67
https://scontent.fmaa1-1.fna.fbcdn.n...80&oe=56A21216
Printable View
உத்தமனின் உற்சாக வெற்றி பவனி
மதுரை சென்ட்ரல் திரையரங்கில் இன்று மாலைக்காட்சி அரங்கு நிறைவு கண்டு திரளான தாய்மார்களின் ஆதரவுடன் உத்தமன் வெற்றி நடை. இன்று மாலைக் காட்சியில் மட்டுமே சுமார் 14000 ரூ. பதினான்காயிரத்தைத் தாண்டி வசூல் செய்துள்ளதாக அரங்கிலிருந்து நண்பர் ஜெய்குமார் தகவல்.
நன்றி ஜெய்குமார் அவர்களே.
http://i1028.photobucket.com/albums/...pspmpjellb.jpg
Sent from my GT-S6312 using Tapatalk
http://i1028.photobucket.com/albums/...psgbzohceu.jpg
Sent from my GT-S6312 using Tapatalk
http://i1028.photobucket.com/albums/...psoczml1kr.jpg
Sent from my GT-S6312 using Tapatalk
http://i1028.photobucket.com/albums/...psctf6b7e8.jpg
Sent from my GT-S6312 using Tapatalk
http://i1028.photobucket.com/albums/...psku2ah4ss.jpg
Sent from my GT-S6312 using Tapatalk
http://i1028.photobucket.com/albums/...psvekcrq5e.jpg
Sent from my GT-S6312 using Tapatalk
http://i1028.photobucket.com/albums/...ps5ojufre2.jpg
Sent from my GT-S6312 using Tapatalk
http://i1028.photobucket.com/albums/...psogqoikip.jpg
Sent from my GT-S6312 using Tapatalk
http://i1028.photobucket.com/albums/...psdysbd90i.jpg
Sent from my GT-S6312 using Tapatalk
http://i1028.photobucket.com/albums/...psidkql95b.jpg
Sent from my GT-S6312 using Tapatalk
சிவா
அமரகாவியம் படைத்த அற்புதக் கலைஞனின் உயிரோவியங்களை நிழலோவியங்களாய் இங்கே படைத்து தங்களின் திறமையை நிரூபித்து விட்டீர்கள்.
தொடர்ந்து தங்கள் படைப்பில் பல அற்புதக் காவியங்களின் நிழற்படங்களை ஆவலுடன் எதிர்பார்க்கிறோம்.
கனவு...
காணாமலேயே இறைவன் எங்களுக்கு அளித்தான் வரம்
ஆதவன் ரவி வடிவில்
எழுத்துச் சிற்பியாய் பேனா எனும் உளி ஏந்திய கரம்.
தங்கள் சொல்லாடலுக்கு வணங்கினோம் சிரம்.
நடிகர் திலகம் 87வது பிறந்த நாள் விழா 87 நிழற்படங்கள் அணிவகுப்பு ... தொடர்ச்சி
72
https://scontent.fmaa1-1.fna.fbcdn.n...3b&oe=569A5506
http://i1028.photobucket.com/albums/...pscbcfesgo.jpg
ஊர் விட்டு ஊர் உற்சாகப் பயணம் செய்து.. உத்தமனைக்
கண்டேன்.
மனமெல்லாம் மகிழ்வு துள்ள
மாமதுரை சென்ட்ரலில் ..
உத்தமனைக் கண்டேன்.
இதய தெய்வம் நடிகர் திலகத்தை இமைப் பொழுதும்
மறப்பதில்லை என்கிற தீர்மானத்தில் திடமாயிருப்போர்
கூட்டத்தோடு..உத்தமனைக்
கண்டேன்.
அலங்காரங்கள்...
அர்த்தமுள்ள ஆர்ப்பரிப்புகள்...
திரையரங்குகள்
திருமண மண்டபங்களாய்
மாறிக் கொண்டிருக்கிற காலகட்டத்தில், ஒரு கல்யாணம் நடக்குமிடம் காணுகிற பெருங்கூட்டத்தையும்,கூட்டத்தின் சந்தோஷத்தையும்
திரையரங்கினுள் கொண்டு வந்த ..உத்தமனைக் கண்டேன்.
நன்றி மறந்தவர்கள் மிகுந்து
விட்ட கொடுமையான காலத்தில், தன்னை மிக விரும்பும் ரசிகனுக்கான கலையை வஞ்சகமில்லாமல்
வாரி வழங்கிய ஒப்பற்ற கலைஞனையும், அந்த அற்புதக்கலைஞன் அன்றொரு தினம் செய்த கலைச் சேவைக்கு இப்போதும் நன்றி பாராட்டும் நல்ல ரசிகனையும்
ஒரு சேரப் பார்க்க வைத்த...
உத்தமனைக் கண்டேன்.
காட்சிக்குக் காட்சி தீபங்களை
ஏற்றிக்காட்டி,புரட்டாசியிலேயே கார்த்திகையைக் காட்டிய
ரசிகனின் சந்தோஷத்தில்..
உத்தமனைக் கண்டேன்.
காதலுக்குரியவளைப் பிரித்து
விட்டு,காசுக்கு அடிமையாக்கவும் துணியும்
பெரிய மனிதரின் கொட்டம் ஒடுக்கி விட்டு,கம்பீரமாய்
நடந்து வருவாரே..நம் தன்மானத் தலைவர்? அந்தக்
காட்சிக்கு இரண்டு விநாடி
முன்னாடியே இருக்கையை விட்டு எழுந்து நின்று..
"டேய்..பாருங்கடா..
என் சிங்கம் நடந்து வர்றதைப் பாருங்கடா..!"என்று சத்தமிட்ட
ஒரு ரசிகனின் ஆழ்ந்த ரசிப்பில்.. உத்தமனைக் கண்டேன்.
தன் குழந்தையைத் தனதென்று சொல்ல முடியாத சூழலில்
தாயிடம் பொய் சொல்லி விட.
உண்மையறிந்த அந்த உத்தமத்
தாய் மனமுடைந்து"உனக்குப்
பொய் சொல்லவே தெரியாதேடா..!?"-என்று
சொல்ல..
