http://i68.tinypic.com/nq7kex.jpg
Printable View
Superb Muthaiyan.
Saradha Madam.
நடிகர்திலகத்துடன் ரவிச்சந்திரன்.....
மற்ற எல்லா கதாநாயகர்களுடனும் பல படங்களில் நடிக்கும் வாய்ப்புக்கிடைத்த ரவிச்சந்திரனுக்கு , நடிக்க வந்த அடுத்த வருடமே நடிகர்திலகத்துடன் நடிக்கும் வாய்ப்புக்கிடைத்தது.
மோட்டார் சுந்தரம் பிள்ளை : 1964-ல் முதல் படம் வெளியான ரவிக்கு 1965-லேயே நடிகர்திலகத்துடன் இப்படத்தில் நடிக்கும் வாய்ப்பு அமைந்தது. (படம் வெளியானது 1966 ஜனவரி 26. நடிகர்திலகத்துக்கு பத்மஷ்ரீ அறிவிக்கப்பட்ட அதே நாள்). ஜெமினி வாசன் தயாரித்து, அவரது மகன் பாலசுப்ரமணியம் இயக்கிய இப்ப்டத்தில் நடிகர்திலகத்தின் மாப்பிள்ளையாக (மூன்றாவது மகளான ஜெயலலிதாவின் ஜோடியாக) ரவிச்சந்திரன் நடித்தார். வாலி எழுதி, மெல்லிசை மன்னர் இசையமைத்த 'காத்திருந்த கண்களே கதையளந்த நெஞ்சமே' என்ற அருமையான டூயட் பாடல் இந்த ஜோடிக்கு. மைசூர் பிருந்தாவனம் கார்டனில் படமாக்கப்பட்டிருந்தது. ஒன்றாக படத்தில் நடித்திருந்தபோதிலும் சிவாஜி-ரவி இருவரும் சந்தித்துக்கொள்ளும் காட்சிகள் அபூர்வம். என் நினைவு சரியென்றால், ரவியை அவர் அப்பாவான கல்லூரி பிரின்ஸிபாலிடம் அழைத்துச்சென்று, அவர்களின் காதல் பற்றி புகார் செய்யும் இடம்தான் என்று நினைக்கிறேன். இதை விட்டால் கிளைமாக்ஸில்தான் சந்திப்பார்கள்.
கவரிமான் : மோட்டார் சுந்தரம்பிள்ளை படம் வெளியாகி 16 ஆண்டுகள் கழித்து 1979-ல் கவரிமான் படத்தில் ரவி சிவாஜியுடன் நடித்தார். இதிலும் அப்படித்தான். இருவரும் சந்திக்கும் வாய்ப்பே கிடையாது. அப்போது வந்த படங்களில் நடிகர்திலகத்துடன் துணைப்பாத்திரங்களில் மேஜர், சிவகுமார், விஜயகுமார், ஜெய்கணேஷ் போன்றோர்தான் நடித்து வந்தனர், இப்படத்தில் ஏற்கெனவே மேஜர் அண்ணனாகவும், விஜயகுமார் தம்பியாகவும் வருகின்றனர். எனவே இந்த ரோலில் அநேகமாக ஜெய்கணேஷதான் நடிப்பார் என்பது பெரும்பாலோரின் எதிர்பார்ப்பாக இருந்தது. ஆனால் படத்தின் இயக்குனர் எஸ்.பி.முத்துராமன் இந்த வேடத்தில் ரவிச்சந்திரன் நடிக்க இருப்பதாக அறிவித்தபோது எல்லோருக்கும் ஆச்சரியம். நடிகர்திலகத்தின் 106-வது படத்தில் நடித்தவர், அதன்பிறகு இருவரும் சேர்ந்து நடிக்காத வேளையில் மீண்டும் 201-வது படத்தில் சேர்ந்தது வியப்பாக இருந்தது. கூடவே இன்னொரு குண்டாக நடிகர்திலகத்தின் ஜோடி பிரமீளா என்றும் எஸ்.பி.எம். அறிவித்தார்.
கவரிமான் படத்தில் ரவி ஏற்றிருந்தது கொஞ்சம் வில்லங்கமான பாத்திரம். நடிகர்திலகத்துக்கு வில்லனாக, ஆனால் நேரடி வில்லன் அல்ல. கர்நாடக முதலமைச்சரின் முதன்மை செக்ரட்டியாக பணிபுரியும் நடிகர்திலகத்துக்கு வாய்த்த மனைவி பிரமீளா நாகரீக மோகம் பிடித்து சதா, கிளப், பார்ட்டி என்று சுற்றிக்கொண்டிருப்பவர். அப்போது கிளப்பில் ரவிச்சந்திரனின் அறிமுகம் கிடைத்து, அவரால் குடிப்பழக்கத்துக்கும் ஆளாகிறார். இந்நிலையில் முதல்வருடன் வெளிநாடு செல்வதாக சிவாஜி கிளம்பிப்போன பின், பிரமீளா, ரவியை வீட்டுக்கு அழைத்து, மதுவின் போதையில் இருவரும் படுக்கையறையில் இருக்கும்போது, பயணம் ரத்தாகி வீடு திரும்பும் சிவாஜி இருவரையும் அலங்கோல நிலையில் பார்த்து விட்டுத் துடிக்க, சந்தடி சாக்கில் ரவி அங்கிருந்து நழுவி ஓடிவிட, கையில் கிடைத்த பாட்டிலால் மனைவி பிரமீளாவை சிவாஜி அடிக்க, பிரமீளா ரத்த வெள்ளத்தில் பிணமாக, அதை அவர்களின் நான்கு வயதுப் பெண்குழந்தை பார்த்துவிடுகிறது. படத்தில் சுமார் 20 நிமிடங்களே வரக்கூடிய ரோலாக இருந்தாலும் ரவிச்சந்திரன் அதை சிறப்பாக செய்திருந்தார்.
