http://i67.tinypic.com/4f9lg.jpg
http://i68.tinypic.com/rirnyb.jpg
http://i66.tinypic.com/2zg55kj.jpg
http://i64.tinypic.com/ztvrdf.jpg
Printable View
புதிய தலைமுறை வார இதழில் மக்கள் திலகத்தின் நூற்றாண்டை முன்னிட்டு தொடர் கட்டுரை இந்த வாரம் முதல் துவங்கி உள்ளது
இன்று மாலை தற்போது ஜெயா மூவிஸில் மக்கள் திலகத்தின் நீரும் நெருப்பும் ஒளி பரப்பாகி கொண்டு வருகிறது .
இன்று இரவு 7 மணிக்கு சன் லைப் தொலைக்காட்சியில் மக்கள் திலகத்தின் நான் ஆணையிட்டால் ஒளி பரப்பாக உள்ளது .
டாக்டர் பெரியசாமி அவர்கள் எழுதிய ''இதயஒலி '' புத்தகம் மிகவும் அருமையாக உள்ளது .
1984ல் மக்கள் திலகம் எம்ஜிஆர் சென்னை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நாள் முதல் 1985 பிப்ரவரியில் சென்னை திரும்பிய வரை நடைபெற்ற அத்தனை நிகழ்வுகளையும் மிக தெளிவாகவும்அழகாகவும் வாசகர்களுக்கு
படம் பிடித்து காட்டியுள்ளார் ..அவருக்கு நம்முடைய வாழ்த்துக்களை தெரிவித்து கொள்வோம் .
1972 அக்டோபர் 17 !
அன்றுதான் சர்வாதிகாரி ஜார் மன்னனை எதிர்த்துப் புரட்சித் தலைவர் மாமேதை லெனின் தலைமையில் ரஷ்ய நாட்டின் தொழிலாளர் வர்க்கம் புரட்சிக் கொடியை உயர்த்திப் பிடித்தது!.
ஆகா என்றெழந்தது யுகப்புரட்சி! அலறி வீழ்ந்தான் கொடுங்கோலன் ஜார்ஜ் மன்னன்! அந்தப் புனிதமான அக்டோபர் மாதம் 17 – ம் தேதியன்று தான் தமிழகத்தின் புரட்சித் தலைவர் புதுக்கட்சியைத் தொடங்கினார்! அறிஞர் அண்ணாவின் பெயரையும், அவரது கொள்கைகளையும் தி.மு.க. தலைமை இருட்டடிப்புச் செய்வதால், தாம் தொடங்கிய புதிய கட்சிக்கு ”அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்” என்னும் பெயரைச் சூட்டினார், புரட்சித் தலைவர்!
அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் என்னும் அமைப்பைத் தொடங்கியது குறித்த அறிவிப்பை வெளியிடும் பெரும் பேறு முன்னாள் மேலவை உறுப்பினரான அனகாபுத்தூர் இராமலிங்கத்துக்கு கிட்டியது.
கொடியை அமைத்துக் கொடுத்தவர்
அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் கொடியை (கறுப்பு, சிவப்பு, நடுவில் அண்ணாவின் உருவம்) புரட்சித் தலைவரின் கருத்துப்படி அமைத்துக் கொடுத்தவர் மற்றொரு முன்னாள் மேலவை உறுப்பினரான ஆர்ட் டைரக்டர் அங்கமுத்து ஆவார்.
புதிய இயக்கத்தின் பெயரையும் கொடியின் அமைப்பையும் அறிவித்த புரட்சித் தலைவர், அந்தப் புதிய கட்சியின் அமைப்புச் செயலாளராகத் ‘தென்னகம்’ நாளேட்டின் ஆசிரியரான கே.ஏ.கிருஷ்ணசாமியை நியமித்தார்.
தங்கள் புரட்சிநாயகன் புதியகட்சியைத் தொடங்கிவிட்டார்; அக்கட்சிக்கு அறிஞர் அண்ணாவின் பெயரையே சூட்டிவிட்டார் என்பதை அறிந்த எம்.ஜி.ஆர் ஆதரவாளர்கள் அகமகிழ்ந்தனர்; ஆனந்தக் கூத்தாடினர். உடனடியாகத் தமிழகம் முழுவதிலும் அண்ணா தி.மு.க. கிளைகள் உருவாக்கப்பட்டன. கட்சிக் கொடிகள் அவசர அவசரமாய் உருவாக்கப்பட்டு ஏற்றப்பட்டன.
