http://i1170.photobucket.com/albums/...psecbc8172.jpg
Printable View
Courtesy - net
இசை மும்மூர்த்திகள் என்றே இவர்களை சொல்லாம் : வாலி + டீ எம் எஸ் + விஸ்வநாதன் ராமமூர்த்தி. இதில் மூவரை இந்த ‘மூன்று பத்து இரண்டாயிரம்’ காலத்தில் காலன் வசம் சென்றனர் என்று சொல்வதை விட, கற்பக காலத்துல் கலந்தனர் என்றே கூறலாம். என்ன தான் மூன்று தெய்வங்கள் இருந்தாலும், தமிழின் தனிக்கடவுள் முருகன். தமிழகத்தின் தனிப் பெரும் அபிமான தலைவர் எம்.ஜி.ஆர். இந்த நால்வர் கூட்டணி, நாலா திசையும் பரவி, (தமிழ்) நாட்டில் வெற்றி வாகை சூடியது. ஒவ்வொருவராலும் மற்றவர் அடைந்த பயன், நாம் அடையும் மகிழ்ச்சியைப் போன்றது.
படகோட்டி (1964) திரைபடம். மாணிக்கம் (எம்.ஜி.ஆர்) மற்றும் முத்தழகி (சரோஜா தேவி) வெற்றி ஜோடி. நம்பியார் தான் ஜமீன் வில்லன். நாகேஷ், மனோரம்மா சிரிப்பு வெடிகள் என : பட்டையை கிளப்பிய வசூல், பட்டி தொட்டி எங்கும் சென்று அடைந்த பாடல்கள். படப்பிடிப்புகள் மிகவும் அழகான கடற்கரைகளில் எடுக்கப்பட்டது.
எட்டு பாடல்களையும் வாலி வடித்தார். குறிப்பாக இந்த பாடல் “தொட்டால் பூ மலரும்” , எதோ ஒரு சந்த கவிவடிவத்தின் சாயலில் உள்ளது என்பது என் சந்தேகம் (உங்களுக்கு தெரிந்தால் கமெண்ட்-டுங்கள்) . பாமரனுக்கும் புரியும் எளிய தமிழ் வார்த்தைகள். சொல்லாட்சி தான் சிறப்பாக அமைந்துள்ளது. எதுகை மோனை எல்லாம் நச்சென்று உள்ளன, அதுவும் நான்கு நான்கு வரிகளில். வாலியின் “சொல் விளையாடல்கள்” மிளிரும் பாடல் இது. அவர் பேச்சிலும் இது வெளிப்படும்.
இசைக் கோர்வையை மெல்லிசை மன்னர்கள் சேர்த்தனர். பாடல் வரிகளை நம் மனதில் பதிக்கும் வண்ணம் அமைந்த இசை. முழு பாடலின் தாளமும், ஒரு கைத்தட்டலில் செல்லும். இப்படி எல்லாம் மெல்ல மெல்ல இசையை அனுபவிக்க தந்ததால் தானோ : மெல்லிசை மன்னர்கள்
இந்த படத்தில் வாலி போல், எம்.ஜி.ஆர் போல், டி எம் எஸ் -சும் ஒரு கதாநாயகன் தான். படத்தில் உள்ள ஆறு (ஆண் குரல்) பாடல்களும் அவர் வசம். புரட்சி தலைவருக்கு கச்சிதமாக பொருந்தும் குரல். இரண்டு (பெண் குரல்) பாடல்களையும் பாடியவர் பி.சுசீலா. இரண்டே பாடகர்கள் முழு ஆல்பம், அத்தனையும் முத்துக்கள். இன்றைய காலகட்டத்தில். இருக்கும் நாம் வியக்க வேண்டிய விடயம் தான்….
