http://oi67.tinypic.com/214w0v8.jpg
Printable View
ஒரே ஒரு கொசுறுத் தகவல்.... தன்னுடைய ' பாண்டியன் பரிசு ' காவியத்தை ,
நடிகர் திலகம் சிவாஜி அவர்களை நாயகனாக
வைத்து தயாரிக்க முடிவு செய்தார் புரட்சிக் கவிஞர் பாரதி தாசனார்...
பாண்டியன் பரிசு படத் தொடக்க விழாவில் , பெருந்தலைவர் காமராஜர் , நடிகர்திலகம் சிவாஜி ,
புரட்சிக் கவிஞர் , நடிகர் அசோகன் .
இந்தப் படம் தொடக்க விழாவோடு
நின்று போய் விட்டது !
https://scontent.fyyz1-1.fna.fbcdn.n...83&oe=5BB05364
நம் நடிகர்திலகத்தின் ராஜா திரைப்படம் ஆல்பர்ட் தியேட்டரில் சரியாக போகவில்லை என ஏளனம் செய்து கொண்டிருக்கும் MGR ரசிகர்களே நான் வசிக்கும் திருச்சியில் உங்கள் நடிகர் நடித்த வந்த RERELEASE படங்கள் மக்களால் வெறுத்து ஒதுக்கப்பட்ட கேவலத்தை கூறுகிறேன் எங்கள் கர்ணன் ரம்பா தியேட்டரில் 28 நாட்கள் ஓடி 23 லட்சம் வசூலை குவித்தது அதே காம்ப்ளெக்ஸில் ஷிபிட் செய்யப்பட்டு ஊர்வசி தியேட்டரில் 14 நாட்கள் ஓடி மொத்தம் 42 நாட்கள் ஓடியது இதற்கு போட்டியாக வெளியிடப்பட்ட ஆயிரத்தில் ஒருவன் காவேரி தியேட்டரில் ஒரு காட்சியிலும் 150 நபர்கள் படம் பார்க்கவில்லை சிரமப்பட்டு ஒரு வாரம் ஓடியது.எங்கள் தலைவரின் வசந்த மாளிகை சோனா தியேட்டரில் ஒரு வாரம் ஓடி கிட்டத்தட்ட 2.5 லட்சம் வசூல் ஈட்டியது (ஒழுங்காக digitalise செய்யாதபோதும்)எங்கள் தலைவரின் வீரபாண்டிய கட்டபொம்மன் மிகப்பெரிய அரங்கான கலையரங்கம் திரையில் திரையிடப்பட்டு ஞாயிறு மாலை காட்சி 510 நபர்கள் கண்டுகளித்தனர் (டிக்கெட் விலை ரூபாய் 100) ஒரு வார வசூல் 3.5 லட்சம் மற்றும் ஷிபிடிங்கில் ஊர்வசி திரையில் ஒரு வாரம் ஓடியது ரூபாய் 48000 வசூல் MGR அவர்களின் ரிக்ஷாக்காரன் ஊர்வசி தியேட்டரில் வெளியாகி ரூபாய் 50 கட்டணம் வைத்தும் வெள்ளி சனி இரண்டு தினங்களிலும் ஒரு காட்சியில் கூட 20 நபருக்கும் குறைவாக பார்த்ததால் ஞாயிறு வேறு படம் மாற்றப்பட்டது. திரை அரங்கு உரிமையாளர் MGR க்கு திருச்சியில் 50 ரசிகர் கூட கிடையாதா என கேவலப்படுத்தினார்கள் MGR ன் இதுவரை வெளிவந்த ஒரு டிஜிட்டல் படத்திற்கு கூட ஒரு பேனர் கூட திருச்சியில் ரசிகர்களால் வைக்கப்பட்டது கிடையாது. ஆளுகின்ற அதிமுக கட்சியிலிருந்து ஒருவர் கூட படம் பார்க்க வர மாட்டார்கள் பேனர் வைக்க மாட்டார்கள் ஆனால் எங்கள் தலைவரின் கர்ணன் வசந்த மாளிகை வீரபாண்டிய கட்டபொம்மன் படங்களுக்கு இன்றைய ரசிகர்களுக்கு போட்டியாக சிவாஜி ரசிகர்கள் அலங்காரம் செய்து கலக்கினார்கள் திருச்சியை பொறுத்தவரை MGR படங்களை AC தியேட்டரில் பார்ப்பதற்கு அவர் ரசிகர்களும் விரும்பவில்லை மக்களும்தான் கட்சி பலம் பண பலம் ஆள் பலம் எதுவும் இருந்து உங்களால் சாதிக்க முடியவில்லை -இவை எதுவும் எங்களிடம் இல்லை உண்மையான ரசிகர்கள் இருக்கிறோம் எங்கள் சிவாஜி புகழ் காக்க மக்கள் ஆதரவோடு இன்றைய சமுதாயம் மகுடம் சூட்டிய ஒரே நடிகர் சிவாஜி --ஆதாரம் கர்ணனை இமாலய வெற்றி
