-
http://i68.tinypic.com/2elegqu.jpg
என்றென்றும் புரட்சித் தலைவரின் புகழ்க்கொடி பறக்கும் கோட்டையாம் மண் மணக்கும் எங்கள் மதுரையில் சென்ட்ரல் தியேட்டரில் இன்று முதல் தர்மம் காத்த தலைவரின் தர்மம் தலை காக்கும்.
எங்கள் மதுரையில் மாதத்திற்கு இரண்டு தலைவர் படங்கள் நிச்சியம்.( போன வாரம் மீனாட்சியில் நம்நாடு) 4 லட்சியம்.
-
http://i67.tinypic.com/bea6bc.jpg
நேற்று நான் போட்ட பதிவுக்குப் பிறகு இப்போது வந்து பார்த்தால் நேற்று நான் போட்ட பதிவுதான் கடைசி. எல்லாருக்கும் நிறைய வேலைகள் போலிருக்கு. எல்லாருக்கும் ஆசிகள் வழங்கி உற்சாகப்படுத்தி திரியை வளர்க்கும் சுகாராம் அய்யாவையும் காணும்.
-
http://i63.tinypic.com/2j10dgz.jpg
புரட்சித் தலைவர் புகழ் பாடும் எம்.ஜி.ஆர். 100 புத்தகத்தை எங்கள் மதுரை தந்த மாணிக்கம் புரட்சிக் கலைஞர் விஜயகாந்த் பெற்றுக் கொள்கிறார். நன்றி - இந்து நாளிதழ்.
விஜயகாந்த் அவர்கள் மக்கள் திலகத்தின் ரசிகர்தான். உலகம் சுற்றும் வாலிபன் படம் வந்தபோது தங்களது ரைஸ் மில்லில் இருந்து அரிசி மூட்டைகளை தந்தைக்குத் தெரியாமல் விற்று நண்பர்களோடு பலமுறை படம் பார்த்ததாக சொல்லியிருக்கிறார். வேறு படங்கள் ஓடும் தியேட்டருக்கு போய் கலாட்டா செய்ததாகவும் போஸ்டர்களை அசிங்கப்படுத்தியதாகவும் இப்போது வருந்துவதாகவும் வெள்ளந்தியாய் ஒப்புக் கொண்டவர். மக்கள் திலகத்தின் தீவிர ரசிகர்.
நம்ப ஆள்தான். ஆனால் கறுப்பு எம்.ஜி.ஆர். என்று அவரை கூப்பிடுவதை ஜீரணிக்க முடியவில்லை.
ஒரே ஒரு சிகப்பு எம்.ஜி.ஆர்.தான்.
கறுப்பு எம்.ஜி.ஆர்., பச்சை எம்.ஜி.ஆர்., நீல எம்.ஜி.ஆர். என்று யாரும் இருக்கவே முடியாது.
-
-
1957ல் வெளிவந்த மக்கள் திலகத்தின் ''புதுமைப்பித்தன் '' காவியம் 60 நிறைவு ஆண்டில் கோவை நகரில் திரைக்கு வந்துள்ளது அறிந்து மிக்க மகிழ்ச்சி
1963 பிப்ரவரியில் வெளிவந்த மக்கள் திலகத்தின் '' தர்மம் தலைகாக்கும் '' திரைப்படம் 55 வது ஆண்டில் மதுரை நகரில் மக்கள் திலகத்தின் ரசிகர்களுக்கு விருந்தாக வந்துள்ளது . பெருமையான விஷயம் .
-
4.2.1966 நான் ஆணையிட்டால்
4.2.1972 சங்கே முழங்கு
இந்த நாளில் வெளிவந்த மக்கள் திலகத்தின் இரண்டு படங்களும் மனதை விட்டு நீங்காத காவிய படைப்புகள் .
நான் ஆணையிட்டால் ....4.2.1966
மக்கள் திலகம்
மக்கள் திலகம்
மக்கள் திலகம்
நடிகப்பேரசர் எம்ஜிஆர் என்பதை நிரூபித்த படம் . என்ன ஒரு யதார்த்தமான நடிப்பு .இந்த படத்திற்கு விருது கிடைத்திருக்க வேண்டும் .
