Albert Screen Shots
https://scontent.xx.fbcdn.net/hphoto...16&oe=57B833B4
https://scontent.xx.fbcdn.net/hphoto...a0&oe=57850F0A
Printable View
Albert Screenshot
https://scontent.xx.fbcdn.net/hphoto...ad&oe=57781A49
புதிய பதிவு
'கர்ண' ஜாலம்.
நேற்று (ஞாயிறு) கடலூர் ரசிக நண்பர்களுடன் கூட்டணி அமைத்து பாண்டி சென்றேன். பிக்பாஸ் 'ருக்மணி' தியேட்டரில் (கீழே 'ஜீவா' தியேட்டர், மேலே 'ருக்மணி) சொக்கலிங்கம் சாரின் சொக்க வைக்கும் 'மீண்டும் கர்ணன்'. மாலை ஆறு மணி காட்சிக்கு மட்டும்.
தியேட்டர் வாயிலில் நுழைந்தால் ஏதோ வாயில் நுழைய முடியாத புதுப் படங்கள் வேறு ஓடிக் கொண்டிருந்தன. கூட்டம் சுமாராக இருந்தது.
பெரிய கொடுமை என்னவென்றால் 'பாண்டி'யில் ஒரு இடத்தில் கூட 'கர்ணன்' போஸ்டர்கள் இல்லை. படம் ஓடுகிறதா இல்லையா என்று கூட தெரியவில்லை. தியேட்டரில் புடைவையை காயவைத்த மாதிரி தரையிலேயே யாருடைய பார்வையிலும் படாமல் ஒரே ஒரு பேனர் மட்டுமே இருந்தது. அதையும் பாதி இருசக்கர வாகனங்களும், கார்களும் பார்க்க முடியாத அளவிற்கு மறைந்த்திருந்தன.
வெளியே நம் ரசிகர்கள் சின்னதாக ஒரு பேனர் வைத்து அதில் தலைவருக்கு மாலை போட்டிருந்தார்கள். விசாரித்ததில் எலெக்ஷன் கெடுபிடியாம். போலீஸ் அடிக்கடி வந்து நோட்டம் விட்டு விட்டு போனது. போலீஸ் போனதும் நம் ரசிகர்கள் பட்டாசு கொளுத்தி விட்டு நழுவி விட்டார்கள். ரசிகர்கள் கூட்டம் கம்மிதான். பொதுமக்கள் ஜாஸ்தி.
பின் டிக்கெட் வாங்கி திரையரங்கு சென்றதும் ஏக ஆச்சர்யம். கீழே நின்றிருந்தவர்களில் பெரும்பான்மையோர் 'கர்ண'னுக்கே மீண்டு(ம்) வந்திருந்தார்கள். குறிப்பாக தாய்மார்கள் வயதானவர்கள் அதிகம்..மற்றொரு ஆச்சர்யம் கல்லூரி மாணவர்கள் சிலரும் வந்திருந்தது.
ரசிகர்கள் அலப்பரை இல்லாவிட்டாலும் காட்சிக்கு காட்சி பொது மகளின் கைத்தட்டல்கள் விண்ணைத் தொட்டது. இடைவேளையின் போது சிலரைத் தொடர்பு கொண்டு கேட்ட போது 'நடிகர் திலக'த்தைப் பற்றிப் பேசி உருகிப் போனார்கள். இத்தனைக்கும் ரசிகர்கள் அல்லாத பொதுஜனம்தான்.
ஒரு பெரியவர் சொன்னது அழுகையை வரவைத்து விட்டது.
'தம்பி!
அந்தக் கர்ணன் உடம்போடு ஒட்டிய கவச, குண்டலங்களை இந்திரனுக்கு தானம் தந்து வலுவிழந்து உயிரிழந்தான்.
இந்தக் கர்ணனோ உடம்போடு ஒட்டிய தன் ஒப்பில்லா உயரிய நடிப்பை நமக்கு தானமாகத் தந்து வலுவோடு உயிரிழந்தான்'
எப்படி அழாமல் இருப்பது! ரசிகரல்லாத இந்தப் பெரியவர் 'நடிகர் திலகம்' இறந்த அன்று எல்லா வேலைகளையும் விட்டு விட்டு 'அன்னை இல்லம்' சென்று அனைத்தும் முடிந்ததும்தான் வீடு திரும்பினாராம்.
