மலைகோட்டை மாநகரில் கலைகுரிசலின் என்னைப் போல் ஒருவன் மாபெரும் வரவேற்பு பெற்றிருக்கிறது என்ற தகவலை நேற்றே திருச்சியை சேர்ந்த நண்பர் பாஸ்கர் பகிர்ந்துக் கொண்டார். வசந்த மாளிகைக்கு பிறகு மீண்டும் ஒரே மாத இடைவெளியில் இரண்டாம் முறையாக கெயிட்டி திரையரங்கம் ஹவுஸ் புஃல் ஆகி இருக்கிறது. நமது ரசிகர்களின் ஆரவார ஆர்பாட்ட அலப்பரைகளை பல்வேறு தனியார் தொலைக்கட்சிகள படம் பிடித்துச் சென்றிருக்கின்றார்கள். அரங்கத்தின் உள்ளே நடந்த அலப்பரைகளையும் ஒரு தொலைக்காட்சி குழுவினர் படம் பிடித்திருக்கிறார்கள். பல பத்திரிக்கை நண்பர்களும் வந்திருந்ததாக நண்பர் தெரிவித்தார்.
ஏதோ வசந்த மாளிகை என்பதனால் தியேட்டர் புஃல் ஆகிவிட்டது என்று சென்ற மாதம் சிலர் ஏகடியம் பேசினார்களாம். அதற்கு மூன்று வாரங்களுக்கு முன் [ஏப்ரல் முதல் வாரம்] இதே கெயிட்டியில் தங்கைக்காக படமும் கிட்டத்தட்ட புஃல் ஆனதை மறந்துவிட்டு பேசினார்கள். [10 அல்லது 15 டிக்கெட்டுகள் மட்டுமே மிஞ்சிப் போனது] இப்போது என்னைப் போல் ஒருவனும் அந்த சாதனையைப் புரிந்திருக்கிறது. இரண்டே மாதங்களில் மூன்று படங்கள் இந்த சாதனையை புரிந்திருக்கிறது என்று சொன்னால் அதுதான் நடிகர் திலகத்தின் பாக்ஸ் ஆபிஸ் பவர். சாதனை சாத்தியமானதற்கு காரணமாக இருந்த திருச்சி வாழ் பொதுமக்களுக்கும் ரசிகர்களுக்கும் நமது மனம் நிறைந்த நன்றிகள்! பட வெளியிட்டாளர்களுக்கு வாழ்த்துகள்!
அன்புடன்