http://www.youtube.com/watch?v=w192j77vMv4
Printable View
Vinod Sir,
I understand that Nadoodi Mannan and Enga Veetu Pillai were the only two MT films to celebrate for 100 days during re-run. Could you post paper cutting/proof to authenticate the same, if available.
Also, if you have any HD images of MKT, PUC [from Ashok Kumar/ Rathnakumar] as I understand that Mr. Pammalar is publishing Photo Album seniority wise so he should have published the photo Album for the earlier super stars [ before MGR] of Cinema as well.
Thanks
Dear Sailesh Sir
Nadodi Mannan and Enga Veetu Pillai - We don't have any paper cutting proof.
I will check up with Pammalar sir regarding your quires .
1977 தமிழக சட்ட சபை தேர்தல் முடிவுகள் வெளியான நாள் அன்று மக்கள் திலகத்தின் ரசிகர்களுக்கு ஏற்பட்ட இனிமையான அனுபவம் .
1972ல் மக்கள் திலகத்தை வெளியேற்றிய அன்று மக்கள் திலகத்தின் ரசிகர்கள் எழுப்பிய முழக்கம்
எம்ஜிஆர் என்றால் திமுக . திமுக என்றால் எம்ஜிஆர் .
மக்கள் திலகம் தனி இயக்கம் துவங்கிய தினம் புரட்சித் தலைவராக உயர்ந்தார் .1973- 1974 இடைதேர்தல்களில் வெற்றி மேல் வெற்றி கண்டு ''அடுத்த தமிழக முதல்வர் '' எம்ஜிஆர் என்று
ரசிகர்கள் சபதமெடுத்து தீவிரமாக உழைக்க ஆரம்பித்தார்கள் .
முதற் கட்டமாக 1977 பாராளுமன்ற தேர்தலில் மக்கள் திலகத்திற்கு அமோக வெற்றி கிடைத்தது .
1977 ஜூன் மாதம் நடந்த சட்ட சபை தேர்தலில் மக்கள் திலகத்தின் அதிமுக இயக்கத்தை பற்றி
பலவித கருத்துக்கள் வலம் வந்தன .
ஒட்டு எண்ணிக்கை நடந்த 16.6.1977 அன்று காலை முதல் சுற்றிலே மக்கள் திலகத்தின் இயக்கம்
பல தொகுதிகளில் முன்னிலை வகித்தது என்ற செய்தி ரசிகர்களுக்கு பெருத்த மகிழ்ச்சியினை
தந்தது . சென்னை - கன்யாகுமரி நீங்கலாக மற்ற எல்லா மாவட்டங்களிலும் மக்கள் திலகம் அமோக வெற்றி பெற்று அன்று நள்ளிரவில் 118 அறுதி பெரும்பான்மை பெற்று அதிமுக ஆட்சியை கைப்பற்றியது .
1953 ல் திமுகவில் இணைந்து தன்னுடைய அயராத உழைப்பால் 1967-1971 தேர்தல்களில் திமுகவை வெற்றி பெற செய்து வெற்றி கண்ட மக்கள் திலகத்தை 1972ல் சோதனையான நேரத்தில் தனி இயக்கம் கண்டவரை 1977 தேர்தலில் தனி பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கும் விதத்தில் மக்களும் ரசிகர்களும் ஆதரவு கொடுத்து வெற்றி கண்டார்கள் .
37 ஆண்டுகள் முன் நடந்த தேர்தல் எண்ணிக்கை தினத்தின் நினைவூட்டல் தினம் .
வெற்றி-திருப்புகழ், பாட்டுடைத் தலைவன்- அற்புத நாயகன் எம்.ஜி.ஆர்.
https://www.youtube.com/watch?v=j9OE...ature=youtu.be
இனிய நண்பர்களே, மக்கள்திலகம் வியாபித்து ஆளுமை புரியும் " எங்க வீட்டு பிள்ளை" - தெலுங்கில் nt .ராமராவ் நடித்த ராமுடு பீமுடு - படம் வெளியான தேதி, வெற்றியின் சிறப்புகள், மக்களின் அமோக வரவேற்பு - இவற்றை காட்சி, தகவல் அடிப்படையில் பகிர்ந்து கொள்ள அன்புடன் கேட்டு கொள்கிறேன்...
