Mmmm. Ingeyum chudachchuda dharalamaga kidaikkum. Grow up gentleman! Neengal endrume naarugira madhiridhane ezhudhuveergal! aachcharyappada ondrumillai!!!
Printable View
Mmmm. Ingeyum chudachchuda dharalamaga kidaikkum. Grow up gentleman! Neengal endrume naarugira madhiridhane ezhudhuveergal! aachcharyappada ondrumillai!!!
அந்த திரியினில் வரும் பதிவுகளை இங்கு பதித்து தேவையில்லாமல் இரண்டு திரிகளுக்கும் நடுவில் வருத்தத்தை உண்டாக்கவேண்டும் என்பது எனது குறிக்கோள் இல்லை - "சிரித்தால் தானே கவலை மறைய " என்பதற்கு இணங்க சில கற்பனையில் , நகைச்சுவையில் doctorate வாங்கிய பதிவுகளை மட்டும் இங்கு போடுவதில் தவிறில்லை என்று நினைக்கிறன் - நமது திரியில் நகைச்சுவை திறமை முழுதும் வளர்ந்தபின் அங்கு கிடைக்கும் நல்ல நகைச்சுவை பதிவுகள் இங்கு telecast ஆவது நின்று விடும் - அதுவரையிலும் கொஞ்சம் சிரிங்க boss !!
அங்கு வெளியான ஒரு பதிவு இது
தேவி பாரடைசில் 101 காட்சிகளும், அகஸ்தியாவில் 83 காட்சிகளும்
தொடர்ந்து அரங்கு நிறைந்தன.
மதுரை மீனாட்சியில் 112 நாட்கள் ஓடியது.படம் வெளிவந்த முதல் நாளே மதுரை மீனாட்சியில் 100 நாட்களுக்கு எந்தவித இலவச பாஸ் அனுமதியும் கிடையாது என்கிற விளம்பரம் செய்தி தாளில் வந்தது.
சென்னையில் 10 வது வார முடிவில் எல்.ஐ .சி. கட்டிடத்தில் தீவிபத்து
ஏற்பட்டு, அதன் விளைவாக , அண்ணா சாலையில் போக்குவரத்து ஒருவழி பாதையாக ஆனபின் , மக்கள் நடமாட்டம்
குறைந்ததால், 12வது வாரத்தோடு தேவி பாரடைசில் எடுக்கப்பட்டது. அகஸ்தியாவிலும் 84 நாட்கள் ஓடியது.
சென்னையில் 100 நாட்கள் நிறைவு செய்யாவிட்டாலும் , பலமுறை
அரங்குகளில் மறுவெளியீடு செய்யும்போது, மக்கள் திலகத்தின் மெகாஹிட் படங்களுக்கு இணையான வசூலை பெற தவறுவதில்லை.
LIC கட்டிடத்தில் தீ விபத்து -------- அதனால் கூட்டம் வரவில்லை -------
நாம் இதையே எப்படி போடுவோம் - நல்ல கதையோட்டம் உள்ள படம் - இருந்தாலும் ஏனோ தெரியவில்லை 100 நாட்களை தொட முடியவில்லை - இந்த படம் ஓடும்போது - NT யின் நான்கு படங்கள் 50 நாட்களை தாண்டி ஓடிகொண்டிருந்தது - அதற்குள் புதிய இரண்டு படங்கள் பொங்கலில் வருவதாக அறிவிப்பு - நம் படங்கள் தான் நமக்கு போட்டி - என்ன செய்வது ? என்று வருத்தபட்டு எழுதியிருப்போம்.
LIC தீ விபத்தை பற்றியோ அதனால் தெருவில் ஆள் நடமாட்டமே இல்லை என்பதை பற்றியோ யாருமே ஒரு விஷயமாக கருதி , படம் இதனால் தான் ஓடவில்லை என்று சால் ஜாப்பு சொல்லிருக்க மாட்டோம் - முடிந்து இருந்தால் , Fire Engine யை கூப்பிட்டு தீயை அனைத்திருப்போம்
இவர்களுக்கு உண்மை என்பது ஒரு unknown planet - அந்த கிரகம் எப்படி இயங்கும் என்றே தெரியாது !! - கற்பனையில் வீடு கட்டி - கற்பனையில் கிரக பிரவேசம் பண்ணி , கற்பனையில் உணவும் பரி மாறுவார்கள் - அங்கு இருக்கும் எல்லோரும் - "போதும் பசி தீர்ந்து விட்டது , உணவு , பதார்த்தங்கள் அருமை என்று சொல்லியே ஆக வேண்டும் - எவனாவது அங்கே தப்பி தவறி எங்கே போட்டீர்கள் உணவு என்று கேட்டுவிட்டால் அவன் அன்றே photo வாக மாறி , மாலையுடன் ஊதுபத்தியின் வாசனையை அனுபவிக்க தயாராக இருக்க வேண்டும்
நகைச்சுவை பதிவுகள் தொடரும் ----------:-D:)
are u indicate any badwords posted in my post in our thread about your favourite actor?