வசனத்தின் உண்மையறிந்த
பலநூறு ரசிகர்களின் கரங்கள்
ஓங்கி எழுப்பிய உணர்வுக்
கரவொலிப் பரவசத்தில்..
உத்தமனைக் கண்டேன்.
அன்பு மிகக் கொண்ட
திரு.சுந்தரராஜன்,
இணையத்திலென் கவிதை
கண்டு இதயந் திறந்து பாராட்டிய திரு.ரமேஷ் பாபு,
இணைந்து பாராட்டிய
திரு.வெங்கடேஸ்வரன், நொடிக்கு நூறு முறை நடிகர்
திலகத்தை நினைந்துருகும்
முகநூல் நண்பர் திரு.சந்திரசேகரன் வீரசின்னு,
மதிப்புமிகு.திரு.சோமசுந்தரம்,
"வாழ்க வளமுடன் "சொல்லி
என்னை வாழ்த்திய திரு.ஜெயக்குமார்..
இவர்களெல்லாம் இணைந்து காட்டிய பேரன்பின் வெளிச்சத்தில்.. உத்தமனைக்
கண்டேன்.
விடைபெறுவதற்கு முன்
தேநீர் பருகினோம்..எல்லோருமாய்..
தரமான தேநீரின் தன்மையான ருசி நாவில் தங்கி விட்டதைப்
போல, உண்மையானவர்களுடன்
எனக்குக் கிடைத்த பெருமகிழ்வு, பேரானந்தத்தில்.. நம் உள்ளத்தோடு தங்கி விட்ட
உத்தமனைக் கண்டேன்.
Sent from my GT-S6312 using Tapatalk
http://i1028.photobucket.com/albums/...psmbgvhdqf.jpg
Sent from my GT-S6312 using Tapatalk
http://i1028.photobucket.com/albums/...pszyamuku9.jpg
Sent from my GT-S6312 using Tapatalk
'வெள்ளிக்கிண்ணம்தான்... தங்கக் கைகளில்'
http://i.ytimg.com/vi/4BdsKO2Aoac/maxresdefault.jpg
'உயர்ந்த மனிதன்' பிறந்தநாள் சிறப்புப் பாடல்.
நடிகர் திலகத்தின் பிறந்த நாளில் வேலை நிமித்தம் காரணமாக பாடல்கள் அளிக்க இயலவில்லை. இன்று நமது 'இமய'த்தின் இமயம் தொட்ட பாடல் ஒன்றை அளித்து எனது ஆசையை நிறைவேற்றிக் கொள்கிறேன் சுயநலத்தோடு.
நடிகர் திலகத்தின் பாடல்களில் எனக்குப் பிடித்த முதன்மையான காதல் பாடல். காதல் பாடல்களுக்கெல்லாம் தலையாயது. இனிமை...இனிமை...இனிமை. அதைத் தவிர ஒன்றுமே இல்லை. வனப்பும், வாளிப்புமாக, வாலிப வடிவழகனாக நடிகர் திலகம். ஒட்டுமொத்த நடிகர் திலக ரசிகர்களின் பேராதரவைப் பெற்ற வாணிஸ்ரீ ஜோடி. அப்புறம் என்ன?
'வெள்ளிக் கிண்ணந்தான்
தங்கக் கைகளில்
முத்துப் புன்னகை
அந்தக் கண்களில்'
http://i60.tinypic.com/x3xpgh.jpghttp://i57.tinypic.com/v6m0wy.jpg
வெள்ளிக்கிண்ணத்தை தங்கக் கைகளில் ஏந்தி தங்கமகள் முதல் இரவுக்கு வரும்போது நடிகர் திலகம் சேரில் கால் மேல் கால் போட்டு உட்கார்ந்திருக்கும் அழகே அழகு. கழுத்தைக் கவர் செய்யும் அந்த ஜிப்பா அவர் மனதைப் போலவே வெண்மையானது. தூய்மையானது.
வெள்ளிக்கிண்ணம் வாங்கி வைத்து, சுமந்து வந்த கைகளை சுகமாக முத்தமிட்டு, வாணியின் 'வழுவழு' கன்னத்தில் அதைவிட வழுவழுப்பான தன் இதழ்கள் பதித்து, முத்துப் புன்னகையை அவ்விடத்தில் படரவிட்டு, அந்த காந்தக் கண்களாலேயே காதலியின் கண்களை சுட்டிக் காட்டி, அப்படியே மலர்த் தோரணங்கள் அலங்கரித்த கட்டிலுக்குக் வைரச் சிலையை மெதுவாகக் கொண்டு சென்று, அமர வைத்து, அவள் எதிரே கீழ் அமர்ந்து கை பிடித்தவளின் கையை நுனியிலிருந்து மேல்வரை உதடுகள் விரித்து, தொட்டுக் கலந்து, கழுத்தில் முகம் புதைத்து 'இதுதான் சுகம்' என்று அங்கு சொர்க்கத்தைக் காணும் சுகக் கணவன். பார்ப்பவர்களை பரவசப்படுத்தும், கண்ணியக் காதலை வெளிப்படுத்தும் கண்கவர் அழகன்.
மெத்தையில் புரளும் தத்தையின் அருகில் வந்து, கவிழ்ந்து படுத்து, கால்களை நீட்டி மடக்கி குழந்தையாய் ஒரு வினாடி படுக்கையில் தவழ்ந்து, கன்னியின் கன்னத்தோடு கன்னம் வைத்து, அவளுடன் கட்டிலில் காவிய நாயகன் சாய்வது தொட்டிலுக்காகவா?
முதலிரவுக் காட்சியின் போது கணவன் ஸ்தானத்தை விட காதலன்தான் அதிகமாகத் தெரிவான். சற்றே காமத்தை அதிகமாகக் கா(கொ) ட்டுவான். மெல்லிய வேகம் கொண்டு மெல்லிடையாள் மேல் படருவான்.
