http://i59.tinypic.com/os9v0p.jpg
Printable View
இன்னும் கடலூரிலும், புதுவையிலும் படம் நாளை திரையிடப்படவில்லை என்ற செய்தியே வருவது வருத்தத்தை அளிக்கிறது. திட்டமிடுதல் போதாது. காலைக் காட்சிகளில் திரையிட வேண்டிய அவசியம் என்ன?
வணக்கம் சிவாஜி திரி நண்பர்களே!
தொடர்ந்து பதிவிட விருப்பம் இல்லையென்ற என் நிலையில் மாற்றமில்லை. ஆனால் சில விசயங்களுக்கு நான் அமைதியாக இருந்தால் எது உண்மை என்பது பொதுவானவர்களுக்கு தெரியாமல் போய்விட வாய்ப்பு உள்ளதால் அப்படி நான் கருதும் விசயங்களுக்கு மட்டும் பதில் கூற விரும்புகிறேன்!
ராகவேந்திரா சார் எனக்கு பதில் கூறி என் கருத்துக்கள் உண்மையானது என்று பதிவிட்டமைக்கு என் நன்றி! உங்கள் மீது எனக்கு நல்ல மதிப்பு உண்டு சார்!
ஆனால் சிவாஜியின் சொந்த கட்சி அரசியல் பற்றியும், அவரின் பொதுவான அரசியல் பற்றியும் உங்கள் கருத்துக்களில் நான் வேறுபடுகிறேன்! சிவாஜி அரசியல் செய்த விதம் எனக்கு சுத்தமாக பிடிக்கவில்லை என்றாலும் அவரின் த மு மு க்கு நாங்கள் உழைத்த உழைப்பு திருச்சி சிவாஜி தொண்டர்களுக்கு நன்றாக தெரியும் ! அவரின் மீது நாங்கள் கொண்ட பற்றினால் அவருடன் சேர்ந்து நாங்களும் தெரிந்தே கிணற்றில் குதித்தோம்!
இனி சிவாஜியின் பழைய அரசியலுக்கு முதலில் வருகிறேன்! 1975 இல் காமராஜர் மறைவுக்கு பின்பு அவர் எடுத்த நிலைப்பாடு முதல் தவறு! அவர் இந்திரா காங்கிரசில் இணைந்தது அவரின் பெரும்பாலான ரசிகர்களுக்கே சுத்தமாக பிடிக்கவில்லை! கேட்டால் உங்களை போன்றவர்கள் என்ன சொல்கிறீர்கள் தெரியுமா? அவர் பழைய காங்கிரசில் தொடர நெடுமாறன், ராமசந்திரன், etc போன்றவர்கள் ஒத்துழைப்பு தரவில்லை அதனால் வேறு வழியின்றி இந்திராவுடன் இணைந்தார் என்று சாக்கு கூறுகிறீர்கள்! அவர்கள் கட்சியின் தொண்டர்களிடத்தில் செல்வாக்கில் சிவாஜியின் கால் தூசுக்கு பெறுவார்களா?
அன்றைக்கு சிவாஜி மட்டும் தலைமை பொறுப்பை ஏற்று இருந்தால் தமிழ் நாட்டின் அரசியலே தலை கீழாக மாறி போயிருக்கும்! நீங்கள் சாக்கு கூறுவது போல் அவர்கள் சிவாஜின் தலைமையை ஏற்க வில்லையென்றால் 1988ல் கட்சி ஆரம்பித்ததுக்கு பதில் 1975 ல் அவர் காமராஜரின் பெயர் வரும்படி கட்சி ஆரம்பித்து ஒழுங்காக அரசியல் செய்திருந்தால் சிவாஜி அரசியலிலும் பெரும் வெற்றி பெற்று இருப்பார்! நான் சொல்லும் இந்த கருத்துக்கு அன்றைய அரசியல் நிலவரம் நன்றாக அறிந்த எவரும் மறுப்பு சொல்ல மாட்டார்கள்!