சிறந்த நடிப்பு
சிறந்த கதை அமைப்பு
சிறந்த பாடல்கள்
சிறந்த இயக்கம்
சிறந்த தயாரிப்பு
அனைத்து சிறப்பம்சங்கள் நிறைந்த படம் . மக்கள் திலகத்தின் அருமையான உடற்கட்டு படத்திற்கு பிளஸ் பாய்ண்ட் . இன்று படம் பார்த்தாலும் புத்தம் புது படம் போல் உள்ளது . மறக்க முடியாத காவியம் .
சங்கே முழங்கு .. 4,2. 1972
எவர் கிரீன் ஹீரோ எம்ஜிஆர் நமக்கு தந்த அருமையான பொக்கிஷம் சங்கே முழங்கு . எல்லா பாடல்களும் சூப்பர் ஹிட் . குறிப்பாக சிலர் குடிப்பது போலே நடிப்பார் பாடலில் அசல் குடிகாரனை போலவே முக பாவத்துடன் பின்னி எடுத்திருந்தார் .நடனம் கேட்கவே வேண்டாம் .
கோர்ட் காட்சிகளில் எம்ஜிஆரின் பக்குவமான நடிப்பு ஏ -ஒன் . இனிமையான காவியம் .
ஆண்டுகள் உருண்டோடினாலும் நம் மனதில் மக்கள் திலகத்தின் படங்கள் என்றென்றும் பசுமையாக நிலைத்து இருப்பது நாம் செய்த பாக்கியம் .
-
1980- வருசம் நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுக 2 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற்று பாக்கி தொகுதிகளில் தோல்வி அடைந்தது உண்மைதான்.
அதிமுகவை எதிர்த்து கூட்டணி சேர்ந்து திமுக - காங்கிரஸ் வெற்றி பெற்றது. அதற்கான காரணங்கள் ஒருபக்கம் இருந்தாலும் அது தோல்விதான்.
அதிமுகவின் அந்த தோல்விக்கு நாங்கள்தான் காரணம் என்று இந்திரா காந்தி, கருணாநிதி போன்ற தலைவர்கள் சொன்னால் கொஞ்சமாவது நியாயம் இருக்கும்.
புரட்சித் தலைவரை எதிர்த்து ஒரு நடிகர் தமிழகம் முழுவதும் சூறாவளியாய் சுழன்று பிரசாரம் செஞ்சதால்தான் அதிமுக தோல்வி அடைந்ததாம். திமுக கூட்டணி வெற்றி பெற்றதாம்.
கூரை ஏறி கோழி பிடிக்க முடியாதவன் வானத்தை கீறி வைகுண்டம் காட்டினானாம்.
அட.. உண்மையே. திருவையாறு தொகுதியே நீ செத்துப் போய் விட்டாயா?
எப்படித்தான் சிரிக்காமல் பதிவு போடுகிறார்களோ?
http://i68.tinypic.com/34y60br.jpg
-
http://i63.tinypic.com/14uf446.jpg
எனது பணி ஒய்வு /நிறைவு ஆனதை பாராட்டி வாழ்த்துக்கள் தெரிவித்த
நண்பர்கள் திரு. வினோத், திரு. சுந்தர பாண்டியன், திரு. ரவிச்சந்திரன் ,
மற்றும், தொலைபேசி, அலைபேசிகள் மூலம் வாழ்த்துக்கள் தெரிவித்த
அனைத்து நண்பர்களுக்கும் நன்றி.
ஆர். லோகநாதன்.
இறைவன் எம்.ஜி.ஆர். பக்தர்கள் குழு ,
-
கர்நாடக மாநில தலைநகர் பெங்களூரில் மக்கள் தலைவர் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு பிறந்த நாள் திருவிழா கொண்டாட்டம் .
