டியர் ராகவேந்திரன் சார்,
தேவி பாரடைஸ் திரையரங்கில் ராஜா வெளியீட்டின்போது எடுக்கப்பட்ட் புகைப்படம் குறித்து ttimes of india நாளேட்டில் வெளியான பதிவை வெளியிட்டதற்கு நன்றி.
Printable View
டியர் ராகவேந்திரன் சார்,
தேவி பாரடைஸ் திரையரங்கில் ராஜா வெளியீட்டின்போது எடுக்கப்பட்ட் புகைப்படம் குறித்து ttimes of india நாளேட்டில் வெளியான பதிவை வெளியிட்டதற்கு நன்றி.
ராஜான்னா ராஜாதான் .நன்றி ராகவேந்தர் சார்.
ஷர்மீலி பத்தி எழுதனும்னு இருந்தேன். வாசு எழுதிட்டாப்லே.தேங்க்ஸ் பா.
ஞான ஒளி நுழைக்க படுவதை எதிர்பார்த்தேன்.
பாலும் பழமும் -stills பார்த்தாலே அந்த கால டாக்டர் கள் இந்த ஸ்டைல் காப்பியடித்த காரணம் தெளிவாகிறது.
வாசு சார்
பாலும் பழமும் ஸ்டில் படு சூப்பர்... எங்கிருந்து தான் பிடிக்கிறீர்களோ... சரோஜா தேவியின் கண்கள் பேசாத மொழியும் பேசுமே...
அன்புள்ள நெய்வேலியார் அவர்களே
நடிகர் திலக உடையலங்கார அணிவகுப்பு அருமை. அதுவும் பண்டிட் ஜவஹர்லால் நேரு பாணியில் அமைந்த அந்த திரும்பிப்பார் ஷெர்வானி மாடல் சூட் அதி அற்புதம்.
ஒவ்வொரு உடையும் மிக நேர்த்தியாக தேர்ந்தெடுக்க பட்டிருக்கவேண்டும். எந்த உடை போட்டாலும் நமது சித்தருக்கு சிக்குன்னு இருக்கு. அதுதான் அவதாரத்தின் பொருள்.
உதாரணமாக அந்த Round neck மாடல் T -shirt பாருங்கள் பிரமாதமாக நம் சித்தருக்கேன்றே வடிவமைந்தது போல உள்ளது.
பின்னாளில் நடிகர் திலகத்திற்கு அடுத்தது அவரது மகன் திரு.பிரபுவிற்கு மட்டுமே மிக சிறந்து விளங்கியது அந்த ரவுண்டு நெக் T -Shirt . வேறு எந்த நடிகர்களுக்கும் எடுப்பாக இருக்கவில்லை என்று கூறினால் மிகையாகாது.
அவருடைய மிகச்சிறந்த உடை அலங்காரம் நீங்கள் வண்ணத்தில் பார்க்க விரும்பினால், நிச்சய தங்கசுரங்கத்தை மிஞ்சும் உடை அலங்காரம் எதுவும் இல்லை. இந்திய நடிகர்கள் எவரும் அதுபோல ஒரு Combination & Style இதுவரை உடையலங்காரத்தில் ஒரு British Style கொண்டுவந்ததில்லை.
அடேயப்பா...என்ன ஒரு HAndsome அதில் நம்முடைய சித்தர்....என்ன சொல்கிறீர்கள் வாசுதேவன் சார் ? சரிதானே நான் உரைத்தது?
மிகுந்த ச்ரத்தை எடுத்து பிரமாதமாக தொகுத்து...லட்சம் எழுத்துக்கள் சொல்லும் விஷயத்தை..ஒரு சில வார்த்தைகளால், புகைப்படத்தால் இங்கு பகிர்ந்துகொண்டு உரைதிருகிரீர்கள்.
மனமார்ந்த வாழ்த்துக்கள் ! வளர்க உங்கள் தொண்டு ! வளரட்டும் உங்கள் நற்பணி..!