மக்கள்திலகத்தின் பக்தர் திரு ரூப்குமார் அவர்களின் பாச தாயார் பரிபூரண நலம் பெற இறைவனை வேண்டுகிறோம்...
இன்றைய மாலை முரசு தினசரியில் வெளியான செய்தி.
------------------------------------------------------------------------------------------------
http://i57.tinypic.com/4lheet.jpg
நன்றி: மாலை முரசு தினசரி.
இந்த வார குங்குமம் இதழில் வெளிவந்த செய்தி.
-------------------------------------------------------------------------------------
http://i62.tinypic.com/9vkqrs.jpg
நன்றி.:குங்குமம் வார இதழ்.
மக்கள் திலகம் எம்ஜிஆர் ஒரு திறமையான நடிகர்
************************************************** *********************
ஆங்கில பத்திரிகை ஒன்றில் எம்ஜிஆர் சண்டை காட்சியில் மட்டும் மிளிர்ந்தார் என்று ஒரு தவறான தகவலை வெளியிட்டு ஒரு கட்டுரை வெளியிட்டு உள்ளார்கள் . எம்ஜிஆர் நாடக துறையில் இருந்த வந்ததாலும் தான் ஏற்று கொண்ட கதாபாத்திரத்திற்கு உயிர் கொடுத்து நடித்தவர் என்பதை அந்த கட்டுரை எழ்தியவருக்கு தெரியாமல் போனது வியப்பாக உள்ளது .
நடிப்பு என்பது பலதரப்பட்ட பரிணாமங்கள் உள்ளடக்கியது .ரசனைக்கு ஏற்ப நடிப்பிற்கு ரசிகர்கள் உருவானார்கள் .அந்த வகையில் எம்ஜிஆரின் நடிப்பு ஒரு எல்லைக்குள் ,தன்னுடைய கொள்கைக்கு ,சமூக சிந்தனைக்கு , மக்களின் துன்பங்களுக்கு விடியலாக ,மகிழ்ச்சியின் வடிகாலாக ,படங்களை மக்களுக்கு தந்தார் .
எம்ஜிஆரின் நடிப்பு என்பது மிகவும் இயற்கையாக இருந்தது . அவருடைய ரசிகர்களும் அவரின் பல தரப்பட்ட நடிப்பை ஏற்று கொண்டார்கள் .காதல் - பாசம் - வீரம் - சோகம் - ஆனந்தம் - துடிப்பு - வீர மறவர்களின் சண்டைகள் என்று நடிப்பில் மின்னியவர் எங்கள் தங்கம் எம்ஜிஆர் .
என்தங்கை - தாய்க்கு பின் தாரம் - பாசம் -பெற்றால்தான் பிள்ளையா - போன்ற படங்களில் அவருடைய நடிப்பை பார்க்கவில்லையா ?
மந்திரிகுமாரி - மர்மயோகி - சர்வதிகாரி -மதுரை வீரன் - -சக்கரவர்த்தி திருமகள் - நாடோடி மன்னன் - மன்னாதி மன்னன் காஞ்சிதலைவன் - அரசகட்டளை - அடிமைப்பெண் - மதுரையை சுந்தர பாண்டியன் போன்ற படங்களில் அவருடைய எழ்ச்சி மிகு மன்னர் - வீரன் நடிப்பை கட்டுரையாளர் பார்க்கவில்லையா
எங்க வீட்டு பிள்ளை - ஆயிரத்தில் ஒருவன் - அன்பேவா - பறக்கும் பாவை - அலிபாபாவும் 40 திருடர்களும் - சபாஷ் மாப்பிளே - காவல்காரன் - ஒளிவிளக்கு - ரிக்ஷாக்காரன் - நல்ல நேரம் -போன்ற படங்களை முதலில் கட்டுரையாளர் நடிப்பை பார்த்து விமர்சனம் செய்யட்டும் .
