Daily Thanthi - Puducherry edition
http://i64.tinypic.com/mrzsxd.jpg
Printable View
Daily Thanthi - Puducherry edition
http://i64.tinypic.com/mrzsxd.jpg
Daily Thanthi - Puducherry edition
http://i67.tinypic.com/2u8e6q0.jpg
நேற்று இன்று நாளை
மக்கள் திலகம் எம்ஜிஆர் ரசிகர்களுக்கு மிகவும் பொருத்தமான தலைப்பு . காரணம் நேற்றய தலை முறை ரசிகர்கள் என்றால் 1947ல் ல் துவங்கி 1978 வரை ராஜ குமாரி முதல் மதுரையை மீட்ட சுந்தரபாண்டியன் வரை எம்ஜிஆரின் 115 படங்களை திரை அரங்குகளில் திருவிழாவாக கொண்டாடியவர்கள் .30 ஆண்டுகள் தமிழ் திரை உலகில் எம்ஜிஆரின் சாம்ராஜ்ஜியம் கொடி கட்டி பறந்தது . எம்ஜிஆர் படங்கள் வெளிவரும் நாள் ரசிகர்களுக்கு திருவிழா .முன்பதிவு நாளில் திரை அரங்கில் ரசிகர்கள் வெள்ளம் காண கண் கொள்ளா கட்சியாக இருந்தது .
திரை அரங்கை ஸ்டார் மற்றும் தோரணங்களால் அலங்கரித்து எம்ஜிஆர் பதாகைகளுக்கு மாலை அணிவித்து கொண்டாடினார்கள் .முதல் நாள் முதல் காட்சியில் எம்ஜிஆரை பெயரை டைட்டிலில் கண்டதும் திரை அரங்கமே அதிர்ந்து போகும் அளவிற்கு விசில் சத்தமும் கை தட்டலும் இருந்தது . பிறகு காட்சிக்கு காட்சி எம்ஜிஆரின் பாடல்கள் ,சண்டை காட்சிகள் , உணர்வுபூர்வமான நடிப்பு காட்சிகள் ரசிகர்களுக்கு விருந்தாக அமைந்து இருந்தது .
எம்ஜிஆருக்கு அடிமட்டத்திலிருந்து மேல்தட்டு வரை ரசிகர்கள் இருந்தார்கள் . குறிப்பாக ஏழை மக்கள் , விவசாயிகள் , தொழிலாளிகள் மற்றும் உழைக்கும் வர்க்கத்தினர் மிகவும் அதிகமாக எம்ஜிஆரை ரசித்தார்கள் நேசித்தார்கள் .எம்ஜிஆருக்கு என்றுமே தோல்வி இல்லை . சில படங்கள் முதல் வெளியீட்டில் சரியாக ஓடவில்லை என்றாலும் மறு வெளியீடுகளில் நல்ல லாபத்தை தந்து விடும் .
எம்ஜிஆர் படங்களை ஒரு சில பத்திரிக்கைகள் தரமின்றி விமர்சனம் செய்தார்கள் . இதை ஒரு பொருட்டாக எம்ஜிஆரும் எடுத்து கொள்ளவில்லை . ரசிகர்களும் ஆத்திரம் படவில்லை . மாறாக யார் யார் எம்ஜிஆரை கிண்டல் கேலி செய்தார்களோ அவர்கள் பின்னாளில் தங்கள் தவறை உணர்ந்து எம்ஜிஆரின் படங்களை புகழ்ந்தது எம்ஜிஆரின் பொறுமைக்கு கிடைத்த .வெற்றியாகும்
எம்ஜிஆர் படங்களில் சமுதாயத்திற்கு தேவையான கருத்துக்கள் , அறிவுரைகள் வசனங்கள் மற்றும் பாடல்கள் இடம் பெற்று இருந்தது . எம்ஜிஆரின் பொலிவான தோற்றம் கச்சிதமான உடற்கட்டு , புதுமையான சண்டை காட்சிகள் , விறுவிறுப்பான காட்சிகள் , எம்ஜிஆரின் சுறுசுறுப்பான நடிப்பு , சிறந்த உடை அலங்காரம் , எளிமையான வசனங்கள், சேஷ்டை இல்லாதமுக பாவங்கள் , இவை யாவும் எம்ஜிஆரின் வெற்றியின் ரகசியங்கள் . எனவேதான் எம்ஜிஆர் படங்களை அவரின் ரசிகர்களும் , பொது மக்களும் பல முறை பார்த்து மகிழ்ந்தார்கள் .