பாடலின் சிறப்பு இன்னும் உண்டு : காட்சியமைப்பு. நீண்ட நெடும் கடற்கரை; தென்னைத் தோப்பு. எதிர் எதிர் திசைகளில் மூச்சிரைக்க ஓடி வரும் காதலர்கள், சந்தித்து பாடும் பாடல். முக உணர்சிகள் காட்டுவதில், கண் அசைவுகளில் சரோஜா தேவி #ஆஹா தான் ! கை தட்டு வரும் பொழுது எல்லாம், கன்னத்தில் தட்டுவது, என கண் கவரும் வகையிலான பாடல். இறுதியில் வரும் கோரஸ் மற்றும் நடனம் #சபாஷ்.
வாலி, ராமமூர்த்தி, டி எம் எஸ் ஆகிய இசை ஜாம்பவான்களுக்கு ஓரே பாடல் மூலம் இரங்கல் தெரிவித்து, அஞ்சலி செலுத்துகிறோம். இன்று நடிகர் திலகம் சிவாஜி கணேசன் நினைவு தினம். அன்னார்க்கும் எங்கள் நினைவு அஞ்சலி.
படம்: படகோட்டி (1964)
இசை: விஸ்வநாதன் ராமமூர்த்தி
பாடியவர்கள்: டி.எம். சௌந்தரராஜன், பி.சுசீலா
வரிகள்: வாலி
ராகம் : சுத்ததன்னியாசி
தொட்டால் பூ மலரும்
தொடாமல் நான் மலர்வேன்
சுட்டால் பொன் சிவக்கும்
சுடாமல் கண் சிவந்தேன்
தொட்டால்…
கண்கள் தொடாமல்
கைகள் படாமல்
காதல் வருவதில்லை ஹோ!
காதல் வருவதில்லை
நேரில் வராமல்
நெஞ்சை தராமல்
ஆசை விடுவதில்லை ஹோ!
ஆசை விடுவதில்லை
தொட்டால்…
இருவர் ஒன்றானால்
ஒருவர் என்றானால்
இளமை முடிவதில்லை ஹோ!
இளமை முடிவதில்லை
எடுத்து கொண்டாலும்
கொடுத்து சென்றாலும்
பொழுதும் விடிவதில்லை ஹோய்
பொழுதும் விடிவதில்லை
தொட்டால்…
பக்கம் இல்லாமல்
பார்த்து செல்லாமல்
பித்தம் தெளிவதில்லை ஹோய்
பித்தம் தெளிவதில்லை
வெட்கம் இல்லாமல்
வழங்கி செல்லாமல்
வர்க்கம் தெரிவதில்லை ஹோய்
வர்க்கம் தெரிவதில்லை
தொட்டால்…
பழரச தோட்டம்
பனிமலர் கூட்டம்
பாவை முகமல்லவா ஹோ
பாவை முகமல்லவா
அழகிய தோள்கள்
பழகிய நாட்கள்
ஆயிரம் முகமல்லவா ஹோய்
ஆயிரம் முகமல்லவா
Courtesy - net
தரைமேல் பிறக்க வைத்தான்- எங்களைத்
தண்ணீரில் பிழைக்க வைத்தான்.
கரைமேல் இருக்க வைத்தான்- பெண்களைக்
கண்ணீரில் குளிக்க வைத்தான்.
என்ற பாடல் வரிகள் மீனவர் வாழ்வைப் பற்றிச் சிந்திக்கும் எவருக்கும் நினைவுக்கு வராமல் போகாது. ‘படகோட்டி’ எம்.ஜி.ராமச்சந்திரன் நடித்து மிகவும் பிரபலமாகவும், வெற்றிகரமாகவும் ஓடிய படம். இன்றைக்கும் மீனவர் வாழ்வின் அவலங்களை படகோட்டி அளவுக்கு(க்கூட) முன்வைத்த தமிழ்த் திரைப்படம் ஒன்றும் இல்லை அல்லது படகோட்டி ஃபார்முலாவை மீறிய தமிழ் (மீனவர்) திரைப்படம் ஒன்றுகூட இல்லை என்றே சொல்ல வேண்டிய நிலையுள்ளது.