உலகம் சுற்றும் வாலிபன் - எம்ஜிஆரின் மிகப்பெரிய சாதனை படைப்பு
நாடோடிமன்னன் - ஒரு அரசியல் மாற்றம்
எங்க வீட்டு பிள்ளை - வசூலில் பிரமிக்க வைத்த பிரமாண்டம்
அன்பே வா- இனிய பொழுது போக்கு சித்திரம்
அடிமைப்பெண் - உழைப்பிற்கும் - பிரமாண்டதிற்கும் எடுத்து காட்டு படம்
மலைக்கள்ளன் - ரிக்ஷாக்காரன் - மத்திய அரசு மகுடம் சூட்டிய படங்கள்
காவல்காரன் - குடியிருந்த கோயில் - மாநில அரசின் விருது பெற்ற படங்கள்
உழைக்கும் வர்கத்தின் தொழிலாளிகள் - அடிமட்ட உழைப்பாளர்கள் - வறுமையின் கோட்டில் இருந்த லட்சக்கணக்கான ஏழைகள் கண்ணீருக்கும் - கவலைகளுக்கும் , ஆதரவாக இருந்த நடிகர் மக்கள் திலகமே . அவருடைய படங்கள் ஏழைகளின் கண்ணீரை துடைத்தது .மனதிற்கு இதமான வண்ண கதாநாயகனாக எம்ஜிஆர் வாழ்ந்தார் - வாழ்கிறார் - இனி என்றென்றும் வாழ்வார் .
பணக்கார்கள் - வசதி படைத்தவர்கள் - பட்டாடை அணிந்து காரில் வருபவர்கள் குளிர் சாதன அரங்கில் வந்த பணத்தை கொடுத்து ஒரு நடிகரின் நடிப்பை பார்த்து கண்ணீர் விட்டு வெளியே வருவார்கள் - உண்மை
அதே எம்ஜிஆர் படத்தை ஏழைகள் - உழைக்கும் வர்க்கம் - அன்றாட கூலிகள் -அழுக்கு ஆடை அணிந்தவர்கள் - வியர்வையோடு மக்கள் வெள்ளத்தில் அவருடைய படங்களை பார்த்து ஆனந்த கண்ணீருடன் - சிந்தனை தெளிவுடன் குறைந்த கட்டணத்தில் படம் பார்த்துவிட்டு சிரித்த முகத்துடன் மீண்டும் மீண்டும் எம்ஜிஆரை பார்க்க வருவார்கள்
இப்படி நடிப்பிலும் - திரை உலகிலும் - பல சாதனைகள் புரிந்த ஒருவரின் சரித்திரத்தை சரியாக ஆராயாமல் அரை வேக்காடாக பதிவு செய்த களந்தை பீர் முகமது பற்றி என்ன சொல்வது ?
பாட்டாளி மக்களுக்கு உதவவேண்டும்; வறுமையாளர்களுக்கு வழி செய்ய வேண்டும், தொழிலாள வர்க்கத்தின் துயரைத் துடைக்க வேண்டும்; ஏழை மக்களை ஈடேற்ற வேண்டும்’ என்ற நல்ல எண்ணம் தம்பி எம்.ஜி.ஆர். அவர்களுக்கு எப்போதும் உண்டு.
எம்.ஜி.ஆர் அவர்கள் ரிக்ஷாத் தொழிலாளர்களின் தொல்லைகளைக் கண்டிருக்கிறார். இருந்தாலும் அவருக்கு, இப்படி மழை அங்கிகளைத் தரவேண்டும் என்ற எண்ணம் எப்படி வந்தது?
இந்த நேரத்தில் எனக்கு ஒரு நிகழ்ச்சி நினைவுக்கு வருகிறது. 20 ஆண்டுகளுக்குமுன் கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன், ஒரு நாடகத்தில் நடிக்க திருச்சிக்குச் சென்ற பொழுது, திருச்சியில் குதிரை வண்டி, மாட்டு வண்டிக்காரர்கள் மரத்தில் நிழல்கூட இல்லாமல் வெயிலில் இருப்பதைக் கண்டு, உடனே அங்கு ஒரு கொட்டகையைக் கட்டி அவர்களுக்கு உதவினார்.
அதைப்போல எம்.ஜி.ஆர் அவர்கள் ரிக்க்ஷா தொழிலாளர்கள் மழையில் படும் கஷ்டங்களைக் கண்டு அவர்கள் மழையில் வாடுவதைக் கண்டு இந்த நல்ல முயற்சியில் ஈடுபட்டு, நல்லதோர் உதவி செய்ய முன்வந்திருக்கிறார்.
