22-06-09
திருநீறின் மஹிமையைக் கூறும் சம்பவம் மதுரையில் நடைபெற்றது. மதுரையை ஆண்டுகொண்டிருந்த நெடுமாற பாண்டியனுக்கு சமணமதத்தின் மீது நம்பிக்கை ஏற்பட்டதால், அவன் சமணத்தை தழுவியிருந்தான். சைவர்களான அவன் மனைவி மங்கையர்கரசிக்கும் அமைச்சர் குலச்சிறையார் இதில் பெரும் வருத்தம். சமண்த்துறவிகள் மதபேதத்தாலும் மதியிழந்து, மன்னனின் சம்மதத்துடன், திருஞானசம்பந்தருக்கு தீ வைத்துவிடுகின்றனர். 'அவன் இட்ட தீ அவனையே சென்று மெல்லத் தாக்கட்டும்' என்று ஞானசம்பந்தர் தீயின் தாக்கத்தை பாண்டியனுக்கே திருப்பிவிடுகிறார்.
"செய்யனே திருவாலவாய் மேவிய
ஐய்யனே அஞ்சலென்றருள் செய்யெனைப்
பொய்ய ராமம ணர்கொளு வுஞ்சுடர்
பையவே சென்று பாண்டியர்காகவே"
மன்னனின் மனைவியும் அமைச்சரும், மிகுந்த சிவபக்தர்கள் என்பதால், இரங்கி, தீயை மெல்லத் தாக்கப் பணித்தாராம் சம்பந்தர். தீயின் வெப்பம் மெல்ல உடலில் பரவ, அதன் தாக்க்த்தை தாளாது மன்னன் துடிக்க, சமணர்கள் செய்த எவ்வித மந்திரங்களும் சிகிச்சைகளும் பலனளிக்கவில்லை. மங்கையர்க்கரசி, குலசேகர பாண்டியன் அழைப்பின் பேரில் சம்பந்தர் ஆஜராகி, மன்னனை குணப்படுத்துகிறார். மந்திரம்
ஜபித்து திருநீறு பூசி குணமடையச் செய்கிறார்.
"
மந்திரமாவதும் நீறு வானவர் மேலதும் நீறு
சுந்தரமாவதும் நீறு துதிக்கப்படுவதும் நீறு
தந்திரமாவதும் நீறு சமயத்தில் உள்ளதும் நீறு
செந்துவர் வாயுமை பங்கன் திருவாலவாயான் திருநீறே."
என்ற திருநீற்றுப்பதிகத்தை பாடுகிறார்.
சமணர்களுக்கு சைவத்தின் மீதும் சம்பந்தர் மீதும் விரோதம் இருந்தபடியால், அவர் குணமானதை மந்திர தந்திர விஷயம் என்று ஒதுக்கி விட்டு, தங்களோடு வாதமிட அழைப்பு விடுக்கின்றனர். அனல்வாதம் புனல்வாதம் என்ற இருவாத முறைகளிலும் முறையே மந்திரம் ஓதப்பட்ட ஏடுகளை தீயிலும் நீரிலும் இட்டாலும், எந்த ஏடு எரியாமல், மூழ்காமல் நிற்கிறதோ அவர்கள் வென்றதாக கருதப்படவேண்டும், என்பது நிபந்தனை. சம்பந்தர் அனைத்திலும் வெற்றி பெற்றுவிடுகிறார். சமணர்கள் சிலர் மதம் மாறுகின்றனர். வேறு சிலர் கழுவில் ஏறி உயிர்த் துறக்கின்றனர் என்று சரித்தரம் அழுத்தமாக நடந்தவற்றை எடுத்துரைக்கிறது.
அத்தகைய மகிமை வாய்ந்ததாம் திருநீறு. பக்தியுடன் அணிவோருக்கு நல்லருள் கிட்டும் என்பது திண்ணம். இதை அறிந்த நமது நீலகண்டன், திருநீறு சகிதம் தம் தோற்றத்தில் பெருமாற்றம் கொணர்ந்து கோவில் குளங்களை தரிசித்து பக்தியில் திளைக்கிறார். சாம்பு சாஸ்த்ரிகள் போன்ற பெரியோர்களை மதித்து அவர்கள் ஆசியும் பெற்று வியக்கத்தடும் ஆத்திகனாக மாறிவிடுகிறார்.
