-
அன்பு பம்மலார் சார்,
தங்கள் உயர்வான பாராட்டுதல்களுக்கு என் உளமார்ந்த நன்றிகள்.
'கௌரவம்' முரசொலி இதழின் முதல் நாள் வெளியீடு விளம்பரம் ,100வது நாள் அலை ஓசை விளம்பரம் இரண்டும் அபூர்வமானவை.
திரைவானம் "கௌரவம்" சிறப்பு மலரின் முகப்பு நெஞ்சை அள்ளுகிறது.
கௌரவத்தில் தன்னுடைய பாரிஸ்டர் ரஜினிகாந்த் கேரக்டர் பற்றி திரைவானத்தில் அவர் அளித்துள்ள பேட்டி அப்படத்தின் வெற்றியை அவர் முன்னமேயே ஊர்ஜிதம் செய்துவிட்டதை அழகாய் படம்பிடித்துக் காட்டுகிறது. மிக அபூர்வமான தலைவரின் பேட்டியை பதிவிட்டமைக்கு தங்களுக்கு என்றென்றும் கெளரவம் அளிக்க நாங்கள் கடமைப் பட்டுள்ளோம்.
'தீபாவளி நல்வாழ்த்துக்கள்' வழங்கும் இதய தெய்வத்தின் கருப்பு வெள்ளை புகைப்படம் அவர் ஸ்டைல் சக்கரவர்த்தி என்பதை ஆணித்தரமாக நிரூபிக்கிறது.
கௌரவம் 'குவைத்' வெளியீட்டு விளம்பரம் வெளியிட்டு உலகஅரங்கில் நடிகர் திலகத்தின் கௌரவத்தை நிலை நாட்டி விட்டீர்கள். சிறந்த தங்களின் சோர்வடையா சேவை பிரமிக்க வைக்கிறது.
கல்கி இதழின் காவிய விமர்சனம் படித்தவுடன் மனதில் உற்சாகம் கரைபுரண்டு ஓடுகிறது. அருமையான விமர்சனம். உளப்பூர்வமான விமர்சனம். நடுநிலையான விமர்சனம். அனேகமாக ஒரு குறையைக் கூட சுட்டிக் காட்டாமல் வந்த ஒரே ஒரு விமர்சனம் இதுவாகத்தான் இருக்கும் என்று நினைக்கிறேன். அளித்தமைக்கு அன்பு நன்றிகள்.
வாழ்க! வளர்க! தங்கள் சிறந்த தொண்டு.
தேவர்மகனின் தினத்தந்தி மற்றும் தினமணி நாளிதழ் விளம்பரங்கள் வித்தியாசமான லைனிங் ஆர்ட்டில் அசத்துகின்றன.
நடிப்புலக இறைவனார் தங்களுக்கு நல்ல ஆரோக்கியத்தையும். உடல்நலத்தையும் வழங்கி தன்னை எப்போதும் கௌரவப் படுத்திக் கொண்டிருக்கும் பம்மலார் என்ற தன் செல்லக்குழந்தையை அன்பு ஆசிகளோடு அருள்மலர்த் தூவி அகமகிழ்ந்திருப்பார் என்பது திண்ணம்.
தங்களின் ஆவணங்களும்,தங்கள் வள்ளல்தன்மைக்கும் தலையாய என் கௌரவமான நன்றிகள்.
பாசத்துடன்,
வாசுதேவன்.
-
டியர் பம்மலார்,
குவைத்தில் கௌரவம், சூப்பரோ சூப்பர்...
பாராட்டுக்கள்
தெய்வ மகனின் தேவர் மகன் விளம்பரம் அட்டகாசம்...
எத்தனை தலைமுறை விளம்பரமானால் என்ன, என்னிடம் வாருங்கள் என அறைகூவல் விடுக்கும் தங்களின் பதிவுகள் நன்றி, பாராட்டு இதற்கெல்லாம் அப்பாற்பட்டு சென்று விட்டன.