நண்பர்களே
நடிகர் திலகம் புகழ் பரப்புவதை மறந்து என் நேரமும் எம்ஜிஆரின் திரியில் தேவை இல்லாமல் பதிவுகளை போட்டும் , உங்கள் - தரமற்ற கேவலமான வார்த்தைகளால் தாக்கியும்
பெருமை பட்டு கொள்ளும் திரு ஹரிஷ் - திரு செந்தில் - திரு ரவி - திரு ரவிகிரண் அதிமேதாவி
கோபால் - மையம் திரியில் பலரையும் ஏமாற்றி கொண்டிருக்கும் கல்நாயக் - ஆதிராம் - சாரதா
கார்த்திக் - பரணி - வனஜா - லேட்டஸ்ட் ராமதாஸ் என்று பன்முகம் கொண்ட ஒருவரும் நீங்கள்
எல்லாம் எப்போது உண்மையை உணர்வீர்கள் ?
சிவாஜி புகழ் பாடுங்கள் . வரவேற்கிறோம் . உங்கள் ஒற்றுமையை அதில் காட்டுங்கள் . அதை
விடுத்து எம்ஜிஆரின் சாதனைகள் பற்றிய நினைப்புடனே வருத்தமுடன் காலத்தை கடத்தாதீர்கள்
நீங்கள் மட்டுமென்ன உண்மையான தகவல்களை தருகிறீர்கள் . [ 100 நாள் ஓடாத நீதி - ராஜ ராஜ சோழன் இன்னும் பல ] முதலில் உங்கள் பிழைகளை திருத்தி கொள்ளுங்கள் .
நாங்கள் இதுவரை உங்கள் திரியில் வந்து ஒரு போதும் சிவாஜியின் நடிப்பை பற்றியோ , அவருடைய புகழை பற்றியோ பதிவிடாத போது உங்கள் ரசிகர்கள் ஆத்திரத்துடன் வந்து குறைகள் கூறியும் உங்கள் திரியில் கேவலமாகவும் போட்டு மகிழ்வது ஏனோ ?
இந்த வேகம் - ஒற்றுமை உங்கள் எல்லோரிடம் இருந்திருந்தால் திருவையாறு - ஒரு மறக்க முடியாத சரித்திரம் ஆகி இருக்கும் . இனியாவது மனம் திருந்தி உங்கள அபிமான நடிகர் திலகத்திற்கு சேவை செய்யவும் .
நல்லதே நடக்கும் என்று நம்புவோம் .
உண்மையை உணரும் நேரமிது ..
dear thiru. Yukesh Babu. I know you are an ardent fan of your abhimana nadigar MGRamachandran. We have not posted any bad words abour your favourite actor, We also need not indicate about your postings whether you used bad words or not!
When our icon's movies are unnecessarily criticized or wrong information about his collections are posted naturally we rise up and relaliate. We dont hurt individual's feeling. What I posted was only a real time situation. Understand properly and kindly avoid provoking words .... we are not used to such abusing words! Can u indicate the bad words used by me?
நன்றி நண்பரே. நான் நிறுத்திக்கொள்ளலாம் என்றிருந்தேன். உங்கள் காமெடி பதிவுகளை கண்டதும் நண்பர்கள் இங்கே பகிர்ந்து கொண்டார்கள். நீங்களும் நேரடியாக இங்கே வந்து காமெடி செய்வது மிக நன்றாகவே இருக்கிறது. பாவம் உங்கள் பொய்யும் புரட்டும் அம்பலமானதில், மானமிழந்து நிற்கிறீர். தைரியமிருந்தால் திரு முரளி சீனிவாஸ் கூறியதற்கும், நான் உங்களிடம் போன பதிவில் கேட்ட கேள்விக்கும் பதிலளித்துவிட்டு மானம் காப்பாற்றி உங்கள் அடுத்த பதிவையிடுங்கள். பின்னர் உங்களுக்கு நான் பதில் தருகிறேன் மேற்கொண்டு. சம்பந்தமில்லாதவர்களை நீங்கள் வம்பிழுப்பது உங்கள் நிதானமில்லாத நிலையையே காட்டுகிறது.
நான் இதுவரை mgr திரிக்கு வந்ததே இல்லை. திரு. யுகேஷ் பாபு, வரவும் மாட்டேன்.
