-
சிங்கப்பூரில் ஒரு தையற்காரர் , “எம்.ஜி.ஆர் பேஷன் டெயிலர் ” என்று கடை நடத்தி வந்தார்.
மக்கள் திலகம் படங்களில் அணியும் உடைகளைப் போன்றே உடைகளை தைத்து சிங்கப்பூர் மக்களிடையே பிரபலமானார்.
அவர் ஒருசமயம் மக்கள் திலகத்தை காண இந்தியா வந்தார். கண்டார்.
“காணாதது தான் தெய்வம் , நீங்கள் கண்கண்ட தெய்வம் . தெய்வம்னா காணிக்கை செலுத்தனும் … நானும் ஒரு காணிக்கை கொண்டு வந்திருக்கிறேன் . ஒரு சூட்” என்று கொடுத்தார்
“அளவு ஏது ? நாயுடு கொடுத்தாரா?” என்று கேட்டார் மக்கள் திலகம் .
”இல்லை , ஒரு உத்தேசம் தான் . என் மனக்கணக்கால் பார்த்து வெட்டி தச்சேன் ” என்று போடச் சொன்னார் , அத்தோடு ரூ20,000 பணம் கொடுத்தார் .
“எதற்கு?” என்று மக்கள் திலகம் கேட்க “உங்க பெயரில் உங்களை கேட்காம கடை நடத்தறேன், நூத்துக்கு ஒரு டாலர் வீதம், உங்க பங்குக்கு சேர்ந்த பணம். இதுவும் என் காணிக்கை” என்றார் அந்த சிங்கப்பூர் டெய்லர்..
மக்கள் திலகம் அந்த பணம் இருந்த தட்டை தொட்டு முத்தமிட்டு, தனது பெட்டியிலிருந்து 5,000 ரூபாய் எடுத்து அதே தட்டில் இருந்த 20,000 ரூபாய்க்கு மேல் வைத்து” என் பேர்ல நடத்தி தோல்வியடையாமல் வெற்றியடைஞ்ச உங்க உழைப்புக்கு நான் தர்ற வெகுமதி … எடுத்துக்குங்க ” என்றார் ..
#MGR....... Thanks......
-
1969 - 2019
பொன்விழா ஆண்டு நினைவலைகள் 1969
மக்கள் திலகம் எம்ஜிஆரின் முக்கியமான அரசியல் மற்றும் சினிமா நிகழ்வுகள் .
1969 ஜனவரியில் அடிமைப்பெண் பட பிடிப்பில் தீவிரமாக இருந்தார்
நம்நாடு
மாட்டுக்கார வேலன்
என் அண்ணன்
தேடிவந்த மாப்பிள்ளை
எங்கள் தங்கம்
குமரிக்கோட்டம்
தலைவன் போன்ற படங்களில் இரவும் பகலுமாக நடித்து க்கொண்டிருந்தார்
ஜனவரி இறுதியில் பேரறிஞர் அண்ணாவின் உடல் நிலை மோசமாகி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார் . அண்ணாவை காண வரும் முக்கியஸ்தர்களுக்கு டிபன் மற்றும் உணவுகளை எம்ஜிஆர் தன்னுடைய சொந்த செலவில் வழங்கினார் .
பிப்ரவரியில் அண்ணாவின் மறைவு எம்ஜிஆருக்கு மிகப்பெரிய அதிர்ச்சியாக இருந்தது . மீளாத்துயரில் இருந்தார் .
கிங் மேக்கர் எம்ஜிஆர்
அரசியல் அரங்கில் திமுக வில் அடுத்த முதலவர் யார் என்ற கேள்விக்கு விடை அளித்தார் எம்ஜிஆர் . காரணம் அன்றைய சட்ட மன்ற உறுப்பினர்கள் அனைவரும் ராமாவரம் எம்ஜிஆர் தோட்டத்தில் குவிந்தார்கள் . எம்ஜிஆர் எலோருடன் கலந்து பேசி சட்டமன்ற தலைவராக முதல்வராக கருணாநிதியை ஆதரித்து வெற்றி கண்டு அவரை தமிழக முதவராக்கினார் .
