https://scontent.fmaa1-1.fna.fbcdn.n...c2&oe=58F762BE
Printable View
முரளி,
ஞான ஒளி காட்சியை நன்றாக ஆராய்ந்து இருக்கிறீர்கள்.அடிக்கடி இந்த மாதிரி ஏதாவது surprise தரவும்.செல்வன் எப்படி கண்ணில் படாமல் போயிற்று?
சிவா.
நிஜமாகவே எஸ்.பாலசந்தர் இயக்கத்தில் நடிகர்திலகம் ஸ்டில் நான் பார்த்தும் கேட்டும் அறியாதது. மிக்க நன்றி. இதமான நண்பரான எஸ்.பாலசந்தர் சென்சாரில் திரிசூலத்திற்கு சுட் கொடுத்து இடைஞ்சல் தந்து நன்றி மறந்தார்.
தவப்புதல்வன்- 1972
முக்தா ஸ்ரீனிவாசன் ,சிவாஜியுடன் "அந்த நாள்" முதல் பணி புரிபவர். சில சிறு வெற்றி படங்கள் எடுத்த பிறகு நடிகர்திலகத்துடன் இணைந்து நிறைகுடம்,அருணோதயம் முதலிய வெற்றிகள் கண்டு தவப்புதல்வனை மூன்றாவது தொடர் வெற்றி படமாக வெளியிட்டார்.அவர் எல்லா படங்களுக்கும் அவர் இயக்குனர். அவர் அண்ணன் ராமசாமி பெயரில் தயாரிக்க படும்.
முதலில் சில வருடங்கள் உதவி இயக்குனாராக பணி புரிந்து ,முழு இயக்குனராக முதலாளி என்ற சூப்பர் ஹிட் படத்துடன் 57 இல் படத்துறையில் நுழைந்தவர்.ஆரம்பத்தில் எஸ்.எஸ்.ஆர் மற்றும் ஜெமினி உடன் பணிபுரிந்தாலும் பின்னாட்களில் இவர்களை உபயோகித்ததில்லை. 69 முதல் சிவாஜியுடன் தயாரிப்பாளர் மற்றும் இயக்குனராக இணைந்தார்.
அவர் படங்களுக்கென்று தனி சூத்திரம் உண்டு.
1) கதாநாயகன் அல்லது நாயகி ஏதாவது உடற்குறை அல்லது மன பிறழ்வு கொண்டிருப்பார்கள்.
2)இவர்கள் குறைகளால் ஏதாவது மோசமான விளைவு நேரும்.
3)அந்த விளைவுக்கோ செயலுக்கோ அவர்கள் பொறுப்பாக மாட்டார்கள்.
4)பழிதுடைத்து, அல்லது குறை தீரும் வரை அவர்களை வில்லனோ வில்லியோ ஆட்டி படைப்பார்கள்.
5)கதாநாயகன் அதை மற்றவரிடமிருந்து மறைத்து உண்மை வெளிக்கொண்டு வர முயல்வார்.
6)நகைச்சுவை நடிகர்களுக்கென தனி track ஓடும்.
7)ஒரு கட்டத்தில் நகைச்சுவை நடிகர்கள் ,கதாநாயகனின் பிரச்சினையில் இணைந்து தீர்க்க பார்க்கும் போது, பிரச்சினையில் வேடிக்கையான திருப்பங்கள் சேர்ந்து படத்தை நகர்த்தும்.
8)பெரும்பாலும் முடிவு சுபமாகவே இருக்கும்.
9)நகைச்சுவை முக்கியத்துவம் பெற்றாலும் ,மனதை வருடும் காட்சிகளும் இருக்கும்.
10)நாகேஷ்,சோ,மனோரமா தவறாமல்.
---இசையமைப்பாளர்கள் விஸ்வநாதன்-ராமமூர்த்தி,டி.கே.ராமமூர்த்தி,குமார் ,கே.வீ.மகாதேவன் என்று மாறி மாறி விஸ்வநாதனிடம் நிலை கொண்டது.
---வித்யா movies என்ற போர்வையில் ரவி,ஜெய்,முத்துராமன் என்றும் தொடர்ந்து படங்கள் எடுத்தார்.
---நடிகர்திலகத்தை வைத்து 9 படங்கள் இயக்கி தயாரித்தார்.
---பலவேறு பட்ட கதாசிரியர்களுடன் பணி புரிந்துள்ளார். குறிப்பிட தக்கவர்கள்-கே.பாலசந்தர்,மதுரை திருமாறன்,மகேந்திரன்,சோ,தூயவன், கலைஞானம்,ஏ.எஸ்.பிரகாசம்,விசு ஆகியோர்.
---மிக குறைந்த செலவில் படமெடுத்து பெரும் லாபம் கண்டவர்.
---பாலாஜி,திருலோகச்சந்தர்,மாதவன் வரிசையில்,நடிகர்திலகத்தின் loyalist ஆக இருந்து மிக பெரும் பலன் கண்டு ,லாபத்துடன் மன அமைதி கொண்டு மதிப்புடன் வாழ்ந்தவர்.
---மெகா ஹிட் படங்கள் தவப்புதல்வன்,அந்தமான் காதலி,கீழ் வானம் சிவக்கும். ஹிட் படங்கள் நிறைகுடம்,அருணோதயம்,இமயம்,பரீட்சைக்கு நேரமாச்சு. சுமார் வரிசையில் அன்பை தேடி,இரு மேதைகள்.
---பழுத்த காங்கிரஸ் தேசியவாதி.
ஒரு மத்யதர குடும்பத்து கல்யாண விருந்துக்கு செல்கிறீர்கள் என்று வைத்து கொள்ளுங்கள். உங்களுக்கே தெரியும் traditional மெனு .breakfast ,டின்னெர் எல்லாமே நீங்கள் எதிர்பார்த்த படியே. ஆனால் உப்பு,உறைப்பு,இனிப்பு எல்லாமே சரியான விகிதத்தில் கலந்து சுவை கூடுதலாய், பரிமாறும் விதமும் பாந்தமாய் இருந்தால் மனதுக்கு ஒரு இதம் ஏற்படுமல்லவா?அதைத்தான் தவப்புதல்வனில் ரசிகர்கள் உணர்ந்தனர்.தூயவன் திரைக்கதை படு கச்சிதம்.
நிர்மல் இசையறிவு மிகுந்த ,இசைக்கருவிகள் பலவற்றில் இயல்பான வாசிப்பு திறமை கொண்ட ,அன்னையுடன் தனித்து வாழும் ஒரு பணக்கார இளைஞன்.டாக்டர் வசந்தி அவனை மணக்க இருக்கும் மாமன் மகள்.இருவருமே ஒருவரின் திறமை மீது மற்றவர் மரியாதை வைத்து,ஒருவரின் முன்னேற்றத்தில் மற்றவர் உண்மை அக்கறை செலுத்தும் தூய அன்பு கொண்டவர்கள்.