காட்சிக்கு காட்சி ரசனையின் உச்சங்கள் தெரிந்தது பார்த்தவர்களின் கண்ணீரின் மூலமும், கைத்தட்டல்களின் மூலமும். இறுதிக் காட்சிகளில் மயான அமைதி. அனைவர் மனதிலும் என்.டி .ஆர் மீது கோபம் கொப்பளிப்பதைக் காண முடிந்தது.
நடிப்பின் புதிய புதிய பரிணாமங்கள் நடிப்புச் சக்கரவர்த்தியிடம் இடைவிடாது பரிமளிப்பதை அனுபவபூர்வமாக உணர்ந்தேன். ஒவ்வொரு அசைவுகளும் புதிது புதிதாகவே காட்சி அளித்தன. இன்னும் எடுக்க வேண்டிய முத்துக்கள் ஏராளம்... ஏராளம்... என்பதை மூளை எடுத்துச் சொல்லியவாறே இருந்தது
அதிலிருந்து ஒரு சில முத்துக்களை மட்டும் உங்களோடு பகிர்ந்து கொள்கிறேன் இப்போது.
http://i1087.photobucket.com/albums/..._000478969.jpghttp://i1087.photobucket.com/albums/..._000490578.jpg
'என்னைப் பெற்றவள்?' என்று வளர்ப்புப் பெற்றோரிடம் வினவும் போது தாய் ருக்மணி 'யாரென்று தெரியாது கர்ணா' என்று கைவிரித்துவிட்ட நிலையில் வலது தோளில் கிடக்கும் அம்புக் கூடையையும், இடது தோளில் தொங்கும் வில்லையும் ஒருசேர அற்புதமாய் நழுவ விடுவார். அது அன்னை யாரென்று அறிந்து கொள்ள முடியாத அதிர்ச்சியின் பிரதிபலிப்பை அற்புதமாய் உணர்த்தும்.
தாய்,தந்தையிடம் இருந்து சற்று தள்ளிச் சென்று, அவர்கள் பெருமையை பேசிக்கொண்டிருப்பார்.
(அற்புதமான போஸ்களில்... ஒருமுறை சைட் போஸில் கம்பீரமாக அமர்ந்து... பின் அங்கிருக்கும் நிலைத்தூணில் கைவைத்து நின்றபடி)
http://i1087.photobucket.com/albums/..._000513523.jpghttp://i1087.photobucket.com/albums/..._000550659.jpg
'திடு'மென 'நான் உங்களைக் கேட்டுக் கொள்கிறேன்... நான் உங்கள் மகனில்லை என்று நீங்கள் என்னை ஒதுக்கி விடாதீர்கள்' என்று அங்கிருந்து இரு கைகளையும் மார்புக்கு நேராக நீட்டியபடி விரல்களை அசைத்தபடி ('வேண்டாம்' என்ற அர்த்தத்தில்) படுவேகமாக அங்கிருந்து யாரும் எதிர்பாரா வகையில் பெற்றோரை நோக்கி வருவார். அதே போல் தந்தை தன் தாய் வைத்து அனுப்பியதாக கூறிய பெட்டியை திறந்து காட்ட, அதிலிருக்கும் முத்துக்கள், மற்றும் மணிகளை இடது கையால் அள்ளி, கைகளை உயரக் கொண்டு போய் படுஸ்டைலாகக் மீண்டும் பெட்டியில் கொட்டுவார். முத்துக்களையும், மணிகளையும் பார்க்கும் பார்வையில் ஒரு ஆர்வமும், ஆச்சரியமும், விதியை எண்ணிய வியப்பும், சற்றே வெறுப்பும் கலந்திருக்கும். கண்கள் கலங்கிய நிலையில் இருக்கும்.