அன்பு நண்பர் யுகேஷ் பாபு அவர்களே,
நடிகர் திலகத்தின் திரியில் வந்து ஒரு சில கேள்விகளை எழுப்பி ஒரு சில குற்றசாட்டுகளையும் கூறியிருக்கிறீர்கள். இந்த விவாதத்தை வளர்க்க நான் விரும்பவில்லை. ஒரு சில விஷயங்களை மட்டும் சொல்ல ஆசைப்படுகிறேன். எனக்கு தெரிந்த வரை நீங்கள் குறிப்பிட்டிருப்பதைப் போல் இந்த திரியிலும் சரி எம்ஜிஆர் திரியிலும் சரி எம்ஜிஆர் அவர்களைப் பற்றிய தனிப்பட்ட விமர்சனங்கள் வைக்கப்பட்டதேயில்லை. விவாதம் என்று வந்திருந்தால் அது முறையே சிவாஜி மற்றும் எம்ஜிஆர் படங்களின் பாக்ஸ் ஆபிஸ் வசூல் சாதனைகளைப் பற்றிதான் இருந்திருக்குமே தவிர வேறு வகையான விமர்சனங்கள் சிவாஜி திரியில் வந்ததில்லை. அது கூட சிவாஜி படங்களின் வசூல் பற்றி யாரவது எழுதினால் உடனே அதை குறை காணுவது, விமர்சிப்பது போன்ற செய்கைகளினால்தான் இங்கே பதில் வருகிறது. சில நாட்களுக்கு முன்பு சிவாஜி படங்களை பற்றி தேவையில்லாமல் நண்பர் ராஜாராம் சிவாஜி திரியில் விமர்சித்தபோது அதற்கு உணர்சசிவசப்பட்டு சில சிவாஜி ரசிகர்கள் பதில் கொடுத்த போது அதில் இடம் பெற்றிருந்த சில வார்த்தைகள தரமற்றவையாக இருந்த காரணத்தினால் சிவாஜி ரசிகர்களின் பதிவுகளையும் நீக்கியவன் நான்.
ஆனால் அதே நேரத்தில் எம்ஜிஆர் திரியில் தேவையில்லாமல் பல முறை சிவாஜி விமர்சிக்கப்பட்டிருக்கிறார். அவற்றையெல்லாம் நான் மீண்டும் குத்திக் கிளற விரும்பவில்லை, நீங்கள் பதிவிட்ட ஒரு பதிவை மட்டும் சுட்டிக் காட்ட விரும்புகிறேன். அண்மையில் இரண்டு மாதங்களுக்கு முன்பு மகாலட்சுமி திரையரங்கில் தியாகம் திரையிடப்பட்டபோது ஞாயிறு மாலை காட்சியைப் பற்றி நீங்கள் அவதூறு கூறினீர்கள். அன்று மகாலட்சுமி திரையரங்கிற்கு அல்லது அந்த சாலை வழியாக சென்றவர்களுக்கு தெரியும் எவ்வளவு பெரிய கூட்டம் அன்று படத்திற்கு வந்திருந்தது என்று. ஆனால் நீங்கள் அனைத்து டிக்கெட்டுகளையும் ஒருவரே வாங்கி அருகாமையிலிருந்த டாஸ்மாக் கடைக்கு வந்தவர்களுக்கு இலவசமாக கொடுத்தார்கள் என நாகூசாமல் பழி சுமத்தினீர்கள். அன்றைய மாலைக்காட்சிக்கு சென்றிருந்தவர்களில் நானும் ஒருவன். என்னுடைய வாழ்நாளில் இன்றுவரை ஒரு துளி மதுபானம் கூட அருந்தாத நான் உங்கள் வார்த்தைகளால் மிகவும் புண்பட்டுப் போனேன். உங்களின் அந்த பதிவிற்கு அதே தொனியில் பதிலளிக்க வேண்டும் என்று இந்த திரியில் சில நண்பர்கள் எழுதிய போது நான் அதை மறுத்து நண்பர் யுகேஷ் பாபு நம்மை விட வயதில் இளையவர். அவருக்கு நேரிடையான அனுபவம் கிடையாது. ஏதோ கோவத்தில் யாரோ சொல்லிக் கொடுத்ததை எழுதியிருக்கிறார். ஆகவே அதை பெரிதுபடுத்தாமல் விட்டு விடுவோம் என்று நான் எழுதியிருந்தது உங்களுக்கு நினைவு இருக்குமா என்று தெரியவில்லை. எதற்கு இதை குறிப்பிடுகிறேன் என்றால் இப்படி தனிப்பட்ட முறையில் நீங்கள் எழுதியும் கூட, ஏன் இன்று கூட நடிகர் திலகத்தின் ரசிகர்கள் கோபால், செந்தில், ஹரிஷ், ரவி, மற்றும் ரவிகிரண் போன்றவர்களையும் தனிப்பட்ட முறையில் நீங்கள் தாக்கியதையும் கூட சிந்தித்து பாருங்கள் நண்பரே, இது போன்ற செய்கைகள் எங்கள் தரப்பிலிருந்து வந்திருக்கிறதா என்று? அது போல் திருவையாறு அரசியல் எல்லாம் தேவையா நண்பரே? பதிலுக்கு அதே தேர்தல் பற்றி நாங்களும் உரைத்தால்? சற்றே சிந்தித்து பாருங்கள்.