வாசு சார்
ஷர்மிலி படத்தைப் பற்றிய நினைவலைகள் கார்த்திக் சொன்னது போல் அந்தக் காலத்திற்கே அழைத்துச் சென்று விட்டது. பாடல்கள் ... எந்தக் காலத்திலும் நெஞ்சை விட்டகலாதவை. இந்தப் படத்தின் இடைவேளையில் ராஜா ஸ்லைடு போடும் போது 30 வினாடிகளுக்கு மேல் நடிகர் திலகத்தின் குரல் ஒலிக்கும் போது அரங்கமே இரண்டாகும். இந்திப் பட ரசிகர்கள் வியப்போடு பார்ப்பதையும் கவனித்திருக்கிறோம். சிலரிடம் விளக்கியும் சொல்லி யிருக்கிறோம். இடை வேளையில் தேவி பேரடைஸ் ஜன்னல் வழியாக பிளாசா தியேட்டரில் house full போர்டு பார்ப்போம். இங்கும் அதே. ஒரே சமயத்தில் அடுத்தடுத்த திரையரங்குகளில் ஒரே நடிகரின் படங்கள் அரங்கு நிறைவைக் காண்பதும் பெரிய விஷயம். அதையும் நம் நடிகர் திலகம் செய்திருக்கிறார்.
தேவி பேரடைஸே கதி என்று இருந்த காலங்கள் மறக்க முடியாதவை.
திரு கார்த்திக் அவர்களுக்கு
தங்களுடைய வாழ்த்திற்கு நன்றி.
தொழில் நுட்பம் இவ்வளவு அதீதமாக வளர்ந்த நிலையில் கண்ணொளியை காணமுடியவில்லை என்று கூறுவதை கேட்கும்போது வருத்தமாகவும் அதே சமயம் ஆச்சர்யமாகவும் உள்ளது. தாங்கள் தங்களுடைய ஆபீசில் இருந்துகொண்டு இதை பார்கிறீர்கள், பதிவுகள் இடுகிறீர்கள் என்றால் நீங்கள் சொல்வது ஆச்சர்யம் அல்ல. காரணம், Firewall கொண்டு இதுபோன்ற சைட் களை கம்பெனி யின் IT department பிளாக் செய்திருப்பார்கள். வீட்டில் இருந்துகொண்டு பழைய மாடல் கைபெசிமூலம் இதை செய்கிறீர்கள் என்றால் அப்போதும் உங்களால் பார்க்கமுடியாது. ஆனால் கம்ப்யூட்டர் அல்லது மடிக்கணினி வைத்திருந்தால் நிச்சயம் பார்க்காலம். வழி இருக்கிறது. !
மேலும் நம் திரியில் அனைவரும் பாராட்டுவார்கள் என்ற எதிர்பார்ப்பு இருந்தால் அது நிச்சயம் நிறைவேறாது என்பது எனக்கு நன்றாக தெரியும். மேலும் எதிர்பார்தால்தானே ஏமாற்றம் ? இல்லையென்றால் ? நம் சித்தர் பாடலில் உள்ளது போல..."கடல் அளவு கிடைத்தாலும் மயங்கமாட்டேன்...அது கையளவே ஆனாலும் கலங்கமாட்டேன். உள்ளத்திலே உள்ளது தான் உலகம் கார்த்திக் அதை உணர்ந்துகொண்டேன் துன்பம் எல்லாம் விலகும் கார்த்திக்..!
எது எப்படி இருந்தாலும் புரிந்துகொண்டமைக்கு நன்றி..!
ஆடைகளுக்கென்றே பிறந்த ஆணழகன் .... தொடரில் இன்னும் வரப் போகும் படங்களை நினைத்தாலே இனிக்கிறது. உடைகளாலேயே ஒரு புதிய தலைமுறை ரசிகர்களை உருவாக்கிய ....
http://t2.gstatic.com/images?q=tbn:A...Tdnf_oPEE4DqxP
இந்தப் படத்திற்காக ஆவலுடன் காத்திருக்கிறேன்.
இந்த படத்தை எண்ணற்ற முறை பார்த்ததற்கு இந்த உடையலங்காரமும் முக்கிய காரணமாயிற்றே..
அன்புள்ள வாசுதேவன் சார்,
நடிகர்திலகத்தின் முதல்வேட்டை அனுபவம் மிக மிக அருமை. 'நிஜ வேட்டைக்காரன்' என்ற தலைப்பு வெகு பொருத்தம். நடிகர்திலகம் அவர்களின் அன்னை இல்லத்தில் நுழைந்தால் உயிரோடு நிற்பது போன்ற புலியைக்காணலாம். எருமைத்தலை, யானைத்தந்தம் எல்லாம் காணலாம். ஆனால் சாதாரண ரசிகனால் இவற்றைஎல்லாம் காணமுடியுமா?. அதே நேரம் எம்.ஜி.ஆர். அடிமைப்பெண் படத்தில் போராடிய சிங்கத்தினை சாதாரண ரசிகனால் இன்றும் காண முடியும்.
இதற்காகத்தான் ரசிகர்களும் நடிகர்திலகத்தின் மீது உயிரையே வைத்திருக்கும் பக்தர்களும் காலம் காலமாகக் கேட்டு நிற்கும் 'நடிகர்திலகம் நினைவு இல்லம்'.