நீண்ட இடைவெளிக்கு பிறகு இன்று நமது திரிக்கு வந்துள்ளேன். நண்பர்கள் அனைவர்க்கும் எனது பணிவான வணக்கங்கள்
நமது நண்பர்கள் ஒரு விஷயத்தை புரிந்துகொள்ளவேண்டும். ஒரு நடிகன் ஒரு வருடத்தில் அதிக படங்களில் தொடர்ந்து 30 வருடங்களுக்கு மேலாக, காலங்கள் பல மாறினாலும், மக்கள் ரசனைகள் மாறினாலும், தலைமுறைகள் மாறினாலும் 7 படங்கள் முதல் 13 படங்கள் வரை முப்பது வருடங்கள் மேலாக நடித்து கொண்டிருக்கிறான் என்றால் தயாரிப்பாளர் மற்றும் விநியோகஸ்தர்களுக்கு நண்பராக இருக்கின்றன அவரது படங்கள் என்று அர்த்தம். மிக பெரிய தயாரிப்பு நிறுவனங்கள் கூட அக்காலத்தில் நடிகர் திலகம் அவர்களை வைத்துதான் அதிக படங்கள் தயாரித்தனர் & அவருடைய அதிக படங்களை தான் வாங்கி விநியோகம் செய்து லாபம் பார்த்தனர்.
நடிகர் திலகம் சொந்த படங்கள் கூட அவரது திரையரங்கில் கூட வெள்ளி விழாவிற்கு சொற்ப நாட்களே உள்ள நிலையில் எடுக்கப்பட்டு அவருடைய வேறு படங்கள் திரையிடப்பட்ட வரலாறு உலகறியும். Silver jubilee record இற்க்காக நடிகர் திலகம் படங்கள் சாந்தியில் திரையிடப்பட்டது என்றால் இந்நேரம் அவரது சாந்தியில் வெளிவந்த முக்கால்வாசி படம் 175 நாட்கள் ஓடி 75 சில்வர் ஜூப்ளி படங்கள் பட்டியல் பாத்திருக்க முடியும்.
மேலும் நடிகர் திலகம் அவர்கள் அவரது சொந்த படம் ரிலீஸ் என்றால் அவருடைய மற்ற தயாரிப்பாளர்களுடைய படம் திரையிட தடுங்கல் செய்தது கிடையாது !
தமிழ் திரையுலகில் சில நடிகர்கள் தம்முடைய சொந்த படங்கள் வெளி வருகிறது என்றால்.....அந்த படம் வெளி வருவதற்கு ஆறு மாதம் முன்பே தம்முடைய படம் ஒரு கேப் கொடுப்பார்கள்..ஒரு சில நடிகர்களோ இரெண்டு முதல் நான்கு ஆண்டுகளுக்கு ஒரு படம் கொடுப்பார்கள் ..பிறகு தம்முடைய படம் வெளிவந்த பிறகு மூன்று முதல் ஐந்து மாதம் வரை அடுத்த படம் வெளிவர விடமாட்டார்கள் ! இவ்வளவு செய்து இவர்களது படம் வசூல் வெற்றி பெறவில்லை என்றால் தான் கேவலம் !
இப்படி பெரிய கேப் முன்பும் பின்பும் கொடுத்து .....வசூல் பெரு வெற்றி....வசூல் பெரு வெற்றி....என்று கூறுவது சிரிப்பைதான் வரவைக்கிறது !
இப்படி தம்முடைய சொந்த படம் வரும்போது அதற்க்கு முன்பு தயாரிப்பில் கிடந்த மற்ற தயாரிப்பாளர் படங்களை வெளி வரவிடாமல் செய்து அவர்களை துன்பப்படுத்தும் பழக்கம் நடிகர்திலகத்திற்கு அறவே கிடையாது என்பதை நண்பர்கள் உணரவேண்டும்.... !
உதாரணமாக 1972 ஜனவரி சாந்தியில் பாபு திரைப்படம் ஓடிக்கொண்டிருக்கும்போது ....
பக்கத்து திரை அரங்கில் தேவி பாரடிஸ் திரை அரங்கில் ராஜா....ராஜா ஓடிக்கொண்டிருக்கும்போது.....
