-
சந்தரோதயம் படத்தில் வரும்
புத்தன் ஏசு காந்தி பிறந்தது
என்ற பாடல் படமாக்க பட்ட போது
தேவைப்பட்டது ..
ஒரு ஆட்டுக்குட்டி ...
25 துணை நடிகர்கள். ..
10 குழந்தைகள். ....
50 அண்டாக்களில் நிரப்பப்பட்ட தண்ணீர்.
தலைவர் ஸ்டுடியோவுக்குள் வந்ததும்
முதலில் கவனித்தது குழந்தைகளை. ..
பின்னர் பாடல் காட்சி படமாக்கப்படுவதற்கு
முன் குழந்தைகள் நனையும் காட்சி
என்பதால் தண்ணீரை தொட்டுப்பார்த்தார்
தண்ணீர் சில்லென்று இருந்ததால்
அது குழந்தைகளுக்கு ஒத்து வராது
என்பதால் சுடு தண்ணீரில் படப்பிடிப்பு
நடத்த உத்தரவிட்டார். ...
தயாரிப்பாளர் ..தண்ணீரை சுட வைத்து
படப்பிடிப்பு நடக்க சிறிது நேரம் ஆகும்
என்றார். ...தலைவர் சரியென்றார்....
பொன்மனச்செம்மல் ...குழந்தைகள்
பசியோடு இருக்கக்கூடாது என்று
உடனே தனது சொந்த பணத்தில்
பால் மற்றும் சக துணை நடிக நடிகர்களுக்கு உணவு வழங்க ஏற்பாடு
செய்தார். ....
நண்பர்களே நீங்கள் நன்றாக பாடலை
பார்த்தால் குழந்தைகள் வயிறு
நிரம்பி இருப்பதை பார்க்கலாம். ....
பாடல் படப்பிடிப்பு தொடங்கியது...
ஆட்டுக்குட்டியை தலைவர் தூக்கி
பாட ஆரம்பிக்க வேண்டும். ...
ஆடுக்குட்டி மிரண்டு ஓடியது. ...
மீண்டும் மீண்டும் காட்சி படமாக்கப்பட்டது. ...
குழந்தைகள் நனைந்து நின்றுக்கொண்டு
இருந்தனர்.....
தலைவர் உடனே ஆட்டுக்குட்டியின்
காலை கட்ட சொன்னார் நனைந்த சின்ன
குழந்தைகளுக்கு தொப்பி அணிய சொல்லி மீண்டும் படப்பிடிப்பை
ஆரம்பித்தார். ....
நண்பர்களே நாம் அனைவரும்
இந்த பாடலை ஆயிரக்கணக்கான
முறை பார்த்து கேட்டு ரசித்திருப்போம்
ஆனால் இந்த பாடல் எடுக்கப்பட்டதற்கு
பின்னால் இருக்கும் அந்த மனித நேயத்தை என்னவென்று சொல்லுவது....
நாம் வாழ்ந்த காலத்தில் இப்படி ஒரு
பாசமிக்க தலைவரை இறைவன்
நமக்கு அளித்தார் என்று பெருமிதம்
கொள்வோம்..........
அருமை நண்பர்கள் அனைவருக்கும்
பிற்பகல் வணக்கம். ................ Thanks.........
-
-
-
-
-
"அன்னமிட்ட கை " காவியத்தில் வாத்தியார் கூறும் கருத்துக்களுடன் பதிவை தொடர்கிறேன் ..
1.வெள்ளத்துக்கு அனை போடலாம் ஆனால் உள்ளத்தோடு பாசத்துக்கு அணை போட முடியாது ..
2 .ஊதுபத்திக்குப் பக்கத்தில் சிகரெட் இருக்க கூடாது. பாத்ரூம் பக்கத்தில் பூஜை அறை இருக்க கூடாது.
3. நல்லதைச் சொல்றவன்தான் நண்பனாக இருக்க முடியும்.
4. வீட்டுப் பாதுகாப்புக்கு பூட்டு போடற மாதிரி ஒமுக்கத்துக்கும் பாதுகாப்பு கொடுக்கனும்.
5. அவமானம் படுத்துவது வேறு அறிவுரை கூறுவது வேறு. இரண்டையும் ஒன்றாக நினைக்க கூடாது.
6. உடையை மட்டும் மாற்றினால் போதாது. உள்ளத்தையும் மாற்றியாகனும். அதற்கு அன்பு காட்டனும் அடுத்தங்களை மதிக்கனும்.
7..ஆடம்பரமாக அவியலும் பொறியலும் போட வேண்டாம். பாசத்தோடு பழைய சோறு போட்டா போதும் ..
8. .ஏமாற்ற நினைக்கறவங்கத்தான் அடிக்கடி இடத்தை மாற்றுவாங்க.
9. மதிப்பும் மரியாதையும் வேண்டும் என்றால் அன்பு காட்டனும் அதிகாரம் காட்டக் கூடாது.
10. வீட்டைக் பாதுக்காத்தான் நாயை வளர்க்கறாங்க அது வெறி பிடித்து அலைந்தா நாயை குறை கூற மாட்டாங்க வளர்த்தவங்கத்தான் குறை சொல்வாங்க.
11. சமுதாயத்தில் ஜாதி மதம் பார்க்காமல் எல்லோருடையை கையே தொட்டுப் பார்த்து நோயை தீர்ப்பவங்க டாக்டர்தான் ..
12 இதயத்தை சத்திரமாக வைத்தால் எல்லோரும் தங்குவாங்க அதே நேரத்தில் பத்திரமாகவும் இருக்கனும்.
13. ரத்த வெறிக்கொண்ட புலிக்கிட்ட தற்புகழ்ச்சி பற்றி பேசினால் அது கேட்காது. அழிவில்தான் நியாயம் என்று பேசினவங்க கிட்ட அன்பைப் பற்றி பேசினால் கேட்க மாட்டாங்க.
14 ஒரு முறை கேட்டு நியாயம் கிடைக்கலைன்னா மறு முறை வேறு வழியில் முயற்சி பண்ணனும்.
15 மரத்திலே ஏறி தவறி விழுந்துட்டாங்கன்னா அதற்காக மரத்தை வெட்ட மாட்டாங்க ஏறின விதம் தவறு என்றுத்தான் நினைப்பாங்க.
