குடியிருந்த கோவில் திரைப்படத்தில் மக்கள் திலகத்தின் உணர்ச்சிமய நடிப்பில் அமைந்த காட்சி விடீயோ பதிவுக்கு நன்றி வினோத் ஸார்.
Printable View
விரைவில் வருகிறது..புதுச்சேரி நியூடோனில்...
மணிவண்ணன்-கரிகாலன் மிரட்டும்
நீரும் நெருப்பும்
http://i40.tinypic.com/2my2p0k.jpg
வாள் வீச்சுக்கென்றே பிறந்த வாத்தியார்
இன்றும் திரையுலகை ஆளும் இறைவன்
சமீபத்தில் திரைக்கு வந்து ஓடிகொண்டிருக்கும் தனுஷ் நடித்த மரியான் படத்திலும் தலைவரின் தாக்கம் தொடர்கிறது..
இரண்டு காட்சிகளில் தலைவரின் திரைப்பட பாடல் ஒலிக்கிறது..ஒரு காட்சியில் உரிமைக்குரல் காவியத்தில் வரும் 'கல்யாண வளையோசை' பாடல் ஒலிக்கும்..இன்னொரு காட்சியில் ஆயிரத்தில் ஒருவனின் ' நாணமோ இன்னும் நாணமோ' பாடல் ஒலிக்கிறது..கதாநாயகன் கதாநாயகியுடன் டூரிங் டாகிசில் புரட்சித்தலைவரின் படகோட்டி திரைப்படம் பார்ப்பார்..எல்லோரும் ஆரவாரத்துடன் 'தொட்டால் பூமலரும்' பாடலை விரும்பி ரசித்து பார்ப்பார்கள்..
http://i41.tinypic.com/2iavokm.png
அந்த பாடலை ஸ்க்ரீன் முழுவதும் காட்டியபோது..புதுச்சேரி பாலாஜி தியேட்டரில், திரையரங்கமே கைதட்டலில் அதிர்ந்தது..இன்னும் மக்களை ஆண்டுகொண்டிருக்கும் ஆண்டவன்தான் நம் இதய தெய்வம்...
உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் .எம்ஜிஆர்.
kaliyaperumal sir
advance video scene ''neerum neruppum ''
makkal thilagam -in super action
http://youtu.be/BfJlIXfZIU0
நம் நட்சத்திர நாயகனின் திரிகள் மக்கள் திலகம் எம்ஜிஆர் மற்றும் பொன்மனச்செம்மல் எம்ஜிஆர் ஆகிய இரண்டும் ஐந்து நட்சத்திர அந்தஸ்து பெற்ற செய்தி தேனினும் இனிய செய்தி..இந்த தகுதி பெற அயராது பாடுபட்ட பேராசிரியர் திரு. செல்வகுமார், திரு.வினோத், திரு.ரவிச்சந்திரன், திரு. ஜெய்ஷங்கர், திரு. வேலூர் ராமமூர்த்தி, திரு. மாசானம், திரு. ரூப், திரு. சைலேஷ் பாபு, திரு. எம்ஜிஆர் பாஸ்கரன் மற்றும் நம் திரியின் அனைத்து நண்பர்களுக்கும், மேலும் இந்த திரியை பார்த்து ரசித்த அனைத்து உள்ளங்களுக்கும், நம் இதய தெய்வத்தின் பக்தர்கள் சார்பாக நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்துகொள்கிறேன்..
உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் .எம்ஜிஆர்.
My heart felt condolence to Manjula family.
Azhagiya Tamil Magal Ival
http://www.mgrroop.blogspot.in/2013/07/manjula.html
Happened to see that it is very rare occurence a MGR movie running 100 days in Mayavaram. I have only two ad showing mayavaram theater.
One is Rickshawkaran
http://i125.photobucket.com/albums/p...pse5a57b6e.jpg
Another movie is Ulagam Sutrum Vaaliban.
http://i125.photobucket.com/albums/p...ps8e209877.jpg
How many MGR movies had crossed 100 days in Mayavaram centre, can anyone tell me?
I had the list of MGR movie release mainly in cities and towns. Anybody having theater list in other B and C centres.