அப்படியே கொஞ்சம் நாளாகி, தாம்பத்ய அந்நியோன்னியம் அதிகமாக அதிகமாக, நெருக்கத்தின் நாகரீக வெளிப்பாடு பாடலில் கொஞ்சம் கொஞ்சமாகத் மேம்படும். காமம் சற்று குறையும். உல்லாசப் பயணங்களில் உவகை பெருகும். காதல் மேலும் வளரும். சிகை அலங்காரம் கூட கண்ணியமாக மாறி இருக்கும். உடையும், நடையும் கூட.
வெளிப்பயணத்தில் நதியின் குறுக்கே நிற்கும் அந்த போல்ட்டுகள் தைத்த இரும்புப் பாலத்தில் இருவரும் மாறி மாறி அரை வட்டமிட்டு சாய்ந்து சல்லாபம் புரிய, பின் சற்றே 'பாலும் பழமும்' டாக்டரை ஞாபகப்படுத்தும் ஹேர் ஸ்டைலுடன் ப்ளாக் ஸ்வெட்டர் அணிந்து, அந்த மலைபிரதேச சரிவில் பாடலின் இடையிசையில் வாணிஸ்ரீ முன்னால் ஆடிக் கொண்டு ஓட, பின்னால் கைகள் உயர்த்தி ஒரே ஒரு துள்ளலுடன், பின் கைகள் தளர்த்தி மான் போல குதித்து ஓடி வரும் என் இதய தெய்வத்தை கவனியுங்கள்.
படகுத் துறையின் அருகே ஓடி வந்து, வாணியின் கரம் பிடித்து, படகில் நிற்க வைத்து, அவருடைய சித்திர விழிகளின் கீழ் 'மீனோ..மானோ' என்று தன் விரல் கொண்டு தீட்டிக் காட்டி, வாணி படகில் அமர்ந்தவுடன்,
'செவ்விதழ் வடித்ததென்ன பாலோ தேனோ'
என்று பாடியபடி இடது தோள் பட்டையையும், உடலையும் சற்றே சைடு வாங்கி, இடுப்பை லேசாக ஒருக்களித்து ,வளைத்து, அன்னத்தின் அருகே அமர்ந்து, வாணியின் உணர்ச்சிமிகு உதடுகளை தன் விரல்களால் பிடித்து ஒன்று குவிக்க வைத்து, படகில் கைகளை மாற்றி மாற்றி, அழகாகத் துடுப்பு வளித்துக் கொண்டே 'இன்னும் சொல்லவோ... இன்பமல்லவோ' என்று பாவம் காட்டுவதை பத்தாயிரம் தரம் பார்த்தாலும் திருப்தி ஏற்படாது.
('மோகத்தில் துடித்ததென்ன நீயோ நானோ' வரிகளில் கைகளை உள்வாங்கி மாற்றி ஒருதரம் துடுப்பு போடும் அழகைக் கவனியுங்கள்.)
http://i60.tinypic.com/2q9f9s1.jpghttp://i59.tinypic.com/ekjg9e.jpg
கொஞ்சமே கொஞ்சம் முதுகு வளைத்து, உடலை முன்னிறுத்தி பாடும் 'இன்னும் சொல்லவோ... இன்பல்லவோ' வரிகளில் 'சொல்... லவோ' எனும்போது நாக்கை மேலன்னத்தில் சில வினாடிகள் மடித்து வைத்து, பின் ரிலீஸ் செய்து வாயசைத்து, மிக அழகாகத் தலையாட்டி, 'இன்பமல்லவோ' வில் 'வோ' முடிகையில் கழுத்தை லேசாக இடப்புறம் வாங்கி இழுத்தசைப்பது யாரைத்தான் இந்த மனிதரின் மேல் வெறி கொள்ள வைக்காது? ('சொல்....லவோ எனும் போது ஒரே தடவை என் கடவுள் கண் மூடித் திறக்கும் கண் கொள்ளாக் காட்சியும் உண்டு)
முதல் சரணம் முடிந்து ஒரு குயில் 'ஹஹ்ஹஹஹ்ஹஹா' உலகின் ஒட்டுமொத்த இன்பத்தையும் குரலில் வைத்து கூவுமே! அப்போது வரும் இடையிசைக்கு தூரத்தே பனிபடர்ந்த கற்பாறை மலைகளும், பள்ளத்தாக்குகளும் தெரிய, நடிகர் திலகமும், வாணிஸ்ரீயும் போடும் அந்த ஸ்டெப்ஸ். ஆஹா! இருவரும் எதிரெதிர் நடந்தபடியே, இரு கைகளையும் இடுப்பருகே கொஞ்சமாக நீட்டி மாற்றி மாற்றி ஆட, அதே இசை திரும்ப தொடர்கையில் இருவரும் முதுகுப்புறமும், முன்புறமும் தோள்களை இணைத்து, பின் விலக்கி உடலை ஷேக் செய்தபடியே நின்றவாக்கில் ஆடியவாறு திரும்புவது அவ்வளவு எளிதில் திகட்டக் கூடியதா என்ன?
'கட்டுடல் சுமந்த மகள்' பின்னால் கட்டுக் குலையாத என் கட்டழகன் நடக்கும் பெருந்தன்மையான பேராண்மை நடையழகுதான் என்ன!