------------------------------------------------------------------------------------------------------------------------------------------
பெங்களூரில் நேற்று (05/02/2017) நடைபெற்ற புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு பிறந்த நாள் திருவிழா கொண்டாட்டங்கள் பற்றிய செய்திகள் /புகைப்படங்கள் பதிவு செய்வதில் மகிழ்ச்சியும், உவகையும், பெருமையும்
கொள்கிறேன் .
காலை 9 மணியளவில் , அல்சூர் பகுதியில் உள்ள , பெங்களூர் தமிழ் சங்கத்தில் இருந்து ஏழு குதிரைகள் பூட்டிய தேரில் , மக்கள் தலைவர் எம்.ஜி.ஆர். படம்
மலர்களால் அலங்கரிக்கப்பட்டு , அல்சூர் லேக் ஏரியா பகுதியில் உள்ள முக்கிய சாலைகள் , அலசுரு பகுதி , காமராஜர் சாலை, லாவண்யா அரங்கு வழியாக
மீண்டும் பெங்களூர் தமிழ் சங்கம் வந்தடைந்தது . பாரத ரத்னா உரிமைக்குரல் எம்.ஜி.ஆர். அற கட்டளை நிர்வாகிகள் திரு. எம்.ஜி.ஆர். ரவி , திரு. ஸ்ரீதரன் , திரு. கோபிநாத் , திரு.கா. நா. பழனி மற்றும் சென்னையில் இருந்து இறைவன் எம்.ஜி.ஆர். பக்தர்கள் குழு சார்பாக திரு. ஆர். லோகநாதன், திரு.கவிகுமரன் ,(மனைவியுடன் ) திரு.ரகுநாத், திருமதி மேரி செல்வமணி ,, திருவண்ணாமலை திரு. கலீல் பாட்சா , மதுரை பக்தர்கள் திருவாளர்கள் தமிழ் நேசன், எஸ். குமார் ,பாலு, சரவணன், மர்மயோகி மனோகர் ,உள்பட 15 நபர்கள் , கோவை பொறியாளர் திரு. துரைசாமி, திரு. கணபதி தாஸ் , திருமதி பெரிய நாயகி மற்றும் பெங்களூரு நகர எம்.ஜி.ஆர். பக்தர்கள் திரு. சச்சிதானந்தம், பிரகாஷ் மூர்த்தி , ராமச்சந்திரன் மற்றும் பலர் உள்பட அனைவரும் திரளாக வந்திருந்து
ஊர்வலத்தில் கலந்து கொண்டு புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். அவர்களுக்கு பெருமை சேர்த்தனர் . வழியில் திருவள்ளுவர் சிலைக்கு சங்க தலைவர்கள்
மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர் .ஊர்வலம் ஆரம்பித்த இடம் வந்து சேர ஏறத்தாழ 2 மணி நேரம் பிடித்தது .ஊர்வலத்தில் ,பாண்டு வாத்திய குழுவினர் மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். அவர்களின் கொள்கை பாடல்கள் , சமூக சீர்திருத்த பாடல்கள் ஆகியவற்றை வாசித்து பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் செவிகளுக்கு இன்பவிருந்து அளித்தனர் . ஊர்வலம் முடியும் தருவாயில்
மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். படத்திற்கு ஆரத்தி மற்றும் ஆராதனைகள் செய்யப்பட்டன ஊர்வலத்திற்கு பெங்களூரு நகர காவல்துறையின் பாதுகாப்பு
அளிக்கப்பட்டு இருந்தது .
காலை 11 மணியளவில் பெங்களூர் தமிழ் சங்கத்தில் மருத்துவ முகாம் ஏற்பாடு
செய்யப்பட்டிருந்தது . பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் ஏறத்தாழ 500நபர்களுக்கு
ரத்த அழுத்தம் , நீரிழுவு , மற்றும் பொது மருத்துவம் இலவசமாக , சிறந்த மருத்துவர்களைக் கொண்டு அளிக்கப்பட்டது .
பிற்பகல் 2 மணிக்கு வந்திருந்த பக்தர்கள் சுமார் 500 பேருக்கு இலவச மதிய உணவு வழங்கப்பட்டது
சிறிது இடைவேளைக்கு பின்னர் சுமார் 4.30 மணியளவில் பரத நாட்டிய நிகழ்ச்சி
நடைபெற்றது .