மீண்டும் கூறுகிறேன். தனிப்பட்ட முறையில் எம்ஜிஆர் அவர்களை பற்றியும் சரி எம்ஜிஆர் திரி நண்பர்கள் பற்றியும் எந்த விதமான தனிப்பட்ட விமர்சனங்களும் நடிகர் திலகம் திரியில் வராது. நடிகர் திலகத்தைப் பற்றிய உண்மையில்லாத செய்திகளை நீங்கள் தவிர்த்தாலே எந்த சச்சரவும் வராது.
புரிந்து கொள்வீர்கள் என நம்புகிறேன்
அன்புடன்
நமது திரி நண்பர்களுக்கு,
நான் முன்பே பலமுறை கூறியதைத்தான் மீண்டும் சொல்ல விழைகிறேன். எம்ஜிஆர் திரியில் ஏதோ எழுதி விட்டார்கள் என்பதற்காக நாமும் அதே போன்று இங்கே பதிவிட தேவையில்லை. நடிகர் திலகத்தைப் பற்றிய தவறான செய்தியோ அல்லது சிவாஜி படங்களின் வெற்றிகளைப் பற்றி தவறாக குறிப்பிட்டால் மட்டுமே நாம் உண்மை நிலையை விளக்க பதிவிட வேண்டுமே தவிர மற்றபடி பதிவிற்கு பதிவு என்று நாமும் ஆரம்பித்தால் அது நமது நேரத்தையும் சக்தியையும் வீணாக்குவதுடன் தேவையற்ற விவாதங்களையும் வளர்க்கும். அதை தயவு செய்து தவிர்ப்போம்.
மற்றொரு முக்கியமான விஷயம், நமது திரியில் புதிதாக யாரேனும் நுழைந்தாலோ அல்லது ஏற்கனவே பல ஆண்டுகளாக பதிவிட்டுக் கொண்டிருக்கும் நண்பர்களை அவரா இவர் அல்லது இவரா அவர் என்றெல்லாம் திரியில் தேவையற்ற கேள்விகளை எழுப்பி தேவையற்ற குழப்பங்களை உருவாக்க வேண்டாம் என்று பணிவோடு கேட்டுக் கொள்கிறேன். இந்த நேரத்தில் மற்றொன்றையும் குறிப்பிட விரும்புகிறேன்.
நீங்கள் யார் என்ற கேள்வி மிக அதிகமாக கேட்கப்பட்ட நபரான நண்பர் கல்நாயக் அவர்கள் வேறு எந்த உறுப்பினரின் பினாமியும் அல்ல என்பதை இந்த திரியின் Moderator என்ற முறையில் அழுத்தமாக பதிவு செய்ய விரும்புகிறேன். அவர் தன profile-ல் குறிப்பிட்டிருப்பது போல் சென்னையில்தான் வசிக்கிறார். ஆகவே இனிமேல் இது போன்ற விவாதத்தை அறவே தவிர்த்து நடிகர் திலகம் சம்பந்தப்பட்ட விஷயங்களில் மட்டும் கவனம் செலுத்துமாறு அன்போடு கேட்டுக் கொள்கிறேன்.
அன்புடன்
Dear Murali,
With due respect, i differ with your statement in 1st paragraph. MGR fans are not going to stop abusing NT's fame; that's there in their blood. They have done it successfully for the last few generations with the help of politics, media etc. Now, their false propaganda of their idol BO power has been completely exposed with miserable debacle of re-released AO (never cross with our Karnan).
With enough proof in our hand on NT's BO power, we must expose their lies and propaganda. In fact, we should publish NT's records very aggressively and prove that NT is the only BO king in tamil film world ever.
I would strongly support RavikiranSurya, Gopal, Kalnayak, Sivaa and others bringing out more and more on NT BO potential. If MT fans abuse our star in their thread for no reason, we should go and indulge there too.
You have seen Yukesh's bad and pathetic comment on NT's Thiruvaiyaru that he made today. That shows, he is completely running out of steam to prove his star's cinema talent (it is a different matter if MT had any acting talent) and BO power as claimed. Instead of talking more on MT's cinematic achievements, he brought out NT's political journey by conveniently forgetting it is a movie related thread, not politics forum. If they are participating in mud-slinging, i would favor our part on the same path. For us, NT has been great. For them, MT has been great and they should remember that they should not indulge in NT bashing. Instead, they should focus on bringing out good movies of MT and write about them.
They should remember ultimately, truth will triumph and it is happening now.