தமிழகத்தில் மட்டுமின்றித் தமிழர்கள் வாழும் பெங்களூர், பம்பாய் முதலிய நகரங்களிலும் அண்ணா திராவிட முன்னேற்றக்கழகக் கிளைகள் உருவாக்கப்பட்டன.
அதுவரை தி.மு.க. என்று வழங்கப்பட்டுக் கொண்டிருந்த கழகத்தை அதன்பின்னர் புரட்சித்தலைவர் ‘கருணாநிதி கட்சி’ என்றுதான் வழங்கினார்.
கருணாநிதி கட்சியிலிருந்து இலட்சக்கணக்கான இளைஞர்களும், மாணவர்களும் விலகி அண்ணா தி.மு.க.வில் சேர்ந்தனர்.
புரட்சித்தலைவர் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தைத் தொடங்கியபோது அவர் ஏற்கெனவே சட்ட மன்ற உறுப்பினராய் இருந்தார். எனவே, சட்டமன்றத்தில் அப்பொழுது அ.தி.மு.க.வின் பலம ஒன்றாய் இருந்தது. அடுத்த சில நாள்களிலேயே எஸ்.எம். துரைராஜ் குழ. செல்லையா, சௌந்தரபாண்டியன், ஜி.ஆர். எட்மண்ட் முதலிய சட்டமன்ற உறுப்பினர்கள் புரட்சித் தலைவரின் அ.தி.மு.க.வில் சேர்ந்து அதன் சட்டமன்ற உறுப்பினர் எண்ணிக்கையை ஐந்தாக உயர்த்தினர்.
அப்பொழுது கடசித்தாவல் தடைச்சட்டம் பிறப்பிக்கப்படவில்லை. அதனால் அடுத்தடுத்துச் சட்டமன்ற உறுப்பினர்களும், பாராளுமன்ற உறுப்பினர்களும், பாராளுமன்ற உறுப்பினர்களும் அ.தி.மு.க.வில் சேரவும், சேர்ந்த பின்னரும் நீடிக்கவும் சாத்தியப்பட்டது.
பாராளுமன்ற உறுப்பினர்களான நாஞ்சில் மனோகரன், எஸ்.டி. சோமசுந்தரம், பாவலர் முத்துசாமி, கே.ஏ. கிருஷ்ணசாமி முதலியோரும் தொடக்கத்திலேயே அண்ணா தி.மு.க.வில் சேர்ந்திருந்தனர். அவர்களுள் பாவலர் முத்துசாமியைக் கழகத்தின் முதல் அவைத்தலைவராக நியமித்தார், புரட்சித்தலைவர்.
பின்னர் சி.வி. வேலப்பன். கே.காளிமுத்து, கோவை செழியன், ஜி. விஸ்வநாதன் முதலிய சட்டமன்ற உறுப்பினர்களும் புரட்சித் தலைவரின் அணியில் இணைந்தனர்.
புரட்சி நடிகர் புரட்சித் தலைவர் ஆனார்!
புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆருக்கு மக்கள் திலகம், புரட்சி நடிகர், பொன்மனச்செம்மல் எனப் பல சிறப்புப் பெயர்கள் உண்டு. ‘மக்கள் திலகம்’ என்று அவரை முதன்முதலில் வழங்கியவர் ‘கல்கண்டு’ ஆசிரியர் தமிழ்வாணன் ஆவார். ‘புரட்சி நடிகர்’ என்று அவரை விளித்தவர், கலைஞர் கருணாநிதி ஆவார். ‘பொன்மனச் செம்மல் என்று வழங்கியவர் திருமுருக கிருபானந்தவாரியார் ஆவார்.! ஆனால் புரட்சி நடிகராய் விளங்கிய எம்.ஜி.ஆரை முதன் முதலில் புரட்சித்தலைவர்’ என்று வழங்கியவர் ‘தென்னகம்’ ஆசிரியரும், அ.தி.மு.க.வின் முதல் அமைப்புச்செயலாளரும், பாராளுமன்ற ராஜ்யசபை உறுப்பினருமான கே.ஏ.கிருஷ்ணசாமி ஆவார்.