FROM MAALAI MALAR NEWS PAPER
http://i42.tinypic.com/96cfaq.jpg
FROM DAILY THANTHI TAMIL DAILY
http://i44.tinypic.com/1zmnyxe.jpg
courtesy- ilango - net
சின்ன வயதில் அதாவது பள்ளிக்கூடம் செல்லும் நாளிலிருந்து நான் எம்ஜிஆர் ரசிகன். படம் பார்ப்பதோடு சரி. கல்லூரிக்கு சென்ற பின்னர் விவரம் தெரிந்த பின்புதான் சிவாஜி,ஜெமினி, எம்.ஆர்.ராதா நடித்த படங்களை பார்த்தேன்.
அப்போதெல்லாம் ரசிகர்களில் சிலர் படம் வெளியான,முதல் நாளே,முதல் காட்சியை பார்த்து விட்டு ஏதோ வீர தீர செயலை செய்தது போல பெருமையாக சொல்லுவார்கள்.அவர்கள் சொல்லுவதை நம்புவதா வேண்டாமா என்று தோன்றும்.உடனே அவர்கள் தாங்கள் வாங்கிய சினிமா தியேட்டரின் டிக்கட்டை எடுத்து காண்பிப்பார்கள்.அல்லது தியேட்டரில் மட்டுமே விற்கப்படும் பாட்டு புத்தகத்தை எடுத்து நீட்டுவார்கள். இன்னும் சில ரசிகர்கள் தெருவில் உள்ள மன்றத்திலேயே பழியாக கிடப்பார்கள்..எம்ஜிஆர் படங்கள் ரிலீசாகும் தினம் மன்றத்தை அலங்கரிப்பது, மன்றத்திலிருந்து படம் வெளிவந்த தியேட்டர் வரை ஊர்வலமாக செல்வது என்று ரொம்பவும் அமர்க்களப் படுத்துவார்கள். இதனால் பள்ளிப் படிப்பை கோட்டை விட்டவர்களும் உண்டு.
அப்போது எம்ஜிஆர்- சிவாஜி இருவரும் சினிமா உலகில் கொடி கட்டி பறந்த நேரம். இரண்டு பேருக்குமே ஏராளமான ரசிகர்கள். தி.மு.கவில் எம்ஜிஆர் என்றால் காங்கிரஸில் சிவாஜி. இருவரது ரசிகர்களும் அப்படியே இருந்தார்கள். எம்ஜிஆர் மன்றத்திற்கு அருகிலோ அல்லது எதிரிலோ., சிவாஜி ரசிகர் மன்றம் இருக்கும். இதனால் இரண்டு மன்ற ரசிகர்களுக்கும் இடையில் அடிக்கடி மோதல் வந்து போகும்.
எம்ஜிஆருக்கு ஜோடியாக நடித்த நடிகைகள் சிவாஜிக்கும், சிவாஜிக்கு ஜோடியாக நடித்த நடிகைகள் எம்ஜிஆருக்கும் நடித்தார்கள். இருந்தாலும் எம்ஜிஆர்-சரோஜாதேவி, சிவாஜி-பத்மினி, ஜெமினி-சாவித்திரி ஜோடிகள் அப்போது பிரசித்தம்.ஜெமினியும் சாவித்திரியும் நிஜ வாழ்க்கையிலும் ஜோடியாகி விட்டனர். அதிலும் எம்ஜிஆர் ரசிகர்கள் சரோஜாதேவியை சொந்த அண்ணியாகவே நினைத்தனர்.அப்போது அந்தநேரத்தில் எம்ஜிஆர் ரசிகர்கள் இளைஞர்களாக இருந்ததும் ஒரு காரணம். அதற்கு தகுந்தாற் போல எம்ஜிஆரும் சரோஜாதேவியும் நெருங்கி நடித்தனர்.