1964- ANANTHA VIKADAN - DEEPAVALI MALAR
http://i61.tinypic.com/25uipgi.jpg
http://i59.tinypic.com/10z30bn.jpg
Courtesy - net
எம்.ஜி.ஆரின் படகோட்டியின் அளவுக்கு மீனவரின் பிரச்சினைப் பாடுகளை (தான் முன் வைக்கும் பிரச்சினைகளான: முதலாளிகள் தங்களது லாபத்திற்காக மீனவர்களைப் பிரித்து மோதவிடுகி றனர், இந்த மோதலும், ஒற்றுமையின்மையும் மீனவர் முன்னேற்றத்திற்குத் தடையாக இருக்கிறது. எனவே மீனவர் ஒற்றுமையே இலட்சியம்) திரைப்படத்தின் துவக்கம் முதல் இறுதிக்காட்சி வரை பேசிய திரைப்படம் வேறு ஒன்றுமே இல்லை. ஓரளவாவது நெருங்கி வருவது அதே எம்.ஜி.ஆரது மீனவ நண்பன் திரைப்படம் மட்டுமே.
ஆனால் 1964க்கும் 1977க்கும் இடையே நடந்த மாறுதல்கள் மீனவ நண்பன் திரைப்படத்தில் வெளிப்படவே செய்வதோடு, பின்னாளில் வந்த மீனவத் திரைப்படங்களின் குறைபாடுகளுக்கான மூலங்களை நாம் மீனவ நண்பனிலேயே காண முடிகிறது.
படகோட்டி (1964) திரைப்படத்தின் கரு மீனவர் ஒற்றுமை ஆகும். ஒரே இனத்தைச் (சாதியை இனம் என்றே திரையில் எம்.ஜி.ஆர். கூறுகிறார்) சேர்ந்த திருக்கை மீன் குப்பம், சுறா மீன் குப்பம் இரண்டுக்கும் இடையே பாரம்பரியப் பகை நிலவுகிறது. திருக்கை மீன் குப்பத்திற்கு மாணிக்கம் (எம்.ஜி.ஆர்.) நாட்டாமை. சுறா மீன் குப்பத்திற்கு அலையப்பன் (ராமதாஸ்) நாட்டாமை. சுறா மீன் தலைவரின் மகள் முத்தழகி (சரோஜா தேவி) மாணிக்கத்தின் காதலி. இவ்விரு குப்பத்தினரையும் மோதவிட்டு அதற்காக அலையப்பனை கைக்குள் போட்டுக் கொண்டு அதன் மூலம் பொருளாதார அரசியல் லாபம் அடைந்துவரும் முதலாளி நீலமேகம் (நம்பியார்) அவரது அடியாள் கந்தப்பன் (அசோகன்) ஆகிய பாத்திரங்களை மய்யமாகக் கொண்டு கதை நகர்த்தப்படுகிறது.
நீலமேகம் மீன் வியாபாரியாக வருகிறார். மீனவர்கள் புயல் மழைக் காலத்தில் மீன் பிடிக்கச் செல்ல முடியாமல் பசி பட்டினியால் தவிக்கும்போது கடன் கொடுத்து ஒன்றுக்குப் பத்தாக எழுதி கைநாட்டு வாங்கி மீனவர்களை அடிமைகளாக வைத்து தான் நிர்ணயிக்கும் விலைக்கே மீன்களை மீனவர் தருமாறு செய்து அவர்களைச் சுரண்டுகிறார்.