சரி இந்திரா காங்கிரஸில் தான் இணைந்து தொலைத்தார் அங்கு அவர் செய்த இரண்டாவது தவறு என்ன தெரியுமா? இந்திரா, காமராஜரின் மறைவுக்கு பின்பு அவரின் காங்கிரஸ் [இந்திரா காங்கிரஸ்] தமிழகத்தில் வலுப்பெற பழைய காங்கிரஸ் தலைவர்களை அவரின் கட்சிக்கு கொண்டு வர பெரும் முயற்சி செய்தார்! அதிலும் பழைய காங்கிரஸ் தொண்டர்களிடத்தில் காமராஜருக்கு அடுத்த நிலையில் பெரும் செல்வாக்கு படைத்த சிவாஜியை எப்பாடு பட்டாவது தன் கட்சிக்கு கொண்டு வர முன்னாள் ஜனாதிபதி திரு வெங்கட்ராமன் அவர்கள் மற்றும் திருமதி மரகதம்சந்திரசேகர் ஆகியோரிடம் அந்த பொறுப்பை ஒப்படைத்தார்! அவர்களின் முயற்சியினாலும், இந்திரா அவர்களின் தனிப்பட்ட வேண்டுகொளினாலும், பழையகாங்கிரஸ் தலைவர்களின் ஒத்துழைப்பு இல்லாததாலும், சிவாஜியின் தனிப்பட்ட விருப்பம் காரணமாகவும், இப்படி பல தரப்பான சூழ்நிலையில் சிவாஜி இந்திரா காங்கிரஸில் இணைந்தார்! அவரின் இரண்டாவது தவறுக்கு இப்போது வருவோம்!
இந்திராகாந்தி அவர்கள் இரண்டு காங்கிரஸ் இணைப்புக்கு பின்பு சிவாஜியை தமிழக காங்கிரஸ் தலைவராக நியமித்து கட்சி வளர விரும்பினார்! ஆனால் நம் தலைவர் சிவாஜி என்ன செய்தார் தெரியுமா? தலைமை பொறுப்பை அப்போது தட்டி கழித்து விட்டு , தனக்கு வேண்டியவராக அவர் நம்பிய தன் மாவட்டத்தை சேர்ந்த கருப்பையா மூப்பனாரை இந்திராவிடம் சிபாரிசு செய்து அவரை தமிழக காங்கிரஸ் தலைவராக்கினார்! அப்போது மூப்பனார் வெறும் ஒரு தஞ்சை மாவட்ட காங்கிரஸ் முக்கிய புள்ளி மட்டுமே! வளர்த்த கடா மார்பில் குத்துவது போல் மூப்பனாரும் சிவாஜிக்கு துரோகம் செய்தது தனி கதை!
சிவாஜி காமராஜர் மறைவுக்கு பின்பு ஒன்று தனி இயக்கம் கண்டிருக்க வேண்டும் அல்லது இந்திரா காங்கிரஸ் இணைப்புக்கு பின்பு தலைவர் பொறுப்பை ஏற்று மக்களுக்கும் தன்னை நம்பிய ரசிகர்களுக்கும் நல்லது செய்திருக்க வேண்டும்! இந்த இரண்டையுமே உரிய நேரத்தில் செய்ய தவறிய அவரின் செயல் பின்னாட்களில் அவரின் அரசியல் தோல்விக்கு பிள்ளையார் சுழி போட்டது! ராகவேந்திரா சார், கடைசியில் 1988 இல் அவரின் அரசியலுக்கு வருவோம்!
நீங்கள் கூறியபடி சிவாஜி அவர் ரசிகர்களின் நலனுக்காகதான் கட்சி ஆரம்பித்தார் என்றால் 1980 க்கு முன்பு அந்த ரசிகர்களின் நலனை பற்றியோ அவர்களின் உணர்வுகளை பற்றியோ ஏன் பொருட்படுத்தவில்லை? சரி இப்போதாவது தோன்றியதே! சந்தோசம்! 1989 சட்டமன்ற தேர்தலில் அவர் admk ஜானகி அணியை ஆதரித்தார் என்பது எல்லோருக்கும் தெரியும்! ஜானகிஅம்மையாரை முதலமைச்சர் ஆக இவரும் உழைத்தார்!
நான் உங்களிடம் கேட்கும் கேள்வி ஜானகி அம்மையார் முதல்வர் ஆவதால் சிவாஜி ரசிகர்களுக்கு என்ன பலன் கிடைக்கும்? இரண்டாவது கேள்வி, அண்ணனுக்கு கொடுத்த வாக்குக்காக கூட்டணி வெய்து அவர்களின் வெற்றிக்கு பாடுபட்டார் என்றே வெய்து கொள்வோம், அண்ணன் mgr அவர்களுக்கு தம்பி சிவாஜி என்ன வாக்கு கொடுத்தார்? சிவாஜி mgr அவர்களுக்கு ஏதோ வாக்குறிதி கொடுத்து இருப்பார் என்பது உறுதி! ஏனென்றால் சிவாஜியே அப்படி கூறி இருக்கிறார்! அவர்களுக்குள் நடந்த தனிப்பட்ட ஒரு சம்பவமாக கருதி சிவாஜி அதை வெளியில் சொல்லவேண்டாம் என்று நினைத்திருப்பதில் ஒரு நியாயம் இருக்கிறது!