அ.தி.மு.க.வின் சார்பில், 1972 ஆம் ஆண்டு, நவம்பர் 3 ஆம் தேதியன்று, சென்னை கடற்கரை சீரணி அரங்கில் ஒரு பிருமாண்டமான பொதுக்கூட்டம் நடைபெற்றது. அதில் பேசிய கே.ஏ.கே. ”இதுவரை நம் தலைவரை நாம் அனைவரும் புரட்சி நடிகர் என்றே வழங்கினோம். இனிமேல் அவர் புரட்சி நடிகர் அல்லர். புரட்சித் தலைவர்! ஊழலை ஒழித்துக்கட்டும் தர்மயுத்தத்தின் தானைத் தலைவர்! இனி மேல் நாம் அனைவரும் அவரைப் புரட்சித் தலைவர் என்றே வழங்க வேண்டும்!” என்று கூறினார்.
அப்போது அங்கு திரண்டிருந்த மக்கள் கூட்டம் ”புரட்சித் தலைவர் வாழ்க!, புரட்சித் தலைவர் வாழ்க!” என்று விண்ணதிர முழக்கமிட்டது. கடல் அலைகளின் ஓசை சில நிமிடங்கள் அமுங்கிவிட்டது போன்ற நிலை அங்கே தோன்றியது. புரட்சி நடிகராய் இருந்த மக்கள் திலகம், பொன்மனச்செம்மலாகிப் புரட்சித் தலைவராய் மாறிய வரலாறு இதுதான்!
courtesy- MGR NOOLAGAM - NET
http://i68.tinypic.com/27wt3z8.jpg
முகநூலில் இருந்து
http://i65.tinypic.com/33vydg1.jpg
கோவையில் சென்ற வருடம் மக்கள் திலகத்தின் 30 படங்கள் 40 முறை திரையிடப்பட்டுள்ளன. (சில படங்கள் 2 முறை). சென்ற வருடத்தின் 365 நாட்களில் 244 நாட்கள் மக்கள் திலகத்தின் படங்கள் கோவையில் திரையிடப்பட்டு உள்ளன. இது ஒரு வரலாற்று சாதனை. ஒரு நடிகரின் படங்கள் அவர் மறைநத பின்னும் ஒரு ஊரில் வருடத்தில் 244 நாட்கள் திரையிடப்பட்டு மக்கள் ஆதரவுடன் ஓடுவது கின்னஸ் சாதனை.
மக்கள் திலகம் புகழ் வாழ்க.
http://i66.tinypic.com/208d2j7.jpg
கோவையில் சென்ற வருடம் மக்கள் திலகத்தின் 30 படங்கள் 40 முறை திரையிடப்பட்டுள்ளன. (சில படங்கள் 2 முறை). சென்ற வருடத்தின் 365 நாட்களில் 244 நாட்கள் மக்கள் திலகத்தின் படங்கள் கோவையில் திரையிடப்பட்டு உள்ளன. இது ஒரு வரலாற்று சாதனை. ஒரு நடிகரின் படங்கள் அவர் மறைநத பின்னும் ஒரு ஊரில் வருடத்தில் 244 நாட்கள் திரையிடப்பட்டு மக்கள் ஆதரவுடன் ஓடுவது கின்னஸ் சாதனை.
மக்கள் திலகம் புகழ் வாழ்க.
நேற்று முதல் கோவை
டிலைட் திரையரங்கில் விவசாயி.
திரு சுந்திர பாண்டியன் அவர்களுக்கு,
நமது திரியில் ஜனவரி மாதம்
கோவையில் சென்ற ஆண்டு மக்கள் திலகத்தின் சாதனைகளை
மிக விரிவாக பதிவு செய்திருந்தேன்.
அதைப் பார்க்கவும்.