நிர்மல் தன் நண்பன் james வேண்டுகோளை தட்ட முடியாமல் ,அவன் ஹோட்டல் இல் trumpet வாசிக்க ஒப்பு கொள்ள,அதன் மூலம் நடன காரி விமலா அவள் குடிகார புல்லுருவி அண்ணன் ஜம்பு இவர்களுடன் அறிமுகமாகி ,அவர்களுடன் உரிய எச்சரிக்கையுடன் நடக்கிறான். இடையில், நிர்மலுக்கு அவன் பரம்பரை நோயான மாலைக்கண் தாக்க,தன் தந்தையை தாக்கி விபத்திலும் கொன்ற அந்த நோய் தாயை சித்த சுவாதீனம் இழக்க வைத்ததையும், தாய் இந்த உண்மையை தாங்க மாட்டாள் என்பதையும் ,வசந்தியிடம் ரகசியம் தங்காது என்பதால் இரவுகளில் தான் வாசிக்கும் ஹோட்டல் அறையில் தங்கி ரகசியம் காக்கிறான்.தற்செயலாய் திருட வரும் ஜம்புவிற்கு இந்த உண்மை தெரிய விமலா இதை வைத்து ,வசந்தியை அறைக்கு வரவழைத்து நிர்மல் தன்னுடன் அந்தரங்கமாய் இருப்பது போல தோற்றம் கொடுத்து அவர்கள் கல்யாணத்தை நிறுத்துகிறாள்.
நிர்மல் தாய் விரும்பும் பெண்ணிற்கே கல்யாணம் செய்து சொத்தும் சேரும் என்பதால் ,வசந்தியின் கார் முன் தற்கொலை செய்ய வருவது போல் நடித்து தனக்கும் நிர்மலுக்கும் தொடர்புண்டு என்று நிருபித்து, நிர்மலை மிரட்டி வீட்டிற்கே வருகிறாள்.james ,விமலாவை அங்கிருந்து விரட்ட அவள் அண்ணன் போல் விமலாவுடன் வருகிறான். விமலாவை விரட்ட சதி செய்யும் ஒவ்வொரு முறையும் சந்தர்ப்பம் விமலாவிற்கே சாதகமாகி ,கல்யாணம் வரை போக, தற்செயலாய் உண்மை வசந்திக்கு தெரிய, ஒரு வெளிநாட்டு டாக்டர் சிகிச்சையால் நிர்மல் குணமாகி ,விமலாவின் குட்டு வெளியாகி வசந்தியும் நிர்மலும் சேர james அரசியல் பஞ்ச் காமெடியுடன் சுபம்.
எனக்கு நினைவு தெரிந்த வரை ஒவ்வொரு அசைவுக்கும் லாஜிக் பார்த்து,மிக சுவையான திருப்பங்கள்,மனதை தொடும் பன்முகம் கொண்ட காட்சியமைப்புகள் என்று ஒரு சில மசாலா குடும்ப படங்களே ,ஒரு action பட விறுவிறுப்புடன் அமைந்தன. அவற்றில் ஒன்று தவப்புதல்வன். ஆரம்பம் முதல் இறுதி வரை தொய்வில்லாத திரைக்கதை,அளவான வசனங்கள்.உறுத்தாத executive வகை இயக்கம்.
சுவையான காட்சிகளுக்கு பஞ்சமே வைக்காத படம்.love is fine நடனம், வசந்தியுடன் ஹோட்டல் trumpet வாசிப்பதை வீட்டில் சொல்லாமல் மாட்டும் இடம், வாசு திருட வரும் இடத்தில் கண்தெரியாமல் சிவாஜி அவருடன் மோதும் இடம்,
அம்மாவுக்கு தவறுதலாய் விஷ மருந்து கொடுக்க முயலும் காட்சி ,தான்சேன் காட்சி,விமலா திட்டமிடும் காட்சிகள்,james (சோ),மனோரமா வசந்தியை மாட்ட வைக்க பார்த்து backfire ஆகும் சுவாரஸ்யம் (முக்தா பஞ்ச் ),சிவாஜியை சகுந்தலா ( பிரசித்தி பெற்று தொடர்ந்த ஜோடியின் முதல் படம்) tease பண்ணும் காட்சிகள்,தான் கொடுத்த கம்பு தனக்கே உதவும் காட்சி,சிவாஜி வாத்தியத்தை உடைத்து விரக்தியை வெளிப்படுத்த கே.ஆர்.விஜயா அதே பாணியில் தன் மருத்துவ கருவிகளை உடைக்கும் காட்சி,கிண்கிணி கிண்கிணி கிறிஸ்மஸ் தாத்தா காட்சி, போட்டி பாடல் காட்சி ,இரு பகுதி கொண்ட விறு விறு இறுதி காட்சி , வசந்தியின் நல்ல நோக்கம் கேள்விக்குள்ளாவது என்று பல நல்ல காட்சிகள் சிறந்த முறையில் திரைக்கதையுடன் இணைந்தே பயணிக்கும். மற்ற முக்தா படங்களை விட கூடுதல் professionalism தெரியும்.
சிவாஜியின் சிகை அலங்காரம்(முக்தா சிவாஜிக்கு நிறைகுடத்தில் ஆரம்பித்த பிரத்யேக ஸ்டைல் அக்கால கிருதாவுடன்),
வித விதமான டிசைன் குர்தா டைப் மேலுடை,இளமை தெறிக்கும் அழகு,அமெரிக்கையான நடிப்பு,படம் முழுதும் பிரமாதம். மாலைக்கண் நோய்க்கு முழு விளக்கம், கூடுதல் பிரச்சினை என்று மெடிக்கல் ஆகவும் நன்கு டீல் பண்ண பட்ட படத்தில் (Nyctalopia ,xerosis ,edema ) சிவாஜி dry eyes பிரச்சினையில் கண்ணை கொட்டுவதும், கண் தெரியாத போது காதை சிறிதே திசை நோக்கி சப்தம் உணர்வது என்று கலக்குவார். துள்ளல் ஸ்டைல் நானொரு காதல் சந்நியாசி,தான்சேன் இசை கேட்டால், உருக்க கிண்கிணி,முத்திரையுடன் போட்டி பாடல் காட்சி என ரசிகர்களுக்கு full மீல்ஸ் . வாத்தியங்களை உடைத்து முடித்து கடைசியாக கிடாரை எடுத்து வசந்தி போய் விட்டதை உணர்ந்து கடைசி நிமிடத்தில் உடைக்காமல் அணைத்து கொள்ளும் பரவச உருக்க ஈடுபாடு,கடைசியில் தன்னை படுத்தி எடுத்தாளே என்று விமலா கண்ணை கட்டி பரபரப்பாய் பழி வாங்கும் டீசிங் என்று இந்த படத்திலும் அவர் கொடி நாட்டி விடுவார்.
மெல்லிசை மாமன்னர் இந்த இசையுடன் சம்பந்தமுள்ள படத்திற்கு நன்றாக பங்களித்துள்ளார்.(திருப்தியா கார்த்திக் சார்?)
சோ,மனோரமா,வாசு ,பண்டரிபாய்,செந்தாமரை அவரவர் பங்கை உரிய முறையில் தர, விஜயா,சகுந்தலா செமையாய் ஸ்கோர் செய்வார்கள்.இந்த படத்திற்கு விஜயா ஓகே.(டூயட் கிடையாது)
வழக்கமாய் வெற்றி பெரும் முக்தா formula ,இந்த படத்தை சரியான விகித உணர்ச்சி,entertainment ,விறுவிறுப்பு, பாத்திர படைப்பில் முழுமை ,படம் முழுதும் தெரியும் sincerity &seriousness தன்மை இவற்றுடன் ரசிகர்கள்,பொதுமக்கள் (அனைத்து வயதினர்) திருப்தி தந்ததால் பெரிய ஹிட் என்ற status எட்டியது.
