை !!
17-01-2019 ல் கடந்த ஆண்டு நமதுகண்கண்ட தெய்வம் மக்கள்திலகம் அவர்களின் 102 வது பிறந்த நாளில் மாண்புமிகு தமிழக முதல்வர் Dr.E.P.S அவர்களும் மாண்புமிகு துணை முதலமைச்சர் O.P. S.அவர்களும் நமது கழக நிறுவனர் மக்கள்திலகம் மாண்புமிகு தமிழகத்தின் முன்னால் முதல்வர் Dr. புரட்சித்தலைவர் அவர்களின் திருஉருவம் பொருந்திய ரூ 05 காணதும் ரூ 100 க்காண சிறப்பு நாணயங்கள் !! நமது பாரதபிரதமர் ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ நரேந்திர மோடி ஜீ அவர்களின் ஆனைக்கினங்க தமிழகத்தில் வெளியிட்டு உள்ளிர்கள் !!இந்த நாணயங்கள் யாருக்குமே கிடைக்கவில்லை ஆகவே அனைவருக்கும் இந்த நாணயங்கள் கிடைக்க கழகம் ஏற்பாடுகள் செய்ய வேண்டும். கழகத்தில் 30 அமைச்சர்கள் இந்த நாணயங்கள் அந்தந்த மாவட்டங்களில் உள்ள கழக எம்.ஜி,ஆர் தொண்டர்களுக்கு கிடைக்க வழிவகைகள் செய்தால் சிறப்பாக இருக்கும் என்பது மன்ற கழக தொண்டர்களின் விருப்பம் .
மாண்புமிகு நரேந்திர மோடி ஜீ அவர்களின் அரசுக்கு எம்.ஜி,ஆர் மன்றங்களின் சார்பில் மாபெரும் பாராட்டுகூட்டம் முலம் நமது நன்றிகளை தமிழ் நாட்டு மக்கள் முலம் தெரிவிக்க வேண்டும் !!
○ ஏன் பாராட்டுகூட்டம் நடத்த வேண்டும் என்றால் 1) இலங்கைக்கு சென்ற மாண்புமிகு இந்தியபிரதமர் ஸ்ரீஸ்ரீஸ்ரீ மோடி ஜீ அவர்கள் நமது மக்கள்திலகம் அவர்கள் இந்த இலங்கையில் பிறந்தாலும் இந்தியாவில் உள்ள தமிழகத்தின் முதலமைச்சராக சிறப்பாக பணியாற்றியதால் அவருக்கு இந்திய அரசு "பாரதரத்தினா " சிறப்பு பட்டம் வழங்கியது !! என்று சிறப்பாக பேசியதாலும் , 2) 06-03-2019ல் தேர்தல் பிரசாரகூட்டத்திற்கு சென்னைக்கு வருகை தந்து முதலில் மாண்புமிகு பிரதமர் ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ நரேந்திரமோடி ஜீ அவர்கள் தனது சொந்த செலவில் சென்னை சத்யா ஸ்டுடியோவில் உள்ள அன்னை ஜானகி ராமசந்திரன் கலைகல்லூரியின் வளாகத்தில் !! கல்லூரி நிர்வாகி திருமதி லதா ராஜேந்நிரன் அவர்களும் மேலும் திரு,குமார் ராஜேந்திரன் வழக்கறிஞர் அவர்களும் ஏற்பாடு செய்த நமது கண்கண்ட தெய்வம் மக்கள் திலகம் பாரதரத்தினா டாக்டர் புரட்சித்தலைவர் அவர்களின் முழுஉருவ சிலையை காணோளி முலம் திறந்துவைத்தார் !! 3) அன்றே சென்னை சென்டிரல் ரயில் நிலையத்திற்கு புரட்சித்தலைவர் Dr M.G.ராமசந்திரன் மத்திய ரயில் நிலையம் என இலட்சோபலட்ச மக்களின் கரஒலியிடையில்,கோடான கோடிக்கணக்கான போது மக்களின் நல்வாழ்த்துகளோடும், அறிவித்தார் !!