வாலிப விருந்து-1968
எனது favourite pairs ரவி-பாரதி மற்றும் T .M .S -எல்.ஆர்.ஈஸ்வரி கலக்கிய ஜாலி படம்.
பாவம் வங்காள பாணியில் மறக்க முடியாமல் அடி பட்ட மாறன், மீள தேர்ந்தெடுத்த சுவாரஸ்ய வழி ,happening hero and safe bet . நன்றாகவே வெற்றி பெற்றார்.
ரவியும் ராதாவும் தற்செயலாய் teasing ஆரம்பித்து காதலிக்க ஆரம்பிக்கிறார்கள். மூர்த்தி என்ற allround கேட்டவன், தன சிங்கப்பூர் மாமா பெண் ராதாவை (சொத்தையும் )அடைய தன் மாமா உருவம் கொண்ட தனது சமையல் காரனை வைத்து ஆள்மாறாட்டம் செய்ய ,அதை ரவி தன் நண்பன் பாபுவுடன் சேர்ந்து முறியடிக்கும் குட்டி கதை.
உற்சாகம் வாலிப விருந்து பாடலில் தொடங்கி ,அவன் காதலித்தான் என விரிந்து ,மணமகள் தேவை என மனு போட்டு ,எங்கே எங்கே என் மனது என்று தேடி சுபமாய் சென்னபட்டினம் போய் முடியும். ரெண்டு teasing song ,ஒரு அருமையான டூயட் ,பாரதி தனியாக ஒரு பாடல் ,சந்திரபாபு பெண் வேட பாடல் என்று A ,B ,C என்று அத்தைனையும் குதூகலிக்கும். சுதர்சன் A .V .M விட்டு வேதனை பிரிவில் , பூம்புகார், வாலிப விருந்து ரெண்டு படங்களிலும் (வெவ்வேறு Genre ) அசத்தி பட்டை கிளப்பினார். இதில் வாசுவை மகிழ்விக்க என்றே அனைத்தும் ஈஸ்வரிக்கே.
ரவி -பாரதி இணையில் வந்த best இதுதான். ரெண்டு பெரும் திருஷ்டி சுத்தி போடலாம் போல அவ்வளவு அழகு ,பொருத்தம்.ரெண்டு பெரும் இளமை,உற்சாகம் பொங்கி வழிய முதல் காட்சி முதல் கடைசி காட்சி வரை தூள் கிளப்பியிருப்பார்கள்.பாலையா ,சந்திரபாபு ,அசோகன் அனைவருமே காட்சிகளுக்கு மெருகூட்டி சுவாரஸ்ய படுத்துவார்கள்.
படம் எந்த வித சிக்கல், செண்டிமெண்ட் இல்லாமல் முழுவதும் action ,romance ,situational comedy என்று போகும்.
கிளைமாக்ஸ் சண்டை ஜாலி. ஜூடோ ரத்னம் சண்டை, சின்னி-சம்பத் நடனங்கள் எல்லாமே நன்றாக வந்திருக்கும். மாறன் இந்த படத்திற்கு என்ன தேவையோ அதை அழகாக விருந்தாக்கி, வெற்றி கண்டார்.
நிஜ வாலிப விருந்துதான். (அத்தனையும் எனக்கு பிடித்த chat item கள் .)
From RPRajanayahem Blog on Ravi chandran
அவர் காலத்தில் வந்த மற்ற நடிகர்கள் மிகுந்த சிரமப்பட்டுத்தான் சினிமாவில் கதாநாயகனாக ஆக முடிந்தது.ஆனால் ரவிச்சந்திரன் மட்டும் முழுக்க அதிர்ஷ்டம் காரணமாக காதலிக்க நேரமில்லை(1964) படத்தில் அறிமுகமானார்.
காதலிக்க நேரமில்லையை அடுத்து இதயக்கமலம்(1965)அதேகண்கள்(1967), நான்(1967), மூன்றெழுத்து(1968) போன்ற கலர்ப்படங்களில் நடித்து கலர் கதாநாயகன் என்று கிராமத்தார் மத்தியில் பிரபலம்.
நடிகை காஞ்சனா ரசிகர்களால் கலர் காஞ்சனா என்றே அழைக்கப்பட்டார்.
ரவிச்சந்திரன் -ஜெய்சங்கர்-இரண்டு பேரும் அன்றைக்கு இருமை எதிர்வுகள்!
ஜெய்சங்கருக்கு நடிக்க வந்து இரண்டு வருடத்தில் ஒரே ஒரு படம் ‘பட்டணத்தில் பூதம்’(1967) தான் அப்போது கலர் படம்.
அன்று வண்ணப்படம் என்பது கொஞ்சம் அபூர்வம்!
காதலிக்க நேரமில்லை, இதயக்கமலம் படங்களுக்குப் பிறகு இவரை எப்படி பயன்படுத்துவது என்பது பற்றி ஒரு குழப்பம் இயக்குனர்களுக்கு நிச்சயம் இருந்திருக்கும்.ராமண்ணாவின் படம் குமரிப்பெண்(1966) ரிலீஸ். ராணி பத்திரிக்கை ரொம்ப உணர்ச்சி வசப்பட்டு ”ரவிச்சந்திரனா? ராமச்சந்திரனா?” என்று எம்.ஜி.ஆர் படம் பார்த்த பரவசம் ஏற்பட்டதாக எழுதி விட்டது!
