http://oi66.tinypic.com/2nuan4.jpg
Printable View
மறுவெளியீடுகளில் படங்கள் வாரக் கணக்கில் ஓடுவதென்பது நடிகர்திலகத்துக்கு அவர் இருந்த காலந்தொட்டே சர்வ சாதாரணம்.
சமீப காலங்களில் டிஜிட்டலில் வடிவமைக்கப்பட்ட கர்ணன், ராஜபார்ட் ரங்கதுரை, சிவகாமியின் செல்வன் போன்ற படங்கள் நூறு நாட்களை வெற்றிகரமாக எட்டியது அனைவரும் அறிந்ததே.
தற்போது வெளியாகி இருக்கும் டிஜிட்டல் மாளிகை கடந்த மூன்று வாரங்களில் வெளியான புதிய படங்களின் வசூலைக் காட்டிலும் அதிகம் என்பது வரலாற்றுப் பதிவு.
இது ஏதோ நடிகர்திலகத்தின் படங்கள் சமீபகாலத்தில்தான...் இப்படியெல்லாம் ஓடுகிறதென்று யாரும் எண்ணிவிடக் கூடாது.
1993ல் இதே வசந்தமாளிகை மறுவெளியீடு செய்யப்பட்டபோது இணைந்து 140 வாரங்களுக்கும் மேல் ஓடியுள்ளது.
1990 ல் வெளியான ராஜா திரைப்படம் சென்னை செங்கல்பட்டு பகுதிகளில் இணைந்து இருபத்தைந்து வாரங்களுக்குமேல் ஓடியது. அதே காலக்கட்டத்தில் தெய்வமகனும் இணைந்து நூறுநாட்களை எட்டியது.
1984 ஆம் ஆண்டின் இறுதியில் வெளியான வீரபாண்டிய கட்டபொம்மன் தமிழகமெங்கும் இணைந்து 100 வாரங்களுக்குமேல் ஓடியது.
1977 ல் வெளியான கப்பலோட்டிய தமிழன் சென்னையில் மட்டுமே இணைந்து வெள்ளிவிழா ஓடி வரலாறு படைத்தது.
அதேப்போல், 1969 ஆம் ஆண்டு ஜனவரி இறுதியில் நடிகர்திலகத்தின் படங்கள் வழக்கமாக வெளியிடும் சாந்தி, கிரவுன், புவனேஸ்வரி அரங்குகளில் வெளியான தங்கப்பதுமை திரைப்படம் அனைத்து அரங்குகளிலும் நான்கு வாரங்கள் ஓடியது. தங்கசுரங்கம் படம் வெளியான காரணத்தை முன்னிட்டு மூன்று அரங்குகளிலும் எடுக்கப்பட்டது. இல்லையெனில், அப்போதே அந்தப்படம் மறு வெளியீட்டில்நூறு நாட்களை எட்டியிருக்கும். ஆனாலும், அந்தப்படம் சென்னையில் இணைந்து வெள்ளிவிழா ஓடியது குறிப்பிடத்தக்கது.
1968 ல் மறு வெளியீடு செய்யப்பட்ட பராசக்தி அப்போதே இணைந்து நூறு நாட்களை க் கடந்து வெள்ளிவிழா ஓடியிருக்கிறது.
இதெல்லாம் மறுபடியும் இங்கே நினைவூட்டக் காரணம்...மறுவெளியீட்டில் படங்கள் வெற்றிமுரசு கொட்டுவதென்பது நடிகர்திலகத்துக்கு கருப்பு வெள்ளை படச்சுருள் காலத்திலிருந்து இன்றைய டிஜிட்டல் யுகம் வரை சர்வசாதாரணம்.
இன்னும் சிலபல வருடங்கள் கடந்தாலும் இந்த சாதனை அவரின் படங்களுக்குத் தொடரும்.
ஆனால், மற்றவர்களுக்கு?
http://oi68.tinypic.com/2cf4krn.jpghttp://oi68.tinypic.com/2je4ghy.jpghttp://oi66.tinypic.com/300xmqc.jpghttp://oi65.tinypic.com/2m43ssz.jpghttp://oi66.tinypic.com/2vl7b7o.jpghttp://oi64.tinypic.com/2cpzs08.jpg
http://oi66.tinypic.com/8wb0vr.jpg
நன்றி வான்நிலா
உண்மைதான்!
காதலின் கண்ணியத்தை மட்டுமல்ல...
உழவர்களின் துயரத்தையும்
விவசாயத்தின் மேன்மையையும்
பறைச்சாற்றிய படம்தான்...