Cinema Expressல் வெளிவந்து கொண்டிருக்கும்
அபூர்வத் தகவல்கள்:
01 - எம்.ஜி.ஆர்
எம்.ஜி.ஆர் பாடல்களுக்குப் பின்னணிக் குரல் கொடுத்தவர்கள்: எம்.எம்.மாரியப்பா, திருச்சி லோகநாதன், சி.எஸ். ஜெயராமன், பி.பி.ஸ்ரீநிவாஸ், ஏ.எம்.ராஜா, சீர்காழி கோவிந்தராஜன், டி.எம்.சௌந்தரராஜன், எஸ்.பி.பாலசுப்பிரமணியம், கே.ஜே.யேசுதாஸ் போன்றோர். ஜெயச்சந்திரன், எம்.ஜி.ஆருக்காக "மதுரையை மீட்ட சுந்தர பாண்டியன்" படத்தில் "அமுதத் தமிழில் எழுதும்" என்ற ஒரு பாடலை மட்டும் பின்னணி பாடியுள்ளார். ("நீதிக்கு தலைவணங்கு" படத்தில் எம்.ஜி.ஆர். இரயில் வண்டியில் பயணம் செய்யும் போது, "எத்தனை மனிதர்கள் உலகத்திலே" என்று ஜெயச்சந்திரன் பாடும் பாடல் பின்னணியில் ஒலிக்குமே தவிர, எம்.ஜி.ஆருக்காகப் பின்னணி கொடுக்கப்பட்ட பாடலல்ல அது).
கர்நாடக இசைக்கலைஞர் பாலமுரளி கிருஷ்ணா இரு பாடல்களை எம்.ஜி.ஆருக்காகப் பாடியுள்ளார். ஒரு பாடல் இராக ஆலாபனை பாடல். மற்றது நரிக்குறவர் பாடும் டப்பாங்குத்துப் பாடல். பாலமுரளி கிருஷ்ணா பாடிய ஒரே டப்பாங்குத்துப் பாடலும் இதுதான். "நவரத்தினம்" என்ற படத்தில் வாணி ஜெயராமுடன் பாலமுரளி இணைந்து பாடும் அப்பாடல் "குருவிக்கார மச்சானே" என்ற பாடலாகும்.
சர்வாதிகாரி படத்தில் எம்.ஜி.ஆருக்காக இசையமைப்பாளர் எஸ்.தக்ஷிணாமூர்த்தியும், அஞ்சலிதேவிக்காக பி.லீலாவும் குரல் கொடுத்துப் பாடிய பாடல் "ஆணழகா எனது கைகள்" என்ற பாடலாகும். எஸ்.தக்ஷிணாமூர்த்தி பாடிய ஒரே படம் இது தான். இதே படத்தில் எம்.ஜி.ஆரும், எம்.சரோஜாவும் பாடுவதாக உள்ள "என் அத்தர் கடைச் சரக்கும்" என்ற பாடலிலும் எம்.ஜி.ஆருக்குக் குரல் கொடுத்தது எஸ்.தக்ஷிணாமூர்த்திதான்.
எம்.ஜி.ஆருக்காகக் பல (ஆண்) பாடகர்கள் குரல் கொடுத்துள்ளது ஒரு வியப்பான செய்தியல்ல. எம்.ஜி.ஆருக்கான ஒரு பாடல் முழுவதையும் எல்.ஆர்.ஈஸ்வரி பாடியுள்ளார் என்பது ஒரு வியப்பான செய்தி. "காதல் வாகனம்" படத்தில் ஆங்கிலோ இந்தியப் பெண்ணாக வேடமிட்ட எம்.ஜி.ஆர்., வில்லன் அசோகனை மயக்கும் காட்சியில் "இன்னாமேன் பொண்ணு நான்" என்ற பாடல் முழுவதையும் எம்.ஜி.ஆருக்காக எல்.ஆர்.ஈஸ்வரியே பாடியிருக்கிறார்.
