https://scontent.fyyz1-2.fna.fbcdn.n...b8&oe=5EB81B9A
Printable View
"உங்கள் மந்தையில் இருந்து இரண்டுஆடுகள் வேறு வேறு பாதையில் போய் விட்டன..இரண்டும் சந்தித்த போது பேச முடியவில்லையே... "
இன்று - 12.04.2020 காலை 11.00 A.M. மணிக்கு முரசு டிவி யில் - நடிகர்திலகம் நடித்த வெற்றி படம். !!!
" ஞான ஒளி " படத்தை கண்டு களியுங்கள். !!!
சிவாஜி, சாரதா, மேஜர் சுந்தராஜன் நடித்து உள்ளனர்
https://scontent.fyyz1-1.fna.fbcdn.n...fb&oe=5EB76FF7
1957ம் ஆண்டு அரங்கேற்றப்பட்ட வீரபாண்டிய கட்டபொம்மன் நாடகம் நூறு முறைகளுக்கு மேல் நடந்தது .அந்த நாடகத்தில் வசூலான தொகையை கொண்டு முப்பத்திரண்டு லட்ச ரூபாயை தொண்டு நிறுவனங்களுக்கு ம் மருத்துவ மனைகளுக்கும் உதவி புரிந்திருக்கிறார் .அந்த தொகை என்பது இன்று நூறு கோடி ரூபாய் ,அவ்வளவு பெரிய தொகையை சிவாஜி அள்ளிக்கொடுத்த விஷயம் அவரது தீவிர ரசிகர்கள் கூட அறியாத ஒன்று .சிவாஜி தாராளமாக உதவி செய்வாரே தவிர அதை விளம்பரபடுத்த விரும்பியதில்லை ,வீரபாண்டிய கட்டபொம்மன் நாடகத்தை பொறுத்தவரை அதை பார்க்காத அரசியல் வாதிகளே இல்லை என்று சொல்லலாம் ,ராஜாஜி பெரும் தலைவர் ,அண்ணா ,கருணாநிதி ஆகியோர் பார்த்து பாராட்டி உள்ளார்கள் ,அந்த வேடத்தில் நடிக்க அவர் ஒருவரே பொருத்தமானவர் என்று நினைக்க தோன்றியது அவரின் பேசும் தோரணையும் ,நடிப்பும் ,எடுப்பான தோற்றம் ,அவர் வீரவேல் வெற்றிவேல் என்று வீர முழக்கமிடும் போது ,நாடகத்தை பார்த்த தமிழ் மக்கள் அனைவரும் வீராவேசம் கொண்டனர் .அந்த நாடகம் முழுதும் சிவாஜியின் நடிப்பே உயிராக விளங்கியது .கட்டபொம்முவுக்கு சிலை எங்கே சிலை எங்கே என்று இந்நாளில் சிலையை ஓரிடத்தில் வைக்கமுடியும் ,இதோ நான் கட்ட பொம்மனை எல்லோருடைய சிந்தையிலும் நாட்டுகிறேன் என சிவாஜி கணேசன் எழுந்துவிட்டார் என்று நாடகத்திற்கு விமர்சனம் எழுதி சிவாஜியை கொண்டாடியது ஆனந்த வுடன் பத்திரிகை .சென்னை அண்ணாமலை மன்றத்தில் நாடகம் நடை பெற்ற போது தனது ஆருயிர் நண்பர் பந்துலுவை அழைத்தார் .தனது உதவியாளர் சிங்கமுத்துவுடன் நாடகத்தை பார்த்த பந்துலு சிவாஜி கூடு விட்டு கூடு பாய்ந்த அதியசத்தை பார்த்து மிரண்டுபோனார் .நாடகம் அமைக்க பட்டிருந்த பிரமாண்டம்,உணர்ச்சிகரமான காட்சிகளில் மனதை பறிகொடுத்த பந்துலு அந்த நாடகத்தை படமாக்க சிவாஜியிடம் கேட்ட போது மறுவார்த்தை பேசாமல் ஒப்புகொண்டார் .ஏற்கனவே பல ஊர்களில் நாடகம் நடத்த முன் பணம் வாங்கி இருப்பதால் அந்த ஊர்களில் நாடகம் நடத்திவிட்டு அதன் பின் நிறுத்திவிடுகிறேன் என்று சொன்னாராம் .விகன் பத்திரியில் தொடராக வந்த பொது இருந்த வரவேற்பை பார்த்து ஜெமினி வாசன் படம் எடுக்க நினைத்து விளம்பரம் பண்ணியதால் சிவாஜியும் பந்துலுவும் நேரிலே சந்தித்தனர் .அப்போது வாசன் ஔவையார் படத்தை சுந்தராம்பாள் இல்லாமல் எடுக்க முடியாதோ அது போல் சிவாஜி இல்லாமல் கட்டபொம்மன் படத்தை எடுக்கமுடியாது என்றும் அந்த வீரபாண்டிய கட்டபோம்மனே என்னிடம் அனுமதி கேட்க வந்திருப்பதாக எண்ணுகின்றேன் .படம் மிக பெரிய வெற்றி பெற வாழ்த்துக்கள் என்று கூறி சிவாஜி யையும் பந்துலுவையும் வாழ்த்தி வழி அனுப்பி வைத்துள்ளார்
https://scontent.fyyz1-2.fna.fbcdn.n...db&oe=5EB7C3C5
Thanks Vijaya Raj Kumar