The brief usage of 'poongAtRu thirumbumA' in 'mozhi' was good...can't decide whether to call it a spoof or not, though.
Printable View
The brief usage of 'poongAtRu thirumbumA' in 'mozhi' was good...can't decide whether to call it a spoof or not, though.
சில நாட்களுக்கு முன் இங்கே குறிப்பிட்டபடி வசந்த் தொலைக்காட்சியில் ஒவ்வொரு புதன் இரவு 9 முதல் 9.30 வரை சிங்கத்தமிழன் சிவாஜி என்ற நிகழ்ச்சி ஒளிப்பரப்பாகிறது. சென்ற வாரம் ஆரம்பித்தது. அதில் வந்த சில சுவையான விஷயங்கள். [நான் பார்க்கவில்லை. கேள்விப்பட்ட செய்தி]. கீழ்க்கண்ட விஷயங்களை பகிர்ந்து கொண்டவர் ராம்குமார்.
நடிகர் திலகம் நடிக்கும் போது தன்னுடைய நடிப்பு எப்படி வந்திருக்கிறது, அதில் ஏதேனும் குறைகள் இருக்கின்றனவா என்பதை செட்டில் இருக்கும் டெக்னிஷியன்ஸ் முகத்தில் தெரியும் பாவத்தைக் கொண்டே கண்டுபிடித்து விடுவாராம். அதிலும் லைட் பாய்ஸ் முகம் எப்படி இருக்கிறது என்று பார்ப்பாராம். அவர்கள் முகம் சரியில்லையென்றால் இயக்குனர் ஓகே சொன்னால் கூட ரீடேக் எடுக்கச் சொல்வாராம். அப்படியிருந்ததனால் தான் அவரால் அந்த அளவிற்கு நடிப்பில் வெற்றி பெற முடிந்தது என்று ராம் சொல்லியிருக்கிறார்.
இரண்டாவது செய்தி இன்னும் சுவாரஸ்யமானது. வருடம் 1979. நடிகர் திலகத்தின் 200வது படமான திரிசூலம் வெளியாகி நூறு நாட்களை கடந்து ஓடிக் கொண்டிருக்கும் நேரம். அப்போது ஒரு நிகழ்ச்சிக்கு அன்றைய தமிழக முதல்வர் எம்..ஜி.ஆர் அவர்களை அழைப்பதற்காக நடிகர் திலகம் கோட்டைக்கு சென்றிருக்கிறார். அந்த நேரத்தில் எம்.ஜி.ஆர் "என்ன கணேசு! உன் 200வது படம் எப்படி போகுது" என்று கேட்க அதற்கு சிவாஜி "பரவாயில்லை! நல்லா போகுதுன்னு சொல்றாங்கண்ணே" என்று பதில் சொன்னாராம். "பரவாயில்லையா?" என்று கேட்டு இன்டர்காம்-ல் ஏதோ கூப்பிட்டு சொன்னாராம். சற்று நேரத்தில் ஒரு பைல் அவர் டேபிளுக்கு வந்ததாம். அதை திறந்து காட்டி விட்டு இது கமர்ஷியல் டாக்ஸ் [வணிக வரி துறை] பைல். இதிலே உன் படம் எந்தெந்த ஊரிலே எவ்வளவு நாள் ஓடியிருக்கு எவ்வளவு வசூல் ஆயிருக்கு எல்லாம் இருக்கு. கவர்மென்ட்க்கு வரியா எவ்வளவு வருமானம் கிடைச்சிருக்குனு பார்த்தா இதுவரைக்கும் தமிழ் சினிமா மூலமா இவ்வளவு நாளிலே இவ்வளவு வருமானம் வேற எந்த படத்திற்கும் வந்ததில்லைன்னு எனக்கு நோட் போட்டு அனுப்பிச்சிருக்காங்க, நீ என்னடானா பரவாயில்லைனு சொல்றே என்று கேட்டாராம் எம்.ஜி.ஆர். ஆனால் சிவாஜிக்கு அந்த வசூல் விவரங்கள் தெரியாது என்பதை எம்.ஜி.ஆர் பிறகு தெரிந்துக் கொண்டாராம். தமிழ் திரைப்பட துறைக்கு அரசாங்கம் சில சலுகைகளை கொடுப்பதற்கு திரிசூலம் ஒரு காரணமாய் இருந்தது என்று ராம்குமார் அந்த நிகழ்ச்சியில் சொன்னாராம்.