எம்ஜிஆரை போல் வேறு எந்த நடிகரும் தங்கள் திரை உலகை வாழ்க்கையை அமைத்து கொள்ள முடியவில்லை . எம்ஜிஆர் ரசிகர்களின் நாடி துடிப்பை நன்கு அறிந்திருந்தார் . ரசிகனின் தேவைகளை பூர்த்தி செய்தார் . வெற்றி மேல் வெற்றி கண்டார் . எம்ஜிஆர் ரசிகர்களும் தங்கள் உயிர் தலைவரின் எண்ணங்களுக்கு முழு ஆதரவு தந்தார்கள் .உண்மையாக உழைத்தார்கள் . எம்ஜிஆரை நினைத்ததை முடிப்பவன் என்ற தலைப்பிற்கு உயிர் கொடுத்தார்கள் . அதுதான் நேற்றய எம்ஜிஆர் ரசிகர்கள் .
தொடரும்
நேற்று இன்று நாளை ...
1977ல் மக்கள் திலகம் எம்ஜிஆர் திரை உலகை விட்டு விலகியது ரசிகர்களுக்கு மிகவும் வருத்தமாக இருந்தாலும் அரசியலில் எம்ஜிஆரின் எழுச்சியான பிரமாண்ட வெற்றிகளும் தமிழ் நாட்டின் முதல்வராக பதவி ஏற்றதும் வருத்தங்கள் மறைந்தது போய் விட்டது .
1977-1987 வரை எம்ஜிஆர் ரசிகர்களுக்கு விருந்தாக அமைந்தது எம்ஜிஆரின் படங்களே . இடை வெளி இல்லாமல் எம்ஜிஆரின் 100 படங்கள் புத்தம் புதிய பிரதிகளாக திரை அரங்கை நோக்கி படை எடுத்தன . எம்ஜிஆர் ரசிகர்களின் பேராதரவுடனும் மக்களின் ஆதரவுடனும் பல படங்கள் வசூலில் சாதனைகள் படைத்தன .
முதல் வெளியீட்டில் சுமாரான வெற்றி அடைந்த படங்கள் மறு வெளியீடுகளில் மாபெரும் வசூல் பெற்று பல விநியோகஸ்தர்களையும் , திரை அரங்கு உரிமையாளர்களையும் வாழ வைத்தது எம்ஜிஆர் படங்கள் . மாநிலத்திற்கும் நல்ல வருவாய் கிடைத்தது .
மக்கள் திலகம் எம்ஜிஆரின் ரசிகர்கள் எம்ஜிஆர் ஆட்சி காலத்தில் அவரின் புகழ் பரப்பும் ரசிகர்களாகவும் , அதிமுக இயக்கத்தின் உண்மையான தொண்டர்களாகவும் வாழ்ந்த நேற்றைய நாட்கள் பொற்கால நாட்கள் . என்றுமே மறக்க முடியாத நாட்கள் .
தொடரும் ,,
http://i67.tinypic.com/30k5apj.jpg
புரச்சித் தலைவரின் மெய் காவலர்களில் ஒருவராக இருந்து பணி ஆற்றிய ஸ்டன்ட் நடிகர் கே.பி.ராமகிருஸ்ணனின் மனைவியும் நமது திரி உறுப்பினர் கே.பி.ஆர். கோவிந்தராஜின் தாயும் ஆன கார்த்தாயயனி அம்மாள் சமீபத்திலே மரணம் அடைந்துவிட்டார்கள்.
ஒருதாய் மக்கள் படப்பிிடிப்பிலே சண்டைக் காட்ச்சியில் ராமகிருஸ்ணனுக்கு கால் உடைந்துவிட்டது. பூந்தமல்லி நெடுஞ்சாலையில் கே.ஜி.ஆசுபத்திரியில் அவரை சேர்த்து அவரது மருத்துவ செலவு எல்லாத்தையும் புரட்சித் தலைவர் ஏற்றுக் கொண்டார். கால் குணமாகி ராமகிருஸ்ணன் வந்த பிற்பாடு அதே காட்சியில் அவரை நடிக்க வைத்தார். இடைப்பட்ட காலத்தில் குடும்பத்தின் செலவுக்கும் கார்த்தாயினி அம்மாளிடம் புரட்சித் தலைவர் பணம் கொடுத்து ஆறுதல் கூறினார்.