மாலை 5 மணியளவில் ,சென்னை மற்றும் பெங்களூர் நகர கவிஞர்களைக்
கொண்டு புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். அவர்களுக்கு புகழ் பாடும் வகையில்
சுமார் ஒரு மணி நேரத்திற்கு கவியரங்கம் நடைபெற்றது . அதில் 10 கவிஞர்களுக்கு கவிபாட வாய்ப்பு தரப்பட்டது .
மாலை 6 மணியளவில் பழம்பெரும் நடிகை வெண்ணிற ஆடை நிர்மலா அவர்கள் மேடைக்கு வந்தார். அ .தி.மு.க . பா.ஜ க. மற்றும் காங்கிரஸ் கட்சிகளின் முக்கிய பிரமுகர்கள் வந்திருந்தனர் முக்கிய பிரமுகர்களின் கரங்களால் குத்துவிளக்கு ஏற்றப்பட்டு நிகழ்ச்சி துவங்கியது . பின்னர் மக்கள் தலைவர் எம்.ஜி.ஆர். அவர்களின் நூற்றாண்டு பிறந்த நாள் குறிப்பிடும் வகையில் பாரத ரத்னா உரிமைக்குரல் எம்.ஜி.ஆர். அறக் கட்டளையின் சார்பாக தயார் செய்யப்பட்ட பிரம்மாண்ட கேக் வெட்டப்பட்டு , அரங்கத்தில் வந்திருந்த பக்தர்கள் அனைவருக்கும் பகிர்ந்தளிக்கப்பட்டது .
நிகழ்ச்சியில் , திரு. எம்.ஜி.ஆர். ரவி அவர்கள் அனைவரையும் வரவேற்று ,புரட்சி தலைவர் எம்.ஜி.ஆருக்கு பெருமை சேர்ந்திடும் வகையில் உரையாற்றினார் .
பின்னர் அறக் கட்டளை நிர்வாகிகள் பேசினர் .
மாலை 7 மணியளவில் பழம்பெரும் நடிகை , அபிநய சரஸ்வதி பி.சரோஜாதேவி மற்றும் சென்னை ராமாவரம் எம்.ஜி.ஆர். தோட்டத்தில் இருந்து வந்திருந்த திருமதி சுதா விஜயன் ஆகியோர் இணைந்து வந்து
விழாவிற்கு பெருமை சேர்த்தனர் .
நிகழ்ச்சியில் திருமதி பி. சரோஜாதேவி , பேசும்போது எம்.ஜி.ஆர். அவர்கள் என்னுடன் நடிக்கும்போது மக்கள் திலகமாக இருந்தவர் . பின்னர் அரசியலில் தீவிரமாக ஈடுபட்டு , மக்கள் தலைவரானார் .இப்போது நம் அனைவருக்கும் மக்களுக்கும் தெய்வம் ஆகிவிட்டார். என்னை பொருத்த வரையில் அவர்
மறையவில்லை .அரங்கத்தில் நம்மிடையே உள்ளார். மேடையில் உள்ள
எம்.ஜி.ஆர். பேனர்கள், பதாகைகளை காண்பித்து எங்களுடனும் உள்ளார்.
