சினிமாவில் நாடகம்.
ஹோட்டல் தொழிலாளர் சங்க ஆண்டு விழாவில் முத்துராமன் தயவில் ஆடும் நாகேஷும், ஜெய்குமாரியும். முத்துராமன் கற்பனையில் ஜெய்குமாரிக்குப் பதிலாக ஜெயந்தி வந்து பாடல் முழுக்க ஆடுவார். குமாரி சொற்ப நேரமே ஆடுவார். என்ன ஒரு குறை..... ஸ்க்ரீன் விலக்கி இருவரும் ஸ்டேஜில் ஆடுவதை முத்துராமன் பார்ப்பதைத் தவிர வேறு யாரும் பார்க்க மாட்டார்கள். முத்துராமன் சம்பந்தமே இல்லாமல் ஓரிடத்தில் நின்று நாட்டியத்தைப் பார்க்காமலேயே ரசித்துச் சிரித்து தனி ஷாட்டாக நடித்துக் கொடுத்திருப்பார்.
என்னாம்மா பொன்னம்மா
பக்கம் வாம்மா வாம்மா
பன்னீரும் வெந்நீராய் சுட்டதோடியம்மா
முந்தாநாள் மந்தாரைச்செடி ஓரம் ஓரம்
வந்தேனே சொல்லாமல் அந்தி நேரம் நேரம்
நாகேஷ் குச்சிக்கு முன் ஜெயந்தி ஆலமரமாகத் தெரிவார்.:) நடுவில் ஜெயகுமாரி முதுகை வில்லாக வளைப்பார்.
'எதிர்நீச்சல்' படத்துக்கு இசை குமார் என்றாலும் முன்னமேயே இந்தப் பாடலுக்கு எம்.எஸ்.வி இசை அமைத்துக் கொடுத்து விட்டதால் அதை மறக்காமல் டைட்டிலில் போடுவார்கள். அதனால் இந்தப் படத்திகும் 'மெல்லிசை மன்ன'ரின் பங்கு உண்டு.
பாடலை இயற்றியவர் ஜியின் பிரியப்பட்ட வாலி. பாடல் ஜாலி.
https://youtu.be/afA6BQIVHYo