Regards
அன்புள்ள முரளி - உங்களிடம் இன்னும் கற்று கொள்ளவேண்டியவைகள் பல . இந்த அடக்கம் , புத்தரின் கோட்பாடு , கண்ணியம் தவறாத வார்த்தைகள் , காந்தியின் அஹிம்சா வழி - இன்னும் எவள்ளவோ ! இவைகளை ஏற்றுகொள்ளும் பக்குவம் உள்ளவர்கள் இருந்தால் உங்கள் வார்த்தைகள் பொன்னாக மதிக்கப்படும் - இல்லாவிட்டால் எல்லாமே விழலுக்கு இரைத்த நீர் தான் --- நமக்கு மட்டும் இந்த பண்புகள் இருந்தால் போதாது - அடுத்த தலைமுறை வேண்டுமானாலும் நம் பண்புகளை வியந்து பாராட்டலாம் , எழுதலாம் .. இந்த தலைமுறை இன்னும் நம்மை பழைய பஞ்சாங்கம் என்றுதான் தூற்றும் - கொஞ்சம் கூட தயிரியம் இல்லாதவர்கள் - உண்மைகளை கூட புரிந்து கொள்ளும் வகையில் எடுத்து சொல்ல தெரியாதவர்கள் என்று தான் ஏசும் --- உங்களுக்கு ஒரு பழ மொழியை நினைவு படுத்த விரும்பிகிறேன் - பாம்புக்கு பால் வார்த்தாலும் அது --------- . உங்களின் அடக்கமான வார்தைகளால் அவர்கள் ஏதாவது இதுவரை கற்று கொண்டார்களா ? - மாறாக இன்னும் பொய்களை தங்களின் பிறவி சொத்தாகத்தான் வைத்து கொண்டிருக்கிண்டார்கள் - NT yin படம் ஓடவில்லை என்பதை அந்த திரியில் யாராவது சொல்லும் வரை நாம் காத்திருப்பதில்லை - நம்மில் ஒருவரே இந்த படம் பார்க்க தேவை இல்லை என்று எழுதிவிடுவார் - அங்கே பாருங்கள் - LIC மாடியில் தீ , சென்ட்ரல் station இல் train வரவில்லை , மாடியில் இருந்த புறா ஒன்று இறந்துவிட்டது - அதனால் கூட்டம் குறைந்து விட்டது - ஆனாலும் theater இல் வேலை செய்யும் முனியம்மாவும் அவரின் குடும்பமும் அந்த படத்தை தினமும் பார்த்து வெற்றி அடைய செய்து விட்டார்கள் என்று எழுதுவார்கள் - இவர்களா நம்முடைய உண்மைகளை தெரிந்து கொண்டு ஒத்து கொள்ள போகிறார்கள் ? ஆனாலும் உங்களுக்கு தன்னம்பிக்கை மிகவும் அதிகம் . முள்ளை முள்ளால்தான் எடுக்க வேண்டும் - அவர்களுடைய பொய் கதைகளை வெளிச்சத்திற்கு கொண்டு வர வேண்டும் - இது நமக்காக மட்டும் அல்ல - அடுத்த தலைமுறைக்காகவும் கூட
ஒரு பாம்பு ஒரு சாது சொன்னார் என்பதற்காக தன்னுடைய சீறும் இயல்பையும் குறைத்து கொண்டு உயிருக்கு ஊசலாடிய கதை உங்களுக்கு தெரிந்திருக்கும் - நாம் சீற வேண்டும் தேவைப்பட்டால் - ஆனால் அவர்களைப்போல அநாகரிகமாக அல்ல - நம்முடைய எழுத்துக்கள் அவர்களை புண் படுத்த வேண்டாம் - ஆனால் அத்தனையும் உண்மை என்று அவர்கள் உணரும்படி இருக்க வேண்டும் - நம்முடன் விளையாடுவது ஒரு நெருப்புடன் , சிங்கத்துடன் விளையாடுவதைப்போல - ஆனால் நாம் நண்பர்களுக்கு நண்பர்கள் - கண்ணியம் தவற மாட்டோம் - அதே சமயத்தில் பதுங்கி கிடந்தது உபதேசம் செய்யும் துறவிகள் அல்ல நாம் - இதை அவர்கள் எவ்வளவு சீக்கிரம் உணர்வாகளோ அவ்வளவு சீக்கிரம் அவர்கள் நம்முடைய இனிய நண்பர்களாகி விடுவார்கள்
என்னது...சம்பந்தமே இல்லாமல் நீதி மற்றும் ராஜ ராஜ சோழன் திரைப்படம் இழுக்கபடுகிறதே என்று பார்த்தால். விஷயம் இதுதான் !
இவர்களுடைய திரைப்படங்கள்தான் சில திரை அரங்கு எப்போதும் திரையிடும் என்ற மாய நிலை மாறி அனைவருமே இப்போது நடிகர் திலகம் படங்களை சில மாயாவிகளின் மாய வேலைகளால் திரையிடாமல் இருந்துவிட்டோமே என்பதை இப்போது உணர்ந்தது போல,
நடிகர் திலகம் திரைப்படம் "நீதி" இன்று முதல் நியூ பிராட்வே திரை அரங்கில் 3 காட்சிகளாக வலம் வருகிறது.