16. இன்னார்கிட்ட இன்னார் பற்றித்தான் பேசனும் என்கிற விதிமுறை இருக்கிறது.
17. டாக்டர் எக்ஸ்ரே எடுத்தா இதயத்தைத்தான் பார்ப்பாங்க அதில் உள்ள எண்ணங்களை பார்க்க முடியாது.
18. செடிக்கிட்ட மலர் கைமாறு எதிர்ப்பார்க்காது பிள்ளைக்கிட்ட தந்தை கைமாறு எதிர்ப்பார்க்கக்கூடாது.
19. எதிரியை யாராலும் கண்டுபிடிக்கப் முடியாது. உண்மையே யாராலும் அழிக்கவும் முடியாது.
20 அனாதைகள் மேல் யாராவது அக்கறைப்பட்டுத்தான் ஆகனும். உண்மையே பலமாக பேசும் போது மிரட்டுகிற மாதிரித்தான் இருக்கும்.
21.எந்த தாய்மீதும் யாரும் பாசம் காட்டலாம் தவறைக் மன்னிக்கிற ஒரே தெய்வம் பெற்றத்தாய்தான்
பின்குறிப்பு ..15- 09- 1972. ஆண்டு அண்ணா பிறந்தநாள் முன்னிட்டு வெளியிடபட்டது. (தலைவரின் கடைசி கறுப்பு & வெள்ளை காவியம்) படத்திற்கு வசனம் எழுதியவர் .A .L. நாரயணன்
அடுத்த பதிவு வள்ளல் புகழ் தொடரும்... Thanks......
-
நாளை முதல்
கோவை
சண்முகாவில்
நினைத்ததை முடிப்பவன்
-
இன்று முதல் (14/02/20) மூலக்கடை* ஐயப்பாவில் மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். திரையுலகின் "கலங்கரை விளக்கம் " தினசரி 3 காட்சிகள் நடைபெறுகிறது .
-
குமுதம் வார இதழ் -19/02/20
-----------------------------------------------
உங்க எம்.ஜி.ஆர். எப்படி இருக்கார் ? -பூவாளி - ஆர்.சி.சம்பத்*
--------------------------------------------------------------------------------------------------
தி.மு.க. விலிருந்து எம்.ஜி.ஆர். திடுதிப்பென்று நீக்கப்பட்டுவிட்டார் .தமிழகமே பரபரப்பாகிவிட்டது* பூதாகரமான இப்பிரச்னையில் தலையிட்டு என்னால் தீர்வு காணமுடியுமா தெரியவில்லை .* ஆனாலும் அசட்டு துணிச்சலுடன் கலைஞர் வீட்டுக்கு போனேன் .* அங்கே கொந்தளிப்பான சூழ்நிலை .
அமைச்சர்கள் பலர் வந்திருந்தனர் ,* மாடியில் அவர்களோடு கலந்து பேசிக் கொண்டிருந்தார் கலைஞர் . அவரது உதவியாளர் என்னிடம் நீங்கள் அவரை நாளை சந்திக்கலாமே என்றார் .* நான் ஒரு சிறு காகிதத்தில் மிக முக்கியம் , மா . லட்சுமணன் என்று எழுதி , இதை* முதல்வரிடம்**கொடுங்கள் .அவர் அழைத்தால்*சந்திக்கிறேன் என்றேன் .* *காகிதத்தை பார்த்ததும் கலைஞர் என்னை உடனே அழைத்தார் .* எம்.ஜி.ஆர். விஷயமாகத்தான் வந்திருக்கிறேன் என்பதை புரிந்து கொண்டார் .* அறிஞர் அண்ணா பாடுபட்டு வளர்த்த கழகம் அழிவதா ? என்று கேட்டேன் .**
இதை எம்.ஜி.ஆரிடம் கேட்கலாமே . அவர் உங்களுக்கு வேண்டியவராயிற்றே என்றார் முதல்வர் . கேட்கத்தான் போகிறேன் .* முதலில் உங்களை சந்திக்கத்தான் இங்கு வந்தேன் என்று கூறினேன் .
எம்.ஜி.ஆர். கூறும் குற்றச்சாட்டுக்கள் ஒருதலைப்பட்சமானவை .ஆதாரமற்றவை .* எந்த நிலையையும் சந்திக்க தயாராக இருக்கிறேன் என்றார் முதல்வர் .
எம்.ஜி .ஆரை பார்த்து பேசிவிட்டு உங்களிடம் வருகிறேன் என்று கூறிவிட்டு* புறப்பட்டேன் .* எம்.ஜி.ஆருக்கு போன் செய்து கலைஞரை சந்தித்த விவரத்தை சொன்னேன் .* சத்யா ஸ்டுடியோவில் நேற்று இன்று நாளை படப்பிடிப்பு உள்ளது . நாளை காலை 10மணியளவில் அங்கே வாருங்கள் என்றார்.* ஸ்டுடியோவுக்கு போனேன் .**
மேக்கப் ரூமிற்கு சென்றேன் .* மேக்கப் மீனை வெளியே அனுப்பிவிட்டு கதவை தாழிட்ட எம்.ஜி.ஆர். பிறகு என்னிடம் என் வீட்டில் நடந்த வருமான வரி சோதனையில் ஆளும் கட்சிக்கு* பங்கு இருக்கிறது .* ஆனால் இல்லை என்கின்றனர் .* மதுரை மாநாட்டில் நான் ஒதுக்கப்பட்டேன் .* புறக்கணிக்கப்பட்டேன் .* ஒரு நடிகையை* படத்தில் நடிக்க ஒப்பந்தம் செய்திருந்தேன் .* அவர் மேஜரில்லை . மைனர் .* அதனால் ஒப்பந்தம் செல்லாது என பிரித்த செயல் யாருடையது .* என்றெல்லாம் கேட்டு 50 நிமிடம் தன் மனதில் உள்ளதையெல்லாம் கொட்டி தீர்த்தார் .**
அதன்பின் எம்.ஜி..ஆர். தனிக்கட்சி துவங்கி ஆட்சி யை பிடித்தார் .* அவரை சந்திக்க போனேன்* * அங்கிருந்த எஸ்.டி.சோமசுந்தரம், நாஞ்சில் மனோகரனிடம் இவர் கருணாநிதிக்கு ரொம்ப வேண்டியவர்* என்று கூறி அறிமுகப்படுத்தினார் .பின் ஒருமுறை கருணாநிதியை சந்திக்க போனேன்* உங்கள் எம்.ஜி.ஆர். எப்படி இருக்கிறார் என்று கேட்டார் . என் நிலையை எண்ணி நொந்து கொண்டேன் .