https://scontent.fmaa1-1.fna.fbcdn.n...39&oe=58C74C24
நின்னுட்டு போஸ் காட்டினா மட்டும் ஸ்டைல் என்பதல்ல. படுத்துக்கொண்டும் ஸ்டைல் காட்டுவதிலும் தலைவர் மட்டுமே என்றும் சக்கரவர்த்தி
மிக்க நன்றி முரளி சார். பின்னூட்டப் பதிவுகள் உங்களுக்கே உரித்தான நடையில். ரசிக்க ருசிக்க வைக்கிறது. ஆண்டனியின் தலை சாய்த்து நோக்கும் அந்தக் காட்சியை நானும் உன்னிப்பாகக் கண்டு ரசித்து வியந்து கொண்டிருப்பது உண்டு. இதோ உங்களுக்காக அந்த முரட்டுப் புயலின் முகம் சாய்த்த போஸ். இது போல ஆராயக்கூடிய போஸ்கள் என் ஆண்டவனாம் ஆண்டனியிடம் ஆயிரக்கணக்கில் உண்டே!
http://i1087.photobucket.com/albums/..._001775103.jpg
கோ,
'தவப்புதல்வன்' அட்டகாசம். படத்தின் சிறப்பம்சங்கள் அனைத்தையும் ஒரே கட்டுரையில் அளித்து விட்டீர்கள். நடிகர் திலகத்தை வைத்து நிறைய பணம் சம்பாதித்ததையும் வெளிக்காட்டாமல் நடிக்கத் தெரிந்தவர் வரிசையில் முக்தா முதலிடம் பெறுவார்.
முரளி சார்,
மிக்க நன்றி. உங்கள் வேலைப்பளு நான் அறிந்ததே. சமயம் கிடைக்கும்போது 'செல்வத்தை' அள்ளித்தாருங்கள்.
ஆண்டனியின் தலை சாய்த்த பார்வையில் இருக்கும் நுணுக்கம் பற்றி திரை பிரபலம் விளக்கிய பங்கு மிக அருமை. சின்னத்திரைகாரர் போல பலர் உணரும் வண்ணம் அமைந்த நல்ல பதிவு. ஞான ஒளியார் குத்தகை எடுத்த சுரங்கத்தில் நீங்களும் அவ்வப்போது அகழ்வாராய்ச்சி நடத்துவது மகிழ்ச்சியளிக்கிறது.
கோபால் சார்,
தவப்புதல்வன் நிர்மல் பற்றிய பதிவு அருமை. படத்தைப்பற்றி சுருக்கமாகவும் தயாரிப்பாளர் பற்றி அதிகமாகவும் எழுதியிருக்கிறீர்கள். வேலி தாண்டாத வெள்ளாடு என்ற வகையில் இவர் மீது மதிப்பு உண்டு.
60 களில் மற்றவர்களை வைத்து பனித்திரை, இதயத்தில் நீ, நினைவில் நின்றவள், தேன்மழை ஆயிரம் பொய், பொம்மலாட்டம் என்று சகட்டு மேனிக்கு பொழுதுபோக்கு படங்களை அள்ளி தெளித்தவர். ஆனால் நன்றாக இருக்கும்.
மூக்கையா சேர்வைக்கும், ஜமீன்தார் அனைத்துக்கும் இடையே மாட்டினாலும் அற்புதமாக கரை சேர்ந்த நிர்மல் பற்றி அடிக்கடி அலசுவது மனதுக்கு இதம்.
பதிவுக்கு நன்றி
http://www.behindwoods.com/new-image...-maligai31.jpg
அழகாபுரி ஜமீன்தார் அகஸ்தியா விஜயம்
நாளை 02.12.2016 முதல் தினசரி பகல் மற்றும் மாலைக் காட்சியில் சென்னை அகஸ்தியா திரையரங்கில்
காலத்தால் அழியாத காதல் காவியம்
நடிகர் திலகத்தின்
http://royalisai.com/download/albums...%20Maligai.jpg
நன்றி வாசு. மகிழ்ச்சியாக எழுதும் ஆர்வக் கோளாறில் இடது கண்ணிற்கு பதிலாக வலது கண்ணை மறைத்திருக்கும் கருப்பு திரை என்று எழுதி விட்டேன். மன்னிக்கவும்.
கோபால், மீள் பதிவு என்றாலும் நச் பதிவு. ரசித்துப் படித்தேன் மீண்டும்.
ஆதிராம் சார், அழகாபுரி சின்ன ஜமீன் பற்றி நீங்கள் குறிப்பிட்டவுடன் அவரின் அகஸ்தியா விஜயம் ஆரம்பமாகி விட்டது பார்த்தீர்களா?
அன்புடன்
வாசு,
நீ தரவேற்றிய இரும்பு திரை காட்சியை இரண்டு மணிநேரமாக திருப்பி திருப்பி ரசித்து மகிழ்ந்து கொண்டே இருக்கிறேன்.1960 பொற்காலம்.இரும்புத்திரை சிவாஜி-வைஜயந்தி, தெய்வப்பிறவி சிவாஜி-பத்மினி,பாவைவிளக்கு சிவாஜி-கமலா என்று ஏராளமான லயிப்புக்குரிய
படு இயல்பான காதல் காட்சிகள். அது என்னவோ சிவாஜியுடன் இணைந்தாலே எந்த நாயகிக்கும் அவருடன் காதல் ரசாயனம் அமைந்து விடுகிறது.
வரும் 11 -12 -2016 அன்று புதுக்கோட்டையில் நடைபெறும் நிகழ்ச்சியின் அழைப்பிதழ்
http://i1234.photobucket.com/albums/...psjshf4boo.jpg
http://i1234.photobucket.com/albums/...pstcqws4t7.jpg
http://i1234.photobucket.com/albums/...pspskpcelw.jpg
http://i1234.photobucket.com/albums/...pspg5gte3e.jpg
Reproduced from the FB page of Trichy M. SrinivasanQuote:
https://scontent.fmaa1-1.fna.fbcdn.n...ff&oe=58B9E4F5
Dear Sivaji Fans... Our All India Thalaivan Sivaji Makkal Iyakkam- Trichy Dt. regular monthly meeting to be held at SRUTHI thirumana mandapam evening 5.00 O'"clock on 4.12.2016 (SUN DAY) after the meeting we will show our Great Sivaji's RAJA silver jubilee picture on screen don't miss it...all are come and enjoy...
by
Trichy M.Srinivasan.
President : All India Thalaivan Sivaji Makkal Iyakkam.
Thank you.
Link: https://www.facebook.com/photo.php?f...8815926&type=3
விகடனிலிருந்து...
பாசமலர் :
இந்தப் படத்திற்கு அறிமுகமே தேவையில்லை. 1961-ம் ஆண்டு வெளியான இந்தப் படம் சிங்களம் உட்பட நான்கு மொழிகளில் ரீமேக் செய்யப்பட்டுள்ளது. இந்தியில் மட்டும் இரண்டு முறை ரீமேக் ஆகியுள்ளது. எல்லாப் பயலுகளுக்கும் இளகிய மனசுதான் போல...
சூரியன் இன்று காலை கிழக்கே உதித்தது என்று சொல்லுவது எப்படி இயல்போ அது போன்றே அழகாபுரி சின்ன ஜமீன் ஆனந்திற்கு சிறப்பான வரவேற்பு கிடைத்தது என சொல்லுவதும். தமிழ் சினிமா சரித்திரத்திலேயே மறு வெளியீடுகளில் வசந்த மாளிகை அளவிற்கு திரையிடப்பட்ட படங்கள் உண்டா என்றால் அது கேள்விக்குறிதான். ஆனால் எத்தனை முறை வந்தாலும் அத்தனை முறையும் வெளியீட்டாளருக்கு வாரி வழங்கும் வள்ளல் அழகாபுரி சின்ன ஜமீன் அவர்கள்.