படிப்பறிவும் விழிப்புணர்வும் இல்லாத மீனவர் மத்தியில் மாணிக்கம் மட்டுமே கல்வியறிவும் அரசியலறிவும் பெற்றவராக இருப்பதால் நீலமேகத்தை எதிர்த்தும் அவரது சுரண்டலை எதிர்த்தும் குரல் எழுப்புகிறார். ஆனால் இரு குப்பத்து மீனவர்களும் மீண்டும் மீண்டும் நீலமேகம் முதலாளியின் வலையில் விழுந்து மாணிக்கத்தை புறக்கணிக்கவும், தாக்கவும், பழிக்கவும் செய்கின்றனர். தனது தந்தை இறக்கும் தருவாயில் மீனவர் நலனுக்குப் பாடுபடுவதாக தனது தந்தைக்கு செய்து கொடுத்த உறுதி மொழியை காக்கவும், மக்கள் நலனுக்குப் பாடுபடும் தலைவர் அவர்களது அறியாமையின் காரணமான ஏச்சுப் பேச்சு இழித்தல் பழித்தல் போன்றவற்றை பொருட்படுத்தக்கூடாது என்ற கொள்கைப் பிடிப்பின் வழிநின்றும் இறுதி வரைப் போராடி வெற்றியும் பெறுகிறார்.
இந்த மய்யத்திற்கு துணையாகவே காதல் வருகிறது. 1964இல் எம்.ஜி.ஆர். சார்ந்திருந்த திராவிட முன்னேற்றக் கழகத்தின் அரசியல் பார்வைக்கு ஏற்படவே மக்களின் எதிரி (மீனவர்களின் எதிரி)யான முதலாளியை சட்டப்படி தண்டிப்பதும், அரசிடம் கோரிக்கை வைத்துப் பலன்பெற்று முன்னேறுவது என்ற கருத்தாக்கமும் காட்சியாக்கப்பட்டிருக்கிறது. இதேபோன்ற கருத்தும் காட்சியுமே மீனவ நண்பனிலும் முன்வைக்கப்பட்டுள்ளது. 1977இல், தி.மு.க.வில் இருந்து வெளியேறி அ.தி.மு.க.வை நடத்திக் கொண்டிருந்த போதும் (திரையில் அ.தி.மு.க. கொடி, இரட்டை இலைச் சின்னம், கருப்பு சிவப்பு வெள்ளை போன்றவை காட்டப்படுவதோடு உதயகுமார் கொலையை நினைவூட்டும் காட்சியும் வசனமும் முன் வைக்கப்பட்டுள்ளன) மீனவ நண்பன் திரைப்படத்தின் மய்யமான பார்வை தனி மனிதர்களான முதலாளிகளை விமர்சிப்பது, திருத்துவது, திருந்தாதவர்களை அரசு, காவல் துறை மூலம் கைது செய்து தண்டிப்பது (அதுவும் திருந்துவதற்குத்தான்) பாதிக்கப்பட்ட மீனவர்களை அரசின் பொருளாதார உதவிகொண்டு காப்பது என்பதாகவே இருக்கிறது.
1964 இல் வெளிவந்த படகோட்டி படம் இன்னும் இந்த திரைப்படைத்தை திராயரங்குகளில் பார்க்க கூட்டம் வந்து கொண்டு இருக்கிறது அது இருக்கட்டும் நான் சொல்லவந்தது பெரும்பாலும் பழய பாடல்களை நான் நான் விரும்பி கேட்பதில்லை இந்த தொட்டால் பூ மலரும் பாடலை ஏற்க்கனவே அறிந்து கேட்டும் இருந்தேன் ஆனால் என் உறவினர் ஒருவருக்காக எனது மொபைலில் தரவிறக்கி கேட்டபோதே அசந்து போனேன் விஸ்வநாதனும் ராமமூர்த்தியின் நிகழ்த்திய மாயத்தை மிக அழகாக காற்றில் தவழும் உதிரிலையென சன்னமாக அதே சமயம் குரல்களும் பிசிரின்றி அதற்க்கு ஏற்றாற்போல கூடவே பயணிக்கும் இசையும் ஒரு புதிய அனுபத்தை தந்தது இன்றும் யென் விருப்ப பாடலில் இது இருக்கிறது
courtesy - net
ஆமாம் உன் பேர் என்ன ? என் பேர் முத்து
தலைவர்: பொறந்ததும் ஆள பாத்து வைச்சதா
சரோ : ஏன்கிரேன் உங்க ஊர்ல எல்லாம் குழந்தை வைத்துள்ள இருக்கும் பொது பேர் வைசிடுவாங்களா