பக்கத்து திரை அரங்கம் பிளாசாவில் ஞான ஒளி ....
ஞான ஒளி ஓடிக்கொண்டிருக்கும்போது...பட்டிக்காடா பட்டணமா சாந்தியில் ...
ராஜா, ஞானஒளி, பட்டிக்காடா பட்டணமா ஆகிய மூன்றும் ஓடிக்கொண்டிருக்கும்போதே .....
வெலிங்டன் திரையில் தர்மம் எங்கே.....
இவை அனைத்து ஓடிக்கொண்டிருக்கும்போதே தவப்புதல்வன் பைலட் திரை அரங்கில்........
இப்படி திரும்பும் திசை எல்லாம் நடிகர் திலகம் வெற்றிபவனி வரும்போது பொறாமையால் கதறிய நாயகர்களும் அவர்கள் ஆதரவாளர்களும் இருக்கத்தானே செய்வார்கள் ....அவதூறு பேசத்தான் செய்வார்கள்
.....காய்த்த மரம்தான் கல்லடி படும் என்பது நடிகர் திலகம் விஷயத்தில் மிக சரியான உவமை மொழி !
இதனை மறைக்க உடனே அவரின் அரசியல் வருகை பற்றி பேசத்தொடங்குவார்கள் ....காரணம் .....வேறென்ன....இயலாமைதான் !
மேலும் நடிகர் திலகம் பொறுத்தவரை சாந்தி திரை அரங்கம் மட்டுமல்ல அனைத்து திரை அரங்கங்களில் அவரது படங்கள் பெருவெற்றி பெற்றுள்ளதற்கு சான்று பல உள்ளது !
இதனை விட முக்கியம் ....ஒரு நடிகன் மசாலா படங்கள் நடித்து சர்வ சாதாரணமாக மக்களிடம் பிரபலம் அடையலாம்...
இரெண்டு, மூன்று கனவு அல்லது டூயட் பாடல்கள், இரெண்டு கொள்கை பாடல்கள், இரெண்டு தற்பெருமை பாடல்கள், மூன்று முதல் ஐந்து சண்டைக்காட்சிகள், நல்ல காமெடி இப்படி ஒரு குறுகிய வட்டத்தில் இருந்துகொண்டு நடிப்பது மிக மிக சுலபம்.
இது அவர் அவர் தமது திறமைக்கு தகுந்தாற்போல் களத்தினை தேர்வுசெய்து நடிப்பது. இதில் தவறு இல்லை. அவர்கள் பலம் எதுவோ அதை சரியாக செய்வது சரியே.
ஆனால் இந்த பொழுதுபொற்க்கு அம்சங்கள் மிக மிக குறைவாகவோ அல்லது சுத்தமாக இல்லாமலோ இருந்து, அந்த திரைப்படம் அந்த நடிகனால் , அவர் நடிப்பால் பெரு வெற்றி பெறுவது என்பது வெறும் சாதனை அல்ல..சகாப்தம் !
நடிகர் திலகம் அவர்கள் தமது நடிப்பு திறமை மேல் தமது உழைப்பின் மேல் அதீத நம்பிக்கை கொண்டவர்.
அவரை வைத்து தயாரித்தால் மட்டுமே anyday, "producer என்ற அந்தஸ்த்தை முழுமையாக அடையப்படும் அழைக்கப்படுவர் !
தமது ஆதரவு நடிகருக்கு இத்துணை விஷயங்கள் பக்கபலமாக இருந்தும் ....இவ்வளவுதான் முடிகிறது என்பதை நினைக்கும்போது மற்றவர்களுக்கு பொருமல் வருவதும் இருமல் வருவதும் இயற்க்கையே !