அப்புறம் என்ன?
காதலிக்க நேரமில்லை, இதயக்கமலம், அதே கண்கள், நான் ஆகிய படங்கள் எப்போது பார்த்தாலும் சலிக்காதவை.
இதயக்கமலம் சீரியஸ் படம் தான்.
ஆனால் பி.பி.ஸ்ரீநிவாஸின்
“ நீ போகுமிடமெல்லாம் நானும் வருவேன் போ போ”
தோள் கண்டேன், தோளே கண்டேன்”
பி.சுசிலாவின் மோகன ராக “ மலர்கள் நனைந்தன பனியாலே” போன்ற அற்புதமான பாடல்கள். எல்.வி.பிரசாத் இயக்கம். கே.ஆர்.விஜயா தான் நடித்த படங்களில் பிடித்த படமாக இதயக்கமலத்தை தான் சொல்வது வழக்கம்.
மதராஸ் டூ பாண்டிச்சேரி(1966),நினைவில் நின்றவள்(1967), உத்தரவின்றி உள்ளே வா (1971)முழு நீள நகைச்சுவைப் படங்கள்.
1971 வருடம் தான் ஜெய்சங்கருக்கு இரண்டாவது வண்ணப்படம் ரவிச்சந்திரனுடன் நடித்த ’நான்கு சுவர்கள்’, மூன்றாவது வண்ணப்படம் ’வீட்டுக்கு ஒரு பிள்ளை’!
வில்லனாக ரவிச்சந்திரன் ஊமை விழிகளில் நடித்ததை மறக்கமுடியாது.அதே படத்தில் ஜெய்சங்கருக்கு குணச்சித்திர வேடம்- பி.பி.எஸ் பாடல் “தோல்வி நிலையென நினைத்தால் வாழ்வை நினைக்கலாமா?”
காதலிக்க நேரமில்லை படத்தை 100 தடவை சித்ராலயா கோபுவும்,ரவிச்சந்திரனும் பார்த்தார்களாம்.
முத்துராமன்,ஏ.வி.எம்.ராஜன் போல கடுமையாய் போராடாமல், ஜெய்சங்கர் போல சிரமப்படாமல் ஒவர் நைட் ஹீரோ வான பிரமிப்பு ரவிச்சந்திரனை விட்டு கடைசி வரை நீங்கவில்லை.
சிவாஜியுடன் மோட்டார் சுந்தரம் பிள்ளை,கவரிமான்
ஜெமினி கணேசனுடன் காவியத்தலைவி,மாலதி,சினேகிதி, ரங்கராட்டினம்,
ஏ.வி.எம் ராஜனுடன் ’ஏன்’ ’ஜீவநாடி’, ’புகுந்த வீடு’.
நடன அசைவுகள் ரவிச்சந்திரன் நன்றாகச் செய்வார்.
’கண்ணிரெண்டில் வெண்ணிலா கதைகள் சொல்லும் பெண்ணிலா
நானிருந்தும் நீயிலா வாழ்வில் ஏது தேனிலா’
‘பூவைப்போலே சூடவா போர்வையாலே மூடவா
காதல் என்றால் என்னவென்று கண்ணை மூடி காணவா.....
ஆசை வெள்ளம் போகும்போது ஓசை கொஞ்சம் கேட்குமோ’
டப்பாங்குத்து,குத்தாட்டம்
’கண்ணுக்கு தெரியாதா நெஞ்சுக்குப் புரியாதா’
’பொம்பள ஒருத்தி இருந்தாளாம் பூதத்தை பாத்து பயந்தாளாம்.’
’ராஜா கண்ணு போகாதடி நீ போனா நெஞ்சுக்கு ஆகாதடி’
சண்டைக் காட்சிகளில் உணர்ச்சி வசப்பட்டு அடித்தே விடுவார் என்று ஸ்டண்ட் நடிகர்கள் சொல்வார்கள்.
ரவிச்சந்திரன் நடித்த படங்கள் இந்தியில் ரீமேக் ஆகியிருக்கின்றன்.
காதலிக்க நேரமில்லை இந்தியில்’ப்யார் கி ஜா’ -சசிகபூர், (முத்துராமன் ரோலில் கிஷோர்குமார்)
’நான்’ இந்தியில் ’வாரிஸ்’-ஜிதேந்திரா,
மதராஸ் டூ பாண்டிச்சேரி இந்தியில் ’பாம்பே டூ கோவா’-அமிதாப் பச்சன்!
ரவிச்சந்திரன்முதல் மனைவி விமலாவுக்கு இரண்டு மகன்கள்,ஒரு மகள்.
ஷீலா இரண்டாவது மனைவியான பின் ’மஞ்சள் குங்குமம்’(1973) ரவிச்சந்திரன் அவர் டைரக்*ஷனில் நடித்தார். எஸ்.பி.பி யின் ‘என் காதல் கண்மணி ஏதேதோ நினைத்தாளோ சொல்ல நாணம் வந்ததோ சொல்லாமல் மறைத்தாளோராதா ராதா ராதா’ பாடல் இந்தப்படத்தில்.
ஷீலாவுக்கு ஒரு மகன்.ஜார்ஜ்.இந்த உறவு நீடிக்கவில்லை.