என்று பேசினார் நாடோடி மன்னன் படத்தில் அவருடன் நடித்து புகழ் பெற்றபோது 30 திரைப்படங்கள் எனக்கு நடிக்க வாய்ப்பு கிடைத்தன . எனக்கு
பெயர், புகழ், சொத்து , வசதி , வாய்ப்பு , சாப்பாடு அனைத்தும் அவரால்தான்
கிடைத்தன .அப்படிப்பட்ட அன்பு தெய்வத்தை உயிருடன் உள்ளவரை ஒருநாளும் மறக்க மாட்டேன். உள்ளூரில் பொதுவாக நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதில்லை என்கிற குற்றச்சாட்டு என்மீது உள்ளது. ஆனால் மக்கள் தெய்வம் எம்.ஜி.ஆர். அவர்கள் குறித்த நிகழ்ச்சிகள் எங்கு நடந்தாலும் , எப்போது நடந்தாலும் , நிச்சயமாக நான் அங்கு இருப்பேன். நீங்கள் அழைக்காவிட்டாலும்
நான் கலந்து கொள்வேன். காரணம் அந்த அளவு எனக்கு பல உதவிகளையும்
பாதுகாப்பையும் அளித்து , ஆலோசனைகளை வழங்கிய அவரை எனது அன்பு தெய்வமாக கருதுகிறேன் என்றும் , அவரின் அருமைகளை, பெருமைகளை
பேசிக் கொண்டே போகலாம் , மணி, நேரம், காலம், ஆண்டுகள் போதாது
அந்த அளவு தமிழ் நாட்டு மக்களின் உள்ளங்களில் குடி கொண்டு இருக்கும் எனது அன்பு தெய்வம் .என்று பேசினார் .
பின்பு , திருமதி சுதா விஜயன் அவர்கள் பேசும்போது மக்கள் தலைவர் எம்.ஜி.ஆர். வாழ்ந்த வீட்டில் நாங்களும் வாழ்கிறோம் என்பதில் எங்களுக்கு
பெருமை. எங்களுக்கு திருமணம் செய்து வைத்தவர் . அருகில் இருந்து பார்த்து
வாழ்ந்த எங்களுக்கு உண்மையில் அவருடைய புகழ், சாதனைகள், பெருமைகள்
ஆகியன பெரியதாக எங்களுக்கு அப்போது தெரியவில்லை .காரணம் நாங்கள்
அப்போது சிறியவர்கள் ..அவர் இல்லாத நேரத்தில் பக்தர்கள் , பொதுமக்கள்
அளிக்கும் மரியாதை, பூஜைகள், ஆராதனைகள், வழிபாடுகள், புகழ் பாடும்
நிகழ்ச்சிகள் கண்டு உண்மையில் பூரிப்பு அடைகிறோம் . என்று பேசினார்.
நடிகை வெண்ணிற ஆடை நிர்மலா பேசும்போது, மக்கள் திலகம் எம்.ஜி.ஆர்.
அவர்களுடன் ரகசிய போலீஸ் 115, ஊருக்கு உழைப்பவன், இதயக்கனி திரைப்படங்களில் பெங்களூர் மற்றும் கர்நாடக மாநிலத்தில் இதர இடங்களில்
நடித்ததை நினைவு கூர்ந்தார் . அவர் மறைந்து 30 ஆண்டுகள் ஆகும் நிலையில்
அவர் சம்பந்தப்பட்ட எந்த நிகழ்ச்சிக்கு சென்றாலும், தென்னிந்தியாவிலும் சரி ,
மலேசியா, சிங்கப்பூர் , டுபாய், பிரான்ஸ் நகரங்களாய் இருந்தாலும் சரி
மக்கள், பக்தர்கள் எழுச்சியுடன் கலந்து கொள்வதோடு, உற்சாகமாக பங்கேற்று ,
எங்களையும் ஊக்குவிக்கின்றனர் நானும் உள்ளூர பெருமகிழ்ச்சி அடைகிறேன் .
ஒருமுறை சொந்த படம் எடுத்து நஷ்டம் அடையும் நிலையில் , அதை கேள்விப்பட்டு அவராகவே வந்து, உன் நஷ்டம் ஈடுகட்டும் வகையில் நான்
இலவசமாக நடித்து உன் கஷ்டத்தை தீர்க்கிறேன் என்றார் . ஆனால் , பல பேர்
என்னிடம் வந்து நடிகர் சந்திரபாபு தயாரித்து எம்.ஜி.ஆர். நடிப்பதாக இருந்து
கைவிடப்பட்ட " மாடி வீட்டு ஏழை " படத்தை நினைவு கூர்ந்து , சொந்தப்படம்
எம்.ஜி.ஆரை வைத்து எடுக்க வேண்டாம் என்று அறிவுரை கூறினர் .
