:clap:
Printable View
:clap:
1) “செய்... அல்லது செத்துமடி...” ---- நேதாஜி..
“படி.. அல்லது பன்னி மேய்...” --- எங்க பிதாஜி....
2) ஆசிரியர்: எவன் ஒருவனால் ஒரு விசயத்தை மற்றவர்களுக்கு புரிய வைக்க முடியவில்லையோ அவன் ஒரு முட்டாள்...
மாணவர்கள்: புரியல சார்...
3) போலீஸ்: பஸ் எப்படி விபத்தில் சிக்கியது?
டிரைவர்: அதான் எனக்கும் புரியல சார்... நான் நல்ல தூக்கத்தில இருந்தேன்.
4) மகன்: அப்பா! ஓவரா என்னை பக்கத்து வீட்டுப் பொண்ணோட கம்பேர் பண்ணிகிட்டு இருப்பியே... இப்ப பாரு... அவ 470 மார்க்.. நான் 480... மார்க்.
அப்பா: சனியனே... அவ பத்தாவது படிக்கிறா... நீ +2 படிக்கிரடா
5) மனைவி கணவனுக்கு இலக்கணம் சொல்லி கொடுக்கிறாள்.
மனைவி: நான் ரொம்ப அழகு... இது என்ன காலம்? (Tense)
கணவன்: அது ஒரு இறந்த காலம்....
11) தேர்வு அறையில்...
மாணவன்: ஆல் தி பெஸ்ட்!
மாணவி: ஆல் தி பெஸ்ட்!
மாணவன் பெயில்.... மாணவி 80%
நீதி: நல்லவங்க வாக்கு மட்டும்தான் பலிக்கும்....
(ஒழுங்கா படிக்க முடியாததுக்கு என்னமா சமாளிக்கிறான்னு பாருங்க....)
12) நாட்டாமை: என்ரா... பசுபதி...எக்ஸாம்’க்கு பெவிகால் எடுத்துட்டுப் போற?
பசுபதி: அய்யா.. கொஸ்டின் பேப்பர் லீக் ஆகிப் போச்சாம்..
நாட்டாமை: என்ர தம்பி சிங்கம்டா.. சிங்கம்டா..... சிங்கம்டா..
13) முடியாது என்று சொல்பவன் முட்டாள்...
முடியும் என்று சொல்பவந்தான் புத்திசாலி...
இப்ப சொல்லுங்க...என் “செல்”லுக்கு டாப்-அப் பண்ண முடியுமா...முடியாதா...?
14) லவ் லட்டருக்கும், எக்ஸாம்’க்கும் என்ன வித்தியாசம்?
லவ் லெட்டர்: மனசுக்குள்ள நிறைய இருக்கும்.. ஆனா எழுத வராது...
எக்ஸாம்: மனசுக்குள்ள ஒண்ணுமே இருக்காது... ஆனா நிறைய எழுதுவோம்... எப்பூடி?
16) கணவன்: காலெண்டர்’ல என்னப் பாக்குற?
மனைவி: பல்லி விழும் பலன்...
கணவன்: கொண்டா.. நான் பாக்குறேன்... அது சரி... பல்லி எங்க விழுந்தது?
மனைவி: நீங்க சாப்ட்ட சாம்பார்ல...
17) சைன்டிஸ்ட் எல்லாம் சொர்க்கத்தில கண்ணாமூச்சி விளையாடிட்டு இருக்காங்க.. நம்ம ஐன்ஸ்டீன் கண்டு பிடிப்பவர்... ஆனால் நியூட்டன் ஒளிந்து கொள்ளாமல் ஒரு மீட்டர் சதுரத்தில் நிற்கிறார்.....
ஐன்ஸ்டீன்: நியூட்டனைக் கண்டுபிடித்து விட்டேன்....
நியூட்டன்: இல்லை... தவறு... நான் நியூட்டன் இல்லை.. நான் ஒரு மீட்டர் சதுரத்தில் நிற்கிறேன்.. நான் நியூட்டன்/மீட்டர்.. எனவே நான் இப்போது பாஸ்கல்....
ஐன்ஸ்டீன்: ராஸ்கல்... என்ன இது சின்னப்புள்ளத்தனமா இருக்கு....?