ஷீலாவின் உறவு காரணமாக ரவிச்சந்திரன் அன்று சில மலையாளப்படங்களில் கதாநாயகனாக நடிக்க முடிந்தது. முத்துராமனுக்கோ,ஜெய்சங்கருக்கோ,ஏவிஎம் ராஜனுக்கோ மலையாளப்பட கதாநாயகனாக வாய்ப்பு கிடைத்ததில்லை.
ரவிச்சந்திரனின் வாரிசுகள் ஜார்ஜும்,ஹம்ஸவர்த்தனும் சினிமாவில் முயற்சி செய்தும் நிலைத்து நிற்க முடியவில்லை.
ஹம்ஸவர்த்தனை திரையில் நிறுத்த பெரு முயற்சி ரவிச்சந்திரன் செய்தார். இவரே மகனுக்காக படம் தயாரித்தது சரி.ஆனால் இவரே அந்தப்படத்தை பிடிவாதமாக இயக்கியது தான் மிகப்பெரிய தவறு.
Saradha Madam write on puguntha veedu ,a mega hit Family Drama and the highlight is that Nadigarthilagam presided the 100th Day Function.
தாய்க்குலத்தின் அமோக ஆதரவு பெற்ற குடும்பச்சித்திரம்
'புகுந்த வீடு'
ஒரு ஏழைப்பாடகன் பாடுவதற்கான வாய்ப்புக்களைத்தேடி அலைகிறான். குடும்பத்திலோ வறுமை விரட்டுகிறது. காப்பாற்றப்பட வேண்டிய அம்மா மற்றும் தங்கை. இந்நிலையில் ஒரு பணக்காரப் பெண் இவன் பாடலில் மயங்கி இவன் மேல் மையல் கொள்ள, காதல் அரும்புகிறது. ஆனால் அவன் தன் கடமையை மறக்கவில்லை. பணக்காரப்பெண்ணின் அண்ணனுக்கும் பாடகனின் தங்கை மீது ஈர்ப்பு. பெண்கொடுத்துப் பெண் எடுக்கப்படுகிறது. பிரச்சினை முளைக்கிறது. பாடகனின் மேல் அவளுக்கிருந்த மையல் குறைகிறது. வாழ்க்கைக்கு வெறும் மனமயக்கம் மட்டும் போதாது, வாழ்க்கை என்பது அதற்கு மேலே என்று உணர்கிறாள். இரண்டு குடும்பமும் பிரிகிறது. பிறந்த வீட்டில் குழந்தைபெற்ற தன் தங்கையையும் அவள் குழந்தையையும் கூட கணவன் வந்து பார்க்க பாட்டுக்காரன் தடை போடுகிறான். பல்வேறு போராட்டங்களுக்குப்பிறகு குடும்பங்கள் ஒன்று சேர முடிவு சுபம்.
இப்படத்தில் பாடகனாக ரவிச்சந்திரன், தங்கையாக சந்திரகலா, பணக்காரப்பெண்ணாக லட்சுமி, அவளது அண்ணனாக (சந்திரகலா ஜோடியாக) ஏ.வி.எம்.ராஜன், ரவிச்சந்திரனின் அம்மாவாக நடிகையர்திலகம் சாவித்திரி நடித்திருந்தனர். ஏழையாக இருந்தாலும் முறைப்பான பாடகனாக ரவிச்சந்திரன் நடித்திருந்தார் என்றால் அதற்கு நேர்மாறாக பணக்காரனாக இருந்தாலும் பண்பு குறையாத அமைதியான இளைஞனாக ஏ.வி.எம்.ராஜன் நடிப்பில் அசத்தினார். லட்சுமிக்கு வழக்கம்போல வெடுக்கென்ற துடிப்பான நடிப்பு, சந்திரகலா குடும்பத்துக்கேற்ற குத்துவிளக்கு. சாவித்திரியின் அமைதியான, அப்பாவித்தனமான நடிப்பு நம் நெஞ்சை நெகிழ வைக்கும்.
"அம்மா, அன்னைக்கு நான் ரேடியோவில் பாடினேனே, அதற்கு...." மகன் முடிக்கும் முன்பே சாவித்திரி "என்னப்பா, பணம் வந்திருக்கா?" என்று ஆர்வத்துடன் கேட்க, "இல்லேம்மா, நிறைய பாராட்டுக்கடிதங்கள் வந்திருக்கு" என்று மகன் சொன்னதும் சோர்ந்து போய் "அப்போ பணம் எதுவும் வராதாப்பா?" என்று அப்பாவியாய் கேட்குமிடம் மனதைத்தொடுவதோடு, குடும்ப சூழ்நிலையையும் படம்பிடித்துக் காட்டும். அதுபோல் உறங்கிக்கொண்டிருக்கும் அம்மாவின் காலில் தலைவைத்து ரவிச்சந்திரன் தூங்கும் இடமும், "சாவு என்ற நிரந்தர தூக்கத்துக்கு ஒத்திகைதானேப்பா இந்த தூக்கம் எல்லாம்" என்று சாவித்திரி சொல்லும் இடமும் நம் மனதை சற்று இடம்பெயரச்செய்யும் காட்சிகள்.
படத்தை 'பட்டு' என்கிற ஆர்.பட்டாபிராமன் இயக்கியிருந்தார். படத்தின் மிகப்பெரிய சிறப்பம்சம் படத்தில் வரும் எல்லோரும் நல்லவர்கள். ஆனால் இடையிடையே ஏற்படும் மனப்போராட்டங்களே பிரச்சினைகளுக்கும் காரணம் என்பதை அழுத்தமாகச்சொல்லியிருந்தார். படத்தின் இன்னொரு பிளஸ் பாயிண்ட் 'இன்னிசை இரட்டையர்கள்' சங்கர் கணேஷ். பாடல்கள் அத்தனையும் மணி மணியாக அமைந்தன.