இன்று முதல் சென்னை அகஸ்தியா திரையரங்கில் மதியக் காட்சியும் மாலைக் காட்சியுமாக தினசரி 2 காட்சிகளாக திரையிடப்பட்ட வசந்த மாளிகை படத்தின் இன்றைய மதியக் காட்சிக்கு சற்றேறக்குறைய 500 நபர்கள் படம் பார்க்க வந்திருந்தனர் என்பதுதான் செய்தி. அதிலும் 100-க்கும் மேற்பட்டவர்கள் பெண்கள் என்பது சிறப்பு செய்தி. மதியக் காட்சிக்கு சென்றிருந்த நண்பர் அண்மைக் காலத்தில் மறு வெளியீட்டு படங்களுக்கு இந்த அளவிற்கு பெண்கள் கூட்டம் வந்ததை பார்க்கவில்லை என்றார். மாலைக் காட்சிக்கும் அதேயளவிற்கு மக்கள் வந்திருந்தனர் என்பதையும் மற்றொரு நண்பர் மூலமாக அறிய முடிந்தது.
புயலும் மழையும் மிரட்டிக் கொண்டிருந்த நாளிலும் சில சமயங்களில் பலத்த மழை பெய்தபோதும் பண புழக்கம் பாதிக்கப்பட்ட இந்த சூழ்நிலையிலும் இப்படிப்பட்ட சாதனைகள் புரிவது என்பதுதானே நடிகர் திலகத்தின் வரலாறு.
அன்புடன்
சென்ற வாரம் மதுரை சென்றிருந்தேன். கட்டபொம்மன் திரையிடப்பட்டிருந்த சென்ட்ரல் சினிமாவிற்கு ஞாயிறு மாலை சென்ற போது ரசிகர்கள் வழக்கம் போல் ஆர்பாட்டத்துடன் கொண்டாடிக் கொண்டிருந்தார்கள். அந்த நேரம் வெளிநாட்டை சேர்ந்த இருவர் அந்த வழியாக வந்துக் கொண்டிருந்தனர். திரையரங்கின் வாசலில் நடக்கும் இந்த கோலாகலங்களை பார்த்துவிட்டு அங்கேயே நின்ற அவர்கள் அதைப் பற்றி விசாரித்தனர். படத்தைப் பற்றியும் நடிகர் திலகம் பற்றியும் அவர்களிடம் விவரிக்கப்பட்டது. அவர்களை பற்றிய விவரம் கேட்க அவர்கள் இருவரும் ஸ்விசர்லாண்ட் நாட்டை சேர்ந்தவர்கள் என்பதும் அவர்கள் பெயர் முறையே ஸ்டார்க் மற்றும் ம்யுனிக் என்பதும் அவர்கள் உயர்கல்வி கற்கும் மாணவர்கள் எனபதும் தெரியவந்தது.
வாசலில் தெரிவிக்கப்பட்ட விவரங்களை கேட்டவுடன் படம் பார்க்க ஆவல் மிகுந்த அவர்கள் டிக்கெட் வாங்கி உள்ளே சென்றனர். படம் பார்க்க பார்க்க அப்படியே பிரமித்து போய் அமர்ந்திருக்கின்றனர். இந்தப் படத்திற்காக ஆசிய ஆப்பிரிக்க கண்டத்தின் சிறந்த நடிகர் பரிசு நடிகர் திலகத்திற்கு வழங்கப்பட்ட தகவல் அவர்களுக்கு சொல்லப்பட அதுவும் அவர்களை வியப்பில் ஆழ்த்தியிருக்கிறது.
படம் முடிந்து வெளியே வரும் ரசிகர்கள் நடிகர் திலகத்தை வாழ்த்தி கோஷம் போட்டுக் கொண்டே வருகின்றனர். வெளிநாட்டினர் இருவரும் ரசிகர் எழுப்பும் வாழ்க என்ற கோஷத்தின் அர்த்தம் என கேட்டிருக்கிறார்கள்.அர்த்தம் அவர்களுக்கு விளக்கப்பட்டிருக்கிறது. நடிகர் திலகம் தற்போது எங்கே இருக்கின்றார் என்ற வினாவை அவர்கள் எழுப்ப 15 வருடங்களுக்கு முன்பே நடிகர் திலகம் நம்மை விட்டுப் பிரிந்து விட்ட தகவல் அவர்களுக்கு சொல்லப்பட ஒன்றும் பேச முடியாமல் நின்று விட்டனராம். அப்போது ரசிகர்கள் மீண்டும் வாழ்க என்று கோஷம் எழுப்ப அவ்விருவரும் அதே உணர்ச்சியோடு ரசிகர்களுடன் சேர்ந்து வாழ்க என்று சொல்ல அந்த நேரத்தில் அங்கே இருந்த அனைவரும் உணர்ச்சி வசப்பட்டு விட்டனர். மேலும் சில நிமிடங்கள் அவர்கள் செலவிட்டபின் அனைவரிடமும் விடை பெற்றுக் கொண்டு கிளம்பியிருக்கின்றனர்.
இப்படி மொழி தெரியாத, நம்முடைய வரலாற்றை முழுவதுமாக அறியாத வெளிநாட்டினரைக் கூட தன் ஒப்புயர்வற்ற நடிப்பினால் கட்டிப் போட நமது நடிகர் திலகம் இருந்ததால்தான் நம்மால் இன்றும் மார் தட்டிப் பேச முடிகிறது.
அன்புடன்
Murali Sir
Super
ராகவேந்தர் சார்,
நான் அனுப்பிய புகைப்படங்களை மிக அழகாக தரவேற்றிய தங்களுக்கு கோடானு கோடி நன்றி. அன்று இரவே ஊருக்கு கிளம்ப வேண்டிய சூழல் ஆதலால் என்னால் முழுமையாக இருக்க முடியவில்லை. இறுதி வரை இருந்து புகைப்படம் எடுத்து அதை பகிர்ந்துக் கொண்ட நண்பர் ஜெய்குமாருக்கு நன்றி,
அன்புடன்
நடிகர்திலகம் சிவாஜி ரசிகர்களாக, முகநூல் மற்றும் WhatsApp இல் தொடர்பவர்கள் ஒன்றிணைந்து, நடிகர்திலகம் சிவாஜி - நண்பர்கள் குழு என்ற பெயரில் அமைப்பாக உருவாக்கப்பட்டு, கடந்த மாதம் இந்தக் குழுவின் முதல் கூட்டம் சென்னை பல்லாவரத்திலுள்ள ஓட்டல் ஒன்றில் சிறப்பாக நடைபெற்றது. சுமார் 100 நண்பர்கள் கலந்துகொண்ட இந்த சந்திப்பு நிகழ்வின் சில புகைப்படங்கள்
http://i1234.photobucket.com/albums/...psdmz4rqab.jpg
http://i1234.photobucket.com/albums/...psbn4g8hb8.jpg
http://i1234.photobucket.com/albums/...pswu0m0liy.jpg
http://i1234.photobucket.com/albums/...psj3gnzkfc.jpg
சிவாஜி பாட்டு - 35
---------------------------------
வீணை இசை என்ன இத்தனை இனிக்கிறது
என்று விசாரித்தால், வீணை பலா மரத்தில்தான்
செய்யப்படுகிறதாமே?
அதுவும் "வாணி"யே மீட்டினால்.. இனிமைக்கா
பஞ்சம்?
*****
மிதமிஞ்சிய ஒப்பனை அழகு. கற்பழிக்க விரட்டும்
தடியர்களிடமிருந்து காப்பாற்றும் கதாநாயகனின் மீது காதல். நாலு ஜோடிப் பாட்டு. நடிப்பதற்கே
வாய்ப்பில்லாத காட்சிகள்... இப்படியான கதாநாயகி நடிகர் திலகத்தின் படங்களில் காணக்
கிடைக்க மாட்டாள்.
