Originally Posted by
KALAIVENTHAN
அக்டோபர் - 5
30 ஆண்டுகளுக்கு முன் இதே தேதியில்தான் 3வது பிறவி எடுத்து தான் ஒரு தனிப்பிறவி என்பதை நிரூபிப்பதற்காக சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சைக்காக தலைவர் சேர்ந்த நாள். அப்போதெல்லாம் தனியார் தொலைக்காட்சிகளோ, உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ளும் வகையில் செல்போன், இணையதளம் ஆகியவை கிடையாது. மாலைப் பத்திரிகையில்தான் தலைவர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ள செய்தியை பார்த்தேன். சிறியதாகத்தான் இடம் பெற்றிருந்தது. ஆனாலும், மருத்துவமனைக்கு செல்வதை விரும்பாத தலைவர் அதுவும் பரிசோதனை முடிந்து உடனே திரும்பாமல் அங்கேயே அனுமதிக்கப்பட்டிருக்கிறார் என்றால்.... லேசாக பொறி தட்டியது.
அதற்கேற்பவே அடுத்தடுத்த நாட்களில் தலைவரின் உடல் நிலை மோசமடைந்ததாகவும் மேல் சிகிச்சைக்காக தலைவர் அமெரிக்காக செல்ல இருப்பதாகவும் செய்திகள் வெளியாகி தமிழகத்தை ஸ்தம்பிக்கச் செய்தன. பிரதமர் இந்திரா காந்தியே அப்பல்லோ வந்து தலைவரை சந்தித்து அமெரிக்க பயணத்துக்கு தேவையான எல்லா உதவிகளையும் மத்திய அரசு செய்யும் என்று உறுதியளித்தார்.
பிறகு தலைவர் அமெரிக்காவில் சிகிச்சை பெற்று அங்கிருந்தபடியே தேர்தலில் ஆண்டிப்பட்டி தொகுதியில் வெற்றி பெற்று உலக சாதனை படைத்து திரும்பி வந்து 3வது முறையாக முதல்வராகி 3 ஆண்டுகள் தமிழகத்தை ஆண்டது வரலாறு.
அன்புடன்: கலைவேந்தன்
சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்