#வசந்தமாளிகை
http://oi68.tinypic.com/ibx6iq.jpg
நன்றி வான்நிலா
வசந்த மாளிகை ...
கடந்த வாரம் வெளியாகி தமிழகமெங்கும் நல்ல வரவேற்பை பெற்று கொண்டு இருக்கின்ற நிலையில் (பல வருடங்களுக்கு பிறகு திரையரங்கில்) நேற்றுதான் பார்க்க முடிந்தது ...
பிரமிப்பு இன்னும் குறையவில்லை ...
இன்று மதியம் மீண்டும் யூடியூப்பில் பாடல் காட்சிகளையும் மற்றும் சில காட்சிகளையும் பார்த்து ரசித்தேன் ...
தற்போதைய திரைப்படங்கள் ஏதேனும் பார்த்து வெளியே வரும் போது ஒரு விதமான அயற்சி ஏற்படும் ......
ஆனால் நேற்று இரவில் (1.45மணி) படம் முடிந்து ஊருக்கு திரும்பிய போது ஒரு மணி நேரமும் படத்தை பற்றி மகிழ்வுடன் பேசிக்கொண்டும் , திரையில் வராத ஒரு பாடலை கேட்டு கொண்டும் வந்தது மன நிறைவாக இருந்தது ...
ஏற்கனவே ஏறக்குறைய 15 முறைகள் பார்த்திருந்தாலும் , வசனங்கள் மனப்பாடமாக இருந்தாலும் , புதிய படத்தை பார்ப்பது போல ஆர்வத்துடன் திரையரங்கில் இருந்த அனைவரும் பார்த்தது உண்மையிலேயே மிக ஆச்சரியமாக இருந்தது ...
நடிகர் திலகத்தின் தோற்றம் , தோரணை , அசைவுகள் , உடல் மொழி , நடிப்பு , நடனம் , ஸ்டைல் அனைத்தும் அற்புதம் ...
இசையும் பாடல்களும் அருமை ...
மொத்தத்தில் வெகுநாட்களுக்கு பின் ஒரு நல்ல திரைப்படம் பார்த்த திருப்தி ...
ஸ்டைல் மன்னரின் துள்ளல் ஆட்டம் கொண்ட இப்பாடல் மீண்டும் ...
https://external.fyyz1-1.fna.fbcdn.n...CglLOLxWp7-205
About This Website
youtube.com
Oru Kinnathai Video Song | Vasantha Maaligai Movie | Sivaji Ganesan | Vanisri | HD
நன்றி கருணாகரன் ஆனந்த்
வசந்த மாளிகை வந்தது,
வாரம் முழுதும் அரங்கு நிறைந்தது,
இடையே புதுப் படங்களை திரையிட்டே ஆக வேண்டும்,
புதுப்படங்களையும் திரையிட அரங்கு காலியாக,
... மீண்டும் வசந்த மாளிகையே வா, திரையரங்குகளை ஆக்கிரமித்துக் கொள்,
திரையுலக விந்தை,
அதை நடிகர் திலகம் அன்றி யாரேனும் உண்டோ?
நீல வானில் ஒரே சூரியன்,
திரை வானில் ஒரே நடிகர் திலகம்
சிவாஜி
சிவாஜி
எங்களுக்குத் தான் எத்தனை இன்பமது,
அழகாபுரி ஜமீன்தாரே எங்கள் சின்ன துரையே
ஆயிரம் இருக்கைகள் கொண்ட ஆல்பட் உன் ஆட்டத்தை பொறுக்க முடியாது
மினி ஆல்பட்டில் அடக்க பார்த்தனரே
முடியுமா? அது
இதோ இன்று மீண்டும் ஆல்பட் இடம் கொடுத்து விட்டது உனது ஆட்டத்தை காண
அதில் நான் சக்கரவர்த்தியடா!!
http://oi66.tinypic.com/mjbmz9.jpg
Thanks Sekar
மக்கள்தலைவரின் அன்பு இதயங்களே,
வரலாறு காணாத வெற்றி...
சிலருக்கு வயிற்றெரிச்சலை கொடுத்திருக்கிறது. இன்று மட்டுமல்ல,
அன்று முதலே இதுதான் நடைமுறை.
... நடிகர்திலகத்தின் பல சாதனைகள்
திட்டமிட்டே மறைக்கப்பட்டுள்ளன.
ஆனால்,
இன்று அது நடக்காது....
நடக்கவும் விட மாட்டார்கள்
நமது நடிகர்திலகத்தின் நெட்டிசன்கள்.