இடது இடுப்பில் கைவைத்து, குனிந்தபடி, வாணிஸ்ரீ இல்லாத தனி போஸாக, வலது புற தலைமுடி பம்பையாய் மேலே அழகோவியமாய்த் தூக்கி வாரி சீவப்பட்டு,(கோரைப் புற்கள் மொத்தமாக மேல்நோக்கி வளைந்து காற்றில் பறப்பது போல) 'காலத்தை நில்லென்று சொன்ன மாயம் என்ன?" என்று கண் சிமிட்டி, பளிங்குப் பற்கள் காட்டி, கள்ளமில்லா கணவனாய் களிப்புடன் சிரிப்பது கடவுளைக் கூட மயக்கி விடுமே!
http://i61.tinypic.com/wm1h6w.jpghttp://i57.tinypic.com/znmruq.jpg
'கண் பட்டுக் கலந்து கொண்ட வேகம் என்ன' எனும் போது கணவனின் உரிமை எல்லை மீறாமல், ஆனால் அதே சமயம் எல்லை மீறி விடுமோ என்ற நமது அப்போதைய அச்சத்தை வினாடியில் பொய்யாக்கி, இந்தக் கணவனின் கைகள் எங்கோ செல்ல எத்தனித்து, இறுதியில் இதய இருப்பின் குறுக்குப் பாதையில் பயணித்து, நாயகியின் கழுத்தை விரல்களால் பதமாக இதமாக வருடி, நெக்லஸின் வளைவுகளோடு சேர்ந்து வரைவுக்கோடு வரைந்து, நம் மனதில் அந்தக் கணம் நினைத்ததை இன்று வரை கூட, நெருங்கியவர்களிடம் கூட சொல்ல முடியாதபடி நமக்குள்ளாகவே இனபச் சிறகுகளை சிறகடிக்க வைக்குமே! இந்த வியத்தகு விந்தையை தொட்டும் தொடாமலும், பட்டும் படாமலும் கண்ணியம் கெடாமலும் இந்த உயர்ந்த மனிதனைப் போல எவர் செய்து காட்டிவிட முடியும்?
அந்த இயற்கையான ரம்மிய சூழ்நிலையில் தன்னிலை மறந்து, மனைவியுடன் ஒரு கை கோர்த்து, மறு கை அவள் இடுப்பை வளைத்திருக்க, அவளை அணைத்து, அரவணைத்து புல்பாதையில் நடந்தபடி, அவளை வலதும் இடதுமாக சாய்த்து சாய்த்துப் பிடித்துத் தாங்கி, அரை சதவீத உதட்டோர அழகுக் கோணலில் 'தொட்டுக் கலந்தால்' பாடி உதட்டசைவாலும், உடல் அசைவாலும் உள்ளம் தொட்டுக் கலந்த நம் 'உயர்ந்த மனிதனி'ன் முத்திரைகளை முறியடிக்க வேறு யார்?
பக்கத்து மலைகளில் பனிப்படலம் புகையாய்த் தவழ்ந்து தென்றலில் மிதந்து வந்து குளிர்சுகம் தர, 'லல்லல்லல்லா' முடிவதற்குள் அவசரமாய் அதே ராகத்தில் ஷெனாய் முந்திக்கொண்டு அதைவிடவும் அங்கம் சிலிரிக்க வைக்க, நடையழகு மன்னவன் நாயகியுடன் இணைந்து ராஜ நடை போட்டு, அசால்ட்டாக அன்னத்துடன் அழகு நடை நடந்து, பின் அவள் முன் வந்து இடம் மாறி, அவள் கையைப் பிடித்து, அவளை அப்படியே வாங்கி, கைகளை ஆட்டியபடி பார்ப்பவர் அத்தனை பேர் மனதையும் ஆட்டிவிட்டுச் செல்வானே!
ஒரு கணவன் அதுவும் புதுக் கணவன் அதுவும் இயற்கை அழகு சூழ் வெளிப்புறங்களில் அழகு மனைவியுடன் தன்னந்தனியே பயணிக்கும் போது செய்ய வேண்டியவை என்ன என்பதை குரு பாடமாக கற்றுக் கொடுக்க இந்தப் பாடலை விட்டால் வேறு பாடல் இல்லை. செய்து காட்ட இந்த மனிதரை விட்டால் வேறு மனிதரும் இல்லை.
வாணிஸ்ரீ. வன தேவதை. எளிமையான எழில். கொஞ்சும் இளமை. பூலோக அழகனுடன் இணை சேர்ந்த பூரிப்பு பரிபூர்ணமாக, வெட்ட வெளிச்சமாகத் தெரியும் அந்த பிரகாச முகத்தில். 'வசந்த மாளிகை'யின் ஆடம்பர ஜோடி அதற்கு முன்னமேயே இதில் இயற்கை விந்தைகளுக்கிடையே வெகு இயல்பாய் இணைந்து ஒட்டிக் கொள்ளும். கட்டிக் கொள்ளும். பெயரைத் தட்டிக் கொள்ளும்.
ஆணழகனுக்கு ஏற்ற குரலழகன். சௌந்தரராஜன். திரைக்குப் பின்னால் நின்று குரலால் மனதை நிறை செய்தவன். நடிப்புத் திலகத்திற்கு 'பாடகர் திலகம்' பாடிய காதல் பாடல்களில் முதன்மையானது....முழு நிறைவானது.
'ஹஹ்ஹஹ்ஹஹ்ஹா' ஹம்மிங்கிலேயே ஹார்ட்டில் பட்டாம்பூச்சிகளைப் பறக்கவிடும் மாயப் பாடகி சுசீலாம்மா. மரணப் படுக்கையில் இருப்பவன் கேட்டால் கூட மகிழ்ச்சியில் துள்ளி எழுந்து எமனை விரட்டுவான்.
'பாடகர் திலகம்' பாடலின் பல்லவி வரிகளை ஒவ்வொன்றாக முடிப்பதற்கு முன்னமேயே தொடங்கிவிடும் இந்த இசைத் தேவதையின் இனிமையான 'ஆ.......ஆ' ஹம்மிங்க்குகள். இது பாடலுக்கே தனிச் சிறப்பு. நமக்கு கேட்கும் போதெல்லாம் மெய் சிலிர்ப்பு.
பாடல் முழுதும் இசை சாட்டை எடுத்து இன்ப அடி அடிக்கும் 'மெல்லிசை மன்னன்'.
வாலியின் வரிகள் சிருங்காரம் அள்ளிக் கொட்டுகின்றன. கொடைக்கானலின் இயற்கை அழகை பி.என்.சுந்தரம் தன் காமராவில் அடக்கி நாம் ரசிக்க ரசிக்க ஊட்டுவார்.