திரையுலக* நினைவுகள் என்ற நூலில் திரைப்பட உதவி இயக்குனர் மற்றும் வசனகர்த்தா* திரு. மா. லட்சுமணன்*
-
குங்குமம் வார இதழ் -21/02/20
-------------------------------------------------
அன்பே வா -
---------------------
பார்க்க தெவிட்டாத* காதல் படம் .* ஓய்வுக்காக மலை பிரதேசத்துக்கு வரும் எம்.ஜி.ஆர். அங்கே அவருக்கு கிடைக்கின்ற அனுபவங்கள் , ,,,,,, இப்போது வரை*ரீமேக்கிலும் இனிக்கும் காதல் .**
ஏ.வி.எம். நிறுவனத்திற்காக எம்.ஜி.ஆர். அன்போடு செய்து கொடுத்த ஒரே படம் .எம்.ஜி.ஆரின் துடிப்பும் , சரோஜாதேவியின் வனப்பும் , எம்.எஸ். விஸ்வநாதனின் தேன் சொட்டும் பாடல்களும்,மெல்லிய காதல் சரசங்களும், இழையோடிய நகைச்சுவையும் படத்தை ஆகப் பெரிய வெற்றிக்கு அழைத்து சென்றன .
-
மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் துக்ளக் பத்திரிகையில் ஒரு பேட்டியில் எம்ஜிஆரையும் ரஜினியையும் ஒப்பிட்டு கேள்வி கேட்டவருக்கு அளித்த பதில்:---
"எம்ஜிஆரையும், ரஜினியையும் ஒரே தராசில் வைத்து நாம் எடை போட முடியாது. எம்ஜிஆர் ஆரம்ப காலத்தில் காங்கிரஸில் இருந்து, பின்னர் திமுகவிற்கு வந்து எம்.எல்.சி., எம்.எல்.ஏ. போன்ற பதவிகளை வகித்து, ஒரு பலமான அரசியல் பின்பலத்தோடு தனிக்கட்சி தொடங்கினார்.
மேலும் அவர் ஆரம்ப காலம் தொட்டே ஏழைகளுக்கு உதவுவது, மாணவர்களைப் படிக்க வைப்பது என்று தாராள மனதோடு ஏராளமான உதவிகள் செய்து மக்கள் மனதில் இடம் பிடித்திருந்தார்.
தன் திரைப்படங்களில் எந்த தவறான நடத்தையுமில்லாத ஒரு தூயவனாக, மக்கள் போராளியாகத் தன்னை சித்தரித்து தனது இமேஜை வளர்த்துக் கொண்டார்.இவையெல்லாம் சேர்ந்துதான் எம்ஜிஆருக்கு வெற்றியைக் கொடுத்தன.
ரஜினிக்கு இத்தகைய பின்புலம் இல்லை என்பதை நினைவில் கொள்ள வேண்டும்."......... Thanks.........
-
தென்னக ஜேம்ஸ் பாண்ட் ராமு மதுரையில் வெற்றி விஜயம்*வரும் வெள்ளி முதல் (21/02/20) வசூல் சக்கரவர்த்தி எம்.ஜி.ஆர். நடித்த*ரகசிய போலீஸ் 115 டிஜிட்டல் வடிவில் புதிய தொழில்நுட்பம்* மற்றும்*முற்றிலும் புதிய பரிமாணத்தில் மதுரை வெற்றி திரை அரங்கில் தினசரி 4 காட்சிகளில்* வெளியீடு .
தகவல் உதவி : மதுரை நண்பர் திரு.எஸ். குமார் .
-
திருப்பூர் அனுப்பர்பாளையம் கணேஷில் வெள்ளி /சனி/ஞாயிறு (14/02/20* முதல்*16/02/20 வரையில் ) தீனசரி இரவு காட்சி மட்டும் புரட்சி தலைவர் /மக்கள் தலைவர் எம்.ஜி.ஆர். இரு வேடங்களில் கலக்கிய " நாளை நமதே " திரையிடப்படுகிறது .
தகவல் உதவி : திருப்பூர் நண்பர் திரு. நடராசன் .
-
*மனிதநேயப் பண்பாளர் சைதை சா. துரைசாமி அவர்கள், புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர் மீது கொண்ட தீராத அன்பால், அவரின் கொள்ளைப் பற்றுடனே தன் அரசியல் வாழ்வைத் தொடங்கினார்...*
*பின், சட்டமன்ற உறுப்பினர், சென்னை மாநகர மேயர் என உயர்ந்த பொருப்புகளில் வகித்தார்...*
*மக்கள் சேவகர் சைதை சா. துரைசாமி அவர்கள், 2005-ஆம் ஆண்டு மனிதநேய அறக்கட்டளை மூலமாக இலவச ஐஏஎஸ் பயிற்சி வகுப்புகளைத் துவங்கி, இன்று வரை ஆயிரக்கணக்கான மாணவர்களை அரசுப் பணிகளுக்கு கொண்டு சென்றுள்ளார்...*
*புற்றீசல்கள் போலத் தனியார் ஐஏஎஸ் பயிற்சி வகுப்புகள் இன்று உருவெடுத்துள்ள நிலையில், தன் சொந்தப் பணத்தை செலவு செய்து இலவசமாக பயிற்சி அளித்து வருகிறார்...*
*மேலும், கண்ணை இமை காப்பது போல் புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர் அவர்களின் புகழைக் காத்து வரும் திரு.சைதையார் ஐயா அவர்களுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் ...*
*தாங்கள் வாழ வேண்டும் இவ்வையகத்தில் பல்லாண்டு ...*
*- அன்புடன் எம்ஜிஆர் ஸ்ரீநாத்*......... Thanks .
