Originally Posted by
g94127302
இன்று அதிகமான நகைச்சுவை தேவைப்பட்டது - அதனால் அந்த சில பகுதிகளை இங்கே போடுவதில் தவறில்லை என்று நினைக்கிறன் - கோபால் சொன்னது போல நம் தலைவரை பற்றி பேசவே நேரம் நிறைய வேண்டும் - எதற்கு அங்கு தலையிட வேண்டும் ? இருந்தாலும் அவர்கள் நகைச்சுவை என்ற பெயரில் அவர்களுடைய ஆதங்கத்தை தெரிவிக்கும் போது நாம் நம் support யை அவர்களுக்கு கொடுக்கா விட்டால் , நாம் மனித தன்மை இல்லதாவர்களாகி விடுவோம்
சில பதிவுகளை பார்ப்போம்
சலித்துப் பார்த்தாலும் சாதனைகள் செய்யாத நடிகர்கள் மத்தியில் சலிக்காமல் சாதனைகள் செய்த ஒரே நடிகர் நம் மக்கள் திலகம்.
எப்படி அழகாக சலிக்கிறார்கள் பாருங்கள் --- இப்படிப்பட்ட கற்பனை திறன் நமக்கு யாருக்காவது உண்டா - open challenge !!
தமிழ் திரையுலக வரலாற்றிலேயே முதல் முதலாக 33 தியேட்டர்களில் 100 நாட்கள் ஓடிய திரைப்படம் மக்கள் திலகம் நடித்த மதுரை வீரன் திரைப்படம்.முதல் வெளியீட்டில் ஒரு கோடியே ஐந்து லட்சம் ரூபாயை வசூலாக பெற்ற முதல் திரைப்படம் இது.இந்த படம் வெளியான 1956ம் ஆண்டு ஒரு பவுன் தங்கத்தின் விலை 90 ரூபாய்.தியேட்டரில் டிக்கெட்டின் அதிகபட்ச விலை 12 அணாக்கள்.90ரூபாய்க்கு பவுன் விற்ற காலத்தில் ஒரு கோடியே ஐந்து லட்சம் ரூபாய் வசூல் என்றால் இன்றைய காலகட்டத்தில் அது ரூபாய் 210 கோடியை தாண்டுகிறது.வசூல் சக்கரவர்த்தி என்றால் அது என்றுமே எம்ஜிஆர் தான். -
ஏன் இன்னும் 137 தியேட்டர்களை விட்டு விட்டார்கள் என்று புரியவில்லை ? - If this was true then there was no need for India to have gone in for IMF loan .
திரைப்பட வரலாற்றிலேயே முதல் முதலாக கட் அவுட் வைக்கப்பட்டது மகாதேவி படத்திற்கு தான்.பெங்களூர் லக்ஷ்மி திரையரங்கில் மிக பிரம்மாண்டமான கட் அவுட் வைக்கப்பட்டது .அந்த காலத்தில் எந்த மொழி படத்திற்கும் இத்தனை பெரிய கட் அவுட் வைக்கப்படவில்லை என்பது கூடுதல் தகவல்.