நடிகர் திலகத்தின் உன்னதத் திரைக்காவியங்களில் ஒன்றான பந்த பாசம் 50வது ஆண்டு நுழைவினை ஒட்டி இதோ நம் பார்வைக்கு
விளம்பரம்
http://i872.photobucket.com/albums/a...apasamAdfw.jpg
நிழற்படம்
http://www.inbaminge.com/t/b/Bandha%20Pasam/folder.jpg
பந்தல் இருந்தால் கொடி படரும்...இனிமையான பாடல் காட்சி - மெல்லிசை மன்னர்களின் கைவண்ணத்தில், டி.எம்.சௌந்தர்ராஜன், எஸ்.ஜானகி குரலில்..மாயவநாதனின் பொருள் செறிந்த வரிகளில்... நடிகர் திலகம் தேவிகா (பல ரசிகர்களின் அபிமான ஜோடி)
http://www.youtube.com/watch?v=kRiYGykoaJw
-
'தச்சோளி அம்பு' மிக அரிய சிறப்பு நிழற்படம்.
நவோதயாவின் மலையாளத்தின் முதல் சினிமாஸ்கோப் வண்ணக் காவியமான 'தச்சோளி அம்பு' திரைப்படத்தின் மிக அரிய நிழற்படத்தைதான் இப்போது காணுகிறீர்கள்.
http://i1087.photobucket.com/albums/...355/Page08.jpg
அன்புடன்,
வாசுதேவன்.
-
'தச்சோளி அம்பு' திருவிழா கோலாகல ஆரம்பம்.
நவோதயாவின் மலையாளத்தின் முதல் சினிமாஸ்கோப் வண்ணக் காவியமான 'தச்சோளி அம்பு' திரைப்படம் மலையாளப் பட உலகின் மைல்கல் ஆகும். பல சிறப்புகளையும் ,வெற்றிகளையும் தக்க வைத்துக் கொண்ட இப்படம் நம் நடிகர்திலகத்தின் கம்பீர நடிப்பால் புகழ் எவரெஸ்டில் ஏறி நின்றது. மலையாளத் திரையுலகின் முந்தைய வசூல் ரெகார்டுகளை எல்லாம் முறியடித்து சாதனை படைத்ததொரு சரித்திரக் காவியம்.
பிரேம் நசீர், உம்மர், ஜெயன், நம்பியார், பாலன் கே.நாயர், திக்குரிசி சுகுமாரன் நாயர், பாவூர் பரதன், ஜி.கே.பிள்ளை, கொச்சின் ஹனிபா, கே.ஆர்.விஜயா, உஷாகுமாரி(வேறு யாரும் இல்லை... நம் வெண்ணிற ஆடை நிர்மலா தான்), உன்னி மேரி (தீபா), அலம், ரவிக்குமார்,மற்றும் எண்ணற்ற மலையாளத் திரையுலகின் நட்சத்திரப் பட்டாளமே இப்படத்தில் நடித்து பெருமைகளைத் தக்க வைத்துக் கொண்டது.
எல்லாவற்றுக்கும் சிகரம் வைத்தாற்போல நடிப்புலக நாயகர் நம் நடிகர் திலகம் முக்கிய வேடமொன்றை ஏற்று வழக்கம் போல இமாலய சாதனை படைத்து படத்தின் மாபெரும் வெற்றிக்கு முதுகெலும்பாய் நின்றார் என்றால் அது மிகையாகாது.
யூசுப்அலி கெச்சேரி அவர்களின் பாடல்களுக்கு அற்புதமான இசையை வழங்கியிருந்தார் கே.ராகவன் அவர்கள்.
ஜேசுதாஸ்,பி,சுசீலா, வாணிஜெயராம், எஸ்.ஜானகி ஆகியோரின் குரல்களில் மதுர கானமாய் கானங்கள் ஒலித்தன. அத்தனையும் சூப்பர்ஹிட் பாடல்கள்.
