குடியியரசு தினத்தினையொட்டி, பாரத தேச நலனில் அக்கறை கொண்ட, தேச பக்தி மிகுந்த, நம் ஒப்பற்ற தலைவர் அவர்களின் related வீடியோ படக் காட்சியை பதிவிட்ட அருமை சகோதரர் திரு. சைலேஷ் பாசு அவர்களுக்கு மிக்க நன்றி.
Printable View
5,000 பதிவுகளை கடந்து, தொடர்ந்து இந்த திரியினில் பதிவுகளை வேகமாக வழங்கி வரும், எனது இனிய சகோதரரும், அனைத்துலக எம். ஜி. ஆர். பொது நல சங்கத்தின் இணை செயலாளருமாகிய திரு. லோகநாதன் அவர்களுக்கு எனது தாமதமான வாழ்த்துக்கள்.
பல்வேறு நாளிதழ்கள், வார இதழ்கள், மாதமிருமுறை மற்றும் மாத பத்திரிகைகளில், நம் மக்கள் தலைவர் எம். ஜி. ஆர். அவர்களைப் போற்றும் செய்திகளை, சிரம் மேற்கொண்டு, பார்வையாளர்கள் அறியும்படி பதிவிட்டு வரும் தங்கள் பணி பாராட்டுக்குரியது.
நன்றி !. தொடரட்டும் தங்கள் சேவை !
மீண்டும் வாழ்த்துக்கள் பல !
கோவை மாநகரில், மக்கள் திலகத்தின் மூத்த அபிமானி, முரட்டு பக்தன் பொறியாளர் திரு. துரைசாமி அவர்களின் இல்லத்தில் நடைபெற்ற பொன்மனசெம்மலின் சிலை திறப்பு விழா நிகழ்ச்சிகளை அருமையாக படம் பிடித்து அவைகளை அற்புதமாக பதிவிட்ட அன்பு சகோதரர் திரு. ராமமூர்த்தி அவர்களுக்கு மிக்க நன்றி !
உலகில், மறைந்து 27 ஆண்டுகள் (கால் நூற்றாண்டு) ஆகியும் நம் இதய தெய்வம் டாக்டர் புரட்சித்தலைவருக்கு இருக்கும் புகழ் வேறு எவருக்கும் இல்லை என்பதே நிதர்சனமான உண்மை.
நான் கல்வி கற்று வாங்கிய ஏராளமான பட்டங்களை விட, மக்கள் திலகத்தின் பக்தன் என்பதில்தான் எனக்கு பெருமை. அவர் வாழ்ந்த காலத்தில் நான் வாழ்ந்ததும், அவரை ஐந்தாறு முறை சந்தித்து உரையாடிய நிகழ்வுகளும் என் வாழ்க்கையில் நான் அடைந்த பிறவிப்பயன்.
என் வாழ்க்கையில் மறக்க முடியாத நாள் .25.1.2015
மக்கள் திலகத்தின் தீவிர ரசிகரான கோவை திரு துரை சாமி அவர்களில் இல்லத்தில் மக்கள் திலகம் எம்ஜிஆர் சிலை திறப்பு விழா சிறப்பாக நடந்தேறியது .சென்னை , மதுரை , திருச்சி , நெல்லை , பெங்களூர் ,திண்டுக்கல் , சேலம் , வேலூர் நகரங்களில் இருந்து மக்கள் திலகத்தின் ரசிகர்கள் திரளாக
வந்து விழாவில் கலந்து கொண்டர்கள் .
பெங்களுர் -காந்திநகர் சட்டமன்ற முன்னாள் உறுப்பினர் திரு முனியப்பா
தமிழ்நாடு -பேருர் சட்டமன்ற முன்னாள் உறுப்பினர் திரு மருதாசலம்
கலந்து கொண்டு சிறப்பித்தார்கள் .
அன்று மாலை கோவை ராயல் அரங்கில் மக்கள் திலகத்தின் நான் ஆணையிட்டால் திரைப்படத்தை
மிக ஆவலுடன் நண்பர்களுடன் பார்த்தோம் . மனதிற்கு நிறைவு தந்த பொன்னான நாள் .
விழவை சிறப்பித்த அனைவருக்கும் நன்றி .