ஏழை படும் இன்னலை எண்ணி எண்ணிப் பார்த்துக் கனிவு உள்ளம் பெற்றுத் தொண்டாற்றுகிறார் எம்.ஜி.ஆர்
எம்.ஜி.ஆர் நல்ல கலைஞர், நல்ல கலைஞர்கள் பெரிய மோட்டார் வைத்திருப்பார்கள்; அதில் சென்றால் ஏழை எளியவரைப் பார்க்க முடியாது; உள்ளே பள்ளமாக இருப்பதால் வெளியில் இருப்பவர்களைப் பார்க்க முடியாதபடி மறைத்துவிடும். அப்படிப்பட்ட உயரிய நிலையிலே வாழும் எம்.ஜி.ஆர். அவர்களுக்குக் குடிசைகளைப் பார்க்க வேண்டிய எண்ணம் எப்படி வந்தது? அதைத்தான் அவரே விளக்கினார். ‘யானை கவுனிப் பகுதியில் ஏழை நடிகனாக கேட்பாரற்றவனாக எத்தனையோ நாட்கள் நடைபாதையிலேயே நடமாடினேன். அதுதான் ஏழைகளின் நிலையை உணரமுடிந்தது’ என்று சொன்னாரே-அந்த உள்ளந்தான் அவரை எண்ணிப் பார்க்க வைத்தது.
இந்த அருமையான காரியத்தை மற்றவர்களும் செய்தால் மகிழ்ச்சியுடன் வரவேற்றுப் பாராட்டுவேன்; அவர்கள் கலைஞர்களாக இருந்தால் மெத்த சந்தோஷம்; கழகத்தைச் சார்ந்த கலைஞர்களாக இருந்தால் இரட்டிப்பு மகிழ்ச்சி; எம்.ஜி.ஆர் தான் செய்கிறாரே என்று யாருமே சும்மா இருக்க வேண்டாம் என்று கேட்டுக் கொள்கிறேன்.
எம்.ஜி.ஆருடன் போட்டி போட்டுக் கொண்டு நன்கொடை வழங்க முன்வரும் கலைஞர்கள், இந்த நல்ல காரியத்தைச் செய்யலாம். எம்.ஜி.ஆர் ஒரு சிறு உதவி செய்தால் அவர்கள் அதைவிடப் பெரிதாக நல்ல உதவி செய்யட்டும் .
“மக்களிடம் பெறுகிறோம். மக்களுக்குத் திருப்பித் தருகிறோம்” என்று எம்.ஜி.ஆர் கூறினார். நல்ல தத்துவம். எவ்வளவு பெரிய உலகத்திலேயே ஈடு இணையற்ற சீரிய பொருளாதாரத் தத்துவத்தை இவ்வளவு எளிமையாகச் சொல்கிறாரே என்று நானே அதிசயித்துப் போனேன் அவர் பேசும்பொழுது?
இந்தத் தத்துவத்தைத்தான் சில நாடுகளில் ‘சன் மார்க்கம்’ என்கிறார்கள். சில நாடுகளில் ‘பொதுவுடைமை’ என்கிறார்கள். அப்படியெல்லாம் எந்தத் தர்மமும் இல்லாமல் மக்கள் கொடுக்கும் பணத்தை மக்களுக்கே திருப்பித் தருவதாகக் கூறினாரே அதிலேதான் அவருடைய உயர்ந்த உண்மை இருக்கிறது. அவர்கள் உள்ளத்தில் முன்னேற்றக் கழகமே உள்ளது. நண்பர் எம்.ஜி.ஆர் தூய உள்ளத்தின் தத்துவத்தை நானாகப் புரிந்துகொண்டேன். இந்தத் தத்துவம் எந்த ஆட்சி நடந்தாலும் அதன் அடிப்படையாக இருக்க வேண்டும்.
நல்ல காரியத்தை நல்லவர்களுக்கு நல்லவர், நல்ல இயக்கத்தின் சார்பில் செய்கிறார்கள். அத்தகைய நல்ல விழாவில் நல்லவர்கள் கூடியிருக்கிறீர்கள்.