http://i1087.photobucket.com/albums/..._001752354.jpghttp://i1087.photobucket.com/albums/..._001758059.jpg
'நாணிச் சிவந்தன மாதரார் கண்கள்' என்று ராஜ பாண்டியப் புலவர் பாட ஆரம்பிக்கும் போது மங்கையர் நால்வர் புடவைத் தலைப்பால் தலை மூடி நாணித் திரும்ப, புலவரின் புகழ்ச்சி தாங்கமாட்டாமல் அழகான, அளவான புன்னகையுடன், சற்றே இறங்கியிருந்த பார்வையை இப்போது மேலிருத்தி, பாடும் புலவரை கொஞ்சம் கழுத்தொடித்து, கூச்சத்துடன் 'நம் கர்ணன்' நோக்குவார் பாருங்கள். ஜென்மத்திற்கு இந்தக் காட்சி ஒன்று போதும். 'நாணிச் சிவந்தன மாதரார் கண்கள்' என்ற கூற்றுக்குச் சான்றாக 'தன் ஆட்சியில் பெண்கள் சந்தோஷப் பெருமையுடன் வாழுகிறார்கள்' என்ற புலவரின் பாராட்டுக்கு (பெண்கள் விஷயமாதலால் இத்தகைய நாணம் கலந்த வீரப் பெருமிதம் நம் தெய்வத்திடம் அருமையாக வெளிப்படும். ஒரு சின்ன விஷயம் கூட இவரது பார்வையாலேயே அற்புதமாக மெருகேற்றப்பட்டுவிடும்).
அடுத்த வரிக்கு வேறு மாதிரி பாவனை வெளிப்படும்.
'நாடுதோறும் நடந்து சிவந்தன பாவலர் கால்கள்' வரிகளுக்கு 'நடிப்பின் சிகரம்' முன்னம் காட்டிய நாணம் இருக்காது. ஆனால் அதே பெருமிதம் இருக்கும். பின்னால் நிற்கும் பாவலர்களை பாட்டு வரிகளுக்கு அர்த்தம் தரும்படி லேசாகத் திரும்பிப் பார்ப்பார். பிறகு பாடலை சிரித்து கண்மூடி ரசிப்பார். முகத்தின் அந்த சிரிப்பு சிருங்கார ரசங்களை அப்படியே அள்ளிக் கொட்டும்.
மேகநாத சிறுவனிடம் விசாரணை மேற்கொண்டு, அவனும் தன்னைப் போல் தாயற்றவன் என அறிந்து துடித்து, தன் நிலையையும் அத்துடன் சம்பந்தப்படுத்திப் பார்த்து, வேதனையுற்று,
'நான் கெட்டவனோ அவர்கள் கெட்டவர்களோ' என்று தன் தாய் தந்தையரைப் பற்றி 'மாஸ்டர்' ஸ்ரீதர் சொல்லி அழ,
'ஆஹா! என்று அவனை அணைத்து,
'சிந்தனை எத்தனை அளவு இந்தப் பிஞ்சு உள்ளத்தில் போராடியிருந்தால் இத்தனை அளவு வேதனைச் சொல் வெளிவரும்?'
என்று 'நடிகர் திலகம்' வார்த்தைகளில், அதன் உச்சரிப்பில், சித்து விளையாட்டுக்கள் விளையாடும்போது இந்தக் காட்சியில் தியேட்டரே ஆர்ப்பரித்து பின் அடங்கியது. ஒவ்வொருமுறை 'கர்ணன்' பார்க்கும்போதும் இந்தக் காட்சியின் வசனம் காதுகளில் விழாத அளவிற்கு விழும் கரவோசைகள். அந்த 'சிந்தனை' க்கு ஒரு புது ராகம் இட்டு, அப்படி ஒரு அழுத்தமும், இடைவெளியும் கொடுப்பார்.
நடிகர் திலகத்தை ரசிக்க ஊர், நாடு, ஜாதி, மதம், மொழி, இனம் என்ற எதுவும் கிடையாது என்பதற்கு இதைவிட உதாரணத்தை நான் எப்படி காட்ட முடியும்?