-
மக்கள் திலகத்தின்
சீடர்களில் முதன்மையானவர்
சென்னை பெருநகர முன்னாள் மேயர்
மனிதநேயம் அறக்கட்டளையின்
நிறுவனர் போற்றுதற்குரிய அண்ணன்
திரு சைதை துரைசாமி அய்யா
அவர்களுக்கு இனிய பிறந்த நாள்
நல்வாழ்த்துக்களை நமது மக்கள் திலகம்
திரியின் சார்பாக தெரிவித்துக்கொள்கிறோம்.
இப்படிக்கு
எஸ் ரவிச்சந்திரன்
-
தினத்தந்தி -14/02/20
------------------------------------
என்றென்றும் கண்ணதாசன்* *-* எளிய இலக்கியம்*
------------------------------------------------------------------------------------
தேவர் பிலிம்ஸ் தயாரித்த " தாய் சொல்லை தட்டாதே " \படத்தில் ஒரு காட்சி .எம்.ஜி.ஆர். சரோஜாதேவியை காதலிப்பார் .* எம்.ஜி.ஆரின் வீட்டிற்கு வரும் சரோஜாதேவியின் அப்பா எம்.ஆர். ராதாவை பார்த்ததும் எம்.ஜி.ஆரின் தாய் கண்ணாம்பாவுக்கு அதிர்ச்சி .
தன் கணவரை கொலை செய்தவர் எம்.ஆர். ராதா என்று சொல்லி, திருமணத்திற்கு தடை விதித்து விடுகிறார்* எம்.ஜி.ஆரின் தாய்* அதே போல் , இந்த மாப்பிள்ளை உனக்கு வேண்டாம் என்று சரோஜாதேவிக்கு தடை போடுகிறார் எம்.ஆர். ராதா .
காதலர்கள் இடையே பிரிவு ஏற்படுகிறது . அந்த ஏக்கத்தில் இரவில், தனிமையில் சரோஜாதேவி பாடுகிறார் .* *இதுதான் பாடலுக்கான சூழல் .இந்த படத்திற்கு கே.வி.மகாதேவன் இசை அமைத்தார். அவரது இசை என்றால்* முதலில் பாடல் எழுதப்பட்டு , விடும் .* பின்னர் அதற்கு அவர் இசை அமைப்பார் .
பாடலுக்கான சூழல் , கண்ணதாசன் அவர்களிடம் சொல்லப்பட்ட பிறகு கவிஞர் சிந்தனை வசப்படுகிறார் ,* பழந்தமிழ் இலக்கியங்களில் சொல்லப்பட்ட காதல், ஊடல், பிரிவு பற்றிய கவிதைகள் அவர் நினைவில் வந்து போகின்றன .
அப்போது கவிஞர் பல வருடங்களுக்கு முன் படித்த குறுந்தொகை பாடலும்,*தாயுமானவரின் பாடலும் அவரின் நினைவிற்கு வருகின்றன .**
தாயுமானவர் ஒரு பாடலில்* மண் உறங்கும் , விண் உறங்கும் மறறுள* எல்லாம் உறங்கும் , கண் உறங்கேன், எமிறைவர் காதலால் பைங்கிளியே ,மண்ணில் வாழும் மக்களும், விண்ணில்* வாழும் தேவரும் உறங்குகின்றனர் .அவர்களுடன் இந்த உலகில் வாழும் எல்லா உயிர்களும் உறங்குகின்றன .**என் இறைவன் மீது நான் கொண்ட காதலால் என்னால் உறங்க முடியவில்லை என்று தாயுமானவர் சொன்னதாக பாடல் அமைகிறது .
அந்த கருத்தினை உள்ளடக்கி "தாய் சொல்லை தட்டாதே " படத்தில் இடம் பெற்ற*இந்த பாடலுக்கான வரிகளை அமைக்கிறார் .
பூ உறங்குது, பொழுதும் உறங்குது,நீ உறங்கவில்லை நிலவே,கான் உறங்குது, காற்றும் உறங்குது*நான் உறங்கவில்லை .மான் உறங்குது, மயிலும் உறங்குது ,மனம் உறங்கவில்லை .என் வழி உறங்குது, மொழியும் உறங்குது ,*விழி உறங்கவில்லை .தென்றலில் எனது உடல் தேய்ந்தது பாதி ,அது*தின்றதெல்லாம் போக இங்கே இருப்பது மீதி*திங்கள் நீயும் , பெண்குலமும் ஒருவகை ஜாதி*தெரிந்திருந்தும் கொல்ல வந்தாய் என்னடி நீதி ?
-
mgr எம்.ஜி.ஆர். ஆட்சி - 1980ல் கலைக்கப்பட்ட நாளாக்கும் இன்று 17.02.1980.
அண்ணாவின் மறைவிற்கு பின் திராவிட முன்னேற்ற கழகத்திலிருந்து வெளியேற்றப்பட்ட பின் 1972 ஆம் ஆண்டு அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்தை துவக்கினார். கட்சி ஆரம்பித்த குறுகிய காலத்தில் 1973 ஆம் ஆண்டு நடந்த #திண்டுக்கல் #பாராளுமன்ற_இடைத்தேர்தலில் #மாயத்தேவரை நிற்க வைத்து வெற்றி பெற வைத்து அரசியலில் தனது சாதனை ஓட்டத்தை துவக்கினார்.
பின்னர் 1977 ஆம் ஆண்டு நடந்த சட்டமன்ற தேர்தலில் 200 இடங்களில் போட்டியிட்ட அ.தி.மு.க 130 தொகுதிகளில் அமோக வெற்றி பெற்றது. #அருப்புக்கோட்டை தொகுதியில் போட்டியிட்ட புரட்சித் தலைவர் அவர்கள் 43065 வாக்குகள் பெற்று அமோக வெற்றியடைந்தார். இத்தேர்தலில் கிட்டத்தட்ட 52 லட்சம் வாக்குகளை அ.தி.மு.க அறுவடை செய்தது அரசியல் வரலாற்றின் மிகப்பெரிய சாதனை.
ஆனால் 1980ல் நடந்த பாராளுமன்ற தேர்தலில் திமுக-காங்கிரஸ்(இந்திரா காந்தி தலைமை) கூட்டணி மிகப்பெரிய வெற்றி பெற்றதையடுத்து எம் ஜி ஆர்தலைமையிலான, தமிழகம் உள்ளிட்ட9 மாநில சட்டசபைகளைக் கலைத்தார். உடனே 'தர்மத்தின் வாழ்வுதனை சூது கவ்வும், தர்மம் இறுதியில் வெல்லும்’ என்று அறிக்கை வெளியிட்ட எம்.ஜி.ஆர்., 'யாரும் ஆத்திரப்படாதீர்கள், அடுத்து நம்முடைய ஆட்சிதான்’ என்று சொன்னார்.