மே மாதம் எம்ஜிஆரின் பிரமாண்ட படைப்பான அடிமைப்பெண் தென்னகமெங்கும் வெளிவந்து வசூலில் இமாலய சாதனை புரிந்து வெள்ளிவிழா கண்டது . மதுரை நகரில் வெள்ளிவிழா கொண்டாட்டம் சிறப்பாக நடந்தது .1969ல் சிறந்த படத்திற்கான விருது அடிமைப்பெண் படத்திற்கு கிடைத்தது .
திமுகவின் பொருளாளராக மக்கள் திலகம் எம்ஜிஆர் நியமிக்கப்பட்டார் . தமிழகமெங்கும் நடந்த பொதுக்கூட்டங்களில் எம்ஜிஆர் கலந்து கொண்டு பேரறிஞர் அண்ணாவின் உருவ சிலையை திறந்து வைத்தார் .
எம்ஜிஆர் மன்றங்கள் சிறந்த முறையில் இயங்கி வந்தது . ஒருங்கிணைந்த எம்ஜிஆர் மன்றங்கள் அனைத்துலக எம்ஜிஆர் மன்றம் என்று பெயர் மாற்றம் நடந்தது .
1969 தீபாவளிக்கு முன் நம்நாடு திரைப்படம் வெளிவந்து மகத்தான வெற்றி பெற்றது . எம்ஜிஆர் அண்ணாவின் நினைவாக துரை என்ற பாத்திரத்தில் நடித்தது சிறப்பு . மக்களின் பேராதரவை பெற்று வசூலை வாரி குவித்தது .
அடிமைப்பெண் படத்தில் இடம் பெற்ற '' காலத்தை வென்றவன் நீ ''
நம்நாடு படத்தில் இடம் பெற்ற '' வாங்கய்யா வாத்தியார் அய்யா ''
''நினைத்ததை நடத்தியே முடிப்பவன் நான் ''
எம்ஜிஆரின் ஆளுமைகளை நன்றாக எடுத்து காட்டிய பாடல்கள் பட்டி தொட்டி எங்கும் ஒலித்தது .
சினிமா அரசியல் இரண்டிலும் நம் எம்ஜிஆர் கொடி கட்டி பறந்த ஆண்டு 1969 என்றால் அது மிகையல்ல.
50 ஆண்டுகள் கடந்து விட்டாலும் இன்னும் எம்ஜிஆரின் நினைவுகளை நினைத்து மகிழும் உலகமெங்கும் வாழும் பல லட்சக்கணக்கான கோடானுகோடி கணக்கான எம்ஜிஆர் ரசிகர்கள்......... Thanks Friends.............
-
நேற்றைய தொடர்ச்சி....
புரட்சி தலைவர் பாடிய பாடல் வரிகள்தான் ஞாபகம் வருகிறது.
"ஒரு தவறு செய்தால் அதை தெரிந்து செய்தால் அவன் தேவன் என்றாலும் விடமாட்டேன்"....
சராசரி மனிதனாக நமக்கு ஏன் அரசியல் என்று இருந்த புரட்சி தலைவரை பெரியமனிதன் என்ற பெயரில் இந்த படத்தில் வருவதுபோல் ஊழல் செய்ததினால் அரசியலில் களம் இறங்கி சரித்திரம் படைத்தார்...
இந்த மாதிரி தலைவரின் நல்ல குணங்களை கண்டு என் இதயக்கனி என்று கூறினார் பேரறிஞர் அண்ணா.
40 வருடம் உடன் இருந்து இவை அனைத்தும் அறிந்தும் புரட்சி தலைவரை எதிரி ஆக்கி கொண்ட "துரோகி"யை என்ன சொல்வது?..... Thanks.......