http://i44.tinypic.com/2924qd5.jpg
”காவேரி கரை இருக்கு கரைமேலே பூவிருக்கு” “ராஜாவின் பார்வை ராணியின் பக்கம்”
குமரிப் பெண்ணின் உள்ளத்திலே (எஙக வீட்டுப் பிள்ளை),”ஏதோ ஏதோ ஒரு மயக்கம்”(குடும்ப தலைவன்),”தொட்டு விடத் தொட்டு விட தொடரும்”(தர்மம் தலை காக்கும்),”அன்று வந்ததும் இதே நிலா” -இடி இடிச்சு மழை பொழிஞ்சு எல்லாம் நின்னாச்சு”(நீதிக்குப் பின் பாசம்),”தொட்டால் பூ மலரும் தொடாமல் நான் மலர்ந்தேன்” (படகோட்டி), ”ஜவ்வாது மேடையிட்டு சர்க்கரை பந்தலிட்டு” (பணத்தோட்டம்), ,”கல்யாண நாள் பார்க்க சொல்லலாமா”(பறக்கும் பாவை),”ஒரு பெண்ணைப் பார்த்து நிலவைப் பார்த்தேன்”(தெய்வத்தாய்),- என்று எம்ஜிஆர் சரோஜாதேவி டூயட் பாடல்களை பாடிக்கொண்டே போகலாம்.
courtesy- ranga rajan -net
ஆயிரத்தில் ஒருவன்
1965இல் வந்த படம். எம்ஜிஆர், ஜெயலலிதா, நாகேஷ், நம்பியார், மனோகர், ராமதாஸ், எல். விஜயலக்ஷ்மி நடிப்பு. விஸ்வநாதன்-ராமமூர்த்தி இணைந்து இசை அமைத்த கடைசி படம்.
கலர் படங்கள் அபூர்வமாகவே வந்த காலத்தில் வந்த கலர் படம். கலர் மேக்கப் ரொம்ப கோரமாக இருக்காது (சரோஜாதேவி, எங்க வீட்டுப் பிள்ளை, enough said) எட்டு மணி மணியான பாட்டுகள். ராஜா ராணி சாகசக் கதைகளில் எம்ஜிஆரை அடிக்க ஆளில்லை என்று நிரூபித்த படம்.
எம்ஜிஆர் ஒரு டாக்டர். சர்வாதிகாரி மனோகரை எதிர்க்கும் புரட்சியாளர்களுக்கு தன் தொழில் தர்மப்படி சிகிச்சை அளிப்பார். அதற்காக அடிமையாக ராமதாசின் தீவில் விற்கப்படுவார். அங்கே சென்று நாம் அடிமையாகவே இருக்க வேண்டியதுதானா என்று கேட்கும் தோழர்களுக்கு ஓராயிரம் ஆண்டுகள் ஆகட்டுமே, நம் பொறுமையின் பொருள் மட்டும் விளங்கட்டுமே என்று ஆறுதல் சொல்வார். நடுவில் தன்னை சைட் அடிக்கும் ஜெவை பற்றி மாளிகையில் அவள் வீடு, மரக்கிளையில் ஏன் கூடு, இதில் நான் அந்த மான் நெஞ்சில் வாழுவதேங்கே கூறு என்று பாடுவார். கொள்ளை அடிக்கவரும் நம்பியாருடன் போராடினால் சுதந்திரம் தருகிறேன் என்று சொல்லும் ராமதாசை நம்பி நம்பியாரை விரட்டுவார். ஏமாற்ற நினைக்கும் ராமதாசிடமிருந்து தப்பி நம்பியாரின் கப்பலில் போவார். நம்பியாரின் ப்ளாக்மெயிலால் கொள்ளைக்காரனாக மாறுவார். ஆனால் கொள்ளைக்காரர்களிடமிருந்துதான் கொள்ளை அடிப்பார். ஜெவின் கப்பலை கைப்பற்றுவார். ஜெவை விரும்பும் நம்பியாரிடமிருந்து அவரை காப்பாற்ற தன் அடிமையாக்கிக்கொள்வார். பிறகு அவரை மணப்பார். நம்பியாரிடமிருந்து தப்ப முயற்சி செய்யும்போது நம்பியாருடன் ஒரு சூப்பர் கத்தி சண்டை போட்டு பிறகு அதோ அந்த பறவை என்று பாட்டு பாடி, மனோதரின் கப்பலுடன் சண்டை போட்டு, மனோகரை சாவிலிருந்து காப்பற்றி, மனோகர் தரும் ராஜ பதவியை நிராகரித்து டாக்டராகவே வாழ்வார்.