அதையடுத்து நடந்த தேர்தல் பிரசாரத்தில், 'நான் என்ன தவறு செய்தேன், என்னை எதற்காகத் தண்டித்தீர்கள்? நான் உங்களுக்காகத்தானே உழைத்தேன்’ என்று கண்ணீர் விடுமளவுக்கு பேசினார். அப்போது தமிழகத்தில் பெரும்பாலான ஊர்களில் மழை விடாது பெய்துகொண்டு இருந்தது. பல ஊர்களில் வெள்ளம். எம்.ஜி.ஆருக்காகக் கொட்டும் மழையில் மக்கள் காத்திருந்தார்கள். 'எம்.ஜி.ஆருக்காக வானமும் அழுதது’ என்று அப்போது அ.தி.மு.க-வினர் சொல்ல ஆரம்பித்தார்கள். தேர்தல் முடிவில் இது எதிரொலித்து மொத்தமுள்ள 234 தொகுதிகளில் 129 இடங்களைக் கைப்பற்றி எம்.ஜி.ஆர். மீண்டும் வென்றார்.......சரித்திரம் படைத்த சகாப்தம் சாதனை கண்டார்.........
-
இன்றைய (ஏன் பல காலமாகவே) அரசியல் தலைவர்கள் தரக்குறைவாக (எல்லாக் கட்சியினருமே) பேசி வருகிறார்கள். எனக்குத் தெரிந்து பெருந்தலைவர் காமராஜர், புரட்சித் தலைவர் எம் ஜி ஆர் ஆகிய இரு தலைவர்கள் யாரையும் தனிப்பட்ட முறையில் பழித்ததில்லை. தரக்குறைவான வார்த்தைகளைப் பேசியதில்லை.. எம் ஜி ஆர் தனது கட்சி பிரமுகர் பயன்படுத்திய சொல்லுக்காக தானே மன்னிப்பு கேட்டிருக்கிறார்.
பத்திரிகையாளர் பா. கிருஷ்ணன்......... Thanks...
-
சார்.... காமராஜர் கூட நம் புரட்சித் தலைவரை, 1964ல் நடைபெற்ற சென்னை மாநகராட்சி தேர்தலில் , வேட்டைக்காரன் வருகிறான், அவனிடம் ஏமாந்து விடாதீர்கள் என்று விமர்சனம் செய்தார். மேலும் தனிக்கட்சி தொடங்கிய நம் மக்கள் திலகத்தின் செல்வாக்கை கண்டு பொறாமைப் பட்டு, எதிரும் புதிருமாக இருந்த இந்திராகாந்தி அம்மையார் தலைமையிலான காங்கிரஸ் கட்சியுடன் கருத்து முரண்பட்டிருந்தும்,1974ல் பாண்டிச்சேரி சட்ட மன்ற தேர்தலில் கூட்டணி வைத்து தோல்வி கண்டார். அந்த பாண்டிச்சேரி தேர்தலிலும் நம் பொன்மனச் செம்மலை கடுமையாக விமர்சித்தவர்தான் காமராஜர். அரசியலில் நாகரீகப் பண்புகளை கடைப்பிடித்த ஒழுக்க சீலர்கள் பேரறிஞர் அண்ணா அவர்களும் சமதர்ம சமுதாயக் காவலன் எம்.ஜி.ஆர். அவர்களும் மட்டுமே ! அன்புடன் : சௌ.செல்வகுமார்......... Thanks.........
-
சேலம் அம்மாபேட்டை ஜோதி அரங்கில் புரட்சி நடிகர் /மக்கள் திலகம் எம்.ஜி.ஆர்.அசத்திய டிஜிட்டல் "எங்க வீட்டு பிள்ளை " திங்கள் முதல் (17/02/20) தினசரி 4 காட்சிகளில் வெற்றி நடை போடுகிறது .
தகவல் உதவி : சேலம் நண்பர் திரு.சுப்பிரமணி
-
தென்னக ஜேம்ஸ் பாண்டாக மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். நடித்த டிஜிட்டல் "ரகசிய போலீஸ் 115" வெள்ளி முதல் (21/02/20) முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பிறந்த நாளை முன்னிட்டு மதுரை வெற்றி மற்றும் அண்ணாமலை அரங்குகளில் தினசரி 4 காட்சிகளில் வெற்றி விஜயம் .
தகவல் உதவி : மதுரை நண்பர் திரு.எஸ். குமார் .
-
வருகின்ற
வெள்ளி (21.02.2020)
சனி (22.02.2020)
ஞாயிறு (23.02.2020)
திருப்பூர்
அனுப்பர்பாளையம்
கணேஷ் திரையரங்கில்
மக்கள் திலகத்தின்
இன்று போல் என்றும் வாழ்க
இரவு 8 மணிக்காட்சி மட்டும்
-
*1975 அன்று கர்நாடகா முதல்வர் தேவராஜ் அர்ஸ் நம் வாத்தியாரை சந்திக்க விரும்பி அழைப்பு விடுக்க அதன் பேரில் புரட்சிதலைவர், சித்திரா கிருஷ்ணசாமி, மற்றும் தலைவர் உதவியாளர் மகாலிங்கம் மூவரும் விமானத்தில் பெங்களூரு செல்ல.
விமானநிலையத்தில் பாராளுமன்ற உறுப்பினர் கான், மற்றும் குண்டுராவ் இருவரும் நம் தலைவரை வரவேற்று அசோகா ஹோட்டலில் தங்க வைக்க.
அதிகாலை விமான பயணம்...தலைவர் தனக்கு ஒதுக்கப்பட்ட அறையில் ஓய்வு எடுக்க போக மற்றவர் அடுத்த அறைக்கு செல்ல...ஹோட்டல் பணியாளர்கள் அறையில் இருந்த குளிர்சாதன பெட்டியில் ஏதோ பொருள்களை அடுக்கிவிட்டு போக.