அன்புடன்
கடந்த வாரம் தங்கப்பதக்கம் மதுரையில் நடிகர் திலகத்தின் நினைவு நாளை முன்னிட்டு வெளியிடப்பட்டதைப பற்றி எழுதியிருந்தேன். அந்த படம் ஒரே வாரத்தில் நாற்பத்தி ஏழாயிரம் ருபாய் [Rs 47,000/-] வசூலித்திருக்கிறது. அதாவது சராசரியாக ஒரு நாளுக்கு ருபாய் ஏழாயிரம் வசூல் [Rs 7,000/-]. அண்மைக் காலங்களில் ஒரு பழைய படத்திற்கு கிடைத்த மிகப் பெரிய வசூல் இது என்பது சிறப்பு தகவல். மூன்று வருடக் காலத்திற்கு இந்தப் படத்தின் வெளியீட்டு உரிமையை பதினைந்தாயிரம் ரூபாய்க்கு [Rs 15.000/-] விலை கொடுத்து வாங்கிய நபர் இந்த ஒரு வாரத்திலேயே லாபம் பார்த்து விட்டார். இதன் மூலம் வேறு ஒரு நன்மை. பழைய படங்களிலே கூட action படங்களாக [ராஜா, நீதி, தியாகம் போன்றவை] வெளியிட்டுக் கொண்டிருந்தவர்கள் இப்போது குடும்ப சென்டிமென்ட் படங்களையும் வெளியிட தொடங்கியுள்ளார்கள். அதற்கு சான்றாக இன்று முதல் மூன்று நாட்களுக்கு [செவ்வாய், புதன்,வியாழன்] மதுரை ராம் தியேட்டரில் பச்சை விளக்கு ரெகுலர் ஷோவாக வெளியிடப்பட்டிருக்கிறது.
அன்புடன்
இந்த வாரம் ஸ்டாடிஸ்டிக்ஸ் வாரம்.
முன்பு வெளி வந்துக் கொண்டிருந்த எங்கள் சிவாஜி என்ற இதழின் சில பகுதிகளை காணும் வாய்ப்பு கிடைத்தது [குறிப்பிடத்தக்க விஷயம் என்னவென்றால் இந்த இதழை நடத்திய விஜயன் இன்று எம்.ஜி.ஆருக்காக இதயக்கனி என்ற இதழை நடத்திக் கொண்டிருக்கிறார்]. அதில் இலங்கையில் நடிகர் திலகத்தின் படங்கள் நிகழ்த்திய சில சாதனைகள் அதில் வெளியிடப்பட்டிருந்தது. அதிலிருந்து சில துளிகள். முதலில் தலைநகர் கொழும்பு.
கொழும்பில் பொதுவாக ரசிகர்கள் ரீலீசுக்கு முதல் நாள் இரவே தியேட்டரில் கூட்டம் கூட ஆரம்பித்து விடுவார்கள். ஆகவே படம் முதல் நாள் இரவே ஆரம்பித்து விடும். அப்படி கூட்டத்தின் காரணமாக நள்ளிரவு பன்னிரண்டு மணிக்கே ஷோ ஆரம்பித்து சாதனை புரிந்த படம் அன்பைத் தேடி. அரங்கம் நவா. அதற்கு முன் 12.30 மணிக்கு படம் ஆரம்பித்ததே சாதனையாக இருந்தது.