உன் பேர் என்ன
தலைவர் : மாணிக்கம்
சரோ : இது மட்டும் என்ன என் பேருக்கு இடா தான் இருக்கு
http://i1170.photobucket.com/albums/...psde1a3a2a.jpg
தொட கூடாத என்று தலைவர் கேட்க்கும் அழகு அப்படா இனி எப்பொழுது காண்போம் இது போல காதல் காட்சிகள்
http://i1170.photobucket.com/albums/...ps564c172d.jpg
BANGALORE - 1989
http://i58.tinypic.com/2hdn1og.jpg
PADAKOTI - 1964 - 4TH WEEK ADVT-BANGALORE
http://i57.tinypic.com/sqpjc7.jpg
எனக்கு மிகவும் பிடித்த காட்சி தலைவர் மீன் எடுத்து சரோ மீது அடிக்கும் காட்சி அதை தொடர்ந்து கண்ணாலே ஜாடை காட்டி ஆற்று கரையோரம் வரசொல்லி அதன் பின்னர் வரும் தொட்டால் பூ மலரும் பாடல் காண கண் கோடி வேண்டும்
http://i1170.photobucket.com/albums/...ps2a373b2f.jpg
பாட்டுக்கு பாட்டு எடுத்து என்ற பாடல் முடியும் தருவாயில் தலைவர் சரோவினை ஒரு பார்வை பார்பார் அதற்காகக் எத்தனை முறை வேண்டுமானாலும் பார்க்கலாம் .
http://i1170.photobucket.com/albums/...ps9b0b1fba.jpg
பாட்டுக்கு பாட்டு எடுத்து என்ற பாடல் முடியும் தருவாயில் தலைவர் சரோவினை ஒரு பார்வை பார்பார் அதற்காகக் எத்தனை முறை வேண்டுமானாலும் பார்க்கலாம்
எனக்கு என் மக்களோட வாழ்வு தான் முக்கியம் என்று தலைவர் பேசும் வசனம் நான் மட்டும் சாதாரண மனிதனாக இருந்தா நம் காதலுக்காக உயிரை கொடுத்திருபேன் ஆனா நான் மக்களின் தலைவன் என்ற பெயரில் அவர்களின் அடிமை என்று வசனம் பேசும்பொழுது வெள்ளி காசுகள் திரையில் வீசுவார்கள் ரசிகர்கள்
http://i1170.photobucket.com/albums/...ps19f41412.jpg
வெற்றி-திருப்புகழ், பாட்டுடைத் தலைவன்-அற்புத நாயகன் எம்.ஜி.ஆர்.
http://www.youtube.com/watch?v=Hz67CbWadz8
The Title music is really an inspirational for all those who aspire and desire to uplift the downtrodden and who cherished the progress and well being of the poor masses in particular as like மக்கள் திலகம் in toto. The music core and combination of Mr. Viswanathan and Mr. Ramamurthy is excellent and great. It is a challenging one for now to the new music directors to core like this one superbly even though there is technology advancement to give a new dimension.
வெற்றி-திருப்புகழ், பாட்டுடைத் தலைவன்-அற்புத நாயகன் எம்.ஜி.ஆர்.
http://i61.tinypic.com/2qv5itl.jpg
வெற்றி-திருப்புகழ், பாட்டுடைத் தலைவன்-அற்புத நாயகன் எம்.ஜி.ஆர்.
http://i61.tinypic.com/xkp094.jpg
எந்த நாட்டிலும் வீட்டிலும் ஒளிவீச
நான் தரணியில் பிறப்பெடுப்பேன்;
என் வள்ளல் குணம், நல்லபிள்ளைமனம்
சரித்திரம் சாத்திரம் காணப்படும்;
நல்ல காலம் வரும், நல்லநேரம் உண்டு
என்ற நம்பிக்கை இதயத்தில் வைத்திடுங்கள்.