களைப்பு தீர்ந்து விழித்த தலைவர் குடிக்க தண்ணீர் வேண்டி குளிர்சாதன பெட்டியை திறக்க அங்கே அடுக்கி வைக்க பட்டு இருந்தன ஒரு புறத்தில் மது பாட்டில்கள்
வந்தது கோவம் மன்னருக்கு இது யார் வேலை என்று ஹோட்டல் நிர்வாகத்தை அழைத்து கேட்க...மேனேஜர் பதறி அடித்து ஓடி வந்து என்ன இந்த பாட்டில்கள் என்று அவரிடம் தலைவர் கேட்க.
ஐயா முதல்வர் அர்ஸ் மதிய உணவு உங்களுடன் இந்த அறையில் என்று சொல்லி இருக்கிறார்..
சரி அதற்கும் இந்த பாட்டில்களுக்கும் என்ன சம்பந்தம் என்று கேட்க.
ஹோட்டல் நிர்வாகி ஐயா அவர் மது அருந்தாமல் சாப்பிட மாட்டார் அதனால் தான் இந்த ஏற்பாடு என்று சொல்ல.
உடனே குண்டுராவை தொடர்பு கொண்ட தலைவர் உங்கள் முதல்வர் இன்று மதிய உணவு முடிந்து வந்து என்னை சந்தித்தால் போதும்.....என் அறையில் இருக்கும் மது பாட்டில்களை உடனே அப்புற படுத்த சொல்லுங்கள்.
எனக்கு மது அருந்தியவர்கள் உடன் இருந்து சாப்பிட்டு பழக்கம் இல்லை என்று சற்று கடுமையாக சொல்ல.
அர்ஸ் அவர்கள் ஒப்புதல் உடன் அறையில் இருந்த அந்த வகை பாட்டில்கள் அப்புற படுத்த பட்டன அடுத்த சில நிமிடங்களில்.
வேறு ஒரு மாநிலம் சென்று அந்த மாநில முதல்வரை சந்தித்து பேச வேண்டி இருந்தாலும் தான் கொண்ட கொள்கையில் எவரிடமும் சமரசம் கொள்ளாமல் இருந்தார் வாத்தியார்.
ஹோட்டல் சிப்பந்திகள் எங்கள் மாநில முதல்வர் வேலை வாத்தியாரிடம் பலிக்க வில்லை என்று மகிழ்ச்சி அடைய.
குண்டுராவ்,மற்றும் கான் வாய்அடைத்து இந்த நாட்டில் இப்படி ஒரு மனிதரா.... என்று வியக்க.
அப்படி வாழ்ந்த மனித புனிதர் வாத்தியார் புகழ் என்றும் காப்போம்.
நன்றி தொடரும் .உங்களில் ஒருவன் நெல்லை மணி...*......... Thanks.........
-
கருர் - லட்சுமிராம் DTS., 21. 02.2020 வெள்ளிமுதல் இந்தியாவின் சீன்கானரி ஜேம்ஸ்பாண்ட் "ரகசியபோலிஸ் 115" காவியம் வெற்றிப்பவனி... தகவல் திருச்சி. மாவட்ட படவெளியிட்டாளர் திரு சுந்தரம் அவர்கள் நன்றி மதுரை எஸ்.குமார் எம்ஜிஆர். மன்றம்......... Thanks.........
-
நாளை 21.02.20 முதல் கூடலூர் (கம்பம்) வேல்முருகன் தியேட்டரில் ஆயிரத்தில் ஒருவன் 4 காட்சிகள்
தகவல் - திரு எஸ் குமார் - மதுரை
-
நாளை 21.02.2020 முதல் கூடலூர் (கம்பம்)வேல்முருகன் DTS., தியேட்டரில் "ஆயிரத்தில் ஒருவன்" 4 காட்சிகள் ஆக வெற்றிபவனி வருகிறார்......... Thanks.........
-
வாழும் போது வருவோர்க்கெல்லாம் வார்த்தையாலே நன்றி சொல்வோம்!!
வார்த்தை இன்றி போகும்போது மௌனத்தாலே புரட்சித்தலைவர் அவர்களுக்கு நன்றி கூறிய கவிஞர் கண்ணதாசன் அவர்களின் இறுதிப்பயணம்.....!!....!!....!!....!!....!!.. .!!
அது கண்ணதாசன் இறுதி ஊர்வலம்.............!!...!!....!!....!!..!!
பொது மக்கள் அஞ்சலி செலுத்தி முடித்தார்கள்..!
அதன் பின் கண்ணதாசனின் உடல் இறுதி ஊர்வலத்திற்கான வாகனத்தில் ஏற்றப்பட்டு விட்டது...!
அப்போது கூட்டத்தில் சின்ன சலசலப்பு ..!
கண்ணதாசன் உடல் கிடைமட்டமாக அந்த வாகனத்தில் கிடத்தப்பட்டிருந்ததால் ,
கீழே நின்ற மக்களுக்கு கண்ணதாசனின் முகம் தெளிவாகத் தெரியவில்லை..!
கடைசியாக கவிஞர் முகத்தைப் பார்க்க முடியவில்லையே என்ற ஆதங்கத்தில் , கண் கலங்கி கதற ஆரம்பித்தனர் சிலர் !
“ஐயா...கவிஞர் முகம் எங்களுக்கு தெரியலையே ஐயா ..”
அப்போது அங்கே நின்ற ஒரு மனிதர் , யாரும் எதிர்பார்க்காத நேரத்தில் , மின்னல் வேகத்தில் கண்ணதாசன் உடல் இருந்த அந்த வாகனத்தில் தாவி ஏறினார்...!
கண்ணதாசன் உடலை சற்றே உயர்த்தி , ஒரு சின்ன ஸ்டூல் மீது அவரது தலையை பொருத்தி கட்டி விட்டு அந்த மனிதர் , சுற்றி நின்ற மக்கள் முகத்தைப் பார்த்தாராம்...!
திரண்டிருந்த மக்கள் முகத்தில் இப்போது திருப்தி தெரிந்தது...!
ஆம்.. இப்போது கண்ணதாசன் முகம் , கீழே நின்ற அத்தனை பேர்களுக்கும் தெளிவாகத் தெரிந்தது..!
திருப்தியோடு அந்த இறுதி வாகனத்தை விட்டு கீழே இறங்கிய அந்த மனிதர்...
அப்போதைய தமிழக முதல்வர் எம்.ஜி.ஆர்..!