Sivaa sir,super
welcome back chowthry sir and ravikiran sir
ஹிட்லர் உமாநாத் திருச்சியில் வெளிவராதது உண்மைதான் அதற்கு காரணம் தயாரிப்பாளருக்கும் விநியோகஸ்தருக்கும் நடந்த மோதல் கோர்ட் வரை சென்று இன்று வரை யாரும் திரையிடமுடியாது அதே 1982ம் ஆண்டு பல படங்களை வெளியிட்டவர் நடிகர்திலகம் துணிச்சலாக அடுத்த தலைமுறைக்கும் சவால் விட்ட நடிகர்திலகத்தின் சாதனை --1983ம் ஆண்டு தீபாவளிக்கு வெளியான அணைத்து படங்களின் வசூலை முறியடித்து சென்னையில் 6 திரைகள் - திருவொற்றியூர் , பாண்டி, கோவை திருச்சி மதுரை சேலம் முதலிய பல ஊர்களில் இமாலய சாதனை படைத்தது வெள்ளை ரோஜா பாரதி ராஜா அவர்கள் எத்தனையோ நடிகர்கள் வைத்து பல படங்கள் எடுத்த போதிலும் எங்கள் நடிகர் திலகம் நடித்த 1985ம் ஆண்டு வெளியான முதல் மரியாதை மட்டுமே அதிக திரைகளில் 50, 100,175 நாட்கள் ஓடியது மிகப்பெரிய சாதனையாகும் திரும்ப திரும்ப கூறுகிறோம் சிவாஜியோட ஒப்பிட உலகில் எவருக்கும் தகுதியில்லை என்று அதற்கான காரணங்கள் --1. ஒரே நாளில் தான் நடித்த 2 திரைப்படங்களை பலமுறை வெளியிட்டு வெற்றி கண்ட துணிச்சல் 2. . வருடம் தவறாமல் 8க்கும் மேற்பட்ட படங்களை வெளியிட்டது சிறு உதாரணம் 1979-திரிசூலம் --175நாட்கள் ( 6வது வாரம் கவரிமான் --10வது வாரம் நல்லதொரு குடும்பம் )1977 தீபாவளி -அணனன் ஒரு கோவில் 114 நாள் (1978 ஜன 26--அந்தமான் காதலி 100 நாள், மார்ச் 6 -தியாகம் -125 நாள் ) இப்படி தொடர்ந்து படங்களை வெளியிட்டு வெற்றியை குவித்தவர் நடிகர்திலகம் இது போன்று உலகில் எந்த நடிகராவது சாதித்தது உண்டா - அதற்கு தன்னம்பிக்கையும் தனித்திறமையும் வேண்டுமே
https://scontent.fyyz1-1.fna.fbcdn.n...f5&oe=5BC10EC6
https://scontent.fyyz1-1.fna.fbcdn.n...5a&oe=5BC36F39
https://scontent.fyyz1-1.fna.fbcdn.n...a8&oe=5B767473
https://scontent.fyyz1-1.fna.fbcdn.n...a2&oe=5BB2ADF3
Sekar Parasuram\
6 June 2016
1950களின் போது எம்ஜிஆர் திமுக வுடன் நெருக்கமாக இருந்த போதிலும் சிவாஜி என்ற வேகத்தடை அவ்வப்போது குறுக்கிட்டுக் கொண்டிருந்தது, எம்ஜிஆர் க்கு பிறகு சிவாஜி நடிக்க வ...ந்தாலும் கூட எம்ஜிஆர் க்கு முன்னதாகவே சிவாஜி திமுக வின் முக்கியஸ்தராகவே இருந்து வந்தார்.
எப்படி பார்த்தாலும் திமுக வை பொருத்தமட்டில் சிவாஜிக்கு அடுத்த இடம்தான் எம்ஜிஆர் க்கு, ஆனால் இந்த நிலை அதிக காலம் நீடிக்கவில்லை , சிவாஜியே தனக்கு ஒரு வில்லங்கத்தை உருவாக்கிக் கொண்டார்.
1956ல் புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிதி திரட்டித் தருமாறு அண்ணா வேண்டுகோள் விடுத்தார், சிவாஜி தன் பங்கிற்கு பணம் சேகரித்தார் திரையில் பேசிய பராசக்தி வசனங்களை மக்களுக்கு முன்னால் நேரடியாக பேசினார்,
பணம் கொட்டியது, நல்ல வசூல்
எல்லோரையும் விட அதிக அளவு நிதியை வசூலித்து அண்ணாவிடம் ஒப்படைத்தார்.