என் அருள் மாட்சி என்அரசாட்சி
என்றும் நல்லவர் உலகின் மனசாட்சி
அது ஏழை மக்களின் பொற்காலம்.
வரிகள் - தியாகராஜன் (தெனாலிராஜன்),
ஊக்கம் : மக்கள் திலகம்.
வெற்றி-திருப்புகழ், பாட்டுடைத் தலைவன்-அற்புத நாயகன் எம்.ஜி.ஆர்.
http://i61.tinypic.com/2eqg8iv.jpg
இன்றைய தின இதழ் நாளிதழில் பிரசுரம் ஆனா செய்தி.
---------------------------------------------------------------------------------------------
http://i57.tinypic.com/2u59zc5.jpg
1980-ம் ஆண்டு திரு. கக்கனின் உடல்நலம் சரியில்லாத காரணத்தால்
மதுரை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார் . மதுரை முத்துவை
நலம் விசாரிக்க வந்த முதல்வர் எம்.ஜி.ஆர்.
http://i61.tinypic.com/2eqg8iv.jpg SUPER DESIGN .
படகோட்டி - மறு வெளியீடு பற்றிய பதிவிற்கு நண்பர்கள் வழங்கிய அத்தனை பதிவுகளும் அருமை .காலத்தால் அழியாத காவிய படைப்பு . படகோட்டி படத்தை டிஜிடல் வடிவில் வருவதாக அறிவிப்பு வந்தது . மேகொண்டு தகவல்கள் எதுவுமில்லை .
பாக்கெட்மார்’ என்ற இந்திப்படக் கதையை தமிழில் எடுப்பது என்றும், அதில் எம்.ஜி.ஆர் -சரோஜாதேவி இணைந்து நடிப்பதென்றும் முடிவு செய்து அதற்கான பணிகள் ஆரம்பித்தன. இந்தப் படத்திற்கு முதலில்
' பிக்பாக்கெட் ' என்று பெயர் சூட்டப்பட்டது . அந்தப் பெயர் எம்ஜியாருக்கு பிடிக்கவில்லை .
அப்போது, படத்திற்கு வேறு என்ன தலைப்பு வைப்பது என்று சிந்தித்தபோது எம்.ஜி.ஆர், “எவ்வளவு லட்சம் செலவு செய்து படம் எடுக்கிறோம். அந்தப் படத்தின் மூலம் மக்களுக்கு ஏதாவது நல்ல நீதிகள் கிடைக்க வேண்டும். அதே போல் நாம் தேர்ந்தெடுக்கும் படத்தின் பெயர் ஒரு நீதியைப் போதிப்பதாக அமைய வேண்டும். பணம் செலவு செய்து ‘போஸ்டர்’ ஒட்டுகிறோம்.
பத்திரிகையில் விளம்பரம் போடுகிறோம். ஏதாவது ஒரு நல்ல கருத்தைச்சொல்லும் பெயராக இருந்தால் நாம் செலவு செய்வதற்கு பலன் உண்டல்லவா? அப்படிப்பட்ட ஒரு பெயரைப் படத்திற்கு வைக்க வேண்டும்” என்றார். அத்துடன் அப்படி யார் நல்ல பெயர் சொல்லுகிறார்களோ அவர்களுக்கு ரூ.500 பரிசு அளிப்பதாகவும் கூறினார்.
இதனால் எல்லோரும் சுறுசுறுப்பாக யோசனை செய்தார்கள். கடைசியில் படக் குழுவைச் சேர்ந்த மா.லெட்சுமணன், இந்தப் படத்திற்கு “திருடாதே” என்று பெயர் வைக்கலாம் என்று சொன்னதை அனைவரும் ஒருமனதாக ஏற்றுக்கொண்டனர். எம்.ஜி.ஆருக்கும் அந்தப்பெயர் ரொம்பவும் பிடித்துவிட்டது. மா.லெட்சுமணனுக்கு 500 ரூபாய் பரிசளித்தார் எம்.ஜி.ஆர்.