அஷோக்கின் பயணம் தொடர்ந்த வண்ணம் இருக்கிறது. கிரியின் தந்தை சிகாமணி சத்தியத்தை கடைபிடிப்பவர் எனக் கூறக்கேட்டு, அவரை சந்திக்கிறான் அஷோக். பிறப்பால் எந்த ஜாதியில் பிறக்கிறான் என்பது சர்ச்சைக்குறிய விஷயமே அல்ல. தன் ஒழுக்கத்தால் நடத்தையால் எவனும் எந்த வர்ணத்திற்கும் மாற முடியும் என்று சாஸ்திர நூல்களும் குறிப்பிடுகின்றன. சூத்திரன் என்ற வர்ண முறையைச் சேர்ந்தவனும் கூட பிராமணன் ஆகலாம். சூத்திரனுக்குறிய அடையாளங்கள், அவன் பிறருக்கு தன் உடலால், உழைப்பால் சேவை செய்பவன். உடலுழைப்பை ஏனையோருக்கு வழங்குபவன் சூத்திரன் என்று பொதுவாக அறியப்படுகிறது. அதே போல் பிராமண வர்ண முறையை (ஜாதி அல்ல) சேர்ந்தவனும் தன் தேர்வினால், சுத்திர வர்ண முறையை தழுவி வாழலாம். வாழ்வின் முறையை நாம் ஒவ்வொருவரும் மாற்றி அமைத்துக்கொண்டே தொடர்கிறோம். விச்வாமித்ரன் என்ற க்ஷத்ரியன், பிராமணனாக மாறி, காயத்ரி மந்திரத்தை உலகுக்கே உபதேசித்து, பிராமணீயத்திற்கு பாதை வகுத்தார். கசப்பு கடைக்காரன் உண்மையான பிராமணனாக வாழ்ந்த கதையின் குறிப்பை முன்பே கண்டோம். சத்யகாம ஜாபலி உயர்ந்த பிராமணன். அதனால் அஷோக் சிகாமணியே தான் தேடும் உண்மை பிராமணனாக இருக்கக்கூடும் என்று நினைத்து அவரை நாடுகிறான்.
ஒருவனை பிராமணனாக தேர்வு செய்யும் விதிமுறைகளைப் மீண்டும் நினைவு கூர்வோம்.
மனசை அடக்கி, இந்திரியங்களை ஜெயித்து, தவம், பொறுமை, ஞானம், கருணை, சத்தியம் முதலியவை இருக்கப்பெற்றவன் பிராமணன்.
பிராமணன் என்பவன் தானாக அவனுக்கு கிடைக்கும் உணவையே உட்கொள்ள வேண்டும். வயலில் எரியப்பட்டதை பொறுக்கி எடுத்து பொங்கித் திங்கலாம். யாசித்துப் பெறலாம், 'உஞ்சவிருத்தி' செய்து உணவைப் பெறலாம்.
இப்படிப்பட்ட கடினமான பாதையை, வைராக்கியம், சத்தியம், பக்தி, ஆசையின்மை என்ற ஊர்திகளைக் கொண்டு கடக்கவேண்டும்.
பொறாமையின்மை, ஞானம் போன்ற ஷக்திகளே இந்த இவ்வூர்திகளுக்கு உரமிடும் குணங்கள்.
"சத்தியத்தை மட்டுமே ஒரளவு கடைபிடிக்கும் நான் எப்படி பிராமணன் ஆவேன்?" என்று மறுக்கிறார் சிகாமணி. ஒருவேளை, அவர் வாழும் முறை என்றேனும் அவரை உயர்வின் வழிக்கும், உண்மையின் அருகாமைக்கும் படிப்படியாக இட்டுச் செல்லலாம்.
And miles to go before I sleep,
And miles to go before I sleep.
(வளரும்)