அவரல்லவோ சூப்பர்மான்? இப்போதைய நடிகர்கள் எந்த காலத்திலும் அவருக்கு ஈடாக முடியாது.
அருமையான ஆர்ட் டைரக்ஷன். காட்சிகள் மிகவும் ரிச்சாக எடுக்கப்பட்டிருக்கின்றன. கப்பல் காட்சிகள் நம்மை இன்னும் அசத்துகின்றன. பந்துலு பணத்தை தண்ணீ ராகத்தான் செலவழித்திருக்கிறார்.
எம்ஜிஆர், நம்பியார், ஜெ, ராமதாஸ் ஆகியோருக்கு நல்ல வேஷப் பொருத்தம். சரோஜா தேவியின் கொஞ்சல் பாணியிலிருந்து விடுதலை! நாகேஷ் ராமதாஸ் காட்சிகளில் சிரிக்கலாம்.
நம்பியாரிடமிருந்து ஜெவை ஒரு பெட்டியில் வைத்து கடத்தி செல்ல, நம்பியார் அந்த பெட்டியில் தன் வாளை செருகும் காட்சி அருமையானது. அதோ அந்த பறவை போல வாழ வேண்டும் என்று பாடும் போது தியேட்டரில் உற்சாகம் பிய்த்துக்கொண்டு கிளம்பும்.
ராமதாஸ் பேசும் “நமக்கு வாய்த்த அடிமைகள் மிகவும் திறமைசாலிகள். ஆனால் வாய்தான் காது வரை இருக்கிறது” என்ற வசனம் எங்கள் வட்டத்தில் ரொம்ப ஃபேமஸ்!
கண்ணதாசனும் வாலியும் போட்டி போட்டுக்கொண்டு அருமையான பாட்டுகளை எழுதி இருக்கிறார்கள். கண்ணதாசன் “அதோ அந்தப் பறவை”, “நாணமோ” பாட்டுகளை எழுதினால், வாலி “பருவம் எனது பாடல்”, “ஆடாமல் ஆடுகிறேன்”, “ஏன் என்ற கேள்வி”, “ஓடும் மேகங்களே”, “உன்னை நான் சந்தித்தேன்” போன்ற பாட்டுகளில் அசத்தி இருக்கிறார்.
எனது ஃபேவரிட் அதோ அந்த பறவைதான். எல்லாருக்குமே அதுதான் ஃபேவரிட். பாட்டும், கப்பலில் எம்ஜிஆரும் ஜெவும் ஓடி ஆடி பாடுவதும் பிரமாதம்.
எனக்கு பிடித்த அடுத்த பாட்டு ஏன் என்ற கேள்விதான். அருமையாக படம் பிடிக்கப்பட்டிருக்கும். எம்ஜிஆரும் அவர் தோழர்களும் வட்டமாக படுத்துக்கொண்டு தண்ணீர் குடிக்கும் காட்சி பார்க்க பிரமாதமாக இருக்கும்.
ஓடும் மேகங்களேவுக்கு மூன்றாவது இடம். நாட்டிலுள்ள அடிமைகளில் ஆயிரத்தில் நான் ஒருவன் என்ற வரிகள் மிக அருமை. படத்தின் டைட்டிலை வேறு அர்த்தத்தில் வாலி உபயோகித்திருப்பார். வார்த்தைகள் வருவதற்கு முன் அருமையான இசை.
ஒரே ஒரு டூயட் – நாணமோ. நல்ல பாட்டு.
ஜெவுக்கு மூன்று சோலோ பாட்டுகள். பருவம் எனது பாடல், உன்னை நான் சந்தித்தேன், ஆடாமல் ஆடுகிறேன் என்று. நன்றாக, அந்த காலத்துக்கு கவர்ச்சியாக ஆடியிருப்பார்.