இணையற்ற இசையாலும், அருமையான இயற்கை சூழல் இடங்களாலும், இதயம் கவர்ந்த இணையில்லா ஜோடியாலும், பாடலின் வரிகளாலும், இசைக் கருவிகளின் ஆளுமைகளாலும், வளமான பாடகர்களாலும், குறிப்பாக ஆண்மைநிறை அழகானாலும், அவர் ஸ்டைலாலும், ஆயுள் முழுக்க என்னை ஆளுமை செய்யும் நடிகர் திலகத்தின் காதல் பாடல். மனதில் என்றும் முதலிடம். நிரந்தரமான இடம்.
http://i60.tinypic.com/20i89b5.jpghttp://i58.tinypic.com/ic1v81.jpg
வெள்ளிக் கிண்ணந்தான்
தங்கக் கைகளில்
முத்துப் புன்னகை
அந்தக் கண்களில்
வைரச் சிலைதான்
எந்தன் பக்கத்தில்
தொட்டுக் கலந்தால்
அதுதான் சுகம்.
வெள்ளிக் கிண்ணந்தான்
ஆ.......ஆ
தங்கக் கைகளில்
ஆ.......ஆ
முத்துப் புன்னகை
ஆ.......ஆ
அந்தக் கண்களில்
ஆ.......ஆ ஆ
சித்திர விழிகள் என்ன மீனோ மானோ
ஹஹ்ஹஹ்ஹா
செவ்விதழ் வடித்ததென்ன பாலோ தேனோ
ஹஹ்ஹஹ்ஹா
முத்திரைக் கன்னங்கள் என்ன பூவோ பொன்னோ
ஹஹ்ஹஹ்ஹா
முத்திரைக் கன்னங்கள் என்ன பூவோ பொன்னோ
மோகத்தில் துடித்ததென்ன நீயோ நானோ
மோகத்தில் துடித்ததென்ன நீயோ நானோ
இன்னும் சொல்லவோ
இன்பமல்லவோ
ஹஹஹாஹஹா
ஹஹஹாஹஹா
ஹஹ்ஹஹ்ஹஹ்ஹா
ஹஹஹா...
ஹஹ்ஹஹஹ்ஹஹா
ஹஹஹா.....
ஹஹ்ஹஹ்ஹஹ்ஹா
ஹஹஹாஹா
கட்டுடல் சுமந்த மகள் முன்னே செல்ல
ஹஹ்ஹஹ்ஹா
கை தொட்டுத் தலைவன் அவள் பின்னே செல்ல
ஹஹ்ஹஹ்ஹா
காலத்தை நில்லென்று சொன்ன மாயம் என்ன
ஹஹ்ஹஹ்ஹா
காலத்தை நில்லென்று சொன்ன மாயம் என்ன
கண் பட்டுக் கலந்து கொண்ட வேகம் என்ன
கண் பட்டுக் கலந்து கொண்ட வேகம் என்ன
இன்னும் சொல்லவோ
இன்பமல்லவோ
லலலாலலா
லலலாலலா
வெள்ளிக் கிண்ணந்தான்
ஆ.......ஆ
தங்கக் கைகளில்
ஆ.......ஆ
முத்துப் புன்னகை
ஆ.......ஆ
அந்தக் கண்களில்
வைரச் சிலைதான்
ஆ.......ஆ
எந்தன் பக்கத்தில்
ஆ.......ஆ
தொட்டுக் கலந்தால்
ஆ.......ஆ
அதுதான் சுகம்.
லல்லல்லல்லல்லா
லலலா
லல்லல்லல்லல்லா
லலலா
https://youtu.be/UqNg4Y-iQFE
அடுத்தது....
சொல்கிறேன் விரைவில்.
வாசு சார்
ஒரு பாடலை எப்படிப் பார்க்க வேண்டும் என்பதற்கு ஒரு இலக்கணமே வகுத்து அளித்து விட்டீர்கள். இனிமேல் ஏதாவது நடிகர் திலகத்தின் பாடலைப் பார்க்க வேண்டுமென்றால் உங்கள் வர்ணனைக்கு முன், வர்ணனைக்குப் பின் என இரண்டு முறை நிச்சயமாகப் பார்க்க வேண்டும். பல புதிய பரிமாணங்களில் தலைவரை ரசிப்பதற்கு இதை விடச் சிறந்த வழி ஏதுமில்லை.
சூப்பர்.
Mr Neyveliar,
Supero Super.
அவர் உத்தமன்(ஆதவன்)
இவர் உயர்ந்த மனிதன்(வாசு)
உத்தமபுத்திரர்கள்
இதற்கு மேல் வார்த்தை ஏது?
இரண்டு நாட்களாக வேலை பளுவால் வர முடியவில்லை. வந்து பார்த்தால் திரி நிரம்பிக் கிடக்கிறது. பார்த்து, படித்து முடிப்பதற்குள் பரவசம் உடலெங்கும் தொற்றிக்கொண்டது. ஒவ்வொன்றாக வருவோம்.
டியர் வாசுதேவன் சார்,
இதெல்லாம் ரொம்ப அநியாயம், ஒரு பாடலில் இப்படியா தலைவரின் ஒவ்வொரு அசைவையும் ரசிப்பது?. ரசித்தாலும் அதை பன்மடங்கு மெருகேற்றி வார்த்தைகளில் கொண்டு வருவது?. ராகவேந்தர் சார் சொன்னது ரொம்ப பொருத்தம். ஒரு பாடலை எப்படி ரசிப்பது என்பதற்கு இலக்கணம் வகுக்கிறீர்கள் ஒவ்வொரு பதிவிலும்.
மதுர கானத்தில் யார் யாருடைய பாடல்களுக்கெல்லாமே ரொம்ப சிரத்தையெடுத்து செதுக்குவீர்கள். இதுவோ நம் தலைவரின் பாடல். உங்கள் அட்டகாசத்துக்கும், சாமியாட்டத்துக்கும் கேட்கணுமா என்ன.