பின்னணிப் பாடகர் கோவை செüந்தரராஜன் எம்.ஜி.ஆருக்காக ஒரு முழுப் பாடலைப் பாடவில்லை என்றாலும், "உரிமைக்குரல்" படத்தில் வரும் "மாட்டிக்கிட்டாரடி மைனர் காளை" என்ற பாடலின் கடைசி இருவரிகளைப் பாடியிருப்பார். பாடல் முழுவதையும் எல்.ஆர்.ஈஸ்வரி குழுவினர் லதாவுக்காகப் பாடியுள்ளனர்.
*
ஒரு பாடல் காட்சி படமாக்கப்படும் போது நடனப் பயிற்சியாளருக்குத்தான் வேலையிருக்கும். நடனப் பயிற்சியாளருடன் சண்டைப் பயிற்சியாளருக்கும் வேலை கொடுத்த முதல் பாடல் காட்சி "அரச கட்டளை" படத்தில் "ஆயிரம் கைகள் மறைத்து நின்றாலும்" என்ற பாடல் காட்சிதான்.
*
எம்.ஜி.ஆர் நடித்த படங்களில் மட்டுமின்றி, தமிழ்த் திரையிலேயே ரோஷனாரா பேகம் என்ற பெண் கவிஞர் எழுதிய ஒரே பாடல் "குடியிருந்த கோயில்" படத்தில் இடம் பெற்ற "குங்குமப் பொட்டின் மங்கலம்" என்ற பாடலாகும்.
*
ஏவி.எம். நிறுவனம் தயாரிப்பில் எம்.ஜி.ஆர். நடித்த ஒரே படம் "அன்பே வா". ஏ.சி.திருலோகச்சந்தர் இயக்கத்தில் எம்.ஜி.ஆர் நடித்த ஒரே படமும் இதுவே.
*
பி.மாதவன் இயக்கத்தில் எம்.ஜி.ஆர். நடித்த ஒரே படம் "தெய்வத்தாய்". கே.பாலசந்தர் எம்.ஜி.ஆருக்காக வசனம் எழுதிய ஒரே படமும் இதுதான். இயக்குநர் கே. பாலசந்தர் திரையுலகுக்கு அறிமுகமான திரைப்படமும் இதுதான்.
*
மக்கள் திலகம், நடிகர் திலகத்துடன் இணைந்து நடித்த ஒரே படம் "கூண்டுக்கிளி".
*
எம்.ஜி.ஆரும் ஜெமினி கணேசனும் இணைந்து நடித்த ஒரே படம் "முகராசி" மட்டுமே.
*
எம்.ஜி.ஆருடன் "எங்கள் தங்கம்", "நவரத்தினம்" ஆகிய இரு படங்களில் ஏ.வி.எம்.இராஜன் இணைந்து நடித்துள்ளார்.
*
எம்.ஜி.ஆரும் - தயாரிப்பாளரும் வில்லன் நடிகருமான கே.பாலாஜியும் இணைந்து நடித்த ஒரே படம் "என் கடமை".
*
எம்.ஜி.ஆரின் புகழ் பாடும், "கண்டு கொண்டேன்", "கண்ணும் இல்லே" என்ற இரு பாடல்கள் "தர்மதேவன்" என்ற படத்தில் இடம் பெற்றன.
*
எம்.ஜி.ஆர். நடித்து வெளிவராத படங்கள், "சாயா", "சிலம்புக் குகை", "இன்பக் கனவு", "அன்று சிந்திய இரத்தம்", "ஊமையன் கோட்டை", "மாடி வீட்டு ஏழை", "ஏசுநாதர்", "ரிக்ஷா ரங்கன்", "இதுதான் என் பதில்", "நல்லதை நாடு கேட்கும்","லலிதாங்கி" மற்றும் செந்தூர் பிலிம்ஸின் பெயரிடப்படாத படம் ஆகியனவாகும்.
*
எம்.ஜி.ஆர். தாம் நடிக்கும் படங்களில் தமக்குரிய ஒப்பனை, உடையலங்காரம், சிகை அலங்காரம் முதலியவற்றில் அதிக கவனம் செலுத்துவார். ஆனால் "பெற்றால்தான் பிள்ளையா" படம் முழுவதும் ஒரு மலிவான பேண்ட், சட்டை, தொப்பி அணிந்து, கிணற்றில் தூர் எடுக்கும் தொழிலாளியாக எளிமையாக நடித்திருப்பார். மேலும், தமக்குரிய ஒரு சிறப்புக் கதையமைப்பு என்ற கோட்டைத் தாண்டி வந்து அவர் விரும்பி நடித்த படமிது.