ரவிச்சந்திரன் ரேடியோவில் பாடிய பாடலை, தன் தோழிகளோடு சேர்ந்து லட்சுமி பாடும்...
'நான் உன்னைத்தேடுகிறேன்.. நாள்தோறும் பாடுகிறேன்
நீ போகும் பாதையெல்லாம்.. நிழலாக ஓடுகிறேன்'
என்ன ஒரு மெலோடி...!. இப்போதெல்லாம் இப்பாடல்கள் காணக்கிடைக்கவில்லையே.
குழந்தை பெற்ற தன்னைப்பார்க்க வந்த கணவனை, பார்க்கவிடாமல் தடுத்து நிற்கும் அண்ணனை குறித்து சந்திரகலா பாடும்...
'கண்ணன் பிறந்த வேளையிலே
அந்த தேவகி இருந்தாள் காவலிலே' பாடல் பெண்களைக்கவர்ந்தது என்றால்...
மேடைப்பாடகனாக உயர்ந்ததும், சங்கர் கணேஷை அறிமுகப்படுத்தி ரவி பாடும்
"மாடி வீட்டுப்பொண்ணு மீனா" பாடல் கல்லூரி மாணவர்கள் மத்தியில் எடுபட்டது.
ஐம்பதுகளிலும், அறுபதுகளின் துவக்கத்திலும் திரையிசையில் கொடிகட்டிப்பறந்த ஏ.எம்.ராஜா - ஜிக்கி ஜோடி, இந்த ஆண்டின் SUPER HIT பாடல்களில் ஒன்றை இப்படத்துக்காகப் பாடியிருந்தனர். நீண்ட இடைவெளிக்குப்பின் இதற்கு முந்தைய ஆண்டில் வெளியான ரங்கராட்டினம் படத்தில் 'முத்தாரமே.. உன் மோகம் என்னவோ' பாடலைப்பாடி மறு என்ட்ரி கொடுத்த ராஜா, புகுந்த வீடு படத்தில் ராஜன் - சந்திரகலா முதலிரவுப்பாடலான..
'செந்தாமரையே செந்தேனிதழே
பொன்னோவியமே, கண்ணே வருக'
பாடலை ஜிக்கியுடன் சேர்ந்து கலக்கலாகப்பாடி அசத்தியிருந்தார்.
(தொடர்ந்து தாய்க்கொரு பிள்ளை படத்தில் 'சின்னக்கண்ணனே' பாடலையும், வீட்டு மாப்பிள்ளை படத்தில் 'ராசி.. நல்ல ராசி' பாடலையும் பாடிய ஏ.எம்.ராஜா, இன்னொரு வெற்றி வலம் வருவார் என்று எதிர்பார்த்திருந்த வேளையில் மீண்டும் மறைந்து போனார்).
1972-ம் ஆண்டின் அருமையான குடும்பச்சித்திரமாக அமைந்த 'புகுந்த வீடு' திரைப்படம், தாய்க்குலத்தின் அமோக ஆதரவோடு, 100 நாட்களைக்கடந்து ஓடி மாபெரும் வெற்றி பெற்றது.
நான்கு சுவர்கள்(By Saradha Madam)
‘ஸ்மார்ட் ஹீரோ’ ரவிச்சந்திரன்,ஜெய்சங்கர் இணைந்து நடித்திருந்த படங்களில் இதுவும் ஒன்று. முழுக்க முழுக்க ஆக்ஷன் படமான இதற்கு கதை, வசனம் எழுதி இயக்கியவர் இயக்குனர் சிகரம் கே.பாலச்சந்தர் என்பதுதான் இன்னொரு ஆச்சரியம்.
நாடக மேடையிலிருந்து திரையுலகில் நுழைந்த காலம் தொட்டு, குடும்பக்கதைகளையே (அவற்றில் சீரியஸும் உண்டு, நகைச்சுவையும் உண்டு) இயக்கி வந்த கே.பி., முதன்முறையாக ஒரு ஆக்ஷன் படமாக இதை இயக்கினார். அதுமட்டுமல்லாது, அதுவரை கருப்புவெள்ளைப் படங்களிலேயே வெற்றிகளைக்குவித்து வந்த அவர் இயக்கிய முதல் வண்ணப்படமும் இதுதான். ஆனால் முழுக்க ஆக்ஷன் படமாக இல்லாது, அதில் செண்டிமெண்ட்டையும் புகுத்தியதால் படம் ஒருவித சொதப்பலாகப்போனது.
வழக்கம்போல ஸ்டுடியோ செட்களிலேயே அதுவரை முழம்போட்டு வந்த கே.பி., கிட்டத்தட்ட முக்கால்வாசிப்படத்தை வெளிப்புறங்களிலேயே எடுத்ததும் இப்படத்தில்தான். ஆக, இப்படம் பலவிதங்களில் கே.பி.க்கு பரீட்சாத்த முயற்சியாக ஆகிப்போனது.
இருவரது கைகளும் இணைத்து விலங்கிடப்பட்ட கைதிகளாக வரும் ரவிச்சந்திரன்,ஜெய்சங்கர் இருவரும் கோவாவில் இணைந்தே சுற்றுவதும், விலங்கிடப்பட்ட நிலையிலேயே தங்கள் காதலிகளோடு டூயட் பாடுவதுமாக கொஞ்சம் வித்தியாசமாகக் காட்ட முயற்சி செய்திருந்தனர். ஆனால் படத்தில் சௌகார் ஜானகி ஏற்றிருந்த கதாபாத்திரம் தான் ஓவர் செண்டிமெண்ட்டாக அமைந்து பார்ப்போர் பொறுமையை ரொம்பவே சோதித்து விட்டது.