ரசிப்புத்தன்மை அற்ற ஜடம் கூட இந்தக் காட்சியை உணர்ந்து அவர் பேசும் தொனி கண்டு சிலிர்த்தெழுவானே! அதனால்தானே அவர் எல்லாவற்றையும் கடந்த 'கர்ண' கடவுளாக நம் மனங்களில் வாழ்கிறார்.
'பாடசாலைக்குத் தீ வைத்தல் பாவமாயிற்றே...அறிவுள்ள நீ இதைச் செய்யலாமா?' என்று மேற்கொண்டு வினவ, அதற்கு ஸ்ரீதர்
'அறிவில்லாதவர்கள் அப்படிச் செய்ய என்னைத் தூண்டினார்கள்' என்று ஆத்திரப்பட,
உடனே 'நடிகர் திலகம்' 'சட்'டென்று,
http://i1087.photobucket.com/albums/..._001889922.jpghttp://i1087.photobucket.com/albums/..._000506240.jpg
'என்ன சொல்கிறாய்?... எனக்கொன்றும் புரியவில்லையே' என்று புரியாமை காட்டி, வலதுகை முஷ்டி விரல்களை மடக்கியவாறே கையை முகத்தருகே கொண்டு வருவார். ஆட்காட்டி விரலை இறுதியில் மடக்குவார். கை முகத்தருகே வரும் போது ஆட்காட்டி விரலால் மீசையைத்தான் வீரமாகத் தடவப் போகிறார் என்று நினைப்போம். ஆனால் ஏமாந்து விடுவோம். கைவிரல்களை மடக்கி, கையை மூடியபடியே மீசை அருகே மீசையைத் தடவாமல் அப்படியே வைத்துக் கொள்வார். அற்புதமான ஏமாற்றமாக நமக்கு அது இருக்கும்.
'மகனே! அரசுக்கே புத்தி சொல்லும் அறிவடா உனக்கு! ஒரு மந்திரிக்குள்ள மதி நுட்பம்... (வலது கை உயரும்) நிறுத்தி திரும்ப ஒரு தடவை 'ஒரு மந்திரிக்குள்ள மதி நுட்பம்' கூறுவார். கண்களும், புருவங்களும் ஏறி இறங்கி ஏற்றங்கள் புரியும்.
மறுபடியும் தொடர முயற்சிக்கிறேன்.
வாழ்தல் என்பது சும்மா உயிரோடிருத்தல் அல்ல.
உயிர்ப்போடிருத்தல்.
சாதிப்பில் உச்சம் பார்த்த
சான்றோர்களே...! நீங்கள்
எல்லோரும் வாழ்த்த, வாழ்த்த..
உயிர்ப்பானேன்.. நேற்று.
அப்பாவின் மரணம், அம்மாவின் கண்ணீர், கண்ணுக்கெட்டின தூரம் வரை
எதிர்காலம் பற்றின பயம்,
கிறுகிறுக்க வைக்கும் குடும்பப்
பொறுப்புகளென்று என் பதினாறாம் வயசில் திடீரென்று
திசை மாறிப் போன என்
வாழ்க்கையில் பல வருடங்கள்
பிறந்த நாள் குறித்த சிந்தனையே இல்லாது போனது.
"அவசியந்தானா" என்ற
சலிப்பான மனநிலையிலே
பின்னர் சில வருடங்கள்.
மணமாகி, குழந்தைகள் வந்த பின் வந்த பிறந்த தினங்களில்,
அவர்களின் பிஞ்சுக் கைகளால்,
பொம்மைகள் கிறுக்கிய மென்காகிதங்களில் வாழ்த்தெழுதிப் பரிசளித்த போதுதான், நான் பிறந்தது
தப்பில்லை என்றுணர்ந்தேன்.
உங்களைப் போலவே,
உலகின் மிக உயர்ந்த கலைஞனின் ரசிகன் என்பதன்றி உங்களோடு
வேறெந்த ரத்த சம்பந்தமும் இல்லாத எனக்கு, நீங்கள் சொன்ன வாழ்த்து, பொம்மைகள் வரைந்த காகிதப்
பரிசளிப்பாய் நேற்று நெகிழ்த்திய போதும் நான்
பிறந்தது தப்பில்லை என்றே
உணர்கிறேன்.
