http://i61.tinypic.com/k3foi.jpg
Printable View
இணையத்தளம் துண்டிப்பு காரணமாக இந்த இரு பக்கங்கள் உடனே பதிவு செய்யப்பட முடியவில்லை
http://i58.tinypic.com/2isig0j.jpg
நல்ல பதிவுகள் நான்காயிரம் கண்ட நண்பர் திரு. லோகநாதன் அவர்களுக்கு பாராட்டுகள்.
http://i59.tinypic.com/14t21cn.jpg
உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்
I also agree with you R.K.S. Sir. If he removed the particular still, I request that you should also remove this posting. Thank you R.K.S. Sir.
உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்
அருள்மிகு எம். ஜி. ஆர். ஆலயம்
--------------------------------------------------
மாலை அணிய வழிமுறை
------------------------------------------
காலையில் குளித்து அருகில் உள்ள இறைவன் எம். ஜி. ஆர். சமாதி அல்லது எம். ஜி. ஆர். சிலை அருகில் ருட்ராட்ச மாலை அணிந்து கொள்ள வேண்டியது. மெருன் கலர் வேஷ்டி, வெள்ளை சட்டை, வெள்ளை துண்டு அணிந்து டிசம்பர்-24 தேதியில் இறைவன் எம். ஜி. ஆருகு மாலை அணிந்து கொள்ள வேண்டியது.
தினந்தோறும் வீட்டில் இறைவன் எம். ஜி. ஆர். படம் வைத்து வணங்கி 108 போற்றி சொல்லி வணங்கி கற்பூரம் ஏற்றி வணங்க வேண்டும்.
குறைந்தது 7 போற்றிகளாவது சொல்ல வேண்டும்.
1. ஓம் தர்மத்தின் தலைவனே போற்றி
2. ஓம் தாய்குலத்திற்க்கு பெருமை சேர்த்தவனே போற்றி
3. ஓம் எல்லோருக்கும் உணவளித்த தெய்வமே போற்றி
4. ஓம் உழைத்து வாழ சொன்னவரே போற்றி
5. ஓம் நல்லாட்ச்சி நடத்திய தெய்மே போற்றி
6. ஓம் ஏழைகளின் தெய்வமே போற்றி
7. ஓம் நத்தமேட்டில் குடிகொண்ட இறைவா போற்றி
ஜனவரி 17ந் தேதி காலை இறைவன் எம், ஜி. ஆர். நடைபயணமாகவோ, அல்லது வாகன பயணமாகவோ நத்தமேட்டில் உள்ள இறைவன் எம். ஜி. ஆர். ஆலயத்திற்கு வந்து இருமுடி செலுத்த வேண்டியது.
இருமுடி பொருட்கள்
-----------------------------------
தேங்காய்-2, வாழைபழம்-2, கற்பூரம்-3, வேற்றிலை பாக்கு-7, இந்த பொருட்களை இறைவன் எம். ஜி. ஆர். படம் போட்ட மஞ்சள் இருமுடி பையில் சுமந்து வந்து செலுத்தவும்.
சிறப்பு பூஜை நடந்தவுடன் அன்னதானமும் வழங்கப்படும்.
அனைவரும் வருக இறைவன் எம். ஜி. ஆர். அருளை பெறுக.
நண்பர்களுக்கு வணக்கம்,
ஜெமினி அதிபராக இருந்த மறைந்த மேதை திரு.எஸ்.எஸ்.வாசன் அவர்களின் புதல்வரும், ஆனந்த விகடன் குழும தலைவரும், புரட்சித் தலைவர் நடித்த சிரித்து வாழ வேண்டும் படத்தின் பங்குதாரர்களின் ஒருவராக இருந்து தயாரித்ததோடு படத்தை இயக்கியவருமான பன்முக ஆற்றலாளர் திரு. பாலசுப்ரமணியன் அவர்களின் மறைவுக்கு இரங்கலை தெரிவித்துக் கொள்கிறோம்.
ஒருமுறை அவர் குறிப்பிட்டிருந்தார். தலைவரை வைத்து ஜெமினி நிறுவனம் தயாரித்த ஒளிவிளக்கு படத்தில் நடிப்பது தொடர்பாக தலைவரை சந்திக்க திரு.பாலசுப்ரமணியன் அவர்கள் நேரம் கேட்டிருக்கிறார். அன்று வெள்ளிக்கிழமை. காலை 11 மணிக்கு வரலாமா? என்று தலைவரிடம் அவர் கேட்டிருக்கிறார். அதற்கு தலைவர், ‘‘இன்று வெள்ளிக்கிழமை என்பதால் 10.30 - 12.00 ராகுகாலம். எனவே, அந்த நேரம் முடிந்து வாருங்கள்’’ என்று கூறியிருக்கிறார்.