FROM MY MOBILE PICS- KOVAI -ROYAL -POSTER
http://i60.tinypic.com/w1zeb5.jpg
BANGALORE - MAKKAL THILAGAM MGR'S BIRTHDAY
EX.MLA THIRU MUNIYAPPA WITH MANITHA NEYA MAKKAL THILAGAM MGR MANDRAM DEVOTEES.
http://i62.tinypic.com/23uc0w0.jpg
http://i1170.photobucket.com/albums/...ps99e07c94.jpg
ஒரு காலத்தில் சைக்கிள்ல பொண்டாட்டிய உக்கார வெச்சி சைக்கிளை ஓட்டிக்கிட்டு போனவனயெல்லாம் பிடிச்சி டபுள்ஸ்னு சொல்லி போலீஸ்காரங்க இம்சை பண்ணுவாங்க..
ஒரு தொண்டன் இது பற்றி மேடையில் நேரடியாக சொல்லி அழ, அங்கிருந்தபடியே முதலமைச்சராக ஆணையிட்டார்..
அந்த விநாடி முதல் டபுள்ஸ் கேஸ் ஒழிஞ்சிது..ஏழைகளுக்கு எது அவசியம் என்று தெரிந்துவைத்திருந்த மக்கள் தலைவன்
Thalaivarin Ramavara Thoottam...17.01.15
http://i1170.photobucket.com/albums/...psd530fa52.jpg
http://i1170.photobucket.com/albums/...ps5b4a275a.jpg
COMMENTS PORTION FROM MANNADHI MANNAN VIJAY TV- YOUTUBE.
47,OOO VIEWERS IN 7 DAYS.
எம்,ஜி.ஆர்.எனும் புகழ் மந்திரம்.—வள்ளல்
இருந்தாய் எனுமொரு நிரந்தரம்.
கோடியிலொருவன் மனிதன்-எம்மில்
கூடி வாழ்ந்த அதிசயம்.
வண்ணமும் எண்ணமும் தங்கம்—நீ
வாழ்ந்த வரையும் சிங்கம்.
இன்னமும் உன்னையும் வெல்ல—இனி
என்றும் பிறப்பார் இல்லை.
கடவுள் தானவன் முதலாளி—அவன்
கண்டதில் நீயொரு தொழிலாளி.
கொடுப்பது எல்லாம் கொடுத்தான்.—அவன்
கொடுத்ததை எல்லாம் கொடுத்தாய்.
மரணம் என்பது உனக்கில்லை—இந்த
மண்ணும் மரணம் ஆவதில்லை.
இன்னும் அள்ளிக் கொடுக்கிறாய்—என்றும்
ஏழையின் மனங்களில் சிரிக்கிறாய்.
இருந்த போது இழித்தோரும்—உயிர்
துறந்த போது பாடினர்.
இன்றும் உன் முகம் காட்டாமல்-ஓட்டு
எவர்தான் துணிவரோ கேட்டுத்தான்!.
மறைந்தும் வழங்கும் வள்ளலே—உனை
மறைத்திட எது எழும் இமயமே!
நிறைத்தும் உன்புகழ் போற்றுமே!---தன்
திரைகளால் பாடி வங்கமே!
by MOHAN RAM
Presenna Kunjanna
This show about Late MGR is long overdue! Finally, Vijay TV took the honor of portraying one of the greatest personage of this century! Apart from Tamil Nadu MGR is revered in countries with minority Indians like Singapore and Malaysia during his birthday and memorial. Vijay TV and Gopinath give yourself a pat on the back. The amazing part of the show is the audience gathered to share their experiences. All of them are self made prominent people who had taken every word Seriously spoken by late MGR and applied in their lives.
மிக்க நன்றி விஜய் தொலைக்காட்சி. அரிய நிகழ்ச்சியை ஒளிபரப்பியதுடன் மீண்டும் காண வழி வகுத்தமைக்கு மீண்டும் மீண்டும் நன்றிகள்...
Horlicks Thirudan
In this show there were lots of unknown facts revealed about MGR's help. Shankar Ganesh stole the show. MG Ramachandiran is an unbelievably kindhearted human being. Along with Kannadasan MSV with their song, music, he helped the Tamil society to live a healthy life. Lot to learn from his movies, dialogue, songs as well as with his exemplary life. Great man with a great soul.
malar kodi
My greatest regrets till now i didnt get a chance to meet this great legend. But I'm happy aleast my elder brother got it. We all are MGR die-hard fans, every weekends we spend watchings his movies only.