நவராத்திரியில், பாசமலரில் - நடிகையர் திலகம்,
நெஞ்சிருக்கும் வரை, இரு மலர்களில் - புன்னகை
அரசி,
பாலும் பழமும், ஆலயமணியில் - அபிநய சரஸ்வதி,
அவன்தான் மனிதன், எங்கிருந்தோ வந்தாளில் -
கலைச் செல்வி,
வசந்த மாளிகையில், சிவகாமியின் செல்வனில் -
வாணிஸ்ரீ...
சராசரி நாயகிகளில்லை.. சாதித்த நாயகிகள்.
நடிப்பென்பதின் மனித உருவமாய்த் திகழ்ந்த
எங்கள் நடிகர் திலகத்தின் நேர் நின்று, பேர் வென்று சாதித்த நாயகிகள்.
*****
" ல(த்)தா"-
மறக்க முடியாத பெயர்.
கதவிடுக்கில் சிக்கிய பல்லியாய் அன்றாடங்களின் பிடியில் சிக்கி அல்லலுறும்
மனிதர்களுக்கு சினிமாக் கொட்டகைகள் ஆறுதல் தளமாகின்றன.
எல்லோருக்குமே சினிமா என்பது பொழுதுபோக்கில்லை. தன்னை, தன் கஷ்ட நஷ்டங்களை திரையும் உலவும் பிம்பத்தோடு
பொருத்திப் பார்த்துக் கொண்டு, ஒப்பிட்டுக் கொண்டு சந்தோஷிக்கவோ, வருந்தவோ செய்யும்
சாதாரணர்களுக்கு சினிமா ஒரு திருத்தலம்.
வழக்கமான தமிழ் சினிமா கதாநாயகி் போல்
அலங்காரப் பதுமையாக மட்டும் வளைய வராமல், நடுத்தரக் குடும்பங்களில் திடீர் திடீரெனச் சூழும் இருளை விரட்டும் சுள்ளென்ற சூரியப் பெண் ல(த்)தாவை தமிழ் மக்கள் வசந்த மாளிகையில் கதாநாயகியாகப் பார்த்தார்கள்.
ஒரு அடிமைத் தனம் கிடையாது. பிறையில் ஏற்றி
வைத்த தீபமாட்டம் அழகில் அலப்பல் கிடையாது.
காசென்றால் வாய் பிளக்கும் கேவலம் கிடையாது.
எந்தவொரு சூழலிலும் தன் கம்பீத்தை சிறிதும் இழக்காத கதாநாயகி, தமிழ்த் திரைகள் பழகாத புதுசு.
அன்புக்கு சந்தனமாய் குழைவதும், அதிகாரத்தை
திராவகமாய் பொசுக்குவதுமாய் ஒரு குணம்.
தன்மானத்தைச் சீண்டிப் பார்க்கிறவன் காதலனே ஆனாலும், அவனே தனக்கு சம்பளம் கொடுக்கிற முதலாளியாய் இருந்தாலும், துணிந்து நெற்றிக் கண் திறக்கிற ல(த்)தா என்கிற கதாநாயகியை, நான் வசந்த மாளிகையை முதன் முதலாகப்
பார்த்த அந்தச் சின்ன வயசிலேயே பிடித்துப் போனது.
"ல(த்)தா"-
மறக்க முடியாத பெயர்.
( தலைவர், "லத்தா" என்று அழைத்து அழகாக்கிய
பிறகு "லதா" வாவது..? "லத்தா" தான்! )
*****
அந்தக் கால இரவுகளில் என்னோடு அதிக நேரம் வசித்த வானொலிப் பெட்டியிலிருந்து "அடுத்ததாக வசந்த மாளிகை படத்திலிருந்து ஒரு பாடல்" என்று குரல் வந்தால், எம். ஆர். ஆர். வாசு அறைக்குள் நுழைந்து உருட்டிய சத்தம் கேட்டு, கண் தெரியாத தவப்புதல்வன் நிர்மல் காதோடு
கை குவித்து கவனமாதல் போல நானும் ஆவலோடு காது தீட்டிக் காத்திருப்பது... இந்தப்
பாடலுக்காகத்தான்.
நன்றிகளுக்குரிய கவியரசர் நடிகர் திலகத்தை
வீணையாக உருவகப்படுத்திய போதே பாடல்
ஜெயித்து விட்டது.
"கலைமகள் கைப்பொருள்" கலைமகளின் மடிமீது
கிடக்கிறது.. குழந்தை போல. மடி கிடத்திப் பார்த்த
கலையன்னைக்குத் தன் திறமை நாதத்தால் பெருமை சேர்த்த குழந்தைதானே நம் நடிகர் திலகம்?
"கவனிக்க ஆளில்லையோ"...
கவனிப்பு - அன்பு மிகுந்த அக்கறை.
சரியான விரல்களால் மீட்டப்படாத அற்புதமாய்
நாயகன். நாதம் நிரம்பிய வாத்தியம் நல்லிசை
தாராமல் வீணாகிறதே என்கிற நாயகியின் கவலை, பாடலாகியிருக்கிறது.
கவலை எவ்வளவு இனிமை கேளுங்கள் என்கிறார்
திரை இசைத் திலகம்.
நாயகன் குறித்த நாயகியின் கவலையை மூன்று
பகுதிகளாகப் பிரிக்கிறார்கள் .. கவியரசரும், திரை இசைத் திலகமும்.
"உன்னிடம் ஆயிரம் ராகங்களே - என்றும்
உனக்குள் ஆயிரம் கீதங்களே..
இசையறிந்தோர்கள் மீட்டுங்களேன் - இல்லை
எனக்கேனும் வழிகாட்டுங்களேன்!?"
- அக்கறை. காதல் மிகுதியில் கசியும் கரிசனம்.
கெட்டழியும் காதலனை நல்வழிப்படுத்த வேண்டும்
என்கிற துடிப்பு. தானே அந்த நல்ல காரியத்தைச்
செய்ய வேண்டுமென்பதுதான் நினைப்பு. இசையறிந்தோர்கள் மீட்டுங்களேன் என்பதெல்லாம் சும்மா நடிப்பு.
"நான் யார் உன்னை மீட்ட?
வரும் நன்மைக்கும் தீமைக்கும் வழிகாட்ட?
ஏனோ துடிக்கின்றேன்..
அதன் இனம் புரியாமல் தவிக்கின்றேன்..!"
- சுய பரிசீலனை. காதலனை நல்வழிப்படுத்தும்
யோக்கியதை தனக்கிருக்கிறதா என்று தனக்குத்
தானே கேட்டுக் கொள்ளும் கேள்வி. தனது தவிப்பையே தன் கேள்விக்குப் பதிலாகத் தரும்
பரிதாபம்.
"சொர்க்கமும், நரகமும் நம் வசமே.
நான் சொல்வதை உன் மனம் கேட்கட்டுமே.
சத்தியம், தர்மங்கள் நிலைக்கட்டுமே.
இது, தாய்மையின் குரலாய் ஒலிக்கட்டுமே."
- ஏக்கத்தையும், கவலையையும் அறிவுரையாக மாறும் உரிமை. தன் நேசத்திற்குரியவன் மேல்
தான் கொண்ட அன்பெல்லாம் திரட்டி தாயாகி
நிற்கிற பெருமை.
*****
சுசீலாம்மா ஆயிரம், ஆயிரம் என்று பாடும் போது
அந்த "ரம்", உள்ளே சிவப்பு பரவிய அறையில்
தலைவர் ஊற்றி, ஊற்றிக் குடிக்கும் மதுவை விட
போதை.