- தகவல் : சின்ன அண்ணாமலை .
டைரக்டர் பி.வாசு, 'மீண்டும் உங்கள் சத்யராஜூக்கு வேலை கிடைச்சிடுச்சு' என்று குறிப்பிட்டார்!
இந்திப் பட உலகின் பெரிய ஹீரோக்களில் ஒருவர் அணில் கபூர். அவர் இந்தப் படத்தின் கதை பற்றி தெரிந்து வைத்திருந்ததால் இந்திப் பதிப்பில் நடிக்க விரும்பினார். அவருக்கு தமிழ் தெரியாது. என்றாலும் ரசிகர்களுடன் படம் பார்க்க விரும்பினார்.
சென்னை ஆல்பட் தியேட்டரில் படம் ரீலிசான போது, அணில் கபூரும் எங்களுடன் படத்தைப் பார்க்க வந்தார். படத்தின் தயாரிப்பாளர்கள் மோகன் நடராஜன், தரங்கை சண்முகம், எனது மானேஜர் ராமநாதன் ஆகியோரும் எங்களுடன் சேர்ந்து படம் பார்த்தார்கள்.
தியேட்டர் ஹவுஸ்புல்லாகி இருந்தது. காட்சிக்கு காட்சி ரசிகர்களின் கரகோஷத்தை ரொம்பவே ரசித்தார் அணில்கபூர். சண்டைக் காட்சிகளுக்கு ரசிகர்களின் விசில் சத்தம் காதைப் பிளந்தது.
இதையெல்லாம் பார்த்துக் கொண்டிருந்த அணில் கபூர், என் கைகளைப் பிடித்துக் கொண்டு, 'பிறந்தால் தமிழ்நாட்டில் நடிகனாக பிறக்க வேண்டும். இப்படி உணர்ச்சிபூர்வமாய் ரசிக்கும் ரசிகர்களை வேறு எங்குமே பார்த்ததில்லை' என்று நெகிழ்ச்சியாகக் கூறினார்.
படத்தில் வரும் ஒரு பாடல் காட்சியில் நான் எம்.ஜி.ஆர். போஸ்டருக்கு முத்தம் கொடுப்பேன். அந்தக் காட்சிக்கும் விசில்கள் பறந்தன.
அதுபற்றி என்னிடம் குறிப்பிட்ட அணில் கபூர், 'உங்கள் தமிழ்நாட்டில் இப்படி ஒரு நடிகர் எல்லா ரசிகர்களையும் உற்சாகப்படுத்துகிறவராக கிடைத்திருக்கிறார். இந்தப் படத்தை இந்தியில் எடுக்கும்போது நாங்கள் யாரை இப்படி போஸ்டரில் போட முடியும்?' என்று
கேட்டார்.எம்.ஜி.ஆர். என்ற மக்கள் சக்தியின் மகத்துவம் பற்றி அவருக்கு விளக்கி சொன்னபோது, எனக்குள்ளும் ஒரு பெருமிதம்.
Rare Pics
http://i57.tinypic.com/33nzzg5.jpg
Bangalore - Patti kattu ponnaya
4th week at 3 screens- 1973
http://i62.tinypic.com/rh7509.jpg
Nallavan Vazhvaan
Bangalore -1961
http://i58.tinypic.com/2luxpaa.jpg
BANGALORE - KALANGARAI VILAKKAM - 5TH WEEK ADVT
http://i58.tinypic.com/2agvyfo.jpg
BANGALORE - PERIYA IDATHU PEN- 1963
4TH WEEK ADVT
http://i57.tinypic.com/2jgmls.jpg
1967
BANGALORE - ARASAKATTALAI - ADVT
http://i61.tinypic.com/bwykn.jpg