சகோதரர் சந்திரசேகர் அவர்கள் தலைமையில் நடிகர்திலகம் சமூக நலப்பேரவை அரசுடன் போராடிவரும் 'சிவாஜி மணிமண்டபம்' என்பது வேறு. நாம் குறிப்பிடும் 'நினைவு இல்லம்' என்பது வேறு. சரியான உதாரணம் சொல்வதானால், 'மணிமண்டபம்' என்பது மெரினா கடற்கரையில் அமைந்துள்ள எம்.ஜி.ஆர். அவர்களின் நினைவிடம் போல. அதே சமயம் 'நினைவு இல்லம்' என்பது தி.நகர் ஆற்காடு முதலி தெருவிலிருக்கும் 'எம்.ஜி.ஆர்.நினைவு இல்லம்' போல.
திரையரங்குகளுக்கு செல்லும் ரசிகர்களில் பலர் அங்கிருக்கும் ஸ்டில்களைப் பார்வையிட்டுக் கொண்டிருக்கும்போது, நடிகர்திலகத்தின் ரசிகர்களும், மக்கள்திலகத்தின் ரசிகர்களும் அதிகம் மொய்ப்பது அங்குள்ள ஷீல்டு கேலரிகளைத்தான். தங்கள் அபிமான நட்சத்திரத்தின் என்னென்ன படங்கள் அங்கு ஓடி சாதனை புரிந்திருக்கின்றன என்று அறிந்து கொள்ளும் ஆர்வம் இவ்விரு ரசிகர்களுக்கு இருக்கும் அளவு, வேறெந்த ரசிகர்களுக்கும் கிடையாது. தேவி காம்ப்ளெக்ஸ், ஆல்பர்ட் போன்ற அரங்குகளில் ரசிகர்களின் ஆர்வத்துக்கு மதிப்பளிக்கும் வகையில் 'ஷீல்டுகேலரிகள்' அமைத்து தங்கள் திரையரங்குகளில் ஓடி சாதனை புரிந்த திரைப்படங்களின் 100-வது நாள், மற்றும் வெள்ளிவிழா ஷீல்டுகளை அழகுற வைத்துள்ளனர். ஆனால் பெரும்பாலான தியேட்டர்களில் இவ்வாறு காட்சிக்கு வைப்பதில்லை. மேலும் இவ்விரு நட்சத்திர நாயகர்களும் சாதனை புரிந்த பல திரையரங்குகள் இப்போது மறைந்து விட்டன.
இருப்பினும் மக்கள் திலகத்தின் ரசிகர்களுக்கு எந்த இழப்பும் இல்லை. அவர்கள் எம்.ஜி.ஆர். அவர்களின் நினைவு இல்லத்துக்கு சென்றால் அனைத்து திரைப்படங்களின் சாதனை ஷீல்டுகள், அவருக்கு அளிக்கப்பட பரிசுப் பொருட்கள், இன்னும் தங்கள் தலைவரைப்பற்றிய அறிய ஆவணங்கள், தலைவரோடு போராடிய சிங்கம் என அனைத்தையும் ஒரே இடத்தில் கண்டு களித்திட / அறிந்திட முடியும்.
ஆனால் நடிகர்திலகத்தின் ரசிகர்களுக்கு...?????????.
மெரினா கடற்கரையில் எம்.ஜி.ஆர். நினைவிடம்தான் அரசால் கட்டப்பட்டதே தவிர, தி.நகரிலுள்ள அவரது நினைவு இல்லம் அரசால் உருவாக்கப்பட்டது அல்ல. அவரது துணைவியார் திருமதி ஜானகி அம்மையார் அவர்களின் முயற்சியால் உருவாக்கப்பட்டு, ராமாவரம் தோட்ட இல்லத்திலிருந்து பல லாரிகளில் பரிசுப்பொருட்கள் அனைத்தும் கொண்டுவரப்பட்டு, நினைவு இல்லத்தில் அழகுற அமைக்கப்பட்டு ஜானகி அம்மையாரால் மக்கள் பார்வைக்கு திறந்து வைக்கப்பட்டது. நான் பலமுறை சென்று பார்த்து விய்ந்திருக்கிறேன்.
நடிகர்திலகம் மறைந்து 12 ஆண்டுகள் முடிந்து விட்டனவே. அவருக்கும் இதுபோன்ற நினைவு இல்லம் அமைவது எப்போது?.
பார்க்க ஏங்கியவர்கள் எல்லாம் பரலோகம் சென்ற பிறகா?...