நடிகர்திலகம் அவர்களின் 11 -வது நினைவுநாள் - 21 -07 -2012
என்றென்றும் கலையின்மூலம் நம் மனதிலும் மக்கள் மனதிலும் நீங்கா இடம் பிடித்துள்ள நடிகர்திலகத்தின் புகழ் என்றென்றும் வாழும்.
Printable View
நடிகர்திலகம் அவர்களின் 11 -வது நினைவுநாள் - 21 -07 -2012
என்றென்றும் கலையின்மூலம் நம் மனதிலும் மக்கள் மனதிலும் நீங்கா இடம் பிடித்துள்ள நடிகர்திலகத்தின் புகழ் என்றென்றும் வாழும்.
கண்ணுக்கு தெரிந்த ஒரே கடவுளே, உன்னை நாங்கள் நினைக்காத நாளில்லை. நீ எங்களில் ஊனோடு உயிரோடு கலந்தவன். உனக்கு என்றுமே நினைவு நாள். கோயிலுக்கு போகலாமா என்று யோசித்து, அதை தவிர்த்து உனது மூன்று படங்களை தரிசித்தேன்.
என் வாழ்வின் அத்தனை மகிழ்ச்சி தருணங்களும் நீ எனக்களித்த பெரும் பேரு.
can someone please post some anecdotes abt the great actor ?
சென்ற வாரம் ஒருவரை சந்தித்தோம். அப்போது அவர் படித்தால் மட்டும் போதுமா படத்தில் வரும் நான் கவிஞனுமில்லை பாடலை குறிப்பிட்டு அதை கவனித்து பார்த்திருக்கிறீர்களா என்று கேட்டார். கவனித்து பார்க்கும் வாய்ப்பு நேற்று கிடைத்தது.
பாடல் இடம் பெறும் சூழல் கதையின் பின்புலம் அனைவருக்கும் தெரிந்திருக்கும். படித்த பட்டதாரி பெண்ணான தன்னை ஏமாற்றி படிக்காத ஒருவனுக்கு கல்யாணம் செய்து வைத்து விட்டார்கள் என்ற தவறான புரிதலில் தாய் வீடு சென்று விடும் நாயகி பின் ஒரு கட்டத்தில் பெற்றோர்களின் நிர்பந்தம் காரணமாக மீண்டும் கணவன் வீடு வருகிறாள். தன்னை படிக்காதவன் முரடன் நாகரீகம் தெரியாதவன் என நினைத்துக் கொண்டிருக்கும் மனைவியிடம் தான் அப்படிப்பட்டவன் இல்லை அவளை அளவு கடந்து நேசிக்கிறவன் என்பதை சொல்ல விரும்பும் கணவன். ஆனால் எப்படி இதை அவளிடம் சொல்வது என்பதில் அவனுக்கு தயக்கம் இருக்கிறது. அந்த நேரத்தில் வரும் பாடல்.
நான் கவிஞனுமில்லை நல்ல ரசிகனுமில்லை என்பது பல்லவியின் முதல் இரண்டு வரிகள். இந்த இரண்டு வரிகள் பாடலில் பல முறை வரும். பாடலில் நான்கு சரணங்கள். இரண்டு இசையமைப்புடனும் இரண்டு இசையமைப்பு இல்லாத தொகையறா போல வரும்.
இதில் கவனித்தோம் என்றால் முதலில் ஆரம்பிக்கும் போது ஒரு தன்னிலை விளக்கம் போல பாவம் அதற்கேற்ற உடல் மொழி. காதலென்னும் ஆசையில்லா பொம்மையுமில்லை என்று அதற்கு அடுத்த வரியை பாடி விட்டு ஆனால் அதை வெளிப்படுத்துவதற்கு எனக்கு தெரியவில்லை என்ற பாவத்தில் மீண்டும் நான் கவிஞனுமில்லை என்ற வரியை பாடுவார்.
முதல் சரணத்தில் வருவது விரக தாபம், இரவு நேரம் பிறரை போல என்னையும் கொல்லும் என்ற வரிகளில் துவங்கி துணை இருந்தும் இல்லை என்ற நிலை வந்தால் ஊர் என்ன சொல்லும் என்பதை ஒரு ஹம்மிங்கோடு வெளிப்படுத்திவிட்டு மீண்டும் அந்த விரக தாப உணர்வு வெளிப்படும் நான் கவிஞனுமில்லை வரிகள். கட்டிலில் உட்கார்ந்தவாறே விரகம் காட்டும் உடல் மொழி.