உங்களால் நேற்று நானடைந்த
பேரின்பத்திற்கும், பெருமைக்கும், "நன்றி" என்கிற
ஒற்றைச் சொல் மிகச் சாதாரணமானது என்பதை
நானறிவேன்.
ஆனாலும், உள்ளத்தில் பேரன்போடு ஆங்கிலத்திலும்,
தமிழிலும் நேற்று நீங்கள் சொன்ன "பிறந்தநாள் வாழ்த்துகள்" என்கிற
வார்த்தை சிறிதாயினும், என்னை நூறாண்டுகள் வாழ
வைக்கும் வல்லமை கொண்டதாயிருக்கிறதைப்
போல...
என்னுடைய "நன்றி" எனும்
சொல்லும் காலகாலத்திற்கும்
உங்களோடு என்னை அன்பில்
பிணைக்கும் வல்லமை கொண்டதாயிருக்கும்.
ஆசிர்வதித்த,
வாழ்த்திய
அனைவருக்குமாய்...
என் நன்றி.
-ஆதவன் ரவி-
ஆனாலும்...
இது பெருத்த அநியாயம்..
நெய்வேலியார்!
எண்ணற்ற "நினைப்போம். மகிழ்வோம்" களை ஒரே ஒரு
பதிவிற்குள்...
இது.. அநியாயம்.
"கேட்டதும் கொடுப்பது"
கிருஷ்ணன் மட்டுமல்ல.
"சிவா" வும் தான்.
கண்களைக் குளிர வைத்த
"கங்கை யமுனை" க்கான
எனது நன்றிகள்... கனடா
நோக்கி.
வாசு சார்
கர்ண ஜாலம் தங்கள் எழுத்தின் வர்ண ஜாலம்..
தங்கள் உள்ளத்தின் கர்ண ஜாலம்...
தங்களைப் பாராட்ட வார்த்தைகளே இல்லை.. என்று சொல்ல மாட்டேன்.
ஆதவன் ரவி தருவார்.
அவரிடம் இல்லாத தமிழ்...
உதட்டளவில் பேசாத தமிழ்...
அவரிடம் உள்ள தமிழ்..
உயிரோடு கலந்த தமிழ்...
வாசு சார்..
தங்களின் கொஞ்சு தமிழில்
கர்ணனின் வர்ண ஜாலத்தை..
எண்ணி மகிழ்கிறோம்..
இதயம் பூரிக்கிறோம்...
வாசு சார்..
தங்களைப் பாராட்ட எனக்குத் தெரிந்த மொழி... இது தான்...
http://i1146.photobucket.com/albums/...psy6sejeye.jpg
http://i1146.photobucket.com/albums/...pszwim8jvu.jpg
http://i1146.photobucket.com/albums/...psnfothzfc.jpg
http://i1146.photobucket.com/albums/...psqpp6i1hh.jpg
http://i1146.photobucket.com/albums/...ps8okoyusy.jpg
http://i1146.photobucket.com/albums/...psgpueio2p.jpg
http://i1146.photobucket.com/albums/...ps5b9ypdpf.jpg
http://i1146.photobucket.com/albums/...psybl5f3eu.jpg
http://i1146.photobucket.com/albums/...psnoohh8vi.jpg
http://i1146.photobucket.com/albums/...pszajjnyyl.jpg
http://i1146.photobucket.com/albums/...pscuijltxb.jpg
வாசு சார், ஏதோ டெலிபதி, ஒரே அலைவரிசை அப்படி சொல்வார்களே.. அதை இன்று நம்மிருவரிடையே இருப்பது நிரூபாணமாகி விட்டது. கிட்டத்தட்ட 10.30 மணியளவில் தான் இந்த நிழற்படங்களை ஒளித்தட்டிலிருந்து சேகரித்தேன். கிட்டத்தட்ட அதே நேரத்தில் தங்கள் பதிவும் வந்துள்ளது.
என்னே அதிசயப்பொருத்தம்...