18) நம்ம அய்யாச்சாமி நடு ஆற்றில் படகில் போய்க கொண்டிருக்கிறார்... அப்போது தூரத்தில் ஒரு போர்டு உள்ளதைப் பார்த்து அதில் என்ன எழுதி இருக்கிறது என்று படிக்க முயல்கிறார். ஆனால் அவரால் படிக்க முடியவில்லை... எனவே அவர் படகிலிருந்து குதித்து நீந்தி சென்று படிக்கிறார்...
“இங்கு முதலை உள்ளது...யாரும் இங்கே நீந்த வேண்டாம்.”
19) நம்ம சூப்பர் ஸ்டார் சாப்ட்வேர் என்ஜினியராக ஒரு படத்தில் நடித்தால் பன்ச் டயலாக் எப்படி இருக்கும்?
* J to the A to the V to the A --- JAVA
* கண்ணா... வைரஸ் தான் கூட்டமா வரும். ஆண்ட்டி வைரஸ் சிங்கில்’லாத்தான் வரும்.
* C க்கு அப்புறம் C++... எனக்கு அப்புறம் NO++
GP - Gud ones :D
:clap:
ஒரு காதல் கடிதம்..
நம்ம பையன் ஒருத்தனுக்கு, அவன் கூட படிக்கிற பொண்ணு மேல திடீர்ன்னு பயங்கிறமா ‘தெய்வீககாதல்’ (அவன் இப்படித்தான் சொன்னான்) வந்திருசச்சுங்க. அவன் ஒரு வித்தியாசமான(!) கடிதம் எழுதி அதை எங்கிட்ட காமிச்சான். இதோ அந்த கடிதம்…
——-
அன்பே விஜி,
கீழே குடுத்திருக்கிற எல்லா கேள்விகளுக்கு உனக்கு சரின்னு படுற பதிலை செலக்ட் பண்ணு
1) நீ நம்ம க்ளாஸுக்கு உள்ள வரும்போதெல்லாம், கண்டிப்பா உன் பார்வை எம்மேல விழுது, அதுக்கு காரணம்:
அ) “காதல்”
ஆ) “என்னால உன்னை பார்க்காம இருக்க முடியல”
இ) “நிஜம்மாவா..!!அப்படி எல்லாம் ஒன்னும் இல்லை”
2) யாராவது க்ளாஸ்ல ஜோக்கடிச்சா, உடனே நீ சிர்ச்சுகிட்டே என்னை திரும்பி பார்க்குற, அதுக்கு காரணம்:
அ) “நீ சிரிச்சிட்டு இருக்கிறதை நான் பார்க்கனும்”
ஆ) “உனக்கு இந்த மாதிரி ஜோக்கெல்லாம் புடிக்குமான்னு தெரிஞ்சுக்க ஆசைப்பட்டேன்”
இ) “உன் சிரிப்பு எனக்கு புடிச்சிருக்கு”
3)நீ ஒரு நாள் கிளாஸ்ல பாடிட்டு இருந்த, அந்த நேரம் பார்த்து நான் உள்ளே வந்தேன், நீ உடனே பாடுறத நிறுத்திட்ட, அதுக்கு காரணம்:
அ) “உன் முன்னாடி பாடுறதுக்கு எனக்கு வெட்கமா இருந்தது”
ஆ) “நீ திடீர்ன்னு உள்ளே வந்தது எனக்கு என்னமோ மாதிரி ஆயிடுச்சு”
இ) “நான் பாடிட்டு இருந்தது உனக்கு புடிக்குமோ புடிக்காதோன்னு எனக்கு பயமாயிருச்சு”
4) உன்னோட சின்ன வயசு புகைப்படத்தை நீ எல்லாருக்கும் காமிச்சிட்டு இருந்த, ஆன நான் கேட்டதும், நீ அதை மறச்சுட்ட, அதுக்கு காரணம்:
அ) “எனக்கு வெட்கமா இருந்துச்சு”
ஆ) “உன்கிட்ட காமிக்கிறதுக்கு எனக்கு எதோ ஒரு சங்கடம்”
இ) “எனக்கு தெரியலை”
5) நாம அருவிக்கு பிக்னிக் போனப்போ, ஒரு மேடு ஏறும் போது, நானும் என் கூட இருந்த நண்பனும் உனக்கு கை குடுக்க வந்தோம், நீ அவனோட கைய புடிச்சு மேல ஏறி வந்த, அதுக்கு காரணம்:
அ) “உன்னோட ஏமாற்றத்தை பார்க்க ஆசைப்பட்டேன்”
ஆ) “உன் கைய புடிச்சா, உடனே விட்டுட்டு போக எனக்கு மனசு வராது”
இ) ” எனக்கு தெரியல ”
6) நீ நேத்து பஸ் ஸ்டாப்புல காத்திட்டு இருந்த, ஆனா பஸ்ஸுல ஏறுல, அதுக்கு காரணம்:
அ) “உனக்காக காத்திட்டு இருந்தேன்”
ஆ) “உன்னை நினைச்சிட்டு நின்னதுல, பஸ் வந்ததை கவனிக்கலை”
இ) “பஸ் கூட்டமா இருந்தது”
7) உங்க அப்பா காலேஜுக்கு வந் தப்ப, நீ என்னை அவருக்கு அறிமுகப்படுத்தி வச்ச, அதுக்கு காரணம்:
அ) “நீ தான் என்னோட வருங்காலம்னு சொல்ல ஆசைப்பட்டேன்”
ஆ) “எங்கப்பாவுக்கு உன்னை புடிக்குதாஅன்னு தெரிஞ்சுக்க”
இ) “சும்மா, அறிமுகப்படுத்தனும்னு தோனுச்சு”
8) எனக்கு ரோஜாப்பூ புடிக்கும்ன்னு ஒரு நாள் சொன்னேன், அடுத்த நாள் நீ தலையில ரோஜாப்பூ வச்சுகிட்ட வந்த அதுக்கு காரணம்:
அ) “உன் ஆசைக்காகத்தான்”
ஆ) “உனக்குத்தான் ரோஜாப்பூ புடிக்குமே அதுக்காக”
இ) “அது தற்செயலா நடந்தது”
9) என் பிறந்த நாளன்னைக்கு காலையில 5 மணிக்கு நான் கோவிலுக்கு வந்தேன், நீயும் அன்னைக்கு கலையில கோயிலுக்கு வந்திருந்த, அதுக்கு காரணம்:
அ) “உன் பிறந்த நாளன்னைக்கு உன் கூட சாமி கும்பிடலாம்னு”
ஆ) “உன் பிறந்த நாளன்னைக்கு எல்லாருக்கும் முதல்ல, நான் உன்னை பார்க்கனும்னு”
இ) “உனக்கு கோயில்ல வச்சு வாழ்த்து சொல்லனும்னு ஆசைப்பட்டேன்”
எந்த பதிலும் தப்பில்லை, எல்லா பதில்களுக்கு ஒரு மார்க் இருக்குது
(அ)10, (ஆ)5, (இ)3 மார்க்.
40 மார்க்குக்கு மேல வாங்கியிருந்தா, “நீ என்னை காதலிக்கிற, ஏன் அதை என்கிட்ட சொல்ல மாட்டேங்கிற”
30க்கும் 40க்கு இடையில இருந்தா, “உனக்கு எம்மேல காதல் வர ஆரம்பிச்சிருச்சு”
30க்கும் கீழ இருந்தா, “உனக்கு என்னை புடிச்சிருக்கு, ஆனா காதலிக்கலாமா, வேண்டாமான்னு யோசிக்கிற”
உன்னோட பரிட்சை முடிவை எதிர்ப்பார்த்து காத்திருக்கும்
–உன் அன்பு காதலன்(?).
——————————————————————-
இதை எடுத்துட்டு அவனும், ஒரு நல்ல நாள் பார்த்து, சாமி எல்லாம் கும்பிட்டு, அந்த பொண்ணுகிட்ட குடுத்திருக்கான், அதுவரைக்கும் எல்லாம் நல்லாத்தான் நடந்திருக்கு, அப்புறம் தான்ங்க கிளைமாக்ஸே!! . இவன் குடுத்த கேள்விக்கு நேரிடையா பதில் குடுக்காம அந்த பொண்ணும் ஒரு கேள்வித்தாள் எழுதி குடுத்திருச்சு.
பதில் கடிதம்.
கேள்வி பதில் பாணியில நம்ம பையன் குடுத்த காதல் கடிதத்துக்கு அந்த பொண்ணோட பதில் கடிதம்:
—————————————————————
கீழே குடுத்திருக்கிற எல்லா கேள்விகளுக்கு உனக்கு சரின்னு படுற பதிலை செலக்ட் பண்ணு.
