Originally Posted by pammalar
டியர் டாக்,
மதுரையில் சுமதி என் சுந்தரி கிட்டத்தட்ட ரூ.43,000/- (ரூபாய் நாற்பத்து மூன்றாயிரம்) வசூல் செய்திருக்க வேண்டும். முரளி சார் கூறியது போல், ஐபிஎல், சித்திரைத் திருவிழா முக்கிய காரணங்கள். இருப்பினும், அவர் தெரிவித்திருந்த மூன்றாவது காரணமே மிக மிக முக்கியமான காரணமாகி விட்டது. ஞாயிறு (18.4.2010) மாலைக் காட்சிக்கு, ஒரு மணி நேரத்திற்கு முன்னர் இடி முழக்கத்துடனும், மின்னலுடனும் திடீரென்று ஒரு மணி நேரம் பெய்த கனமழையால், Show-time audience (காட்சி நேர கனவான்கள்) ஆப்சென்ட். சாதாரணமாகவே, கணிசமான மக்கள் பார்த்தாலே, நமது திரைப்படத்திற்கு, சென்ட்ரல் திரையரங்கில், இன்றைய நாட்களில், ஞாயிறு மாலைக் காட்சிக்கு மட்டும் ரூ.7,000/-த்துக்கும் மேல் (ரூபாய் ஏழாயிரத்துக்கும் மேல்) வசூல் ஆகி விடும். ஆனால் அன்றைய கடும்மழையால், அந்த ஞாயிறு (18.4.2010) மாலைக் காட்சிக்கு, ரூ.4,500/- (ரூபாய் நான்காயிரத்து ஐநூறு) வரை தான் வசூலானது. சர்வ சாதாரணமாக ஆகும் ஏழாயிரம் ரூபாயை விட இரண்டாயிரத்து ஐநூறு ரூபாய் குறைவு. ஒரு வாரத்திற்கான மொத்த வசூல் நமது கண்களுக்கு சற்று குறைவாக காணப்படுவதற்கு இதுவே காரணம். எனினும், யாம் ஏற்கனவே குறிப்பிட்டதைப் போல், இக்காவியத்தைத் திரையிட்டவருக்கு, இந்த ஒரு வாரத்தில் மட்டும், பத்தாயிரம் ரூபாய்க்கு மேல் லாபம் கிடைத்துள்ளது.
அன்புடன்,
பம்மலார்.