இது வணங்காமுடியை கண்டு பொறுக்காமல் எழுந்த பகுதி
1958 இல் வெளியான நாடோடி மன்னன் இலங்கையில் 7 திரையரங்குகளில் நூறு நாட்கள் ஓடிய ஒரே படம்.இந்த சாதனையை இதுவரை வேறு எந்த நடிகரின் படமும் முறியடிக்கவில்லை.சிங்கள படம் கூட இந்த சாதனையை செய்யவில்லை என்பது வரலாற்று சிறப்பு.மதுரை வீரன் செய்த வசூல் சாதனையான ஒரு கோடியே ஐந்து லட்சம் ரூபாய் சாதனையை நாடோடி மன்னன் முறியடித்து ஒரு கோடியே பத்து லட்சம் வசூல் செய்தது.கர்நாடகாவில் நூறு நாட்கள் ஓடிய முதல் தமிழ் படம் நாடோடி மன்னன்.ஆந்திராவில் நூறு நாட்கள் ஓடிய முதல் தமிழ் படம் நாடோடி மன்னன்.கேரளாவில் நூறு நாட்கள் ஓடிய முதல் தமிழ் படம் நாடோடி மன்னன்.லண்டன் தமிழ் சங்க வளர்ச்சிக்காக இந்தியாவிலிருந்து அனுப்பப்பட்ட ஒரே படம் நாடோடி மன்னன்.லண்டனில் 1958இல் 8 வாரங்கள் நாடோடி மன்னன் ஓடியது.தமிழகம் மட்டுமல்லாமல் சிங்கப்பூர், கோலாலம்பூர்,பினாங்,தைபிங்,எகிப்த்,ஜெர்மனி,பர் மா,வி யட்நாம்,குவைத்,ஈரான்,பாரிஸ் போன்ற இடங்களில் திரையிடப்பட்ட முதல் தமிழ் படம் நாடோடி மன்னன் -
இன்னும் பல நாடுகள் விட்டு போய் விட்டன - pakistan , uganda , s .africa , japan etc.,
1968இல் வெளியான மக்கள் திலகத்தின் 100வது படமான ஒளிவிளக்கு இலங்கையில் 5 தியேட்டர்களில் 100நாட்களும் 2தியேட்டர்களில் 175 நாட்களும் ஓடியது.அதன் பிறகு 1974, 1979, 1984, 1993 ஆகிய ஆண்டுகளில் மீண்டும் இலங்கையில் திரையிடப்பட்டு ஒவ்வொரு முறையும் 100 நாட்கள் ஓடி சாதனை படைத்தது.
அவர்களுடைய திரி - அவர்கள் என்ன வேண்டுமானாலும் , எப்படி வேண்டுமானாலும் எழுதலாம் - அங்கு ஒரே சட்டம் - தலைவரை புகழ்ந்து தான் எழுதவேண்டும் , எந்த படமும் தோல்வியையே சந்தித்ததில்லை - இதை தலைவரே வந்து சொன்னாலும் அங்கு ஒப்புகொள்ள யாரும் இல்லை .
இந்த மனோபாவத்தை , மனோதத்துவத்தின் மூலம் ஆராயிந்தால் அதன் முடிவின் பெயர் "extreme state of desperation " இல்லாத ஒன்றை இருப்பதாக கற்பனை செய்துகொள்ளும் நிலைமை - இது முதல் symptom - பிறகு அடுத்த நிலைமை - தன் தலைவர் இப்படியெல்லாம் சாதித்து இருந்தால் எவ்வளவு நன்றாக இருந்திருக்கும் என்று நினைக்கும் நிலைமை - இது இரண்டாவது symptom - இப்படி இரண்டு symptoms உள்ளவர்களை கூட காப்பாத்திவிடலாம் - ஆனால் மூன்றாவது symptom மிகவும் மோசமானது - அதுதான் - கற்பனைகளை உண்மைகள் என்று சொல்லி , அதற்க்கு ஆதாரம் தர முடியாமல் மனதிற்குள் தவித்து ஒரு வெறியுடன் பதிவிடுவது - யாராவது ஒருவர் நம் கற்பனைகளை நம்ப மாட்டார்களா என்று ஏங்குவது ---
அவர்கள் சீக்கிரம் குணமாக வேண்டும் என்று கூட்டு ப்ராத்தனை செய்வோம் - அந்த திரியினில் நமக்கு இனிய நண்பர்கள் பலர் உள்ளனர் - NT யின் மீது மதிப்பும் மரியாதையும் வைத்திருப்பவர்கள் அவர்கள் !!அவர்களின் நலம் கருதியாவது நாம் கூட்டு ப்ராத்தனை செய்ய வேண்டியது மிகவும் அவசியம் ...