கதை,திரைக்கதை,வசனங்களை என்.கோவிந்தன்குட்டி எழுத, அப்பச்சன் மிகத் திறமையாக இப்படத்தை இயக்கியிருந்தார்.
'தச்சோளி அம்பு' (27-10-1978)சிங்கத்தமிழரின் சீர்மிகு அபூர்வ நிழற் படங்கள்.
http://i1087.photobucket.com/albums/..._001485560.jpg
http://i1087.photobucket.com/albums/..._001518800.jpg
http://i1087.photobucket.com/albums/..._001903880.jpg
http://i1087.photobucket.com/albums/..._001735880.jpg
http://i1087.photobucket.com/albums/..._001940880.jpg
http://i1087.photobucket.com/albums/..._004354800.jpg
http://i1087.photobucket.com/albums/..._004417920.jpg
http://i1087.photobucket.com/albums/..._004389120.jpg
http://i1087.photobucket.com/albums/..._004520520.jpg
http://i1087.photobucket.com/albums/..._004432240.jpg
அன்புடன்,
வாசுதேவன்.
-
'தச்சோளி அம்பு' திரைக்காவியத்தில் இருந்து நடிகர் திலகம் அவர்கள் வாழ்ந்து காட்டும் சில அற்புத காட்சிகள் வீடியோவாக இதோ உங்கள் பார்வைக்கு.
http://www.youtube.com/watch?feature=player_detailpage&v=Pru-L4q3Qjk
அன்புடன்,
வாசுதேவன்.
-
'தச்சோளி அம்பு' (மலையாள முதல் சினிமாஸ்கோப் படம்) சென்னையில் சாந்தி திரையரங்கில், தீபாவளிக்கு முந்தைய தினம் (27.10.1978) வெளியானது. சென்னையில் வெளியிட்டது கே.ஆர்.விஜயாவின் நிறுவனம் என்பதால், சாந்தியில் நடிகர்திலகத்தோடு தனக்கும் ஒரு கட்-அவுட் வைத்துக்கொண்டார் விஜயா. அந்தக்காலங்களில் எல்லாம் கட்-அவுட் என்றால் இப்போது போல பேனர்களில் அச்சிடப்பட்டு நிறுத்தப்படுபவை அல்ல, பிளைவுட்களில் வண்ணங்களால் வரையப்பட்டு அந்த உருவத்துக்கேற்றவாறு பலகை வெட்டப்பட்டு, பின்புறம் சட்டங்களால் இணைக்கப்பட்டு, பெரிய பெரிய சவுக்கு மரங்களால் சாரங்கள் கட்டப்பட்டு அதன்மீது நிறுத்தப்படுபவை. எல்லா பெரிய நடிகர்களுக்கும் இப்படித்தான். ('ப்ரியா' படத்துக்காக ஸ்ரீதேவிக்குக்க்கூட இப்படிப்பட்ட கட்-அவுட்கள் வைக்கப்பட்டன).
அந்தத்தீபாவளியன்று சென்னை அலங்கார், மகாராணி, ஈகா ஆகிய திரையரங்குகளில் 'பைலட் பிரேம்நாத்' வெளியாகி பெரு வெற்றியடைந்தது.
1978 தீபாவளிக்கு ஒரு பெரிய பட்டாளமாக படங்கள் வெளியாயின.