'வெள்ளிக்கிண்ணம்தான்' பாடல் தமிழில் வந்த சிறந்த முதலிரவுப் பாடல்களில் ஒன்று என்பதில் சந்தேகமில்லை. அந்த அளவுக்கு அனைவரின் மனதையும் நிறைத்த பாடல். தனது பேட்டிகளில் நடிகர்த்திலகத்தைப் பற்றி கொஞ்சமாகவே பேசும் மறைந்த கவிஞர் வாலி அவர்கள், தனது நிகழ்ச்சிகளில் தவறாமல் குறிப்பிடும் பாடல் இது. (முதலில் 'வெள்ளித்தட்டுதான்' என்று எழுதி பின்னர் மாற்றிய கதை எல்லோருக்கும் தெரிந்ததுதான்).
ஆனால் படம் வருவதற்கு முன் இசைத்தட்டுக்களில் பாடல்களைக் கேட்ட ரசிகர்கள், ரொம்ப எதிர்பார்த்தது "என் கேள்விக்கென்ன பதில்" பாடலில் நடிகர்திலகம் எப்படியெல்லாம் ஸ்டைலில் கலக்கப்போகிறாரோ என்பதுதான் என்றும், படத்தில் பாடலைப் பார்த்து அதிர்ச்சி, ஏமாற்றம் மற்றும் விரக்தியின் உச்சத்துக்குப் போனதை இங்கே பலமுறை பேசியிருக்கிறோம்.
வெள்ளிக்கிண்ணம்தான் போன்ற அருமையான பாடல்களெல்லாம் வண்ணத்தில் அமையாமல் போனது இன்னொரு ஏமாற்றம்.
உங்கள் பதிவை எப்படி பாராட்டுவது என்று தெரியாமல்தான் இப்படியெல்லாம் கிறுக்கிக் கொண்டிருக்கிறேன் என்பது உங்களுக்கும் புரியுமென்று நினைக்கிறேன். ராஜேஷைப்பார்த்து, "வணக்கம் ஜி, நலமா?" என்று கேட்கும் பதிவுகள் மட்டும்தான் உங்களிடமிருந்து வரும் சாதாரண பதிவுகள் என்பது என் எண்ணம்.
வாசு சார்,
அடடா 'இல்லற ஜோதியை' மறந்துவிட்டேனே. என்னவொரு அற்புதமான ஆய்வு. நானும் பலவருடங்களுக்கு முன் பார்த்ததுதான். உங்கள் விவரிப்பு ஒவ்வொரு காட்சியையும் கண்முன்னே கொண்டுவந்தது.
நடிகர்திலகம் தன ஆரம்பகால படங்கள பெரும்பாலானவற்றுள் நெகடிவ் ரோலாகவே நடித்துதான் முன்னேறியிருக்கிறார். இது ஒரு கலைஞனுக்கு மிகப்பெரிய சவால். நல்ல கதாநாயகனாகவோ, கெட்ட வில்லனாகவோ நடித்து முன்னேறுவது சுலபம். நெகடிவ் கதாநாயகனாக நடித்து முன்னேறுவது மிகக்கடினம். அதிலும் சாதனை படைத்துவிட்டார் நம் மன்னன்.
அப்படி ஒரு படத்தை எடுத்து அருமையாக அலசியிருக்கிறீர்கள்.
என்ன செய்யலாம்?. எல்லாவற்றுக்கும் சேர்த்து உங்களுக்கு பெரிய பாராட்டுவிழாவுக்கு ஏற்பாடு செய்யலாமா?.
நண்பர்களுக்கு வணக்கம்,
மக்கள் திலகம் திரியில் புதிதாக பங்கேற்ற திரு.மயில்ராஜ் அவர்கள் பிரச்சினைக்குரிய விதத்தில் பேசினார் என்று கூறி அவருக்கு நிரந்தரமாக தடை விதித்திருக்கிறார்கள். அவர் என்ன தனிநபர் தாக்குதலில் ஈடுபட்டாரா? ஒருவேளை அவர் ஆட்சேபகரமான சிலவற்றை சொல்லியிருக்கலாம். அவருக்கு எச்சரிக்கை விடுத்திருக்கலாமே? அல்லது அடையாளமாக ஒரு சில நாட்கள் மட்டும் தடை விதித்திருக்கலாம். ஆனால், நிரந்தரமாக நீக்கும் அளவுக்கு இங்கு சிலர் சொல்லாததை அவர் என்ன பெரிதாக சொல்லி விட்டார்?
மக்கள் திலகத்தைப் பற்றி திரு.கோபால் கூறாதவற்றையா திரு.மயில்ராஜ் கூறிவிட்டார்? அல்லது தனிப்பட்ட நபர்களை, நண்பர்களை திரு.கோபால் மோசமாக விமர்சித்ததைப் போல விமர்சித்தாரா? சமீபத்தில் கூட திரு.எஸ்.வி. அவர்களை ‘பசுத்தோல் போர்த்திய நரி’ என்றார். என்னைப் பார்த்து ‘பொய் சொல்கிறேன்’ என்று குற்றம் சாட்டினார். வயதில் தன்னைவிட மூத்தவர்களை நாய், சொறிநாய் என்றெல்லாம் பேசினார். திரு.சிவாஜி கணேசன் அவர்களையே, ‘கிழட்டு மூஞ்சி’ என்று விமர்சித்தார். ‘அவரது பிற்காலப் படங்களை எப்படி பார்க்கிறாய்?’ என்று என் மனைவி கேட்கிறாள் என்றார். நேருவை பெண் பித்தன் என்றார். அவர் நிரந்தரமாக நீக்கப்படவில்லை.
திருச்சி பாஸ்கர் என்பவர் திரு.சிவாஜி கணேசன் அவர்களை அரசியலில் முட்டாள் என்றார். நேற்று கூட சுமூக சூழ்நிலையை கெடுக்கும் வகையில் மீண்டும் பதில் சொல்வேன் என்று எச்சரிக்கிறார். ‘குள்ளநரிகள்’ என்கிறார். ‘கொக்கரிக்காதே வேதகிரி’ என்கிறார். அவர்களை எல்லாம் அனுமதிக்கிறார்கள். அவர்கள் கூறிய வார்த்தைகளும் இன்னும் அப்படியே இருக்கின்றன.