1970-ம் ஆண்டு தயாரிக்கப்பட்டு, 71 துவக்கத்தில் வெளியான படம் இது. 1969-ல் 'இருகோடுகள்' படத்தின் பெருவெற்றிக்குப் பிறகு, கிட்டத்தட்ட எதிரொலி, நவக்கிரகம், காவியத்தலைவி, நான்கு சுவர்கள், நூற்றுக்கு நூறு ஆகிய ஐந்து படங்களை ஒருசேர ஒப்புக்கொண்டு இயக்கி வந்தார் கே.பாலச்சந்தர். அதனால் எல்லாவற்றிலுமே அவருக்கே உரித்தான முத்திரைக் காட்சிகள் ப்ஞ்சமாகிப்போகத் துவங்கின.
இதுபோக நவக்கிரகம், நான்கு சுவர்கள் இவ்விரண்டு படங்களையும் எப்படி உருவாக்கி வருகிறார் என்ற விவரங்களையும் குமுதம் வாரப்பத்திரிகையில் தொடராக எழுதிவந்தார். அதனால் இவ்விரண்டு படங்களைப்பற்றிய மக்களின் எதிர்பார்ப்பு அதிகமாகிப்போனது. குறிப்பாக நான்கு சுவர்கள் படத்தில், எண்ணெய் ஊற்றோ ஏதோவொன்று எப்படிப்பொங்கி வருகிறது என்பதைப்படமாக்கிய விதம் பற்றி அவர் சொல்லியிருந்த விதம் மக்களின் எதிர்பார்ப்பை எகிற வைத்தது. எதிரொலி சரியாகப்போகாத நிலையில், ஆகஸ்ட் 15 அன்று வெளியான 'நவக்கிரகம்' தோல்வியைத் தழுவியது. அதோடு வெளியான ராமன் எத்தனை ராமனடி, திருமலை தென்குமரி ஆகியன வெற்றியடைந்தன. தேடிவந்த மாப்பிள்ளை சுமாராக ஓடியது.
அடுத்து தீபாவளிக்கு 'காவியத்தலைவி' ரிலீஸாகி வெற்றியடைந்தது. உடன் வெளியான சொர்க்கம், எங்கிருந்தோ வந்தாள், சற்று முந்தி வெளியான எங்கள் தங்கம் என எல்லாமும் வெற்றியடைந்தன. மூன்று படங்கள் குறைந்துவிட்ட நிலையில் நான்கு சுவர்களை 71 பொங்கலுக்கு வெளியிட முயற்சி செய்தனர். ஆனால் தயாரிப்பில் ஏற்பட்ட தாமதத்தில், பிப்ரவரி 6 அன்று வெளியானது. 'கே.பி.யின் முதல் வண்ணப்படம், வித்தியாசமான கதை, கே.பி.இயக்கத்தில் முதல் ஆக்ஷன் படம், ‘ஸ்மார்ட் ஹீரோ’ ரவிச்சந்திரன் கோவாவில் வெளிப்புறப்படப்பிடிப்பு' என்றெல்லாம் ஓவர் எக்ஸ்பெக்டேஷனில் வந்ததால், மக்கள் எதிர்பார்த்த அளவுக்கு படம் அமையாமல் போகவே படம் தோல்வியடைந்தது.
தனது வழி எதுவென்று 'நான்கு சுவர்கள்' தெளிவாகக்காட்டிவிட்டதால் மீண்டும் பழைய பாதையிலேயே புன்னகை, கண்ணா நலமா, வெள்ளி விழா, அரங்கேற்றம் என பயணிக்கத்துவங்கினார் இயக்குனர் சிகரம். (தான் இயக்கிய படங்களிலேயே தனக்குப்பிடிக்காத படங்களாக நான்கு சுவர்கள், பத்தாம் பசலி இரண்டையும் ஒரு பேட்டியில் சொல்லியிருந்தார் பாலச்சந்தர்)
நான்கு சுவர்கள் படத்துக்கு மெல்லிசை மன்னர் எம்.எஸ்.வி. இசையமைத்திருந்தார். படத்தில் இரண்டு முறை இடம்பெறும் டூயட் பாடலான 'ஓ... மைனா... ஓ.. மைனா' பாடல் நன்கு பிரபலமடைந்தது. ரவிச்சந்திரனுக்காக எஸ்.பி.பி. பாடியிருந்தார். கதாநாயகியாக வாணிஸ்ரீ நடித்திருந்தார். ரவி ரொம்ப ஸ்மார்ட்டாக நடித்திருந்த இப்படம், இப்போது பார்த்தால் விரும்பக்கூடிய படமாக அமையக்கூடும்.
Thanks Mr.Ragavendhar.
இணையத்தில் முதன் முறையாக...
புகுந்த வீடு திரைப்படத்தின் நூறாவது நாள் விழா காட்சிகள், பேசும் பட இதழிலிருந்து.
இரு பக்கங்களாக இடம் பெற்ற நிழற்படங்கள்..