*
நடிப்பு, தயாரிப்பு, இயக்கம் என்று பல வழிகளிலும் திரையுலகில் தம் திறமையை நிலைநாட்டிய எம்.ஜி.ஆர், கதை எழுதிய ஒரே படம் "கணவன்" படமாகும்.
*
எம்.ஜி.ஆர். நடித்த படங்களில் எம்.ஜி.ஆர். பக்கம் நீதி இருப்பதாகவும் மற்றவர்கள் அவருக்குத் தலைவணங்குவதாகவும் கதையமைப்பு இருக்கும். ஆனால் "நீதிக்குத் தலை வணங்கு" படத்தில் மட்டுமே, மற்றவர் பக்கம் நீதி இருப்பதாகவும், எம்.ஜி.ஆர். அவர்களுக்குத் தலைவணங்குவதாகவும் கதையமைப்பு இருக்கும்.
*
எம்.ஜி.ஆர். இரட்டை வேடமேற்று நடித்த படங்கள்: நாடோடி மன்னன், இராஜா தேசிங்கு, எங்க வீட்டுப் பிள்ளை, ஆசை முகம், குடியிருந்த கோயில், அடிமைப் பெண், மாட்டுக்கார வேலன், நீரும் நெருப்பும், உலகம் சுற்றும் வாலிபன், பட்டிக்காட்டுப் பொன்னையா,நேற்று இன்று நாளை, சிரித்து வாழ வேண்டும், நினைத்ததை முடிப்பவன், நாளை நமதே,ஊருக்கு உழைப்பவன், எங்கள் தங்கம், தேர்த் திருவிழா, கலையரசி ஆகிய 18 படங்கள்.
*
எம்.ஜி.ஆர். நடித்த பெரும்பாலான படங்கள் இன்பவியல் முடிவாகவே இருக்கும். இருப்பினும் அவர் நடித்த பாத்திரங்கள், இறப்பதாக 11 படங்கள் அமைந்திருக்கும். என் தங்கை, நாம், மதுரை வீரன், இராஜா தேசிங்கு, இராணி சம்யுக்தா, பாசம், பணக்காரி, அடிமைப் பெண், நீரும் நெருப்பும், கலையரசி, நேற்று இன்று நாளை ஆகியன அப்படங்கள்.
*
எம்.ஜி.ஆர் நடித்த 11 படங்களுக்கு மு.கருணாநிதி கதை, வசனம் எழுதியுள்ளார். நாம், இராஜகுமாரி, மந்திரிகுமாரி, அபிமன்யு, மருதநாட்டு இளவரசி, ஜெனோவா, மலைக்கள்ளன், புதுமைப்பித்தன், அரசிளங்குமரி, காஞ்சித் தலைவன், எங்கள் தங்கம் ஆகியன அந்த 11 படங்கள்.
*
எம்.ஜி.ஆர். படங்களுக்கு, திராவிட இயக்கத்தின் பிரபலங்கள் 11 பேர் கதை-வசனம் எழுதியுள்ளனர். அறிஞர் அண்ணா, மு.கருணாநிதி, கவிஞர் கண்ணதாசன், இராம.அரங்கண்ணல், ஏ.வி.பி.ஆசைத்தம்பி, எஸ்.எஸ்.தென்னரசு, கே.சொர்ணம்,ஏ.கே.விஸ்வம், முரசொலிமாறன், கே. காளிமுத்து, நாஞ்சில் கி.மனோகரன் ஆகியோர்.
