http://i59.tinypic.com/25oui47.jpg
Printable View
இன்று தேவி பாரடைஸ் திரையரங்கில் தலைவரின் ஆயிரத்தில் ஒருவன் திரை காவியம் கண்டு பிரமித்து போனேன் என்ன ஒரு அழகாக டிஜிட்டல் செய்து இருக்கிறார்கள் டைட்டில் காட்சிக்காகவே நூறு முறை பார்க்கலாம் . சின்ன சின்ன சத்தங்களை கூட திரையில் அழகாக ஒலிக்க இருக்கிறார்கள் . தலைவரும் தலைவியும் படம் முழுக்க என்ன ஒரு அழகு வார்த்தைகள் இல்லை . கத்தி சண்டை காட்சிகளும் மிகவும் அற்புதமாக இருக்கிறது பாடல்கள் கேட்கவே வேண்டாம் எல்லா பாடல்களும் பழைய இசையோடு புது இசையோடு கலந்து சூப்பராக இருக்கிறது. மொத்தத்தில் நாம் எல்லோரும் திவ்யா பிலிம்ஸ் சொக்கலிங்கம் அவர்களுக்கு நன்றியினை சொல்லியாகவேண்டும். மேலும் இதோடு நிறுத்தாமல் மேலும் பல தலைவர் படங்களை இது போல் டிஜிட்டலில் மெருகேற்ற வேண்டும் என்பது என்னுடைய தாழ்மையான கருத்து .
இன்றைய "மாலை மலர் " தினசரியில் வந்த செய்தியினை பதிவு
செய்த நண்பர் திரு.வினோத் அவர்களுக்கு நன்றி.
நண்பர் திரு. வினோத் அவர்களுக்கும்,மற்றும் நமது திரி நண்பர்களின்
பார்வைக்கும் :
மாலை மலர் தினசரியில் வெளியான மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். அவர்கள் "ஆயிரத்தில் ஒருவன் " படத்திற்கு, வரவேற்பு அளித்து
பூஜைகள் செய்து, பட்டாசு வெடித்து , மகிழ்ச்சி ஆரவாரம், மற்றும் மக்கள் திலகத்திற்கு வாழ்த்தொலி எழுப்பியபோது எடுக்கப்பட்ட புகைப்படம்.
சென்னை அண்ணா சாலையில் அமைந்துள்ள தேவி தியேட்டர் வளாகத்தின் முன்பு ,அனைத்துலக எம்.ஜி.ஆர். பொதுநல சங்கம் ,
பேராசிரியர் திரு. செல்வகுமார் அவர்கள் தலைமையிலும், இறைவன்
எம்.ஜி.ஆர். பக்தர்கள் குழு தலைவர் திரு. எஸ்.ராஜ்குமார் அவர்கள்
முன்னிலையிலும் இணைந்து புரட்சி தலைவருக்கு புகழ் மாலை
சூட்டியபோது எடுக்கப்பட்டது.
பூஜைகள், மற்றும் விழா நிகழ்ச்சிகளை , ஜெயா தொலைகாட்சி
பிரத்யேகமாக படம் பிடித்தது. பேராசிரியர் திரு. செல்வகுமார் அவர்களும் ,திரு.எஸ். ராஜ்குமார் அவர்களும் தனித்தனியே
பேட்டி அளித்து , மக்கள் திலகத்தின் "ஆயிரத்தில் ஒருவன் " 1965 முதல்
ஆயிரக்கணக்கான திரை அரங்குகளில் ,போதிய இடைவெளி இன்றி
வெளியாகி வெற்றி வாகை சூடி வசூல் சாதனை புரிந்தது என்றும்
தமிழில் வெளிவந்த முதல் டைட்டானிக் படம் இதுவே என்றும்.
புரட்சி தலைவரும் ,இன்றைய முதல்வரும் இணைந்து ஜோடியாக
நடித்த முதல் வெற்றி காவியம் , திரு. திவ்யா பிலிம்ஸ் சொக்கலிங்கம்
அவர்களின் தீவிர முயற்சியால் , புதிய தொழில்நுட்ப முறையில்
இன்றைய புதிய படங்களுக்கு சவால் விடும் வகையில் , டிஜிட்டல்
வடிவில் வெளியாகி , சாதனை, சகாப்தம், சரித்திரம் படைக்க , ரசிகர்களை /பக்தர்களை மகிழ்விக்க வந்துள்ளது என்றும் , அனைவரும்
ஏகோபித்த ஆதரவோடு வரவேற்று வெற்றி பெற செய்வோம் என்று
உறுதி அளித்தனர்.
ஆர். லோகநாதன்.
ஆயிரத்தில் ஒருவன்
பிரம்மாண்டத்தின் மகுடமாக திவ்யா பிலிம்ஸ் சொக்கலிங்கம் அவர்களால் புதுப்பொலிவு பெற்று தமிழகமெங்கும் இன்று வெளியிடப்பட்ட செய்தி ஒவ்வொரு மக்கள் திலகத்தின் ரசிகர், பக்தர் நெஞ்சிலும் பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. எப்போது பார்ப்போம் என ஒவ்வொருவரும் ஏங்கிக் கிடந்த அந்த நாளும் கனிந்து வந்துவிட்டது. வசூலிலும் மாபெரும் வெற்றி பெற்று மற்றுமொரு பிரம்மாண்டமான சாதனை படைக்க வாழ்த்தும் அன்பு நெஞ்சங்கள்
வள்ளிநாயகம், ஜெய்சங்கர்.
வாழும் போதே தெய்வமாக வாழ்ந்த
எங்கள் புரட்சித் தலைவரை
மீண்டும் இன்று பெரிய திரையில்
கண்டுகளிக்க போகிறேன்...
அன்பு பொறுமை பாசம் வீரம்
போன்ற நவரசங்களை ஒரு சேர வெளிப்படுத்திய பிரம்மாண்டத்தின் மணிமகுடம்
பிரம்மாண்டத்தின் உச்சம்
வாளை சுழற்றிக்கொண்டு வீரமாக காட்சித் தரும்
எங்கள் மாண்புமிகு மணிமாறன்
இதோ வந்து விட்டார்
தனது வாழ்த்து செய்தியை பதிவு செய்த
நமது மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களுக்கு
புரட்சித் தலைவர் பக்தர்களின் சார்பாக
நன்றிகளை சமர்பிக்கிறேன்
வில்லிவாக்கம் ஏ.ஜி.எஸ்.ராயல் அரங்கு முன்பு எடுக்கப்பட்ட புகைப்படங்கள். மற்றும் அரங்கின் முன் வைக்கப்பட்டுள்ள பேனர்
http://i57.tinypic.com/2nsx6ck.jpg