https://scontent.fmaa3-1.fna.fbcdn.n...4d&oe=5BE9DE7F
Printable View
அனைவருக்கும் வணக்கம் !
தனிப்பட்ட அலுவல் காரணமாக ஒரு மாதம்
இலங்கை சென்றிருந்ததால் இங்கு பதிவுகளை
மேற்கொள்ளமுடியவில்லை
மேற்கொண்டு பதிவுகள் அவ்வப்பொழுது தொடரும்...
https://scontent.fyyz1-1.fna.fbcdn.n...9f&oe=5BA0496C
நன்றி ந .தி சி விசிறிகள்
நாளை முதல் (13-07-2018)
உலகையே உலுக்கிய
மக்கள்தலைவரின் கர்ணன்
மதுரை சென்ட்ரல் திரையரங்கில்....
... துவண்டு கிடந்த கலையுலகையே தலைநிமிரச் செய்த காவயிம் கர்ணன்.
பல ஆண்டுகளுக்கு பிறகு குடும்பத்துடன், குழந்தைகளுடன்,
அதிக பெண்கள் கூட்டத்தையும்
தியேட்டருக்கு வரவழைத்த மாபெரும் வெற்றிக் காவியம் கர்ணன்.
தனது வசூல் புரட்சியை தொடர வந்து விட்டார்.... மதுரைக்கு
மதுரை சென்ட்ரல் தியேட்டரை அலங்கரிக்கப் போகும், அட்டகாசமான கர்ணன் சாதனை பேனர்
உங்கள் பார்வைக்கு...
https://scontent.fyto1-1.fna.fbcdn.n...UxMDUifQ%3D%3D
https://scontent.fyto1-1.fna.fbcdn.n...UxMDUifQ%3D%3D
சுந்தர்ராஜன்
இலங்கை சென்றிருந்த வேளை சிவாஜி ரசிக நண்பர் ஒருவரை
சந்திக்கும் சந்தர்ப்பம் கிடைத்தது அவர்மூலம் வேறு ஓர்
சிவாஜி ரசிகரை சந்திக்கும் சந்தர்ப்பம் கிட்டியது
அவர்மூலம் பல பொக்கிஷங்கள் கிடைத்தன
அந்த பொக்கிஷ பதிவுகள் இங்கே
முன்னர் பார்க்க தவறியவர்களுக்காக
பார்வைக்கு!
பதிவுகள் தொடரும்....
பதிவுகளின் தொடர்ச்சி........
நடிகர் திலகத்தின் மறைந்தபொழுது
முழுக்கிராம மக்களையும் சிவாஜி ரசிகர்களாக கொண்ட
சாந்தை என்னும் கிராம மக்களால் வெளியிடப்பட்ட
இதய அஞ்சலி நோட்டீஸ்
http://oi64.tinypic.com/28bd4hx.jpg
பதிவுகள் தொடரும்......
Sekar Parasuram to Nadigarthilagam fans1 July
நடிகர் திலகத்தின் புகழ் பெருமை சாதனைகளை உண்மையிலேயே பத்திரிக்கை, ஊடகங்கள் மறைத்து வருகின்றனவா?
பாருங்கள் சார், நடிகர் திலகம் பிறந்த நாளை அரசு விழாவாகக் கொண்...டாடப்படும் என்ற அறிவிப்பு வந்ததும் அந்தச் செய்திதானே பெரும்பாலான பத்திரிக்கைகள் பிரதான தலைப்புச் செய்தியாக போட்டிருந்தன, அப்புறமும் ஏன் ஊடகங்களை குறை சொல்லிக் கொண்டே இருக்கிறீர்கள்
இப்படி ஒரு கேள்வியை நெருங்கிய நண்பர் ஒருவர் கேட்டிருந்தார்,
அவர் நமது பதிவுகளை தொடர்ந்து பார்த்து வருகின்ற நடிகர் திலகம் மேல் பற்று கொண்டவரும் கூட,
அவரது கேள்வியின் காரணம் பெரும்பாலான பதிவுகளில் நாம் ஊடகங்களை சாடியே வருகின்றோம்,
நம்மை பொருத்த வரையில் பத்திரிக்கைகளை புரட்டினோமானால் ஏதாவது நடிகர் திலகம் பற்றிய செய்தி இருக்க வேண்டும், அல்லது நிகழ்கால திரைப்பட சாதனைகளை பற்றி குறிப்பிடும் போது நடிகர் திலகத்தின் சாதனைகளை குறிப்பிட வேண்டும் என்பதுவே,
ஆனால் ஊடகங்கள் அவ்வாறு செய்வதில்லை,