*
எம்.ஜி.ஆருடன் மிக அதிகமான திரைப்படங்களில் அவருக்கு ஜோடியாக நடித்தவர் ஜெயலலிதா. ஆயிரத்தில் ஒருவன், அன்னமிட்ட கை, கன்னித்தாய், முகராசி, அடிமைப்பெண், மாட்டுக்காரவேலன், காவல்காரன், கணவன், புதிய பூமி, தேர்த் திருவிழா, சந்திரோதயம், காதல் வாகனம், கண்ணன் என் காதலன், எங்கள் தங்கம், தாய்க்குத் தலைமகன், ஒருதாய் மக்கள், இரகசிய போலீஸ் 115, அரசகட்டளை, தேடி வந்த மாப்பிள்ளை, நம்நாடு, இராமன் தேடிய சீதை, ஒளிவிளக்கு, குடியிருந்த கோயில், என் அண்ணன், நீரும் நெருப்பும், குமரிக்கோட்டம், பட்டிக்காட்டுப் பொன்னையா என்று 27 படங்களில் ஜெயலலிதா - எம்.ஜி.ஆர். ஜோடி இணைந்து நடித்தனர்.
*
எம்.ஜி.ஆருடன் மட்டுமே தமிழில் நடித்த நடிகை என்கிற பெருமைக்குரியவர் இராதா சலூஜா. நடித்த திரைப்படங்கள் - இதயக்கனி, இன்றுபோல் என்றும் வாழ்க.
Hope my generation members enjoyed.
Dr K B Elango Salem.
http://i64.tinypic.com/qquznq.jpg
நன்றி - கனகராஜா ஆண்டியா பிள்ளை முகநூல்
http://i68.tinypic.com/15s62s7.jpg
என்றென்றும் புரட்சித் தலைவரின் புகழ்க்கொடி பறக்கும் கோட்டையாம் எங்கள் மண் மணக்கும் மதுரையில் சென்ட்ரல் தியேட்டரில் தீபாவளி திருநாள் முதல் மக்களை சந்திக்க கோடீஸ்வர ஜே.பி. வருகிறார்....
பராக்... பராக்... பராக்...
மனங்கவர் மக்கள்திலகம்;
மக்கள் உள்ளங்களில் தாழம்பூவாக தழைத்து
மணம் வீசிக்கொண்டிருக்கும் மக்கள்திலகம் ஒரு தனிப்பிறவி;
‘’பெற்றால்தான் பிள்ளையா? எங்கள் வீட்டுப் பிள்ளையென
ஏகோபித்த எண்ணங்களின் ஏற்பில், எங்கள் தங்கம் எனப்
பாசத்தோடு போற்றும் பரிமளிப்பைப் பெற்றவர் புரட்சிநடிகர் mgr;
சுவைதரும் இதயக்கனியாக தன்னுடைய இதமான
ஈடற்ற உயர்ந்த உள்ளத்தால் மக்களின் இதயவீணையை
மீட்டிய ஈடில்லா மாமனிதர்;
‘’நம் நாடு பல்லாண்டு வாழ்க என்ற உயர்ந்த லட்சியத்தோடு,
திடமான சீரிய நோக்கத்தில் தன்னுடைய செயல்திறனை
செறிவாக செயல்படுத்திய பொன்மனச்செம்மல்;
தொழிலாளி, விவசாயி போன்ற உழைக்கும் கரங்களை
ஊக்குவித்து, அன்னமிட்ட கையாக அலங்காரங்கொண்ட அற்புத மனிதர்;
தாயைக் காத்த தனயனாக, நம் நாட்டின் பெருமை காக்க
பண்பான பதங்களை படங்களிலும், பாடல்களிலும் பகர்ந்தளித்த
பெருந்தன்மைப் பேராளர்;
நாடோடி, மன்னாதி மன்னன் என்ற பாகுபாட்டு நிலைமை கொள்ளாமல்,
நடுநிலைமைப் பேணி, நீதிக்குப் பின் தான் பாசம்,
நீதிக்குத் தலை வணங்கு என்ற பண்புடைமையே என் கடமை;
என்றும் நல்லவன் வாழ்வான் என்று வாழ்ந்துகாட்டிய வள்ளல்;
தர்மம் தலை காக்கும் என்று, தனக்கென வாழா தன்னிகரற்ற தலைவன்;
அழுகின்ற மழலைகூட அவரின் ஆசைமுகத்தைப் பார்த்தால்
வருகின்ற கண்ணீரும் நின்று குழந்தை குதூகலிக்கும் முகராசி மிக்க எங்கள் தங்கம்;
திக்கற்று திகைப்போர்க்கு வழிகாட்டும் ஆனந்தஜோதியாக, கலங்கரைவிளக்கமாய்த்
திகழ்ந்தவர்; குடியிருந்த கோயிலான தெய்வத்தாய்ப் பெற்றெடுத்த நவரத்தினநாயகன்;
பணக்கார குடும்பமாயினும், பணத்தோட்டத்தையே பகர்ந்தாலும் நியாயங்களுக்காக
உரிமைக் குரல் எழுப்பி, மக்களைக் காக்க களமிரங்கி நினைத்ததை முடிப்பவர் எங்கள்
மன்னாதி மன்னர் பொன்மனச்செல்வர், புரட்சித்தலைவர், ஏழைப்பங்காளர் mgr;
அணையா ஒளிவிளக்காய், குளிர்ச்சிமிகு சந்திரோதயமாய் சாதனையாளராய்
ஜொலித்துக்கொண்டிருக்கிறார்.