செல்வி. ஜெயலலிதாவை பார்த்து விட்டு வந்த சிவாஜி குடும்பத்தினரை ‘துரோகம் செய்யாதீர்களடா, இனத்துரோகிகளா’ என்றும் ஒரு மாநிலத்தின் முதல்வரை ‘பாம்பு’ என்றும் பல்வேறு அர்ச்சனைகள். அதற்காக நான் அவரது ஆதரவாளர் அல்ல. எப்படி எல்லாம் மோசமான தாக்குதல்கள் என்பதற்கு சொல்கிறேன். அவர்கள் மீது நடவடிக்கை இல்லை. இந்த வார்த்தைகள் எல்லாம் நீக்கப்படவும் இல்லை.
ஆனால், இப்படி எல்லாம் வரைமுறை கடந்து எதுவும் கூறாத திரு.மயில்ராஜை நிரந்தரமாக நீக்கியிருக்கிறார்கள். நல்ல நியாயம்.
இப்படி பாரபட்சமாக மாடரேட்டர்களும் மய்யம் இணையதள நிர்வாகிகளும் நடந்து கொள்வது வேதனையளிக்கிறது. இங்கு நீதியில்லை. ஒருவன் கையை கட்டிப்போட்டு விட்டு இன்னொருவன் கையில் ஆயுதம் கொடுத்து இரண்டு பேரும் மோதிக் கொள்ளுங்கள் என்று சொல்வதும் கைகள் கட்டப்பட்ட நிராயுதபாணிகளை தாக்குவதும் கோழைத்தனம். நியாயவான்கள் என்றால் எங்களுக்கும் முழு சுதந்திரம் அளித்துப் பாருங்கள். திரு.மயில் ராஜ் அவர்களை நிரந்தரமாக நீக்கியது அநீதி.
இப்படி பாரபட்சமாக செயல்படும் இந்த இணையதளத்தில் நான் நீடிக்க விரும்பவில்லை. இப்படி நியாயத்தை கேட்பதற்காகவே என்னையும் நிரந்தரமாக தடை செய்யலாம். நீங்கள் என்ன என்னை தடை செய்வது? நானே வெளியேறுகிறேன்.
தனக்குத்தான் எல்லாம் தெரியும் என்று நினைத்துக் கொண்டு எப்போதும் உண்மைக்கு மாறானதை மட்டுமே பேசிக் கொண்டிருக்கும் திரு.கோபால், உங்கள் பொய்களுக்கு பல ஆதாரங்கள் என்னிடம் உள்ளது.
உதாரணத்துக்கு ஒன்று மட்டும் சொல்கிறேன். உங்களை எல்லாரும் தெரிந்து கொள்ளட்டும்.
பேராசிரியர் திரு.செல்வகுமார் அவர்களை கடுமையாக தாக்கினீர்கள். அதற்காக, உங்களுக்கு நான் கண்டனம் தெரிவித்தேன். உடனே, அவர்தான் என்னை முதலில் தாக்கினார் என்று கூசாமல் பொய் சொன்னீர்கள். நான் அதை மறுத்து ஆதாரத்தோடு என்ன நேரத்தில் இருவரும் பதிவுகளை வெளியிட்டீர்கள் என்று பதிலளித்தேன். உடனே, நீங்கள் பல்டியடித்து ‘நான் திமுக பேராசிரியரை (அதாவது திரு.அன்பழகன் அவர்களை, அடைப்புக்குறிக்குள் இருப்பது என் விளக்கம்) சொன்னேன் என்று வழிந்தீர்கள்.
மக்கள் திலகம் திரி பாகம் 15 பக்கம் 328 பதிவு 3271.
http://www.mayyam.com/talk/showthrea...ART-15/page328
-----------------------------
Quote Originally Posted by KALAIVENTHAN View Post
திரு.கோபால்,
‘‘பேராசிரியர் உங்களை அத்துமீறி விமர்சித்த பிறகுதான், உங்கள் கருத்தை அவர் பெயர் குறிக்காமல் வெளியிட்டேன்’’ என்று கூறியிருக்கிறீர்கள். இதுவே தவறு.
//பேராசிரியர்களே புளுகித்தள்ளும் கலிகாலமாயிற்றே// என்று உங்கள் திரியில் 14-ம் தேதி காலை 11.27 மணிக்கு பதிவிட்டு (பதிவு எண் 2979) நேரடியாக அவரை அத்துமீறி முதலில் தாக்கியது நீங்கள்தான்.
அதன் பிறகே பேராசிரியர் அவர்கள், அதற்கு பதில் சொல்லும் வகையில் உங்களை பெயர் குறிப்பிடாமல் பதிவு போட்டார். அவர் பதிவிட்டது 14ம் தேதி இரவு 8.58 மணிக்கு, எங்கள் திரியில் பதிவு எண்.3104.
இதிலிருந்தே யார் சொல்வதில் உண்மை உள்ளது என்பது எல்லாருக்கும் புரியும். பேராசிரியர், பேராசிரியர்தான்.
அன்புடன் : கலைவேந்தன்
சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்
நான் மேலே சொல்லியிருந்த பதிலுக்கு திரு.கோபால் அவர்களின் விளக்கம் இது....
//கலைவேந்தன்,
அடடா ,அப்படி ஒரு அர்த்தம் வந்து விட்டதா? அது கலைஞர் பாடல் சம்பந்த பட்ட பதிவு என்பதால் தி.மு.க பேராசிரியர் ஞாபகம் வந்து விட்டார்.// ......(அவர்கள் திரியில் பதிவு எண்.3173)
ஓ... ஹோ....அப்படியா விஷயம்? மன்னிக்கவும் கோபால். இன்று காலையில் நீங்கள் போட்டிருந்த பதிவில்,(உங்கள் திரியில் பதிவு எண்.3166) திமுக பேராசிரியரின் பயோ டேட்டாவை கேட்கிறீர்கள் என்று தெரியாமல் திரு. செல்வகுமார் அவர்களின் பயோ டேட்டாவைத்தான் கேட்கிறீர்களோ என்று நினைத்து பதிலளித்து விட்டேன். மீண்டும் மன்னிக்கவும். நன்றி.