நான் எம்.ஜி.ஆர். அவர்களிடம் உண்மையை சொன்னேன். உங்களை வைத்து
படம் எடுக்க எனக்கு ஆசைதான் .உங்கள் படம் பெரிய பட்ஜட் கொண்டது .
நட்சத்திர நடிகர் /நடிகைகள் நடிக்கும் படமாக இருக்கும் . என்னுடையது சிறிய
பட்ஜட் . ஆகவே மன்னிக்க வேண்டும் என்று கூறி விலகி கொண்டேன்.
ஆனால் மற்றவர்கள் கூறிய அறிவுரை கேட்டு முடிவு எடுக்கவில்லை .
அந்த காலத்தில் படுக்கை அறை வரை கார் செல்லும் வகையில் பாதை அமைத்து வீடு கட்டிய ஒரே நடிகர் சந்திரபாபுதான் . அவர் மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். அவர்களுடன் நடிக்கும்போது ஒழுக்கமின்மை, சில கெட்ட பழக்கங்கள் கொண்டவ ராக இருந்தார் . மாடி வீட்டு ஏழை படம் கைவிடப்பட்ட விஷயம் அறிந்து எம்.ஜி.ஆர். அவர்களிடம் கேட்ட போது கால்ஷீட் விஷயமாக
தன் அண்ணன் சக்கரபாணி அவர்களிடம் தகாத வகையில் நடந்து கொண்டதாகவும் ,தன்னை பற்றி தவறான வகைகளில் விமர்சனம் செய்து வருவதாகவும் , இந்த சூழ்நிலையில் நடிக்க விரும்பவில்லை என்றும் , ஆயினும் மற்ற திரைப்படங்களில் நடிக்க , வாய்ப்பு அளித்து அந்த நஷ்டத்தை
போக்க விரும்புவதாகவும் தெரிவித்தார் . மாடி வீட்டு ஏழை படத்தில் நடிக்காமல் கைவிட்டதை பகிரங்கமாக ஏன் அறிவிப்பு வெளியிடவில்லை என்று கேட்டதற்கு, என்னால் ஒரு தனிப்பட்ட நடிகருக்கோ, மனிதருக்கோ, அல்லது அவர்கள் சம்பந்தப்பட்ட குடும்பத்திற்கோ எந்தவித பாதிப்பும், நஷ்டமும் ,
என்னுடைய அறிவிப்பால், விமர்சனங்களால் ஏற்படக்கூடாது என்பதில்
நான் உறுதியானவன் என்று தெரிவித்தார். ஆகவே, மறந்தும் கூட , மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். அவர்கள் மற்றவருக்கு தீங்கு இழைக்க நினைக்க மாட்டார்
என்பது தெள்ள தெரிவாகிறது . இருந்தாலும் அந்த காலத்திலும் சரி, இந்த
காலத்திலும் சரி, உண்மை அறியாதவர்கள் இந்த விஷயத்தை கொச்சை படுத்தி
மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். அவர்களின் புகழுக்கு களங்கம் ஏற்படுத்த முயல்கின்றனர் . ஆனால் மக்கள் திலகமோ, அந்த சம்பவங்களுக்கு பின்னர்
பறக்கும் பாவை, கண்ணன் என் காதலன் மற்றும் தன் சொந்தபடமான அடிமைப்பெண் ஆகியவற்றில் வாய்ப்பு அளித்து அவருக்கு வாழ்வு அளித்து
நஷ்டத்தை போக்கும் வகையில் நடந்து கொண்டார் என்பது வரலாறு .