*****
சிவப்பு வெல்வெட் விரித்த மாடிப் படிகளில் ஊன்றி, ஊன்றி நடந்து வரும் அழகை வி்டுங்கள்..
வெளிர் நீல உடையணிந்த மெழுகுச் சிலை போல
நிற்கும் அழகை விடுங்கள்..
"இது தாய்மையின் குரலாய் ஒலிக்கட்டுமே" என்று
வாணிஸ்ரீ பாட, உதடு சுழித்துச் சிரிக்கிற அழகை
விடுங்கள்..
"ஏனோ.. துடிக்கின்றேன்" என்று அழுது பாடும்
பெண் குரல் கேட்டதும், நின்று நிமிர்ந்து திரும்பிப்
பார்க்கும் ஒரு பார்வை போதாதா.. எங்கள் தலைவனை நினைத்து, நினைத்து நாங்கள்
கொண்டாட..!?
http://youtu.be/hx8VqmStqaE
Sent from my P01Y using Tapatalk
நன்றி.. ஆதிராம் சார்.. "வெள்ளிக் கிண்ணம்"
பதிவுக்கான பாராட்டுக்காக.
அந்த எனது நாற்காலிக் கற்பனையைத் தாங்கள்
பாராட்டியது பார்த்து மனம் மகிழ்ந்து குதித்தாலும்,
தங்களின் பாராட்டுப் பதிவின் கடைசி இரண்டு
அடிகளில் அந்த நாற்காலி குறித்து நீங்கள் எழுதியிருந்தீர்களே.. அந்த மாதிரியான துணிச்சலான எழுத்துகள் எனக்கு எப்போ கை வருமோ என்று ஒரு ஓரத்தில் கவலைப்படவும் செய்கிறது.
*****
கோபால் சார்...
நீங்கள் எழுதினால் "எத்தனை அழகு", இன்னும்
எத்தனை அழகு? ரசித்தேன்.
"மடி மீது தலை வைத்து விடியும் வரை தூங்குவோம்" என்று எழுதி விட்டு தூங்குவோம் பக்கத்தில் அடைப்புக் குறிக்குள் கேள்விக் குறிகள் அடைத்த உங்களின் குறும்பு... ரசித்தேன்.
அசங்கல், கசங்கலில்லாத புத்தம் புது பிரிண்டில் மீண்டும் படம் பார்த்தது போல அந்த "தவப்
புதல்வன்" பதிவு.. மிக ரசித்தேன்.
எத்தனை அருந்தினாலும் திகட்டுவதேயில்லை
உங்களின் எழுத்துத் தேன்.
தங்களைப் போன்ற திரியின் முன்னோடிகளின் சிறந்த எழுத்துகள் உதாசீனப்படுத்தப்
படுவதாய் தாங்கள் வருந்தும் பதிவுகளை இடையிடையே பார்க்க முடிகிறது.
நல்ல எழுத்துகளை வாசித்து, உடனுக்குடன் விமர்சிப்பது, ஆலயம் சென்று இறை வணங்குதல்
போல. சொல்ல வார்த்தையின்றி மௌனித்திருப்பது, கோபுரம் பார்த்து கன்னத்தில் போட்டுக் கொள்வது போல.
வணங்கும் முறைகள்தான் வேறுபடுகின்றன.
நல்ல எழுத்துகள் வணங்கப்பட்டுக் கொண்டேதான் இருக்கின்றன.
வெள்ளிக் கிண்ணத்தைத் தங்கக் கிண்ணமாக
மாற்றித் தந்த தங்கள் தமிழ்க் கரங்களுக்கு என்
நன்றி முத்தங்கள்.
******
வாசு சார்...
கடந்த பிப்ரவரியில் சென்னையில் நிகழ்ந்த வாட்ஸ் ஆப் குழும நண்பர்கள் சந்திப்பின் போது,
(கோபால் சார் கோடு போட, நீங்கள் தங்க நாற்கரசாலை போட்ட) இரும்புத் திரை காதல் காட்சியை ராகவேந்திரா சார் புண்ணியத்தில் பார்த்து மகிழ்ந்தேன். நீங்கள் எழுத்து வழி ஓட்டிக்
காட்ட, ஒன்பது மாதங்களுக்குப் பிறகு மீண்டும்
பார்த்து மகிழ்ந்தேன்.
அப்புறம்.. தவப்புதல்வன் சண்டைக் காட்சி வர்ணனையை வியந்தேன். விரித்து வைத்த
நடிகர் திலகத்தின் கால்களுக்கூடே தங்களின் பெயர் கொண்டவர் படும் அவஸ்தைகளுக்கு
நீண்ட காலம் சிரிக்கலாம்.
அறுபதுகளில் நம்மவரோடு தந்தை நடிகவேள் நடித்துத் தந்த நிறைவுக்குக் கொஞ்சமும் குறைவின்றி எழுபதுகளில் வாசுவும் தந்திருக்கிறார். உதாரணம் - பாரத விலாஸ், தவப்புதல்வன்.
*****
முரளி சார்..
"செல்வம்" வரக் காத்திருக்கும் ஏழையாக நானும்.
******
ராகவேந்திரா சார்..
அய்யனின் அழகுத் திருவுருவங்களுடன் தாங்கள்
சொல்லும் "குட்மார்னிங்" களுக்காகவே எனது
காலைகள் விடிகின்றன.
Sent from my P01Y using Tapatalk
https://scontent.fybz1-1.fna.fbcdn.n...fe&oe=58B9B8D9
எழுபதுகளின் துவக்கத்தில் வறுமையின் பிடியில் சிக்கி வாடிய கக்கன் மற்றும் அவரது குடும்பத்துக்கு நிதியளித்து உதவ எண்ணிய நடிகர்திலகம் சிவாஜி, அதற்காக, தான் அப்போது ...நடத்திவந்த 'தங்கப்பதக்கம்' நாடகத்தினை சென்னைக்கு வெளியே பெரிய நகரமொன்றில் நடத்த திட்டமிட்டு அதற்கான முயற்சிகளில் இறங்கினார். தான் சார்ந்திருந்த காங்கிரஸ் பேரியக்கத்தின் தலைவர்களில் ஒருவரும், பல ஆண்டுகளாக அமைச்சராக இருந்தவருமான கக்கன் அவர்களுக்காக நடத்தப்படும் நாடகத்துக்கு பெருந்தலைவர் தலைமையேற்றால் சிறப்பாக இருக்கும் என்று எண்ணி அவரை அணுக, சாதாரணமாக இதுபோன்ற நாடக விழாக்களில் கலந்துகொள்ளும் பழக்கமில்லாத பெருந்தலைவர், கக்கன் அவர்களுக்காகவும் நடிகர்திலகத்துக்காகவும் வேண்டுகோளை ஏற்றார். நாடகம் கோவையில் நடந்ததாக நினைவு.
நாடகக்கலைஞர்களை சென்னையிலிருந்து அழைத்துச்சென்று திரும்பக் கொண்டு வந்து சேர்ப்பது, அவர்களின் சம்பளம், அரங்க வாடகை, நாடக செட்களுக்கான லாரிவாடகை, விளம்பரச்செலவு என அனைத்துச் செலவுகளையும் நடிகர்திலகமே ஏற்றுக்கொண்டார். அபூர்வமாக தங்கள் நகரில் நடிகர்திலகம் பங்கேற்று நடிக்கும் நாடகம், அதுவும் பெருந்தலைவர் தலைமையில் நடக்க இருப்பதையறிந்த ரசிகர்களும் பொதுமக்களும், இந்த அரிய வாய்ப்பைத்தவற விடக்கூடாதென்று பெரும் கூட்டமாகத் திரண்டு வந்தனர். வசூல் குவிந்தது.