Divya Ravi
meen kuzhambu, nandu,karuvaddu..ahh...all my fav too :)
goldtreat classic
No words, tears of joy, thanks to Vijay TV & Mr.Gopinath.
Scsekaran Srinivasan
தயவுசெய்து மிமிக்ரி செய்வது என்ற பெயரில் மக்கள் திலகம் குரலை கேலி செய்வதை தவிர்க்கவும்.அவர் காலமான பிறகு பிறந்தவர்கள் அவரின் கஷ்டப்பட்டு அவர் பேசுவாதி தான் அதிகம் கேட்டு இருப்பார்கள்.
துப்பாக்கி குண்டு தாக்குதலுக்கு முன்பு அவரின் நாடோடிமன்னன்,மர்மயோகி,மதுரைவீரன்,குலேபகாவலி, போன்ற அவரின் படங்களில் அவரின் வசன உச்சரிப்பை பார்த்தால் அவர்கள் இதுபோல் கேலி செய்வதை நிறுத்தி விடுவார்கள் என்பது உறுதி
Crp Rajan
The best ever programme on Vijay TV. By telecasting this programme on this great legend who still lives in the hearts of millions of tamil people even though it is more than a decade since he died, vijay tv has one more feather in its cap. A small request. There are so many celebrities who had close interactions with this legend in various fields. Please bring those celebrities to your show once again and let other people know what an intellectual he is and his humanity towards fellow being irrespective of cast and creed. It is no wonder that he was conferred the India's highest civilian award Bharat Ratna. Great going Vijay TV. Keep up the spirit
சாதனை மன்னன்
விஜய் டி.வி.யில் தலைவரைப் பற்றிய மன்னாதி மன்னன் நிகழ்ச்சி நேற்று மீண்டும் ஒளிபரப்பானது. ரசிகர்களின் வேண்டுகோளுக்கிணங்க என்ற அறிவிப்புடன். இதோடு இந்த நிகழ்ச்சி ஒளிபரப்பானது 3வது முறை.
தலைவர் பிறந்த நாளை முன்னிட்டு கடந்த 16ம் தேதி முதலில் ஒளிபரப்பானது. அதுவும் பொங்கல் விழா நாட்களில். நேற்று 11வது நாளில் 3வது முறையாக ஒளிபரப்பியுள்ளனர். அதுவும் குடியரசு தின நாளில். 11 நாளில் ஒரு நிகழ்ச்சி 3வது முறையாக ஒளிபரப்பாவது விஜய் டி.வி.யில் இதுவே முதல் முறை. இதிலும் புதிய சாதனை படைத்து விட்டார் தலைவர்.
அதிலும், நிகழ்ச்சி எந்த அளவுக்கு ரீச் ஆகியிருந்தால் 3வது முறையாக அதுவும் குடியரசு நாளில் ஒளிபரப்புவார்கள்? அதோடு, புதிய காட்சிகளையும் இணைத்திருந்தார்கள். சகோதரர்கள் திரு.செல்வகுமார், திரு.லோகநாதன், திரு.ராஜ்குமார் ஆகியோர் தோன்றும் காட்சியை ஆரம்பத்தில் காட்டினர். இறைவன் எம்.ஜி.ஆர். பக்தர்கள் குழு, அனைத்துலக எம்.ஜி.ஆர். பொதுநலச் சங்கம், மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். மன்றம் சார்பில் சென்னையில் ஒட்டப்பட்டிருந்த சுவரொட்டியையும் காட்டினா்.
இந்த சுவரொட்டியை காட்டி எம்.ஜி.ஆர்.ரசிகர்களும் அவரைப் போலவே நன்றி பாராட்டும் குணம் கொண்டவர்கள் என்பது புரிந்தது என்று கூறினார்கள். இதை விட நமக்கு என்ன பெருமை வேண்டும்? மேலும்,திரு.சரத்குமார், திரு.பி.வாசு, திருமதி. திவ்ய தர்ஷினி ஆகியோரின் பேட்டிகளோடு, புரட்சித் தலைவர் நினைவு இல்லம் மற்றும் சில ஸ்டில்களை புதிதாக காட்டினர்.