பாட்டும் பரதமும் நகரின் வெளிப்பகுதியில் அமைந்திருந்த பெரிய திரையரங்கமான சமந்தாவில் தொடர்ந்து 39 காட்சிகள் அரங்கு நிறைந்து புதிய சாதனையை ஏற்படுத்தியது. நகரின் மையப்பகுதியில் அமைந்த தியேட்டரிலேயே உலகப் புகழ் பெற்ற படங்கள் எல்லாம் வெறும் 32 காட்சிகள் மட்டும் அரங்கு நிறைந்த போது, நடிகர் திலகத்தின் சாதாரண படம் கூட அதை விட அதிக சாதனை புரிந்திருக்கிறது.
கொழும்பு நகரில் எங்கள் தங்க ராஜா பெற்ற வசூல் - Rs 2,06,204.20 p.
இது அதே வருடம் வெளியான பெரிய வெற்றிப்படத்தின் வசூலை விட ஐம்பதினாயிரம் அதிகம்.
கொழும்பில் மெயின் அரங்கை தவிர இரண்டாவது அரங்கிலும் படம் வெளியிடப்படும். அந்த அரங்குகளில் படங்கள் பெற்ற வசூல் விவரங்கள்.
எங்கள் தங்க ராஜா - பிளாசா - Rs 2,06,204.20 p
சிவகாமியின் செல்வன் - ஈராஸ் - Rs 1,99, 815.35 p
இந்த இரண்டு படங்களுமே மற்ற படங்களின் வசூலை குறைவான நாட்களியே முறியடித்திருக்கிறது.
யாழ் நகர் சாதனைகள்
மன்னவன் வந்தானடி வெலிங்டன் அரங்கில் 25 காட்சிகள் தொடர் ஹவுஸ் புல். வேறு சில படங்கள் மூன்று தியேட்டர்களிலும் சேர்த்தே 19 காட்சிகள் தான் ஹவுஸ் புல்.
வசந்த மாளிகை ஓடி முடிய ஹவுஸ் புல் காட்சிகள் - 218
சிவகாமியின் செல்வன் ஓடி முடிய ஹவுஸ் புல் காட்சிகள் - 89
நடிகர் திலகத்தின் பெரிய வெற்றிப் படம் என்று சொல்ல முடியாத சி.செல்வன் போன்ற படங்களே பெரிய வெற்றிப் படம் என்று சொல்லப்பட்ட படங்களின் ஹவுஸ் புல் காட்சிகளை விட அதிகமாக ஆகியிருக்கிறது.
தங்கப்பதக்கம் 50 நாட்களில் பெற்ற வசூல் ஒரு போட்டி படத்தின் 80 நாட்கள் வசூலை விட அதிகம். அதே போல் எங்கள் தங்க ராஜா 90 நாட்களில் போட்டி படத்தின் 100 நாள் வசூலை விட அதிகம் வசூலித்திருக்கிறது.
தங்கப்பதக்கம் 50 நாள் வசூல் - Rs 3,04,679/- [அரங்கம் ஸ்ரீதர்]
எங்கள் தங்க ராஜா 90 நாள் வசூல் - Rs 3,63,820/- [அரங்கு ராஜா].
அதே போல் வசந்த மாளிகை யாழ் நகரில் ஓடி முடிய பெற்ற வசூல் போட்டி படத்தின் வசூலை விட ரூபாய் ஒரு லட்சத்திற்கும் அதிகம்.
வசந்த மாளிகை ஓடி முடிய வசூல் - Rs 5,54,419.
நாளை ஒரு பெங்களூர் தகவல்.
அன்புடன்
நேற்று சொன்னது போல் கர்நாடக மாநில தலைநகரான பெங்களூரில் 1976-77 ஆண்டுகளில் நடிகர் திலகம் நிகழ்த்திய சில சாதனைகள் கீழே கொடுத்திருக்கிறோம். இதை குறிப்பாக வெளியிடுவதன் நோக்கம் இந்த ஆண்டுகளில் நடிகர் திலகத்தின் படங்கள் சரியாக போகவில்லை என்பது போன்ற மாயத் தோற்றம் உருவாக்கப்பட்டிருந்தது. அது எந்த அளவிற்கு உண்மைக்கு புறம்பானது என்பதை விளக்கவே இந்த சின்ன சாதனைகளை இங்கே வெளியிடுகிறோம்.