புரட்சித் தலைவரை கார்த்தியாயனி அம்மாள் தெய்வமாக வணங்கியவர்.
கே.பி.ராமகிருஸ்ணன் அவர்களுக்கும் நமது திரி உறுப்பினர் கோவிந்தராஜ் அவர்களுக்கும் ஆழ்ந்த அனுதாபங்கள்.
கார்த்தியாயினி அம்மாள் அண்ணார் ஆத்துமா சாந்தி அடைய பிரார்த்தினை செய்கின்றேன்.
Daily thanthi - Puducherry edition
http://i64.tinypic.com/oruxx0.jpg
Daily thanthi - Puducherry edition
http://i64.tinypic.com/2ec1c29.jpg
தொலைக்காட்சிகளில் இன்று (12/07/2017) ஒளிபரப்பாகிய புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர்
திரைப்படங்கள் .
-------------------------------------------------------------------------------------------------------------------------------------
சன்லைப் - காலை 11 மணி - நவரத்தினம்
இரவு 7 மணி -நீதிக்கு தலை வணங்கு
வேந்தர் டிவி - பிற்பகல் 1மணி - தனிப்பிறவி
சென்னை பாலாஜியில் புரட்சி நடிகர் எம்.ஜி.ஆரின் "தாயை காத்த தனயன் " வெற்றிகரமான 2 வது வாரம் . நடைபெறுகிறது .நாளை (13/07/2017) 10 வது நாள்.
http://i67.tinypic.com/xf7n2u.jpg
இடையில் 4 நாட்கள் தியேட்டர்கள் வேலை நிறுத்தம் காரணமாக காட்சிகள் நடைபெறவில்லை .
சென்னை ஸ்ரீநிவாஸாவில் மக்கள் தலைவர் எம்.ஜி.ஆர். என்றும் "நினைத்ததை முடிப்பவன் " டிஜிட்டல் திரைப்படம் வெற்றிகரமான 2 வது வாரம் .
நாளை (13/07/2017) 10 வது நாள்.
இடையில் 4 நாட்கள் தியேட்டர்கள் வேலை நிறுத்தம் காரணமாக காட்சிகள் நடைபெறவில்லை .
http://i66.tinypic.com/34rahyq.jpg
மற்றும் அனகாபுத்தூர் அருண்மதி, பொன்னேரி வெற்றிவேல்முருகன்
இணைந்த 30வது நாள்.
http://i63.tinypic.com/4ndk2.jpg
சேலம் அலங்கார் அரங்கில் நேற்று (11/07/2017) முதல் மக்கள் தலைவர் எம்.ஜி.ஆர்.
"ஆயிரத்தில் ஒருவன் " தினசரி 4 காட்சிகள் நடைபெறுகிறது .
http://i67.tinypic.com/2myql1l.jpg
கடந்த 07/7/2017 முதல் நெல்லை பூர்ணகலா மற்றும் நாகர்கோவில் கார்த்திகை அரங்குகளில் தினசரி 4 காட்சிகளில் வெற்றி நடை போடுகிறது .
http://i67.tinypic.com/e7cm05.jpg
தினத்தந்தி -07/07/2017
http://i66.tinypic.com/2vmhxm9.jpg
ஆல்பட் அரங்க வளாகத்தில் மக்கள் தலைவர் எம்.ஜி.ஆர். மன்ற அமைப்புகள் வைத்துள்ள பேனர்கள் .
http://i66.tinypic.com/11gpt3t.jpg
ஆல்பட் அரங்கத்தில் உள்ள பேனர்
http://i65.tinypic.com/j7rk7l.jpg
தமிழ் திரையுலகில் வசூல் சக்கரவர்த்தியாக முதலிடத்தை தனது ஆளுமையால் தக்க வைத்துக்கொண்டு இந்த சாதனைகளும் இப்பூவுலகில் என்றுமே தகர்க்க முடியாத வகையில் நிகழ்த்திய ஒரே மனிதநேய மிக்க மாமனிதர் எம்.ஜி.ஆர்.
அவர்கள்.
http://i63.tinypic.com/xycsz.jpg