எம்.ஜி.ஆரின் அரசியல் வாழ்க்கைக்கு வித்திட்ட படங்களில் ஆயிரத்தில் ஒருவனும் ஒன்று. இந்த படம் தான் அவரை கோடி மக்களின் தலைவனாக உருவாக்கியது.
நான் ஒரு வைத்தியன் ... இந்த சமுதாயத்திற்கு வைத்தியம் பார்ப்பது மட்டும் தான் என் தொழில்.
தோல்வியை எதிரணிக்கு பரிசளித்வன் நான் இது போன்ற வசனங்கள் ரசிகர்களை கவர்ந்தது.
இந்த படம் வெளியாகும் போது எம்.ஜி. ஆர் ரசிகர்கள் எப்படி இருந்தார்களோ... அதே நிலை தான் இப்போதும் பார்க்க முடிகிறது.
இனிய நண்பர் திரு ரூப் சார்
மாயவரம் நகரில் மக்கள் திலகத்தின் மூன்று படங்கள் ஓடியுள்ளதாக அதிகாரபூர்வ தகவல் உள்ளது .
1. மதுரை வீரன் -1956
2. ரிக்ஷாக்காரன் - 1971
3. உலகம் சுற்றும் வாலிபன் - 1973.
திருச்சி
தஞ்சை
குடந்தை
மாயவரம்
கரூர்
பட்டுக்கோட்டை
திரையிட்ட 6 நகரங்களில் 100 நாட்கள் ஓடிய படம்
உலகம் சுற்றும் வாலிபன் .
1971ல் வெளிவந்த, மக்கள் திலகத்தின் " ரிக்க்ஷாக்காரன் " திரைப்படத்தினை யொட்டி, புரட்சித் தலைவரின் புகழ் பாடிய "திரை உலகம் " பத்திரிகையில் (15-05-1971 பதிப்பு) நடிகை மஞ்சுளா விடுத்த வேண்டுகோள்
http://i41.tinypic.com/xe0s42.jpg
இயற்கை எய்திய நடிகை மஞ்சுளாவுக்கு, இதய தெய்வம் எம். ஜி. ஆர். அவர்களின் புகழ் பாடுவதையே குறிக்கோளாக கொண்டு செயல்படும் அனைத்துலக எம். ஜி. ஆர். பொது நலச் சங்கம் (பதிவெண்: 304/2007) சார்பாக, அஞ்சலி.
அன்பன் : சௌ.செல்வகுமார்
என்றும் எம். ஜி. ஆர்.
எங்கள் இறைவன்
1971ல் வெளிவந்த, மக்கள் திலகத்தின் " ரிக்க்ஷாக்காரன் " திரைப்படத்தினை யொட்டி, புரட்சித் தலைவரின் புகழ் பாடிய "திரை உலகம் " பத்திரிகை (15-05-1971 பதிப்பு) வெளியிட்ட சிறப்பு மலரில், நடிகை மஞ்சுளாவின் பேட்டி http://i42.tinypic.com/vhc8li.jpg
http://i44.tinypic.com/2e3zp0g.jpg
அன்பன் : சௌ.செல்வகுமார்
என்றும் எம். ஜி. ஆர்.
எங்கள் இறைவன்
மக்கள் திலகத்தின் மாண்புகளைப் பற்றி "கலைப்பூங்கா" பத்திரிகையின் சமீபத்திய பதிப்பில் வெளியான பெருமை மிகு செய்தி
http://i41.tinypic.com/11kds3c.jpg
http://i42.tinypic.com/s4nmsn.jpg
அன்பன் : சௌ.செல்வகுமார்
என்றும் எம். ஜி. ஆர்.
எங்கள் இறைவன்
மக்கள் திலகம் '' தலைவன் '' படம் 44வது ஆண்டு துவக்கம் .
24.7. 1970 அன்று வெளியான மக்கள் திலகத்தின் படம் .
http://i43.tinypic.com/dlqr8g.jpg
துப்பறியும் அதிகாரியாக மக்கள் திலகம் நடித்த படம்
படத்தின் ஆரம்ப காட்சிகளில் மக்கள் திலகத்தின் யோகா மற்றும்
மூச்சு பயிற்சி பற்றிய காட்சிகள் அற்புதம் .