1. முழுமையாக
http://i1146.photobucket.com/albums/...ps4a5ceabe.jpg
2. இரு பக்கங்களும் தனித்தனியாக
http://i1146.photobucket.com/albums/...psc4b368e4.jpg
http://i1146.photobucket.com/albums/...ps2ffc6546.jpg
நவநீதா பிலிம்ஸ் புகுந்த வீடு திரைப்படம் தமிழகமெங்கும் சிறப்பான வெற்றி பெற்றது. நூறு நாட்கள் ஓடிய இத்திரைப்படத்தின் நூறாவது நாள் விழாவில் நடிகர் திலகம் சிவாஜி கணேசன் கலந்து கொண்டு கலைஞர்களுக்கு கேடயங்களை வழங்கி கௌரவப் படுத்தினார். அதனுடைய காட்சியைத் தான் மேலே பார்க்கிறீர்கள்.
நாலும் தெரிந்தவன் -1968
http://www.mayyam.com/talk/showthrea...HANDRAN/page16
'நாலும் தெரிந்தவன்' (1968)
படம் வெளி வந்த ஆண்டு: 1968
நடிகர், நடிகைகள்: ரவிச்சந்திரன், காஞ்சனா, நாகேஷ், அஞ்சலி தேவி, மனோகர், மனோரமா, வி.கே.ராமசாமி
இயக்கம்: ஜம்பு
ஒளிப்பதிவு: கர்ணன்
இசை: சுப்பையா நாயுடு
பாடல்கள்: கண்ணதாசன்
பக்கம் 16 இல் இதில் சம்பந்த பட்டவர்கள் விவரம் கதை சுருக்கம் எல்லாமே உள்ளது.
பாரதிக்கு அடுத்து ரவிக்கு ideal pair என்றால் காஞ்சனாதான். அதே கண்களுக்கு பிறகு இதில் கலக்கினார்கள். ஷம்மி கபூர் படங்களான professor ,பிரம்மச்சாரி எல்லாமே ஹிந்தியில் பார்க்கும் போது ஜாலியாக தோன்றினாலும் அவை என்ன genre என்று சிண்டை பிய்த்து கொள்ள வைக்கும். சிறிது காமெடி, சிறிது செண்டிமெண்ட், சிறிது என்டர்டெய்ன்மென்ட் ,அருமையான பாடல்கள், crazy டான்ஸ் என்று கலவையாக ,ஆனால் யோசித்தால் எதுவுமே பிரமாதமாக இருக்காது. ஆனால் நன்றாக ஓடி நற்பெயர் எடுத்து விடும்.அவற்றை remake செய்யும் போது ,யார் நடித்தாலும் பல்லிளித்து விடும்.
இந்த வகையில் ஒரு அருமையான காமெடி கருவை சுமாராகவே கையாண்டிருப்பார்கள். saving grace ரவியின் அருமையான நடிப்பு. நிறைய கோணங்களில் சிவாஜியை நினைவு படுத்துவார். வயதான ரோல் நடிக்கும் போது காதலிக்க நேரமில்லை முத்துராமன் பாணியில் underplay செய்து அசத்துவார்.
இந்த படத்தில் சண்டை காட்சிகள், பாடல் காட்சிகள் வழக்கமான ரவி பாணியில் பிரமாதமாக வந்திருக்கும்.கரும் புள்ளி SMS இசை. படு சுமார். கண்ணுக்குள் சிக்கி கொண்ட, பூவாய் பூவாய்,செல்ல மாமா,நிலவுக்கே, நரி ஒன்று என்று வானொலியில் கேட்டிருந்தாலும் படத்தின் இளமைக்கு தகுதியில்லாதவை.
இந்த படத்தில் நாகேஷ் பயங்கர உறுத்தல்.(இவர் குட்டிச்சுவர் பண்ணியது கொஞ்ச நஞ்சமா)காமெடி,கலகலப்பு காட்சிகள் படு சுமார். கதை சம்பத்த பட்ட காட்சிகள் நன்கு வந்திருந்தாலும் ,படத்தின் tone ,mood உற்சாகம் தர வேண்டிய படத்தில் இவை highlight ஆகவே தோன்றாது. இந்த அருமையான கருவை வைத்து சுமார் படத்தை கொடுத்து சுமார் வெற்றி படம் ஆக்கினார் நம்நாடு புகழ் ஜம்பு.
இதையே படு சுவாரஸ்யமான திரைகதை ,அற்புதமான காமெடி, இவற்றை வைத்து நடிகன் என்று பிரமாத படுத்தினார் வாசு.
ரவிச்சந்திரன் அவர்கள் ஹீரோவாக நடித்து வெளிவந்த மாடர்ன் தியேட்டர்ஸாரின் 'ஜஸ்டிஸ் விஸ்வநாதன்' படம் பின்னாளில் ரஜினிகாந்த் ஹீரோவாக நடிக்க முக்தா பிலிம்ஸ் தயாரிப்பில் 'பொல்லாதவன்' படமாக மீண்டும் ரீமேக் ஆகி வெற்றியடைந்தது பல பேருக்குத் தெரிய வாய்ப்பில்லை.
ரவிச்சந்திரனின் படங்கள் தமிழில் பின்னாட்களில் மீண்டும் ரீமேக் செய்யப்பட்டு வெற்றி அடைந்தது அவருக்கு பெருமையும், புகழும் சேர்க்கும் விஷயமல்லவா!
இந்த படத்தில் ரவியின் நடிப்பும், காஞ்சனாவின் அழகும் தூக்கி நிறுத்தியது. ரவியின் வித்யாசமான சுமார் படங்களில் ஒன்று.