இதை ஜீரணம் செய்யமுடியாமல் அடடா...இங்கயும் சிவாஜி படம் போட ஆரம்பிசுடாங்க்ளா...ச்சே...என்ன பண்ணாலும் பினிக்ஸ் மாதிரி வந்துட்ரான்பா இந்தாளு என்றுதான் எண்ணங்கள் ஓடுகின்றன என்பதை புரிந்துகொள்ளும்போது உண்மைகள் எவ்வளவு நாள் தான் மறைக்க முடியும் என்று எண்ணுவதை தவிர வேறு என்ன செய்வது !
http://i501.photobucket.com/albums/e...psa8deeb8d.jpg
Dear Yukesh Sir,
2 points from my end.
1. I have never come and initiated any controversy. BUT I have replied to controversy statements. I have never disrespected anybody by words or thoughts. I agree that I have argued in MT Thread but only when someone from your end writes wrong information that too directly or indirectly when it affects NT.
2. Thiruvayaaru ! I think NT fans need not feel ashamed about this because NT valued and respected his association with MT and that is why he chose to join hands with Mr.Janaki wife of your god Mr.MGR despite many warnings given by many top leaders about this association. This shows the greatness of our NT . But on the other hand, what did the real MGR sir fans do in return? Did they worked towards the success of their God's Wife ? NO....A BIG NO ...! So, NOW MGR sir's FANS DOESNOT HAVE ANY RIGHT OR FACE INFACT NOBODY HAS THE FACE TO SPEAK ABOUT NT's THIRUVAYAARU HISTORY IT IS NOT THE DEFEAT OF SIVAJI....IT IS THE ACTUALLY THE DEFEAT FOR YOUR GOD BECAUSE IT IS HIS WIFE WHO LOST !!
THERE IS A SAYING IN KURAL - ENNANDRI KONDAARKUM UYIVUNDAAM..UYIVILLAI SEINANDRI KONDRA MAGARKKU !!!
நன்றி முரளி சார், உங்களுடைய பொருத்தமான நிதானமான பதில்கள் அவர்களை நிதானத்திற்கு கொண்டு வரட்டும்.
என்ன சார் இப்படி என்னைப்பற்றிய உண்மையை பட்டென்று வெளியே சொல்லி விட்டீர்களே. இனி என்னை என்ன சொல்லி குறை கூறுவார்கள்? இருந்தாலும் நன்மைக்கே. என்னை அவரின் பினாமி இவரின் பினாமி என்று கூறப்பட்டதால் குற்றம் சுமத்தப்பட்டு வெறுத்து திரியை விட்டு விலகியிருப்பவர்கள் இதனால் திரும்பிவர வாய்ப்பு கிடைத்தது. அவர்கள் பங்கெடுக்க முடியாததற்கு நான் காரணமில்லை என்றாலும் என் பெயர் காரணமாயிருந்தால் மன்னிக்க வேணடுகிறேன்.
மேலும் வேறு சில காரணங்களுக்காக விலகியிருப்பவர்கள் திரியில் பங்குகொள்ள பணிவன்போடு வேண்டுகிறேன்.
திரு. ரவி உங்கள் கூற்றை நான் ஏற்றுக்கொள்கிறேன். நண்பர் இரவிகிரண் சூர்யாவும், மற்றவர்களும் தங்கள் பதில்களை இங்கே மட்டும் வைக்காமல் அங்கேயும் வைக்கவேண்டும். அதை அவர்கள் ஏற்றுக்கொள்வார்களா - பதிவை அழிக்காமல் விடுவார்களா? பழிச்சொல் சொல்லாமல் இருப்பார்களா? நடக்காததை நடந்தது, நடந்ததை நடக்காதது என மறுக்காமல் இருப்பார்களா? மீண்டும் பார்க்கலாம். எதையும் உணர நினைத்தால் உணரலாம். உயர நினைத்தால் உயரலாம். வாழ நினைத்தால் வாழலாம்.
//சலித்துப் பார்த்தாலும் சாதனைகள் செய்யாத நடிகர்கள் மத்தியில் சலிக்காமல் சாதனைகள் செய்த ஒரே நடிகர் நம் மக்கள் திலகம். //
color + Kashmir 'Raman Thediya Seethai', Color 'Naan Yen Pirandhen' padangalai Black & White 'Pattikkada patanama' padam Oda Oda virattiyapinnum....
Color Brammandam 'Neerum Neruppum' padaththai Black & White 'Babu' Oda Oda virattiya pinnum ippadiyellaam ezhudha eppadiththaan manam thunigiradho theriyavillai.
'Ninaiththadhai Mudippavan' padam ange 100 naal odiyadhu, inge 100 naal odiyadhu endru pulukikkondirundha aasaamigalukku naduvil, andhappadam Maduraiyil mattume 100 naal odiyadhu endra unmaiyai pottu udaiththa nanbar Vinodh (esvee) avargalukku nandri.
LIC buildingil neruppu pidiththadhaal Devi Paradaisil odavillai, sari. Agasthiyavilum odavillaiye ange endha building patri erindhadhu?.