அறிவுக்கு வேலை கொடு ....
பாய் விரித்தது பருவம் ....
ஓடையிலே ஒரு தாமரைபூ
நீராழி மண்டபத்தில் .. தென்றல் ....
பழமொழி கலவை பாடல் ....
மக்கள் திலகத்தின் பொழுது போக்கு படங்களில் ஒன்று .
இனிமையான பாடல்கள் - சண்டை காட்சிகள் என்று
ரசிகர்களுக்கு விருந்து தந்த படம் .
சென்னை
குளோப்- 42 நாட்கள்
மகாராஜா -35 நாட்கள்
சரவணா - 35 நாட்கள்
நூர்ஜெஹான் - 35 நாட்கள் .
பேராசிரியர் செல்வகுமார் அவர்களுக்கு,
மக்கள் திலகத்தோடு நடித்த காலம்சென்ற மஞ்சுளா அவர்கள் திரை உலகம் ஏட்டில் விடுத்த செய்தியை வெளியிட்ட தங்களுக்கு நன்றி பல.
அன்புடன்
எஸ். ரவிச்சந்திரன்
-----------------------------------------------------------------------
நல்லவர் லட்சியம் வெல்வது நிச்சயம்
மக்கள் திலகத்தின் வழி நடப்போம்
-----------------------------------------------------------------------
கலை மன்னன்
ஸ்டைல் மன்னன்
மக்கள் திலகம் தன்னுடைய ஒவ்வொரு படங்களிலும் ஒரு வித்தியாசத்தை ஏற்படுத்தினார்..சிகை அலங்காரம், உடைகள், அதற்கேற்ற நடிப்பு என்று தனி ஸ்டைலையே ஏற்படுத்தினார்...அதே சமயம் அந்த உடைகள் மற்றும் நடிப்பு அனைவரும் ரசிக்கும் வண்ணம் இருப்பதை பார்த்துகொண்டார்..அவருடைய உடைகளை அவருடைய ரசிகர்களும் தலைவரின் உடையை பார்த்தால், சிகை அலங்காரத்தை பார்த்தால் அது எந்த படம் என்று சொல்லிவிடலாம், இந்த சிகை அலங்காரத்தை பார்த்தல் என்ற அளவிற்கு படத்திற்கு படம் வித்தியாசம் காட்டினார்.. அதனால்தான் இன்றும் அவருடைய படங்கள் ரசிக்கும்படியாக இருந்து வசூலை குவிக்கின்றன..
சில படங்களை பார்ப்போம்:
நாடோடி மன்னன்:
http://i39.tinypic.com/sv1i5s.jpg
http://i42.tinypic.com/2cmrnb.jpg
http://i43.tinypic.com/jka8ep.jpg
இதில் நாடோடி-மன்னன் ஆன பின்பு உடைகள் மிகவும் வித்தியாசமாகவும், அவர் கட்டுடலை காட்டும் வண்ணம் அழகாக இருக்கும்..அந்த உடைகளை பாரத்தாலே இது நாடோடி மன்னன் படம் என்று சொல்லிவிடலாம்..அந்த உடைகள் தலைவரின் இன்னொரு படத்தில் காண முடியாது..
......அடுத்து ....அலிபாபா
Of the above mentioned list of centres I have Trichy town centres and here MGR movies did a good performance on par with Madurai.
In Trichy nearly 43 movies had crossed 100 days.
Madurai Veeran has 100 days run in Pattukottai Murugaiah,
In Thanjavur I find movies like Madurai Veeran, Nadodi Mannan, Enga Veetu Pillai, Kudieruntha Kovil, Adimaipenn, Rickshawkaran, Ulagam Sutrum Vaaliban, Urimaikural
In Karur Madurai Veeran, Nadodi Mannan, Ulagam Sutrum Vaaliban.
Another movie to reach 100 days in Pattukottai is Ulagam Sutrum Vaaliban.
http://i125.photobucket.com/albums/p...ps8e209877.jpg
In Kumbakonam the following movies had 100 days run.
Madurai Veeran, Kudieruntha Kovil, Oli Vilakku, Nam Nadu, Rickshawkaran, Ulagam Sutrum Vaaliban, Urimaikural.