புரட்சித்தலைவர் நாமம் வாழ்க! பொன்மனச்செம்மல் புகழ் ஓங்குக!
முகநூலில் இருந்து
நண்பர்களுக்கு வணக்கம்.
நான் வடகிழக்கு, மற்றும் கிழக்கு இந்திய சுற்றுலா பயணத்தின் காரணமாக சென்றதால் 10 நாட்களுக்கு மேல் நமது திரியில் பங்கு கொள்ள இயலவில்லை .
தற்போது நண்பர்களுடன் இணைந்ததில் மிக்க உவகை கொள்கிறேன் .
இறைவன் எம்.ஜி.ஆர். பக்தர்கள் குழு
ஆர். லோகநாதன்.
http://i66.tinypic.com/2yyza4y.jpg
தற்போது ராஜ் டிஜிட்டல் ப்ளஸில் (இரவு 8 மணி முதல் ) மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். நடித்த "அலிபாபாவும் 40 திருடர்களும் " ஒளிபரப்பாகி வருகிறது
தினத்தந்தி -14/10/2016
http://i64.tinypic.com/38ymx.jpg
இன்று முதல் (14/10/2016) அகஸ்தியாவில் தினசரி 2 காட்சிகள் (புதிய படம் திரைக்கு
வராத காரணத்தால் -சரியான விளம்பரம் இன்றி ) மக்கள் திலகம் எம்.ஜி.ஆரின்
"டிஜிட்டல் ரிக்ஷாக்காரன் " திரையிடப்பட்டுள்ளதாக தகவல் .
http://i64.tinypic.com/34t5rw5.jpg
மிக நீண்ட இடைவெளிக்கு பிறகு , அகஸ்தியாவில் மக்கள் திலகம் எம்.ஜி.ஆர்.
படம் வெளியாவதில் பக்தர்களுக்கு மகிழ்ச்சி. ஆனால் முறையான, சரியான
விளம்பரம் இன்றி திரையிடப்படுவதில் அதிர்ச்சி.
கடந்த வாரம் சென்னை மகாலட்சுமியில் (07/10/2016) வெளியான மக்கள் திலகம் எம்.ஜி.ஆரின் டிஜிட்டல் "ரிக்ஷாக்காரன் " கொண்டாட்டங்கள் பற்றிய புகைப்படங்கள் தொகுப்பு
http://i66.tinypic.com/2rf518j.jpg
சென்னை மகாலட்சுமியில்
09/10/2016 ஞாயிறு மாலை காட்சியின் போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள்
http://i65.tinypic.com/35k7pxi.jpg
வருகை தந்த பக்தர்களுக்கு இனிப்பு வழங்குதல்
சைக்கிள் ரிக்ஷாவில் , டிஜிட்டல் ரிக்ஷாக்காரன் சுவரொட்டி .
http://i67.tinypic.com/sy1ef7.jpg
மகாலட்சுமி அரங்கு அருகில் பட்டாசு வெடித்தல்
http://i63.tinypic.com/2eogoki.jpg
மகாலட்சுமி அரங்கில் டிக்கட் வாங்க வரிசையில் குவிந்த கூட்டம்
http://i65.tinypic.com/5anwcw.jpg