நம்முடைய புரட்சி நடிகர் இராமச்சந்திரன் அவர்கள் மழை அணி வழங்கும் இந்தச் சீரிய காரியத்தைக் குறித்து, பலர் பலவிதமாகப் பேசுவதைப் பற்றி வருத்தப்படத் தேவையில்லை. புகழுக்காகத்தான் இதை எம்.ஜி.ஆர். செய்கிறார் என்று சொன்னால் இப்படிப் புகழ் பெறுவதிலே ஒன்றும் தவறில்லை.
புகழ் ஈட்டுவது என்பது தமிழ் மரபு ஆகும். ‘ஈதல் இசைபட வாழ்தல்’ என்ற இலக்கணத்தைப் பின்பற்றி வரும் மரபைச் சேர்ந்தவர்கள் நாம். நாம் தேடிய புகழால் பிற்காலச் சந்ததிக்குப் பயன் உண்டு.
நாம் கட்டிய மாளிகைகள் காலத்தால் அழிந்து போகலாம்; நாம் தோண்டிய அகழிகள் தூர்ந்து போகலாம்; நாம் எழுப்பிய கோபுரங்கள் குலைந்து போகலாம்; ஆனால் நாம் ஈட்டிய புகழ் பரம்பரை பரம்பரையாக தலைமுறை தலைமுறையாக நாட்டிற்குச் சொந்தமாக இருக்கும்.
ஈட்டிய புகழைக் காப்பாற்றத் தவறியவர்களும், வந்தடைந்த புகழை இழந்தவர்களும், புகழ் ஈட்டியவர்களைக் கண்டு பொறாமை கொண்டவர்களும் இப்படிப்பட்ட காரியங்களைத் தூற்றுவதைப் பற்றிச் சிறிதும் கவலை கொள்ளத் தேவையில்லை; அவர்களை இந்த விழாவில் எண்ணிப் பார்க்க வேண்டாமா?
இந்த விழா எம்.ஜி.ஆர். அவர்களின் புகழுக்காக அல்ல; அவருடைய புகழுக்காக என்றால் நாங்கள் இங்கு இருக்கமாட்டோம்; நீங்கள் வந்திருக்கமாட்டீர்கள்; நாமெல்லாம் கூடியிருக்க மாட்டோம். நாட்டுக்கு நல்லது செய்யும் விழா இது; அதனால்தான் கூடியிருக்கிறோம். நாட்டுக்கு எங்கு நல்லது என்று படுகிறதோ அதனை வரவேற்போம், மற்றவைகளை எதிர்ப்போம்.
எம்.ஜி.ஆர் ஈட்டுகின்ற புகழ் அவருக்கு மட்டுமல்ல அவர் மூலம் நாட்டுக்குக் கிடைத்த நல்ல காரியமாகும். "
= சென்னையில் 6000 ரிக்க்ஷா தொழிலாளர்களுக்கு மக்கள் திலகம்
எம்ஜியார் ஏற்பாட்டில் மழைக் கோட்டுகளை வழங்கி அறிஞர் அண்ணா . ( 4 - 12 - 1961 , நம்நாடு இதழ் )
http://i1170.photobucket.com/albums/...ps6865c602.jpg
Makkal Thilagam - Art by Parthasarathy Mani
ENGA VEETU PILLAI TELUGU VERSION RAMUDU BHEEMUDU
KUMARI PENNIN ULLATHILAE SONG SEQUENCE IN TELUGU
http://www.youtube.com/watch?v=7njBOrk3Vsc
http://www.youtube.com/watch?v=kbRLl0a24Zc
KANGALUM KAVADI SINTHADATUM SONG SEQUENCE IN TELUGU
http://www.youtube.com/watch?v=bqA_zXNZvUc
http://www.youtube.com/watch?v=VirmpHTsrR0
நமது இதய தெய்வத்தின் எவர் கிரீன் வெற்றி காவியம் ஆயிரத்தில் ஒருவன் வருகிற 22.06.14 அன்று நூறு நாளை கடக்கிறது அந்த வெற்றி விழாவினை நமது தெய்வத்தின் பெயரில் அமைந்து உள்ள பல்வேறு மன்றங்கள் பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்து உள்ளனர் .