நாடகத்துக்கான மொத்தச்செலவையும் நடிகர்திலகம் ஏற்றுக்கொண்டதால், நாடகத்தில் வசூலான தொகை முழுவதும் கக்கன் அவர்களின் குடும்பத்துக்காக, மேடையிலேயே தலைவர் கரங்களால் வழங்கப்பட்டது. நடிகர்திலகத்தின் இந்த சீரிய சேவையைப்பாராட்டி அவருக்கு பெருந்தலைவர் காமராஜ் அவர்கள் ஒரு தங்கப்பதக்கத்தினை பரிசாக அளித்தார். தலைவர் அளித்த அந்தப்பதக்கத்தையும் நடிகர்திலகம் விழாவில் ஏலம் விட்டார். அங்கிருந்த உள்ளூர் காங்கிரஸ் பிரமுகர் அதை 10,000 ரூபாய்க்கு ஏலத்தில் எடுத்தார். (அன்றைய தினம் ஒரு சவரன் தங்கம் எழுநூறு ரூபாய்). ஏலத்தில் கிடைத்த பத்தாயிரத்தையும் கூட கக்கன் அவர்களுக்கே வழங்கிவிட்டார் நடிகர்திலகம்.
நன்றி தெரிவித்துப்பேசிய கக்கன், "பதக்கம் மட்டும் தங்கம் அல்ல, சிவாஜியின் மனமும் சொக்கத்தங்கம்" என்று மனம் நெகிழ்ந்து சொன்னார்.
PHOTO-(தங்கப்பதக்கம் நாடக இடைவேளையில், நாடகம் பார்க்க வந்திருந்த கானக்குயில் 'பாரதரத்னா' லதா மங்கேஷ்கருடன் நடிகர்திலகம்)
(முகநூலில் இருந்து)
செலுலாய்ட் சோழன் சிவாஜி தொடர் 154 – சுதாங்கன்.
http://www.dinamalarnellai.com/site/...03%20stars.jpg
சிவாஜி தொடர்ந்தார், `அதனால் நான் அவர்களின் மனதுக்கு உயரமாகத் தெரிகிறேன். அதனால் அவர்களின் கண்களும் என்னை உயரமாக பார்ப்பது போல் உணர்கின்றன. அவ்வளவுதான்! எப்பேர்ப்பட்ட உண்மை இது! இந்த உண்மை அவர் ஒருவரால் மட்டுமே கண்டுபிடிக்கப்பட்டு, கடைப்பிடிக்கப்பட்டு வந்தது. இதை அவருக்கு யாரும் கற்றுக்கொடுக்கவில்லை. இப்படி எவரும் எதையும் கற்றுக்கொடுக்க முடியாத வியப்புக்குரிய நடிப்பின் எண்ணற்ற பரிமாணங்கள் இந்திய சினிமாவில் அவர் ஒருவருக்கு மட்டுமே உண்டு. நடிப்பில் அவர் தொடாத எல்லையே இல்லை எனலாம். நடிகர் திலகத்திடம் இயக்குநர் மகேந்திரன் இன்னொரு கேள்வியைக் கேட்டார். `சில படங்களில் உங்களின் நடிப்பு சற்று மிகையாக இருப்பதாக சிலர் குற்றம் சுமத்துகிறார்களே! இதற்கு உங்கள் விளக்கம் என்ன?’
`வாஸ்தவம்தான். நான் மறுக்கவில்லை. எல்லாம் தெரியாமலா செய்வேன்? மைக் இல்லாத காலத்தில் நாம் சத்தம் போட்டு பேசியிருக்கிறோம்.
அது போல ‘கட்டபொம்மன்’ காலகட்டத்தில், அப்படி நான் வசனம் பேசி, மிகையாக நடிக்காவிட்டால், அந்த ‘கட்டபொம்மன்’ மக்கள் மனதில் பதிந்திருக்க மாட்டான்.
இன்று வரை அந்த ‘கட்டபொம்மன்’, வசனத்தை நினைவு வைத்து பேசவும் மாட்டான். சரி, அதே வசனத்தைக் குரல் தாழ்த்தி நான் யதார்த்தமாக இப்போது பேசிக்காட்டுகிறேன் கேள்!’ என்றவர், வெள்ளைத்துரையிடம் பேசும் அந்த வசனக் காட்சியை தணிந்த குரலில் மிக மிக யதார்த்தமாக பேசிக் காட்டினார்.
மகேந்திரனுக்கு பிரமிப்பாக இருந்தது… `இப்படி நான் பேசியிருந்தால், அன்றைக்கு படம் பார்த்த மக்கள் ரசித்திருக்க முடியுமா? இன்று வரை அவர்கள் அதை நினைவில் வைத்திருக்க முடியுமா?’ என்று என்னிடம் கேட்டார்.
பிறகு அவரே தொடர்ந்தார், `என்ன மாதிரி கேரக்டரை எனக்குக் கொடுக்கிறார்களோ…. அதற்குத் தக்கபடி நான் நடிக்கிறேன். உதாரணத்துக்கு ஒரு பென்சிலை என்னிடம் தந்து கையெழுத்துப் போடச் சொன்னால், அதைக் கொண்டு அதற்கு ஏற்ற மாதிரி கையெழுத்துப் போட்டுக் காட்டுவேன். பேனாவைக் கொடுத்தால், அதற்கேற்ற மாதிரி… ஸ்கெட்ச் பேனாவை தந்தால், அதற்கேற்ற மாதிரி… பெயிண்ட் அடிக்கும் பிரஷ்ஷைக் கொடுத்தால் அதற்கேற்ற மாதிரியும் எழுதுவேன். இப்படித்தான் எனக்கு தரப்படும் கதாபாத்திரங்களின் தன்மைக்கேற்ப, இயக்குநரது சொல்படி எனது நடிப்பும் வேறுபடுகிறது.’’
அவரது அற்புதமான இந்த சுயவிளக்கம் மகேந்திரனுக்கு திருப்தி அளித்தது. ஆனால், அவரது வாழ்வின் இறுதிப் பகுதியில் அவரை வைத்து படமெடுத்தவர்கள், இயக்கியவர்கள் அவரிடம் பெயிண்ட் அடிக்கும் பிரஷ்ஷைக் கொடுத்து விட்டார்கள். அத்தகைய படங்களின் வரிசையில் பாரதிராஜாவின் ‘முதல் மரியாதை’ மட்டுமே வித்தியாசப்பட்டு ஆறுதல் அளித்தது’ என்கிறார் இயக்குநர் மகேந்திரன்.
`நடிகர் திலகம் ஏன் இந்த மாதிரியான தனக்குப் பொருத்தமற்ற, சராசரித்தனமான படங்களில் நடித்து, தன்னை வருத்திக் கொள்கிறார்?’ என்ற கேள்வியும் மகேந்திரனுக்குள் எழுந்தது. அவருக்கு விளங்கிய உண்மை இதுதான்! ‘நடிப்பு ஆற்றலில் அவருக்கிருந்த வல்லமையின் உயரத்துக்கு ஏற்ற கதைகளை உருவாக்கும் ஆற்றல் கொண்ட கதாசிரியர்களோ,இயக்குநர்களோ நம்மிடம் கிடையாது. அவரை உலகமயமாக்கும் முனைப்புக் கொண்ட படத்தயாரிப்பாளர்களும் நம்மிடையே இல்லை. சராசரிக்கும் தகுதியற்ற கதாபாத்திரத்தில் நடிக்கும்போது, அவர் சம்பந்தப்பட்ட காட்சிகளும், உப்புசப்பற்றதாக அமையும்போது, அதை ஈடுகட்ட அப்படிப்பட்ட காட்சிகளைக் கரையேற்றும் முனைப்பில் அவராகவே மிகையாக நடிக்க வேண்டிய நிர்ப்பந்தத்துக்கு தன்னை உட்படுத்திக் கொண்டார்.’ இப்படித்தான் மகேந்திரனால் நினைக்க முடிந்தது.