நண்பர்கள் இன்னொன்றையும் கவனித்திருக்கலாம். புதிய காட்சிகள் மட்டுமல்ல, முதல் முறை ஒளிபரப்பானபோது இல்லாத (இடம் பெறாத புதிய) விளம்பரங்கள் இம்முறை இடையிடையே இடம் பெற்றன. அந்த அளவுக்கு வர்த்தக ரீதியாகவும் நிகழ்ச்சி வெற்றி பெற்றிருக்கிறது. கோடிக்கணக்கானோர் நிகழ்ச்சியை பார்ப்பார்கள் என்ற நம்பிக்கையில்தான் விளம்பரமே வருகிறது. யூ டியூப்பிலும் இதுவரை 47,000க்கும் அதிகமானோர் நிகழ்ச்சியை பார்த்துள்ளனர், 11 நாட்களில். மொத்தத்தில் எல்லாருக்கும் மனநிறைவையும் திருப்தியையும் அளித்த நிகழ்ச்சி. விஜய் டி.வி.க்கும் நிகழ்ச்சியை நடத்திய திரு.கோபிநாத் அவர்களுக்கும் நன்றி.
இந்த நிகழ்ச்சியை பகுதிகளாக பிரித்து எழுதுவேன் என்று கூறியிருந்தேன். அதன்படி 5 பகுதிகள் எழுதியிருக்கிறேன். மேலும் 5 பகுதிகளாக பிரித்து எழுத இருக்கிறேன்.
பெளராணிகர்கள் கூறுவார்கள். எங்கெல்லாம் ராம நாமம் ஒலிக்கிறதோ அங்கெல்லாம் பக்தியுடன் கண்ணீர் பெருக்கெடுக்க அனுமார் இருப்பார் என்று கூறுவார்கள். அதுபோல, இந்த ‘ராமச்சந்திரன்’ பெயரைக் கேட்டால் தமிழகமே நன்றிக் கண்ணீரை காணிக்கையாக்கி பக்தியோடு மயங்கிக் கிடக்கிறது என்பதற்கு சமீபத்திய உதாரணம் விஜய் டி.வி. நிகழ்ச்சி.
மன்னாதி மன்னன்...... ‘சாதனை மன்னன்’.
அன்புடன் : கலைவேந்தன்
சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்
மறுவெளியீடுகளின் சாதனை மன்னன் மக்கள் திலகத்தின் வெள்ளிவிழாவை மிஞ்சிய திரைக்காவியமான ஆயிரத்தில் ஒருவன் புதுச்சேரி நியூடோனில் கடந்த 21.01.2015 முதல் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது.
நம் எண்ணம் கவர்ந்த நாயகனின் வண்ண சுவரொட்டிகள் புதுச்சேரியை அலங்கரித்துக்கொண்டிருக்கிறது. அவற்றிலிருந்து சில காட்சிகள். குறிப்பிட்ட நேரத்தில் பதிவு செய்யமுடியாமைக்கு மன்னிக்கவும்.
http://i62.tinypic.com/sazinq.jpg
உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்
http://i62.tinypic.com/514qr5.jpg
உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்
http://i59.tinypic.com/350ndbd.jpg
உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்
http://i61.tinypic.com/ndmmxk.jpg
உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்
http://i60.tinypic.com/jsp0mx.jpg
உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்
Thank you Very much Thiru. Sailesh Sir..and Thiru. Yukesh Sir.
உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்
http://i59.tinypic.com/2wekoro.jpg
உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்
http://i61.tinypic.com/nd1u08.jpg
உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்
http://i59.tinypic.com/j139t2.jpg
உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்
http://i58.tinypic.com/6o3n9c.jpg
சகோதரர் திரு.கலியபெருமாள் அவர்கள் புரட்சித் தலைவர் புகழ்பாடி பல்லாண்டு வாழ்க என அவர் பிறந்த நாளில் வாழ்த்துகிறேன்.
அன்புடன் : கலைவேந்தன்
சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்
குமுதம் ரிப்போர்டர் செய்தி -30/01/2015
-----------------------------------------------
http://i62.tinypic.com/1z4lmiu.jpg
தின இதழ் -27/01/2015
--------------------------
http://i60.tinypic.com/2mguw3r.jpg
http://i58.tinypic.com/e8lj45.jpg
http://i57.tinypic.com/wv75o9.jpg
http://i61.tinypic.com/28lv29e.jpghttp://i59.tinypic.com/2j5b9fk.jpg
http://i57.tinypic.com/1zqvyoi.jpg
http://i57.tinypic.com/14sjryp.jpg
http://i58.tinypic.com/af97cp.jpg