1.22.06.14 ஞாயிறு அன்று காலையில் மக்கள் திலகம் பொது நலம் சங்கம் சார்பாக அன்னதானம் நடைபெறுகிறது தலைவரின் சமாதியில் அதை தொடர்ந்து பல்வேறு மாவட்டங்களில் வந்துள்ள தலைவரின் பக்தர்களோடு கலந்து உரையாடல் .
2.மாலை 3.00 மணியளவில் சிந்தாதிரி பேட்டை தலைவர் சிலையில் இருந்து ஆயிரத்தில் ஒருவன் வெற்றி ஊர்வலம் பேண்டு வாத்தியங்களோடு ஆல்பர்ட் திரையரங்கிற்கு மாபெரும் ஊர்வலம் .
3.மாலை 4.00 மணியளவில் தலைவரின் வித வித மான பதகைகளுக்கு மலர் அலங்காரம் அதை தொடர்ந்து வெற்றில் விழா நிகழ்ச்சிகள் தொடர்கின்றன .
AN IMAGINATION POSTER OF AAYIRATHIL ORUVAN COMPLETING 100 DAYS
http://i1170.photobucket.com/albums/...psbde2ab6b.jpg
http://i1170.photobucket.com/albums/...psec869301.jpg
ENTIRE CINEMA PERSONALITIES WISHES TO MANIMARAN VICTORY
http://i1170.photobucket.com/albums/...ps503cf0b1.jpg
DREAM OF EVERY DEVOTEE
TWO CM READY TO PARTICIPATE MANIMARAN AND POONGKODI PAIR VICOTRY
http://i1170.photobucket.com/albums/...ps6459915c.jpg
1991-இல் படகோட்டி மறு வெளியிட்டின் போது சென்னை மாநகரில் ஒட்டப்பட்ட போஸ்டர்கள் தான் நினைவுக்கு வருகிறது வினோத் சார் . மிக பெரிய அளவில் ஒட்டப்பட்டது (20 பிட் என்று நினைக்கிறேன் ) தலைவர் வளையல் கரார் வேடத்தில் வரும் ketup தான் பெரிய அளவில் போடு இருப்பார்கள் .
அதில் இடம் பெற்ற வாசகம்
வசூல் சாதனை வசூல் சாதனை என்று வாய் கிழிய பேசுபவர்களே இந்த ஒரு படத்தின் வசூலுக்கு இடாகுமா ? தற்போது உள்ளது போல வசதிகள் இருந்தால் அந்த போஸ்டர் படம்பிடித்து இங்கே பதிவிறக்கம் செய்திருக்கலாம்
1990- வாக்கில் மிக பெரிய அளவில் போஸ்டர்கள் அடிப்பது திரு தாணு அவர்கள் தான் அவர் தான் அவர் படங்களுக்கு மிக பெரிய அளவில் போஸ்டர்ஸ் ஓட்டுவார்கள் . அப்படிப்பட்ட காலத்தில் தலைவர் படங்களுக்கும் போஸ்டர்ஸ் மிக பெரிய அளவில் ஒட்டினார்கள்
1.தேடி வந்த மாப்பிள்ளை ( ஜெயாவும் தலைவர் ஓல்ட் getup வரும் காட்சி )
2.முகராசி ( ஜெயாவிற்கு தலைவர் கம்பு சண்டை சொல்லிகொடுக்கும் கட்சி)
3.நல்ல நேரம் (பலவிதமான் போஸ் )
4.எங்க வீடு பிள்ளை
5.உலகம் சுற்றும் வாலிபன்
விளம்பரத்தில் காணப்படும் - நம் மக்கள் திலகத்தின் காவியம் " படகோட்டி " 02-07-1982 முதல் சென்னை பாரகன், அகஸ்தியா, சரவணா மற்றும் லிபர்ட்டி திரை அரங்குகளில், தினசரி மூன்று காட்சிகளுடன், வெளியானது .
04-07-1982, 11-07-1982 மற்றும் 18-07-1982 ஞாயிறு அன்று சென்னை பாரகன் மற்றும் சரவணா அரங்குகளில் house-full ஆனது.
