Quote:
நேற்று சென்னையில் நடந்த அழகர்சாமியின் குதிரை இசை வெளியீட்டு விழாவுக்கு சிறப்பு விருந்தினர் இளையராஜா. சசிகுமார், டி.இமான் என்று பார்த்துப் பார்த்து விழாவுக்கு அழைத்திருந்தார்கள்.
மைனா புகழ் இமானைப் பேச அழைத்தபோது “ இளையராஜா சாரோடு ஒரு போட்டோ எடுத்துக் கொள்ள வேண்டும் என்று நீண்டநாள் ஆசை. அவரிடம் இந்தக் கோரிக்கையை வைத்தால் எங்கே நம்மை திட்டிவிடுவாரோ என்று பயந்துகொண்டு பொறுமையாக இருந்தேன். இப்போதுதான் சரியான சந்தர்ப்பம் கிடைத்திருக்கிறது.“ என்று சொல்லிவிட்டு இளையராஜாவுடன் போட்டோ எடுத்துக்கொண்டார். சசிகுமாரைப் பேச அழைத்தபோது “இளையராஜா எளிமையான மனிதர். அவரை வாழும் காலத்திலேயே நாம் கொண்டாட வேண்டும். அவரை விட்டு விலகி இருக்க வேண்டிய அவசியம் இல்லை. அவரை எப்போது வேண்டுமானாலும் நாம் சந்திக்கலாம். யாரும் அணுக முடியாத மனிதர் அல்ல. அவரை நாம் தனிமைப்படுத்தக் கூடாது” என்று சொன்னதும் அரங்கத்தில் ஏக க்ளாப்ஸ்.
Contrasting opinions from Iman (another MD) and Sasikumar (Subramanyapuram director)