Olivilakku ad showing Madurai, Trichy, Kumbakonam centre.
http://i125.photobucket.com/albums/p...ps76d2f7a0.jpg
Dear Prof. Selvakumar sir
மக்கள் திலகத்தின் பொற்கால ஆட்சியின் சாதனைத் துளிகளை அழகுற வரிசைப்படுத்தியிருந்தீர்கள். மிக மிக அருமையாக இருந்தது. இதே திரியில் 3வது பாகம் அல்லது 4ஆம் பாகத்தில் அவர் தம் ஈகைத் திறனை வெளிப்படுத்தும் விதமாக அவர் வாரி வழங்கிய செய்திகளில் சிறு துளியை (மீதி வெளியுலகம் அறியாதது) எங்களுடன் பகிர்ந்து கொண்டீர்கள். அதனை மறு பதிவு செய்ய வேண்டுகிறேன்.(தேடிக்கண்டுபிடிக்க முடியவில்லை.)மற்ற நண்பர்களும் அறிந்து கொள்ள இது பெரிய வாய்ப்பாக இருக்கும்.
இனிய நண்பர் திரு ரூப் சார்
மக்கள் திலகத்தின் பல படங்கள் தமிழ் நாட்டில் முக்கியமான நகரங்களில் வெற்றி நடை போட்டுள்ளது .
முதல் வெளியீட்டில் மக்கள் திலகத்தின் படங்கள் கீழ் கண்ட
35 இடங்களில் வழக்கமாக வெளி வரும் .
சென்னை - தாம்பரம் - பல்லாவரம் -வில்லிவாக்கம் -காஞ்சிபுரம்
வேலூர் - திருவண்ணாமலை - திருப்பத்தூர்
கடலூர் - சிதம்பரம் -விழுப்புரம் - பாண்டி-விருத்தாசலம்
சேலம் - தர்மபுரி
கோவை - ஈரோடு - பொள்ளாச்சி - உடுமலை - திருப்பூர் -ஊட்டி
மதுரை - திண்டுக்கல் -ராமநாதபுரம் - பழனி - விருதுநகர் -காரைக்குடி
நெல்லை -தூத்துக்குடி - நாகர்கோயில்
திருச்சி -கரூர் - தஞ்சை -குடந்தை - மாயவரம் -பட்டுக்கோட்டை
புதுக்கோட்டை .
தென்னிந்திய திரை பட வரலாற்றில் முதல் முறையாக 18 இடங்களில் 20 அரங்கில் 100 நாட்கள் ஓடிய படம்
''உலகம் சுற்றும் வாலிபன் ''
மாவட்ட வாரியாக
சென்னை-3
செங்கை -1
வடஆற்காடு-1
பாண்டி-1
சேலம் -1
கோவை -2
மதுரை -2
நெல்லை -2
கன்னியாகுமரி -1
திருச்சி - தஞ்சை -6
36 இடங்களில் , 39 அரங்கில் வெளியான இந்த படம் எல்லா அரங்கிலும் 50 நாட்களை கடந்தது .
அரசியல் நிர்பந்தம் -நெருக்கடி -மிரட்டல்கள் காரணமாக
மற்ற 19 அரங்கில் 100 நாட்கள் ஓடும் வாய்ப்பு இருந்தும்
9,10,11,12 வாரங்களில் படம் எடுக்கப்பட்டுவிட்டது .
கடலூர் - திருவண்ணமலையில் இணைந்த 100 நாட்கள் ஓடியது .
பெங்களூர் நகரில் முதல் முறையாக மூன்று அரங்கில்
100 நாட்கள் ஓடிய படம்
நடராஜ் -105
சிவாஜி -105
அபேரா -105
மெஜஸ்டிக் -50
சாந்தி - 28.
ACTRESS MANJULA 'S LAST FUNCTION AT MAKKAL THILAGAM MGR IN NADODIMANNAN RERELEASE FUNCTION AT CHENNAI -2005.
http://i43.tinypic.com/28wfew2.jpg
http://i42.tinypic.com/jgihrc.jpg