1976 ஆண்டு இறுதியில் வெளியான ரோஜாவின் ராஜா திரைப்படம் பெற்ற வசூல்
லட்சுமி - 28 நாள் - Rs 1,21,135.45
நடராஜ் - 28 நாள் - Rs 1,16,073.05
விநாயகா, நியூசிடி - 21 நாள் - Rs 53,439.65
நலந்தா - 7 நாள் - Rs 35,192.70
பாலாஜி - 7 நாள் - Rs 24,671.45
கந்தா - 7 நாள் - Rs 21,745.15
கபாலி - 7 காட்சி - Rs 20,120.80
சாந்தி - 7 காட்சி - Rs 7,905.10
மொத்தம் - Rs 4,00,283.50
1977 ஆண்டு தொடக்கத்தில் வெளியான தீபம் செய்த சாதனை
சங்கீத் - 29 நாள் - Rs 1,46,883.40
கீனோ - 29 நாள் - Rs 1,19,020.50
நியூசிடி- 29 நாள் - Rs 77,871.10
நலந்தா - 14 நாள் - Rs 46,760.20
கபாலி - 9 காட்சி - Rs 24,992-50
மொத்தம் - Rs 4,15,527.70
1976-ம் ஆண்டு ஜனவரி மாதத்திலிருந்து மேற்சொன்ன இரண்டு படங்களை தவிர வேறு எந்த படமும் நான்கே வாரத்தில் நான்கு லட்ச ரூபாய் வசூல் செய்ததில்லை.
சங்கீத் - இவ்வரங்கில் தீபம் 42 காட்சிகள் ஹவுஸ் புல் ஆனது. மற்ற படங்களெல்லாம் 20 காட்சிகள் கூட அரங்கு நிறையவில்லை.
தீபம் நான்கு வாரத்தில் பெற்ற வசூலை மற்ற படங்கள் ஓடி முடிய கூட பெறவில்லை.
ரோஜாவின் ராஜா 8 அரங்குகளில் முதல் வாரத்தில் பெற்ற வசூல் Rs 2,04,526.40. அந்த காலக்கட்டத்தில் குறிப்பாக அந்த இரண்டு வருடக் காலத்தில் [1976 -77] வேறு எந்த படமும் செய்யாத வசூல் சாதனை அது.
அன்புடன்
PS: இந்த வசூல் விவரங்கள் எல்லாம் விநியோகஸ்தர்களான என்னாம் பிலிம் கார்பரேஷன் மற்றும் ஈஸ்வரி பிக்சர்ஸ் அவர்களிடமிருந்து திரட்டிய தகவல்கள்
More news to be put into the Sathanai Sigaram thread. Thanks Murali-sar.
Murali Sir & Plum, thanks for registering your valuable thoughts in reply to my post.
BTW, last week I was just watching a few scenes from " Engirundho Vandhaal". The scene where NT regains his normal mental state after being disturbed for quite some time. It could be less than a fraction of second, and you must look at his face. His dress will be that of a mad man - shabby, torn, dirty etc., but his face will bear the looks of an ordinary sane person - very calm & composed.
What a gifted actor NT is !!!! :notworthy:
Plum, great point on MGR's spoof & why it is being restricted to only his signature gesture & voice. Very thoughtful.
Now, NT is the man to be blamed for etching out those immortal characters with great panache. :)
People who regularly follow this thread must have noticed that I wrote about one Mr.Pammal Swaminathan, who was running a film magazine by the name Vasantha Maaligai dedicated to NT. He also happens to be a silent reader of our forum. He had taken up an ambitious project of creating individual websites for all the 300 movies acted by NT. He had started the work. Though the site is under construction category, you can have a look into it.
http://www.parasakthi1.webs.com/
http://www.panam2.webs.com/
http://www.uthamaputhran45.webs.com/
http://www.deivappiravi61.webs.com/
http://www.paasamalar69.webs.com/
These are the first 5 films for which he had started the work. More will follow.