அண்ணாவுக்கும் மகிழ்ச்சி நிதி வசூல் செய்தவர்களுக்குப் பராட்டு கூட்டம் ஏற்பாடு செய்யுங்கள் என்றார்,
" அதிக நிதி வசூலித்தவர் என்ற முறையில் தனக்கு அழைப்பு வரும் "
என்று காத்திருந்தார் சிவாஜி ஆனால் அழைப்பு வரவில்லை, வந்ததோ பீம்சிங் " நிலைமை சரியில்லை " "வாருங்கள் திருப்பதி போய்விட்டு வரலாம்" என்றார்
விதி வலியது தலையசைத்தார் சிவாஜி இருவரும் புறப்பட்டனர், ஏழுமலையானை தரிசித்துவிட்டு திரும்பி வரும்போது சென்னையின் அனைத்து பகுதிகளிலும் " நாத்திக கணேசன் ஆத்திக கணேசனாக மாறினார்" என்ற தலைப்பு செய்தி எல்லா நாளேடுகளிலும் பிரசுரம் செய்தனர்,
இந்த செய்திகள் நடிக்ர்திலக்த்தின் தொண்டர்கள், மூத்த ரசிகர்கள் அறிந்தவைதான், இருப்பினும் இக்காலத்தில் உள்ள தலைமுறை யினர் அறிந்து கொள்ள வேண்டிய அவசியம் உள்ளது,
நடிகர்திலகத்திர்கு எதிராக சூழ்ச்சி செய்து பலர் உயர்ந்தனர் , என்பதற்கு இது போன்ற பல நிகழ்வுகள் உள்ளன, என்பதை உதாரணம் காட்டவே இந்த புத்தகத்தில் இடம் பெற்ற பல நிகழ்வுகளில் இருந்து ஒரு பக்கம் மட்டுமே
இந்த உருவத்தை மறைத்துவிட்டு இம்மண்ணில் அரசியலும் பேசமுடியாது... சினிமாவும் பேச முடியாது...
(03:08:2001ல் சாந்தியில் திரையிடப்பட்டது)
https://scontent.fyyz1-1.fna.fbcdn.n...e8&oe=5BAE7087
vaannila
வசூல் மாளிகையின் வரலாற்றுச் சுவடுகள்!
https://scontent.fyyz1-1.fna.fbcdn.n...19&oe=5BB125E3
vaannila
' வசூல் ' மகன்!
https://scontent.fyyz1-1.fna.fbcdn.n...5d&oe=5BC50747
vaannila
சில அலுவல் நிமித்தம் 1 மாத கால விடுமுறையில்
செல்ல இருப்பதால் திரிக்கு வரக்கூடிய சந்தர்ப்பம்
கிடைக்காது என்பதை நண்பர்களுக்கு தெரிவித்துக்கொண்டு
நண்பர்கள் தொடர்ந்து பதிவுகளை மேற்கொள்ளுமாறு கெட்டுக்கொள்ளுகின்றேன்
நன்றி
இன்று 21.06.2018 பிறந்த நாள் காணும் என் இனிய நண்பரும் உலகப்புகழ் சிவாஜியின் புகழை பரப்புவதே தன நோக்கமென வாழும் மதுரை சுந்தர்ராஜன் அவர்கள் எல்லா வளமும் பெற்று நீடுழி வாழ வாழ்த்துகிறேன்
ஜூலை மாதம் வெளியான நடிகர் திலகத்திந் படங்கள்.
Pillalu Thechina Thellalu Raajyam (G) (T) பில்லலு தெச்சின தெல்லலு ராஜ்யம் (தெலுங்கு) 01 07 1960
Ellam Unakkaga எல்லாம் உனக்காக 01 07 1961
Sri Valli ஸ்ரீ வள்ளி 01 07 1961
Savalae Samaali சவாலே சமாளி 03 07 1971
Loory Driver Raajaakkannu லாரி டிரைவர் ராஜாக்கண்ணு 03 07 1981
Annaiyin Aanai அன்னையின் ஆணை 04 07 1958
Once More ஒன்ஸ் மோர் 04 07 1995
Baktha Thukkaaraam (G) (T) பக்த துகாராம் (தெலுங்கு) 05 07 1973
Vadivukku Valaikaappu வடிவுக்கு வளைகாப்பு 07 07 1962
Thirumbi Par திரும்பிப்பார் 12 07 1953
Paar Magalae Paar பார் மகளே பார் 12 07 1963
Dharmam Engey தர்மம் எங்கே 15 07 1972
Engal Thanga Raaja எங்கள் தங்க ராஜா 15 07 1973
Thaaikku Oru Thaalaattu தாய்க்கு ஒரு தாலாட்டு 16 07 1986
Kai Kodutha Deivam கை கொடுத்த தெய்வம் 18 07 1954
Imayam இமயம் 21 07 1979
Thaenum Paalum தேனும் பாலும் 22 07 1971
Anbu அன்பு 24 07 1953
Thillaana Mohanambal தில்லானா மோகனாம்பாள் 27 07 1968
Thiruvarutchelvar திருவருட் செல்வர் 28 07 1967
Kuzhandaigal Kanda Kudiyarasu (G) குழந்தைகள் கண்ட குடியரசு 29 07 1959
Thuli Visham துளி விஷம் 30 07 1954
Thiruvilaiyaadal திருவிளையாடல் 31 07 1965