Re: Pumpuhar-Sivaji Ganesan
Quote:
Originally Posted by tfmlover
50 ளின் இறுதியில் வெளிவந்த சுவாரஸ்யமான அறிவிப்பு விளம்பரம் :)
http://s775.photobucket.com/albums/y...n-Pumpuhar.jpg
தயாராகிறது தமிழ் விருந்து !
மொழிகள் குல முதல்வியாம்
தமிழன்னைக்குச் சூட்டும் முத்தாரம்
புலி வில் கயல்
கொடி கண்டோர் புகழ் பொறித்திடும் சிலப்பதிகாரம்
பூம்புகார்
மு கருணாநிதி
*சிவாஜி கணேசன் கிருஷ்ணன் பஞ்சு
இந்த மூவருடன் AVM தரும் எழிலோவியம் !
படம் திரைக்கு வந்தபோது அதில் எஸ் எஸ் ராஜேந்திரன் தானே இருந்தார் ?
ஆரம்பத்தில் நடித்துவிட்டு பின்னர் நடிகர் திலகம் விலகிக் கொண்டாரா ?
தெரிந்தவர்கள் சொல்லுங்கள் pls
thanks
Regards
டியர் tfmlover,
நீங்கள் அளித்துள்ள சுவாரஸ்யமான விளம்பரத்துக்குப்பிண்ணனியில் நிகழ்ந்தவை....
1956-வாக்கில் கலைஞர் மு.கருணாநிதி கதை வசனத்தில், கிருஷ்ணன் பஞ்சு இயக்கத்தில், ஏ.வி.எம் தயாரிப்பில், நடிகர்திலகம் பத்மினி ஜோடியாக நடிக்க "பூம்புகார்" தயாராவதாக இருந்தது. அப்போது வந்த விளம்பரம்தான் இது.
ஆனால் இப்படம் பற்றிய கதை பற்றிய கலந்துரையாடல் (செம்மொழியில் சொன்னால் 'ஸ்டோரி டிஸ்கஷன்') நடந்துகொண்டிருந்தபோது, கிட்டத்தட்ட இதே கதையமைப்பைக்கொண்டு இதே ஜோடியுடன் 'தங்கப்பதுமை' வெளியாகவே, இனிமேல் 'பூம்புகார்' கதையை எடுத்தால் போணியாகாது, மக்கள் பார்க்க மாட்டார்கள் என்று நினைத்த ஏ.வி.எம். செட்டியார் இப்படத்தை கைவிட்டார். கிருஷ்னன் பஞ்சுவும் விலகினார்.
பின்னர் சுமார் ஏழு ஆண்டுகளுக்குப்பிறகு, கலைஞர் தன்னுடைய் மேகலா பிக்சர்ஸ் சார்பில், காஞ்சித்தலைவனுக்கு அடுத்த தயாரிப்பாக 'பூம்புகார்' கதையை தயாரித்தார்.
நடிகர் திலகத்துக்கு பதிலாக இலட்சிய நடிகர்
பத்மினிக்கு பதிலாக விஜயகுமாரி
கிருணன் பஞ்சுவுக்கு பதிலாக ப நீலகண்டன்
ஏ.வி.எம்.நிறுவனத்துக்கு பதிலாக மேகலா பிக்சர்ஸ் என்று எல்லாமே மாறிப்போனது.
கலைஞர் மட்டுமே மாறாத ஒருவராக இடம்பெற்றிருந்தார்.
காஞ்சித்தலைவன் 1963-ம் ஆண்டிலும், பூம்புகார் 1964-ம் ஆண்டிலும் வெளிவந்தன. ('காஞ்சித்தலைவன்' என்ற பெயர் அண்ணாதுரையைக் குறிப்பதாக சென்ஸார் போர்டில் எதிர்ப்பு கிளம்பி பின் அடங்கியது).