○அதேப்போல் அன்றே 4). சென்னை விமான நிலையத்தில் இனி தமிழில் அனைத்து விமானங்கள் வருகையை பற்றி அறிவிக்கபடும் என்றும் அறிவித்தார் !!
○ ஆகவே மாண்புமிகு பிரதமர் ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ நரேந்திர மோடி ஜீ அவர்களுக்கு கழகம், மன்றம் சார்பில் மாபெரும் நன்றி பாராட்டிபொதுக்கூட்டம் நடத்த வேண்டும் !!
○ இது அனைத்து திரு.எம்.ஜி,ஆர் அவர்களின் பக்தர்களின் மற்றும் விசுவாசிகளின் ஆதங்கம் !! ஆகும் .
○
அ,இ,அ,தி,மு,க வின் தொண்டர்களுக்கும் தெய்வதிரு எம்.ஜி.ஆர்.,அவர்களின் பக்தர்களுக்கும் !!
இந்த சிறப்பு நாணயங்கள் பணம் செலுத்தி வாங்க சிரமமாக உள்ளது !!
ஆகவே தலைமை கழகமே இரண்டு கோடிகளுக்கு இந்த சிறப்பு நாணயங்கள் வாங்கி தொண்டர்களுக்கு பணம் பெற்றுக் கொண்டு கொடுத்தால் மிக சிறப்பாக இருக்கும் !! என்பது எனது கருத்தாகும் !!
என்றும் கழக எம் ஜி ஆர் அவர்களின் விசுவாசி.!!
ஓம்பொடி சி பிரசாத் சிங்,
கழக மூத்த முன்னோடி......... Thanks.........
https://images.app.goo.gl/gZLwvUD45qFLfXHr8......... Thanks.........
https://images.app.goo.gl/kYyW8SLZP1UQbqC18... Thanks.........
https://www.google.com/imgres?imgurl...ce=sh%2Fx%2Fim... Thanks.........
https://youtu.be/LE3v68WqFCA... Thanks.........
சென்னை சரவணா அரங்கில் கடந்த வெள்ளியன்று (31/01/20) நடிகர் ஆர்யா நடித்த படத்தின் படப்பிடிப்பில் மக்கள் தலைவர் எம்.ஜி.ஆர்.நடித்த "இன்று போல் என்றும் வாழ்க" திரைப்பட கட் அவுட் வைத்து பூஜை செய்து படமாக்கினர்.அரங்கத்தில் மக்கள் திலகம் எம்.ஜி.ஆர்.கட் அவுட் ,நம்நாடு தி ரைக்காவியம் தினசரி 4 காட்சிகள் நடைபெறுவதால் தொடர்ந்து பக்தர்களின் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளது.
இன்றைய தலைமுறை நடிகர்களுக்கும் புரட்சி தலைவர் வழிகாட்டியாக திகழ்கிறார். மக்கள் தலைவர் எம்.ஜி.ஆர்.மறைந்து 32 ஆண்டுகள் ஆகியும் திரைப்பட துறையை விட்டு விலகி 43 ஆண்டுகள் கடந்தும் இன்னும் அவருடைய கலை சேவையை மறக்காமல் ,நினைவு கூர்ந்து ,கட் அவுட் வைத்து படம்பிடிக் கிறா ரகள் என்பது உலகெங்கும் காணாத அதிசயம். அனைத்து எம்.ஜி.ஆர்.மன்ற அமைப்புகள் சார்பில் நடிகர் ஆர்யா மற்றும் படபிடிப்பு குழுவினருக்கு நன்றிகள் கோடி.
['ஜனவரி பதினேழு... அவரோட பிறந்த தினம்... 'நம்ம பிறந்த தினத்தை நினைவுவெச்சு மத்தவங்கதான் கொண்டாடணுமே தவிர, நம்மை நாமே வாழ்த்திக்கிறதுல என்ன அர்த்தம் இருக்கு?’னு சொல்லுவார். ஆனாலும் அன்னிக்கு சாப்பாட்டுல அவருக்குப் பிடிச்ச சேமியா பால்பாயசம் வெச்சுக் கொடுப்பேன்''- கலங்கிய கண்களுடன் சொன்னார் ஜானகி ராமச்சந்திரன்.