Reason kandu pidikkiraanga paarungappaa, adeyappaa.
When mentioning about Thiruvaiyaru, Mr.Yukesh Babu should not forget what result MGR faced in 1980 PARLIMENT ELECTION. ('thOlviye kaanaadhavar' endrellaam sollappattavarukku kidaiththa seats 2 out of 40)
ottumoththa tamilnade MGR kai kaattubavarukkuthaan vottu podum endra maaya thirai vilagiyadhu andha electionilthaan.
Very Apt reply Mr Murali Sir but at the same time we should not keep quite when they
write false info about Our NT.
Here I am totally agree with Mr Ravi.
Regards
Thiruvaiyaru matter -nitharsanamana unmai.Thank u RAVI KIRAN sir for your points regarding Thiruvaiyaru matter.
In 1980- CONGRESS main proboganda is Our leader Sivaji who alone canvassed for congress and DMK .We won 38 seats out of 40 seats in parliment..
In 1984-when mr .MGR was hospitalised in USA ,our leader sivaji alone canvassed for AIADMK and CONGRESS .Because of his tour in 234 seats AIADMK- CONGRESS alliance captured more than 3/4 of seats.Not only that, that time only our fans association was given 5 MP seats and 6 MLA seats.We won all the seats i.e 100 percent victory.
நண்பர் கார்த்திக் வெகு நாட்களுக்கு பிறகு ஒரு ரவுண்டு வந்ததால் அவரின் சுவையான எழுத்துக்களை மீண்டும் படிக்கவும் மற்றவர்களும் இடையூறு இல்லாமல் அதை தொடர்ந்து வாசிக்கவும் சற்று இடைவெளி விட்டிருந்தேன். இப்போது மீண்டும் விட்ட இடத்திலிருந்து
விட்ட இடம் 1972-ம் ஆண்டு மே மாதம் 6-ந் தேதி மதுரை சென்ட்ரல் திரையரங்கம். பட்டிக்காடா பட்டணமா ஓபனிங் ஷோ. அதை பற்றிய சென்ற பதிவின் இறுதி பாரா.
அவரிடம் பணத்தை கொடுத்து விட்டு balance கூட வாங்கவில்லை. ஆனால் counterfoil கிழிக்கப்பட்டிருந்தது. சந்தேகம் வந்து விட்டது. உடனே என் கஸின் முதலில் என்னை மட்டும் ஒரு டிக்கெட் எடுத்துக் கொண்டு உள்ளே போக சொன்னான். சிக்கல் எதுவும் இல்லாமல் நான் உள்ளே செல்வதை பார்த்து விட்டு அவனும் உள்ளே வர, இடம் பிடித்து போய் உட்கார்ந்தோம். ஒரு பெரிய சாதனையை செய்தது போல பெருமிதம். ஆனால் இன்று வரை டிக்கெட் கிடைக்காமல் அதிலும் ஓபனிங் ஷோ டிக்கெட் கிடைக்காமல் இவ்வளவு கஷ்டம் வேறு எந்த படத்திற்கும் பட்டதில்லை.
இங்கிருந்து பதிவு தொடர்கிறது.
அந்த நாள் ஞாபகம்
படம் ஆரம்பித்தது. முதலில் மதுரையை காண்பித்தவுடனே தியேட்டர் களை கட்டி விட்டது. மதுரை விமான நிலையத்தில் முதல் காட்சி. அப்போது வி.கே.ஆர் ஒரு வசனம் சொல்லுவார். மதுரையை சுத்தின கழுதை கூட மதுரையை விட்டு போகாது. ஆரவாரம் அதிகமானது. அடுத்த காட்சி. படம் சட்டென்று நெகடிவ்-ல் மாறியது. தீசட்டி ஏந்திய ஒரு கை மட்டும் திரையில் தெரிய நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அளிக்கும் என்ற வார்த்தைகள் மின்ன, காதடைக்கும் கைதட்டல் ஒலி, பேப்பர் மாரி பொழிய ஆட்டம் தொடங்கியது. முதலில் ஒரு கை பிறகு கால், சைடு போஸ் என்று கொஞ்ச கொஞ்சமாக காட்டிக் கொண்டே வந்து இறுதியில் டைரகஷன் பி.மாதவன் என்று போடும்போது நடிகர் திலகத்தின் முகம் தெரிய அரங்கத்தில் மீண்டும் ஒரு அணைக் கடந்த ஆரவாரம்.
உடனே அம்பிகையே ஈஸ்வரியே பாடல் ஆரம்பிக்க தியேட்டர் இரண்டுப்பட்டது.