1) கிளாஸ்ல முதல் பெஞ்சுல யாராவது உக்காந்திருந்தா, உள்ளே வர்ரவங்க அவங்களை பார்கிறது சகஜம்
அ) ஆம்
ஆ) இல்லை
2) ஒரு பொண்ணு சிரிச்சுட்டு, ஒருத்தரை பார்த்த்தா அதுக்கு பேரு காதல்
அ) ஆம்
ஆ) இல்லை
3) பாட்டு பாடும் போது, திடீர்ன்னு பாட்டு வரி மறந்துபோயிட்டா, பாடுறவங்க பாடுறத பாதியில நிறுத்திருவாங்க
அ) ஆம்
ஆ) இல்லை
4) நான் என்னோட சின்ன வயசு போட்டோவை என்னோட நன்பர்கள்கிட்ட காமிச்சிட்டு இருக்கும்போது, நீ நடுவுல வந்து மூக்க நுழைச்சிட்ட
அ) ஆம்
ஆ) இல்லை
5) பிக்னிக்ல உன் கைய புடிச்சு மேடு ஏறுரத நான் தவிர்த்தேன். அது ஏன்னு உனக்கு இன்னும் புரியல
அ) ஆம்
ஆ) இல்லை
6) நான் என்னோட (பெண்)நண்பருக்காக பஸ்ஸ்டான்ட்ல காத்திட்டு இருக்ககூடாதா?
அ) ஆம்
ஆ) இல்லை
7) உன்னை நான் என்னோட அப்பாகிட்ட ‘நண்பன்’னு அறிமுகப்படுத்த கூடாதா?
அ) ஆம்
ஆ) இல்லை
8)உனக்கு ரோஜா மட்டுமில்லை, தாமரை, மேஃப்ளவர், காலிப்ளவர், கூட புடிக்கும்னு சொன்னியே, அது உண்மை தானே?
அ) ஆம்
ஆ) இல்லை
9) ஓ! அன்னைக்கு உன் பிறந்த நாளா? அதுதான் உன்னை கோயில் பக்கம் பார்த்தேனா?. நான் தினமும் காலையில கோயிலுக்கு வருவேன், அது உனக்கு தெரியுமா?
Login - Sollavae Illae
Training - Mudiayalae
New project - Ukkandhu Yosipangalo
Customer Call - Why blood sammmmeeeee blood
Performance Review - Ippavae kanna kattudhey
Daily report - Edhayumay plan pannama pannakoodathu
Commitment - Opening nallathan irukku aana finishing sari illayaeppa
Credit manager - Risk edukarathu ellam rusk sappitarama mathiri
RELATIONSHIP MANAGER - Enna vaichu Comedy Kemedy pannalayae
Audit - Kilambitangaya Kilambitangaya
Intha kotai thandi neeyum varakoodathu nanum varamattaen Petchu petchaathan irukunum
Error - Vena valikuthu azhutharivaen
Oru chinna puravukaga pora! periya akkaporalla irukku
Bonus - Aiyo Vadai pochae
Customer - Na rowdi na rowdi na rowdi na jailuku poren na jailuku poren na jailuku poren
Before Performance review - ithu valliba vayasu- building strongu basement weeku
After Performance review!!- ivan evalo adichaalum thaangaran enna romba nallavunu solletanya
Hike - Paavam Yaru petha pulliayo thaniya pollambitiruku
Promotions - Varum anna varathu
Deliquent Customer - Mapp.u..... Mapp..p..u .... Vaichitaya Aappu
துடிப்பது என் இதயம்தான்
ஆனால் அதன் உள்ளே இருப்பது நீ
வலித்தால் சொல்லிவிடு
நிறுத்தி விடுகிறேன்
துடிப்பதை அல்ல.
இப்படி ஓவரா ரீல் விடுவதை.
ஏன்.... தண்ணி தெளிச்சி கோலம் போடுறாங்க தெரியுமா...!
கோலம் போட்டு தண்ணி தெளிச்சா கோலம்
அழிஞ்சிடும்ல..!
முடியாது முடியாது..
சில விஷயத்தை மாத்த முடியாது
காலிஃப்ளவர் தலைக்கு வைக்க முடியாது.
கவரிங் கோல்டு அடகு வைக்க முடியாது.
கோல மாவில் தோசை சுட முடியாது.
வீணாப் போன குறுஞ்செய்தி வந்தாலும் உன்னால படிக்காம இருக்க முடியாது.
ஆறு முழுவதும் போகுதாம் தண்ணி
பாத்ரூமுல குளிக்குதாம் பன்னி