அலங்காரில் நடிகர்திலகம் அளித்த இந்திய இலங்கை கூட்டுத்தயாரிப்பான 'பைலட் பிரேம்நாத்'
தேவி பாரடைஸில் கமல்-பாரதிராஜா அணியின் 'சிகப்பு ரோஜாக்கள்'
வெலிங்டனில் ரஜினி நடித்த தேவரின் 'தாய்மீது சத்தியம்'
சித்ராவில் 'மனிதரில் இத்தனை நிறங்களா'
கெயிட்டி & சத்யம் அரங்குகளில் மக்கள் கலைஞர் ஜெய் நடிப்பில் கலைஞரின் 'வண்டிக்காரன் மகன்'
பிளாசாவில் தேங்காய் கதாநாயகனாக நடித்த ஜேப்பியாரின் 'தங்க ரங்கன்'
பாரகனில் பக்திப்படமான 'காஞ்சி காமாட்சி'
மிட்லண்டில் நாகேஷ் நடிப்பில் 'அதிர்ஷடக்காரன்'
ஓடியனில் (மெலோடி) சிவகுமார் நடித்த 'கண்ணாமூச்சி'
பைலட்டில் ரஜினி & பாலச்சந்தர் அணியின் 'தப்புத்தாளங்கள்'
அந்த தீபாவளி எவ்வளவு ஜெகஜோதியாக இருந்திருக்கும் என்று எண்ணிப்பாருங்கள். அலங்காரில் 'பைலட் பிரேம்நாத்' ஃபுல்லாகும் வரை அங்கே நின்று பேசிக்கொண்டிருந்து விட்டு, அங்கிருந்து சாந்திக்கு நடந்து வருவோம். நண்பர்கள் வெளியூர் ரிப்போர்ட்டுகளுடன் (அந்தப்பகுதி செய்தித்தாள்கள் மற்றும் வெளியூர் நண்பர்களின் கடிதங்கள்) அங்கங்கே சிறு சிறு குழுக்களாக நின்று பேசிக்கொண்டிருப்போம். செய்தித்தாள்கள் ஒவ்வொரு குழுவிடமிருந்தும் அடுத்த குழுவிற்கு பரிமாறிக்கொள்ளப்படும். இரவு ஒன்பது மணி வரை பேசிக்கொண்டிருந்து விட்டு வீடு நோக்கி நகர்வோம். எல்லோரும் பல இடங்களில் இருந்து வருபவர்கள். மறுநாள் மாலையும் இப்படியே. ராகவேந்தர் சார் அடிக்கடி சொல்வது போல, அதெல்லாம் பொன்னான நாட்கள்.
'தச்சோளி அம்பு' படப்பிடிப்பின்போது நடிகர்திலகத்துக்கு ஏற்பட்ட விபத்தால் அவர் பல மாதங்கள் ஓய்வெடுக்க நேர்ந்து, அதனால் அவரது சில படங்கள் வெளியீட்டில் தள்ளிப்போன விவரங்களை. ஏற்கெனவே சகோதரர் முரளி சீனிவாஸ் சார், 'பாடல்கள் பலவிதம்' பகுதியில் (எந்தன் பொன்வண்ணமே பாடல் விளக்கத்தின் போது) விவரமாகக் குறிப்பிட்டிருந்தது நினைவிருக்கலாம்.
வாசுதேவன் அளித்திருக்குக் ஸ்டில்களைப் பார்த்ததும், அன்றைய நினைவுகள் உள்ளத்தில் வட்டமிடுகின்றன.
-
டியர் வாசுதேவன் சார்,
மன்மதன் அம்புவையே மறந்து விடக் கூடிய கால கட்டத்தில், தச்சோளி அம்புவை நினைவுறுத்தி, காட்சிகளோடும் நிழற்படங்களோடும் மீண்டும் 1978க்கே அழைத்துச் சென்று விட்டீர்கள் என்றால், கார்த்திக் சார் அன்று நடந்ததை நேற்று நடந்ததைப் போல் பசுமையாக நினைவூட்டி உள்ளத்தை உணர்வெனும் ஆற்றில் நீந்தச் செய்து விட்டார். தங்கள் இருவருக்கும் நன்றிகளும் பாராட்டுக்களும்.