ஆம், உடனடியாக பதில் ஆதாரத்துடன் கொடுத்து அசர வைக்கின்றனர். இரண்டு நாட்களுக்கு முன் வசந்தமாளிகைக்கு போட்டியாக ஓடாத ஒரு படத்தை போட்டு போட்டோஷாப்பில் டிசைன் செய்து ஓடியதாக பதிவிட்டிருந்தனர்.
நடிகர்திலகத்தின் இதயங்களோ, வறுத்து எடுத்து விட்டனர். அவர்கள் துண்டைக் காணோம், துணியைக் காணோம் என்று ஓடிவிட்டனர்.
கலையுலகில் சாதனை என்றால் அது சிவாஜி ஒருவரால் தான் முடியும்....
வேறு எந்த கொம்பனாலும் முடியாது...
முதல் வாரம் மிட்லாண்ட் தியேட்டரில் மாபெரும் விழா எடுத்து, இனிப்பு வழங்கப்பட்டது,
அதன் தொடர்ச்சியாக....
வசந்தமாளிகையின் இரண்டாவது வார வெற்றிவிழாவை முன்னிட்டு சிவாஜி காமராஜ் கல்வி அறக்கட்டளை சார்பில், மதுரை அண்ணாமலை திரையரங்கில் இன்று ( 30.06.2019 ஞாயிறு ) மாலைக் காட்சியில் இனிப்பு வழங்கப்படுகிறது.
http://oi68.tinypic.com/2hs7uqe.jpg
Thanks Sundar Rajan
எதிரிகளை கலங்க வைத்த வசந்த மாளிகையின் அதிரடி ஆட்டம் இந்த வாரமும் தொடர்கிறது
வசந்த மாளிகை யின் சுனாமி வெற்றி 2வது வாரமும் தொடர்கிறது --இன்று 30.06.19ஞாயிறு மாலை காட்சி சென்னை--சத்யம், ஆல்பர்ட், வடபழனி --பாலாஸ்ஸோ; மதுரை--அண்ணாமலை; தூத்துக்குடி-மினிராஜ்; திண்டுக்கல்--கார்னிவல்; அரங்குகளில் ஹவுஸ்புல் --மக்களின் படையெடுப்பு நாளுக்குநாள் அதிகரித்து கொண்டே இருக்கிறது --எதிரிகள் புலம்பினாலும் ஒன்றும் செய்ய முடியாது --ஏனென்றால் உங்கள் நடிகரின் கோமாளி நடிப்பு இந்த தலைமுறையிடம் எடுபடாது--2012ல் கர்ணனை கண்டோம் கோடி புண்ணியம் அடைந்தோம் -2019ல் வசந்த மாளிகையில் எங்கள் ஜமீன்தாரின் ஆட்டத்தை கண்டு பரவசமடைகிறோம்
https://scontent.fyyz1-1.fna.fbcdn.n...b9&oe=5D7D3C17
நன்றி டிஜிட்டல் சக்கரவர்த்தி சிவாஜி பக்தர்கள்
சிவாஜியின் வசந்தமாளிகை திரைப்படத்துக்கு இவ்வளவு பெரிய வரவேற்பு கிடைக்கும் என்று கருதவில்லை.
எங்கள் திரையரங்குகளில் பல புதிய திரைப்படங்கள் சமீபத்தில் வெளியாகின.... ஆனால், அந்தப் படங்களை காட்டிலும், வசந்தமாளிகை அதிக வசூலைக் குவித்துள்ளது.
பெண்கள், குழந்தைகளை அழைத்துக்கொண்டு குடும்பத்துடன் வருகிறார்கள் - திருப்பூர் கஜலட்சுமி திரையரங்க ஆபரேட்டர் எம்.இளங்கோ.
https://scontent.fyyz1-1.fna.fbcdn.n...fc&oe=5D862C13
நன்றி Subbiah
வசந்தமாளிகையை கொண்டாடும் சிவாஜி ரசிகர்கள்!
புதிய படங்களுக்கே பகல் காட்சிகளுக்கு ஆட்கள் வராத சூழலில், திருப்பூரில் திரையரங்க வாயிலில் காலைக் காட்சி முடியும்முன்பே, பகல் காட்சிக்கு டிக்கெட் வாங்க கூட்டம் கூடுகிறதாம்.
இதெல்லாம் எந்தப் படத்துக்காக? டிஜிட்டல் பிரிண்டில் வெளியாகி வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் 'வசந்த மாளிகை' திரையரங்க வாசல்களில் தான் இந்த திருவிழாக்கோலமாம்.
https://scontent.fyyz1-1.fna.fbcdn.n...fc&oe=5D862C13
நன்றி Subbiah
திருப்பூர் கஜலட்சுமி , அனுப்பர் பாளையம் கலைவாணி, பாளையக்காடு கேஎஸ், பாரப்பாளையம் எம்பிஎஸ் என திருப்பூரில் மட்டும் 4 திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது வசந்தமாளிகை திரைப்படம்.