சமீபத்தில் நடிகர் திலகம் மணி மண்டபம் திறப்பு விழா, தற்போது அரசு விழா பற்றிய செய்திகளை முக்கியத்துவம் கொடுத்து வெளியிட்டது போல சிலை அகற்றம் செய்ததை வெளியிடவில்லை அந்த அநீதியைப் பற்றிய எந்தக் கட்டுரைகளையும் எழுதவில்லை அதற்கான நீட்சியும் இல்லை என்பது தான் அடிமட்ட சிவாஜி ரசிகனுக்கு இருக்கும் ஆதங்கம்,
அரசு தொடர்பான செய்தி என்றால் மட்டுமே வெளிவரும் போல,
பதிவின் நோக்கத்திற்கு வருகிறேன்
சமீபத்தில் ஊடகங்கள் மூடி மறைத்த இக்கால சந்ததியினர் தெரிந்து கொள்ள முடியாத அளவிற்கு வெளியிடப்பட்ட இரண்டு செய்திகளை முன் வைக்கிறேன்,
ஒன்று
தியாகச் செம்மல் கக்கன்ஜி அவர்களது பிறந்த நாள் முன்னிட்டு அனைத்து ஊடகங்களுமே செய்தி வெளியிட்டன, செய்தியில் அனைத்து ஊடகங்களுமே "கக்கன்ஜி அவர்கள் மதுரை அரசு பொது மருத்துவமனையில் பொது வார்டில் சிகிச்சை பெற்று வந்தார், அப்போதைய முதல்வர் எம்ஜிஆர் அவர்கள் அரசு வேலையாக மதுரை சுற்றுப் பயனம் வந்திருக்கையில் கக்கன்ஜி அவர்களை மருத்துவமனையில் சந்தித்து தனி வார்டிற்கு மாற்றினார்" என்ற சம்பவத்தை குறிப்பிட்டு எம்ஜிஆர் க்கு பெருமை சேர்த்தனர்,
எம்ஜிஆர் அவர்களது நல்லெண்ணத்தை பாராட்டுகிறோம், யாருக்கும் மாற்றுக் கருத்து இல்லை,
ஆனால் அவர் அன்றைய முதல்வர், ஒரு முதல்வர் செய்ய வேண்டிய கடமை தான் அது அதிலும் கக்கன்ஜி அவர்கள் சுதந்திர போராட்ட தியாகி, தற்போது மதுரை உயர்நீதிமன்றம் அதைத்தான் அறிவுறுத்தியது,
ஆனால்தனியொரு மனிதனாய் நடிகர் திலகம் செய்த உதவியையும் அந்தச் செய்தியில் சொல்வதில் ஊடகங்களுக்கு என்னப் பிரட்சனை?
நடிகர் திலகம் தனது சொந்த செலவில் சேலத்தில் நாடகத்தை நடத்தி அதில் வந்த மொத்தத் தொகையையும் கக்கன்ஜி அவர்களது மேம்பாட்டிற்காக அளித்தார்,
அந்தச் செயலைப் பாராட்டி நடிகர் திலகத்திற்கு பெருந்தலைவர் காமராஜர் அவர்கள் தங்கச் செயினை பரிசாக அளித்தார், அந்தச் செயினையும் அந்த மேடையிலேயே ஏலம் விட்டு அதில் வந்தத் தொகையையும் கக்கன்ஜி அவர்களது குடும்பத்திற்கு நேரிலேயே சென்று அளித்தார் நடிகர் திலகம்,
கடுகிற்கும் கடலிற்கும் உள்ள வித்தியாசம் ஊடகங்களுக்கு தெரியாமல் போனது ஏன்?
இரண்டு
சமீபத்தில் பாடலாசிரியர் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் அவர்களது பிறந்த நாள் முன்னிட்டு வெளியிடப்பட்ட செய்தியில் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் அவர்கள் நடிகர் திலகம் திரைப்படங்களுக்கு பாடல்களே எழுதாது போலவே செய்தியை முடித்தனர்,
எம்ஜிஆர் க்கு எழுதிய பாடல்களை மட்டுமே இசைககவிட்டு முழுப் பூசனிக்காயை சோற்றில் மறைத்தக் கதையாய் மறைத்தனர்,
ஊடகங்கள் உண்மையான தகவல்களை இக்காலத் தலைமுறையினர் அறிந்த கொள்ள உதவிடுங்கள் என்பது தான் எங்களது விருப்பம்.
https://scontent.fyto1-1.fna.fbcdn.n...EzMTcifQ%3D%3D
.................................................. ...........................
Bagavandoss Tr பச்சை தமிழர் என்ற ஒரு காரணம் போதாதா இருட்டடிப்பு செய்ய?
......