அவர் கண் அசைத்தால் அடுத்த நொடியே காரியம் நடந்திருக்கும் ...!
ஆனால் அந்த ஒரு நொடி தாமதத்தைக் கூட எம்.ஜி.ஆர். விரும்பவில்லை..!
காரணம்....
கவிஞர் கண்ணதாசன் மீது எம்.ஜி.ஆர். வைத்திருந்த உயர்ந்த மரியாதை...
மக்கள் உணர்வுகளுக்கு கொடுத்த உன்னத மதிப்பு...!
# கண்ணதாசன் மீது எம்.ஜி.ஆர். வைத்திருந்த கண்ணியமான மரியாதையினால்தான் , 1978-ல் ‘அரசவைக் கவிஞர் ’ பட்டத்தை கண்ணதாசனுக்கு வழங்கினார் எம்.ஜி.ஆர். ! அந்த விழாவில் பேசிய கண்ணதாசன் உணர்ச்சிவசப்பட்டவராக , ‘‘ நான் இறந்துவிட்டால் எனக்கு அரசு மரியாதை கிடைக்கும்... இந்த சிறப்பை எனக்கு வழங்கிய எம்.ஜி.ஆருக்கு முன்கூட்டியே நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் ’’ என்று சொன்னாராம்...!
எப்படித் தெரிந்ததோ கண்ணதாசனுக்கு..?
1981 இல் உயிரோடு அமெரிக்கா சென்ற கண்ணதாசன் , வெறும் உடலாகத்தான் தமிழகம் திரும்பினார்..!
இறுதி நேரத்தில் எம்.ஜி.ஆர். கொடுத்த அந்த அரசு மரியாதைக்கு நன்றி சொல்ல இயலாத நிலையில் கண்ணதாசன்...!
ஆம்.... கவிஞன் வாக்கு பலித்தது..!
# எம்.ஜி.ஆருக்காக கண்ணதாசன் எழுதிய
“சங்கே முழங்கு” பாடல் வரிகள் :
“ வாழும் போது வருவோர்க்கெல்லாம்
வார்த்தையாலே நன்றி சொல்வோம்
வார்த்தை இன்றி போகும் போது
மௌனத்தாலே நன்றி சொல்வோம்
நாலு பேருக்கு நன்றி ”
இவண்
ஜெயம் பழனிவேல்MA
விராலிமலை தொகுதி......... Thanks...
-
21.02.2020 வெள்ளிமுதல் திண்டுக்கல்- என்.வீ.ஜி.பி dts.,திரையரங்கில் தினசரி.4.காட்சிகளாக வெற்றிப்பவனி வருகின்றார் "புதுமைப்பித்தன்" பொன்மனச்செம்மல் எம்ஜிஆர். தகவல்.திரு ஸ்ரீனிவாசன் அவர்கள் படக்கம்பெனி நண்பர் நன்றி மதுரை எஸ்.குமார் எம்ஜிஆர். மன்றம்... Thanks.........
-
திருப்பூரில் நாளை மணீஸ் திரையரங்கம் மக்கள் திலகம் எம்ஜிஆர் நடித்த எங்கள் வீட்டுப்பிள்ளை திருப்பூர் சரவணன்
-
M.G.R. தனது படங்களில் தான் ஏற்கும் கதாபாத்திரங்கள் குறிப்பிட்ட ஜாதியை சேர்ந்த பாத்திரங்களாக இருப்பதை அனுமதிக்க மாட்டார். அதுபோன்று அவர் நடித்தது இல்லை. எந்த மதத்தினரின் நம்பிக்கைகளையும் புண்படுத்த மாட்டார். அதனால்தான், அவர் சர்வ சமுதாய காவலராக போற்றப்பட்டார்.
தனது திரைப்படங்களில் திராவிட இயக்கங்களின் கொள்கைகளையும் முற்போக்கு சிந்தனைகளையும் ஜாதிக் கொடுமைகள் குறித்தும் காட்சிகள் வாயிலாக மக்கள் மனங்களில் பதிய வைப்பது எம்.ஜி.ஆரின் உத்தி... ‘உரிமைக்குரல்’ திரைப்படத்தில் எம்.ஜி.ஆரின் அறிமுகக் காட்சி அதற்கு ஒரு சாட்சி..
வில்லனின் ஆட்கள் ஒரு பெண்ணை தூக்கிச் செல்வார்கள். அவர்களை அடித்து விரட்டி அந்தப் பெண்ணை எம்.ஜி.ஆர். மீட்பார். பிறகு, அந்தப் பெண்ணைப் பார்த்து தனது குதிரை வண்டியில் ஏறும்படியும் பாதுகாப்பாக வீட்டில் கொண்டு விடுவதாகவும் கூறுவார். அப்போது அந்தப் பெண், ‘‘ஐயா, நான் தாழ்த்தப்பட்ட ஜாதியை சேர்ந்தவள். உங்கள் வண்டியில் ஏறக் கூடாது’’ என்பார்.
அதற்கு எம்.ஜி.ஆர். பதிலளிக்கும்போது, ‘‘உயர்ந்த ஜாதி, தாழ்ந்த ஜாதி இதெல்லாம் இந்த சமுதாயம் செஞ்சு வெச்ச கொடுமை. என்னைப் பொறுத்தவரை எல்லாரும் ஒரே ஜாதிதான். அது மனித ஜாதி’’ என்பார். இப்படி, படங்களில் பொருத்தமான இடங்களில் ஜாதிக் கொடுமைகளை சாட எம்.ஜி.ஆர். தவறியதில்லை.
தன்னலம் கருதாது பணியாற்றும் மக்கள் தொண்டர்களை வாய்ப்பு கிடைக்கும்போது உரிய கவுரமும் பெருமையும் அளித்து கவுரவிப்பதில் எம்.ஜி.ஆருக்கு நிகர் எம்.ஜி.ஆர்.தான்!