இந்த வகையில் எனக்கு தெரிந்த பல சம்பவங்களில் , ஈடுபட்டு , பெயர், புகழுக்காக இன்றி , பல பேருக்கு உதவிகள் செய்துள்ளார் மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். நடிக /நடிகையர் , தொழில்நுட்ப கலைஞர்கள் , ஸ்டண்ட் நடிகர்கள்
மற்றும் பலருக்கு , படம் முடியும் தருவாயில் தயாரிப்பாளர்கள் மூலம் வருவாய் வராத நிலையில், தலையிட்டு பிரச்னைகளை தீர்த்து வைத்து
பெரும் உதவிகள் செய்துள்ளார். நேரம் போதாதா காரணத்தால் எல்லாவற்றையும் ஒரே நிகழ்ச்சியில் விளக்க முடியாது . விவரம் அறியாமல் ,
கேட்பதற்கு ஆளில்லை என்கிற வகையில் , அவர் மறைந்தும் , இத்தனை ஆண்டுகள் ஆன பின்பும் , இன்னும் அவரை தூற்றி, தங்களை போற்றி கொள்கின்றனர் . தனக்கு எதிராக வைக்கப்படும் குற்றச்சாட்டுக்களுக்கும்
விமர்சனங்களுக்கும் அப்பாற்பட்டவர் , மாசில்லா எங்கள் தங்கமாவார் .
திரைப்படத்துறையிலும் , அரசியில் துறையிலும் , எதிரிகளை வீழ்த்தி,
வெற்றிவாகை சூடுவதே அவருடைய வாடிக்கை, தனி சிறப்பும் கூட.
அப்பேற்பட்டவர் நூற்றாண்டு பிறந்த நாள் விழாவில் கலந்து கொள்வதில் எனக்கு பெருமை, மகிழ்ச்சி. மேலும் பல நகரங்களில் கலந்து கொள்ள வாய்ப்பு வந்துள்ளது . விரைவில் பல வெளி நாடுகளிலும் , அவரது நூற்றாண்டு பிறந்த நாள் விழாவில் கலந்து கொள்ள உள்ளேன் . என்று பேசினார்.
முன்னதாக திரு. முனியப்பா , முன்னாள் பெங்களூர் சட்டமன்ற உறுப்பினர் அவர்கள் தன்னுடைய காலத்தில் , மக்கள் தலைவர் எம்.ஜி.ஆர். அவர்களுடன்
இருந்த உறவு, அவரது ஆட்சி முறை, நட்பு பாராட்டியது, ஆலோசனைகள் பற்றி
சில நிமிடங்கள் பேசி அனைவரின் கைதட்டுகளை பெற்றார் .
காலை 10 மணியளவில், புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். அவர்கள் உருவம் , நூற்றாண்டு பிறந்த நாள் வாழ்த்து ஆகியன அடங்கிய ராட்சத பலூன் வானில்
பறக்க விடப்பட்டது .
பெங்களூர் தமிழ் சங்கத்திற்கு வெளியே ஏராளமான பேனர்கள் , பதாகைகள் ,
சுவரொட்டிகள் பக்தர்களை வரவேற்கும் வகையில் அமைக்கப்பட்டு இருந்தது .
நிகழ்ச்சிக்கு இடையே , ஸ்னாக்ஸ் மற்றும் தேனீர் பக்தர்களுக்கு வழங்கப்பட்டது . நிகழ்ச்சியின் இடையில் அவ்வப்போது மக்கள் திலகம் எம்.ஜி.ஆரின் கொள்கை பாடல்கள், காதல் பாடல்கள் இசைக்கப்பட்டன .
அ தி.மு.க. /பா.ஜ .க /, காங்கிரஸ், கட்சி பிரமுகர்கள், சிறப்பு விருந்தினர்களுக்கு
பொன்னாடை, சந்தன மாலைகள், நினைவு பரிசு வழஙகி கௌரவிக்கப்பட்டனர் .
முடிவில் , திரு. எம்.ஜி.ஆர். ரவி அவர்கள் நன்றியுரை கூற நிகழ்ச்சி நிறைவு பெற்றது .
நிகழ்ச்சி பற்றிய புகைப்படங்கள் விரைவில் பதிவாகும் .
-
இனிய நண்பர் திரு லோகநாதன் சார்
பெங்களுர் தமிழ் சங்கத்தில் நடைபெற்ற மக்கள் திலகத்தின் நூற்றாண்டு விழா பற்றிய செய்தி தொகுப்பு மிகவும் அருமை . நன்றி