‘தங்கப்பதக்கம்’ படப்பிடிப்பின்போது நடந்த ஒரு நிகழ்ச்சி. மனைவி லட்சுமி இறந்து போய் மனைவியை எஸ்.பி சவுத்ரி வந்து பார்க்கும் காட்சி மறுநாள் படமாக்கப்படவிருந்தது.
முதல் நாள் படப்பிடிப்பு முடிந்து புறப்படும்போது ``மகேன், இங்கே வாப்பா…நாளைக்கு எடுக்கப்போற சீன் எவ்வளவு எமோஷனலான சீன் என்று உனக்குத் தெரியும். அந்தக் காட்சியில் எனக்கு வசனம் எப்படி அமையவேண்டும் என்று நினைத்துப் பார். அதற்கேற்ற வசனத்தை எழுதிக் கொண்டு வா!!’ என்றார் நடிகர் திலகம்.
மகேந்திரனும் அன்று நள்ளிரவு வரை யோசித்தார். நடிகர் திலகம் கேட்ட மாதிரி வசனம் எழுதினால், ஒரு சில படங்களில் அவர் ஏற்கனவே பேசி நடித்த காட்சி போல அது அமையுமே என்று நினைத்தவராக… ஒரு தீர்மானத்துக்கு வந்தார் மகேந்திரன். ஒரு பேப்பரில் கால் பக்கத்தில் சில வரிகளை மட்டுமே எழுதிக் கொண்டு மறுநாள் ஸ்டூடியோவுக்குப் போனார். ஒப்பனை அறையில் சிவாஜி இருந்தார். அதனால் செட்டில் இருந்த இயக்குநர் பி. மாதவனிடம் அந்த சில வசன வரிகளைக் காட்டினார். அவர் பதைபதைத்துவிட்டார்.``நேத்து அவர் அவ்வளவு சொன்னதுக்கு அப்புறமும் இவ்வளவு கொஞ்சமா எழுதிட்டு வந்திருக்கீங்களே.. சீக்கிரம் போய் வேற டயலாக் எழுதுங்க ..’’
உதவி இயக்குநர் தேவராஜ் மகேந்திரன் எழுதிக் கொண்டு வந்ததைப்படித்து பார்த்துவிட்டு, `இதுதான் நல்லாருக்கு..மாத்தாதீங்க சிவாஜி சார்கிட்ட போய் விளக்கமாக சொல்லுங்கள்’ என்றார்.
மகேந்திரன் மேக்கப் ரூமுக்குப் போனார். தயங்கி தயங்கி தான் நினைத்தபடி எழுதிய அந்தக் காட்சியையும் சம்பந்தப்பட்ட வசனத்தையும் அவரிடம் விவரித்தார் மகேந்திரன்.
``நீங்கள் கமிஷனர் ஆபீஸிலிருந்து மனைவி இறந்த செய்தி கேட்டு வருகிறீர்கள். வீட்டுக்குள் நுழைந்ததும், ஆர்டர்லி உங்களுக்கு பின்பக்கமாக வந்து உங்கள் யூனிபார்மை கழற்றுகிறார். மனதுக்குள்ளேயே சுமையைத் தாங்கியபடி, நீங்கள் மவுனமாக படியேறிச் செல்கிறீர்கள்.மாடியில் மனைவியின் பிணத்தருகே நண்பர், மருமகள் எல்லோரும் உங்களது வரவை எதிர்பார்த்து நிற்கிறார்கள்.
மனைவியின் உயிரற்ற உடலைப் பார்த்ததும், நீங்கள் உடனே கதறவில்லை. தினமும் வீட்டில் உங்களுக்கும் உங்கள் மனைவிக்கும் நடக்கிற நிகழ்வை மனதில் கொண்டு, இரண்டு வாக்கியங்கள் மட்டுமே பேசுகிறீர்கள். கடைசியில்தான், `லட்சுமி’ என்று பொறுக்க முடியாமல் வெடித்துக் குமுறி,மனைவி மீது விழுந்து அழுகிறீர்கள்’ என்றார் மகேந்திரன்.
அமைதியாகக் கேட்டவர், மகேந்திரனை அழைத்துக் கொண்டு செட்டிற்குப் போனார். இயக்குநரிடம், `மகேந்திரன் சொன்ன மாதிரியே காட்சியை எடுங்க. அதுக்கேத்த மாதிரி லைட் பண்ணிக்குங்க’’ என்றதோடு மகேந்திரன் விவரித்த காட்சியையும் அவருக்கு விளக்கினார்.
`என் மனைவி தினமும் நான் யூனிபார்மிலேயே வர்றப்ப, மொதல்ல யூனிபார்மை கழட்டுங்க ‘’ என்று சொல்லி விட்டு தனது கோபத்தைக் காட்டுவாள். நான் வீட்டுக்கு வரும் வரை அவள் தூங்கமாட்டாள். இப்படி இதற்கு முன்னால் கணவன்– மனைவிக்குள் நடந்தவற்றை காட்சிகளாக படமாக்கி இருக்கிறோம்..
அதனால்–
(தொடரும்)
அரங்கு நிறைந்த காட்சிகளாக " வசந்த மாளிகை "
சென்னை அகஸ்தியாவில் இன்று மாலைக் காட்சி அதே உற்சாகம் நடிகர்திலகத்தின் நடிப்பினில் லயித்துப் போன எங்களுக்கு மீண்டும் அழகாபுரி இளவரசராக தரிசனம்,
https://scontent.fybz1-1.fna.fbcdn.n...47&oe=58B9231D
https://scontent.fybz1-1.fna.fbcdn.n...09649291_o.jpg
(வசந்தமாளிகை பதிவுகள் அனைத்தும் முகநூலில் இருந்து)
வெளிநாட்டில் படமாக்கப்பட்ட முதல் தென்னிந்திய திரைப்படம் என்ற பெருமையுடன் வெளியான சிவந்த மண்.
வெளிநாட்டின் இயற்கை அழகுடன், ஆருயிர் அண்ணன் நடிகர்திலகம் மேக்கப் இல...்லாமல் நடித்த ( பட்டத்து ராணி பாடல் காட்சி தவிர படம் முழுவதும் மேக்கப் இல்லை) கலைகுரிசில் சிவாஜி இயற்கை அழகுடன் கூடிய சிவந்தமண் மக்களிடயே பெரும் வரவேற்புடன் மாபெரும் வெற்றி பெற்றது,
நடிகர் திலகம் மேக்கப் இல்லாமல் நடித்த பல படங்கள், அனைத்தும் இமாலய வெற்றி பெற்றன,உதாரணத்துக்கு சில படங்களை குறிப்பிடுகிறேன்,
நெஞ்சிருக்கும் வரை, மூன்று தெய்வங்கள் (வசந்தத்தில் ஓர் நாள் பாடல் காட்சி மட்டும் மேக்கப்), சிவந்தமண், பராசக்தி யில் பெரும் பகுதி மேக்கப் இல்லை,
இன்னும் பல படங்கள்
(முகநூலில் இருந்து)