-
அன்பார்ந்த நண்பர்களுக்கு வணக்கம்.
கடந்த 10 நாட்களாக மலேசியா,சிங்கப்பூர் நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு மக்கள் தலைவர் 31 வது நினைவு தின நிகழ்ச்சிகளை கண்டுகளித்துவெளிநாட்டு எம்.ஜி.ஆர். பக்தர்களின் வரவேற்பு, உபசரிப்பு, அன்பு, விருந்தோம்பல் கௌரவிப்பு, பரிசளிப்பு போன்ற விஷயங்களில் உண்மையிலேயே திக்கு முக்காடி விட்டோம் என்னுடன், திரு.கா. நா.பழனி, திரு.கலீல் பாட்சா, திரு.வெங்கடேச பெருமாள் ஆகிய மூவர் வந்திருந்தனர் .சிங்கப்பூரிலும் புரட்சி தலைவர் நினைவு நாள் நிகழ்ச்சி நடைபெற்றது . ஆயிரத்தில் ஒருவன் திரைப்படம் திரையிடப்பட்டது .
நேரம் இல்லாத காரணத்தால் எங்களால் பங்கு கொள்ள முடியவில்லை .
திரு.கா. நா.பழனி , மலேசியாவில் மக்கள் திலகம் என்கிற புத்தகத்தை வெளியீடு
செய்தது சிறப்பு அம்சம் . மக்கள் தலைவர் எம்.ஜி ஆர் அவர்களின் 31 வது நினைவு தின நிகழ்ச்சி கோலாலம்பூர் ,சோமா அரங்கில் 24/12/18 அன்று இரவு 7.30 மணியளவில் துவங்கியது .இரவு 8 மணிக்கு அரங்கம் நிரம்பி வழிந்தது .
300 பேர் அமரக்கூடிய அரங்கில் 400 பேர்கள் கண்டுகளித்தனர் .முக்கிய பிரமுகர் திருமதி ரத்னவள்ளி அம்மையார் தலைமையில் நிகழ்ச்சி துவங்கியது .
மகேந்திர சுவாமிகள் புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர்.புகழுக்கு பெருமை சேர்க்கும் வகையில் பேசினார் . புத்தக வெளியீடு நிகழ்ச்சிக்கு பின்னர் இசை நிகழ்ச்சி நடைபெற்றது கீழ்கண்ட பாடல்கள் விழாவில் இசைக்கப்பட்டன .
பாடல் திரைப்படம் பாடியவர்கள் .
-------------- ----------------- ----------------------
1.புத்தன் ஏசு காந்தி சந்திரோதயம் மேகநாதன்
2.சந்திரோதயம் ஒரு பெண்ணானதோ மேகநாதன் /பார்வதி
3.மாசிலா உண்மை அலிபாபாவும் 40 திருடர்களும் மதியழகன் /கவிதா
4.என்னருகே நீ இருந்தால் திருடாதே பாரதிகண்ணன் /பார்வதி
5.விழியே கதை எழுது புதிய பூமி சிவா /பார்வதி
6.பால் வண்ணம் பருவம் பாசம் பாரதிகண்ணன் /கலைவாணி
7.நிலவு ஒரு பெண்ணாகி உ.சு.வாலிபன் மேகநாதன்
8.எங்கே போய்விடும் காலம் தாழம்பூ மேகநாதன்
9.என்னதான் நடக்கும் பணத்தோட்டம் பாரதி கண்ணன்
10.நீங்க நல்லா இருக்கணும் இதயக்கனி எம்.ஜி.ஆர். ஹரி குழு நடனம்