அடுத்த சரணத்தில் மனைவி மீது கொண்ட அன்பை காதலை அவளது அழகை வர்ணிக்க நடத்தும் முயற்சி அன்பே ஆருயிரே என்று தொடங்கி ஆனால் அன்பை பண்பை எல்லாம் சொல்ல தெரியவில்லையே என்ற ஏக்கத்தின் தொனியில் நான் கவிஞனுமில்லை வரிகள்,
மூன்றாவது சரணம் ஒரு வருத்தமான மனநிலையை வெளிப்படுத்தும், வேட்டைக்கு சென்று பழகிய தனக்கு காட்டும் மானை பற்றி தெரிந்து அதை கிழ்ப்படிய செய்த தனக்கு வீட்டில் இருக்கும் மானை அடக்க முடியவில்லையே என்ற இயலாமை, குடும்ப வாழ்க்கையின் அர்த்தம் புரியாமல் அதுநாள் வரை வாழ்ந்த தனக்கு மனைவியாக வந்த பெண்ணின் மனதில் பெண்மை குணம் இல்லையே என்ற வருத்தத்தில் நான் கவிஞனுமில்லை வரிகளும் உடல் மொழியும்.
பின்னர் வருவது கடைசி சரணம். குழப்பம், என்ன செய்வது என்று தெரியாமல் வரும் திகைப்பு என்ன செய்தாலும் அதற்கு எதிர்மாறாக நடந்து கொள்ளும் மனைவியின் குணத்தை பார்த்து தனக்கு தானே தோன்றும் கழிவிரக்கம் இவை எல்லாம் கலந்த ஒரு உணர்வு, அழுவதா சிரிப்பதா என்று கூட தெரியாமல் தன் நிலை இப்படி ஆகி விட்டதே என்று பச்சாதாபத்தில் நான் கவிஞனுமில்லை என்று அதுவும் அந்த நான் என்ற வார்த்தையை கொஞ்சம் அதிகப்படியாகவே இழுத்து பாடும் அந்த உடல்மொழி இருக்கிறதே, அற்புதமாக திரையில் வெளிப்படுத்தி இருப்பார் நமது நடிகர் திலகம் அவர்கள்.
அந்த பல்லவியை மீண்டும் இறுதியாக பாடும் போது அவ்வளவுதான் இத்தனை நாள் மனதில் வைத்திருந்ததை, நான் சொல்ல வேண்டியதையெல்லாம் சொல்லி விட்டேன் என்று தன் உள்ளத்தை முற்றிலுமாக ஒப்படைக்க துடிக்கும் ஒரு பரிதாபமான உடல் மொழியில் கலக்கியிருப்பார் நடிகர் திலகம். ஒரே பாடலின் ஒரே வரியை பல முறை பாட நேரும் தருணத்தில் கூட இத்துணை வித்தியாசம் காட்ட நடிகர் திலகத்தால் மட்டுமே முடியும். அவருக்கென்ன! எட்டு முறை அல்ல 80 முறை பாட சொன்னாலும் அதை 80 வித்யாசமான பாவங்களில் வெளிப்படுத்த நடிகர் திலகத்தால் மட்டுமே முடியும் என்பதை நாம் கண்கூடாய் கண்டிருக்கிறோம்.
இந்த பாடலை கவனிக்க சொல்லியதன் மூலம் நடிகர் திலகத்தின் நடிப்பில் ஒளிந்திருக்கும் அந்த nuances -ஐ பார்த்து ரசிக்கவும் அதை இங்கே பகிர்ந்து கொள்ளவும் வாய்ப்பளித்த திரு மோகன் அவர்களுக்கு நன்றிகள் பல!
அன்புடன்
சாரதி,
உங்கள் domain -ல் உள்ளே நுழைந்து உங்கள் விருப்பமான பாடல் ஆராய்ச்சியை நான் எடுத்துக் கொண்டதற்கு sorry!
:clap: :clap: reminds me of Sathiya Keerthi :bow:
http://video.google.com/videoplay?do...33358973744469
http://info.puducherry.gov.in/DSivaj...vaji2012/1.jpg
Do the TN Govt observed the anniversay of NT ? i don't think so. Very pity
முரளி சார்,
உங்களின் அருமையான நான் கவிஞனுமில்லை தொடர்பான ஒரு சங்கிலி தொடர் பதிவு.
நடிகர் திலகம் சார் பாடல்களை ரசிக்க ,அவர் நடித்த படம்,கதாபாத்திரம் தொடர்பான புரிதல் அவசியம். அவர் அப்பாவி வேடங்களை ஏற்கும் பொது முகபாவங்களை விட கை கால்கள் அசைவுகளால் (எங்களுக்கும் காலம் வரும்,உள்ளதை சொல்வேன், அம்மாடி,) action முறையில் நடிப்பார்.
அந்த விதத்தில் வாழ நினைத்தால் வாழலாம் பாடல். மூன்று சரணங்கள் மூன்று கால நேரங்கள். மூன்று மனநிலைகள். முதல் சரணம் தோல்வி மனப்பான்மையில் தற்கொலை முயற்சியில் வாழ வேண்டிய அவசியம் உணர்த்துவது. இரண்டாவது காதலை வேண்டி ,வாழும் ஆசையை வெளிப்படுத்தும் ஒன்று. மூன்றாவது காதலில் ஒன்றி உறவாடும் இரு உள்ளங்கள். முடிவு அழகான வழியனுப்பல்.
NT அவ்வளவு அழகாக அப்பாவி தனம் மாறாமல் மூன்று மனநிலைகளை காட்டும் நல்ல பாடல்.-பலே பாண்டியா படத்தில்.