நான்கு திரையரங்குகளிலும் சிவாஜி ரசிகர்களும், பெண்களும் படம் பார்க்கத் திரள்கிறார்கள். பெண்களும், இளைஞர்களும் அதிக அளவில் வருவதாக மகிழ்ச்சி தெரிவிக்கின்றனர் சிவாஜி ரசிகர்கள். நான்கு திரையரங்குகளிலும் சேர்த்து தினமும் 16 காட்சிகளுக்கு ரசிகர்கள் குவிகின்றனர். சமீபத்தில் வெளியான புதுப்படங்களை கடந்து, நல்ல வசூல் இருப்பதாக மகிழ்கின்றனர் விநியோகஸ்தர்கள்.
"கடந்த 20 ஆண்டுகளாக திரையரங்கு பக்கமே வராதவர்களைக்கூட, திரையரங்குக்கு வர வைத்துள்ளது வசந்தமாளிகை திரைப்படம்"
http://oi68.tinypic.com/21ovndi.jpg
நன்றி Subbiah
ஹிந்தி நட்சத்திரப் பட்டாளமே, சிவாஜியின் அபிமானிகள்....
ராஜ்கபூர் தொட்டு, தேவ் ஆனந்த், ( இவர்கள் இருவரும் அங்கே, ஆல்ரவுன்டர்கள்) மற்றும், குணச்சித்திர நடிகர் பிரான், பிரித்திவி ராஜ், ராஜேஷ் கன்னா, சசிகபூர்,ஷம்மிகபூர்,அசோக் குமார், சஞ்சீவ் குமார், விஜய் அராரோ என பட்டியல் நீள்கிறது.....
ஒரு முறை " தி இல்லஸ்ட்ரேட்டர் வீக்லி " எனும், மும்பையிலிருந்து வெளிவரும், வாரப் பத்திரிகையின் சார்பில், ஏற்பாடான, சிவாஜி நாடக மன்றத்தின் சார்பாக, "வியட்நாம் வீடு" நாடகம் சண்முகானந்தா அரங்கி...ல் நடைபெற்றது...
அனைத்து ஹிந்தி நட்சத்திரப் பட்டாளமும் அங்கே ஆஜர்....
கூட்டம் கட்டுக்கடங்காமல், காவல்துறை மூலம் ஒழுங்குபடுத்தியும் ஓரளவுக்கு தான் சமாளிக்க முடிந்தது...
மும்பை வாழ்மக்கள், நடிகர் திலகத்தின் மீது, அளவுகடந்த பாசம் கொண்டவர்கள்...
காரணம், சத்ரபதி சிவாஜியின் சாயலில், கணக்கச்சிதமாக பொருந்தி நடிக்கும் ஆற்றலில், நடிகர் திலகத்தை எவரும் மிஞ்சிட பிறந்திட வில்லை..
இனியும் பிறக்கப் போவதுமில்லை... எனும் கண்ணோட்டத்தில், மக்களும், திரைப் பட ஜாம்பவான்கள்களும் தெளிவான கருத்தில் அவரை அங்கு கொண்டாடுகின்றனர்...
நாடகத்தின் இறுதி வரை, ( தமிழ் அவ்வளவாக புரியாமல் இருந்தாலும் )
சிவாஜியின் உருக்கமான அங்க அசைவுகள், கதையின் சூழல் இவைகளை தனது உருக்கமான நடிப்பில் மயங்கி, அவர்களை உலுக்கிக் கட்டிப் போட்டு விட்டது என்றுதான் சொல்ல வேண்டும்.....
தாதா சாஹேப் பால்கே விருதினைப் பெற்ற, பிரான் அவர்கள், கண் கலங்க சிவாஜியின் ஓரத்தில் கூட நிற்க முடியாத அளவுக்கு, என்னை பிரம்மிக்க வைத்து, என்னுள் நிரந்தரமாக கலந்து விட்டவர், சிவாஜி... என புகழாரம் சூட்டி மகிழ்ந்தார்...
உடனிருந்த சக கலைஞர்களும், அதை ஆமோதிதித்தனர்....
சிவாஜியவாதிகளுக்கு, இனிய காலை வணக்கம் நட்புகளே....
நன்றி நிர்மல் தியாகராஜன்