இரண்டாவது சரணம் வந்தது
ஏழைகளை ஏச்சதில்லை முத்துமாரி; நாங்க
ஏமாத்தி பொழச்சதில்லை முத்துமாரி
வாழ விட்டு வாழுகிறோம் முத்துமாரி; இனி
வருங்காலம் எங்களுக்கே முத்துமாரி
1971 தேர்தலில் ஏமாந்த/ஏமாற்றப்பட்ட மக்கள் உண்மை நிலையை புரிந்துக் கொண்டு பெருந்தலைவரின் காங்கிரஸ் இயக்கத்திற்கு பெருவாரியாக ஆதரவாக மாறிக் கொண்டிருந்த அன்றைய சூழலில் இந்த வரிகளை கேட்டவுடன் ஒட்டு மொத்த ரசிகர்களும் ஆரவாரம் செய்தனர் அது அப்படியென்றால் அடுத்து வந்த மூன்றாவது சரணம்
சிவகாமி உமையவளே முத்துமாரி; உன்
செல்வனுக்கும் காலமுண்டு முத்துமாரி
மகராஜன் வாழ்கவென்று வாழ்த்து கூறி;இந்த
மக்களெல்லாம் போற்ற வேணும் கோட்டை ஏறி,
ரசிகர்களை அலப்பரையின் உச்சத்திற்கே அழைத்து சென்று விட்டது. அடுத்த சில நிமிடங்கள் வரை பெருந்தலைவரையும் நடிகர் திலகத்தையும் வாழ்த்தி கோஷங்கள் தியேட்டரில் எதிரொலித்துக் கொண்டேயிருந்தன.
பெரிய எதிர்பார்ப்பு இல்லாமல் வந்த ரசிகர்களுக்கு இந்த பாடலும், வரிகளும் பயங்கர சந்தோஷத்தை கொடுக்கவே ரசிகர்கள் படத்தில் ஐக்கியமானார்கள். படத்தின் திரைக்கதையமைப்பு படத்தை விறுவிறுப்பாக கொண்டு சென்றது. அடுத்து சோழவந்தான் வீதியில் நடக்கும் சண்டை. அந்த சண்டை தொடங்குவதற்கு முன்னால் நடிகர் திலகம் ஒரு வசனம் பேசுவார். "ஏண்டா! தடி எடுத்தவன் எல்லாம் தண்டல்காரன்! கத்தி எடுத்தவன் எல்லாம் வீரனா?" தியேட்டரில் அதிகபட்ச அலப்பறை இந்த வசனத்திற்கு தான். அடுத்து கல்யாணம். முதலிரவு காட்சி. அதில் கேட்டுக்கோடி உருமி மேளம் பாடல். அந்த வரிகள், அந்த ட்யுன், மெதுவாக வரும் பீட்ஸ் சட்டென்று டப்பாங்குத்துக்கு மாறுவது, கேட்க வேண்டுமா? ரசிகர்களின் உற்சாகத்தை கட்டுப்படுத்த முடியவில்லை. அந்த பாடல் காட்சியை அடுத்த தடவை பார்க்கும் போது தான் சரியாக பார்க்க முடிந்தது. இது முடிந்து சிறிது நேரத்தில் அதையும் தூக்கி சாப்பிடும் விதமாக என்னடி ராக்கம்மா பாடல். திகட்ட திகட்ட சந்தோஷம் என்பார்களே அதை அங்கே சிவாஜி ரசிகர்கள் நேரிடையாக அனுபவித்தார்கள். தன்னை மறந்த நிலை என்பார்களே அந்த ரேஞ்சுக்கு போய் விட்டார்கள். இதற்கு நடுவில் அத்தை சுகுமாரிக்கும் நடிகர் திலகத்திற்கும் நடுவில் வரும் சின்ன சண்டைகள், அந்த பதிலுக்கு பதில் வசனங்கள் வேறு ரசிகர்களை குஷிப்படுத்தியது. இடைவேளை. வெளியே வரும் ரசிகன் துள்ளிக் குதிக்கிறான். இது எதிர்பாராமல் கிடைத்த ஜாக்பாட். அதே சமயம் செகண்ட் ஹாப் இதே போல் சுவாரஸ்யமாக இருக்க வேண்டுமே என்ற சின்ன பயமும் இருந்தது.
அன்புடன்
http://i157.photobucket.com/albums/t...ps9c85e4bd.jpg
சாதனை! சாதனை!! சாதனை!!!
பாபு.............கொழும்பு..........ஸெயின்ஸ்தான்... ........112...நாட்கள்
பாபு.............யாழ்நகர்............ராஜா......... ....................105...நாட்கள்
................................
நீரும் நெருப்பும்.............கொழும்பு..........ஸெயின்ஸ்த ான்...........82...நாட்கள்
நீரும் நெருப்பும்ட.............யாழ்நகர்............ராஜா.. ...........................63...நாட்கள்
இந்தியாவில் மட்டுமல்ல இலங்கையிலும் பாபு தான் டாப்பு
http://i157.photobucket.com/albums/t...ps2a388104.jpg
http://i157.photobucket.com/albums/t...pse6af351b.jpg
http://i157.photobucket.com/albums/t...ps37a2db0c.jpg
http://i157.photobucket.com/albums/t...psdf2ba2c0.jpg