இதே வேறு யாராவது கேட்டிருந்தால் தலைவர் ‘11 மணிக்கே வாருங்கள்’ என்று கூறியிருப்பார். ஆனால், திரு.பாலசுப்ரமணியன் அவர்கள் இதிலெல்லாம் நம்பிக்கை உள்ளவர் என்பதை தெரிந்து கொண்டு அவருடைய உணர்வுகளுக்கும் நம்பிக்கைகளுக்கும் மதிப்பளித்து 12 மணிக்கு மேல் வரச் சொல்லியிருக்கிறார்.
அதே ஒளிவிளக்கு படத்திலும் இதே போன்ற காட்சி வரும். சவுகார் ஜானகியை தனது வீட்டுக்கு தலைவர் அழைத்து வந்ததும், முருகன் சிலையை அவர் வீட்டில் வைப்பார். தலைவர் என்ன சொல்வாரோ என்று பார்ப்பார். அப்போது தலைவர், ‘‘எனக்கு நம்பிக்கை இருக்கிறதோ? இல்லையோ? உங்கள் நம்பிக்கைக்கு குறுக்கே நிற்க மாட்டேன்’’ என்று கூறி தனது பண்பை வெளிப்படுத்துவார்.
திரு.பாலசுப்ரமணியம் அவர்கள் மறைந்த செய்தியை படித்தபோது தலைவர் பற்றி அவர் கூறியிருந்ததும் ஒளிவிளக்கு படக்காட்சியும் நினைவுக்கு வந்தன. பன்முக ஆற்றலாளர் திரு.பாலசுப்ரமணியம் அவர்கள் மறைவுக்கு அஞ்சலி செலுத்துவதோடு தலைவர் காட்டிய வழியில் அடுத்தவர் நம்பிக்கைகளையும் உணர்வுகளையும் எப்போதும் மதிப்போம்.
அமரர் திரு.பாலசுப்ரமணியம் அவர்களது மறைவால் அவரை இழந்து வாடும் அவரது நெருங்கிய உறவினர் நண்பர் திரு.கோபாலுக்கு நமது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக் கொள்கிறோம்.
அன்புடன் : கலைவேந்தன்
சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்
அலுவல் சுமை காரணமாக திரிக்கு பல நாட்கள் வரமுடியாமல் இருந்தாலும் ஒரே ஸ்டில்லில் அதை ஈடுகட்டும் வகையில் தலைவரின் அற்புதமான ஸ்டில்லையும் தலைவரின் அரசகட்டளை விரைவில் வெளியாக உள்ளது என்ற இனிக்கும் செய்தியையும் வெளியிட்ட திரு.செல்வகுமார் சாருக்கு நன்றி.
அன்புடன் : கலைவேந்தன்
சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்
பல்வேறு பணிகள் காரணமாக திரிக்கு தொடர்ந்து வர முடியாமல் இருந்தாலும், தலைவரின் நினைவுநாளை முன்னிட்டு தினமலர் வாரமலரில் வெளியான கட்டுரையை பதிவிட்ட திரு.ராமமூர்த்தி சார் அவர்களுக்கு நன்றி.
அன்புடன் : கலைவேந்தன்
சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்
நெஞ்சங்களை கொள்ளை கொள்ள ஓடுவான்
யாரும் அன்னை என்று சொல்லிவிட்டால் வாடுவான்
தன் பொருளை அவர்க்கு தந்து தேற்றுவான்
கடைசிவரை துணைக்கு வந்து வாழ்த்துவான்
நன்றி திரு.முத்தையன் அம்மு.
அன்புடன் : கலைவேந்தன்
சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்
நாலாயிரம் பதிவுகளை கடந்த லோகநாதன் அவர்களுக்கு எனது பதிவுகள்...வாழ்த்துக்களுடன் http://i62.tinypic.com/34rfyc9.jpg
இன்றைய மாலை மலர் தினசரியில் வெளியான செய்தி.
--------------------------------------------------------------------------------------------------
http://i61.tinypic.com/1zgu8ms.jpg