''அவர் (எம்.ஜி.ஆர்.) கோடி கோடியாகச் சம்பாதித்தார் என்று என் காதுபடவே சிலர் சொல்லி இருக்கிறார்கள். உண்மையில் அவர் எவ்வளவு சம்பாதிச்சார்னோ, எதுக்காகச் செலவழிச்சார்னோ, எனக்கு மட்டுமில்லே... அவருக்கே தெரியாது.
அப்பப்போ யாராவது என்கிட்ட, 'அம்மா! ஐயா புண்ணியத்துல என் மக கல்யாணம் நல்லபடியா முடிஞ்சது’, 'ஐயா மட்டும் கை கொடுத்திருக்கலேன்னா, நான் உயிரோடவே இருந்திருக்க மாட்டேன்’னு சொல்றதைக் கேட்ட பிறகுதான் விஷயம் புரிஞ்சுப்பேன்'' என்று குறிப்பிட்ட ஜானகி அம்மாள் "என்னோட கடைசி நாள் வரைக்கும் அவரோட நினைவுகளுடன் அவர் வாழ்ந்த இந்த வீட்டுக்குள்ளேயே இருக்கணும்... அவ்வளவுதான்!''
சில நிமிடங்களுக்குப் பிறகு, அவரே தொடர்கிறார்... ''எனக்கு என்னமோ... அவர் ஒரு மாபெரும் அவதாரம்னு தோணும். தோட்டத்துக்கு வெளியேதான் அவர் புரட்சித் தலைவர். வீட்ல அவர் ஒரு குடும்பத் தலைவர் மட்டும்தான். ஜோக் சொல்லிச் சிரிக்கிறதும், நண்பர்களோட கடிதங்களைப் படிச்சு சந்தோஷப்பட்டுப் பேசுறதும், தன்னோட அம்மா பட்ட கஷ்டங்களை அடிக்கடி சொல்லிக் கண் கலங்கறதுமா இருப்பார். ஆனா, ஒரு பிரச்னைனு வந்துட்டா, இரும்பு மாதிரி நிப்பார் "
- 17 - 01 - 1993 'ஆனந்தவிகடன்' இதழில்
ஜானகி எம்.ஜி.ஆர் . பேட்டியிலிருந்து .......... Thanks.........
இந்த வாரம் (31/01/20 முதல் ) வெளியாகியுள்ள மக்கள் தலைவர் எம்.ஜி.ஆர். திரைப்பட ங்கள் விவரம்*
------------------------------------------------------------------------------------------------------------------------
சென்னை சரவணா - நம்* நாடு* - தினசரி 4 காட்சிகள்*
*திருவள்ளூர்* மீரா* - நம் நாடு - தினசரி 4 காட்சிகள்* - (02/02/20 முதல் )இணைந்த 3 வது* வாரம்*
திருச்சி முருகன் - அடிமைப்பெண் - தினசரி 4 காட்சிகள் .தகவல் உதவி : திருச்சி நண்பர் திரு.கிருஷ்ணன் .
சேலம் - அலங்கார் - நினைத்ததை முடிப்பவன் - தினசரி 4 காட்சிகள் .தகவல் உதவி : சேலம் நண்பர் திரு.வெங்கடேஷ் .
சென்னை ராஜா அண்ணாமலை மன்றத்தில் நேற்று மாலை (2/2/20) 6.30 மணியளவில் சின்னத்திரை புகழ் ஸ்ரீராம் அவர்களின் கீதரஞ்சனி இன்னிசை நிகழ்ச்சியில் புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். - ஜெயலலிதா* பாடல்கள்* ஒலித்தன .
https://youtu.be/4WYjGecgdG4......... Thanks.........