அன்புடன் : கலைவேந்தன்
சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்
-----------------------
இனிமேலாவது உண்மையை மட்டுமே பேசுங்கள். மற்றவர்களை கண்ணியப்படுத்துங்கள். முக்கியமாக, எல்லாருக்கும் புரியும்படி எழுதக் கற்றுக் கொள்ளுங்கள். நான் வெளியேறுகிறேன். எனவே என்னை தடை செய்தாலும் கவலையில்லை என்ற நிலையில் நான் நினைத்தால் என்ன வேண்டுமானாலும் உங்களை பேசிவிட்டு வெளியேற முடியும். குறிப்பாக, திரு.ராகவேந்திரா சாரையும் திரு.சிவாஜி செந்தில் அவர்களையும் நீங்கள் என்ன வார்த்தை கொண்டு தாக்கினீர்களோ, அதை விடவும் மோசமாக பேசமுடியும். ஆனால், உங்கள் அளவுக்கு தரக்குறைவாக கீழிறங்க நான் தயாரில்லை.
விடை பெறுகிறேன் நண்பர்களே. இந்தப் பதிவும் கூட நீக்கப்படலாம். அதைப்பற்றி எனக்கு கவலையில்லை. பார்க்கும் நண்பர்கள் நியாயத்தை புரிந்து கொண்டால் போதும்.
வாழ்க ஜனநாயகம்.
எந்தக் கொம்பன் நினைத்தாலும் எக்காலத்திலும் அழிக்க முடியாத புரட்சித் தலைவர் புகழ் ஓங்குக!
அன்புடன் : கலைவேந்தன்
சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்
டியர் செந்தில்வேல் சார்,
உங்கள் ஆவணப்பதிவுகளின் அணிவகுப்பு வெகுஜோர். நடிகர்திலகத்தின் கடந்தகால நிகழ்வுகளை நினைவூட்டும் காகிதக் கல்வெட்டுக்களை தற்போது நீங்கள் இணையதள கல்வெட்டுக்களாக மாற்றி வருகிறீர்கள். பாராட்டுக்கள்.
ஏற்கெனெவே நான் சொன்ன 'வாட்டர்மார்க்' பதிவைப்பற்றி நீங்கள் தந்துள்ள விளக்கம் ஏற்றுக்கொள்ள தக்கதாக மட்டுமல்லாமல் உங்கள் பெருந்தன்மையைக் காட்டுவதாகவும் அமைந்துள்ளது.
நடிகர்திலகத்துக்கு ஒரு இளைய திலகம் போல, பம்மலாருக்கு நீங்கள் 'ஆவண இளையதிலகமாக' திகழ்கிறீர்கள்.
சிவந்த மண் ஷூட்டிங்கில் நம்பியாருடன் அமர்ந்திருக்கும் நடிகர்திலகம் என்னவொரு அழகு. உடையை வைத்துப்பார்க்கும்போது விமான விபத்தில் தப்பித்து மன்னரைக்காண வரும் காட்சியென நினைக்கிறேன்.
இருதுருவம் பேசும்பட காட்சிகளும் அருமை. பத்திரிகை செய்திகளோடு அவற்றில் வந்த நடிகர்திலகத்தின் பட விளம்பரங்களையும் பதிவிடுங்கள். உங்களைப்போன்ற ஆவணச் செம்மல்கள்தான் திரிக்கு எப்போதும் தேவை.
உங்கள் சேவை சிறக்க வாழ்த்துக்கள்.
தொலைக்காட்சி சேனல்களில் திரைப்படங்களை / பாடல்களை தொகுத்து வழங்குபவர்கள் நடிகர்திலகத்தின் படங்கள், பாடல்கள் பற்றி தப்பும் தவறுமாக தகவல்களை சொல்வது தொடர்ந்து வருகிறது. இவர்களை யார் இதெல்லாம் சொல்லச்சொன்னது?. முழுமையாக உண்மையான விவரம் தெரிந்தால் சொல்லுங்கள். அல்லது சும்மா ஒளிபரப்பிவிட்டு போங்கள். எல்லாம் தெரிந்த மேதாவிகள் போல தகவல்களை தப்பும் தவறுமாக உளறிக்கொட்ட வேண்டியது. காம்பியர்கள் இப்படி தகவல்களை சொன்னாலும், அவர்களுக்கு ஸ்க்ரிப்ட் எழுதிக்கொடுப்பவர்கள் செய்கின்ற தவறு இது.
சமீபத்தில் ஒரு பெண் காம்பியர் ஒரு பாடலை ஒளிபரப்புமுன் தகவல் சொல்லும்போது "இந்தப்படம் வெளியானபோது சரியாகப்போகாமல் கையைக்கடித்து விட்டது" என்று உளறினார். கடிபட்ட கைக்கு இவர்தான் மருந்து போட்டாரா?. உண்மையில் அந்தப்படம் பெரிய வெற்றியை பெறாவிட்டாலும் நன்றாக ஓடி தயாரிப்பாளருக்கும் விநியோகஸ்தர்களுக்கும் லாபத்தையே தந்தது.
எனக்கு இந்தப்படம் கையைக்கடித்து விட்டது என்று அன்புக்கரங்கள் தயாரிப்பாளர் இவர்களிடம் வந்து சொன்னாரா?. எதற்கு தெரியாமல் உளறுகிறார்கள்?. தொலைக்காட்சி தொகுப்பாளர்கள் இனியாவது தங்களை திருத்திக்கொண்டு உண்மை தகவல்களை மட்டுமே தரவேண்டும். உண்மை விவரம் தெரியவில்லையா?. உங்கள் விளக்கமும் வேண்டாம் ஒரு மண்ணும் வேண்டாம். பாடலை சும்மா ஒளிபரப்பிவிட்டுப் போங்க.
நடிகர் திலகம் 87வது பிறந்த நாள் விழா 87 நிழற்படங்கள் அணிவகுப்பு ... தொடர்ச்சி
79
https://fbcdn-sphotos-c-a.akamaihd.n...c3a68fc101cfd3