1940-களில் கன்னியாஸ்திரி ஒருவர் கொல்கத்தாவில் ஏழைகளுக்கு தொண்டாற்றி வந்தார். தனவந்தர்கள், பெரிய மனம் கொண்டோரிடம் இருந்து நிதி பெற்று அந்தப் பணத்தைக் கொண்டு ஏழை, எளிய, மக்களுக்கும் நோயாளிகளுக்கும் சேவை செய்து வந்தார். ஒரு நாள் ஒரு பணக்காரரிடம் கையேந்தி நிற்கிறார் அந்த கன்னியாஸ்திரி. பணம் இல்லை என்று விரட்டுகிறார் பெரிய மனிதர். விடாமல் அவரை பணிவோடு கேட்கிறார் அந்த அம்மையார். ஆத்திர மடைந்த பெரிய மனிதர் கையேந்தி நின்ற அந்த அன்னையின் கைகளில் காறித் துப்புகிறார்.
அப்போதும் அந்த அம்மையார் பொறுமையாக, ‘‘ஐயா, எனக்கான காணிக்கையை கொடுத்துவிட்டீர்கள். ஏழைகளுக்கான காணிக்கையை தயவு செய்து கொடுங்கள்’’ என்று கேட்டதைப் பார்த்து அந்த பணக்காரரே மனமிறங்கி நன்கொடை அளித்தார். அந்த பொறுமை யின் சிகரம்தான் தன் வாழ்க்கையை நலிந்தோருக்காகவும் நோயாளிகளுக் காகவும் அர்ப்பணித்த அன்னை தெரசா.
அப்படிப்பட்ட தொண்டு உள்ளம் படைத்த அன்னை தெரசா, ஏழை மாணவர்களுக்கு சத்தான உணவு அளிக்க எம்.ஜி.ஆர். கொண்டு வந்த திட்டத்தை பாராட்டாமல் இருப்பாரா?
1982-ம் ஆண்டு பள்ளி மாணவர் களுக்கு இலவச சத்துணவுத் திட்டத்தை எம்.ஜி.ஆர். அறிமுகப்படுத்தினார். சத் துணவுத் திட்டத்தை தெரசா மிகவும் பாராட்டினார். இது தொடர்பாக சென்னை வள்ளுவர்கோட்டத்தில் நடந்த விழாவில் தெரசா கலந்து கொண்டு எம்.ஜி.ஆருக்கு பாராட்டு தெரிவித்தார்.
பெண்களுக்காக தனி பல்கலைக் கழகத்தை அமைக்க எம்.ஜி.ஆர். முடிவு செய்தார். அதன்படி, 1984-ம் ஆண்டு கொடைக்கானலில் பெண்களுக்கான தனிப் பல்கலைக்கழகம் உருவானது. அந்த விழாவில் தெரசா கலந்து கொண்டார். அப்போது காஷ்மீர் முதல்வராக இருந்த பரூக் அப்துல்லா உட்பட பலரும் கலந்து கொண்டனர்.
தனது தொண்டால் பெண் இனத் துக்கு பெருமை தேடித் தந்த அன்னை தெரசாவின் பெயர், பெண்கள் பல் கலைக்கழகத்துக்கு சூட்டப்படுவதாக விழா மேடையில் பலத்த கரகோஷத்துக் கிடையே எம்.ஜி.ஆர். அறிவித்தார். அன்னை தெரசா நெகிழ்ந்து போனார். மேடையில் இருந்த பரூக் அப்துல்லா எழுந்து மகிழ்ச்சியில் எம்.ஜி.ஆரை தழுவிக் கொண்டார்.
இந்து மதத்தைச் சேர்ந்த எம்.ஜி.ஆர்., கிறிஸ்துவ மதத்தைச் சேர்ந்த அன்னை தெரசாவின் பெயரை பல்கலைக்கழகத் துக்கு சூட்டுகிறார். முஸ்லிம் மதத்தைச் சேர்ந்த பரூக் அப்துல்லா எம்.ஜி.ஆரை தழுவி மகிழ்ச்சியை வெளிப்படுத்து கிறார். மத வேறுபாடுகள் மறைந்து மனித நேயம் உயர்ந்து நிற்கிறது.
எம்.ஜி.ஆர். முதல்வராக இருந்த போது நாகப்பட்டிணம் சட்டப் பேரவைத் தொகுதியில் மருத்துவ விடுதி ஒன்றின் திறப்பு விழா. அது தொடர்பான விழா நாகூர் தர்கா அருகே நடந்தது. கூட்டத்தில் எம்.ஜி.ஆர். பேசினார். ‘நான் கைலி கட் டாத முஸ்லிம், சிலுவை அணியாத கிறிஸ் துவன், திருநீறு அணியாத இந்து...’
மக்களின் கரவொலி இடியொலியாய் முழங்கியது. மேடையில் பேசியது போன்றே வாழ்ந்தும் காட்டியவர் எம்.ஜி.ஆர்.......... Thanks.........
-
-
-
-
-
வசூல் சக்கரவர்த்தி புரட்சி நடிகர் "ரகசிய போலீஸ் 115" வெற்றி காவியம் திருச்சி - பேலஸ் DTS., தினசரி 4 காட்சிகள் வருகை தருகின்றார்... Thanks............
-
எங்க வீட்டுப் பிள்ளை !
________________________
அவ ஜோடி குயில் பாடுவதை சொல்லாம சொல்லி மெதுவா அணைச்சிக்கிட்டா..
அவ ஆடியிலே பெண்ணாகி அஞ்சாறு மாசத்திலே அழகா தெரிஞ்சிகிட்டா .
கவிஞர் வாலி !
இந்த படத்தை இனி வரும் எத்தனை தலைமுறை நடிகர்களானாலும் திரையில் நிலைத்து நிற்க மக்கள் திலகத்தின் நடிப்பை உள் வாங்குகள் .
இவர் இதில் ஏற்றிருப்பது இரட்டை வேடமல்ல இருவரின் வாழ்க்கையாகவே வாழ்ந்திருப்பார் வெறும் பயந்த சுபாவமாக நடித்திருக்க மாட்டார் ஒவ்வொரு அசைவிலும் வித்தியாசத்தை பிரதிபலித்துப்பார் .
படம் பார்த்து வெளியில் வந்தால் ராமு ,இளங்கோ இருவராகத்தான் நம் மணக்கண் முன் நிற்கும்
எக்காலத்திற்கும் வாத்தியார் நம் மக்கள் திலகமே !
இந்தப் பாடல் காட்சியில் துள்ளும் ரத்ணா அவர்களின் ஸ்டெமினாவை பாராட்டியே தீர வேண்டும் ........ Thanks...
-
-
-
-