அன்று கண்ட முகம்-1968
கதையை விட்டு சற்றும் அங்கே இங்கே நகராத (True to the story line ) ரக திரைக் கதை,காட்சியமைப்பு.. contemporary appeal நிறைந்த period போர்வையில் வந்த படம். கல்கி மூலக்கதை சற்றே தேவனின் வாசனை கொண்டது. கல்கி செக்ஸ் கதை எழுதினாலும் அதில் காந்தியம் ,மறியல், கதர் இல்லாமல் போகாதே. ராமகிருஷ்ணன் இயக்கி தயாரித்த ஐந்து லட்சம்,சிநேகிதி எல்லாமே சுவாரஸ்மான சுமார் வெற்றி படங்களே.
ஆத்மநாதன் என்கிற வக்கீல் தனது ஜூனியர் ஆக சேரும் காஞ்சனாவை நேசிக்கிறான். ஒரு சந்தர்ப்பத்தில் தன் பணக்கார கட்சிகாரர் அழைப்பை ஏற்று ஊட்டி செல்லும் போது காஞ்சனாவையும் அழைத்து சென்று தன் ஆசையை வெளியிட, காஞ்சனா ஏற்று கொள்ளாமல் ,சிறிது அவகாசம் கோருகிறாள். ஒரு முறை வெளியில் செல்லும் போது ஒரு வாலிபன் கைதி உடையில் மயக்கமாய் இருப்பதை பார்த்து ,வீட்டுக்கு எடுத்து வந்து சிகிச்சையளிக்கிறாள். ராஜேந்தர் என்ற வாலிபன் கண் விழித்ததும் ஆத்மநாதன் கண்டு அதிர்ச்சியாகி ,தன்னையும் தன் அன்னையையும் தவிக்க விட்டு ஓடிய மூத்த அண்ணனே என்றும், ஒரு வெள்ளை அதிகாரி கொலை வழக்கில் தான் தண்டனையடைய காரணமானவனும் அவனே என கூறுகிறான்.தான் சிறையிலிருந்து தப்பித்தது அன்று கண்ட பெண்ணின் முகத்துக்காக என கூறும் போது ,அந்த முகமான காஞ்சனாவும், ராஜும் காதலிக்க தொடங்கி விடுகின்றனர். போலீஸ் உடன் சில தனி நபர்களும் ராஜ் பின்னால் அலைய ,சிலர் அவனை கொல்லவும் முயல, பின்னர் உண்மை கொலையாளி ராஜின் நண்பனே என்றும், அந்த நண்பனை காக்க அவன் தந்தைதான் ராஜ் போலீசில் மாட்ட அல்லது தீர்த்து கட்ட அலைகிறார் என்று தெரிந்து பிரச்சினை தீர வேண்டிய சந்தர்ப்பத்தில் நண்பன் விபத்தில் மரணமடைய ,ஆத்ம நாதன் தம்பிக்கு தான் இழைத்த கொடுமைக்கு தற்கொலை செய்து கொள்கிறார். காஞ்சனா கோர்ட் டில் வாதாடி காதலனை மீட்டு சுபமாக்குகிறாள் முடிவை.
இதில் எனக்கு பிடித்தவை ரவியின் அருமையான நாலு சண்டை காட்சிகள் (ரவியின் சுறுசுறுப்பு கலந்த ஸ்டைலுக்கு ஜே )அக்கால சண்டை என்றால் கொஞ்சம் boxing ,கொஞ்சம் மல்யுத்தம், கொஞ்சம் ஜூடோ,அப்புறம் காலால் X பிடி,கைமுறுக்கல் இவைதான்..ரவி- ஜெயா மேடம் chemistry அருமை. பாடல்கள் இதயம் பொல்லாதது,கண் படைத்தான், வாடா மச்சான் இசை,படமாக்கம் அருமை.(வழக்கொன்று பாடல் சுமார் ,காட்சி ஜோர்).நாகேஷ்-ரவி இணைவு நடனம் எப்போதுமே களை கட்டும்.இதிலும் அப்படியே. இக்கால road chase படங்களின் சாயல் கொண்ட விறுவிறுப்பு. கடைசி கோர்ட் காட்சி படு matured ஆக ,sensible ஆக இருக்கும். வசனம் ,காட்சிகள் சில ரொம்ப surprise கொடுக்கும். ஜாக்ரதை என்று ஜெயா சொல்லி விட்டு கதவை உடனே தட்டி எச்சரிக்கையின்றி திறக்கும் ரவியை இதுதான் உங்க ஜாக்ரதையா என்று கேட்பது,நண்பர் வக்கீலி டம் நடந்து முடிந்ததற்கு உங்கள் அட்வைஸ் வேண்டாம். நடக்க போறதை பேசலாம் என்பது.இப்படி பல.ரவியின் constipation முக பாவம்,பேச்சு சிறையிலிருந்து தப்பி வந்த கைதியின் anxiety கலந்த கவலைக்கு படு பாந்தமாய் அமைகிறது.ஜெயா மேடம் superb .மற்றவர்கள் ஓகே .
பிடிக்காதவை -அவ்வப்போது உட்கார்ந்து விடும் லாஜிக் இல்லா காட்சிகள்.அசோகன் காதல் வெளியிடும் காட்சி. ரவியின் ஓவர் வளைசல் .
மொத்தத்தில் ரொம்ப வித்யாசமான ரவியின் படம். இயக்குனர் ராமகிருஷ்ணன், வசனம் (மாரா ),இசை (மாமா) பலத்துடன் ஜெயித்தார். (வெற்றி படமே)
Last edited by Gopal,S.; 20th June 2013