-
மக்கள் திலகத்தின் அருமை சகோதரர் திரு பெரியவர் சக்ரபாணி அவர்களின் பேரன் திரு பிரதீப் பாலு அவர்கள் தற்போது மக்கள் திலகத்தின் மறைவை ஒட்டி இருபத்தி ஐந்து ஆண்டுகள் நிறைவை முன்னிட்டு தயாரித்து வரும் புதிய வீடியோ ஆவணம் விரைவில் வெளி வரும் என்று ஆவலுடன் எதிர் பார்க்கின்றோம் .
மக்கள் திலகத்தின் ரசிகர்கள் சார்பாக உங்களுக்கு எங்களது இனிய வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கின்றோம் சார் .
என்றும் நட்புடன்
esvee
-
கல்கி வார இதழில் இந்த ஆண்டு மக்கள் திலகத்தின் தொடர் கட்டுரை வெளியானது .மக்கள் திலகத்தின் பெருமைகளையும் அவரது மனித நேய ஆளுமை பற்றியும் பல்வேறு சினிமா , அரசியல் பிரமுகர்கள் தங்களது அனுபவங்களை பகிர்ந்து கொண்டனர் .
குறிப்பாக தொலைக்காட்சி மற்றும் நாடக புகழ் திரு வரதராஜன் மற்றும் முன்னாள் அண்ணா திமுக அமைச்சரும் மக்கள் திலகத்தின் நெருங்கிய நண்பருமான திரு டாக்டர் ஹண்டே இருவரும் மக்கள் திலகத்தின் பெருமைகளை பதிவு செய்திருந்தனர் .
ஜெயா தொலைகாட்சியில் திரும்பி பார்க்கிறேன் நிகழ்ச்சியில் திரு பந்துலுவின் மகள் விஜயலட்சுமி அவர்களின் பேட்டியில் மக்கள் திலகத்தின் உதவி , மற்றும்அவரது மனித நேய பண்புகளை விரிவாக கூறினார் .
நவம்பர் 2, 2012 அன்று சென்னை இறைவன் MGR பக்தர்கள் குழு நண்பர்கள் செயலாளர் பேராசிரியர் செல்வகுமார் ,அமைப்பாளர் ராஜ்குமார் தலைமையில் விஜயலட்சுமி அவர்களை நேரில் சந்தித்து நன்றியினை தெரிவித்து கொண்டனர் .
NOV 4 2012 அன்று சென்னை இறைவன் MGR பக்தர்கள் குழு நண்பர்கள் செயலாளர் பேராசிரியர் செல்வகுமார் ,அமைப்பாளர் ராஜ்குமார் தலைமையில் தலைமையில் ஹண்டே அவர்களை நேரில் சந்தித்து நன்றியினை தெர்வித்து கொண்டனர் .
NOV 17,2012 சென்னை இறைவன் MGR பக்தர்கள் குழு நண்பர்கள் செயலாளர் பேராசிரியர் செல்வகுமார் ,அமைப்பாளர் ராஜ்குமார் தலைமையில் திரு வரதராஜன் அவர்களை நேரில் சந்தித்து மக்கள் திலகத்தின் பல்வேறு நினைவுகளை பகிர்ந்து கொண்டனர் .
திரு வரதராஜன் அவர்கள் இறைவன் MGR பக்தர்கள் குழு நண்பர்கள் அனைவருக்கும் இனிய விருந்தோம்பல் மற்றும் நினைவு பரிசுகள் வழங்கி மக்கள் திலகத்தின் ரசிகர்களின் இதயங்களில் நீங்க இடத்தை பிடித்து விட்டார் .
மேற்கண்ட சந்திப்புகளின் முழு விபரங்கள் படங்கள்
உரிமைக்குரல் இதழில் வெளிவரும் என்று பேராசிரியர் செல்வகுமார் தெரிவித்தார் .
மக்கள் திலகத்தின் பெருமைகளை வழங்கிய
திரு டாக்டர் ஹண்டே
திருமதி விஜயலட்சுமி
திரு வரதராஜன்
ஆகியோருக்கு மக்கள் திலகம் திரியில் சார்பாக நன்றியினை தெரிவித்து கொள்கின்றோம் .
மக்கள் திலகத்தின் புகழ் பாடும் இறைவன் MGR பக்தர்கள் குழு அமைப்பின் பணி மிகவும் பாராட்டத்தக்கது .
esvee
-
-
-
-
மக்கள் திலகம் நடித்த படங்கள்
சென்னை - அண்ணா சாலையில் வெளியான படங்கள்
சித்ரா - அரங்கம் .
மர்மயோகி -1951
அந்தமான் கைதி-1952
நாம் -1952
என் தங்கை -1952
அலிபாபாவும் 40 திருடர்களும் -1956
மதுரைவீரன் -1956
தாய்க்கு பின் தாரம் -1956
சக்கரவர்த்தி திருமகள் -1957
விக்கிரமாதித்தன் - 1962
தர்மம் தலைகாக்கும் -1963
பெரிய இடத்து பெண் -1963
நீதிக்கு பின் பாசம் -1963
காஞ்சித்தலைவன் -1963
வேட்டைக்காரன் -1964
பணக்கார குடும்பம் -1964
தொழிலாளி -1964
தாயின் மடியில் -1964
நம்நாடு -1969
எங்கள் தங்கம் -1970
நல்ல நேரம் -1972.
-
-
-
புதிதாக நமது மக்கள் திலகம் திரியில் இணைந்துள்ள அனைவருக்கும் எனது வாழ்த்துக்கள்.
-