ஆனால் ஜானகி அணியுடன் அந்த காரணத்துக்காகதான் கூட்டணி அமைத்தார் என்றால், அப்போதே அது சொந்த விசயத்தில் இருந்து மக்களிடம் நியாயத்தை எடுத்து சொல்ல வேண்டிய மிக முக்கியமான பொது விசயமாகி விடுகிறது! அந்த விசயத்தை மக்களிடம் எடுத்து சொல்லி பிரச்சாரம் செய்து இருந்தால், சிவாஜி கட்சி தொண்டர்களிடமும், ஜா அணி mgr தொண்டர்களிடமும் ஒரு மனமொத்த இணக்கம் ஏற்பட்டு கூட்டணி வெற்றிக்காக உணர்வு பூர்வமாக, உண்மையாக இரண்டு தரப்பினரும் வேலை செய்திருப்பார்கள்! கௌரவமான சில வெற்றிகளாவது கிடைத்து இருக்கும்! ஒரு வேளை சிவாஜி mgr அவர்களுக்கு கொடுத்த வாக்கு powerful ஆக இருந்து மக்கள் குறிப்பாக admk ஆதரவு வாக்காளர்கள் ஏற்றுகொண்டிருன்டால், ஜெ அணி பெற்ற வெற்றியை விட
ஜா அணி அதிகம் வெற்றியும் பெற்றிருக்கலாம்!
சிவாஜியும் ஜானகியும் செய்த இன்னொரு மிக பெரிய தவறு என்ன தெரியுமா? இந்த இரண்டு பேரும் தேர்தல் களத்தில் பலமான எதிரியான தி மு க பற்றி கொஞ்சம் கூட அலட்டிக்கொள்ளவில்லை! சிவாஜியும் ஜானகியும் dmk பற்றி எந்த விமர்சனமும் செய்யவில்லை! தமிழகத்தில் கருணாநிதி அவர்கள் வரகூடாது என்று dmk வுக்கு எதிரான மன நிலை உடைய லட்சகணக்கான வாக்காளர்கள் இன்றைக்கும் உண்டு ! அதை மிக சரியாக புரிந்து கொண்டும், mgr ரசிகர்களுக்கு கருணாநிதியை கண்டாலே வெறுப்பு என்ற உண்மையை தெரிந்து கொண்டும் ஜெயலலிதா அவர்கள் 1989 சட்ட மன்ற தேர்தலில் கருணாநிதியை மிக மிக கடுமையாக விமர்சித்தார்! எனவே anti dmk votes ஜெ வுக்கு சென்றது. ஜெ எதிர்கட்சி தலைவி ஆனார்! 1989 சட்டமன்ற தோல்விக்கு பின்பு admk ஒன்றாக இணைந்த பின்பு 1991 தேர்தலில் ஜெ முதல்வரானார்!
சிவாஜி ரசிகர்கள் ஒரு உண்மையை புரிந்து கொள்ள வேண்டும்! சிவாஜி எந்த ஒரு தலைவருக்கும் சற்றும் குறையாத மக்கள் செல்வாக்கையும், மக்களின் அன்பையும் பெற்றவர் தான்! ஆனால் தொடர்ந்து செய்த அரசியல் தவறுகளும், உரிய நேரத்தில் செய்யாத சில செயல்களாலும் தான் அரசியலில் அவரால் வெற்றி பெற முடியவில்லை! மக்கள் செல்வாக்கும் அவர் பெற்றிருந்தார் என்பதுக்கு உரிய ஆதாரம் அவர் மறைவுக்கு அரசியலில் வெற்றிகண்ட தலைவர்களுக்கு இணையாக கூடிய இலட்சகணக்கான மக்களே சாட்சி!
ராகவேந்திரா சார், அரசியல் வெற்றியும் சினிமா வெற்றியும் ஒன்றல்ல! சிவாஜியின் நடிப்புத்திறன் எப்பேற்பட்ட மனிதனையும் கவரும் சக்திபடைத்தது! அதனால்தான் சிவாஜி தி மு க, பழைய காங்கிரஸ், இந்திரா காங்கிரஸ், த மு மு, ஜனதாதளம் என்று பல கட்சிகளில் இருந்தபோதும் அவரின் சினிமா வெற்றி தொடர்ந்தது! சிவாஜி சினிமாவில் வேறு எந்த கொம்பனும் செய்யாத முடியாத பல சாதனைகளை படைத்து அழியா புகழுடன் இருக்கிறார்!
நன்றிகள்!