Gopala Krishna Pilla
ஊடகங்கள் கையடி வாங்கும் ஏழனமான செய்திகள் தரவும் தனக்கு அரசின் லாபம் கிடைக்கவும் செய்திகளை வெளியிடுகிறார்கள். உண்மையான டப்பாங்கூத்து படங்களை விலகி குடும்ப படங்களை வரவேற்கும் இளைஞர் கூட்டம் வராமல் தமிழும் கலை உலகமும் தமிழ்ச்சமூகமும் முன்னேறாது.தமிழ் தமிழ் எதுக்கெடுத்தாலும் தமிழ் ஊமிழன் என்று கூறும் தமிழனுக்கு எப்படி இன்றைய திரைப்பாடல்கள் படம் இவற்றை வயவேற்க மனம் வருகிறது..புரியாமல் அல்ல.சிந்திக்காமல் இருப்பதுதான் காரணம்
.........
Nirmal Sasi
ஊடகங்கள் நம் தலைவர் சிவாஜி அவர்களை மாபெரும் உலக நடிகர் என்று தான் எழுது கின்றனர், சொல்கின்றனர், அது நாளைக்கு பிறக்கப் போகும் குழந்தைகளுக்கும் தெரியும், ஆனால் அவருடைய நற்பண்புகள், திரையுலகில் அவருடைய ஆளூமை, அவருடைய மக்கள் செல்வாக்கு, அவரின் படங்கள் செய்த வசூல் சாதனை,75சதவீதம் திரையுலகம் அவரை நம்பியே இருந்தது, பிறருக்கு உதவிகள் செய்தது, துரோகங்கள் செய்யாதது, சொந்த காசில் செய்த தான தர்மங்கள், பிரதிப் பலன் பாராது வள்ளல் தன்மைப் போன்றவற்றை ஏனோ வேண்டுமென்றெ தவிர்க்கின்றனர் மறைக்கின்றன,
...........
Vijiya Raj Kumar
7th சேனல் ஓரளவுக்கு உண்மையை சொன்னார்கள் ,எம் ஜி ஆரின் தனி வார்டுக்கு மாற்றும் யோசனையை கக்கன் அவர்கள் மறுத்துவிட்டார்கள் என்றும் சிவாஜி நாடகம் நடத்தி அதில் வசூல ஆன முழுத்தொகை கொடுத்ததை மறைத்துவிட்டு யாரோ அவருக்கு கொடுத்த தங்க செயினை ஏலம் விட்டு அந்த தொகையை வங்கியில் deposit செய்து மதம் ஒரு தொகை கக்கன் அவர்களுக்கு உதவி செய்தார் என்று ,முழு உண்மையை சொன்னால் நல்ல பேர் கிடைக்கும் என்று நினைத்தார்களோ என்னவோ .அரசு மருத்துவமனை நிகழ்வை ஒரு தடவை ஜான் சகோ பதிவாக போட்டு இருந்தார் ,கேட்க வேண்டுமா ஆஹா ஓஹோதான் அப்போது நானும் பதில் எழுதினேன் என்ன எழுதினேன் என்று நினைவு இல்லை என்ன பதில் எழுதியிருப்பேன் என்று உங்களுக்கு தெரியும்
.................
Natarajan Ponnisamy
பரந்தமனப்பான்மையுள்ளவர்கள் செய்த உதவியை வெளியில் சொல்லிக்காட்டமாட்டார்கள். அவர்களில் சிவாஜிகணேசன் அவர்களும் ஒன்று. மாசற்ற மாணிக்கம் சிவாஜி அவர்கள். அதனால்தான் மாற்றாரும் மதிக்கின்றனர். பட்டங்கள் அவரை தேடி வரும்.. பாரத ரத்னா விருது அவர்களை தேடி வரும் அதிக தொலைவில் இவ்லை. சிவாஜிகணேசன் பிறந்த நாளை வருடந்தோறும் அரசு விழாவாக அறிவித்த தமிழக அரசுக்கு நன்றி.
.................
கர்ம வீரர் புகழ் வாழ்க.
https://scontent.fyto1-1.fna.fbcdn.n...c1MTAifQ%3D%3D
திருச்சியை கலக்க வருகிறார் கலைக்கடவுள்
https://scontent.fyyz1-1.fna.fbcdn.n...75&oe=5BDC9894
நடிகர் திலகத்தின் நினைவு நாளை முன்னிட்டு வரும் 20/7/18 முதல் தினசரி இரண்டு காட்சிகளாக மேட்னி, மாலை காட்சி களாக சென்னை அகஸ்தியா திரையரங்கில் திரையிடப்படுகிறது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறோம்.. தவறாமல் அனைவரும் கண்டு களியுங்கள்
https://scontent.fyyz1-1.fna.fbcdn.n...6b&oe=5BE19394
K S Narasimhan
மீண்டும் கலையுலக ராஜாவின் வெற்றி பவனி!
20:07:2018 முதல்....
சென்னை அகஸ்தியாவில் பிற்பகல்
03:00 மணி, மாலை 06:30 மணி காட்சிகளில்...
திரளாக திரள்வோம் தோழர்களே!
https://scontent.fyyz1-1.fna.fbcdn.n...20&oe=5BD5C017
nilaa