நீண்ட நாள் காத்திருப்பு வீண் போகாத வண்ணம், அபூர்வமான படமான உலகம் பல விதம் தற்போது நெடுந்தகடு வடிவில் வெளியிடப் பட்டுள்ளது. கூடவே தாயே உனக்காக திரைக் காவியமும். பல ரசிகர்கள் இவ்விரு படங்களைப் பற்றி கேள்விப் பட்டிருக்க மாட்டார்கள் அல்லது பார்த்திருக்க மாட்டார்கள். அவர்களுக்கு இது ஒரு பொக்கிஷமாகும்.
இருந்தாலும் குறிப்பிட வேண்டிய ஒன்று.. உலகம் பல விதம் திரைக்காவியம் கிட்டத் தட்ட 90 நிமிடங்கள் அளவே உள்ளது. கிடைத்த வரை லாபம் என்கின்ற அளவில் நாம் எடுத்துக் கொள்ள வேண்டியது. மிகவும் கஷ்டப்பட்டு தேடிக் கண்டுபிடித்து அளித்திருக்கிறார்கள். அதற்காக நம்முடைய உளமார்ந்த பாராட்டுக்கள்.
http://i872.photobucket.com/albums/a...TUPVCovefw.jpg
-
'பந்தபாசம்' (27.10.1962) 50- ஆவது ஆண்டு தொடக்கத் திருநாள்.
ராசியான ஜோடி
http://isaitoday.com/Photo/Sivajhi/P...a%20Paasam.jpg http://www.moserbaerhomevideo.com/im...e/VTAF0210.jpg
பாசமுரைத்த பாசமலர்கள்
http://www.mahanatisavitri.com/wp-co...vies/28big.jpg
'பந்தபாசம்' திரைப்படத்தில் வரும் நடிப்புப் பெட்டகத்தின் நடிப்பில் மிளிரும் "கவலைகள் கிடக்கட்டும் மறந்து விடு"என்ற அருமையான பாடல்.
http://www.youtube.com/watch?feature=player_detailpage&v=hQjCTpgfaqw
இதழ் மொட்டு விரிந்திட.... மெல்லிய, ரம்மியமான, மனதை வருடும் இசையில் மயக்கும் தேனிசைப் பாடல்.
http://www.youtube.com/watch?feature=player_detailpage&v=J5y24pHyYVw
அன்புடன்,
வாசுதேவன்.
-
டியர் வாசுதேவன் சார்,
தங்களது இதயத்தின் அடித்தளத்திலிருந்து தாங்கள் அளித்திருக்கும் பாராட்டு மழைக்கு, புகழுரைக்கு எனது ஆத்மார்த்தமான நன்றிகள்! நாம் எல்லோருமே நமது கலைவள்ளலுக்குத்தான் என்றென்றும் கடமைப்பட்டிருக்கிறோம் ! எல்லாப்புகழும் நமது கலையுலக இறையனாருக்கே !
தாங்கள் வெளியிட்டிருக்கும் "தச்சோளி அம்பு" சிறப்பு வண்ண நிழற்படம் மிகமிக அரிய ஒன்று !
"தச்சோளி அம்பு" Facts & Stills சூப்பரோ சூப்பர் ! அந்த ஒன்பது நிமிட வீடியோவுக்கு எண்ணிலடங்கா நன்றிகள் !
"பந்தபாசம்" பாடல்கள் பதிவுக்கு Special Thanks !
அன்புடன்,
பம்மலார்.
-
'பந்தபாசம்' பட மற்றும் 'ப' வரிசை வெற்றிப்படங்களின் இயக்குனர் திரு.பீம்சிங் அவர்கள் தனது துணைவியார் திருமதி சுகுமாரி அவர்களுடன். (அரிய நிழற்படம்)
http://www.sukumari.com/Images1/Bhimsingh_web.jpg http://www.jointscene.com/ahtees/adm...ha%20Pasam.jpg
அன்புடன்,
வாசுதேவன்.