11.சக்கரை கட்டி ராஜாத்தி பெ.பிள்ளையா மேகநாதன் /கலைவாணி
12.என்றும் பதினாறு கன்னித்தாய் பாரதி கண்ணன் /கவிதா
13.உலகம் சுற்றும் வாலிபனோடு உ.சு.வாலிபன் மேகநாதன்/பார்வதி
14.எந்தன் கதை இதுதான் பாக்தாத் திருடன் கலைவாணி
15.சிலர் குடிப்பது போலே சங்கே முழங்கு எம்.ஜி/ஆர். ஹரி/ஹேமா
நடனம்
16. நானொரு குழந்தை படகோட்டி மதியழகன்
17.நாளை நமதே நாளை நமதே மேகநாதன் /பாரதிகண்ணன்
18.அன்று வந்ததும் பெ.இடத்து பெண் எம்.ஜி.ஆர். ஹரி /வசந்தி குழு
நடனம்
19.அழகிய தமிழ் மகள் ரிக்ஷாக்காரன் எம்.ஜி.ஆர். ஹரி குழு
20.ஏமாற்றாதே அடிமைப்பெண் எம்.ஜி.ஆர். ஹரி நடனம்
21.உலகம் பிறந்தது பாசம் மதியழகன்
22.பட்டிக்காடா பட்டணமா மா.வேலன் எம்.ஜி.ஆர். ஹரி குழு நடனம்
23.ஒரே முறைதான் தனிப்பிறவி மேகநாதன் /கலைவாணி
24.பச்சைக்கிளி உ.சு.வாலிபன் பாரதி கண்ணன் / பார்வதி
25.போட்டி பாடல் சக்கரவர்த்தி திருமகள் எம்.ஜி.ஆர். ஹரி குழு
26.போய்வா நதி அலையே பல்லாண்டு வாழ்க சிவா / பார்வதி
27.மேரா நாம் அப்துல் ரஹ்மான் சி.வா. வேண்டும் மேகநாதன்
28.நாடோடி ஏய் அன்பே வா எம்.ஜி.ஆர். ஹரி/ஹேமா குழு
நடனம்
29.கனிய கனிய மன்னாதி மன்னன் மேகநாதன் / கலைவாணி
30.பொன்னந்தி மாலை இதய வீணை பாரதிகண்ணன் /பார்வதி
31.காலத்தை வென்றவன் அடிமைப்பெண் எம்.ஜி.ஆர். ஹரி /ஹேமா/
வசந்தி குழு நடனம்
முன்னதாக மாலை 6 மணியளவில் உள்ளூர் எம்.ஜி.ஆர். அமைப்புகள் இணைந்து
மாலை சிற்றுண்டி ஏற்பாடு செய்திருந்தனர் . நிகழ்ச்சி நள்ளிரவு கடந்து இரவு 1 மணி ஆகிவிட்டது . இருப்பினும் ரசிகர்கள் பெரும்பான்மையினர் அமர்ந்து கண்டுகளித்து ஏகோபித்த ஆதரவளித்து நிகழ்ச்சி பெரும் வெற்றிபெற துணை புரிந்தனர் . விழா குழுவினர் இரவு 2 மணியளவில் எங்களை உணவகத்திற்கு தங்கள் காரில் அழைத்து சென்று அதிகாலை 3.30 மணியளவில் எங்களது தங்கும் விடுதியில் சேர்த்துவிட்டு அதன்பின்னர் வீடு திரும்பினார்கள் என்பது குறிப்பிடத்தக்கது .மலேசிய எம்.ஜி.ஆர். பக்தர்களின் உதவி, உபசரிப்பு, அன்பு,
விருந்தோம்பல் ஆகியன போற்றத்தக்கது மட்டுமல்ல பாராட்டத்தக்கது .
அந்த அளவிற்கு நாம் அவர்களை வரவேற்று உதவிகள் செய்து , உபசரிப்பதே
நமது கடமை . அதுவே புரட்சி தலைவர் புகழுக்கு பெருமை சேர்ப்பதாக இருக்கும் என்பது என் கருத்து .
-
-
-
-
-
-