Regards
From Nadigar thilagam.com
உலகப் பெரு நடிகர், உலகத் தமிழர்களின் அடையாளம், நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் நினைவு நாளன்று உலகெங்கும் உள்ள கோடிக்கணக்கான ரசிகர்களும் தமிழர்களும் அவருக்கு நினைவாஞ்சலி செலுத்தியுள்ளனர். ஆனால் தென்னிந்திய நடிகர் சங்கம் சார்பில் அஞ்சலியும் செலுத்தப் படவில்லை, நினைவும் செலுத்தப் படவில்லை. தன் ஒவ்வொரு துளி வேர்வையினையும் சிந்தி, சங்கத்தின் கட்டிடத்திற்காக வாங்கிய ஒவ்வொரு பைசாவுக்கும் நியாயமாக செலவு செய்து தன் உழைப்பையெல்லாம் சங்கத்திற்காகவும் சக உறுப்பினர்களுக்காகவும் கொடுத்த நடிகர் திலகத்திற்கு அச்சங்கம் காட்டியுள்ள நன்றி நம்மை புல்லரிக்க வைக்கிறது. இப்படியெல்லாம் கூட தமிழுணர்வும் நன்றியுணர்வும் அற்றுப் போகுமா என்ற வினா எழுகிறது.
சரி, தொலைக்காட்சிகளில் காட்டப்பட்டுள்ள நன்றியுணர்வு எப்படி. தமிழினத் தலைவர் டாக்டர் கலைஞர் அவர்களின் தொலைக் காட்சி மட்டும் தான் அவரை அன்று உரிய முறையில் நினைவு கூர்ந்துள்ளது. 21.07.2009 அன்று காலை 9.00 மணி முதல் 10.00 மணி வரை ஒளிபரப்பான தேனும் பாலும் நிகழ்ச்சியில் அனைத்துப் பாடல்களும் காலத்தால் அழிக்க முடியாத நடிகர் திலகத்தின் தத்துவப் பாடல்கள், நெஞ்சில் நிரந்தரமாக இடம் பெற்ற தத்துவ முத்துக்கள்.
மற்ற எந்த தொலைக்காட்சியும் நடிகர் திலகத்திற்கு உரிய முறையில் அன்று மரியாதை செலுத்தியதாகத் தெரியவில்லை.
கலைஞர் தொலைக்காட்சிக்கு நம்முடைய இணையதளம் சார்பில் உளமார்ந்த நன்றிகள்.
மற்றபடி வேறு ஏதாவது தொலைக்காட்சியில் நடிகர் திலகத்தின் நினைவு நாளான 21.07.2009 அன்று உரிய முறையில் அவருக்கு அஞ்சலி செலுத்தப் பட்டிருந்தால் சம்பந்தப்பட்ட தொலைக்காட்சியினர் அதனைப் பற்றிய விவரங்கள் அனுப்பலாம்.
since I stopped seeing these channels long back , I don't know much. For the past one month, local cable regularly telecast old NT and MGR movies only once in three days. On 21st , they telecast Engirndo vandal and Annai Illam and same movies was retelecast on 22nd morning. Before a week back TM and Tiruvilayadal was telecast. Except Tamil, they telecast only new movies. i had an oppor. to see old movies of NT and MGR. Yesterday they Night they telecast MGR's Nam Naadu and Kodiyirunda Kovil. On Friendship day, in Maa TV, telecast a clipping from NT's Karnan not NTR's Karnan. Recently I happened to see Mohan Babu's (he acted in Annan Oru Kovil) interview in Zee telugu. though he is good friend of Super star RK and great fan of NTR, during 1990's he invited our NT and Prabhu for his college inaguration (opening ceremony) in tirupati. In respecting Great Legends Telugh channels are far better than Tamil channels.