3 வாரம் வரை (23-07-1982) பாரகன் மற்றும் சரவணா அரங்குகளில் வெற்றிகரமாக ஓடியது.
23-07-1982 முதல், 3 காட்சிகளுடன், ஸ்ரீ பத்மநாபா அரங்கில் மாற்றம் செய்யப்பட்டது.
06-08-1982 முதல் செலக்ட் மற்றும் நேஷனல் அரங்குகளில், 3 காட்சிகளுடன், வெளியிடப்பட்டது.
13-08-1982 முதல் பழனியப்பா அரங்கில் 3 காட்சிகளுடன், வெளியிடப்பட்டது.
20-08-1982 முதல் தங்கம் அரங்கில் அதே மூன்று காட்சிகளுடன் வெளியானது.
27-08-1982 முதல் வீனஸ் அரங்கில் மாற்றப்பட்டது.
03-09-1982 முதல் கபாலி அரங்கில் வெளியானது.
10-09-1982 முதல் பிரைட்டன் அரங்கில், தினசரி 4 காட்சிகளுடன் வெளியிடப்பட்டு வெற்றிகரமாக ஓடியது.
03-12-1982 முதல் சன் அரங்கில் மாற்றப்பட்டது.
24-12-1982 முதல் சரஸ்வதி அரங்கில் வெளியிடப்பட்டது.
31-121982 முதல் ஸ்ரீ முருகன் அரங்கில் வெளியிடப்பட்டது.
07-01-1983 முதல் ஜெயராஜ் அரங்கில் வெளியானது.
28-01-1983 முதல் ராஜகுமாரி அரங்கில் வெளியானது.
1982ம் ஆண்டில், சென்னை மாநகரில் மட்டும், 15 அரங்குகளில், தினசரி 3 காட்சிகளுக்கும் குறையாமல், மொத்தம் 406 காட்சிகள் ஓடி தமிழ் திரை உலகில் ஒரு திருப்பு முனையை ஏற்படுத்தி வரலாற்று சாதனையை உருவாக்கிய பெருமை நம் மக்கள் திலகத்துக்கு மட்டுமே உண்டு.
சினிமாஸ்கோப்பில் -
15-01-1988 முதல் குளிர் சாதன "தேவி பாரடைஸ்" அரங்கில் தினசரி 3 காட்சிகளுடன் வெளியாகி, 2 வாரங்கள் வெற்றிகரமாக ஓடி வசூலை அள்ளிக் குவித்தது.
பின்பு 29-01-1988 முதல் சென்னை ஸ்ரீனிவாசா அரங்கில் மாற்றப்பட்டு, தினசரி 4 காட்சிகளுடன் ஓடியது.
மீண்டும் 05-02-1988 முதல் அகஸ்தியா அரங்கில், தினசரி 3 காட்சிகளுடன் வெளியானது.
12-02-1988 முதல் கபாலி அரங்கில் தினசரி 3 காட்சிகளுடன் ஓடியது.
19-02-1988 முதல் சரவணா அரங்கில், அதே 3 காட்சிகளுடன், வெளியானது.
26-02-1988 முதல் ராம் அரங்கில் வெளியானது.
04-03-1988 முதல் ஸ்ரீ முருகன் அரங்கில் 3 காட்சிகள் ஓடியது.
சென்னை நகரில் மட்டுமல்ல, தமிழகத்தின் முக்கிய நகரங்களில் உள்ள பெரும்பாலான திரையரங்குகளில், நம் பொன்மனசெம்மலின் பொற்காவியங்கள் ஆக்கிரமித்து அற்புத சாதனைகளை படைத்து வருவது சர்வ சாதாரணமாகி விட்டது.
ஓங்குக ஆலயம் கண்ட ஆண்டவன் எம். ஜி. ஆர். புகழ் ! !
அன்பன் : சௌ. செல்வகுமார்
என்றும் எம். ஜி. ஆர்.
எங்கள் இறைவன்
PADAGOTTI
I still remember seeing in Agasthya in 1982? - Housefull [ got the ticket in black]. Again in Padmam during during 1988-89 Cinemascope version - Housefull.
Thanks