-
திரைக்காவிய முதல் வெளியீட்டு விளம்பரங்கள் :15
நடிகர் திலகத்தின் 235வது காவியம்
சந்திப்பு [வெளியான தேதி : 16.6.1983]
வெள்ளிவிழாக் கொண்டாடிய மெகாஹிட் காவியம்
பொக்கிஷாதி பொக்கிஷம்
50வது நாள் விளம்பரம் : தினத்தந்தி : 4.8.1983
http://i1110.photobucket.com/albums/...GEDC6350-1.jpg
தொடரும்...
பக்தியுடன்,
பம்மலார்.
-
டியர் esvee சார்,
தாங்கள் வழங்கிய பாராட்டுக்கும், பட்டத்துக்கும் எனது பணிவான நன்றிகள்..!
அன்புடன்,
பம்மலார்.
-
டியர் வாசுதேவன் சார்,
'திரு. ஏவிஎம், கர்மவீரர், கலைக்குரிசில்' ஸ்டில், சூப்பர் ஸ்டில் சார்..!
'நடிகர் திலகத்தின் நாயகியர்' மெகா தொடரில் நடிகை கிருஷ்ணகுமாரி குறித்த குறிப்பும், "திரும்பிப் பார்(1953)" புகைப்படங்களும் திவ்யம்..!
அன்புடன்,
பம்மலார்.
-
Dear Mr. ragul,
A very nice write-up on ANBAI THEDI..! Expecting more of this kind from you..!
Warm Wishes & Regards,
Pammalar.
-
நடிகர் திலகத்தைப் பற்றி ராஜு ஆரோக்கியசாமி என்கிற ரசிகர் வரைந்துள்ள கவிதை அருமை. ஆத்மார்த்தமான அர்ப்பணிப்பு. அவருக்கு நம் உளமார்ந்த பாராட்டுக்கள். கவிதையைப் பதிப்பித்த ரசிக வேந்தருக்கு நன்றிகள்
-
டியர் ராகவேந்திரன் சார்,
'நடிகர் திலகமும் நடிப்புக் கோட்பாடும்' சூப்பர். ஸ்டானிஸ்லாவ்ஸ்கி அவர்களின் நடிப்புக் கோட்பாடு நடிகர் திலகத்திற்கு அச்சு அசலாகப் பொருந்துவதை தாங்கள் குறிப்பிட்டிருப்பது அழகு. துவக்கமே தூள். தொடர்ந்து தாங்கள் அளிக்கவிருக்கும் தொடர்களைக் காண வெகு ஆவலாய் உள்ளோம். நன்றி!
அன்பைத் தேடும் எங்களுக்கு தங்கள் 'அன்பைத் தேடி' தேடிக் கொடுத்த தங்களுக்கு தலையாய நன்றிகள்.
-
டியர் வினோத் சார்,
நீதி கேட்கும் எங்கள் குணசேகரனை சும்மா 'கும்'மென்று பதித்ததற்கு நன்றி! ஏவிஎம் வீடியோ தொகுப்பு dvd க்காக தவம் கிடக்கிறேன். விரைவில் வந்து சேரும் என்று வயிற்றில் பால் வார்த்த தங்கள் பொன்னான உள்ளத்திற்கு நன்றி!
-
டியர் ஹரிஷ் சார்,
இந்தத் 'திருவிளையாடல்' தானே வேண்டாம் என்பது?. தாங்கள் முதலில் இங்கு வந்து ஒரு முறை தரிசனம் தாருங்கள்.
-
அன்புக்குரிய பம்மலாரே!
எதிர்பார்ப்பு நிறைவேறி விட்டது. எங்கள் முத்தையா திரையரங்கில் 'சந்திப்பு' சாதனை படைத்த அந்த 50- ஆவது நாள் 'தினத்தந்தி' விளம்பரம் கடந்த மூன்று நாட்கள் பட்ட வேதனையை புறமுதுகு காட்டி ஓடச் செய்து விட்டது. மனம் லேசாகி ஆகாயத்தில் மிதப்பது போன்றதொரு உணர்வு. பெருமை பொங்க வைக்கும் இந்த அற்புதப் பதிவை அளித்த தங்களுக்கு ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப தேங்க்ஸ். அடுத்தவர்களை சந்தோஷப்படுத்திப் பார்க்கும் தங்கள் பொன்னான மனம் வாழ்க! வசூல் பிரளயத்திற்கு மறு பெயர் நம் 'வணங்காமுடி' தானோ!
-
The great nadigar thilagam.
ஆர்.எம்.வீரப்பனின் சத்யா மூவிஸ் தயாரித்த 'புதிய வானம்' படத்தை ஆர்.வி.உதயகுமார் டைரக்ட் செய்தார். ஆர்.வி.உதயகுமார், தனது படங்களுக்கு பாடல்களும் எழுதுவது உண்டு.
'புதிய வானம்' படத்திலும் அவர் பாடல் எழுதினார். அதில், 'எளிமையும், பொறுமையும் புரட்சித் தலைவனாக்கும் உன்னை' என்ற வரிகள் வருகின்றன.
அதாவது, எம்.ஜி.ஆரை புகழும் பாடல்! அதை சிவாஜிகணேசன் பாடவேண்டும்!
பாடலைப் படித்துப் பார்த்த ஆர்.எம்.வீரப்பன், 'இதை சிவாஜி பாடுவாரா? எனக்கு சந்தேகமாக இருக்கிறது. ஏதாவது நினைத்துக் கொள்வாரோ என்று பயமாகவும் இருக்கிறது!' என்றார்.
'ஒருவேளை சிவாஜி இந்தப் பாடல் வரிகளை விரும்பாவிட்டால், அதற்கு மாற்றாக வேறு பாடலும் வைத்திருக்கிறேன்' என்று உதயகுமார் கூறினார்.
பாடலை கொண்டு போய் சிவாஜிக்குப் போட்டுக் காட்டினார்.
அதன்பின் நடந்தது பற்றி உதயகுமார் கூறியதாவது:-
'எம்.ஜி.ஆர். பற்றிய வரிகள் வரும்போது, சிவாஜி முகத்தில் எவ்வித மாற்றமும் இல்லை. பாடல் முழுவதும் முடிந்ததும், 'புரட்சித் தலைவனாக்கும் உன்னை என்று எழுதியிருக்கிறாயே! அப்படி எழுதும்படி வீரப்பன் சொன்னாரா?' என்று கேட்டார்.
'இல்லை. நானாகத்தான் எழுதினேன்' என்று நான் பதில் அளித்தேன். 'இந்தப் பாடலை நான் பாடவேண்டும். அவ்வளவுதானே? தாராளமாகப் பாடுகிறேன். அண்ணன் மறைந்துவிட்டார். அவர் புகழைப் பாடுவதற்குக் கொடுத்து வைத்திருக்க வேண்டும்' என்று சிவாஜி கூறினார்.
அந்தப்பாடல் காட்சி படப்பிடிப்பின்போது, எம்.ஜி.ஆர். ஸ்டைலில் விரலைக் காட்டி நடிக்க வேண்டும் என்றேன். அதேபோல நடித்தார். நான் நெகிழ்ந்து போய்விட்டேன்.'
இவ்வாறு உதயகுமார் கூறினார்.
'புதிய வானம்' வெற்றிப்படமாக அமைந்தது.